Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. 'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26, அலிப்பூர் சாலை, தில்லி, தேதி: 14 செப் 1956. அன்புக்குரிய பண்டிட் ஜி, நான் இப்போது எழுதி முடித்த ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலின் உள்ளடக்கப் பகுதியின் அச்சிடப்பட்ட இரண்டு கையேட்டு நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் அச்சகத்தில் உள்ளது. உள்ளடக்கத்தைப் பார்க்கையிலேயே இது எவ்வளவு கடுமையான உழைப்பைக் கோரும் பணி என்று உங்களுக்குப் புரியும். 1956 செப்டெம்பரில் புத்தகம் விற்பனைக்கு வந்துவிடும். ஐந்து வருடங்கள் இந்தப் புத்தகத்திற்காக உழைத்துள்ளேன். புத்தகத்தின் தரத்தை உள்ளடக்கக் கையேடு சொல்லும். அச்சிடுவதற்கு மிகவும் அதிகமாகக் கிட்டத்தட்ட ரூ. 20,000/- வரை செலவாகும். இது என்னுடைய சக்திக்கு மிஞ்சியது. எனவே எல்லாத் தரப்பினரிடமும் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். புத்தரின் 2500 வருட நினைவைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும் எல்லா நூலகங்களுக்கும் வழங்கும் விதமாக இந்திய அரசு ஐந்நூறு பிரதிகளை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பௌத்தத்தின்மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிவேன். எனவேதான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் உண்மையுள்ள, பி.ஆர். அம்பேத்கர். ___________________________________________________________________ எண்:2196-றிவிபி/56, புதுதில்லி, செப்டம்பர் 15, 1956. அன்பான அம்பேத்கர், தங்கள் 14ஆம் தேதிக் கடிதத்திற்கு. நீங்கள் கேட்டுக்கொண்டபடி அதிக அளவு உங்கள் புத்தகத்தின் பிரதிகளை வாங்க இயலுமா என்பது சந்தேகமே. புத்த ஜெயந்தியில் வெளியீடுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தற்போது பூர்த்தியாகிவிட்டது. உண்மையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிட்டது. எங்களால் நிதி அளிக்கப்பட வேண்டிய பௌத்தம் குறித்த சில நூல்கள் இதனால் மறுக்கப்பட்டது. இருந்தும் தங்கள் கடிதத்தைப் புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன். புத்த ஜெயந்தியின்போது வெளிநாட்டினர் பலரும் வருவார்கள். தில்லியிலோ மற்றெங்கோ விற்பனைக்கு வைப்பீர்களென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். தங்கள் உண்மையுள்ள, ஜவஹர்லால் நேரு.
  2. நடுக்கம் 2.7 அளவில் தானா வந்தது............ கடற்கரை ரோட்டால் பருத்தித்துறையிலிருந்து தொண்டமானாறு வரை போய்ப் பாருங்கள்....... நடுக்கத்தையும், குலுக்கத்தையும் ஆறு ரிக்டர் அளவிற்கு மேல உணர்வீர்கள்............... அந்த ரோட்டை போடவே மாட்டம், தொடவே மாட்டம் என்று விட்டு வைத்துள்ளனர்.........🫣.
  3. நாளுக்கு எட்டாயிரம் கன அடி நீர் வீதம் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு இப்போது ஒத்துக் கொண்டுள்ளனர். மழை பெய்யும் இந்த நாட்களிலேயே இப்படி என்றால், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத பல மாதங்களில் ஒரு துளி நீரையும் தமிழ்நாடு கர்நாடகாவிலிருந்து எதிர்பார்க்க முடியாது. வெள்ளம் கரை புரண்டு ஓடும் சில நாட்கள் தவிர, காவிரியில் ஓடும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டது என்றே சொல்கின்றனர். எங்களுக்கே போதிய நீர் இல்லை, உங்களுக்கு கொடுக்கவே முடியாது என்று கர்நாடக அரசும் முறைத்துக் கொண்டு நிற்கத்தான் போகின்றது. இது எத்தனையோ வருடங்களாக இபப்டியே போய்க் கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு மாற்று வழிகளை, மாற்றுப் பயிர்கள் உட்பட, தேட வேண்டிய காலம் ஏற்கனவே வந்துவிட்டது.
