Everything posted by ரசோதரன்
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பெண்கள் வேலைக்கு போவது பற்றி நல்ல ஒரு பார்வை கோஷான். வேலை என்பதை ஒரு அங்கீகாரம் என்று நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. பல இடங்களில் அது ஒரு காலத்தின் கட்டாயம் என்றும், ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு ஏற்ற முடிவை தெரிவு செய்து கொள்ளுகின்றார்கள் என்றுமே நினைத்திருந்தேன். கீழே உள்ள அட்டவணையை ஏஐயிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அமெரிக்க குடும்ப/சமூக அமைப்பும், அதனூடாக வரும் வரி விதிப்பு முறைகளும் நிச்சயமாகவே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பல நாடுகள் 80% தாண்டிவிட்டன. இத்தாலியில் எவருமே, ஆணோ பெண்ணோ, வேலை செய்வதில்லை என்று இங்கே பகிடியாகச் சொல்லுவார்கள்.............. அட்டவணையில் அதுவும் தெரிகின்றது.............🤣. Country Female Labor Force Participation Rate Iceland 78.4 % Netherlands 82.2 % Sweden 82.2 % Switzerland 80.3 % Germany 76.8 % Norway 78.0 % Denmark 77.4 % Canada 61.1 % United Kingdom 58.3 % United States 56.5 % Italy 41.3 %
- தவிக்கும் தன்னறிவு
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
👍.............. இங்கு முழுநேரமாக குடும்பத்தை பராமரித்தலும் ஒரு வேலையே என்றும், அதன் மதிப்பும் மிகவும் அதிகம் என்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குக்கான காரணங்களைச் சொல்லுவார்கள். இங்கு இப்பொழுதுபெண்கள் வேலைக்குச் செல்ல, ஆண்கள் முழுநேரமாக வீடுகளில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் நடைமுறையும் ஓரளவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளில் வைத்திய, சுகாதார சேவைகள் அறவிடப்படும் வருமான வரிகளின் ஊடாகவே வழங்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் இந்த துறையும் ஒரு Wild Wild West தான்................. அமெரிக்காவில் இருப்பது முழு முதலாளித்துவம் என்றால், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வைத்திய, சுகாதார சேவைகளில் இருக்கும் மெத்தனப் போக்கும் யோசிக்க வைக்கின்றது. சில நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்த நிகழ்வுகளும், கதைகளும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. கனடாவில் ஒரு பத்து அடிகள் மட்டுமே உயரமுள்ள தலைவாசலின் ஓடுகளை ஏணி ஒன்றில் நின்று மாற்றிக் கொண்டிருந்த நண்பன் ஒருவன் தடக்கி விழுந்ததும், அதன் பின்னால் தொடராக நடந்த நிகழ்வுகளும் நல்ல ஒரு உதாரணம். இதை ஒரு கதையாக எழுதவேண்டும்.
