Everything posted by ரசோதரன்
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை. இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை. 'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார். ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான். விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
திமுக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என்பவற்றின் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளும், எழுப்பப்படும் கேள்விகளும் நியாயமானவையே. 10,000 பேர்களே என்று அனுமதி வாங்கப்பட்டாலும், காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் முன்னரே தோராயமாக எவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று தெரியாதா என்பதே அரச நிர்வாகத்தின் அடிப்படைத் தவறாகத் தெரிகின்றது.அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் இந்த அடிப்படைத் தவறின் தொடர்வுகளே, தொடர் நிகழ்வுகளுக்கும் அழிவுகளுக்கும் தவெகவும், திமுக அரசுமே பொறுப்பு. ஆனாலும் இதற்கு எந்த தரப்பும் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை. அதைப் போலவே இதில் நேரடியாக பங்கு இல்லாத மற்றைய தரப்புகள் எல்லாம் தங்களின் சுயலாபம் ஒன்றில் மட்டுமே குறியாகவும் இருக்கப் போகின்றார்கள். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலைக்கு போகாத தலைவர்கள் எல்லோரும் கரூரில் நின்றதன் காரணம் இதுவே. கரூர் மக்களின் இழப்புக்கு ஈடில்லை. நியாயமும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் எந்த மெத்தனத்திற்கும், அதனால் உண்டாகும் அழிவுகளுக்கும் எவரும் பொறுப்பு கூட ஏற்பதில்லை. அடுத்ததாக விஜயை மட்டுமே நம்பி உள்ள அவரது ரசிகர்களின் நிலை. இவர்கள் தவெக என்னும் அரசியல் கட்சியின் தொண்டர்களே கிடையாது. அங்கு அப்படி ஒரு அமைப்பே கிடையாது. உதாரணமாக, தவெக கரூர் மாவட்டச் செய்லாளர் மதியழகனை காவல்துறை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்கின்றார்கள். பின்னர் அவர் அப்படியே காணாமல் போகின்றார். அவரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டே என் கணவர் எங்கே என்று தேடுகின்றார். ஒரு தவெக வழக்கறிஞர் கூட அந்தப் பெண்ணுடன் இல்லை. தவெக தொண்டர்கள் ஒரு சிறு அமைதியான எதிர்ப்பைக் கூட எங்கேயும் காட்டவில்லை. மதியழகனுக்கு மட்டும் இல்லை, இன்று புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டாலும் இதுவே தான் அங்கே நிலை. ஒரு தவெக தொண்டர் கூட எங்கேயும் எதிர்ப்பு காட்டப் போவதில்லை. ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட்டால் லாட்டரி மார்ட்டின் மத்திய அரசு வரை போய் ஆதவ் அர்ஜூனாவை வெளியே எடுத்துவிடுவார். ஆனால் மற்றைய தவெகவினர் ஒரு கைவிடப்பட்ட நிலையிலேயே, கரூர் மக்களைப் போன்றே, உள்ளார்கள். இறுதியில் வந்த உளவுத்துறை அறிக்கையின் படி, மக்களின் கோபம் இரு தரப்புக்குக்கும் மேலேயே இருந்தாலும், விஜய் மேலேயே அதிகமாக இருக்கின்றது என்கின்றார்கள். அதன் எதிரொலியே திமுகவால் அதிகரிக்கப்பட்டிருக்கும் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளும், தொடர் கைதுகளும். எடப்பாடியாரிடம் போய்ச் சேர்வதை விடுத்து வேறு எந்த தெரிவுமே இல்லாத ஒரு நிலை விஜய்க்கு. எடப்பாடியாருக்கும் அது இப்போது தெரியும். முதலில் செய்ய வேண்டியது 'ரோட் ஷோ' என்பதை தமிழ்நாட்டில் முற்றாக தடைசெய்யவேண்டும். அரங்கினுள் மட்டுமே இவர்களின் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையன் சார், உங்களை ஒரு சின்ன இடைவெளியின் பின் மீண்டும் இங்கே காண்பதில் மிகவும் சந்தோசம்............❤️. நல்ல அழகான பிள்ளையார் படம்........... அவர் அப்படியே தன்னைப் போலவே உங்களையும் யாழ் களத்தில் என்றும் அமரவைக்கட்டும்............. 🤣.................. ஜக்கம்மா எதிர் அக்கம்மா................. அக்கம்மா அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜக்கம்மாவின் சொந்தம்..............
