Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. இல்லை. இது வல்வெட்டித்துறை சந்தி.
  2. நாங்கள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே விசயங்களையே அங்கே செய்து விட்டு, இப்ப ஒவ்வொரு கரைகளில் ஒதுங்கியிருக்கின்றோம்....
  3. சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கடலூரில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.. இவர் பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று ஜோதிடர் கூறினார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kili-sodhidar-arrested-for-claiming-thangarbachan-victory-in-cuddalore-constituency-anbumani-ramado-597117.html 🤣🤣...........
  4. தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.
  5. நீச்சல் எல்லோருக்கும் தேவையான மிக மிக அடிப்படையான ஒரு பயிற்சி. சிறுவர்களாக இருக்கும் போதே இதை பழகிக் கொள்வது மிகவும் இலகு. நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்ற முற்படுவதும் சில வேளைகளில் இருவருக்கும் பெரும் ஆபத்தாக முடியும்.
  6. (குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூலி. ஒரு ஏழு வயதுப் பையனிடம் ஏது காசு? ஆனாலும் ஏதோ ஒரு வழியில் அவன் அந்தக் காசை அடிக்கடி சேர்த்து விடுவான். இங்கு வேறு எவரும் அவனின் அம்மாச்சிக்கு சுருட்டோ அல்லது பணிஸோ வாங்கிக் கொடுப்பது இல்லை. அம்மாச்சியின் கதைகளை வேறு எவரும் கேட்பதும் இல்லை. ஆனால் சுடு சோறும், சிவப்பு மீன் குழம்புக்கும் அடுத்த படியாக அம்மாச்சி சொல்லும் கதைகளே அவனுக்கு இந்த உலகத்தின் உன்னதங்களாக இருந்தன. அவனின் அம்மாவும், அம்மாச்சியும் அவ்வளவாக கதைப்பது இல்லை. வெளியில் கொட்டும் மழையின் நடுவில், அம்மாச்சியின் அனுமார் இலங்கையை எரித்துக் கொண்டிருந்தார். அசோகவனம் தவிர்ந்து இலங்காபுரி முழுவதும் அனுமாரின் வால் நீண்டு, அது நீண்டு தொடும் இடம் எல்லாம் பற்றி எரிந்தது. இலங்காபுரியில் பச்சை வாழைகள் எங்களூர் சிவன் கோவிலில் வருடம் ஒரு தடவை எரிக்கப்படும் சொக்கப்பனை போல் கொழுந்து விட்டு எரிந்தன. பெரும் தீயிலிருந்து பறக்கும் சாம்பல்கள் வானத்தை மூடியது, கடல் நிறம் மாறியது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டே போனார். அவன் பயத்தில் அம்மாச்சியுடன் ஒட்டி, மெதுவாக அவரின் சேலைத் தொங்கலுக்குள் போய்க் கொண்டிருந்தான். அம்மாச்சிக்கு ஆயிரம் கதைகள் தெரியும். சில கதைகளை உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சொல்வார். பருத்தித்துறை சந்தையில் தான் வியாபாரம் செய்ததாக அம்மாச்சி சொல்லியிருக்கின்றார். பல நாட்களில் அவரின் வியாபாரம் முடிய இருட்டி விடும். சிலர் ஒன்றாகச் சேர்ந்து பருத்தித்துறையிலிருந்து எங்களூரிற்கு அந்த இருட்டில் நடந்தே வருவார்களாம். வழியில் சில சுடலைகளை தாண்டியே அவர்கள் வரவேண்டும். ஒரு தடவை, முழு அமாவாசை, அம்மாச்சியும் மற்றவர்களும் நடந்து ஊர் எல்லை வரை வந்து விட்டனர். அம்மாச்சி எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று, 'சுந்தரி, சுருட்டுக்கு நெருப்பு இருக்குதா?' என்று அவரின் பின்னால் இருந்து ஒரு குரல். அம்மாச்சி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே ஒரு உருவம். அதன் ஒரு கை