  4. தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும். இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில் இங்கு போட்டுத் தாக்குதாக்கென்று தாக்கிவிடுவார்கள். 'இது உனக்குத் தேவையா.....' என்று எங்களை நாங்களே பின்னர் நொந்து கேட்பதை விட, பல இடங்களில் முன்னரே உசாராக இருப்பதும் தேவையாக இருக்கின்றது............🤣.
  5. ❤️............ நல்ல ஒரு கருத்து. சமீபத்தில், 'கீற்று' இதழில் என்று நினைக்கின்றேன், காமராஜர் அவர்களுக்கு எதிராக ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்கள் தீவிர இடதுசாரிகள், எழுத்திலும் கொஞ்சம் தீவிரம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். வேறு எவரும் காமராஜரை சொந்தம் கொண்டாடக் கூடாது, அவர் காங்கிரஸின் சொத்து என்றார்..........🤣.
  6. 🤣........... நண்டுக் கூட்டுக்குள்ள அகப்பட்ட நண்டு போல இரண்டு பக்க மீனவர் பிரச்சனைக்குள்ளும் மாட்டுப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸிற்கு இந்த ஆஸ்பத்திரி பிரச்சனை இப்போதைக்கு ஒரு வரம் தான்........... ஆனாலும் அந்த மருத்துவரை தொடர்ச்சியாக நம்பவும் முடியாது..... அவர் டக்ளஸிற்கும் 'மண்டைக்குள்ள சரக்கில்லை.......' என்று ஒரு காணொளி விடக் கூடியவர்........🤣.
  7. 🤣...... வெளியில் அவ்வளவாகத் தெரியாத, சமூக ஊடகங்களில் பிரபலம் தேடாத, ஆனால் உண்மையில் போற்றப்பட வேண்டிய சில எம்மவர்கள் பல இடங்களிலும் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். இங்கும் அப்படியான சிலர் இருக்கின்றார்கள்.
  8. 🤣............ 'இந்தியன் - 2' போல ஆகி விட்டது............... 'இந்தியன் - 3' வேண்டவே வேண்டாம், நாங்கள் வேணும் என்றால் சும்மாவே டிக்கட் காசை கொடுத்து விடுகின்றோம் என்று மீம்ஸ்ஸுகள் பறந்து கொண்டிருக்கின்றன........🤣.
  9. அதிகப்பிரசங்கி ------------------------ இன்றைய நிலையில் இப்படி ஒரு தலைப்பில் எவ்வளவு தான் மூடி மூடி எழுதினாலும் பூசணிக்காய் வெளியே தெரிவதை என்னால் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இங்கு, இந்தப் பூமியில், எதுவுமே புதிது இல்லை என்று சொல்வார்கள். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எல்லாமே முன்னரும் பல தடவைகள் நடந்தவையே என்பார்கள். வரலாறு அடிக்கடி திரும்பி வரும் என்பது மிகப் பிரபலமான ஒரு கூற்று. ஒரே மாதிரியான மனிதர்களும், வாழ்க்கைகளும், சம்பவங்களும் கூட திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. கணினி மென்பொருட்கள் செய்யும் துறை மற்றைய பல துறைகளுடன் ஒப்பிடும் போது புதியது. அதனால் கொஞ்சம் நெகிழ்வான கட்டமைப்பும், தளம்பலான திட்டமிடலும் கொண்டது. ஒரு புதிய மென்பொருளை செய்வதற்கு எவ்வளவு செலவு எடுக்கும் என்ற கேள்விக்கு மிகத் தோராயமான ஒரு பதிலே கிடைக்கும், அது எப்படியான, எவ்வளவு சிக்கலான அல்லது சிக்கல் இல்லாத மென்பொருளாக இருந்தாலும். மொத்த செலவையும் சரியாக பிரித்து பிரித்து கூறுவதும் கடினம். மற்ற துறைகளில் இவை எல்லாம் ஏற்கனவே மிகக் கறாராக நடைமுறையிலிருக்கும். அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் புதிய ஒரு மென்பொருளை