Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. சட்டம் சம்பந்தமான புலமைத்துவத்துக்கு , ராஜதந்திரிகளை சந்திக்க, கனதியான கேள்விகளுக்கு நறுக் என்று பதிலளிக்க, நல்ல தலைமைத்துவத்துக்கு, தமிழர்களின் அனைத்துத் தரப்பாரையும் ஒன்றுணைத்துக் கொண்டு செல்ல சுமத்திரனை விட்டால் வேறு ஆரும் இல்லை என்ற அளவுக்கு தமிழ் அரசுக் கட்சி கீழ் இறங்கி விட்டதுக்குக் காரணம் சுமந்திரன் மட்டும் தானா?
  2. என்னது? கொழும்பில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகின்றர்களா?
  3. பெரியாரை தமிழர் தலைவர் என்று சொல்லுவது எனக்கு ஏற்புடையது அல்ல. எந்த இனத்துக்கு யாரும் காலா காலத்துக்கும் தலைவராக இருக்க முடியாது. மற்றப்படி அவரை தூக்கிப் பிடிப்பது அவரின் பங்காளிப்பினால் ஈர்க்கப்பட்டோரின் சுய விருப்பம். தாங்கிக் கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால் தமிழ் நாட்டில் பன்றிக்கு பூநூல் கட்டிய, பெண்களின் தாலி அறுத்த, கடவுள் இல்லை என்று சொன்னவரையே கடவுளாக்கிய, UNESCO விருது கொடுத்ததாக பொய் சொன்ன, ஓடிப் போய்க் கலியாணம் செய்வதை புரட்சி ஆக்கிய, பாலியல் விடுதலையே சமூக விடுதலை என்று முழங்கிய கூட்டத்தின் முன் எங்கட லூசுகள் அவமானப்படுத்தப்பட்டு கூனிக் குறுகிப் போனது தான். இந்த கழுசறைக் கூட்டம் எங்கள் மானத்தைக் காவு வாங்குகின்றது
  4. இத்தாலியர்களின், துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின், தென் அமெரிக்க மற்றும் வட இந்திய உணவுகள் உலகில் எல்லோராலும் விரும்பப்படும் நிலையில் ஏன் இலங்கையரின் ( தென் இந்திய ), ஆப்பிரிக்க உணவுகள் ஏனைய உணவுகள் போல் விரும்பப்படுவதில்லை அல்லது குறைவாகேவே ரசிக்கப் படுகின்றது?
  5. இது தான் திட்டம். ஏற்கனவே சீமானை முதலமைச்சர் வேட்ப்பாளர் ஆக அறிவிக்க மோடி தயார் என்று ஒரு பேச்சு அடிபட்டது. சீமான் அதை நோக்கித் தான் போகின்றார். புலம் பெயர் அரை+ முக்கால் ஹிந்துத்துவா ஆதரவு ஆட்களும் தமிழ் நாட்டில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களும் ஏற்கனவே இந்த ஏற்பாட்டுக்கு இப்பொழுதே ரெடி. காலா காலமாக தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசுவோர் போய் விழுந்து கும்பிடும் இடம் நாக்பூர்.
  6. டிரம்ப் க்கு தனது வாழ்நாளின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்று நன்கு தெரிந்து விட்டது போலும். எப்படியும் தன்னை யாரவது ஏதாவது செய்து விடுவார்கள் என்று நினைக்கின்றார். அதனால்த் தான் இப்படி ஒரே சட புடல் தடலாடி அறிவிப்புகள் . போறதுக்கு முதல் புடுங்குவதை எல்லாம் புடுங்கி விட்டு போவம் என்று
  7. ஆபிரகாம் காலத்தில் தொடங்கிய சண்டை ( கிட்டத்தட்ட 3800 வருடம் ) இன்றும் தொடர்ந்துகொண்டு உள்ளது. எங்கள் காலத்துக்குள்ளும் இது முடியாது.
