Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣...... ஒரு உழைப்பிற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான், அண்ணை.....
  2. இட்டார் கெடுத்தார் ------------------------------- வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இது எல்லா சமிக்ஞை விளக்குகளிலும் நடக்கும் ஒன்றல்ல. மிக அதிக வாகனங்கள் கடந்து போகும் சமிக்ஞை விளக்குகளையும், மிகக் குறைவான வாகனங்கள் கடந்து போய் வருமிடங்களையும் இவர்கள் தவிர்த்து விடுகின்றனர். சிலர் உதிரியான வேறு சில தகவல்களையும் தங்களின் விளம்பர மட்டையில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக, 'நான் ஒரு முன்னாள் போர் வீரன்....' என்ற வசனமும் இந்த மட்டைகளில் அடிக்கடி காணப்படும் ஒன்று. காலையிலிருந்து ஒரு எட்டு அல்லது பத்து மணித்தியாலங்கள் அங்கேயே இருப்பார்கள். ஒரு முழுநேர வேலை. மழை என்றால் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் கடும் வெயில், கடும் குளிர் என்றாலும் அங்கே நிற்பார்கள். சில உடமைகளும் அவர்களை சுற்றி இருக்கும். ஒரு சைக்கிள், ஒரு பெட்டி அல்லது வாளி போன்றன. ஒரு சிலருடன் நாய் ஒன்றும் நிற்கும். அவர்களின் வளர்ப்பு நாயாகத்தான் இருக்கவேண்டும். இப்படியான ஒருவரை வாகனங்களை பதிவு செய்யும் அலுவலகம் ஒன்றில் ஒரு தடவை கண்டிருக்கின்றேன். அவரை அங்கு வரிசையில் அடையாளம் கண்டு கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். அவரின் வளர்ப்பு நாயுடனேயே அங்கு வந்திருந்தார். இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார் என்று எனக்கு சம்பந்தம் ஏதும் இல்லாத கேள்வி ஒன்றுக்கு சில கணங்கள் விடை தேடிக் கொண்டிருந்தேன். இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வில் இவர்களை, இவர்களின் செயல்களை வெளிக் கொணர்ந்தார்கள். இவர்களில் பலர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதை அந்த நிகழ்வில் காட்டினார்கள். இதையே சில நண்பர்களும் எப்போதும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு பல காலம் முன்னிருந்தே, சொல்லிக் கொண்டிருந்தனர். இவர்கள் பகலில் பணத்தை சேகரித்து, இரவுகளில் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று. இவர்களில் சிலரின் இரண்டாவது வாழ்க்கை வசதியானது என்று கூடச் சொல்லியிருக்கின்றனர். நண்பர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் அனுமானமாகத் தான் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு நாங்களே மற்றவர்களில் தான் குறை, குற்றம் என்று சொல்லிக் கொள்வது எங்களின் குற்ற உணர்வைக் குறைக்கும் அல்லது முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு வழி. குற்ற உணர்வுடன் வாழ்வது ஒரு மருந்தற்ற கொடிய நோயுடன் வாழ்வது போலவே. ஆனாலும் நான் மாறவில்லை. ஏதோ கொடுத்துக் கொண்டேயிருந்தேன். ஒரு தடவை ஒரு பெண்ணும், ஒரு சிறு பிள்ளையும் மட்டையில் எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு சமிக்ஞையில் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களின் ஒரு புது வழி, ஒரு புதிய நுட்பம் என்று ஏற்கனவே நாங்கள் எங்கள் வட்டத்தில் கதைத்திருந்தோம். ஒன்றும் கொடுக்கவே கூடாது, நீண்ட கால நோக்கில் இது எவ்வளவு தீன்மையை உண்டாக்கும் என்று ஆழமாக ஆரய்ந்தும் இருந்தோம். ஆனாலும், கண்ட அந்தக் கணத்தில், மனம் கேட்கவில்லை. மனம் புத்தியை வென்றது. பின்னர் ஒரு நாள், பொழுது கருகிக் கொண்டிருந்த ஒரு செக்கல் நேரம், என் வீட்டருகே இருக்கும் சமிக்ஞை விளக்கில் வாகனத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களின் வேலையும் முடியும் நேரம் என்பதால், அங்கு மட்டையுடன் நின்றவர் எழும்பியே நின்றிருந்தார். வாகனத்தை நோக்கி வந்தார். அன்றைய நாளில் அவருடைய கடைசி வருமானம் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்...... ஆனால், இந்த மனிதருக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் மிகப் பெரிய வயிறும், நிச்சயமாக அதனுள் ஒன்றைச் சுமந்த படியே, ஒவ்வொரு வாகனமாக எட்டி எட்டி அவர் கையில் இருக்கும் பூங்கொத்தைக் காட்டி வேணுமா என்று கேட்டபடியே மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார். பத்து டாலர்கள் என்று அவர் சொன்னதும் கேட்டது. சிறிது தள்ளி ஒரு வாளி நிறைய பல பூங்கொத்துகள் இருந்தது. அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
  3. 🙃.............. 'வேலை இல்லாத ஒருவர் பூனையைப் பிடித்து...........' என்று ஊர்ப் பக்கம் ஒரு சொலவடை இருக்கின்றது. ஊரில் அச்சு அசலாக இப்படியே சொல்ல மாட்டார்கள், நான் கொஞ்சம் மரியாதை கலந்து இங்கே எழுதியிருக்கின்றேன். ரணிலும், அவரின் சகபாடிகளிற்கும் வேற உருப்படியான வேலை எதுவும் நாட்டில் இல்லை போல ........ ஐந்து வருடம், ஐந்து வருடம், ஐந்து வருடம்........... என்று ஏலத்தில் கடைசி விலை கூவுவது போல உயர்நீதிமன்றம் ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்ப்புச் சொல்லி விட்டது. இப்ப எதுக்கு அரசியலமைப்பில் ஐந்து வருடங்கள் தான் என்று மாற்ற வேண்டும் இவர் நிற்கின்றார். அவர்களே குண்டை வைப்பார்களாம், அவர்களே குண்டை எடுப்பார்களாம் என்று போகுது கதை.....