செய்வதற்கு பலரை இந்தியாவில் பணிக்கு அமர்த்தினார்கள். ஒரு இந்திய நிறுவனத்தில் இருந்து தற்காலிகமாக அவர்களை வேலைக்கு எடுத்திருந்தனர். அவர்களில் சிலர், ஒரு நாற்பது பேர்கள் வரையில், எங்கள் நிறுவனத்தின் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய வந்திருந்தனர். பொதுவாக ஆறு மாதங்கள் என்றே வருவார்கள். பின்னர் இவர்கள் திரும்பிப் போக, வேறு சிலர் வருவார்கள். ஆறு மாதங்கள் அமெரிக்கா வந்து போனாலே அவர்கள் கைகளில் நிறையவே மிஞ்சும். அதனால் இங்கே வருவதற்கும், வந்த பின் இங்கேயே தங்குவதற்கும் அவர்களிடையே ஒரு போட்டி இருக்கும். அது பல வேளைகளில் ஆரோக்கியமற்ற ஒன்றாகவே இருக்கும். புதிய மென்பொருள் மிக மெதுவாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. அங்கேயும், இங்கேயும் என்று ஏராளமானவர்களை வேலை செய்வதற்கு எடுத்துப் போட்டிருந்தனர். ஆனால் எல்லோருக்கும் கொடுப்பதற்கும் வேலையும் இல்லை, திட்டமிடலும் சரியாக இல்லை. வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் திறமையானவர்கள் என்றும் இல்லை. சிலர் மிகவும் ஆரம்பகட்ட நிலையில் கூட இருந்தனர். பணம் செலவாகுது, ஆனால் பொருள் வருகுதில்லையே என்று எங்களின் நிர்வாகம் பொறுமை இழந்து கொண்டிருந்தது. பத்து புதிய மென்பொருட்களை திட்டமிட்டால் அதில் இரண்டு சரியான நேரத்திற்கு, சரியான தரத்துடன் செய்ய முடிந்தால் அதுவே ஒரு வெற்றி. பத்தில் ஐந்து சுத்தமான தோல்வியாக முடியும். மிகுதி மூன்றும் இழுபட்டு இழுபட்டு, பல மாற்றங்களுடன் முடிக்கப்படக்கூடும். இதனால் வேலை போனால், போனால் என்ன போகும் தான், இன்னுமொரு நிறுவனத்தில் வேலைக்கு போய்ச் சேர வேண்டியது தான். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போல, இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கமே. மூன்று வருடங்கள் ஓடின ஒரு முடிவும் இல்லாமல். இங்கிருந்து அவர்களில் சிலர் இந்தியா போக, அங்கிருந்து சிலர் இங்கு புதிதாக வந்தனர். சிலர் இந்தியா போகாமல் ஏதேதோ செய்து இங்கேயே மூன்று வருடங்களாக இருந்து கொண்டும் இருந்தனர். புதிதாக வந்தவர்களில் ஒருவர் மெதுமெதுவாக இங்கிருக்கும் அவர்களின் ஆட்களை ஒருவர் ஒருவராக குற்றம் சொல்ல ஆரம்பித்தார். எந்த வேலையும் செய்வதில்லை, எந்த வேலையும் தெரியாது, பொறுப்பு இல்லை, நேரத்திற்கு வருவதில்லை, இப்படி ஒன்று மாறி இன்னொன்று என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புதிதாக வந்த அந்த மனிதர் திறமையானவர் தான், ஆனால் அவர்களின் ஆட்களை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பக்கத்தில் ஒரு நிர்வாக வரிசையும் இருந்தது. இறுதியில் அவர்களின் நிர்வாகத்தையும் இவர் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இவர்கள் எல்லோரும் எங்கள் நிறுவன ஆட்களுடன் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு 'முதலாளிகள்' போல. எங்களின் நிறுவனத்தில் இவர்கள் எல்லோரும் தற்காலிக வேலைக்கு வந்திருப்பதால் அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். பலருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இவரும் ஒரு