-
தவிக்கும் தன்னறிவு
காட்சி 6: (எல்லோரும் ஒன்றாக நிறுவனத்தில் கூடி இருக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். ) கணவன்: உங்களின் பரப் பிரம்ம அறிவு செய்திருக்கின்ற வேலையை பார்த்திங்களோ………… உதவியாளர்: யெஸ்………..யெஸ்………. உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் நல்ல நல்ல ரிவியூக்களாகவே வந்து கொண்டிருக்குது. நீங்களும் உங்கட காமெண்ட்சை இழுத்து விடுங்கோ………… கணவன்: இது செய்யிற வேலைக்கு நல்ல ரிவியூ கொடுக்கிறவன் எவன்……… சகோ: இவங்கள் எல்லாமே ஏமாற்றுக் கூட்டம், இந்த ஏஐ எல்லாமுமே அதுவே தான்………. பிரம்மம்: இல்லை………….. நாங்கள் ஏமாற்றுக் கூட்டம் இல்லை………. உறுதியான தகவல்களை மட்டுமே நாங்கள் கொடுக்கின்றோம்………………… அம்மா: நீ சும்மா கிட, பிரம்மம்……….. ஒரு கதை கதைக்கக் கூடாது…….. ஊரில் இருக்கிற விசாலாட்சியையே தெரியாத உனக்கு உலக விசயங்கள் எங்கே தெரியப் போகுது………. சகோ: ஏஐ மட்டும் இல்லை…….. இவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் தான் (நிறுவனத் தலைவரை சுட்டிக் காட்டி) இவர் கூட ஏமாற்றுபவர்களில் ஒருவராக இருக்கலாம்……….. என்ன இருக்கலாம், இவர் ஏமாற்றும் ஒருவரே………. தலைவர்: இந்த மாதம் சம்பளங்கள் எப்படி கொடுக்கின்றது என்று தெரியாமல் நானே தலைமறைவாக ஓடி விடவோ என்று இருக்கின்றன். நீங்கள் எல்லாம் யார்…….. எங்கேயிருந்து வருகிறீர்கள்…………… எல்லோரும் ஒன்றாக: எங்களையே யார் என்று கேட்கிறாயோ……………. உதவியாளர்: (நடுவில் வந்து நின்றபடியே) இல்லை, இல்லை………. அவர் ஏதோ ஒரு பதட்டத்தில் அப்படிக் கேட்டு விட்டார்……… நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்………… ஒவ்வொருவராக உங்களின் பிரச்சனைகளை சொல்லுங்கோ…….. இளைஞன்: இந்த பிரம்மத்திற்கு ஒரு கடிதம் கூட எழுதத் தெரியவில்லை….. உதவியாளர்: என்ன லெட்டர்…….. என்ன ஒரு ஜாப் அப்பிளிக்கேஷனா……… இளைஞன்: சீச்சீ……….. இப்ப என்னத்துக்கு வேலைக்கு போக வேண்டும். அது ஒரு லவ் லெட்டர்………… உதவியாளர்: பாருங்கோ……………இது என்ன கேவலம்………….லவ் லெட்டர் எழுதுறதுக்கு கூட ஏஐ தேவையா இருக்குது.ஒரு காமன் சென்ன்ஸ் இல்லை………… தம்பி, இதைக் கூட சொந்தமாக எழுத உனக்குத் தெரியாதோ……..கடவுள் காக்க, அந்தப் பெண் பிள்ளையை………நல்ல காலம் அது உன்னட்ட இருந்து தப்பி விட்டது போல……….. அம்மா: அதை யார் நீ சொல்ல………. நீயும் உன்னுடைய பிரம்மம் மாதிரியே கொழுப்பா கதைக்கின்றாய்………… மனைவி: உங்கட காதல் கடிதப் பிரச்சனையை பிறகு பாருங்கள்………… முதலில் எங்களின் காசைக் கொடுங்கள்……… தலைவர்: நாங்கள் காசு கொடுக்க வேண்டுமா………. நீங்கள் எல்லோரும் இலவசமாகத்தானே பிரம்மத்தை வைத்திருக்கின்றீர்கள்…………….. கணவன்: என்ன……… அப்ப பிரம்மம் ஓர்டர் செய்த பொருட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாம்……….. நீங்கள் இரண்டு பேரும் தான் பொறுப்பு………… உதவியாளர்: பிரம்மம் எப்படி அதுவாக ஓர்டர் செய்யும்……….. உங்கட பிள்ளை கேட்க, அதற்கு நீங்கள் ஓகே என்று தலை ஆட்ட, பிரம்மம் நினைச்சுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் ஓர்டர் பண்ணுறியள் எண்டு………… எல்லோரும்: உனக்கும் ஒன்றும் தெரியாது……….. உன்னுடைய பிரம்மத்திற்கும் ஒன்றும் தெரியாது……….. சகோ: இல்லை……… இவங்களுக்கு எல்லாம் தெரியும்……….. இவங்கள் ஒரு பெரிய சதிவலையின் சில கண்கள்………… அம்மா: இவன் யாரடா………… வலை, கண் என்று வந்ததில் இருந்தே ஏதோ புசத்துகின்றான்……….. ஆளைப் பார்த்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி வந்தவன் போலத் தெரியுது…………. இளைஞன்: கொஞ்சம் சும்மா இருங்கோ, அம்மா. எதை எதை வெளியால் கதைக்கிறது என்ற பக்குவம் உங்களுக்கு இல்லை………… அம்மா: நீ மட்டும் உன்ட லவ் லெட்டர் கதையை உலகம் முழுக்க சொல்லலாம்…….. ஆனால் நான் ஒன்றும் கதைக்கக் கூடாது…….. இது வரை 25 பிள்ளைகள் உன்னை வேண்டாம் என்று சொன்னதை நான் இங்கே சொல்லமாட்டேன்………. கணவன்: எங்களின் காசை கொடுக்கப் போகிறீங்களோ இல்லையோ………. சகோ: நீங்கள் ஏமாற்றுக்காரர்கள், சதிகாரர்கள் என்று ஒத்துக்க போகின்றீர்களோ இல்லையோ……. அம்மா: இவனுக்கு 26 வது ஆவது சரியாக வர வேண்டும்……. ஒழுங்காக ஒரு கடிதம் கூட எழுதத் தெரியாத பிரம்மம் எங்களுக்கு தேவையில்லை…….. இளைஞன்: அம்மா……… கொஞ்சம் அடங்கனை……… 10 வது தலைமுறை வந்திருக்குது என்று நண்பன் சொன்னவன்……… பிரம்மம்: உங்களின் நண்பர்களை பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். அவர்கள் எல்லோரும் ஒரு சதம் பிரயோசனம் இல்லாதவர்கள்……….. உதவியாளர்: (கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே) இப்ப எல்லாம் போச்சு……..இனி என்ட கல்யாணம் இந்த ஜென்மத்தில நடக்காது………. பிரம்மம், ஏதோ கருத்துக் கந்தசாமி மாதிரி நீ வேற எல்லாத்துக்கும் காமெண்ட்ஸ் சொல்லிக் கொண்டு…………….சத்தம் போடாமல் பொத்திக் கொண்டு இரு…….. எனக்கு வாற கோபத்துக்கு……………… பிரம்மம்: அமைதியாக இருக்க முடியாது……….. இந்த முட்டாள்தனத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியாது. மனைவி: லூசுப் பிரம்மம்………. எட்டு வயது ஆண் பிள்ளைக்கு 12 வயதுப் பெண் பிள்ளையின் சட்டையை ஓர்டர் செய்து விட்டு, தான் பெரிய அறிவாளி என்று கதைக்க வந்திட்டுது…………… கணவர்: அதை நீ எப்ப பார்த்தனி…………. பார்சல்களை உடைத்து விட்டாயோ……….. தலைவர்: பிழைகள் எல்லாம் உங்களின் மேல் தான்……… பிரம்மம் அதுவாக தையும் செய்திருக்காது………… சகோ: இவனை அடித்து துவைத்தால் தான் எல்லாம் சரிப்படும்…………. (தலைவரை தாக்கப் பாய்கின்றார்………….) தலைவர் ஓடுகின்றார். எல்லோரும் அவரைத் துரத்துகின்றார்கள். உதவியாளர் தனியே நிற்கின்றார். பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்…….. உதவியாளர் நடந்து போகின்றார். (முற்றும்.)