நீண்டிருக்கின்றது. நீண்டிருக்கும் கை முழுவதும் நெருப்பு சுவாலைகளாக எரிகின்றது. அதன் முகம் முழுவதும் எரிகின்றது. அம்மாச்சி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். பின்னர் பல ஆங்கிலப் படங்கள், தமிழ்ப் படங்களில் இப்படியான காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். ஆனால், இவர்களுக்கு எத்தனையோ வருடங்களிற்கு முன்னேயே அவனின் அம்மாச்சி இந்தக் காட்சியை, ஒரு அழுக்கு சேலையையே எப்போதும் கட்டிக் கொண்டு, தன்னந்தனி ஆளாக, உருவாக்கி இருந்தார். அம்மாச்சி என்ன படித்தார் என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அம்மாச்சி படிக்கவேயில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் போனதில்லை என்று அவனின் மாமா சொல்லுவார். அம்மாச்சிக்கு பல பிள்ளைகள் பிறந்தாலும், உயிர் தப்பி இருப்பவர்கள் அம்மாவும், அம்மாவின் தம்பியான மாமாவும் மட்டுமே. அம்மாச்சி எதையும் வாசித்தும் அவன் பார்த்ததில்லை. ஆனால், அம்மாச்சி தான் பள்ளிக்கூடம் போனதாகவும், முதலாம் வகுப்பு முடித்ததாகவும் சொல்வார். அம்மாச்சியின் மகாபாரதத்தில், 'அம்மா, கனி ஒன்று கொண்டு வந்திருக்கின்றோம்...' என்று பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியிடம் சொல்கின்றனர். 'ஐவரும் அதை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்..' என்று குந்திதேவி உள்ளிருந்து பதிலுரைக்கின்றார். தாயின் சொல்லை மீற முடியாததால், அவ்வாறே பாஞ்சாலி ஐவரினதும் மனைவி ஆகின்றார் என்று அம்மாச்சி தன் காவியத்தில் ஒரு நியாயம் சொன்னார். பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், கூனன் கதைகள் என்று அம்மாச்சியின் உலகம் பெரியது. அம்மாச்சி சொன்ன சில கதைகளை பின்னர் அவன் எங்கும் பார்த்ததே இல்லை. அம்மாச்சிக்கு அவரின் அம்மாச்சி சொல்லியிருப்பார் போல. அம்மா ஒரு கதையும் சொல்லவில்லை, அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை. சில காலத்தின் பின், அம்மாச்சி அவனின் மாமா வீட்டிற்கு போய் விட்டார். இனிமேல் மாமாவுடனேயே அம்மாச்சி இருக்கப் போகின்றார் என்று அவனின் அம்மா சொன்னார். மாமா பக்கத்து ஊரில் இருந்தார். மாமா எப்போதாவது அவனின் வீட்டிற்கு வருவார். அவன் மாமாவின் வீட்டிற்கு போவது மிக அரிது. மாமாவிற்கும் பல பிள்ளைகள். ஒரு வருடம் ஓடினது. அம்மாச்சிக்கு உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. ஒரு நாள் அம்மா அம்மாச்சியை பார்க்க அவனின் மாமா வீட்டிற்கு போனார். ஒருவாறு இவனும் அம்மாவுடன் சேர்ந்து மாமா வீட்டிற்கு போனான். அம்மாச்சி படுத்திருந்தார். கண் மூடி இருந்தது. மெல்லிய அணுங்கல்கள் அம்மாச்சியிடம் இருந்து வந்து கொண்டிருந்தன. 'அம்மாச்சி, நான் வந்திருக்கின்றேன்' என்றான். அம்மாச்சி கண்ணைத் திறந்து, மெதுவாக எழும்ப முயன்றார். இவன் பின்பக்கமாக கைகளில் மறைத்து வைத்திருந்த சுருட்டையும், பணிஸையும் அம்மாச்சியின் முன் நீட்டினான். அப்படியே எழும்பின அவனின் அம்மாச்சி அதை கையில் வாங்கிக் கொண்டே, இங்கு எவரும் அவரிடம் கதை கேட்பதில்லை என்றார். சுருட்டும், பணிஸும் கூட ஒருவரும் வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொன்னார். 'இரு, நான் உனக்கு ஒரு கதை சொல்கின்றேன்.' 'இல்லை அம்மாச்சி, கதை ஒன்றும் வேண்டாம்' என்றான் அவன்.