தமிழர் தான். என்னிடம் வந்தார். அவர்களின் ஆட்கள் மேல் உள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் எனக்கும் சொன்னார். இவர் ஏன் இப்படி அவசரப்படுகின்றார் என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை சில வருடங்களாக இவரின் நிறுவனம் இவரை அமெரிக்கா அனுப்பாதது கூட காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது. அதை விட செத்தாலும் இவர்களை விட்டுப் போகாத பிறப்பால் வரும் சில அடையாளங்களையும், பிரிவுகளையும் இவர்கள் காவிக் கொண்டு திரிவதும் இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கும். அந்த வருடம் கிறிஸ்மஸ் வாரத்திற்கு முன் வாரம். அவர்களின் நிர்வாகத்தினருடன் எங்கள் நிர்வாகம் கதைத்தது. எங்களின் நிறுவனம் இரண்டே இரண்டு வாரக் கெடு கொடுத்தது. முடிந்தது, கிளம்புங்கள் என்று சொன்னது. புதுவருடம் பிறந்த பொழுது இவர்களில் எவரும் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.
  10. கனடா என்று ஒரு ஞாபகம். கேரளா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிற்கு போய் ஒவ்வொரு வகுப்புகளும், பாடசாலை அல்லது பல்கலை வகுப்புகள், கொண்டாடும் ஒன்றுகூடல் பற்றி இவர் சில வருடங்களின் முன் கருத்தொன்று எழுதி, அது கொஞ்சம் பிரபலமாக ஓடித் திரிந்தது ஞாபகம். இவருடைய பாடசாலை வகுப்பு கேரளா போனது, ஆனால் இவர் போகவில்லை என்றும் ஞாபகம்.........
  11. சிகாகோவில் தினமும் எட்டுப் பேர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்து கொண்டிருந்ததாக ஒரு தடவை சொன்னார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் தினமும் எட்டுச் சூட்டுச் சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தன என்றும் சொன்னார்கள். இது எல்லாம் மிகவும் சமீபத்தில். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, வேணுமென்றால் இந்த எண்ணிக்கை இன்று இன்னும் அதிகம் தான் ஆகியிருக்கும். இங்கு இன்னும் எத்தனையோ பெரும் நகரங்களில் இதுவே தான் நிலைமை. எத்தனை தலைவர்கள் சுடப்பட்டார்கள் என்பது ஆச்சரியமில்லை. மற்றவர்கள் எவரும், அடுத்த வரிசை தலைவர்கள் உட்பட, சுடப்படவில்லை என்பதே பெரிய ஆச்சரியம். எத்தனை துப்பாக்கிகள் வீடுகளில் இருக்கின்றன என்கின்றீர்கள்............. 500 மில்லியன்கள் என்று ஒரு கணக்கு இருக்கின்றது!! இங்கு தினமும் நடக்கும் பெரும்பாலான சூட்டுச் சம்பவங்கள் உள்ளூர் செய்திகளில் கூட வருவதில்லை. ஒரு பிரிவு மக்கள் அவர்களே சுட்டு, அவர்களே செத்துக் கொண்டிருக்கின்றனர். நிஜமான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்'...........
  12. 🤣...... வீட்டில் இரு பிள்ளைகளும் சிறுவர்களாக இருந்த நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டே இரவுக்கு என்ன சாப்பாடு என்று தாயைக் கேட்பார்கள். இனித்தான் யோசிக்க வேண்டும் என்று அவரும் சொல்லுவார். இப்ப என்னுடைய நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான், 'இனித்தான் யோசிக்க வேண்டும்' .........🤣. நான் தான் ஆரம்பிக்கின்றேன் என்றாலும், உண்மையில் இங்கு களத்தில் உள்ள சிலரும் சேர்ந்து தான் இவை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது............🙏.