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும், சிறிதோ பெரிதோ புதிதோ பழையதோ, ஆளும் கட்சியையும் அரசையும் எதிர்த்தே அரசியல் செய்யும். புதிய தமிழகம் கூட திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. இந்த விடயத்தில் திமுகவின் மேல் முற்று முழுதாக குற்றமும் சுமத்தியிருக்கின்றது. அன்புமணி பிரிவு பாமகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. அன்புமணி கரூரில் நின்று கொண்டே இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனைகள் செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்களின் முன் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். ஆளும் கட்சியையும், அரசாங்கத்தையும் எதிர்க்காமல் பிற கட்சிகளுக்கு அரசியலே கிடையாது. தவெக ஓடி ஒழிந்ததிற்கு அவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்தது அரசியல் செய்தார்கள் என்பது காரணம் அல்ல. விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும், நிர்மலும் தங்களின் செல்ஃபோன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது அவர்களுக்கு இந்த சூழ்நிலையை கையாளும் திராணி கிடையாது என்பதனாலேயே. தவெகவின் அந்த மாவட்டச் செயலாளரும் தலைமறைவாகினார். இதற்கு மேல் தவெகவில் ஒரு கட்டமைப்பும் கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போயிருப்பார்கள். தவெகவிற்கு தொண்டர்களோ அல்லது ஒரு கட்டமைப்போ இருந்திருந்தால், அதில் சிலராவது மக்களுடன் நின்றிருக்கவேண்டும். இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்....... திமுக உங்களை அழித்து விடும் என்றால், இதற்குப் பிறகு திமுக ஓய்ந்து விடப் போகின்றதா......... இன்னுமொரு சூழ்நிலையில் மீண்டும் ஓடி ஒழியப் போகின்றீர்களா........... தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்தக் கட்சியாவது இப்படி முற்றாகப் பதுங்கிய வ்ரலாறு இருக்கின்றதா.................... முக்கியமாக நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிய கட்சி ஒன்று, அது சம்பந்தப்பட்ட அனர்த்தம் ஒன்றில் இருந்து இப்படி ஓடிப் பதுங்கி இருந்தது உண்டா............
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தப் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக விளையாடுகின்றார்கள்........... நான் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை..............👍.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
ஆதவ் அர்ஜூனாவும் ஐந்து வயதிலேயே தாயை இழந்து விட்டதாகவும், அதே துக்கத்தையே இங்கேயும் அனுபவிப்பதாகவும் சொல்லிக் கொண்டு மறைந்திருக்கின்றார். ஆனாலும் அப்படியே 'புரட்சி...........புரட்சி...........' ஒரு ட்வீட் போட்டு விட்டு, அதை எதிர்ப்புக் காரணமாக அழித்தும்விட்டார். இவை ஒரு தலைமைக்குரிய ஒரு பண்பே கிடையாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடும் தன்மைகளே இவை. மருத்துவக் காரணங்கள் இருந்தால், ஒரு தேசத்தையே அழிக்காமல், இவர்கள் இப்பவே ஒதுங்கிக் கொள்வது நலம். இப்பொழுது கூட இவர்கள் தங்களின் தவறுகளை உணராவிட்டால், இவர்கள் இறுதி வரை நிற்கப் போவது ஒரு சிறு வட்டம் ஆகவே இருக்கப் போகின்றது.
