Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பகிடி

  1. ஓ உமாகரன் ராசய்யாவா? அவர் சொன்னால் சரியாத் தான் இருக்கும்
  2. உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. @குமார சாமி @விசுகு @MEERAபோன்றோரை விட்டு விடலாம். அவர்கள் புலிகள் ஆதரவு, தமிழ்த் தேசிய போர்வைக்குள் மறைந்து இருக்கும் ஹிந்துதுவ ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு எப்பொழுதோ இந்த உண்மை எல்லாம் தெரியும். அடுத்த தலைமுறைக்கு இந்த உண்மைகள் சென்று சேரக்கூடாது என்று சபதம் எடுத்து வேலை செய்பவர்கள். முதலில் நல்ல சைவனாக இருக்கும் எவருக்கும் நான் மேலே சொன்ன ஹிந்துத்துவ ஆதரவு மனநிலை இருக்காது. இவர்கள் சைவத்தை ஹிந்துதுவாவுக்குள் புதைக்க குழி வெட்டிக் கொடுத்தவர்கள், இவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இங்கே உள்ள இஸ்லாமிய மற்றும் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்காத கிறிஸ்தவ அடிப்படைவாதிகள். ஆனால் @வீரப் பையன்26 போன்றவர்களின் நிலை தான் பரிதாபமானது. தமிழ் மக்களின் பால் எங்களின் போராட்டங்கள் மேல் கரிசனம் கொண்ட அவரைப் போன்ற பலரையும் தான் இப்போது இந்த உண்மை நிலை எதுவென்று நன்கு விஷயம் தெரிந்த மனிதர்கள் பிழையாக வழிநடத்துகின்றர்கள். நான் மேலே சொன்ன நபர்களுக்கு என்று ஒரு திட்டம் உண்டு, அது மெது மெதுவாக எங்களை தத்துவார்த நீக்கம் செய்வது. அதை அவர்கள் மிகச் சரியாகவே செய்கின்றனர். வீரப்பையன் போன்ற சுயநலம் அற்ற தூய தமிழ் நெஞ்சங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பவது இது தான் நேர்மையும் நெஞ்சுரமும் மட்டுமே காணாது. உங்களை வழி நடத்துப்பவர்களையும் சந்தேகியுங்கள், அவர்களின் நீண்ட காலத் திட்டம் என்ன என்பதை ஆய்ந்து அறியுங்கள். எங்களுக்கு யார் எதிரி என்று தெரியாமல் நண்பர்கள் மீதே வாள் சுற்றினால் வீழ்வது நாமே
  3. தமிழ் நாட்டில் எல்லோரும் படிக்கின்றார்கள் என்பது உண்மை, ஆனால் படிப்பின் தரம் கேள்விக்கு உரியது. திராவிட அரசியல் எல்லோரையும் சேர்த்தே முன்னேற வேண்டும்( எல்லோருக்குமான சமூக நீதி ) என்று நினைப்பதால் அங்கே சராசரிகளை உருவாக்க முடிக்கிறதே தவிர புத்திசாளிகளை அல்ல.
  4. 60 வயதை தாண்டி விட்டாலே ஒரு நபருடையை சிறுநீரகம் அதன் முழுத் திறைமையுடன் இயங்க முடியாது, அதுவும் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்( CKD) வந்து இருக்கும். இவர்களில் ஒருவர் high protein diet உள்ள உணவுகளை எடுக்கும் பொழுது glomerular injury ( சிறுநீரகத்தில் உள்ள கோடிக்கணக்கான nephron இல் வடிக்கட்டும் அமைப்பில் ஏற்படும் காயம் ) ஏற்பட்டு சிறுநீர் மூலம் புரதம் வெளியாகும் நிலை ஏற்படும் ( proteinuria) இது கடைசியில் dialysis செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளி சுகம் பலமாக வாழ வேண்டிய ஒருவரை 10-15 வருடம் முன்னமே காவு வாங்கி விடும்
