Everything posted by ரசோதரன்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இல்லை வசீ, எல்லோரும் அவரைக் கொண்டாடுவதில்லை. என்னுடைய ஊரில் அவருக்கு எதுவுமே இல்லை. அதற்கு பின்னால் அன்றொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு இருக்கிறதென்று ஊர் முதியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 6 13 12 31 2 France 8 10 8 26 3 China 11 7 3 21 4 Great Britain 6 7 7 20 5 Australia 7 6 4 17 6 Japan 8 3 4 15 7 Italy 3 6 4 13 8 Republic of Korea 6 3 3 12 9 Canada 2 2 3 7 10 Germany 2 2 2 6 11 Netherlands 2 2 1 5 11 New Zealand 2 2 1 5 13 Brazil 0 2 3 5 14 Romania 2 1 1 4 15 Hong Kong 2 0 2 4 16 Sweden 1 1 2 4 17 Belgium 1 0 2 3 17 Ireland 1 0 2 3 17 Kazakhstan 1 0 2 3 17 South Africa 1 0 2 3 21 Hungary 0 2 1 3 22 Poland 0 1 2 3 22 Spain 0 1 2 3 24 India 0 0 3 3 25 Georgia 1 1 0 2 26 Croatia 1 0 1 2 26 Guatemala 1 0 1 2 28 DPR Korea 0 2 0 2 29 Kosovo 0 1 1 2 29 Mexico 0 1 1 2 29 Switzerland 0 1 1 2 29 Turkey 0 1 1 2 29 Ukraine 0 1 1 2 34 Moldova 0 0 2 2 35 Argentina 1 0 0 1 35 Azerbaijan 1 0 0 1 35 Ecuador 1 0 0 1 35 Serbia 1 0 0 1 35 Slovenia 1 0 0 1 35 Uzbekistan 1 0 0 1 41 Fiji 0 1 0 1 41 Mongolia 0 1 0 1 41 Tunisia 0 1 0 1 44 Austria 0 0 1 1 44 Egypt 0 0 1 1 44 Greece 0 0 1 1 44 Slovakia 0 0 1 1 44 Tajikistan 0 0 1 1
- மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்றும் அதையே சொல்லலாம். Countries Gold Silver Bronze Sum Soviet Union (USSR) 48 25 22 95 United States 33 31 30 94 East Germany 20 23 23 66 West Germany 13 11 16 40 Hungary 6 13 16 35
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 4 12 11 27 2 France 6 9 6 21 3 Great Britain 6 6 5 17 4 China 8 6 2 16 5 Japan 7 2 4 13 6 Australia 6 4 3 13 7 Italy 3 6 4 13 8 Republic of Korea 5 3 3 11 9 Canada 2 2 2 6 10 Brazil 0 1 3 4 11 Germany 2 0 1 3 11 Hong Kong 2 0 1 3 13 Kazakhstan 1 0 2 3 13 South Africa 1 0 2 3 15 Poland 0 1 2 3 15 Sweden 0 1 2 3 17 Netherlands 1 1 0 2 17 New Zealand 1 1 0 2 19 Belgium 1 0 1 2 19 Guatemala 1 0 1 2 19 Ireland 1 0 1 2 22 DPR Korea 0 2 0 2 23 Kosovo 0 1 1 2 23 Mexico 0 1 1 2 23 Switzerland 0 1 1 2 23 Turkey 0 1 1 2 27 India 0 0 2 2 27 Moldova 0 0 2 2 29 Argentina 1 0 0 1 29 Azerbaijan 1 0 0 1 29 Romania 1 0 0 1 29 Serbia 1 0 0 1 29 Slovenia 1 0 0 1 29 Uzbekistan 1 0 0 1 35 Fiji 0 1 0 1 35 Georgia 0 1 0 1 35 Mongolia 0 1 0 1 35 Tunisia 0 1 0 1 39 Croatia 0 0 1 1 39 Egypt 0 0 1 1 39 Hungary 0 0 1 1 39 Slovakia 0 0 1 1 39 Spain 0 0 1 1 39 Tajikistan 0 0 1 1 39 Ukraine 0 0 1 1
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
பையன் சார், உங்களுக்கு அந்த அமெரிக்கன் ஓட்ட வீராங்கனையை பிடித்தது போல, எனக்கு சசிகலா பேசும் போது பின்னால் நின்று அபிநயம் காட்டும் இளவரசி நல்லாகவே செய்கின்றார் என்று தோன்றுகின்றது. ஆனால் மன்னார்குடி ஆட்கள் பொல்லாதவர்களாமே........ வெட்டிப் புதைத்துப் போடுவார்களாம் என்று சொல்கின்றார்கள்.............🤣.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
🤣..... இதில கூட ஓபிஎஸ்ஸிற்கு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா........ இன்னுமொரு தர்மயுத்தம் ஆரம்பித்து விடுவார், பதக்கம் தனக்கும் வேண்டும் என்று.............