  4. இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான், போதும் இனி இலங்கை வாசம் என்று லஹிரு பிரபோதா கமகே முடிவெடுக்க காரணமாக அமைந்தது. கமகே (35) இலங்கையைச் சேர்ந்த மருத்துவர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து 2023 ஜனவரியில் பிரிட்டனில் பணிபுரியத் தொடங்கினார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 120கி.மீ தொலைவிலுள்ள ஹட்டன் நகரில் மருத்துவராக, சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இப்போது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் (என்ஹெச்எஸ்) முதுநிலை அதிகாரியாக இருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரம் நெருக்கடியால் விலைவாசிகள் உயர்ந்தன – 2022ஆம் ஆண்டு இறுதியில் பணவீக்க அளவு 73% ஆனது. இனி நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார் கமகே. “அது அவ்வளவு எளிதான முடிவாக இல்லை. ஆம், நாம் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். அது என்றுமே மாறாது. நான் அங்கு எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்பது முக்கியமல்ல, அதேசமயம் படிப்புக்காகவும் வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையும் இருந்தது” என்கிறார். இது ஒருவரோடு முடிவுபெறும் விஷயம் அல்ல. இலங்கையின் மிகப் பெரிய அரசு மருத்துவர்கள் தொழிற்சங்கமான ‘அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் சங்க’த்தின் (ஜிஎம்ஓஏ) சொற்படி, கடந்த இரண்டு ஆண்டுகளின் சுமார் 1,700 மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள், அதற்குப் பொருளாதார காரணங்களே பிரதானம் என்கிறது அச்சங்கம். வெளியேறியவர்கள் எண்ணிக்கை மொத்த மருத்துவர்களில் 10%. இலங்கையின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே வலுவிழந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கொழும்புக்கு தெற்கில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்பிலிப்பிட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 2 மயக்கவியல் மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிட்டதால் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இடைக்கால ஏற்பாடாக அருகில் உள்ள இன்னொரு அரசு மருத்துவமனையிலிருந்து மயக்கவியல் நிபுணர் இடம் மாற்றப்பட்டார். அவரோ மேல் படிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். கொழும்பிலிருந்து வடகிழக்கில் 200கி.மீ தொலைவில் உள்ள அனுராதாபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் பணிபுரிந்த மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பிரிவையே தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் புலப்பெயர்வு காரணமாக, சுமார் 100 ஊரக மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் பதிரானாவை எச்சரித்துள்ளது ஜிஎம்ஓஏ சங்கம். இவை அனைத்தையும் தவித்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். பணமும் இல்லை மரியாதையும் இல்லை இலங்கையின் பண மதிப்பில் ரூ.64,000 காமேஜின் அடிப்படை சம்பளம். ஓவர்-டைம் ஊதியத்தையும் சேர்த்தால் ரூ.2,20,000. “நான் கார் வைத்திருந்தேன், உணவு உறைவிடத்துக்கான செலவு, அதுபோக கடன் தொகை, பெற்றோருக்கானச் செலவு. இவை எல்லாவற்றுக்கும் பிறகு கையில் நிற்பது ரூ.20,000 மட்டும்தான், கேளிக்கைகளுக்காகச் சென்றால் அதுவும் மிஞ்சாது” என்கிறார் கமகே. பண நெருக்கடிகளுடன் அரசு அதிகாரிகள் மரியாதையின்றி நடத்தியதும் அவரை இந்த முடிவை எடுக்கச் செய்தது. ஒரு சிறிய கிராமத்தில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தனது பணி நேரத்துக்குப் பின் சுகாதார முகாம்களை நடத்தியிருக்கிறார் கமகே. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிற மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை அடையாளம் காணும் செயலி ஒன்றையும் உருவாக்கினார். அன்றைய அதிபர் கோதபய ராஜபக்சே, இவரது முயற்சியைப் பாராட்டி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் வரும்படி ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக் கொடுத்துவிட்டார். “நாங்கள் எங்கள் செயலி குறித்து கோவிட்-19 தலைமைக் குழுக்கு விளக்கவுரை அளித்தோம். அவர்கள் கவனமாக கேட்டும் குறிப்பெடுத்தும் கொண்டனர். பின்னொரு நாள், தனியார் நிறுவனம் ஒன்றுதான் இந்தச் செயலியை – சில குறைகளுடன் – உருவாக்கியது என்பதைக் கேள்விப்பட நேர்ந்தது” என்கிறார் கமகே. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையின் இதய நிபுணர் எராண்டா ரணசிங்கே அராச்சி (35), இலங்கையைவிட்டு வெளியேறும் முடிவை எடுக்கத் தூண்டிய மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவை, “முதலாவதாக, அடிப்படையில் பொருளாதார காரணங்கள். இரண்டாவது, நல்ல பணிச் சூழல் தேவை. மூன்றாவது, நமக்கும் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்” என்கிறார். மருத்துவ சேவைக்கு சமூகத்தில் பெரியளவில் மரியாதை கிடைக்கவில்லை, குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு இதை உணர்ந்ததாகச் சொல்கிறார். “கோவிட் பெருந்தொற்றின்போது மிகவும் கஷ்டபட்டோம், ஆனால் எங்களால் சாத்தியப்பட்ட வரையில் பல உயிர்களைக் காப்பாற்றினோம். கோவிட் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த வேளையில் அதிக பணிச்சுமை காரணமாக பல நாள்கள் வீட்டுக்கூட செல்லவில்லை, என் வயதான பெற்றோருக்கும் கிருமி தொற்றிவிடுமோ என்ற பயமும்கூட. அந்த நேரத்தில் இப்படிப் பல மருத்துவர்கள் இப்படித்தான் தவித்தனர்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. பெருந்தொற்றுக்குப் பிறகு அதற்கு முன்பு இருந்திராத வகையில் நாடே பெருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. உணவு, மருந்து, எரிபொருள் (பெட்ரோல், டீசல்) உள்பட பல அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மக்கள் நீண்ட நேர வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. அதில் மருத்துவர்களும் விதிவிலக்கு அல்ல. மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பு