-
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் Published On: 29 Sep 2025, 7:47 AM | By Minnambalam Desk ராஜன் குறை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது. அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும் உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை. இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது. எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். விஜயின் பதவி மோக அரசியல் மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும். கூட்டக் காட்சி அரசியல் விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார். விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம். உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com https://minnambalam.com/vijays-lust-for-power-and-the-lives-lost-in-karur/
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
மிகவும் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இந்த இழப்பிலும் சகலரும் அரசியல் அனுகூலங்களை கணக்குப் போடுகின்றார்களோ தவிர, இழந்து நிற்கும் குடும்பங்களுக்காக ஒரு தார்மீக ஆதரவைக் கூட காட்ட முன்வருகின்றார்கள் இல்லை. இங்கு யாழ் களத்தில் கூட ஒவ்வொரு பக்கங்களிலும் இருந்து வரும் இணைப்புகளும் தங்களின் பக்கத்தை இந்தப் பாதகத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் ஒரு தலைப்பட்ச நியாயங்களும் மற்றும் இதில் ஆதாயம் தேடும் ஒரு போக்குமே அன்றி, ஒரு நடுநிலையான பார்வையினூடு நிகழ்வுகளை ஆராய்வதாக இல்லை. இத்தனைக்கும் இங்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களும் இணையத்திலேயே இருக்கின்றது. இந்தப் பாதகத்தை திட்டமிட்டவர்கள், அப்படி யாராவது இருந்தால், மேல் வரும் அதே அருவருப்பும் கோபமுமே, ஓடி ஒழிந்த விஜய் மீதும், அவரது இரண்டாம் கட்ட தலைவர்களின் மீதும் வருகின்றது. 'த்தூ..............' என்று விஜய்காந்த் ஒரு தடவை பேசியதும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் நினைவில் வருகின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு ஐயாவிற்கு ( @விசுகு ) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
அப்படித்தான் எனக்கும் தெரிகின்றது, அண்ணா. இந்த இனத்திற்கு இப்படி ஒரு கேவலம் என்பதே வேதனையாக இருக்கின்றது. இந்த விடயத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் போல வேறு எவரும் கிடையாது...............😔.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டிகளை நடத்துவதற்கு மிக்க நன்றி @கந்தப்பு .............. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? இந்தியா 2)இலங்கை - இந்தியா இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் பாகிஸ்தான் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா அவுஸ்திரேலியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அவுஸ்திரேலியா 25)இந்தியா - நியூசிலாந்து இந்தியா 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்களாதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? அவுஸ்திரேலியா, இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கொழும்பு 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣......................... விளையாடுவதில் அல்லது வாசிப்பதில் சோம்பேறித்தனம் கிடையாது தான், செம்பாட்டான், ஆனால் லௌகீகக் கடமைகள் என்று ஒரு பெரிய நிரலே எங்களிடையே இருக்கின்றதல்லவா............... 'இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்...............' என்று நான் இழுக்க, 'என் தலைவிதி.........' என்று அவர் சலித்துப் போக, காலம் போய்க் கொண்டிருக்கின்றது. பல வீடுகளிலும் இதுவே தான் நிலைமை என்றாலும், இந்த வீட்டு விடயத்தில் ஆகக் குறைந்த புள்ளிகள் எடுப்பவர் யார் என்று ஒரு கணக்கெடுத்தால், முதல் இடங்களில் ஒன்று எனக்கு உறுதி............🤣. விளையாடுவதலாலும், வாசிப்பதிலாலும் ஒரு சதம் பிரயோசனம் கிடையாது என்பது எங்கள் சமூகத்தில் எப்போதும் இருக்கும் அபிப்பிராயம்தானே. ஒன்றும் தயங்காதீர்கள், இங்கு பல உறவுகள் மிகவும் ஊக்கப்படுத்துவார்கள்.............👍.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அன்று வந்த கடவுள் ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார் மிச்சமான கடவுள்கள் தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே கொன்று குவித்தது என்கின்றார்கள் கடவுள்களின் போதகர்களும் தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள் இது தான் தருணம் என்று ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம் 'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன எரியாமல் நசியாமல் மூச்சுடன் இன்று உயிர் தப்பிய ஆநிரைகள் அடுத்த கடவுள் வருகையிலும் இன்று தப்பிய ஆநிரைகள் சில இறக்கப் போகின்றன சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.