-
குறுங்கதை 25 -- குரு பார்வை
👍........ இப்ப ஒரு வட்டம் அடித்து முடித்து விட்டு, மீண்டும் அவர்களை, அந்த பால்ய நண்பர்களை, நோக்கியே மனம் போய்க் கொண்டிருக்கின்றது. 'டேய்......... என்னடா செய்யிறாய்......' என்று ஆரம்பித்து அப்படியே சும்மா கதைத்துக் கொண்டிருப்பார்கள்..........❤️.
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
குறுங்கதை 25 -- குரு பார்வை
உங்களின் 'பச்சைப்பாவாடை' அருமை........... நானும் நினைத்தேன் அது ஆசிரியரின் மகளாக்கும் என்று...... எங்களின் காலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூலைக்கு ஒன்றாக வந்து விட்டன, அதுவே பாடசாலைகளில் ஆசிரியர்களின் மெத்தனப் போக்கிற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்தது என்று நினைக்கின்றேன். பல ஆசிரியர்களை பற்றி, சிலர் தனியார் கல்வி நிலையங்களில் மிகவும் பெயர் பெற்றவர்கள், இப்படியான கதைகள் உண்டு. பள்ளிக்கூடங்களில் தூங்கி வழிந்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும், சாத்திரங்களில் சொல்லப்படும் ஒரு நல்ல 'குரு பார்வை' போல, அவர்களின் வெறும் பார்வையிலேயே நாங்கள் படித்து முடித்து விட்டோம்.......🤣.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
👍............ அமெரிக்காவில் இளம் வயதிலேயே திறமைகளை கண்டறிந்து, அந்த திறமைகளை மேலும் வளர்த்தெடுக்க நல்ல வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் இவர்களின் குடிவரவுக் கொள்கைகளும் உலகெங்கும் இருந்து பல திறமையானவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தும் விடுகின்றது. ஆஸ்திரேலியா ஒரு பெரிய ஆச்சரியம். எப்படி அவர்கள் தொடர்ந்தும் வெல்கின்றார்கள் என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.............