  7. 'முருங்கா' என்று இங்கு வேறு பல நாட்டவர்கள் இதைச் சொல்கின்றனர். Super Food என்று இங்கு பலரும் இதைக் கொண்டாடுகின்றனர். இங்கு வீட்டில் இரண்டு பெரிய மரங்கள் நிற்கின்றன. எக்கச்சக்கமான டிமாண்ட், இலை, காய், பூ எல்லாவற்றிற்கும். பாக்யராஜ் சொன்ன விடயத்தை இங்கிருக்கும் ஒரு இந்திய மருத்துவரிடம் சும்மா ஒரு தடவை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஏங்க, நீங்க படித்தவர் தானே......😀
  8. உங்களின் முதற் கதையை இப்பொழுது வாசித்தேன். மிகவும் அருமை.....👍
  9. 👍... இவர் 80 களில் தான் அங்கிருந்தார் என்று நினைக்கின்றேன். 🙏...... உங்களின் பெயரிலேயே காடு இருக்கின்றது. அந்த திரை விமர்சனத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நொச்சி இலையை அவித்து குளிப்பார்கள் ஏதோ ஒன்றிற்கு. சிறு வயதில் அதை தேடி போனதாக ஒரு ஞாபகம்...
  10. 🤣...... அதுவே தான். சசிகலா சில நாட்கள் ஜெயலலிதா போன்ற ஒப்பனையுடனும் உலா வந்தார்.......🫣
  11. 👍.... பொதுவாகவே பல மரக்கறிகளும், இலை தழைகளும் நல்லவையே என்பது என் அபிப்பிராயமும் கூட. அவை ஒரு நிவாரணி என்று சொல்லபடும் போது தான், ஏற்றுக் கொள்ள ஒரு தயக்கம். வீட்டில் வாரத்திற்கு ஒரு தடவை வெந்தயம், பூண்டுக் குழம்பு செய்வார் எனது மனைவி. அருமையாக இருக்கும், இது கேள்வி - பதில் - விளக்கம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்பதால், நான் அங்கு விளக்கம் எதுவும் கேட்பதில்லை.......😀
  12. 👍........ இவர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பொழுது நன்றாகவே செயற்பட்டார் என்று நினைக்கின்றேன். சமூக ஊடகங்களில் சிறு சலசலப்புகள் ஒன்றோ, இரண்டோ வந்திருந்தன. மற்றபடி நான் வேறு எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஒரு தடவை இவரும், அங்கு பணியாற்றும் சில விரிவுரையாளர்களும் இங்கு அமெரிக்கா வந்து சில சந்திப்புகளை நடத்தினர். நானும் பங்குபற்றியிருக்கின்றேன். பின்னர் ஒரு தடவை நாங்கள் சில பேர்கள் கிளிநொச்சி போயிருக்கின்றோம். உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
  13. 👍.... உண்மையில் அவர் ஒரு அற்புதம் தான். நான் அவருக்கு இன்ஸ்ரக்டராக இருந்திருக்கின்றேன். எதையும் விளங்கிச் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார். பொதுவாக பலர் முந்தைய வருடங்களில் இருந்து பிரதி எடுத்து வேலையை முடித்து விட்டு போய் விடுவார்கள்.....😀 மேலே படித்து முடித்து விட்டு நாட்டிற்கு திரும்பிப் போன வெகு சிலர்களில் அவரும் ஒருவர்...🙏
  14. உயிர்த்தெழுதல் ------------------------- நாங்கள் அறியாமலேயே ஒவ்வொரு திங்கள் காலையும் உயிர்த்தெழுதல் நடந்து கொண்டேயிருக்கின்றது. பல விடயங்கள் சனி, ஞாயிறுகளில் சுத்தமாக மறந்து போய், திங்கள் பொழுது புலரப்புலர லௌகீக வாழ்விற்கான கடமைகள் மீண்டும் மெதுமெதுவாக நினைவுக்குள் வருகின்றன. மழை முடிந்த பின் இலைகளிலிருந்து சொட்டும் துளிகள் போல மனதிற்குள் துளித்துளியாக வார நாட்களுக்கான உலகம் விழுந்து பரவுகின்றது. திங்கள் அதிகாலையிலேயே அதிக மாரடைப்புகள் ஏற்படுகின்றன என்ற புள்ளிவிபரம் ஒன்றும் உள்ளது. . அவர் உயிர்த்து மேலே போனார் என்கின்றனர். இன்னொரு மகரிஷி மீண்டும் உயிர்த்து வந்தார் என்றும் சொல்கின்றனர். எண்ணூறு கோடி மக்களும் ஒரு வாழ்க்கையை முடித்து இன்னொரு வாழ்க்கைக்குள் வாரா வாரம் போய் வந்து கொண்டிருப்பதை கொண்டாடுவோர் எவருமில்லை. 