Everything posted by பகிடி
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
உலக ஒழுங்குமுறை மாற்றம் பெறத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது ரஷ்யா வுக்கு ukraine இன் பகுதிகளை விட்டுக்கொடுக்க தயாரான அமெரிக்கா பதிலுக்கு கிரீன்லாந்து, கனடா மற்றும் பனமா கால்வாயைக் கேட்கிறது, இஸ்ரேல் மத்திய கிழக்கில் இதுவரை உரிமை கோராத பகுதிகளில் குடியேற்றங்களை தொடங்கவிருப்பதாக சொல்கிறது, சீனா தீபெத், தாய்வான் என்று போகின்றது இதைப் பார்த்து இந்தியா இனி தமிழர்களை காக்கப் போகின்றோம் என்ற போர்வையிலும் 13ம் சட்டத் திருத்தத்தை இலங்கை மதிக்கவில்லை என்று காரணம் காட்டியும் அதை தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
நல்ல கவனிப்பு
-
சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன்.
மேன்மைக்குரிய அண்ணன் Donald டிரம்ப் அவர்கள் இலங்கையை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும்.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
90 -100 வயது ஆட்களை பார்க்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் கதைகளை சொல்வார்கள். அவர்களிடம் கேட்க விஷயம் இருக்கும், ஆனால் இப்போது 65 வயதில் உள்ளவர்களிடம் எம்மிடம் பகிர பெரிய வசீகரமான சம்பவக் கதைகள் எதுவும் இல்லை. ஒரே boring அவர்கள். இந்தப் பிரச்சனை எங்களுக்கு வரக்கூடாது. ஆகவே எங்களுக்கு எங்கள் கண் முன் சம்பவங்கள் நடக்க வேண்டும் ஆகவே கிரீன்லண்ட் பனாமா கால்வாய், canada போன்ற இடங்கள் அமெரிக்காவுடன் சேர்க்கப்பட வேண்டும் எப்போதும் 100-200 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியை மட்டுமே வரலாறாக வாசிக்கும் எங்கள் தலைமுறையில் சில சம்பவங்கள் நடந்தால்த் தான் 100 வருஷம் கழித்து இப்பொழுது வாழும் நபர்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும்
-
இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
இலங்கையில் நல்ல விஷயங்கள் நடக்குது போல. இதேபோல் பேருந்தில் மத குருமார்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கைளையும் இல்லாது செய்ய வேண்டும் மத பீடங்களின் கருத்தை ஏற்காமல் கட்டாக்காலி நாய்களை இல்லாது செய்தல் வேண்டும் அரசாங்கம் மத அமைப்புகளுக்கு ஒதுக்கும் நிதியை நிறுத்த வேண்டும்
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
உண்மையான காரணம் மதம் பௌத்த, இந்து மத பீடங்களின் எதிர்ப்பு. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ கட்டாக்காலி நாய்களை ஒழிக்க குறுக்கே நிற்பதில்லை. மனித உயிருக்கான மதிப்பு நாய்களின் மதிப்பை விட உயர்ந்தது. விசர் நாய் கடித்தால் அதற்கான மருத்துவ செலவு மட்டும் ஒரு நோயாளிக்கு 2 லட்ஷம் வரைக்கும் வரும்.
-
இறந்துவிட்டதாக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டவருக்கு மீண்டும் 'உயிர்' கொடுத்த வேகத்தடை
A- Systole ( சலனமற்ற இதயம் ) சில வினாடிகள் மட்டுமே அல்லது சிலருக்கு சில நிமிடம் மட்டுமே இது நடக்கும் SA Node எனப்படும் இதயத்தின் Battery திடீர் என்று நிற்பதால் அல்லது மிக குறைந்த அளவு மின்சாரத்தை வழங்குவந்தால் இதயம் சுருங்கி விரியாமல் இருக்கும். பல நோயாளிகளுக்கு இது சில வினாடிகளுக்கும் சரி ஆகி விடும்.வேகத்தைடை தான் இவர் மீண்டு வந்ததற்கு காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது Pacemaker வைத்து விட்டால் சரியாகிவிடும்
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