  8. இங்குள்ள இந்திய அருவருடிகளின் உதவி மற்றும் கைங்கரியத்துடன் இந்திய அரசானது இந்து மதம், தமிழர் கலை, கலாச்சாரம் என்ற போர்வையில் இங்கே யாழ்ப்பாணத்தில் தனது இருப்பை பலப்படுத்த எத்தனிக்கும் பொழுது இலங்கை அரசு அதற்கு மாற்றாக இப்படிதான் செயல்படும்.
  9. எங்கள் சமூகத்தில் பிடிக்காத நபர் கூட மரண வீட்டுக்கு வந்தால் பரிகாசம் செய்வதில்லை. மாவை வீட்டு மரணச் சடங்கில் இப்படி இழி செயல் செய்தவர்கள் நிச்சயம் நல்ல குணாதிசயங்கள் கொண்டவர்கள் அல்ல. அதை ஆதரிப்பவர்களும் அதே ஆட்கள் தான்
  10. ஆம் ஆத்மீ கட்சி பஞ்ஜாப், ஹரியானா, சத்தீஸ்கர் போன்ற இடங்களில் வேகமாக வளர ஆரம்பித்ததும், அது socioeconomic level இல் முதல் படிநிலைகளில் இருக்கும் மக்களை ஈர்த்ததும், கொள்கை அளவில் மித இந்துத்துவ கோட்ப்பாட்டை கொண்டத்துமாக இருந்ததும் தீவிர வலது சாரி நிலைப்பாட்டை எடுக்கக்காத அதே வேளை முன்னைய தேர்தகளில் பிஜேபிக்க்கு வாக்களித்த மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியை பிஜேபிக்கு மாற்றாகப் பார்க்க வைத்தது. அதானால்த் தான் ஆரம்பத்திலேயே ஓட்ட நறுக்க வேண்டும் என்று பிஜேபி செயல்பட்டு உள்ளது
  11. "சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்" சரியான தலைப்பு மேற்படி நபரைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவர் ஒரே கொதிநிலையில் இருக்கும், ஆங்கிலம் 200-300 சொற்களை மட்டுமே வைத்து ஓட்டும், வீட்டுக்கு உபத்திரவம் தரும், பேசும் பொழுது தூசனம் பாவிக்கும் ஒருவராக இருப்பார்.
  12. கட்டுரையாளரரின் மனநிலை இது தான் அதாவது தூர நோக்கில் சிந்திக்த் தெரியாத, பக்குவப்படாத, சொல்வதை அப்படியே நம்பும் மொக்குக் கூட்டதுக்கும் காரியங்களை அப்படியே நம்பிவிடாத, புலமையும் பாண்டித்தியமும் உள்ள இன்னொரு வகையினருக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாட்டை சுட்டிக்காட்டினால் சீமானுக்கு கை தட்டுப்பவர்கள் மொக்குகள் என்று உண்மையை உரைத்ததாக முடியும் என்பதால் கட்டுரையாளர் மிச்சம் மீதி இருக்கும் மொக்குகளின் அபிப்பிராயத்தை சீமானை நோக்கித் திருப்பும் நோக்கில், மொக்குகளுக்கு விளிம்பு நிலை சாமானியர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் பெயர் சூட்டி இருக்கின்றார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களில் அறிஞர்கள் இல்லை என்கின்றார்