'கற்பில் சிறந்தவர் யார்?' 'கண்ணகி.' 'அப்புறம்?' 'சீதாப்பிராட்டி.' 'அப்புறம்?' ' ' பொதுவாக எல்லோரும் முழித்து நிற்கும் தருணம் இது. தாய், மனைவி, மகள்கள், சகோதரிகள், நண்பிகளின் பெயர்கள் சட்டென்று பதிலாக வருவதில்லை. கொற்றவை தெய்வத்தின் பெயரைச் சொல்ல முன், பெற்ற அன்னையின் பெயரைச் சொல்வோரும் இல்லை. எவரிலும் சந்தேகம் என்று இல்லை, அருகிலேயே இருப்போரின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை, அவ்வளவுதான். இப்படித்தான் நாங்கள் திங்கள்களில் உயிர்த்தெழுவதும் கண்டும் காணாமல் விடப்படுகின்றது. உயிர்த்தெழுதலின் குறியீடு முயல் என்று போன ஞாயிறு தான் தெரிந்தது. ஆமையிடம் தோற்ற முயல், சிங்கத்தை கிணற்றுக்குள் தள்ளி விட்ட முயல், பிளேபாய் புத்தகத்தில் இருக்கும் முயல் என்று முயலின் வரலாறும் தொடர்பும் நெடியது. மேல் வட கோளத்து தெய்வங்களின் கைகளில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முயல் இருந்து வந்துள்ளது. மத்திய கோட்டைச் சுற்றி இருந்தவர்களுக்கு, எங்களுக்கு தான், முயலின் அருமை பெருமைகள் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. எப்பொழுது பார்த்தாலும் சிங்கமும் புலியும் தான் எங்கள் தெய்வங்களின் மிருகங்கள். உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ வருகின்றது. இலங்கை பொதுஜன பெரமுன, ராஜபக்சாக்களின் கட்சி, அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரமளவில் தேர்ந்தெடுக்க இருக்கின்றார்கள். பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச இவர்களில் ஒருவர் தான் இலங்கைக்கு ஜனாதிபதியாக மிகவும் பொருத்தமானவர் என்று இந்தக் கட்சியினர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். யார் யார் உயிர்த்தெழுந்து மீண்டும் வந்தாலும், இவர்கள் இருக்கும் வரை போன இலங்கை போனதுதான்.
  15. 👍.... பூண்டு குழம்பு, பூண்டு ரசம் என்று நம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள், இது கொழுப்பை குறைத்து விடும் என்று. Stanford University இப்படி ஒன்றுமேயில்லை என்று ஒரு முடிவை சொல்லி விட்டார்களே....😀 சமீபத்தில் இந்தியாவில் பூண்டிற்கு பெரும் தட்டுப்பாடாகி, விலை பொன் விலை ஆகியது. 'அமலாக்கத்துறையா, சார், இங்க ஒருத்தன் அவன் வீட்ல பூண்டு குழம்பு வைச்சு சாப்பிட்றான். நீங்க உடனே வாறீங்களா?...' என்று ஒரு வடிவேலு மீம்ஸ் கூட சுற்றித் திரிந்தது..😀
  16. 👍.... சைவசமயப் பரீட்சையில் இன்னும் ஒரு பேப்பர், இன்னும் ஒரு பேப்பர் என்று கேட்டு எழுதுகிற மாதிரி இது போய்க் கொண்டிருக்கின்றது.........
  17. 👍.... என்ன, இந்த மாதம் முடிந்தால், குளிரும் பனியும் ஓடி விடும் தானே....
  18. 😀.... என்னாது........சீமான் திரியில 'வழமை போல' நீங்கள் இறங்கி அடிக்கவில்லையா........ நீங்க அடிச்ச அடியில, பையன் இனிமேல் அந்த திரி பக்கமே வர மாட்டேன் என்று பின் வாங்கினாரே...😀 அந்த திரியில் ஒரு கருத்து, ஒரேயொரு கருத்து மட்டும் நான் எழுதினேன். அப்படியே ஆடிப் போய், அடுப்படிப் பக்கம் போய், எந்த அரிசி நல்லது, சீனி எவ்வளவு எடுக்கலாம், உப்பு ஏன் கூடாது என்று வேற பக்கம் நானும் ஓடி விட்டன்.......😀 😀.... அப்படி தடக்கி விழுந்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆள் மற்ற ஆளைப் பார்த்து கேட்பார், 'பாஸ், நீங்க என்ன டெக்னாலஜி.......'