  5. முக்கியமாக தாம் தான் ஈழத்தமிழரின் பிரதிநிதிகள் என்றும் தமிழ் உணர்வும் தமிழர்களின் எதிர்காலம் மீதான கரிசனமும் தமக்கு மட்டுமே உண்டென்றும் காட்டிக்கொண்டு ஈழத்தவர்களின் மரியாதையை காற்றில் பறக்க விட்டுகொண்டிருக்கும், ஊரில் தெருச்சந்தியில் நின்றுக்கொண்டு கூ அடித்த, முள்ளம்பன்றியை ஒத்த சிகை அலங்காரத்தைக்கொண்ட புள்ளிங்கோ கூட்டம் சீமானை ஆதரித்தும் ஏனைய தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை தான்தோன்றித் தனமாகத் திட்டியும் எழுதியும் வரும்போழுது நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய தேவை உள்ளது. வெறி நாய்களுக்குப் பயந்து வீட்டில் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்க முடியாது
  6. அப்படிதான் நானும் நினைத்தேன், வாய் மூடி மௌனியாய் இருந்தேன், ஆனால் சீமான் போன்ற தகுதி அற்ற வாய்ச்சொல்லில் வீரர்கள் ஈழத்தமிழர் பெயரைச் சொல்லியே அங்கே அரசியல் செய்து எமது போராட்டம் மற்றும் எங்கள் மதிப்பை இழக்காரப்படுத்தும் பொழுதும், எங்களுக்காக உண்மையாகவே போராடிய வைகோ போன்ற தலைவர்களை விட தான் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் பொழுதும் எப்படி இனிமேலும் அப்படியே இருப்பது? நாங்கள் இனியும் சீமான் போன்ற நாலாம்தர அரசியல் வாதிகளை எங்கள் பெயரைச் சொல்லி அங்கே கடிவாளம் அன்றி அரசியல் செய்ய அனுமதித்தால் அது அங்கே எங்களுக்காக மனமுவந்து போரடிய சிறை சென்ற,குடும்பத்தை கரை ஏற்ற முடியாமல்ப் போன,அரசியலில் தன் நிலையை இழந்த மனிதர்களுக்கும், தலைவர்களுக்கும் செய்யும் அவமரியாதை. இப்பொழுதும் நாம் அங்கே எந்த அரசியல் நிலைபாடும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அங்கே யார் எம்மை கேலிப்பொருள் ஆக்குகின்றார்களோ அவர்களின் உண்மை நிறத்தை வெளிக்கொணர வேண்டிய தேவை வந்துள்ளது
  7. இலங்கையில் மதுபானத்தக்கான வரி, வீட்டில் வெளிநாட்டு வகை நாய், மீன் வளர்ப்போருக்கான வரி, போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்கான தண்டப்பணம், கள்ள இந்திய மீன் பிடிக்காரர்களிடம் அறவிடும் பணம், ஆகியவை அதிகரிக்கப் பட வேண்டும். இது தவிர சுற்றுலாப் பயணிகளுக்கான மருத்துவச் செலவுக்கான பணம்,வீட்டில் சத்தமாக பாட்டுப் போடுவோருக்கு ஒலி மாசடைவதால் அதற்கு ஒரு வரி, சந்தியில் நின்று கூ அடிப்பவர்களுக்கு தனியே ஒரு தண்டப் பணம், you tube இல் கதைத்தே உழைக்கும் ஆட்களுக்கு வரி, social media பாவிப்பவர்களுக்கு வரி, காணி இருந்தும் தோட்டம் செய்யாதவர்களுக்கு வரி, வேலை செய்ய சகல தகுதிகளும் இருந்தும் வெளிநாட்டுக் காசில் வாழும் ஆட்களுக்குத் தண்டப் பணம் ( சமூகத்தில் சோம்பேறித்தனதுக்கு காரணமாவதால் ), இலவசமாய் படித்து விட்டு வேலையும் அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பட்டதாரிகள் போராடினால் அதற்கு ஒரு வரி, make up போட்டு சாம்பாதிக்கும்,icing cake செய்து சாம்பாதிக்கும் ஆட்களுக்கு என்று தனி வரி,என்று நாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முக்கியமாக ஊரில் சமூக சீரழிவுகளுக்கு காரணமான சீமான் ஆதரவாளர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் என்று என்று தனி வரி போட்டால் இன்னும் நல்லம்