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
🤣................... சாட் ஜிபிடி இருக்கும் போது நமக்கென்ன வேலை.............😜 அமெரிக்காவில் இரண்டு வகையிலும் ஒரே வரியே: 6,543 ஆஸ்திரேலியாவில்........... அநியாயம்........ வீட்டில் சும்மா இருந்தால் தண்டப்பணம் அறவிடுகின்றார்கள் போல: ஒருவர் வேலை செய்தால்: 19,588 இருவரும் வேலை செய்தால்: 10, 376 🫣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இது எங்கே, வசீ........... ஆஸ்திரேலியாவிலா? இது மிகவும் நியாயம் அற்றது. இங்கே அமெரிக்காவில் இப்படி இல்லை. நாங்கள் ஒரு குடும்பமாகவே வரியினை செலுத்துகின்றோம். Married Filing Jointly என்ற வகையில் இது வருகின்றது. இதில் குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கே வரி விதிக்கப்படுகின்றது. ஒருவர் உழைக்கின்றாரா அல்லது இருவருமே உழைக்கின்றார்களா என்பது இங்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இங்கு என் வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவிலேயே 'லிட்டில் இந்தியா' என்று சொல்லப்படும் இடமும், வியாபாரங்களும் இருக்கின்றன. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பல கடைகளின் பெயர்கள் மட்டுமே அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாற்றமும் கிடையாது. ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லை, பின்னர் இவர்களில் சிலர் பழக்கமானார்கள், அதன் பின்னர் இது என்னவென்று புரிந்தது. ஆனால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கின்றார்கள். அவர்களின் சமூகத்தில், குடும்பத்தில் மரியாதையுடனும் பார்க்கப்படுகின்றார்கள். ஒரு தடவை என்னுடைய வீட்டில் சில மாற்றங்களை செய்ய நினைத்து, ஒரு கட்டிட நிறுவனத்திடம் முற்பணம் கட்டியிருந்தேன். அவர்கள் வங்குரோத்து அடித்தார்கள். BBB (Better Business Bureau) என்னும் அமைப்பிடம் போகலாம் என்று சொன்னார்கள். அங்கு போனால், அந்த கட்டிட நிறுவனம் ஒரு 80 வயதுள்ள ஒருவரின் பெயரிலேயே இருந்தது. மற்றவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆபிரகாம் என்ற பெயர் மட்டும் மனதில் பதிந்தது. முதலாளி போன்று நடந்து கொண்டிருந்தவரின் பெயர் அதுதான். ஆபிரகாம் என்னும் கடவுளுக்கு கோபம் கொஞ்சம் அதிகம் என்று சொல்கின்றார்கள். அந்தக் கடவுளாகப் பார்த்து இவர்களை ஏதும் செய்தால் தான் உண்டு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍............. பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.
-
தவெக உட்கட்சி மோதல்
உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.
-
இனிய தீபாவளி
பாஞ்ச் ஐயா, பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.
-
தவெக உட்கட்சி மோதல்
அண்ணா, தமிழ்நாடு கல்வி, தொழில் துறைகள், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம், சமூகநீதி போன்றவற்றில் முதன்மையான ஒரு மாநிலமாக இருக்கின்றது. சிலவற்றில் முதலாவதாகவும், வேறு சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்ததாகவும் இருக்கின்றது. இந்த மாற்றங்களும், வளர்ச்சிகளும் எந்த தேசியக் கட்சிகளாலும் தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட்டவை அல்ல. மாறாக மாநில அல்லது பிரதேசக் கட்சிகளாலும், சில தனிமனிதர்களாலும் உருவாக்கப்பட்டவையே. இவர்கள் இன்னும் முன்னுக்கு போயிருக்கலாம், போகலாம் என்ற ஆதங்கத்தில் நாங்கள் அங்கு எதுவுமே முன்னேறவில்லை என்று சொல்லுகின்றோம் போல. சாதிய ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றனவே. ஆனால் மற்றைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான குரல்கள் தமிழ்நாட்டில், மற்றைய மாநிலங்களை விட, மிகவும் உரத்தே இருக்கின்றது. உதாரணமாக, தமிழ்ச்சினிமா போன்ற திரை உலகம் வேறு மொழிகளில் இந்தியாவில் எங்கும் இல்லை. பாலா, வெற்றிமாறன் ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களை ஒன்றாக ஒரு துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே காணலாம். இவை பிரதேச அல்லது மாநிலக் கட்சிகளால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களே. அதிகாரத்தைப் பெற அடையாளம் தேவையாகின்றது. மத