Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. மொத்தமாக இந்திய சினிமாக்கள் எந்த வருடமும் இழந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று இழப்பு எல்லா இடமும் நடந்து கொண்டே இருக்கின்றன. 70ம் ஆண்டுகளில், 80ம் ஆண்டுகளில் மொழிவாரியாக 100 படங்கள் என்ற அளவில் வந்து கொண்டிருந்த போதும் பத்து படங்கள் தான் வென்றன, 90 படங்கள் தோற்றன. அப்பொழுதே தயாரிப்பாளர் துரை என்று நினைக்கின்றேன். பின்னர் ஒரு கோவில் தர்மம் வாங்கிக் கொண்டிருந்தார். மணிரத்தினத்தின் சகோதரர், ஜீ.வி, தற்கொலை செய்துகொண்டார். ஏவிஎம்மே இனிமேல் முடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். அட்சயபாத்திரம் போல இருந்த, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஆர்.பி. சௌத்திரியும் ஒதுங்கினார். இந்திய சினிமா உலகம் என்பது லாஸ் வேகாஸ் போன்றதே. லாஸ் வேகாஸில் இறுதியில் வென்றவர்கள் எவருமில்லை என்பார்கள். ஷாருக்கின் 'திவான்', 'பதான்' இரண்டும் வந்து தான் ஹிந்திப் படங்களிற்கு இன்னும் சந்தை இருக்கின்றது என்பது தெரியவந்தது. அதுவரை சில வருடங்களாக பாழும்கிணற்றில் விழுந்தது போலக் கிடந்தது ஹிந்தி திரையுலகம். 400 கோடிகள் செலவென்றால், 800 கோடிகள் வசூலாக வந்தால் தான் போட்ட முதல் கையில் வரும் என்ற நிலைதான் இன்று. 800 கோடிகள் மதிப்புள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் என்று தமிழில் எவரும் இல்லை. படம் வெளியாகி அடுத்த நாள், மூன்றாம் நாள், முதல் வாரம் என்று அறிக்கைகளில் வெற்றி கொண்டாடுவார்கள். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பின், தாங்கள் இழந்து விட்டோம் என்ற உண்மையை விநியோகஸ்தர்கள் வெளியே சொல்லிக் கொள்கின்றனர். தீராத கவர்ச்சி, கறுப்பு பணம் போன்றன சினிமாவை அழியாமல் கொண்டு செல்கின்றன. சரவணாஸ் 'லெஜெண்ட்' போல சிலர் வந்து சினிமாவை வாழவைப்பார்கள். லைக்கா போன்ற நிறுவனங்களும் வாழவைப்பார்கள். 'பொன்னியின் செல்வன்' வெளிவந்த போது, அதுவரை வெளியாகியிருந்த லைக்காவின் எந்தப் படங்களும் இலாபத்தை சம்பாதிக்கவில்லை என்று ஒரு செய்தியும் வந்திருந்தது. ஆனால், அவர்களின் பல படங்களை பெரும் வெற்றிப்படங்களாக அவை வெளியான காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமா என்பது திரையில் மட்டும் தான் நடிப்பு என்றில்லை, திரைக்கு வெளியேயும் சம்பந்தப்பட்டவர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நாயக பிம்பம் என்றும் தேவையாக இருக்கின்றது. ஒரு சின்ன விலங்கு உருளையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது போல சமூகமும், திரை உலகமும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
  2. மூன்று கிழமையாகி எனக்கு முத்தரசன் என்றாலே யார் என்று மறந்து போய்விட்டது. நீங்கள் இப்ப வந்து சீமான் அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார் என்றால், நான் எங்கே போவன்...................🤣. சவுக்கடி அண்ணாமலையார், அடுப்படி மருத்துவர் ஐயா, பனையூர் விஜய் என்று உலகம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது, தூயவன்.............. தமிழ்நாடு இப்படியே போனால் சீமானே மங்கலாகி விடுவார்........😜. எப்படியும் சீமான் ஏதாவது திரும்பவும் சொல்லுவார், அப்ப பார்த்துக்குவம்............... ஐபிஎஸ் வருண்குமாருடன் ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருக்கின்றது போல.............. அது கருத்து மோதல் இல்லைத்தானே...............