எரிபொருள் ஒதுக்கீடு செய்திட ஜிஎம்ஓஏ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது, அதற்குப் பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பியது. “நான் பல நாள்கள், பல மணி நேரம் வரிசையில் நின்றேன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட இத்தனை மணி நேரங்களை நான் செலவுசெய்ததில்லை – ஆனால் மக்கள் பலர் இதைக் கேட்கும் மனநிலையிலேயே இல்லை” என்றார் ரணசிங்கே அராச்சி. ஒரு நல்ல எதிர்காலம் உயரும் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிலுவை, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து, உணவு ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டத்தின் உச்சமாக 2022 ஜூலை மாதம் ராஜபக்சே வெளியேற்றப்பட்டார். நிதி நிர்வாக முறைகேடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தடுமாறியது தொடர்பாக கோதபயாவும் அவரது சகோதரர்கள் மஹிந்தா ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் 2023 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். ஆனால், ரணசிங்கே அராச்சி, ஓய்வுபெற்ற பெற்றோருடன் அவரது உடன்பிறப்புகள் மூவராலும் அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், 2022 ஆகஸ்டு மாதம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார் ரணசிங்கே. “இலங்கையில் நான் நடுத்தர நிலை மருத்துவராக பணிபுரிந்தபோது, மாதம் 400 பவுண்டுகள் சம்பாதித்தேன். இதே தரத்தில் பிரிட்டன் போன்ற நாட்டில் உள்ள டாக்டர் 3,000 பவுண்டுகள் சம்பாதிப்பார்” என்கிறார் ரணசிங்கே. மேலும், அந்த நேரத்தில் கழுத்தை நெரிக்கும் பணவீக்கம் ஏற்பட்டதால் இலங்கையில் ஆன செலவும் பிரிட்டனில் ஆகும் செலவும் ஏகதேசம் ஒன்றுதான் என்கிறார். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பே தனது கடனில் ஒரு பகுதியை அடைத்ததால், சற்றே சமாளித்தார். “ரூ.15 லட்சம் கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் அடைத்தேன். இலங்கையில் இருந்திருந்தால், அதை நினைத்துகூட பார்த்திருக்க முடியாது” என்கிறார் கமகே. இதன் பின்விளைவுகளை நோயாளிகளும் மருத்துவமனைகளும் எதிர்கொண்டனர். ஜிஎம்ஓஏ – மருத்துவர்கள் தொழிற்சங்கம் – மருத்துவர்களை அவர்கள் இன்னல்களிலிருந்து மீட்க முயற்சி எடுக்க வேண்டி அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தனர். “மருத்துவர்கள் நினைப்பது என்ன, அவர்கள் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர்கள் பணியும் நாட்டுக்கு செய்யும் சேவையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதுதான் மிக முக்கியமான பிரச்சினையாக நாங்கள் இனங்கண்டுள்ளோம்” என்கிறார் ஜிஎம்ஓஏ சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹன்சமால் வீரசூர்யா. மேலும், சரியான தொழில் வளர்ச்சி அமைப்பு இல்லாததும் நாட்டின் தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் இருக்கும் பற்றாக்குறையும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது என்கிறார். சமூகத்தில் ஆழமாக புரையோடியிருக்கும் சமூகப் பாகுபாடுகளும் சில மருத்துவர்களை பாதிக்கிறது. “இலங்கையில், சில மருத்துவர்கள் ஒன்றாக உட்காரவோ அல்லது செவிலியர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ மாட்டார்கள், அங்கு, ‘தான்’ என்ற அகங்காரத்துடன் சமூகப் படிநிலை கட்டமைப்புகளும் உள்ளன. பிரிட்டனில் யாரும் முழுதாக அறியும் முன் இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லை. அப்படிப் பார்ப்பது மனங்களைக் காயப்படுத்திவிடும் என்கிறார் கமகே. “இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முறை எனக்கு அலுத்துவிட்டது. பொருளாதார விஷயங்கள் போதுமான அளவுக்கு மேம்பட்டால் – பணவீக்கப் பிரச்சினை குறைந்தால் – சில மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்ப தயாராக உள்ளனர். இந்தக் குறைந்த கால இடைவெளியில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன், ஆனால் இலங்கையைப் போல் வேறொரு நாட்டைப் பார்க்க முடியவில்லை. நாட்டின் நிலைமைகள் சீராகுமேயானால், எங்கள் பணி முறையாக அங்கீகரிக்கப்படுமானால், எங்களுக்கான உரிய சம்பளம் கொடுக்கப்படுமேயானால், மீண்டும் இலங்கைக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. இவை அனைத்தும் விரைவாக நடக்கும் என்பதற்கான சாத்தியப்பாட்டை ரணசிங்கே அராச்சி பார்க்கவில்லை. இப்போதைக்கு வடக்கு அயர்லாந்துதான் அவரது வீடு. https://www.arunchol.com/saroj-pathirana-article-on-sri-lanka-loses-10-percent-of-its-doctors
  5. 🤣...... அது நான் இல்லை............ அதோட நான் மாநிறமாக்கும்.............😜. என் நண்பனின் ஊரின் பெயர் அந்தக் கதையிலேயே இருக்கின்றது. ******************* சுவி ஐயா எழுதியது போலவே என்னுடைய கதையை எழுதினால் இப்படித் தான் இருக்கும்: நான்: இப்ப என்ன அவசரம்.........நான் இன்னும் படித்தே முடிக்கவில்லை, இன்னும் ஒரு வருஷம் இருக்கு. வீட்டார்: இப்ப எழுதிட்டு போ..... அடுத்த வருஷம் கல்யாணம் வைக்கலாம். நான்: பெண்....? வீட்டார்: அது தான் அடுத்த ஒழுங்கையில்............... நான்: அதுவா, அதுக்கு எத்தனை வயசு? வீட்டார்: என்ன சின்ன வயசு.......... இந்த வயதில நாங்கள் கையில இரண்டு, மடியில இரண்டு என்று பெத்துப் போட்டிட்டம்.............. (என் வீட்டார்கள் அதற்குப் பிறகு இன்னும் நாலு பெற்றவர்கள்......... மொத்தம் எட்டு உருப்படிகள்....🤣)
  6. இல்லை, இல்லை, அது நான் இல்லை.......... ஒரு தமிழ்நாட்டு நண்பனின் அனுபவம் இது. கொஞ்சம் கண்ணும், மூக்கும் வைத்து எழுதினேன். அவர்களுடன் சேரும் போது அவர்களின் தமிழும் வந்து சேர்கின்றது. நான் கவனித்து தவிர்த்திருக்க வேண்டும்........... என்னுடைய ஊரின் நிலைமை உங்களுக்குத் தெரிந்திருக்கும் தானே. எல்லோரும் ஊருக்குள் தான் கட்டுவார்கள். வெளியில் எவரும் எங்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நாங்களே எங்களைப் பகிடி பண்ணிக் கொள்வோம். மிக இளைய வயதிலேயே கட்டியும் வைத்து விடுவார்கள்..........