  8. இந்த மண்டபத்தை இந்தியாவின் நேரடி உதவி மற்றும் வழிகாட்டலில் நிர்வகிப்பதை விட இலங்கை அரசின் நேரடி உதவியுடன் நிர்வகிப்பதே பொருத்தமானது. இந்தியா இதைக் கட்டச் செய்த உதவிக்காக அதைப் பயன்படுத்தி தனது அரசியலை இங்கே செய்ய நாம் இந்தியாவுக்கு அனுமதிக்க முடியாது. ஒரு பெரிய நன்றியோடு முடித்துக்கொள்ளவேண்டும். ஏற்கனவே யாழ் இந்துக கல்லூரிக்குள் ஊடுருவி இருக்கும் இந்தியா இந்த மண்டபத்தை இங்கே திறந்ததுக்கான நோக்கம் யாழ்ப்பாணத் தமிழர்களை கலை கலாசாரம் என்ற போர்வையில் மெதுவாக ஹிந்துத்துவ அடையாளத்துக்குள் அமிழ்த்தி விடுவது தான். அதை நற்றமிழர் எவரும் அனுமதிக்கக் கூடாது விட்டால் நாளைக்கு இங்கே இலங்கையில் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்படலாம். பண்டாரநாயக்கா நினைவு மண்டபதை( BMICH )சீனா கட்டிக் கொடுத்தது என்பதற்காக இங்கே இந்தியா கட்டிக் கொடுத்தது தான் இந்த கட்டிடம். கல்வி அமைச்சை, பல்கலைக்கழக கல்வியை இலங்கை அரசு நடத்துவத்தை ஆட்சேபிக்காத நாம் எதற்க்காக இதை இலங்கை அரசு ஏற்று நடத்துவதை மட்டும் எதிர்க்க வேண்டும்?
  9. நடந்த சம்பவங்களைப் பார்க்கும் பொழுது hemorrhagic stroke போன்று தெரிகிறது. இவருக்கு ஏற்கனவே அதிக இரத்த அழுத்தம் இருப்பதாக செய்திகள் வந்தது. Stroke வந்து கீழே விழுந்து இருக்கலாம் என்றே நினைக்கின்றேன். 4 மணி நேரத்தில் CT scan எடுத்து treatment ஆரம்பிக்க வேண்டும். மூளையில் எங்கே கசிவு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து சம்பவத்தின் விபரீதம் மாறுபடும். சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதுக்கு மூளையில் இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்ட வீக்கம் (swelling) மற்றும் pressure காரணமாக இருக்கலாம். தப்பினாலும் இனி முன்னர் போல செயல் பட இயலாது என்றே நினைக்கின்றேன்.
  10. தோண்டி எடுத்து மீண்டும் பூதஉடலுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாகக் கொடுக்க எதிர்கால சந்ததிக்கு வசதியாய் இருக்கும்
  11. சரி Al பாஸ் பண்ணாத என்ற வாக்கியத்தை தவிர்த்து விட்டு மீதியைப் படியுங்கள்.
  12. உங்கள் கருத்தில் நீங்கள் கருணாநிதி மகன் என்ற அந்தஸ்தை தவிர என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால் கருணாநிதி ஒரு அந்தஸ்து உள்ளவர் என்பதை ஏற்கிறீர்கள் என்று பொருள். எதை வைத்து இவரை ஏமாளி கோமாளி எங்கிறீர்கள்? இவர் ஏமாளி கோமாளி என்றால் எப்படி முதலமைச்சர் ஆனார்? எப்படி கட்சிக்கு தலைவராக நீடிக்க முடிகின்றது. அப்படியானால் இவர் கொஞ்சம் புத்திசாலி என்று பொருள் மக்கள் எல்லோரும் காசு கொடுத்தால்த் தான் வாக்குப் போடுவார்கள் என்றால் மக்கள் பணக்காரக் கட்சி பிஜேபி க்கு அல்லவா வாக்குப் போட்டு இருக்க வேண்டும்? ஆகவே வாக்குப் போட்டவர்களில் பெரும்பான்மை காசு கொடுத்தாலும் கொடுக்காமல் விட்டாலும் இவர்களுக்கு வாக்குப் போடும் என்று பொருள் கட்சி என்பது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. அதற்கும் தனி மனித ஒழுக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவரை தரக்குறைவாக பேச உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் உங்கள் குற்றசாட்டுக்கள் பிழை என்பதையே மக்கள் தீர்ப்பு காட்டுகின்றது அடுத்த தேர்தலில் சீமானுக்கு வாக்குகள் குறையும். விஜய் சீமானை விட வாக்குகள் அதிகம் வாங்குவார்.