  13. தமிழர்கள் அப்படி போராடியது தவறு தான் சட்டிக்குப் பயந்து நெருப்புக்குள் விழுந்த நிலை அது . இன்னும் 50 ஆண்டுகள் பிரிட்டிஷ் தமிழ் நாட்டை மட்டும் ஆண்டு இருந்தால் இன்று நிலை வேறு.ஈவேரா அப்படித்தான் சிந்தித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழநாட்டுக்கு மூச்சு விடக் கிடைத்த காலத்தில் தான் இன்றைய தமிழநாட்டின் வளர்ச்சிக்கான அடிகல் நாட்டப்பட்டது, அப்படி என்றால் அந்த ஆட்சி இன்னும் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் சிந்தித்ததில் என்ன தவறு? இலங்கை சுதந்திரம் பெற எத்தனையோ தமிழர் போராடினர். ஆனால் எங்களுக்கு இப்போதும் அது கரி நாள்த் தான். அதே மன நிலை தான் ஈவேரா வுக்கும் உங்களைப் போன்ற மனிதர்கள் அன்றும் இருந்து இருப்பார்கள். அவர்களை வைத்து எப்படி படை கட்டுவது? சண்டைக்கு அன்றைய தமிழ் நாடு தயாராக இல்லை.80% மக்களுக்கு ஒரு வேளை உணவில்லாத காலம், முதலாம் இரண்டாம் உலக யுத்தக் காலம், தமிழர்கள் உலகம் முழுதும் அடிமைகளாக விற்கப்பட்ட காலம். ஒரு நல்ல தலைவன் இந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பானே தவிர படை கட்டி இனத்தை அழிக்க மாட்டான்
  14. எங்கோ ஒரு இடத்தில் வாசித்ததாக ஞாபகம். அதாவது பெரியார் ஜின்னாவுக்கு கடித்தம் எழுதியதாக. பாகிஸ்தான் போல் திராவிடஸ்த்தானும் பிரிய உதவ வேண்டும் என. கண்டறிந்தால் சொல்கின்றேன் ஆனால் ஒன்று,அன்றைய திராவிடர் கழகம், பெரியார், நீதிக் கட்சி போன்றவை பிரிட்டிஷ் உதவியுடன் தனி நாடாக போக விரும்பின அல்லது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் தொடர விரும்பின. இன்னோரு தகவல் விக்கிலீக்ஸ் மூலம் வெளியில் கசிந்தது. இந்திரா காந்தி அவசர நிலையை பிறப்பித்த பொழுது, கலைஞர் முதலமைச்சர் ஆக இருந்த பொழுது தன்னுடைய மந்திரி ராஜராமை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி தமிழ் நாட்டை தனி நாடாக்கும் யோசனை பற்றி முழுமையாக காட்டிகொள்ளாமல் வினவியதாகவும் அதற்கு அமெரிக்கா சம்மதம்( ஆசிர்வாதம் ) தெரிவிக்கவில்லை என்றும் ஒரு தகவல் கசிந்தது. தகவலுக்கு இதை வாசிக்கவும் https://thecommunemag.com/wikileaks-dmk-minister-had-asked-if-us-would-help-tn-secede-from-india-during-indiras-emergency/ நிலைமை இப்படி இருக்க, பட்டினியில் இருக்கும் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க கஷ்டப்பட்ட தாயானவளின் நிற்கதி நிலையை அறியாமல் அவளை தூற்றும் நன்றியற்ற பிள்ளைகள் போல் நாமும் தமிழ் நாட்டின் அன்றைய தலைவர்களை போகின்ற போக்கில் இகழ்ந்து பேசி வருகின்றோம்.
  15. சரியாக சொன்னீர்கள். இந்தியா என்ற நாடு அமைந்து இருக்காவிட்டால் இன்று தமிழனுக்கு இரண்டு நாடுகள் இருந்து இருக்கும். உண்மையை நேரடியாக சொன்னால் இந்தியா சுதந்திரம் அடந்த நாள்த் தான் கரி நாள். இதை பெரியார் சொன்னார் என்று சொல்லி அவரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் @Eppothum Thamizhan யார்? தமிழரா அல்லது இந்திய தேசியதுக்கு குடை பிடிப்பவரா?