  7. 👍.... அவர்கள் இலட்சக் கணக்கில் அமெரிக்கா வந்துவிட்டார்கள். அதனால் தெரிவுகள் அதிகமாகிவிட்டது.
  8. அந்தப் பிள்ளையார் கோவில் நினைவில் இருக்கின்றது. அதன் அருகில் ஒரு பாலர் பாடசாலை இருந்தது போல.....
  9. பூஸா முகாம் தானே.... நான் போகவில்லை...... தப்பி விட்டேன்...
  10. கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் முடியாது. இங்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தோராயமான வழங்கும் திகதியும், காலமும் இருக்கின்றது. அதை ஒரு வெப்சைட்டில் போய் பார்க்கலாம். பெண் கொடுக்கப் போகின்றவர்கள் சும்மா இருப்பார்களா? இப்பொழுது இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்க 15 வருடங்கள் அல்லது அதற்கு மேலேயேயும் எடுக்கின்றது. நிரந்தர வதிவுடமை இல்லாதவர்களுக்கு நாங்கள் பெண் எல்லாம் கொடுப்பது இல்லை என்று நேரேயே சொல்லி விடுகின்றார்கள். இந்த தடையை தாண்டினால், அடுத்த தடை மாப்பிள்ளை எந்தக் கம்பனியில் வேலை செய்கின்றார் என்ற கேள்வி. ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,...... இதில் ஒன்றா என்று அங்கே பாண்டிக்குப்பத்தில் இருந்து கேட்பார்கள். இங்கு வந்ததே கனவா அல்லது நனவா என்று சந்தேகத்தில் இருக்கும் பெரும்பானமையானவரின் நிலை, இதில் ஆப்பிளா அல்லது ஆரஞ்சா என்றால் அதற்கு எங்கே போவது? இந்தக் கம்பனிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ரவுண்டுகள் வரை இருக்கும் நேர்முகத் தேர்வுகள். ஒவ்வொரு ரவுண்டிலும் கேள்வி கேட்பவர்கள் நடிகர் கமல் போலவே கதைப்பார்கள். ஒன்றும் விளங்கவே விளங்காது. மன உளைச்சல் தான் மிஞ்சும். இதையும் தாண்டினால் சொந்த வீடு இருக்கா, கடன் ஏதும் இருக்கா என்ற அடுத்த தடையைத் தாண்டவேண்டும். அங்கு பரம்பரை வீட்டில் இருந்து கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். கடன் இல்லாமல் இங்கு எவரிடம் சொந்த வீடு இருக்கின்றது? வீடு என்ன வீடு, கடன் இல்லாமல் அமெரிக்காவில் கார் கூட ஒருவரிடமும் கிடையாது. இப்படியான எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நண்பன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்ணை நேரில் பார்க்கப் போயிருந்தான். எத்தனையோ பெண்களை கல்யாண தரகர்கள் மூலம் பேசி, மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளில் விண்ணப்பித்து, பல கல்லூரி ஒன்றுகூடல்களிற்கு போய், இங்கு கடலை கடலையாகப் போட்டு எதுவுமே சரி வராமல், எல்லாம் சுத்தமான தோல்வியாகி, ஒரு கேள்விக்குறியாக இருந்தவன் அவன். இந்தச் சம்பந்தம் எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது இருவரும் இங்கே ஒரு கம்பனியில், ஒரே அணியில் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்தப் பெண்ணை பார்க்க ஊருக்குப் போகும் போது கல்யாணம் கட்டாமல் திரும்பி வரவே மாட்டன் என்று சொல்லி விட்டுப் போனான் நண்பன். இதற்கு முன்னும் சில தடவைகள் ஊருக்குப் போய், போன மாதிரியே வெறுங்கையுடன் திரும்பி வந்தவன் தான், ஆனால் இந்த முறை அவன் கண்ணில் ஒரு உறுதி தெரிந்தது. அநேகமாக திரும்பி வர மாட்டான் என்றுதான் எனக்கும் மனதில் பட்டது. நாலு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் நண்பனின் குடும்பத்தில். நண்பன் தான் கடைசி. மற்ற நால்வரும் திருமணமானவர்கள். முதல் அண்ணா, அடுத்தது அக்கா. அப்பா இல்லை, அம்மா உண்டு. குடும்பத்தில் மூத்தவர் தான் எல்லா முடிவுகளும் எடுப்பது. பெண்ணை இவனுக்கு பிடித்துவிட்டது. நல்லாகவே பிடித்து விட்டது, அவனின் நிலைமை உங்களுக்கும் தெரியும் தானே. நண்பன் கொஞ்சம் கறுப்பாக இருப்பான். கொஞ்சம் கறுப்பு என்றால் ஆரம்ப கால ரஜனிகாந்த, விஜய்காந்த் அளவிற்கு கறுப்பாக இருப்பான். ஆபிஸில் ஏதாவது ஃபோட்டோ எடுக்கும் போது பலர் அவன் பக்கத்தில் போய் நின்று கொள்வார்கள். பெண் பார்த்து விட்டு, வீட்டுக்கு போய் சொல்கின்றோம் என்று மூத்தவர் கிளம்பி வந்துவிட்டார். என்ன வீட்டை போய் சொல்லுவது, இப்பவே சம்மதம் என்று சொல்வது தானே என்று இவன் நினைத்தான், ஆனால் மூத்தவரை நேரடியாகக் கேட்கத் துணிவில்லை. மூத்தவர் நண்பனைத் தனியே கூப்பிட்டுப் போனார். இந்தச் சம்பந்தம் சரி வராது என்றார் அவனிடம். அந்தக் கணத்தில் அவனுக்கு பூமி கால்களில் இருந்து நழுவியிருக்க வேண்டும். ஏன் என்று ஈனஸ்வரத்தில் முனகினான். மூத்தவர் சொன்னார்: அந்தப் பெண் நல்ல வெள்ளையாக இருக்குது. எங்களின் ஆட்களில் இப்படி வெள்ளையாக ஒருவர் வரவே முடியாது. இது ஏதோ கலப்புக் குடும்பம். அநேகமாக இது ஒரு முதலியார் கலப்பாகத்தான் இருக்கும் என்று. அது முதலியார் கலப்பாக இருந்தால் என்ன, அல்லது முதலைக் கலப்பாக இருந்தால் என்ன, தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இப்பொழுது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
  11. 🤣..... அந்த மனுசன் கடைசி மட்டும் மறைத்து வைத்திருந்த ஒரு விசயத்தை சொர்ணமக்கா எட்டன்றாவது எல்லோருக்கும் தெரியட்டும் என்று நினைத்து செய்திருக்கின்றார்.........😜.
