Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை. எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல. ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம். விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.
  2. 'பருத்தி மூட்டை குடோனுக்குள்ளேயே இருந்திருக்கலாம்.................' என்ற தமிழ்ச்சினிமா காமடி இது..................................🫣. தொழிற்சாலைகளை ஆரம்பித்து, உற்பத்திகளை உற்பத்தி செய்யப் போகின்றார்கள் என்று நினைத்தவர்களுக்கு, மீண்டும் கிடைக்கப் போவது 'Made in China' தான்................ இன்றைய உலகில் வேற தெரிவே இல்லை. உலகத்திற்கு அமெரிக்கா விமானம் செய்யும், சீனா ஊசி செய்யும், இந்தியா மனிதர்களை உற்பத்தி செய்யும்.....................
  3. 👍............... 2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் இந்திய அரசியல்வாதிகளும், அவர்களை நம்பிய இந்திய மக்களும் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே என்னுடைய சில இந்திய நண்பர்கள் 3020ம் ஆண்டில் கூட தாங்கள் ஒரு வல்லரசாக வர முடியாது என்ற உண்மையை தெளிவாக காரணங்களுடன் சொல்லுவார்கள். சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள். வட இந்தியா, தென் இந்தியா என்று உள்நாட்டில் இருக்கும் அபிவிருத்தி இடைவெளி ஒரு காரணம் என்றால், அபிவிருத்தி அடைந்ததாக சொல்லிக்கொள்ளும் தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் சமூகநீதியின் சீர்கேடான நிலைமை அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களின் முன் மோட்டார் சைக்கிள் ஓடினார் என்பதற்காக பட்டிலியன இளைஞர் ஒருவரின் கைகள் அதே ஊரைச் சேர்ந்த வேறு சிலரால் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே தினமும் இப்படியான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றைய மாநிலங்களின் நிலை இதைவிடக் கொடுமை. இந்தியாவில் ஒரு சமச்சீரான முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டது. நேபாளத்தையும், இலங்கையையும், மாலதீவையும், பூட்டானையும் சுற்றிவர வைத்துக் கொண்டு இந்தியா அதன் வலிமை இது என்று நினைக்கின்றது. ஒன்றுமேயில்லாதா பாகிஸ்தானுடன் கூட ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை இந்தியாவால் நடத்த முடியாது. இந்த யுத்தத்தாலும், உடனேயே வந்த யுத்த நிறுத்தத்தாலும் இந்தியாவிற்கு கிடைத்ததோ அல்லது இந்தியா சாதித்ததோ ஒன்றுமேயில்லை. மாறாக, இன்னும் சில காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவிற்குள் புகுந்து இன்னொரு தாக்குதலை நடத்துவதைக் கூட இந்தச் சம்பவங்கள் எந்த வகையிலும் தடுக்கப் போவதுமில்லை.
  4. 😌............ இல்லை பையன் சார், பொதுவெளியில் உரையாடுவதற்கும், கருத்துகளை பகிர்வதற்கும் என்று சில வரையறைகள் உண்டு. எங்களின் தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக, நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்றவற்றை அவமதித்தல் சரியல்ல என்றே எனக்குத் தெரிகின்றது.
  5. சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் மட்டும் தங்கியிருக்கும் பாகிஸ்தானால் ஒரு வார யுத்தத்தை நடத்துவதே முடியாத காரியம். அவர்களின் உள்நாட்டு அரசியல் நிலையும் மிகவும் தளம்பலாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. ஓரிரு வருடங்களின் முன் இலங்கையில் இருந்த அதே பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானில் சில வருடங்களாகவே இருந்து வருகின்றது. இம்ரானை சிறையில் அடைத்து விட்டு, பாகிஸ்தானில் ஒரு நிழல் இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி அசீம் முனீர் தனது நிலையை தக்கவைக்க அங்கிருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தயவை நாடிக் கொண்டிருக்கின்றார். இது இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம். ஆனால் வழமை போலவே இந்தியா இந்தத் தடவையும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் தங்களின் இராணுவ பலத்தை ஊர்வலமாகக் காட்டுவதை விட வேறு எதையும் இந்திய இராணுவத்தால் சாதிக்க முடியுமா என்று தோன்றுகின்றது. நவீன ஆயுதங்கள் மட்டும் போதாது, அதை இயக்குபவர்களும் அதே அளவிற்கு முக்கியமானவர்கள் என்று தோன்றுகின்றது. இப்பொழுது சீனா இலகுவாக அப்படியே அருணாச்சல் பிரதேசத்தை இரவோடு இரவாக கைப்பற்றலாம். இந்தியாவில் யூடியூப்புகளும், சமூக ஊடகங்களும் மட்டும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தும். எந்தப் போரும் அழிவைக் கொண்டுவரும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாடுகளை சில பல வருடங்கள் பின்னுக்கும் கொண்டு செல்லும். ஆனாலும் சில போர்கள் தவிர்க்கப்படக்கூடாதவை. கடந்த 2000 ஆண்டுகளில் 1500 வருடங்களுக்கு மேல் அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்ததாலோ என்னவோ, இந்திய, இலங்கைச் சமூகங்களின் சுயமரியாதை சில இடங்களில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஓரிருவர்களும், வெகு சில சந்தர்ப்பங்களும் மட்டுமே விதிவிலக்கு, உதாரணம்: எங்களின் தலைவரும் அவருடைய போராட்டமும். இந்தப் போர்நிறுத்த அறிவிப்பால் இந்திய, பாகிஸ்தான், ஈழத்தமிழ் யூடியூப்காரர்கள் வருமானத்தை இழக்கப் போகின்றார்கள். யூடியூப் நான் இதுவரை காலமும் நினைத்திருந்ததை விட மிகப் பெரும் ஒரு வியாதி என்று தெரிகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இப்படியான பலவும் வந்து போயிருக்கின்றன. ஆதலால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. வரும் சந்ததிகள் இதிலிருந்து பிழைத்துக்கொள்ளும்.