- Karur.jpg
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
தமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், சாமியார்களின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களுக்கு இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம் தானே, அக்னி. இன்றைய இணைந்த இணைய உலகில் எல்லாமுமே சேர்ந்து தானே தங்களை கடவுள்கள் என்று சிலரை நினைக்கவைக்கின்றது. தன் தலைவன்/நடிகன், தன் குரு போன்றோர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று நினைக்கும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள் தானே. முதல் நாள் முதல் காட்சிக்கு போகும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த தனிநபர் மீதான மோகங்கள் பரவ நாங்களும், நாங்கள் காவிச் செல்லும் செய்திகளும் உடைந்தை ஆகின்றன அல்லவா.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
இந்த தருணத்திலாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, கோஷான், அதனாலேயே சொன்னேன். எப்போதும் எல்லாமுமே அரசியல் என்றவுடன் வேதனையும், கோபமும் தான் வருகின்றது........... ஒரு நல்ல தலைவன் கூட இல்லாத இனமாகிப் போய் விட்டோமே............ நீங்கள் சொல்வது சரியே, ஜஸ்டின். சில ஊடகங்களை தவிர்ப்பது போலவே, வேறு சில ஊடகங்களின் பிரச்சாரப் போக்கில் நம்பிக்கை இழந்தது போலவே, நீங்கள் சொல்வதும் நடக்கும். ஆனாலும் பொய்ச் செய்திகள் பரவும் வேகம் மிக அதிகம். பொய்ச் செய்திகள் மிகவும் திட்டமிட்டே உருவாக்கப்படுபவை, அதி தீவிர உணர்வுகளை தூண்டுவதே அந்தச் செய்திகளின் நோக்கம். அதன் விளைவுகள் தற்கொலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
எப்படி இருக்கின்றீர்கள் அக்னி.................... தமிழ்நாட்டில் நீட் பரீட்சையில் தோற்று விட்டோம் என்று தொடர் தற்கொலைகள் நடந்த வன்ணமே இருக்கின்றது. வெவ்வேறு தலைவர்களுக்காக, காரணங்களுக்காக தீக்குளிப்புகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இன்னொரு வகை தற்கொலை.......... இந்தச் செய்திகளும், நாங்களும் இவை தொடர்வதற்கு பொறுப்பாகின்றோம் அல்லவா..........
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
ஆரோக்கியமான விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும், ஆக்கங்களும் இடம்பெறும் ஒரு தளத்தில், அவசரப்பட்டு, பெரும்பாலும் ஒரு பிரச்சார நோக்கில், பொய்ச் செய்திகளை இணைப்பது நியாயம் இல்லை அல்லவா......... நீண்ட நாட்களாக களத்தில் பிதாமகர்கள் போன்று இருப்பவர்களே இப்படிச் செய்யலாமா.............. ஆதவன், தமிழ்வின் போன்ற பொய்யும், புனைவுகளும் நிறைந்த ஊடகங்கள் போன்றே இந்தக் களமும் போய் விடும் அல்லவா..............
-
ஒரு பயணமும் சில கதைகளும்
மிக்க நன்றி செம்பாட்டான். உங்களுக்கு இது பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்து நடை மிகவும் இரசிக்கத்தக்கது. நாங்கள் பலரும் அதை ஆடுகளத்தில், கள போட்டிகளில் பார்த்திருக்கின்றோம். மற்றைய பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்..........🫱🫲. கொஞ்சம் சோம்பேறித்தனம், எதையுமே அவ்வளவு பொருட்டாக எண்ணாத ஒரு மனம் இருந்தால், பலவற்றையும் கோர்த்து எழுதுவது சுலபமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
முகராசி போல................. நீங்களே முன்னர் சொல்லியிருக்கின்றீர்கள்...........🤣. ஆபத்தில்லாதவன் என்று தெரிந்து தான் அருகில் வருகின்றார்களாக்கும்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீண்ட மாலைகள் போடப்பட்டு காத்துக் கொண்டிருக்கின்றன வந்து கொண்டிருக்கும் முதல்வரின் அஞ்சலிக்காக. ஏலவே அங்கே வந்தவர்கள் அங்கேயே நின்று அழலாம். நேரே வர முடியாதவர்கள் ட்வீட்டரில் கலங்கலாம் துன்பத்தில் உழலாம் வெடித்துச் சிதறி நொருங்கிப் போகலாம். இது தவிர்க்க முடியாத விபத்து என்றும் ஒருவர் சொல்லலாம். மோட்டுத் தமிழினமே என் சனமே எலிகள் கூட பொறிக்குள் இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!