  12. 🤣........ எங்களிடம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குதே........ இதில் பலருக்கு போகிற வயதும் வந்து கொண்டிருக்கின்றது............ 🤣......... எங்களின் கவிஞர், கார்ட்டூனிஸ்ட் @Kavi arunasalam ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார் நேற்று. அதைப் பார்த்த பின் தான் இதை எழுதும் எண்ணம் வந்தது..............
  13. இருபாலைச் சந்தியில் இருந்து கிழக்கு பக்கம் போகும் வீதியில் கொஞ்ச தூரம் போய், உள்ளே இறங்க வயல்கள் வரும் என்று ஞாபகம். அங்கே ஒரு வீட்டில் லிபரேஷன் ஆபரேஷனின் போது ஒன்றோ இரண்டோ மாதங்கள் இருந்தோம். அந்தப் பகுதியில் ஒரு பெரிய குளமும் துருசுடன், ஒரு கோவிலுக்கு அருகில், மற்றும் பல சின்னக் குளங்களும் இருந்தன. எங்களூர் பக்கங்களில் சந்தைகளில் கூட நாங்கள் தாமரைக் கிழங்கு பார்த்தது கிடையாது. இங்கு தான் தாமரைக் கிழங்கை பார்த்ததும், சாப்பிட்டதும்.
  14. ஒரு இடம் பெயர்வின் போது இருபாலைப் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது தான் துருசு என்ற சொல்லை நான் முதலில் அறிந்து கொண்டது. கடல் நீச்சல் மிக நல்லாகவே தெரிந்திருந்தும், குளத்தில் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. சேற்று மண், தாமரை, அல்லிக் கொடிகள், துருசு என்று இந்தக் குளங்கள் வேறொரு நீர் உலகம்.
  15. 🤣........... பலரின் மனநிலைகள் எனக்கும் விளங்குது சிறி அண்ணை, ஆனாலும் ஏதோ 'சரி... விடுங்கப்பா......' என்று சொல்ல வேண்டும் போலவும் இருக்கின்றது. இதுவரை எழுதிய பதினொரு குறுங்கதைகளில் இரண்டு அவரை நினைத்து எழுதியது........ இலேசில் விட்டுப் போக மாட்டார் போல.......
  16. 👍.... நீங்கள் சொல்லியிருப்பது தான் சரி என்று நினைக்கின்றேன், ஏராளன். அவருக்கு இது விருப்பம், அது விருப்பம் என்று சொல்லி சொல்லியே செய்வார்கள். எங்களின் பக்கத்தில் 31 நாட்களுக்கு தினமும் விளக்கடியில் வைப்பதும் அவருக்கு விருப்பமான உணவு மற்றும் சிற்றுண்டிகளையே. 🤣........... வாசலில் வந்து நின்றாலும் நின்று விடுவார்.........
  17. 🙏.......... மிக்க நன்றி அக்கா. கடற்கரைகளிலும் இதே நிலை தான், அக்கா. அங்கும் அருகே வாழும் பெண்கள் நீச்சல் பழக விரும்புவார்கள், ஆனால் அது முடிவதில்லை.
  18. 🤣.... பொய்யா கோப்பாலு.... பொய்யா கோப்பாலு.... என்று எல்லாரும் கேட்கிறபடியால், உண்மையைச் சொல்லப் போகின்றேன்....... எல்லாமே பொய் தான்....🫢 இந்த தர்மத்தில் ஏழு நாட்கள் என்பார்கள், இன்னொரு தர்மத்தில் எழுநூறு நாட்கள் என்பார்கள். தர்மம் என்று ஒன்று இருக்குதா என்பதே பலத்த சந்தேகமே...