  13. கண் கலங்க வைத்து விட்டீர்கள், தில்லை ஐயா........... 'கடவுளே......' என்று சொல்வதை விட வேறு என்ன சொல்வதென்றும் எனக்குத் தெரியவில்லை....🙏.
  14. இவர்களை என்னவென்று சொல்வது, ஏராளன். இந்த மாதிரியான சில செயல்கள் தான் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்கின்றன..........😌.
  15. 👍..... அந்தச் சிறுபெண் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பவர் என்பதால் அவர்களுக்கு சில அமெரிக்க நாணயங்களை கொடுக்க வேண்டும் என்றே நினைத்தேன், ஆனால் என்னிடம் நாணயங்கள் எதுவும் இருக்கவில்லை. நான் செய்ய நினைத்தது ஒரு பிராயச்சித்தமே.......... திட்டவட்டமாக தெரியாத ஒன்றிற்காக சந்திக்கும் எல்லா மனிதர்களையும் சந்தேகித்து கொண்டே இருப்பது எங்கள் வாழ்வில் ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது......... நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்படியான ஒரு சூழலை உருவாக்கி விட்டோம் போல........
  16. ❤️........... இது தான் உண்மை, சுவி ஐயா. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நினைத்து ஒரு விடயத்தை ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது மனிதர்கள் தீயவர்கள் என்று நினைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பதே சரியான தெரிவாக இருக்கக்கூடும்..............
  17. 🤣........... 'களத்தில் வந்த அரைப்பக்க அனுபவங்கள்' என்ற தலைப்பு தான் சரியாக இருக்கும். ஒரு எட்டு பத்து உறவுகள் சேர்ந்து தானே இவற்றை எழுதிக் கொண்டிருக்கின்றோம். உங்கள் சிலரின் பின்னூட்டங்கள் இல்லாமல் இந்த அனுபவக் கதைகள் ஒன்றுமேயில்லை..............👍 ஏமாந்தாலும் ஒரு கூட்டமாக ஏமாறுவம்..........🤣
  18. யார் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற தகவல்கள் எனக்குத் தெரியாது. ஆனால் முயன்றால் இதை மெதுமெதுவாக நிற்பாட்டலாம். மற்றவர்களை நிற்பாட்டு என்று சொல்வதை விட, ஒவ்வொருவரும் தன்னளவில் மாறினாலே காலப் போக்கில் ஒரு மாற்றம் வரும். அரசியலுக்கு மட்டும் இல்லை, இது எல்லா பொது வெளிக்கும் பொருந்தும்
  19. 🤣.... ஏமாற்றப் போகின்றார்கள், நான் ஏமாறப் போகின்றேன் என்று நினைத்து 'தெளிவாக' இருக்க, கடைசியில் நான் தான் ஏமாற்றுக்காரன் ஆகி நின்றேன் அங்கே..........😌.