  3. ❤️................... அசத்தலான எழுத்து, கவிஞரே............... நாங்கள் தெரியும் என்போம், அவர்கள் மறந்திருப்பார்கள்................. அவர்கள் தெரியும் என்பார்கள், நாங்கள் மறந்திருப்போம்............... பின்னர் இரண்டு பக்கங்களுக்குமே விந்தையாக இருக்கும்..........👍.
  4. நீங்கள் சும்மா படுத்திருந்த சிங்கத்தின் மூக்குக்குள் தும்பு விட்டிட்டீர்கள்................🤣. 'அரசகட்டளை' மட்டும் எத்தனை தடவைகள் பார்த்தேனோ........ ஏழோ எட்டோ வயதிலேயே யோகநாயகி, ரஞ்சனா என்று இரண்டு தியேட்டர்களுக்கும் தனியே போய் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை நம்பித்தான் எம்ஜிஆர் படங்களையே இறக்கினார்கள்............ இப்ப சிவாஜிலிங்கம் ஊரிலிருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுகின்றார்............. ஆனால் அவரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை...... முறைப்படி, உரிமைப்படி நான் தான் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வேண்டிய ஆள்...............🤣. அவர் சிவாஜி ரசிகன் என்று நினைக்கின்றேன், நான் தான் அக்மார்க் எம்ஜிஆர் ரசிகன்............... 'இருந்ததையும் கெடுத்தார் இளையதம்பி மேத்திரியார்...............' என்று என்னூரில் சொல்வார்கள். பின்னர், வளர வளர, எம்ஜிஆரும் ஒரு இளையதம்பி மேத்திரியார் தான் என்ற புரிதல் வந்தது..............
  5. 🤣.................... சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு......... ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே............... அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்.............. பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்.........
  6. 'மீனவர்களுக்கிடையே இனிமேல் பேச்சுவார்த்தை கிடையாது, இனி அதிகாரிகள் பேசிக் கொள்வார்கள்.......' என்று தான் தலைப்பு இருந்திருக்க வேண்டும்.................... ஆனால் அது சப்பென்று, பூசைக்கு உப்பில்லாமல் செய்த வெண்பொங்கல் போல, போய் விடுமே.................
  7. 🤣.................. மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜. ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣. அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.
  8. யேர்மனி என்றபடியால் ஒரு உயிர் தப்பியது. இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால், கிறிஸ்மஸ் அன்று நடந்த பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இதுவும் சேர்ந்திருக்கும்............... உதாரணம் ஒன்று: https://www.azfamily.com/2024/12/26/4-injured-2-detained-shooting-inside-phoenix-sky-harbor-christmas/ குடும்பம் குடும்பமாக கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவார்கள் என்று நினைத்தால், இவர்கள் சுடுபடுகின்றார்கள்..........🫣.
  9. '.............. என்றால் பேயும் இரங்கும்' என்று பூசி மெழுகித்தான் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் அது தான் இது என்று வெளிப்படையாகச் சொல்ல எல்லோருக்கும் பயம் போல................😜.
  10. சீனா இந்தியாவிற்கு ஒரு இராட்சத 'நீர்க்குண்டு' தயார் செய்கின்றது என்று ஒரு செய்தியில் இருந்தது.......... இந்தப் பெரிய அணை உடைவதை நினைத்துப் பார்த்தாலே திகிலாகத்தான் இருக்கின்றது..........
  11. * சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன். * பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும், எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன். * சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது. * சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது. * அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது. * எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது. * பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது. * வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.
  12. மஹிந்திராவின் மலிவு மாடல் நல்ல காற்றோட்டமானது.......................... குதிரை ஏற்றத்தில் முன்அனுபவம் இருந்தால், பயணம் சிறக்கும்................
  13. மாருதி ஜிம்னி தான் கொடுக்கப் போகின்றார்களோ......... இன்னும் விலை குறைவாகத் தேவை என்றால் மஹிந்திரா ஜீப் இருக்கின்றது.............