தமிழ் நாட்டில் திமுக மீது எவ்வளவு விமர்சனம் இருப்பினும் இது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலே இந்த அறிவுப்புக்கு குதர்க்கமாக பதிலளித்து இருந்தவர்கள் தங்கள் தகமையை தாமகவே பறை சாற்றிக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம் குடும்ப உறவுகள், திருமணம் செய்யும் முறை, உண்ணும் உணவு, தாய்வழி சமூக ஒற்றுமை, உருவ ஒற்றுமை, DNA, ஆகியவற்றை ஒப்பிட்டால் தமிழர் தெலுங்கர் கன்னடர் என நாம் எல்லோரும் ஒரே இனத்தவரே. அவர்கள் தாம் வேறு என்று சொன்னாலும் நாம் அந்த உண்மையை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் தாய் நாம் தான். பிள்ளைகள் தாயை மறுத்தலித்தாலும் தாய் அதை ஏற்று சும்மா வாய் பொத்தி இருக்க முடியாது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இஸ்லாம் மட்டும் அல்ல, இந்தியாவில் ஹிந்து மத , அமெரிக்காவில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆட்டமும், ரஷ்யா ukraine இல் orthodox அமைப்பின் ஆட்டமும் கட்டுக்கு மீறி விட்டது. எல்லா மதங்களின் அழிவும் நெருங்குவது போல் தெரிகிறது
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
உண்மை, எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவத் தம்பதிகள் இப்படி செய்து பிள்ளை பெற்று இருக்கிறார்கள் கொழும்பில்
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
இவ்வளவு கோடி நஷ்டம் என்று வெளியில் சொன்னாலும் பலர் படம் எடுப்பது கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கவும், நஷ்டக் கணக்கை காட்டி வியாபாரதில் அரசுக்கு கட்ட வேண்டிய வரியை குறைக்கவும் தான்
-
விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
45 வயதைக் கடந்தவர்களுக்கு எல்லாம் விஜய் சின்னப் பெடியன், ஆனால் ரஜனி MGR தான் பெரிய ஆளுமை.இவர்கள் தாம் நம்புவது தான் உலகம் என்று நினைப்பவர்கள், இன்றைய நிலையில் இவர்களில் முக்கால்வாசி நடப்பு அரசியலையோ அல்லது அரசியல், சட்ட, பொருளாதார தீர்மானங்களையோ எடுக்கும் இடத்தில் இல்லை. புதிய ஒரு தலைமுறை வந்துவிட்டது என்பதை உணராமலேயே இருக்கிறார்கள். திருமாவும் விதி விலக்கு அல்ல
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
இதை நீங்கள் sarcastic ஆக சொன்னீர்களோ தெரியவில்லை. ஆனால் சொல்லிய விஷயத்தில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. மக்கள் தாமாக திருந்த முயல வேண்டும், எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பது என்பது இயலாமை. புத்திகூர்மையும் பிறந்த சூழலும், நடைமுறை அரசியலும் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் தனி மனித ஒழுக்கம், கடின உழைப்பு, சரியான தீர்மானங்களை சரியான நேரங்களில் எடுக்கும் திறமை, போதைக்கு( வெற்றிலை பாக்கு, சாராயம், புகையிலை சுருட்டு, ஆபாசம், சினிமா, youtube, Facebook முதலிய சமூக ஊடகங்கள் ) விலகி இருத்தல் ஆகியவற்றை கைக் கொண்டால் எல்லோரும் அடுத்தடுத்த படி நிலைகளை அடைய முடியும்.
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
ஒரு இனம் தனக்கான நாட்டை அடைய முதல்ப்படி தம்மை தனித்த வேறுபடுத்தக் கூடிய இயல்புடையவர்கள் என்று காட்டுவது. அதை சரியாக செய்ய முயன்றவர்கள் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் அவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியவர்கள் நாம்.
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
உண்மை, நாம் நன்றி கெட்டவர்கள் தான். எங்களுக்காக போராடிய, சிறையில் அடைக்கப்பட்ட எத்தனையோ பல முகம் தெரியாத திராவிட இயக்க, திமுக தொண்டர்களை தெலுங்கன் என்றும் முதுகில் குதியவர்கள் என்றும் 2009 இல் facebook, youtube மூலம் மட்டுமே உலகை அறிந்துகொண்ட தலைமுறை திட்டியப்பொழுது நான் இல்லை என்று சொன்ன பொழுது என்னையும் தெலுங்கன் list ல் சேர்த்து விட்டார்கள் இந்த நன்றி கெட்ட கயவர்கள். பிறகு இல்லை நான் இந்த ஊர், இன்னார் சொந்தம் என்று சொன்ன பின் கிடைத்தது சாதி வெறியன் பட்டம். கடைசி வரைக்கும் நல்ல தமிழனாக உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் கிடைப்பது துரோகி, சாதி வெறியன், சிங்களவனுக்குப் பிறந்தவன் மற்றும் தெலுங்கன் பட்டமே.