  19. கடைசி எட்டு நாட்கள் ---------------------------------- ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்களாக எழுதினேன் என்று ஷெஹான் சொல்லியிருக்கின்றார். மூன்று தடவைகள் எழுதியவற்றை கிழித்துப் போட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். அவரின் முயற்சிக்கும், முழுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அவர் பெற்ற விருது. பௌத்த தர்மம் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அதன் உடல் இறந்த பின், இங்கே பூமியில் மிகக் கறாராக மேலதிகமாக ஏழு நாட்கள் மட்டுமே கொடுக்கின்றதாம். இது தான் நாவலின் சுருக்கம். அசத்தலான ஒரு வரிக்கதை, ஒரு வரிக்கதை என்று தமிழ் திரையுலகில் அடிக்கடி சொல்வார்கள். ஷெஹான் அதை செய்து காட்டியிருக்கின்றார். வெகு நாட்கள் முன்பு, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த பின், இரண்டாம் நாள் இரவில் அவர் வாசல் கதவடியில் வந்து நின்றதாக ஒரு முறை யாரோ சொன்னது ஞாபகமிருக்கின்றது. அவர்கள் சொன்ன விதத்தில் குலை நடுங்கியது. இருக்கும் பொழுது அவ்வளவு அன்பாக இருந்த மனிதர்கள் இறந்த பின் ஆவியாக வந்து கடித்துக் கொல்லப் போகின்றார்களா என்ன, ஆனாலும் பயம் என்பது தர்க்கம் அறியாதது. எல்லோரும் உறங்கிய பின், குசினியில் ஒரே சத்தம் கேட்டது என்பதும் ஏழு நிலவுகளில் நிச்சயம் ஒரு நிலவில் ஆவது ஒவ்வொரு இழப்பு வீட்டிலும் நடக்கும் சம்பவம். கூட்டமும், அழுகையும் ஓயாமல் இருக்கும் இடத்தில் வளர்ப்புப் பூனை வேறு எப்பத்தான் சாப்பிட வருவது, அதற்குப் பசிக்காதா என்ன? எட்டுச் சடங்கு என்று சொன்னாலும் அதை நாங்கள் ஐந்து அல்லது ஏழு நாட்களிலேயே செய்து முடிக்கின்றோம். ஒற்றைப் படை நாட்கள் என்னும் சம்பிரதாயத்தின் படி. ஆவியோ அல்லது ஆன்மாவோ ஆகிய நீங்கள் எட்டு ஆட்கள் இங்கே அலைய வேண்டாம், ஐந்து நாட்களிலேயே விண்ணகம் போய் விடுங்கள் என்னும் எங்களின் நல்லெண்ணம் இன்னொரு காரணம். கதையில் மாலி அல்மேடாவிற்கு அவர் இறந்து ஏழு நாட்களில் அவர் எப்படி இறந்தார் என்ற உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். புக்கர் பரிசு ஏன் அவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து கொள்ள, புக்கர் பரிசை இதுவரை வென்றவர்கள், இறுதிச் சுற்றில் இருந்தவர்கள், ஆரம்பச் சுற்றில் இருந்தவர்கள் என்ற தகவல் நிரலைப் பாருங்கள். விக்கிபீடியாவில் முழுவதும் உள்ளது. உங்களுக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். வாயடைத்துப் போவீர்கள், ஒருவர் கூட இல்லை. அனுக் அருட்பிரகாசம் 2021ம் வருடம் இறுதிச் சுற்றில் இருந்தார். சமூக ஊடகங்களில் இவரைப் பற்றி பதிவுகள் நிறையவே வந்தன. 'வடக்கிற்கான ஒரு பாதை' என்னும் அவரின் நாவலுக்காக. அவர் இதை மூன்று வருடங்கள் எழுதினார், அத்துடன் கொலம்பியா பல்கலையில் கலாநிதிப் பட்டத்திற்கும் படித்துக் கொண்டிருந்தார். அவரின் பேட்டியும் பல இடங்களில் உள்ளது. ஷெஹானிற்கும், அனுக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளது போலவே தெரிகின்றது. இருவரும் தினமும் எழுத வேண்டும் என்கின்றனர், தினமும் வாசிக்க வேண்டும் என்கின்றனர். அடடா, இதனால் தான் நம்மில் எவருக்கும் இந்த புக்கர் பரிசு இன்னமும் கிடைக்காமல் இருக்கின்றதோ என்று எண்ணவும் முடியவில்லை ஏனென்றால் எனக்கு பரிச்சியமான சில தமிழ் எழுத்தாளர்கள் 24 மணி நேரமும் எழுதுகின்றனர். இஸீரு சாமர சோமவீர என்று ஒரு இளம் இலங்கை எழுத்தாளர் இருக்கின்றார். அவருடைய சில கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 'திருமதி. பெரேரா' என்னும் ஒரு சிறுகதையை தேடி வாசித்துப் பாருங்கள். இஸூரு என்ன சொல்லுகின்றார் என்றால் அவர் சில வேளைகளில் ஆறு மாதத்திற்கு எதுவும் எழுதுவதே இல்லையாம், எதுவுமே அவருக்குத் தோன்றாது என்கின்றார். ஒரு முக்கால் சைக்கிள், டெனிம் டவுசர், ரீசேட், காலில் செருப்பு, கன்னத்தில் மெல்லிய தாடியுடன் இருக்கும் இவரின் பேட்டியில் இருந்த இன்னொரு, மறக்க முடியாத, வசனம், 'மன்னிக்க வேண்டும். எல்லோருடனும் உரையாடுவதற்காக நான் எழுதுவது இல்லை.' பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் ஒரு அற்புதமான கேரள எழுத்தாளர். அவர் ஒரு சிந்தனையாளரும் கூட. அவர் வீட்டுப் பக்கம் வாசகர்கள் என்று யாரும் போனாலேயே, கல்லால் எறிந்து கலைத்துவிடுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிரகம். எட்டுச் சடங்கில் மிகப் பிடித்த விசயம் என்னவென்றால், எங்கள் மரபில் அது அசைவம் படைக்கும் ஒரு சடங்கு, அத்துடன் வகை வகையான அசைவங்கள், எங்களின் பழக்கத்தில் உள்ள அத்தனையும் படைப்பார்கள். எதை தொடுவது, எதை விடுவது என்று தெரியாது. இந்த ஷெஹான், அனுக், இஸூரு, பி.கே. பாலகிருஷ்ணன் போல. ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.
  20. 😗...... விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் கதை.......... என்ன கொடுமை, சார்......