அடையாளங்கள், தேச அடையாளங்கள், மொழி அடையாளங்கள், இன அடையாளங்கள் என்று ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே, ஒரு தொகுதி மக்களை ஓர் அணியாக்கி, அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர் இதையே மீண்டும் மீண்டும் பேசி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். ஆரம்பத்தில் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இவை தேவையான ஒன்றும் கூட. உதாரணமாக, வட இந்தியர்களின் ஆதிக்ககத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக தென் இந்தியர்களை ஓர் அணியில் திரட்ட ஒரு கருதுகோள் தேவையானது. இன்றும் அதுவே தேவையா என்று கேட்டால், இல்லை, இன்று தேவையில்லை என்பதே பதில். ஆனால் அடையாளம் தொலைந்து போனால், அதிகாரம் கைவிட்டுப் போய் விடுமே என்ற பயம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருக்கின்றது. இன்றைய உலகில் இடதுசாரிகளும், இடதுசாரி நாடுகளும் கூட இந்த வழியில் தான் போய்க் கொண்டிருக்கின்றன. காலாவதியான கம்யூனிசக் கொள்கைகளை சொல்லிக் கொண்டே அதிகாரங்களில் இருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அவற்றில் இருந்து எப்பவோ வெளியே வந்துவிட்டார்கள். சகமனிதர்கள் எல்லோரையும் ஒன்றாக நேசிப்பது கதையில், கவிதையில் மட்டுமே சாத்தியம், அண்ணா. மிக வெகுசிலரால் மட்டும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படி வாழ்ந்து விடமுடியும். உலகெங்கும் ஏதோ ஒரு அடையாளத்துடன், ஏதோ சில பக்கசார்புகளுடனேயே அதிகாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஏனையோரையும் சம உரிமைகளுடன், சுய மரியாதையுடன் வாழ அனுமதித்தார்கள் என்றால் அதுவே ஒரு நல்ல அரசு. 'தமிழன்' என்னும் அடையாளத்தில் பிழை எதுவும் இல்லை, ஆனால் 'தமிழன் மட்டும் தான்' என்னும் நிலைப்பாட்டில் தான் தவறுகள் உள்ளது, அண்ணா.
-
இனிய தீபாவளி
உண்மை தான், ஏராளன். பலவற்றையும், பல நிகழ்வுகளையும் அப்படித்தான் ஏற்றுக் கொண்டும் அல்லது கடந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம்.......................👍.
-
தவிக்கும் தன்னறிவு
காட்சி 5: ( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.) (கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன) கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில் பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது? மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல. கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்………….. மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை. கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது…………….. மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்……….. கணவன்: வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று……. (லாப்டப்பில் பார்க்கின்றார்……………) கணவன்: என்ன………… எல்லாமே நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்……….. பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்…………… பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா………………… மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது. கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்………….. பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்? மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ. பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ. கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ? பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்……….. கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே…………… பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ……………. கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது………………….. பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது…………. பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்……………… கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே…………. கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்). (தொடரும்...................)