  19. 🤣....... சமூக ஊடகங்களே நீங்கள் சொல்வது போலவே. ஆனால், யாழ் களத்தில் எதுவுமே வேகாது போல. எங்க பிழையாக திரும்பினாலும், அங்கே ஒரு அடி போட ஆட்கள் காத்துக் கொண்டு நிற்கினமே....😀....👍
  20. 🤣.......... சுந்தரராமசாமி ஒரு தடவை இன்றைய தமிழ் பற்றி இப்படி சொன்னார் என்ற குறிப்பை நேற்று ஒரு இடத்தில் பார்த்தேன்: வண்டிச் சில்லு ஏறிப் போன பாம்பு போல இன்றைய தமிழ் இருக்கின்றது. தலை முன்னுக்கு போக முனைகின்றது. வண்டிச் சில்லால் நசுங்கின பாம்பின் உடம்பு அப்படியே தரையில் அசையாமல் கிடக்குது என்று. இன்றைக்கு கனவெல்லாம் பாம்போ என்று நினைத்தேன்...🤣 தமிழ் என்று இல்லை. எல்லா விடயத்திலும் இப்படித்தான் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் போல....... எதிலும் கொஞ்சம் முன்னுக்கு போக எத்தனிக்கும், கொஞ்சம் போக மாட்டம் என்று நின்று அடம்பிடிக்கும்....😀
  21. ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன. கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது. கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்ணீரில் குளித்து இப்பொழுது சுத்தமாக கூட்டில் நிற்கின்றன. உள்ளி கரைத்து ஊற்றினால், அந்த மணத்திற்கு ஓடி விடும் என்றனர். உள்ளித் தண்ணீரை குடித்து விட்டு இப்பொழுது ஆரோக்கியமாக பறந்து திரிகின்றன. இனிமேல் எஞ்சி இருக்கும் வழிகள் எல்லாம் அவைகளின் உயிர்களுக்கு ஆபத்தானவையே. ஆனால் மனமில்லை. இதைத் தெரிந்து தான் இவை என் வீட்டில் கூடி கட்டியிருக்கின்றன போல என்று நினைத்திருக்க, ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைக் கண்டேன். ************** தேனீ (ஞானக்கூத்தன்) ---------------------------------- வண்டின் மென்மையான ரீங்காரம் செவியில் ஒலித்தது எங்கே வண்டென்று தேடினேன் வரவேற்பறை முழுவதும் பறந்து பறந்து சுற்றிப் பார்த்த அந்தத் தேனீ என்னையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தது பால்கனிப் பக்கம் பின்னர் பறந்தது சில நாட்கள் சென்றதும் வாரணாசி சாது சன்யாசி ஒருவர் பால்கனியில் தலைகீழாய்த் தொங்கி விளையாட்டுக் காட்டினாற் போல ஒரு பெரிய தேன்கூடு எண்ணற்ற தேனீக்கள் சுற்றின தேனீ கொட்டும் கொட்டினால் கடுக்கும் சருமம் தடிக்கும் என்றார்கள் மலையில் கட்டப்பட வேண்டிய தேன்கூடு என் வீட்டுப் பால்கனியில் கட்டப்பட்டது ஆட்களை ஏவி தேன்கூட்டைக் கலைக்கச் சொன்னேன் அவர்கள் கூட்டைக் கலைத்த பாங்கு எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை கவலைப்பட்டவாறு உட்கார்ந்திருந்தேன் வண்டின் மென்மையான ரீங்காரம் செவியில் ஒலித்தது சட்டென்று என்னை அறியாமல் மன்னி என்றேன் சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்பது போலக் காதில் அருகில் முரன்றது தேனீ.
  22. நாசா வெளியிட்டுள்ள முழுச் சூரியகிரகணத்தின் பாதையும், நேரமும்.
  23. இவர் அப்படியே நெருக்கடி கொடுத்திட்டாலும்.........🤣 அருணாச்சலப் பிரதேசம் போகுது, போகுது, போயே விட்டது என்றாலும், சைனாவிற்கு ஒரு நெருக்கடியும் கொடுக்க மாட்டினம்.
  24. மிகப் பிரபலமான ஒரு வரிக்கதை இது. இங்கு களத்தில் முன்னரே இது வந்ததா என்று தெரியவில்லை. Cuando despertó, el dinosauro todavía estaba allí (When he awoke, the dinosaur was still there ) என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது. When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது. என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது. இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் it isn’t a short-story, it is actually a novel. https://www.sramakrishnan.com/ஒரு-வரிக்கதை/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.