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இப்படி ஒவ்வொருவரும் out of box சிந்திக்கும் மனிதர்களை அடிப்பேன் வேட்டியை கழற்ருவேன் என்று சண்டித்தனம் செய்வதால்த் தான் நம் அரசியல் வியாதிகளாக பள்ளிக்கூட அதிபரும், மருத்துவர் என்ற பெயரில் தெளிந்த புதியற்ற ஒருவரும் எமக்கு கிடைத்து இருக்கிறார்கள். படித்த பண்பான மனிதர்கள் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த விடாத காரணத்தால்த் 1980 களில் இருந்து எமக்கு இந்த நிலை இந்த நிலை இனிமேலும் தொடருமே தவிர முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
இது தான் நான் உண்மையில் சொல்ல வந்தது, எதற்கு இந்த உண்மையைச் சொல்லி தேவையில்லாமல் வேண்டிக் கட்டுவேண்டும் என்று சுற்றி வளைத்துச் சொன்னேன். மொழி வெறியால் நாம் இழந்தது அதிகம் அது வெளிநாட்டில், வெளிநாட்டில் இருக்க வேண்டியது போல் இருந்தால் தான் நடக்கும், அங்கேயும் போய் திரும்பவும் தமிழரோடு சேர்ந்து தான் வாழ்வேன் என்றால் அதிலும் மாற்றம் வராது
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
இலங்கைத் தமிழரில் பல படித்ததாக சொல்லிக்கொள்பவர்களின் ஆங்கில மொழித் திறன் அவ்வளவு தான், தான் படித்த பாடத்தில் மட்டுமே ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும் ( அதுவும் மருத்துவதில் Latin and Greek தான் அதிகம் ) அதைத் தவிர சுய கற்றல் கிடையாது, காரணம் பல்கலைக்கழகம் முடித்த உடனேயே அரைப்படித்த எங்கள் சமூகம் இவர்களுக்கு புலமையாளர் என்றும் கலாநிதி என்றும் பட்டம் வழங்கும், இதனால் இவர்கள் தாம் உண்மையிலேயே புலமையாளர் தான் என்று நம்ப வைக்கப் படுகின்றார்கள், விளைவு ஒரு கடிதம் இலக்கணப் பிழை இன்றி எழுதத் தெரியாது. அண்மையில் Colombo telegraph இல் இலங்கை சட்டத்தரணிகளின் ஆங்கிலப் புலமையின் வறட்சி பற்றி கட்டுரை வந்தது, சட்டத்தரணி சுகாசை நினைத்துப் பார்த்தேன்.
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
உண்மை! இந்திய உளவுத்துறையின் ஏவல் ஆட்கள் இந்த நெடுமாறான், சீமான் போன்றவர்கள். இலங்கை தமிழரை எப்பொழுதும் தீ கக்கும் நெருப்பு நிலையிலேயே வைத்திருக்க இந்தியாவின் கருவிகளாகப் பயன்படுத்தப் படுபவர்கள் இவர்கள்.
-
சிக்கினார் ஆவாகுழு பிரசன்னா
இவர் இங்கே சிக்காமல் சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் போதைப் பொருள் கடத்தியதாக சிக்கி இருந்தால் தீர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!
யாழ்ப்பாணத் தமிழருக்கு doctor, இன்ஜினியர், பள்ளிக்கூட வாத்தியார், புத்தகம் எழுதினவர், physics chemistry teacher ஆகியோரைத் விட்டால் வேறு புலமையாளர் அங்கில்லை. ஒரு சமூகம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இன்றும் 1980திலேயே தேங்கி நிற்கின்றது. இப்படியே போனால் பேத்தைகளும் தவக்கைகளுமே மிஞ்சும்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நெத்தியடி! பல புத்திஜீவித் ( நிஜமான ) தமிழர்கள் இப்படித்தான் தாம் உண்டு தம் குடும்பம் பிள்ளைகள் என்று ஒதுங்கி இருக்கிறார்கள், இப்படிப்பட்ட குடும்பங்களின் வளர்ச்சி,மற்றும் புலமையை ஈழத்தமிழரின் வெற்றி என்று பறையடித்துக் கொண்டாடி, தமிழ் வெறி ஏற்றி விளம்பரப்படுத்தி தம் இனத்தின் பெருமை என சுகம் காண்கின்றார்கள் ஒரு வட்டத்துக்குலேயே மட்டுமே சிந்திக்கத் தெரிந்த மற்றவர்கள்.பறை மேளத்தை மட்டுமே அடிக்கத் தெரிந்தவர்கள் AR Rahman னைக் கொண்டாடுவது போல
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சுமந்திரன் வெளியில் இருந்து பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல் தீர்வு முயற்சிக்கு உதவலாம்.
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!
இவர் புலமையாளருக்குள் எப்படி ஊடுருவினார்?
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
2009 இல் இயக்கம் ஆமியை உள்ளுக்க விட்டு அடிக்கப் போகுது என்றும் பெரிய பிளான் போடுகிறார்கள் என்றும் அதற்கு Second world war படங்களில் பார்த்த விஷயங்களை எல்லாம் எழுதி என்று புருடா விட்டவர் தான் இவர்.