  20. ஏமாற்றம் --------------- எங்கே போனாலும் அங்கே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள், அதனால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே எல்லோரும் வளர்க்கப்பட்டிருக்கின்றோம். கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள், ஆட்டோக்காரர்கள் ஏமாற்றுவார்கள், வேலைக்கு வருபவர்கள் ஏமாற்றுவார்கள், இவ்வளவும் ஏன், நண்பர்களே ஒரு நாள் ஏமாற்றுவார்கள் என்று அவரவர்களின் பல சொந்த அனுபவங்களும், கதைகளும் எங்கள் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளே எங்களை ஏமாற்றி விடுவார் என்று சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் கடவுளை ஏமாற்ற முயன்ற கதைகளை இதுவரை எவரும் வெளியில் சொல்லவில்லை. மொழி தெரியாமல் ஏமாற்றப்படுவது மிகச் சாதாரணமாக உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு. சிங்கள மொழி தெரியாததால் கொழும்பில் ஏமாற்றப்பட்டவர்கள் எங்களில் பலர். பல வருடங்களின் முன் ஒரு தடவை நண்பன் ஒருவன் இடுப்பு பட்டி ஒன்றை அங்கு சந்தையில் வாங்கினான். பட்டியில் ஓட்டைகள் போட்டிருக்கப்பட்டிருக்கவில்லை. ஐந்து ஓட்டைகள் வேண்டும் என்றான். ஐந்து ஓட்டைகளை போட்டு விட்டு மேலதிகமாக ஐந்நூறு ரூபாய்கள் கொடு என்று அவர்கள் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டனர். முன்னமே சொன்னோமே, சிங்களத்தில், என்றார்களாம். பல வருடங்களின் முன் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னையில் இருக்கும் வேறோர் இடத்திற்கு, அண்ணா நகருக்கு, போக வேண்டி இருந்தது. என்னை ஏற்றிக் கொண்டு போக இருந்தவர் கடைசி நேரத்தில் வர முடியாத நிலை. ஒரு பிரச்சனையும் இல்லை, நானே சமாளித்துக் கொள்கின்றேன் என்று அங்கு இருக்கும் உறவினர்களுக்கு சொன்னேன். அவர்கள் நான் போக வேண்டிய இடத்திற்கு கார் வாடகை எவ்வளவு, எங்கே கார் எடுக்க வேண்டும், எங்கே கார் எடுக்கக் கூடாது என்று ஒரு நாலு பக்கங்கள் வரும் அளவிற்கு தகவல்கள் கொடுத்திருந்தனர். மிக முக்கியமாக, நான் வெளிநாட்டிலிருந்து அங்கு வந்திருப்பதாக சொல்லக் கூடாது என்றனர். இந்தியப் பணம் இங்கிருந்து கிளம்பும் போதே என்னிடம் கொடுக்கப்பட்டும் விட்டது. அப்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து அண்ணா நகருக்கு வாடகைக் கார் கட்டணம் அறுநூறு ரூபாய்கள். விமான நிலையத்தில் இறங்கி ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். சொல்லப்பட்டது போலவே பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கார்கள் அங்கு நின்றன. பதிவு செய்யும் இடத்திற்கு போய், அண்ணா நகருக்கு போக வேண்டும் என்றேன். ஒரு காரைக் காட்டி அதில் போங்கள் என்றனர். பற்றுச்சீட்டு கொடுங்கள் என்றேன். பற்றுச்சீட்டு கட்டாயமாக கேட்டு வாங்க வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. பற்றுச் சீட்டு வேணும் என்றால், உள்ளே போய் அங்கிருக்கும் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்துக்கொண்டே இருந்தேன். எவரும் வரவில்லை. பின்னர் இது வேலைக்கு ஆகாது என்று வெளியில் வந்ததும் பதியாத கார்கள் ஓடுபவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பல வித பேரங்கள். கடைசியாக ஒருவர் அறுநூறு ரூபாய்க்கு வருவதாக சொன்னார். ஃபோனில் படம் எடுத்தேன், கூப்பிட்டு உறவினர்களுக்கு சொன்னேன். அவர்களும் அந்த சாரதியுடன் கதைத்தனர். இலங்கையிலிருந்து அங்கு வருவதாக சாரதிக்கு சொன்னேன். அவர் கோயம்புத்தூர் சொந்த ஊர் என்றார். காதலித்து, இரு வீட்டார்களையும் எதிர்த்து மணம் முடித்ததாகவும், அப்படியே ஓடி வந்து சென்னையில் தங்கி விட்டதாகவும் சொன்னார். இந்தக் கார் அவருடைய சொந்தக் கார், வங்கிக் கடனில் வாங்கியது என்றார். சென்னைக்கு வந்து விடுங்கள் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு கார் வாங்கி விடலாம் என்றார். இலங்கையில் படும் கஷ்டம் எதுவும் இங்கு படத் தேவையில்லை என்றார். கலங்கின கண்களை மூடி, கைகளால் பொத்தினேன். ஏன் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்த்தார்கள் என்று கேட்டேன். அவருடைய ஒரு கால் செயற்கை என்றார். அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை. மிக நன்றாக படிக்கிறாராம் அவர். எப்படியும் ஒரு கலெக்டர் ஆக்கி விடுவோம் என்றார். முத்திரைகள் சேர்க்கின்றார் என்றார். நானும் சிறுவயதில் முத்திரைகள் சேர்த்திருக்கின்றேன். அப்படியே வெளிநாட்டு நாணயங்களும் சேர்க்கின்றாராம். இலங்கை முத்திரைகள், நாணயங்கள் எல்லாம் தங்கள் வீட்டில் இருக்கின்றது என்றார். இறங்கிய பின் அவரின் காலைக் கவனித்தேன். பேசியது போலவே அறுநூறு ரூபாய்கள் கொடுத்தேன். அப்படியே ஒரு இருபது டாலர்களும், அப்பொழுது ஒரு டாலரின் பெறுமதி அறுபது ரூபாய்கள், கொடுத்தேன். இது என்ன சார் என்று நின்றார். இது உங்களின் மகளுக்கு என்று சொல்லி விட்டு, அவரைப் பார்க்காமலேயே திரும்பி நடந்தேன். உண்மையில் பார்க்கும் துணிவு இருக்கவில்லை.