  16. Niccolò Machiavelli என்னும் இத்தாலியன் சொன்னது இந்த கீழ்வரும் விஷயங்கள் 1)"Mighty is right"( பலம் பொருந்தியவன் சொல்வது தான் சரி ) 2)Necessity knows no laws" ( தேவை என்று வரும்பொழுது சட்டங்கள் அதை தடுக்கக் கூடாது ) 3)"End justify the means" ( முடிவே நீதியைத் தீர்மானிக்கும் ) இந்தக் கருத்துக்களே முசோலினி, ஹிட்லர் போன்றோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணம். நாகரீக உலகு "End justify the means" என்பதை ஏற்க முடியாது. ஒரு நன்மைக்காக ( நன்மை என்று நம்பும் ஒன்றுக்காக )அப்பாவியை பலியிட முடியாது. ஆனால் இதைச் சொல்லித்தான் ஐரோப்பாவில் யூதர்களை கொன்று குவித்தார்கள், இலங்கையில் மகிந்த தமிழர்களை கொன்று குவித்தார். டிரம்ப், மஸ்க், புட்டின், சீமான், மோடி , நெத்தன்யாகு மற்றும் இங்கே டிரம்பை ஆதரிக்கும், புட்டினை ஆதரிக்கும் சில சாமிகளுக்கும் உண்மையில் இதுதான் தத்துவமே 100 ஆண்டுகளுக்குப் பின்னால் மனித வர்க்கம் கொலைக்களம் நோக்கிப் பயணிப்பது கண்ணெதிரே தெரிகின்றது. Niccolò Machiavelli யின் கருத்தை ஏற்றவர்கள் மீண்டும் உலக ஒழுங்கை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விட்டனர், இவர்களால் ஏற்படப்போவது இரத்தக் களரி. எங்களால் தடுக்க முடியாது விட்டாலும் இதுபோன்ற விஷக் கருத்துக்களுக்கு ஆதரவாய் இருக்காமலாவது இருப்போம்.
  17. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒரே பொய் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு உள்ளது. 15 -16 வயதில் செய்திகளை வாசிக்க தொடங்கும் ஒரு இளைய தலைமுறையின் சிந்திக்கும் முறை இந்த சீமான் வகையறாக்களால் மாற்றப்பட்டு உள்ளது விஷப் பாம்புகளை இனியும் விட்டு வைக்கக் கூடாது
  18. நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளின் அழிவுக்கு பின்னர் செய்த ஒரே நல்ல சம்பவம் இதுதான் இவர்கள் எல்லோரும் தமது வண்டவாளங்கள் வெளியே தெரிந்து விட்டதே என்று எல்லாம் எண்ணி தலைகுனிவார்கள் என்று எதிர்பார்க வேண்டாம் இவர்கள் இப்பொழுது உரித்திரகுமாரை வைத்து உரிக்கப் போகின்றர்கள் ஓம் மிகவும் காலம் தாழ்த்தி சொல்லப்பட்ட செய்தி இது. கிட்டத்தட்ட 15 வருடமாக பரப்பப் பட்ட பொய்யை இந்த செய்தி எளிதில் வீழ்த்தி விடாது. ஒரு தலைமுறையையே மூளைச் சலவை செய்ய வைத்து இருக்கின்றான் சீ சீமான்
  19. African swine virus சம்பந்தமாக விக்கி யில் தேடியபொழுது கிடைத்த தகவல் ஒன்று சில பத்தாண்டுகளுக்கு முன்பு கியூபா வில் இந்தப் பிரச்சனை வந்தபொழுது 5 லட்ஷம் பன்றிகள் வரைக்கும் இல்லாமல் செய்யப்பட்டதாம். கியூபா இதற்கு காரணமாக அமெரிக்கன் CIA ஐ குற்றம் சாட்டியது. Cuba வின் பொருளாதாரத்தை குலைக்கும் பொருட்டு இந்த உயிரியல் தாக்குதல் நடத்தப்பட்டதாம். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயலும், சீனாவுடன் நல்லுறவில் இருக்கும் JVP ஆளும் இலங்கையில் இது நடப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது
  20. பாரதியார் மரணமடைந்த பொழுது சாவு வீட்டில் இருந்தவர்கள் எத்தனை? பிரபாகரன் இறந்த பொழுது அவரின் மரண நிகழ்வு எப்படி நிகழ்ந்தது? மரண வீட்டுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் கணக்கு எழுதி வரலாறு ஆட்களை ஞாபகம் வைப்பதில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.