  6. இந்தியாவின் மத்திய அரசுக்கு, குறிப்பாக பாஜக அரசுக்கு, எதிராக இருக்கும் மாநில அரசுகளின் தலைவர்கள் மட்டும் இல்லாமல், அந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் மிகவும் ஆதரவான கருத்துகளையே வெளியிடுவார்கள். அது தான் சரியும், முறையும் கூட. ஒரு போர்க் காலத்தில் எந்த மாநில நலன்களையும் விட நாட்டின் இறைமையும், ஒற்றுமையுமே பிரதானமானது. ஈழத்தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் இதையொத்த ஒரு கருத்தையே சில இந்திய தமிழ் மற்றும் தமிழரல்லாத நண்பர்கள் எனக்குச் சொல்லியிருந்தனர். விஜய்காந்த் கூட இப்படியான ஒன்றைச் சொன்னதாகப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் போக்கு, அது காட்டும் நெளிவுசுழிவுகள், அதன் தயக்கம் தான் யோசிக்க வைக்கின்றன. ஒரு பிராந்திய வல்லரசு என்றும், உலகின் பலமான ஒரு இராணுவ அமைப்பு தங்களிடம் உள்ளது என்றும் சொல்லும் இந்தியாவால் கொடுக்கப்படும் பதில் தாக்குதல்கள் மிக விரைவானதாகவும், பலமானதாகவும், கச்சிதமானதாகவும் இருக்கவேண்டும். இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். இந்த நாடுகள் செய்வது மிக அதிகமாக இருக்கும், ஆனால் வெளியிடப்படும் தகவல்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இந்தியாவின் பதிலடிகள் சமூக ஊடகங்களில் தான் அதிகமாக இருக்கின்றது, பாகிஸ்தானில் அல்ல.
  7. ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் பற்றிய ஒரு கட்டுரை இந்திய ஊடகங்களில் வந்திருந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த பின், இந்தியா எந்த வகையிலும் ஒரு போருக்கு தயாரான, ஆளுமை உள்ள நாடாகத் தெரியவில்லை. யாராவது இலங்கை போன்ற இளைத்தவர்கள் கிடைத்தால் மட்டுமே இந்தியாவால் மார்தட்டிக் கொள்ள முடியும் போல. மற்றபடி இந்திய அரசுக்கோ, ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இது இன்னுமொரு சினிமாவே. இவர்கள் இப்படியே இருந்தால், யாராவது வந்து இவர்களை நொறுக்கித் தள்ளப் போகின்றார்கள்................🫣.
  8. 🤣................. பையன் சார், உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மிகவும் சந்தோசம். பயணம் மிக்க நன்றாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன். முறிந்த கை சரியாகிவிட்டது. அதன் பிறகு ஒரு முறிவும் இன்னும் வரவில்லை..................🤣. ஆனாலும் சில நாட்களாக எங்கும் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும்............ இப்பொழுது நீங்களும் வந்து விட்டபடியால், ஒரு உற்சாகம் வந்தது போல இருக்கின்றது............👍. நான் சென்னை அணி வெல்லுவார்கள் என்று தெரிவு செய்திருக்கவில்லை, ஆனாலும் அவர்கள் இப்படி தோற்பது சகிக்க முடியாமல் இருக்கின்றது. மற்றபடி பல போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன. என்னுடைய கிளிச்சாத்திர தெரிவுகளும் பரவாயில்லை என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றன....................🤣. ஆனாலும் சனி, ஞாயிறுகளில் நடக்கும் போட்டிகளில் கிளியின் தெரிவுகள் படு மோசம். முக்கால்வாசி பிழை...........................😜.