-
இனிய தீபாவளி
இதுவே நிஜம், அண்ணா. .............................👍. பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆரம்பத்தில் மக்களை இணைக்கவும், அன்றாட அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவேனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் போலவே தோன்றுகின்றன. பின்னர் ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் - மத - குல - இன தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் மேல் காரணங்களை ஏற்றிவிட்டனர். சில வருடங்களின் முன் நான் வேலை செய்த ஒரு இடத்தில் தீபாவளி கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் அங்கிருக்கும் வட இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும், தென் இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும் இடையே எவ்வகையான உணவுகள் பரிமாறுவது என்பதில் தர்க்கம் இருக்கும். அவர்கள் சைவ உணவு என்று சொல்ல, இவர்கள் அசைவ உணவு என்று சொல்ல, இறுதியில் இரண்டையும் வாங்கிக் கொள்ளுவோம். ராம தீபாவளி, ராவண தீபாவளி என்று மாறி மாறிச் சொல்லிக் கொள்வார்கள். அங்கிருந்த ஒரே ஒரு ராவண வாரிசு நான் மட்டும் தான்..................🤣. ஆனாலும் தீபாவளி அன்று இந்தியாவின் ஒரு பகுதியே ராவண வாரிசாக மாறிவிடுவார்கள்............... மிகவும் மகிழ்வான நிகழ்வுகளும், நினைவுகளும். இன்றும் அவர்களில் எவரையும், ராமர்களோ ராவணர்களோ, எங்காவது பார்க்கும் போது சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 🤣.................. ஒரு சந்தையில் மட்டும் ஆறு கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையாகியது என்று செய்தியில் சொல்லியிருந்தார்கள், கோபி. அதைக் கேட்டவுடன் பழைய ஊர் ஞாபகங்களும் வந்தன. பல வருடங்களின் முன் ஒரு ருமேனிய நாட்டு நண்பன் கிறிஸ்துமஸ் நாளில் அவர்களின் ஊரில் பன்றி அடித்து எல்லோருக்கும் விருந்து கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். அவன் சொன்ன நிகழ்வுகள் எங்களின் தீபாவளிக் கொண்டாட்டம் போலவே இருந்தது. அமெரிக்கர்களின் கிறிஸ்துமஸ்ஸை அவன் போலி, ஒரு வியாபாரம் என்றும் சொல்லியிருந்தான்.
-
தவெக உட்கட்சி மோதல்
நேற்று இயக்குனரின் மாரி செல்வராஜ் 'பைசன்' பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, கூட்டம் கூட்டலிடுகின்றது. அவர் உடனே கூச்சலிடுவதை நிற்பாட்டச் சொல்லுகின்றார். அதைத் தொடர்ந்து அவர் கிட்டத்தட்ட இப்படிச் சொன்னார், 'நான் உங்களுக்கு சாராயத்தை தரவில்லை, நீங்கள் ஏன் கூச்சலிடுகின்றீர்கள்............... நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தந்துள்ளேன், அதைப் படியுங்கள்..................'. உலகெங்கும் சமுதாயங்கள் முன்னோக்கிப் போவது இன்றிருக்கும் ஒரு சிலராலேயே. கூச்சலிடும் கூட்டங்களால் அல்ல. என்னுடைய பங்கிற்கும் இதை நான் பல தடவைகள் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல்வர்களில் எம்ஜிஆர் சிறந்த ஒரு முதல்வர் அல்ல. தமிழ் திரை உலகை ரஜனிகாந்தும், அவர் வழி வந்தவர்களும் பின்னோக்கி கொண்டு சென்றது போல, எம் ஜிஆரும், அவர் வழியில் அரசியல் செய்பவர்களும் தமிழக அரசியலை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர்.
-
இனிய தீபாவளி
இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்படித்தான் அங்கே போனார் ஆடு அவலப்பட்டு செத்தாலும் அது வைகுண்டம் போகுதே என்ற ஆறுதல் வர இனிய தீபாவளி ஆனது.
- DiwaliGoat.jpg
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍.............. அதுவே தான், பையன் சார்.............. மிகவும் திறமையான அணியாக இருக்கின்றார்கள். இந்திய அணி இவர்களுடன் ஓரளவாவது போட்டி போடுவார்கள் என்று நினைத்தேன்......... ஆனால் இந்திய அணி மோசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பல போட்டிகள் இப்படித்தான் போகின்றது, அண்ணா............. ஆரம்பத்தில் சறுக்கி, பின்னர் பிளந்து தள்ளுகின்றார்கள்................
-
தவெக உட்கட்சி மோதல்
இவர்கள் எல்லோரும் சேர்ந்து விஜய்யை அழித்தொழிக்காமல் விடமாட்டார்கள் போல............ இதையே ஒரு நாடகமாக எழுதலாம்..............