  21. 'கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?' என்னும் இக்கட்டுரை 'அருஞ்சொல்' இதழில் கு. கணேசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. பலருக்கும் பலதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் இலகுவான ஒரு நடையில் இதை எழுதியிருக்கின்றார். நல்ல ஒரு வாசிப்பாக அமையலாம். *********** கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா? (கு.கணேசன், 07 Jul 2024) -------------------------------------------------------------------------------------------- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சிகூட கண்டுகொள்ளாது. ஏதோ ஆசைப்பட்டு, வாய் ருசிக்குச் சாப்பிட்டு, ‘தெனாலிராமன்’ வடிவேலுபோல் உடல் பெருத்து, முன் வயிற்றில் தொப்பை விழத்தொடங்கினால்போதும், படாத கண்ணெல்லாம் பட்டுத் தொலைக்கும். “உடம்பைக் குறைங்க. எதுக்கும் ஒரு தரம் பிஎம்ஐ, கொலஸ்டிரால் எல்லாம் பார்த்துக்கோங்க… கொழுப்பு கூடுறமாதிரி தெரியுது. வெறும் வயித்துல ‘லிப்பிட் புரோஃபைல்’ பார்த்தா கரெக்டா இருக்கும்…” இப்படியான இலவச ஆலோசனைகள் மத்தியமரிடமிருந்து கட்டாயம் கிடைக்கும். “கொழுப்பு இல்லாத பால் குடிங்க. கொலஸ்டிரால் இல்லாத எண்ணெயை வாங்குங்க” என்றெல்லாம் ஊடகங்கள் போதாத குறைக்குப் பாடம் நடத்தும். உங்களுக்கோ குழப்பம் கூடிவிடும். உடல் பருமனுக்கும் கொலஸ்டிராலுக்கும் என்ன சம்பந்தம்? கொலஸ்டிராலை ஏன் அந்தக் கால வில்லன் நடிகர் நம்பியாரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறோம்? வாருங்கள், அதையும் பார்த்துவிடலாம். கொலஸ்டிரால் விரோதியல்ல! எல்லோரும் நினைப்பதுபோல் கொலஸ்டிரால் நமக்கு விரோதியல்ல! அது ஒரு சாதுவான சத்துப் பொருள். அதிக சக்தி தருகிற, நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு கொழுப்புப் பொருள். நம் உடல் கார்போஹைட்ரேட்டைத் தயாரிப்பதில்லை; புரோட்டீனைத் தயாரிப்பதில்லை. ஆனால், கொலஸ்டிராலை மட்டும் தயாரித்துக்கொள்கிறது. அப்படியானால், நமக்குத் தேவையான ஒரு ‘விஐபி’யாகத்தானே அது இருக்க வேண்டும்? கல்லீரல், குடல், அட்ரீனல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்குச் சினைப்பைகள் என உடலில் பல இடங்களில் கொலஸ்டிரால் ஃபேக்டரிகள் இருக்கின்றன. இவை தினமும் 700 மில்லி கிராம் கொலஸ்டிராலைத் தயாரிக்கின்றன. உங்கள் எடை 70 கிலோவாக இருந்தால், நீங்கள் சுத்த சைவமாகவே இருந்தாலும் சரி, உங்கள் உடலில் 140 கிராம் கொலஸ்டிரால் கட்டாயம் இருக்கும். ஏன்? என்ன அவசியம்? உடலில் செல்களின் வளர்ச்சிக்குக் கொலஸ்டிரால் அவசியம். மூளையின் செயல்பாட்டுக்குக் கொலஸ்டிரால் தேவை. கொழுப்பு உணவைச் செரிக்க, பித்தநீரைச் சுரக்க கொலஸ்டிரால்தான் தேவை. நரம்புகளைப் பாதுகாக்கும் சவ்வுகள் வளர வேண்டுமா? அதற்கும் கொலஸ்டிரால் வேண்டும். நம் உடலின் வெப்பம் சமச்சீராக இருக்க வேண்டுமானால் கொலஸ்டிரால் இருக்க வேண்டியது கட்டாயம். டீன்ஏஜில் ஆணுக்கு மீசையும், பெண்ணுக்கு மார்புகளும் வளர வேண்டுமானால் கொலஸ்டிரால் இல்லாமல் முடியவே முடியாது. சுகம் காணும் தாம்பத்தியத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவுகிற ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு அடிப்படையே இந்தக் கொலஸ்டிரால்தான். இப்படிப் பல வழிகளில் நமக்குக் கைகொடுக்கும் நண்பனாகத்தானே கொலஸ்டிரால் இருக்கிறது! பிறகேன் அதை எதிரியாகப் பார்க்கிறோம்? கொலஸ்டிராலை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தப் புதிர் விலகும்! கொலஸ்டிராலில் இரண்டு வகை! நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு, இல்லையா? அதுமாதிரிதான் கொலஸ்டிராலிலும் இரண்டு தினுஷு உண்டு! கெட்ட கொலஸ்டிரால், நல்ல கொலஸ்டிரால்! அது என்ன கெட்டது, நல்லது? சாதாரண கொலஸ்டிரால் அதன் ரசாயன முறைப்படி உடல் திசுவிலிருந்து ரத்தத்துக்குள் தனியாகப் போக முடியாது. அதை ரத்தத்தில் தூக்கிச் சென்று சுற்றுலா காண்பிக்கத் தனி வாகனம் தேவை. அதன் பெயர் ‘லிப்போ புரோட்டீன்’. கொலஸ்டிரால் இதன் முதுகில் ஏறிக்கொண்டு உடலில் ஊர்வலம் வரும்போதுதான் அதன் அடுத்த பக்கம் தெரிகிறது. ‘லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’, ‘ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத பெயர்களைச் சொல்லி உங்களை இம்சைப்படுத்த விரும்பவில்லை. முதலாவதை எல்டிஎல் (LDL) என்றும், இரண்டாவதை ஹைச்டிஎல் (HDL) என்றும் நம் வசதிக்குச் சொல்லிக்கொள்ளலாம். இவற்றைத் தயாரிப்பதும் கல்லீரல்தான். சரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சுருக்கமாகச் சொன்னால், ஹைச்டிஎல் நல்ல கொலஸ்டிரால். எல்டிஎல் கெட்ட கொலஸ்டிரால். எப்படி? அது செய்யும் காரியம் அப்படி. ரத்தத்தில் எல்டிஎல் பயணிக்கும்போது, போகிற போக்கில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளில் படியத் தொடங்குகிறது. இதனால் ரத்தக்குழாய் தடித்து ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிசெய்கிறது. அப்போது முதல் முறையாக ‘பிபி பேஷண்ட்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது. “உப்பைக் குறைங்க, கொழுப்பைக் குறைங்க” என்கிற ஆலோசனை ஆரம்பமாகிறது. நாக்குக்கு அது