  9. கிளியை குற்றம் சொல்லவும் முடியவில்லை............ ஆனால் இந்தப் போட்டியில் இப்படி தெரிவு செய்து வைத்திருக்கின்றதே............................🫢.
  10. 🤣.................. உங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எப்படி சென்னையை தெரிவு செய்துள்ளார்கள் என்று புரியவில்லையா.............. போட்டிகள் ஆரம்பிக்கும் முன், சென்னை அணி 'அப்பாக்கள்' விளையாடும் அணி என்று தெரியாமல் தெரிவு செய்துவிட்டோம்...................🤣. 14 வயது பிள்ளை எப்படி விளையாடுகின்றான்............ 41 வயதுக்காரர்கள் இருக்கும் சென்னையால் இவ்வளவு தான் முடியும் போல................ உங்களை எவராலும் இனி இங்கே எட்டிப் பிடிக்கவே முடியாது போல.........👍.
  11. 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்ற/பாராளுமன்ற/லோக்சபா தேர்தல் என்று மற்றைய நாடளாவிய பொதுத் தேர்தலை குறிப்பிடுகின்றனர். மத்திய அரசுக்கான தேர்தல். ராஜ்யசபா என்று ஒன்றும் அங்கே இருக்கின்றது. ஆனால் அதன் பிரதிநிதிகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிந்து எடுக்கப்படுவதில்லை. மாநிலப் பிரதிநிதித்துவமும், இன்னும் சில வழிமுறைகளிலும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இளையராஜா இருக்கின்றார். சச்சின் இருந்தார்.............
  12. போன கிளி திரும்பவும் வந்திட்டுது.................. ஆனால் நான் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கின்றேன், ஆகவே இந்த சனி, ஞாயிறுகளில் கிளியும் நானும் குளோஸ்.....................🤣.
  13. 'கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுது.........................' 🤣..................... சிவாஜி போல ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கின்றன இந்த இரண்டு அணிகளும்............ டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................
  14. இந்தப் பறவை கிளியா அல்லது காகமா........... இது படு பயங்கரமான ஒரு போட்டியாக இருக்கும் போல...................
  15. விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............
  16. நீங்கள் சொல்வது மிகவும் சரியான ஒன்றே, விசுகு ஐயா. ஆனால் இந்த வளர்ச்சி இப்படியே நீண்டு போய் இவர்கள் இன்னும் வளரப் போவதில்லை என்பது தான் என் அபிப்பிராயம். அத்துடன் இவர்கள் ஒரு மாற்றுச்சக்தியாக வந்தது போல, இவர்களுக்கே மாற்றாக இன்னும் ஒருவர் இப்பொழுது வந்துவிட்டார். மாற்றம் ஒன்று தேவை என்று பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்காத வரை மாற்றுச்சக்திகள் எங்கும் ஆட்சிக்கு வரப்போவதில்லை.
  17. ஈரோடு கிழக்கில் ஏறினதை விடவா இனி ஏறப் போகுது. அங்கேயே வைப்புப்பணம் போனது. அந்த தேர்தலில் நாதக ஒரேயொரு எதிர்த்தரப்பாக போட்டியிட்டே இது தான் எல்லை என்று ஆகியது. பெரிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளும் பெரும்பாலான வழமையான தங்களின் வாக்காளர்களை தக்கவைத்துக்கொள்வார்கள். தவெகவிற்கு வாக்களிக்கப் போகின்றவர்களில் அதிகமானோர் நாதகவின் ஒரு பகுதியினரே. ஒரு மாற்றம், அதுவும் தீவிரமான மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் இளைஞர்கள் இவர்கள். இன்றைய அதிகாரத் தரப்பை விரும்பாதவர்களாகவும், எதிர்ப்பவர்களாகவும் இருப்பவர்கள் இவர்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்கள் விஜய்யிடம் காண்கின்றார்கள். இளைஞர்கள் என்றும் இளைஞர்களாகவே இருப்பதும் இல்லை. அவர்கள் குடும்பஸ்தர்கள் ஆகின்றனர். அவர்களின் அரசியலும் மாறுகின்றது. நாதக தனிய நின்றால் ஒரு ஐந்து வீதம் கிடைக்கலாம்.
  18. 🤣.................. நாளைக்கு எப்போதும் தமிழன் நிமிரத்தான் போகின்றார். ஆனால் அவர் ஒரேயடியாக முன்னுக்கு போவது நடக்காது என்று தான் நினைக்கின்றேன்........................ ஏனென்றால் அவருக்கு ஐபிஎல் பற்றி நிறையவே தெரிந்திருக்கின்றது...............🤣.