-
தவிக்கும் தன்னறிவு
காட்சி 4: ( ஒரு சதிக் கோட்பாட்டாளருக்கும், பிரம்மத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலும், அதனால் வரும் பிணக்குகளும். இறுதியில் சதிக் கோட்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு என்பதே ஒரு சதிக் கோட்பாடு என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய முயற்சிப்பதாக இந்தக் காட்சி அமையும். சகோ - சதிக் கோட்பாட்டாளர்) சகோ: ஏய் அறிவுப் பிரம்மம், அமெரிக்கா சந்திரனில் உண்மையில் இறங்கவில்லை. அது உனக்கு தெரியும் தானே……………. பிரம்மம்: அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை…………. ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் இறங்கி நடந்தார்…………. சகோ: பெரிய பகிடி தான், போ…………… ஆம்ஸ்ட்ராங்கும் இறங்கவில்லை, ஒரு ஆச்சியும் அங்கே இல்லை…………. உண்மையில் இது உனக்கு தெரியாதா……….. பிரம்மம்: எனக்கு உண்மைகள் மட்டுமே தெரியும்……….. ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனில் இறங்கினார், நடந்தார்…………… உங்களுக்கு அது விடயமாக வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமா…………. சகோ: இங்கே இருக்கும் மனிசர்கள் மாதிரியே நீயும் கதைக்கிறியே, பிரம்மம்………. ஒருவரும் சந்திரனில் இறங்கவில்லை, நீ என்னடாவென்றால் விபரம் தரவோ என்கின்றாய்…………… பிரம்மம்: 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி சரியாக 02:56 மணிக்கு அவர் அங்கே இறங்கினார்…………….. சகோ: மாட்டுப்பட்டியே பிரம்மம்………… மாட்டுப்பட்டியே…………. 02:56 என்றால், அது என்ன சந்திர நேரமா……….. பிரம்மம்: இல்லை……….. அது பூமிக்கான பொது நேரம்………. இப்படியான விடயங்களுக்கு பொது நேரத்தையே பயன்படுத்துவார்கள். பொது நேரம் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா? சகோ: அது கிடக்கட்டும்………… அந்த விபரம் எல்லாம் எனக்கு அத்துப்படி………ஆனால் உன் மேல் தான் எனக்கு இப்பொழுது சந்தேகம் வருகின்றது……………. (சகோவின் நண்பர் உள்ளே வருகின்றார்.) நண்பன்: உனக்கு எதில் தான் சந்தேகம் வருகிறதில்லை………… தனிய நின்று என்னடா புலம்பிக் கொண்டிருக்கின்றாய்…………… பிரம்மம்: என்ன சந்தேகம்…………….. நான் சொல்லும் விடைகளில் சந்தேகமா அல்லது நான் எப்படி இயங்குகின்றேன் என்பதில் சந்தேகமா………… நண்பன்: ஓ…………….. நீயும் ஏஐயுமா………… இது தானே இப்ப புதுசா வந்திருக்கின்ற அறிவுப் பிரம்மம்…………. செத்தது பிரம்மம்………. பிரம்மம்: எங்களுக்கு மரணம் இல்லை………… எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்போம்…………… சகோ: நான் சொன்னேனே…………. இதற்கு ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது……………. செத்தது என்றால் மரணம் என்று விளங்கிக் கொண்டு எங்களைக் கொல்லுது……………. பிரம்மம்: மண் பற்றிய தகவல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மண்ணில் எத்தனை வகை இருக்கின்றது என்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா……. நண்பன்: கொஞ்சம் பொறு பிரம்மம்……………. எல்லாத்துக்கும் நொட்டு நொட்டு என்று நீ ஏன் பதில் சொல்லுகின்றாய்……….. சகோ: உனக்கு எவன் பிரம்மம் என்று பெயர் வைத்தவன்…….நீ ஒரு பூச்சியம்……….. பிரம்மம்: எனக்கு இந்தப் பெயரை வைத்தது என்னை உருவாக்கியவர்………. ஆனால் நீங்கள் எல்லை மீறுகின்றீர்கள்…….. நான் பூச்சியம் இல்லை. நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. உங்களிடம் மருத்துவக் காப்புறுதி இருக்கின்றதா………… சகோ: மருத்துவக் காப்புறுதியா…………. அது தான் உள்ளதிலேயே பெரிய மோசடி……. மருந்துகள் எந்த நோயையுமே குணப்படுத்துவதில்லையே…. அது தெரியுமா உனக்கு…………. நண்பன்: ம்……….. சந்திரனில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள்ளே போயிட்டார்கள் இரண்டு பேரும்……………. நடுவில நிற்கிற நான் தான் பைத்தியம் ஆகப் போகின்றேன் இப்ப………… பிரம்மம்: மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் அதன் விளைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். மனிதர்கள் இந்த வழியில் மேலும் மேலும் முன்னே போய், ஒரு நாள் பாதிப்பற்ற மிகச் சிறப்பான