  14. அடுத்த சில வருடங்களில் இரண்டு மில்லியன்களை நாலு மில்லியன்களாக அதிகரிக்க முடிந்தால், இலங்கை நிமிர்ந்துவிடும்...................👍. ஆனாலும், வௌவாலில் இருந்து பரவின வைரஸ் போல, எங்களின் சக்திக்கு அப்பாற்பட்ட விசயங்கள் பலவும் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன..................😁.
  15. ஆள் கதையோட கதையாக ஒரு பகிடி போல கனடாவே அமெரிக்காவின் ஒரு மாநிலம் என்று சொல்லியும் விட்டார்...........................🤣. இன்னும் போகப்போக இன்னும் புதிதுபுதிதாக வரும் போல............. நாலு வருடத்திற்கு புடின், ட்ரம்ப், அர்ச்சுனா, இந்த மூவரும் சேர்ந்து எங்களை ஒரு 'அலர்ட்' நிலையிலேயே வைத்திருக்கப் போகின்றார்கள்.............. விடுமுறைகளில் போனாலும் செய்திகளை தவறவிடக்கூடாது போல.............🤣.
  16. விமானம் விழுந்தது. இரண்டு கப்பல்கள் தாண்டன. அதில் ஒன்று இரண்டாகப் பிளந்து தாண்ட எண்ணெய் தாங்கிக்கப்பல். அடுத்த கப்பல் சரக்குக்கப்பல். அது இயந்திர அறையில் குண்டு வெடித்து தாண்டது. அங்கிருந்த 14 ரஷ்ய மாலுமிகளை காப்பாற்றி ஸ்பெயினுக்கு கொண்டு போனார்கள். அதில் இருவரை இப்பொழுது காணவில்லை. தாண்ட எண்ணெய்க்கப்பலில் இருக்கும் எண்ணெய் கருங்கடலின் அடியில் போய் தங்கிவிடும், ஆதலால் ஆபத்தில்லை என்றார்கள். அந்த எண்ணெய் இந்த எண்ணெய் விஞ்ஞானிகளின் சொல்பேச்சு கேட்கவில்லை. அது இப்பொழுது கரையொதுங்கி, அந்தப் பக்கம் முழுக்க அவரசரகால நிலமை அறிவித்து இருக்கின்றார்கள். எண்ணெய் அடியில் போய் தங்கிவிடும் என்று சொன்னதை விஞ்ஞானம் என்று எப்படிச் சொல்லுகின்றார்கள் என்று தெரியவில்லை........... இவர்கள் சொன்னபடியே நடந்திருந்தால், அது ஒரு மாயாஜால வித்தையே................... சரக்குக்கப்பல் முதலாளி தன்னுடைய கப்பல் தாண்டதற்கு பயங்கரவாதமே காரணம் என்கின்றார். இவர் ஏற்கனவே அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டவர். இவரின் கப்பல் சிரியாவிற்கு போய் வந்து கொண்டிருந்தது. விமானம் விழுந்ததிற்கு ரஷ்யாவின் ஏவுகணை எதிர்க்கும் தொழில்நுட்பமே காரணம் என்கின்றார்கள். ஆனால், நாங்களே எங்களின் சுயாதீன விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டு பிடிக்கின்றோம் என்கின்றார் புடின். அதற்கு முன் யாராவது அவசரப்பட்டு செய்திகள் போட்டால், அடிப்போம் என்கின்றார் அதிபர்....... கப்பலோ, விமானமோ இப்படி எல்லாவற்றையும் கருங்கடல், கஸ்பியன் என்று உங்களின் பகுதிகளிலேயே விழுத்தி, தாட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உலகம் என்றும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும். அத்துடன் ஒரு நல்ல விறுவிறுப்பான படத்திற்கு கதையும் தயார்.......... யார் தயாரிப்பாளர், யார் இயக்குநர், யார் யார் நடிக்கின்றார்கள் என்று முடிவெடுத்தால், 2028 கோடைக்கு இந்தப்படம் ஹாலிவூட்டில் வெளியிடப்படும்...........