-
குறுங்கதை 25 -- குரு பார்வை
குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக அனுப்பப்பட்டேன். இந்தப் புதிய பாடசாலை வீட்டில் இருந்து ஐந்து மைல்கள் தூரம். போகும் பாடசாலைகளின் தூரம் வர வர கூடிக் கொண்டே போவது ஒரு அயர்வைக் கொடுத்தது. இலங்கையிலேயே இது மிகச் சிறந்த பாடசாலை என்று முதல் நாளே, நான் அங்கு போகும் போது, சொல்லிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் அப்பா பஸ்ஸை தவற விட்டு விட்டு, அந்த வழியால் போய்க் கொண்டிருந்த ஒரு லாரியில் ஏறி புதிய பாடசாலைக்கு, கொஞ்சம் பிந்தி, போயிருந்தோம். ஆறாம் வகுப்பில் ஒரே ஆசிரியர் தான் தமிழுக்கும், சமய பாடத்திற்கும். அவரே தான் வகுப்பாசிரியரும். தமிழுக்கு எண்பது பக்க கொப்பியும், சமயத்திற்கு அறுபது பக்க கொப்பியும் வாங்கியிருந்தேன். அப்படித்தான் அந்தப் பெரிய பாடசாலையில் சொல்லியிருந்தார்கள். பிரவுன் பேப்பரில் வெளி உறை ஒன்று போட்டு, அவர்கள் சொன்னது போலவே அந்த உறையில் சுயவிபரங்களையும் எழுதி வைத்திருந்தேன். நானே ராஜா, நானே மந்திரி என்று ஊர்ப் பாடசாலையில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்து, கூட்டத்தில் ஒருவன் ஆகியிருந்தேன் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தில். ஏழாம் வகுப்பிலும் இதே ஆசிரியர் தான், தமிழ், சமயம், மற்றும் வகுப்பு ஆசிரியர். ஆறாம் வகுப்பில் வாங்கிய எண்பது பக்க, அறுபது பக்க கொப்பிகள் இரண்டும் அப்படியே புத்தம் புதிதாகவே இருந்தன. பிரவுன் பேப்பர் உறையை மட்டும் மாற்ற வேண்டி இருந்தது. பத்தாம் வகுப்பு வரை இப்படியே தொடர்ந்தது. அந்த ஆசிரியர் எங்களை விட்டு விலகவேயில்லை, இந்த இரண்டு கொப்பிகளும் கூட விலகவில்லை. ஒரு வருடத்தில் ஒன்றோ இரண்டோ பக்கங்களில் ஏதாவது எழுதியிருப்போம். அந்தப் பக்கங்களை கிழித்து எறிந்து விட்டு, புது பிரவுன் பேப்பர் உறை போடப்பட்டு, இந்த இரண்டு கொப்பிகளும் புது வகுப்புகளுக்கு என்னுடன் சேர்ந்து அப்படியே வந்து கொண்டிருந்தன. சிறந்த பாடசாலை, சிறப்பாக படிப்பித்தார்கள் என்று எல்லோரும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள். விட்டுக் கொடுக்க மனம் இடம் கொடுக்காததால், நானும் அதை ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தினமும் பந்து அடித்ததும், வேறு ஒரே ஒரு ஆசிரியரையும் தவிர வேறு எதுவும் பாடசாலையில் கற்றதாக நினைவில் இல்லை என்றாலும். பின்னர் பல்வேறு சிறந்த பாடசாலைகள் என்று சொல்லப்பட்டவற்றில் படித்தவர்களுடன் ஒன்றாகப் படிக்கும், பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்பவே அப்படி என்று தான் அவர்களும் கொஞ்சம் கெத்தாகவே இருந்தனர். பின்னர் எல்லா இடமும் ஓடிக் கொண்டிருந்தது ஒரே கதையே என்று சொல்லி ஒத்துக்கொண்டனர். முப்பது வருடங்கள் அல்லது அதற்கும் கூடிய காலத்தின் பின், பல ஆசிரியர்களை போய்ச் சந்தித்தோம். அவர்களுக்கு எங்களை ஞாபகமே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை மாணவர்கள், யாராவது உறவினர் அல்லது நண்பர்களின் பிள்ளைகளைத் தவிர வேறு எவரையும் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், நாங்கள் சொன்ன கதைகளை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள், பெருமைப்பட்டார்கள். நாங்கள் எல்லா ஆசிரியர்களிடமும் உங்களிடம் படித்தோம், அதனாலேயே வளர்ந்தோம் என்றே சொன்னோம். உண்மையில் அவர்களை மீண்டும் நேரில் பார்த்த போது, மிகப் பிரியமான ஒரு உணர்வைத் தவிர வேறு எதுவும் தோன்றவேயில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
👍.......... ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது. அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
👍.... குலுக்கல் தெரிவு.......🤣. _______________________________________________________________ இங்கு சில நாட்களில் திடீரென்று ஒரு ஒருநாள் கரப்பந்தாட்டப் போட்டியை ஒழுங்கு செய்வோம். பெரும்பாலும் இந்தியர்கள் தான். எல்லோரும் காலையில் வந்தவுடன், ஒரு எழுபது அல்லது எண்பது பேர்கள் வரை, ஆட்களை திறமை அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக்கி, பின்னர் இந்த 'லொட்' முறையில் அணிகளை பிரித்துக் கொள்வோம்.......... சில அணிகள் இடையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள்................🤣.