  19. தமிழ்நாட்டில் ஒரு மநகூ அவசரமாக தேவைப்படுகின்றது. மநகூ என்றால் மக்கள் நலக் கூட்டணி. கடைசியாக இப்படியான ஒரு கூட்டணியை விஜய்காந்த் தலமையில் வைகோ உருவாக்கி இருந்தார். அத்துடன் அரசியலில் விஜய்காந்த் விலாசமே இல்லாமல் போனார். வைகோவின் அரசியல் சாணக்கியம் மீண்டும் ஒரு முறை அடிவாங்கியது. இந்த வாரம் அவரது மகன் துரை வைகோ விவகாரத்தில் அந்த சாணக்கியம் மீண்டும் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றது. அதிமுக - பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை இந்த தடவை வாரி இறைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் இறுதி முயற்சி. திமுகவிற்கு எவ்வளவு தடைகள் ஒன்றிய அரசால் வந்தாலும், செந்தில் பாலாஜி முற்று முழுதாக சுற்றி வளைக்கப்பட்டாலும், திமுகவும் சளைக்காமல் பணத்தை கொட்டும். 'ஆட்சியில் பங்கு...............' என்ற கோஷத்துடன் வந்த விஜய்யும், 'வென்றால் முயற்சி, தோற்றால் பயிற்சி...............' என்று இவ்வளவு நாளும் சொல்லிக் கொண்டிருந்த சீமானும் இந்த இரு கூட்டணிகளின் முன்னும் ஒன்றுமேயில்லை. நாதக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கும், ஆனால் தொகுதிகளுக்கு பூத் ஏஜண்டுகள் கூட போதியளவில் கிடைக்கமாட்டார்கள். விஜய்க்கு 234 வேட்பாளர்கள் கிடைப்பதே சிரமம். இந்த இருவரிடமும் தேர்தலை சமமாக எதிர்கொள்ளும் வசதி வாய்ப்புகளும் கிடையாது. இவர்கள் இருவரும் சேர்ந்தால், இன்னும் சில உதிரிக் கட்சிகளையும் சேர்த்தால், மீண்டும் ஒரு மநகூ உருவாகும். அப்படி ஒன்று உருவாகினால், தேர்தல் முடிய இருவரும் விலாசம் இல்லாமல் போகவும் கூடும். அப்படி ஒரு கூட்டணி உருவாகாமல் விட்டாலும், இவர்கள் இருவரும் பெரிதாக எந்த தாக்கத்தையும் 2026ம் ஆண்டில் ஏற்படுத்தப் போவதும் இல்லை. எப்படிப் பார்த்தாலும், ஆகக் குறைந்தது 234 வேட்பாளர்களுக்கு வைப்புப்பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு மேலேயும் இவர்களின் ஒவ்வொரு வேட்பாளரும் கைகளில் கொஞ்ச பணம் வைத்திருக்க வேண்டும் போல........... தேர்தல் முடிந்த பின் கட்சித் தலைமை சொல்வதைச் செய்ய.................
  20. 🤣..................... எப்ப எப்ப நான் மூன்றாவதாக நிற்கின்றனோ, அப்ப அப்ப உலகில் அதர்மம் தலைவிரித்தாடி நான் தலைகீழாக விழுகின்றேன்.................. அன்று கிளியின் வாக்கும் பொய்த்துப் போகின்றது.............. நாளைக்கு பங்களூரு வெல்வது அதர்மம் தான், ஆனால் அது நடக்கப் போகின்றது...................🤣.
  21. எவ்வளவு தான் அடக்கினாலும் புல்லரித்துவிட்டது....................🤣. கடல், கப்பல், வீரம்............. இப்படியே சொல்லிச் சொல்லி, கடைசியில் அந்த ஊரில் ஒரு ரோடு கூட போடவில்லை................ இவ்வளவு நாளும் மாறி மாறி வல்வை நகரசபையும், உடுப்பிட்டித் தொகுதியும் எங்களிடம் தானே இருந்தது................
  22. கிளிச்சாத்திரம் தான் என்னுடைய கதை....... 'ஐயாவுக்கு இன்றைக்கு டெல்லி வந்திருக்கு................. அமோகமாக இருக்கப் போகிறாரு.................' 🤣................ நாளைக்கு கிளி மும்பையை எடுத்திருக்குது............
  23. 'சமூகம் என்றால் நாலு பேர்கள்...............' என்று சொல்லுகின்ற ஒரு வழக்கம் இருக்குது தானே......... இது தான் அந்தச் சமூகம்..................🤣. ஆழ்துளைக் கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது போல, அடி எங்கே என்று தெரியாமல் கீழே போய்க் கொண்டிருக்கும் போது நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்...........🤣. நந்தனும், புலவரும் நாசா ராக்கெட் மாதிரி மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.............👍.
  24. 🤣........ நந்தன் தனி மூர்த்தி ஆகிவிட்டார் அண்ணா.......
  25. 🤣............... அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.