  17. இதுவரை இருந்த முதல்வர்களிலேயே ஸ்டாலின் தான் மிகவும் கையாலாகாதவர் என்ற பட்டத்துடன் இவரின் பெயர் நிலைக்கப் போகின்றது................. ரவுடிகளுடனும், சமூகவிரோதிகளுடனும் கூட்டும் தொடர்பும் வைத்திருப்பதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் திமுகவில் எந்த மாற்றமும் இல்லை....... 😡..... அன்றும், இன்றும், என்றும் இப்படியே....... இங்கு தான் ஜெயலலிதா அம்மையார் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது............. வழக்கும் இல்லை, ஒரு ம**ம் இல்லை............... பிடிபட்ட அடுத்த மணிநேரத்திலேயே கதை முடிந்திருக்கும்...........
  18. இப்படியான செய்திகளுக்கு கடும் எச்சரிக்கை விட்டிருக்கின்றார் புடின்.............. வீரகேசரி அலுவலகத்திற்குள் ஒரு ட்ரோன் பறக்கப் போகின்றது.............
  19. இங்கு தான் கதையின் முக்கிய திருப்பம் நடக்கப் போகின்றது. நாமலிற்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இதுவே............ பப்பாவை புத்தருக்கு கொடுத்து விடவேண்டியது தான்.................😜.
  20. 🤣................. அடி பலமாகவே இருக்கின்றது. ஒற்றைக் காலில் நின்று சுழலும் போது இந்தப் பெண் காட்டும் உடற் சமநிலையும், கைகள் அசையும் வேகமும், அது இறுதியில் இறங்கும் இலாவகமும், இவர் உண்மையிலேயே 'பின்னி எடுப்பார்' என்றே தெரிகின்றது.............. கடந்த வாரம் என்று நினைக்கின்றேன். வட இந்தியாவில் பேரூந்தில் ஒருவர் ஒரு பெண்ணுடன் சேட்டைகள் செய்துள்ளார். அந்தப் பெண் ஒரு பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்.......... ஆசிரியர் பிளந்து கட்டிவிட்டார்....... ஒரே மூச்சில் 26 அடிகளோ என்னவோ..........🤣.
  21. 👍................ பல்லின மக்கள் வாழும் தேசங்களில் இந்த விடயத்தில் மேற்கத்தைய நாடுகளை மிஞ்சவே முடியாது. அதிலும் அமெரிக்கா இன்னும் சில படிகள் முன்னே............ அவ்வாறு தான் இந்த தேசம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்றது. நாசாவின் JPL இங்கே அருகிலேயே இருக்கின்றது. வருடத்திற்கு ஒரு தடவை Open House வைப்பார்கள். உள்ளே போனால், அங்கே எல்லா நாட்டவர்களும், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர்கள் பலர், விஞ்ஞானிகளாக இருப்பார்கள். ஏராளமான இந்தியர்கள், ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள்............ உள்ளே பெரும் பதவிகளில் எல்லோரும் இருக்கின்றனர். பல வருடங்களின் முன், இங்கு மிகவும் சிக்கலாக ஒட்டிப் பிறந்த இரு குழந்தைகளை மிகவும் சிரமப்பட்டு இரு குழந்தைகளாக்கினர். யுசிஎல்ஏ மருத்துவமனையில் என்று நினைக்கிறேன். அதற்கு பொறுப்பான தலைமை மருத்துவர் பின்னர் தொலைக்காட்சியில் வந்தார். அவரின் ஆங்கிலம் மிகச் சாதாரணமான ஒன்று, அவரும் ஒரு கிழக்கு ஐரோப்பியரே.................. ஆனால் அவர் தான் தலைவர்..............👍.
  22. 🤣............... யாராவது சர்ட்டிபிகேட் கேட்டால்................... கலாநிதி 'டாக்டர்' என்றால் அடித்து பிடித்து இங்கேயே தயார் செய்யலாம், ஆனால் மருத்துவ டாக்டர் என்றால் இந்தியா போய்த்தான் வரவேண்டும் போல...............😁.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.