  21. 👍....... ட்ரம்ப் அவர்களின் கையில் எதுவும் இல்லை. எல்லாம் பைடனின் கையில் தான் உள்ளது. இன்றைய நிலையில் பைடன் நினைத்தால் மட்டுமே ட்ரம்ப் அடுத்த அதிபராக வருவது தவிர்க்கப்படலாம். இந்த வாரம் சூட்டின் சூட்டை ஆற விட்டு, அடுத்த வாரம் பைடன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னால், இறங்கின ரேட்டிங் மீண்டும் ஏறும். என்ன ஆனாலும் கலிஃபோர்னியாவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த மாநிலத்திற்கு எவரும் பிரச்சாரத்திற்கு கூட வருவதில்லை.........🤣.
  22. அப்படி இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனால், இந்த சவுக்குகள், சாட்டைகள், தீப்பொறிகள், கழகப் பேச்சாளர்கள் என்று எல்லோரும் மிகவும் தரம் தாழ்ந்தே மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். எந்த தலைவரும் இதைக் கட்டுப்படுத்துவது போல தெரியவில்லை. தலைவர்களும் தரம் தாழ்ந்தே பேசுகின்றனர், போகின்றனர். எல்லோருமே. ஒரு மலிவான சமுதாயம் மலிவானதாகவே இருக்கின்றது.
  23. தமிழ்நாட்டில் பாஜகவால் மிகக் குறுகிய காலத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கட்சியாக பாமக வந்துள்ளது. ஒரு மத்திய அமைச்சர் பதவியை மனதில் வைத்து இந்தக் கணக்கை மருத்துவர் ஐயா போட்டிருப்பார் போல........ ஒரு கவர்னர் பதவி கொடுப்பார்கள். அந்த வகையில் பாஜகவினர் நண்பர்களைக் கைவிடுவதில்லை. ஆனால் சாதி சனங்களிற்கு என்று ஒரு கட்சியை தொடங்கி விட்டு, கடைசிக் காலத்தில் வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் போய் உட்கார்ந்திருக்க முடியுமா........ இந்தக் கூட்டணி பஸ்ஸில் இருந்து இறங்கி அடுத்த கூட்டணி பஸ்ஸில் ஏற வேண்டியது தான்.......
  24. இறந்த அந்த இன்னுமொருவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ட்ரம்ப் பாதுகாப்பாகவும், சேமமாகவும் உள்ளார் என்கின்றனர். அவர் தான் அடுத்த அமெரிக்க தலைவர் என்பது விதி போல...... 333 மில்லியன் அமெரிக்கர்களின் வீடுகளில் இருக்கும் 500 மில்லியன் துப்பாக்கிகளை என்ன செய்யலாம் என்று இரண்டு நாட்களுக்கு இங்கு அமெரிக்காவில் விவாதிப்பார்கள்..........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.