  13. நான் ஒருபோதும் சீமானின் தனிப்பட்ட வாழ்வு பற்றி பேசியதில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால் சீமான் சமூகத்துக்கு என்ன செய்து இருக்கின்றார் என்பது தான். வை கோபலசாமி போன்றோர் தமிழர்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் செய்த உதவிகளில், காட்டிய பாசத்தில் ஒரு துளி கூட சீமான் செய்தது கிடையாது. செய்த உதவி எல்லாம் பிரபாகரனையும் புலிகளையும் எமது போராட்டத்தையும் நாறடித்து, ஈழத்தமிழர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்து, எங்கள் மேல் அளவுகடந்த பாசத்தை காட்டிய, எங்களுக்காக சிறை சென்ற, அடி வாங்கிய, எமக்கு உதவப் போய் தன் குடும்பத்தை கரை சேர்க்க முடியாமல்ப் போன, திராவிட இயக்க, பெரியாரிய இயக்க தோழர்களை எமக்கு எதிரிகளாக்கி ரசித்தது மட்டுமல்லாமல் வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, Al பாஸ் பண்ணாத கூட்டத்தை,ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்
  14. வாசிக்கும் பொழுது நாம் எல்லாம் இங்கு எந்த விதத்திலும் பாதுகாப்பாக இல்லை என்றே உண்மை கண் முன் வந்து போகின்றது
  15. 1900 அளவுகளில் உலகம் முழுவதும் சமுதாய வர்க்க சமய ரீதியாக புரட்சிகள் நடந்தன . அவற்றை நடத்த ஆங்காங்கே தலைவர்கள் உருவானார்கள். தமிழ் நாட்டில் அப்படி ஒருவர் உருவாக வேண்டிய தேவையை இயற்கை கொடுத்தது. ஈவேரா அந்த வகையில் தலைவரானார். வாழ்வு முழுவதும் விதியால் கட்டுப்படுத்தப்படுகின்றது, ஆகவே கேள்விக்கு இங்கு இடம் இல்லை, இந்தப் பிறப்பில் என்ன துன்பம் வந்தாலும் அதை ஏற்று நட, அப்பொழுது அடுத்த பிறப்பு நல்ல பிறப்பாக அமையும் என்று 99. 99% மக்கள் நம்பிய ஒரு காலத்தில்,இந்தக் கருத்தாக்கத்துக்கு காரணமான அந்த நம்பிக்கையை அடித்துத் துவைத்தவர் ஈவேரா. அவர் தன்னை தற்க் காத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லவில்லை. எது சரியனப் படுகின்றதோ அதை அவர் வெளிப்படையாக வெளியே சொல்லி இருக்கின்றார். இன்றைய இந்திய சூழலில் தமிழ் நாடு வளர்ந்து இருக்க ஆங்கிலம் முதல்க் காரணம். இன்று இலங்கைத் தமிழர்கள் பின் தங்கி விடவும் ஆங்கிலப் புலமை இன்மை இன்னொரு காரணம். அப்படிப் பார்க்கும் பொழுது அவரின் அவர் அன்று சொன்னது சரியாகவே படுகின்றது ஒருவர் சமூகத்துக்கு என்ன செய்தார் என்று பார்க்க வேண்டுமே ஒழிய அவரின் தனிப்பட்ட வாழ்வு எமக்குத் தேவையற்றது. அதைப் பற்றிக் கவலை அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ இருக்கட்டும் எமக்கு அது தேவையற்றது
  16. தாழ்த்தப்பட்ட மக்கள், வறுமையில் உள்ளவர்கள், பால்ப் புதுமையினர், சிறுபான்மையினர் என்றாலே அவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றும் அவர்கள் பாவம் என்றும், அதேநேரம் பெரும்பான்மை மக்கள், சாதிய அடுக்கில் மேல் இருப்பவர்கள் எல்லோரும் கெட்ட மனிதர்கள் என்றும் ஒரு பொதுப் புத்தி இங்கே பதிக்கப்பட்டு விட்டது
  17. ஈழத்தமிழர்கள் பற்றிய தமிழநாட்டுத் தமிழரின் பார்வையை சீமானுக்கு முன், பின் என்று பிரிக்கலாம். இலங்கைத் தமிழரின் படிப்பறிவு, தமிழ் உச்சரிப்பு, தமிழ் பண்பாட்டியலில் எங்களவரின் பங்களிப்பு, வயது குறைந்தவர்களையும் பண்புடன் அழைக்கும் பண்பு, போராட்டம், தியாகம், எமது உணவு முறை என்று தமிழ் நாட்டு மக்களின், அரசியல் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வர்கள் நாம். பிரபாகரனின் அரசியலை நிராகரித்தவர்கள் கூட அவரை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தனர். ஆனால் இன்று நிலைமை அதோகதி! கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது. நாங்கள் சிங்கள அரசால் போரில் தோற்கடிக்கப்பட்டோம் தான், ஆனால் மானத்தை இழக்கவில்லை. அதை சொந்த தொப்புள்க் கொடி உறவுகளிடமே இழக்கவைத்த பெருமை சீமானையும் அவரின் ஈழத்தமிழ் விசிறிகளையே சாரும். ஈழத்தமிழராக நாம் செய்த தவறு வீட்டில் பெற்ற தாயையே கெட்ட வார்த்தையில் ஏசும் கூட்டத்தை, நன்னெறி அற்ற கூட்டத்தை, ஊரில் சந்தியில் ரவுடித்தனம் செய்த கூட்டத்தை வெளிநாட்டுக்கு எடுத்து அனுப்பி அவர்களைப் பெரிய ஆள் ஆக்கி விட்டது தான்.