புரிகிறதா? எது வேண்டாமோ அதைத்தான் அதிகம் தேடி ஓடுகிறது. நமக்கும் “சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடாமல் பிறகு எப்போது சாப்பிடுவதாம்?” என்று சொல்லத் தோன்றிவிடுகிறது. வாரம் தவறாமல் வீக் எண்ட் பார்ட்டியில் சாப்பிட்ட பர்கரும் கிரில் சிக்கனும் கொடுத்த கூடுதல் கொலஸ்டிரால் ரத்தக்குழாயின் உள்ளளவைக் குறைத்துவிடுகிறது. இது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. பாசி படிந்த தண்ணீர்க் குழாய் அடைத்துக்கொள்கிற மாதிரி அடைத்துக்கொள்கிறது. கொஞ்சம் யோசியுங்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் இந்த எல்டிஎல் படிந்து அடைத்துவிட்டால் என்ன ஆகும்? மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். நீங்கள் நெஞ்சுவலிக்காக டாக்டரிடம் சென்று, இசிஜி, ஆஞ்சியோகிராம் என ஏதாவது எடுத்துப் பார்த்திருந்தால், ‘அத்திரோஸ்கிலிரோஸிஸ் ஆரம்பமாகிவிட்டது. தர்ட்டி பர்சென்ட் அடைப்பு இருக்கு. கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்’ என்று உங்கள் கார்டியாலஜிஸ்ட் எச்சரித்திருப்பாரே, அது இதுதான். சரி, இதுவரை நண்பனாக இருந்த கொலஸ்டிரால் இப்போது எதிரியானது எப்படி? நம் கல்லீரல் தானாகவே கொலஸ்டிராலை தயாரிப்பது ஒரு புறம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பிலிருந்து கொலஸ்டிராலைத் தயாரிப்பது இன்னொரு புறம். நாம் சாப்பிடும் உணவில் 20% வரை கொழுப்பு இருக்குமானால், இந்த இரண்டுவித கொலஸ்டிரால் உற்பத்தியும் சரியாகவே இருக்கும். அதாவது, தினமும் 27 கிராம் கொழுப்பு, 35 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் எடுத்துக்கொண்டால் நெய், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றைத் தினமும் 10 கிராமுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் கொழுப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து ஆய்வுசெய்து, வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் இது. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. அதிலும் குழம்பாக உட்கொள்ளப்படும் மாமிச உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பைவிட வறுத்த, பொரித்த, எண்ணெயில் குளித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் உறங்குகிற உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்புதான் முக்கிய எதிரி. அளவுக்கு மீறி உடலுக்குள் நுழையும் இந்த வகை கொழுப்பைக் கல்லீரல் பித்தநீரில் சேமித்துக்கொள்ளும். தொப்பை விழுமளவுக்குக் கொழுப்புணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது இதுவரை சேமித்துவைத்த கொழுப்பை கொலஸ்டிராலாக அது மாற்றிவிடும். அப்போது உடலுக்குள் கொலஸ்டிரால் உற்பத்தியாவது தேவைக்கு அதிகமாகும். பிறகென்ன, நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஆரம்பமாகும். நண்பனும் எதிரிதான், எப்படி? சரியான வோல்டேஜில் எரியும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தை நம்மால் ரசிக்க முடியும். அதேநேரம் வோல்டேஜ் அதிகமாகி மின்னல்போல் வெளிச்சம் கொட்டினால் அதை ரசிக்க முடியுமா? அப்படித்தான் அளவோடு உணவு சாப்பிடும்வரை கொலஸ்டிரால் நமக்கு நண்பன். அளவுக்கு மீறி சாப்பிட்டு, உடல் பருமனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டால், நண்பனும் எதிரிதான். உடலின் அதிசயத்தைப் பாருங்கள். ஆபத்து இருக்கும் இடத்தில்தான் பாதுகாப்பும் இருக்கிறது. கெட்ட கொலஸ்டிராலைத் தயாரிக்கும் அதே கல்லீரல்தான் நல்ல கொலஸ்டிராலையும் தயாரிக்கிறது. நல்ல கொலஸ்டிரால் எனப் புகழப்படும் ஹைச்டிஎல் என்ன செய்கிறது தெரியுமா? இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து கல்லீரலுக்குக் கொடுக்கிறது. அதைக் கல்லீரலானது பித்தநீராக மாற்றி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றுகிறது. நமக்கு உடல் பருமன் இருந்தாலும் உடனே மாரடைப்பு வராமல் பாதுகாப்பது ஹைச்டிஎல் மேற்கொள்ளும் இந்த மெக்கானிஸம்தான். எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? எல்டிஎல் அதன் எல்லையைத் தாண்டினால், நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், எல்டிஎல்லின் கை ஓங்கிவிடும். ஹைச்டிஎல் அப்போது தூங்கிவிடும். அப்படியான ஒரு கெட்ட நாளில் மாரடைப்பு எனும் எம தூதன் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியாது. எல்லாம் உடல் பருமனின் உபயம்! https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-cholesterol
  22. சமீபத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரஷ்யாவிற்கு ஒரு மாநாட்டிற்காக போயிருந்த வேளையில் இலங்கையைச் சேர்ந்தவர்களை ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கின்றோம் என்று ரஷ்யர்கள் சொல்லியிருந்தனர். இலங்கையிலிருந்து அங்கு சண்டையிட போனவர்கள் பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து போனோர் சாதாரண பொதுமகன்கள் போல இருக்கின்றது...........🫣. ரஷ்யாவில் என்ன வேலை என்று போனார்களோ.........
  23. 🤣..... 'அமீபா' என்ற பெயரே அந்தப் பக்கத்து பெயர் போலவும் இருக்கின்றது.................😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.