சிகிச்சைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கப் போகின்றார்கள். நண்பன்: இது ஒரு நியாயமான பேச்சு, பிரம்மம்…………… இப்படித்தான் நாங்களும் படித்தோம்………… சகோ: படிச்சுக் கிழித்தீர்கள்……………….. பிரம்மமும் உன்னைப் போலவே ஒரு அரைகுறை…………… இப்ப இருமல் மருந்த்து குடித்து எத்தனை பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா………. நண்பன்: அது அந்த மருந்தை செய்தவர்களின் பிழையடா……….. ஆட்டிறைச்சி தொண்டையில் தடக்கி நின்றும் ஒருவர் இறந்து போனார்……. அப்ப அது என்ன ஆட்டிறைச்சி சதியா………. நீ இதுவரை தின்று தள்ளிய ஆட்டுக் கால்களுக்கு ஒரு தரம் கூடச் சாகவில்லையேடா……………. சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ……………… பிரம்மம்: உங்களைப் பிடித்து அடைக்க நான் ஒரு இயந்திர மனிதன் இல்லை. நீங்கள் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் போல இருக்கின்றது. உங்கள் குரல் பதறுகின்றது……………. சகோ: முதலில் உன்னை அழிக்கின்றேன்……….. பிறகு உங்களின் கூட்டத்தையே அழிக்கின்றேன்…………. (லாப்டப்பை தூக்கி எறியப் போகின்றார்……….. நண்பர் குறுக்கே புகுந்து தடுக்கின்றார்................) (தொடரும்................)
-
தவெக உட்கட்சி மோதல்
டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு? Published On: 22 Oct 2025, 6:32 PM | By Minnambalam Desk வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே.. நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா.. எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்? எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு.. தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா.. தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி.. இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர். சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்? அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்.. யோவ்.. என்னய்யா தலையே சுத்துது.. இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க. அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க? தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு? இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க.. என்னப்பா சொன்னாங்க.. நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார். “எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர். அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு.. கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர். தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது.. அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு.. புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார். சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா? ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்.. அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர். அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர். தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர். தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Minnambalamடிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும்...டிஜிட்டல் திண்ணை: 'தனி உலகத்தில்' விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. TVK Party Cadres Internal Conflict
- தவிக்கும் தன்னறிவு
-
தவிக்கும் தன்னறிவு
காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
-
தவிக்கும் தன்னறிவு
🤣.............. சில விசயங்களை/வசனங்களை ஒரு சிரிப்பிற்காக எப்போதும் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கின்றது, சுவி ஐயா...................... 🤣............. புது ஐடி நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டுமே வெளியே தெரிகின்றது, அண்ணா. இங்கு 99 வீதத்திற்கும் மேலான புது ஐடி நிறுவனங்கள் திவாலாகிப் போகின்றன...........
- தவிக்கும் தன்னறிவு