  18. தமிழ் நாட்டில் ஒரு தமிழ் தேசியம் பேசும் கட்சிக்கு ஒரு தேவை இருக்கிறதா என்று கேட்டால் பதில் ஆம், அதற்க்கான தேவை உண்டு காரணம் இங்கே பெரியார், திராவிடம் என்று சொல்லி தமிழ் மொழி வழி மக்களை சற்றே ஒதுங்கி விட்டு தாம் அவர்களுக்கும் தலைவர் ஆகும் நிலை தெலுங்கு பேசும் ஆனால் தமிழ் நாட்டில் தமிழராக வாழும் மக்களிடம் உள்ளது. இவர்களை ஓரளவுக்கு அடக்கி வைக்க வேண்டிய தேவை அங்கு உள்ள தமிழர்களால் உணரப்பட்டு உள்ளது. ஆனால் அதற்காக ஈவேரா மற்றும் திராவிட சித்தாந்தம் முற்றிலும் பிழை என்ற கருத்துக்கு வர முடியாது, அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழராக வாழ விரும்பும் 600 வருடங்களுக்கு முன் குடியேறிய திராவிட இன மக்களையும் முற்றிலும் எதிர்க்கவும் கூடாது ஆகவே சீமான் போன்றவர்கள் ஜனநாயக வெளியில் தேவையானவர்கள் தான். ஆனாலும் தேர்தல் முறையில் இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்.
  19. சரியான பேச்சு, கலைஞர் சாகும் வரைக்கும் சீமான் பெயரை சொல்லவே இல்லை. தகுதி இல்லாதவர்களுக்கு நாமே அடையாளம் வழங்கி விடக்கூடாது என்பதால் அவர் அதனைச் செய்யவில்லை. இன்றும் ப. சிதம்பரம் போன்ற பழுத்த அரசியல் தலைவர்கள் சீமான் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை
  20. இவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு நன்றாகவே வெளியே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் தமிழ் win,லங்காஸ்ரீ, youtube பார்த்தே வளர்ந்த ஆழ்ந்த வாசிப்பு அற்ற தலைமுறைக்கு தேவையான கட்டுரை
  21. வெளிநாடு வருவது, எப்படியாவது அரச உத்தியோகம் பெற்றே தீருவது, ஊருக்கு படம் காட்டி கலியாணம் செய்வது, குனிந்து நிமிர்ந்து ஒரு பேப்பர் எடுக்கக் கூடாது, வேர்க்கக் கூடாது, காலில் மண் படக்கூடாது, கமக்கட்டு மணக்கக் கூடாது, என்று வாழ்வின் குறிக்கோள்கள் இப்படிப் போகும் இவர்களை நம்பி எந்த தொழிலிலும் இறங்கக் கூடாது.
  22. மனிசி இவ்வளவு படித்தும் இவ்வளவு ஊர் உலகம் சுற்றியும் இன்னும் ஒரு நல்ல steak restaurant இல் ஊனம் வடிய வடிய ஒரு medium rare Rib eye சாப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் கதைக்க மனம் வந்து இருக்காது. இத்தனைக்கும் நான் எனது 20 வயது வரைக்கும் இறைச்சி சாப்பிட்டதே இல்லை,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.