-
தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி!
🤣.......... இப்ப ஒலிம்பிக்ஸ் எஃபக்ட் எல்லா இடமும், அண்ணை.......... கைப்பந்து, கால்ப்பந்து, கூடைப்பந்து, தேஷ்பந்து.................
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 3 8 9 20 2 France 5 8 3 16 3 China 6 5 2 13 4 Japan 6 2 4 12 5 Republic of Korea 5 3 2 10 6 Great Britain 2 5 3 10 7 Australia 5 4 0 9 8 Italy 2 3 3 8 9 Canada 2 1 2 5 10 Hong Kong 2 0 1 3 11 Kazakhstan 1 0 2 3 11 South Africa 1 0 2 3 13 Brazil 0 1 2 3 13 Sweden 0 1 2 3 15 Germany 2 0 0 2 16 Belgium 1 0 1 2 17 Turkey 0 1 1 2 18 India 0 0 2 2 18 Moldova 0 0 2 2 20 Azerbaijan 1 0 0 1 20 Romania 1 0 0 1 20 Serbia 1 0 0 1 20 Uzbekistan 1 0 0 1 24 Fiji 0 1 0 1 24 Kosovo 0 1 0 1 24 Mongolia 0 1 0 1 24 DPR Korea 0 1 0 1 24 Poland 0 1 0 1 24 Tunisia 0 1 0 1 30 Croatia 0 0 1 1 30 Egypt 0 0 1 1 30 Hungary 0 0 1 1 30 Ireland 0 0 1 1 30 Mexico 0 0 1 1 30 Slovakia 0 0 1 1 30 Spain 0 0 1 1 30 Switzerland 0 0 1 1 30 Ukraine 0 0 1 1
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அவர்களுக்குள் 13 சமூகங்கள் இருக்கின்றன என்று சொல்வார்கள். சில 'அடுக்கு வரிசைகள்' கூட யாழ் மாவட்ட மக்களின் அடுக்கு, வரிசை போன்றே இருக்கும். அதை விட இடம் காரணமாகவும் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. கண்டி எதிர் கரையோரம் என்று சொல்வார்கள். ஆனால் பௌத்த மதம் இவை எல்லாவற்றுக்கும் எதிரானது. அதனாலேயே இந்தியாவில் அம்பேத்காரும், பட்டியலின மக்களும் பௌத்த மதம் நோக்கி பயணித்தனர், இன்றும் பயணிக்கின்றனர். இந்த ஒரு காரணத்தால் தான் சிங்கள மக்களிடையே சமூக அடையாளங்களால் வரும் வேறுபாடுகள், தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது, குறைவாகவே என்றும் இருக்கின்றன.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
👍........... சிங்கள மொழி ஒரு செப்பனிடப்பட்ட மொழி. நல்ல அழகான ஓசை, தமிழ் போலவே, அங்கேயும் இருக்கின்றது. வன்மம் வெல்ல, மொழியும் மனிதனும் தோற்றன இலங்கையில். பாண் அருமையான சாப்பாடு. ஆனால் தினமும் எதையும் சாப்பிட முடியாது, அதுவும் சகிக்க முடியாத கூட்டுடன்.......😃. அவர்கள் பாண்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். வட பகுதியில் அவர்கள் பல பேக்கரிகளில் ஆரம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல சிறுகதையும் இருக்கின்றது. அந்தக் கதையில் அப்படியான ஒருவர் காணாமல் போகின்றார்.............
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
கேள்விகள் கேட்பார்கள் தான், ஆனால் தனித்தனியாகவே, அவர்களின் வீட்டிலே நின்று கேட்டுக் கொண்டிருப்பார்கள் போல. கூட்டமாக, பொதுவெளியில் நின்று கேட்டால் தான் பிறர் காதுகளில் விழும். ஜேவிபியால் கேட்க முடியும், ஆனால் அவர்கள் கொன்றது, கொல்லப்பட்டதே பெரிய தனிக் கணக்கே............
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அங்கு நான் படித்த காலம். ஐந்து வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். காலையில் பாணும், பருப்பும். அதில் பருப்பு இருக்காது, தட்டில் நீரோடும். இரவிலும் இதுவே இருக்கும். மத்தியானம் சோறு. ஜெயில் சாப்பாடே பல மடங்கு திறம் என்பது போல இருக்கும். ஆனால் அவர்கள் எந்த குறையும் சொல்வதில்லை. மிக ஒழுங்காக சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். தமிழர்களில் வசதி உள்ளோர், பலரிடம் வசதி இருந்தது, வெளியே போய் நகரத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வெளியே போக முடியாதோரில் சிலர் குமட்டிக் கொண்டே கிடப்பார்கள். ஒரு தடவை அங்கிருக்கும் சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த விடுதி உணவுச்சாலையில் கதைத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடு, கொஞ்சம் அதிகமான விலையில் தயாரிக்கச் சொன்னார்கள். சில நாட்கள் இது போனது. திடீரென்று ஒரு நாள் அன்றைய அநுரகுமார திசாநாயாக்காவின் ஆட்கள் உணவுச்சாலைக்குள் புகுந்து எல்லாவறையும் நிற்பாட்டி விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பாண், ஒரே பருப்பு, அதே சோறு, ஒரு புல்லுச் சுண்டல்,............ என்று சொல்லிவிட்டனர். அவர்களை மீறமுடியாது. இதே அநுரகுமார இன்று அதிபர் பதவிக்கு வந்தால், நாடு முழுவதும் பாலும் தேனும் ஓடுகின்றது என்று சொல்வது போல பாணும் பருப்பும் ஓடும் போல............
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
பையன் சார், அதுக்கு பெயர் ட்ராமா இல்லை..... அதன் பெயர் அரகலிய. எல்லாம் ஒரு 'ஹைபர் ஆக்டிவிட்டி' தான். சின்ன பிள்ளைகள் பார்ட்டிகளில் சோடாவையும் குடித்து, இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டு, சுழன்று கொண்டு திரிவார்களே, அது போல. வெரி சிம்பிள் பையன் சார்...... அவர்களுக்கு பாணும், பருப்பும் தங்கு தடையில்லாமல் கிடைத்தால் அவர்கள் வேறு எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அப்ப அரசியல்வாதிகளும், தேரர்களும் என்னவும் செய்யலாம்.
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
🤣............. தற்போதைய கள நிலவரப்படி 27ம் இடத்திற்கு தான் கடும் போட்டி போல.........ஒரு 150 நாடுகளுக்கு மேல அந்த இடத்தில் கூட்டமாக நிற்கினம்......
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
எண்ணிக்கையில், விகிதத்தில் மிகவும் குறைந்து விட்டோம், விசுகு ஐயா. ஒன்றாக நின்றாலும் முதல் இரண்டு இடங்களிற்குள் எங்களின் வேட்பாளர் வர முடியும் என்று தோன்றவில்லை. மலையக மக்களும், இஸ்லாமியர்களும், நாங்களும் நாடு முழுவதும் ஒன்றாகச் சேர்ந்தால்................ இதை விட பூமி வெடித்து, விண்கல் விழுந்து, இப்படி உலகமே அழிந்து விடுவதற்கு சாத்தியம் கூட..........
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
https://www.dailymirror.lk/top-story/How-will-second-third-preferences-matter-in-case-no-candidate-gets-over-50/155-288264
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தேரர் ஆழம் பார்க்கத் தான் போனாரோ............😜. தியேட்டர், அங்க இங்க எல்லாம் இவர்களை சும்மாவும் உள்ளே விடுவார்கள் போல......... இப்பவும் அதே பழைய 50,000 மற்றும் 75,000 ரூபாய்கள் தானாம். கட்சி வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் 50,000. சுயேட்சை என்றால் 75,000. இதையே 25 இலட்சம், 30 இலட்சம் ரூபாய்களாக மாற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டது, ஆனால் அது இன்னமும் தீர்மானமாகவும், சட்டமாகவும் வரவில்லை என்றிருக்கின்றது.