Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. 🤣....... படலை காவிகள்........ இதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்....🤣
  2. 🤣....... இதுவும் அதே தான்............ நான் வளர்த்து வந்ததில் ஒன்றையே இன்னுமொரு குரூப் அமுக்கிக் கொண்டு போய் ஆக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் ஒரு ராத்திரியில்............. சாக்கு ஒன்றால் மூடி அமுக்கினதாக பல வருடங்களின் பின் சொன்னார்கள் சம்பந்தப்பட்டவர்கள்........😃
  3. பாமகவினருக்கு இது பெரும் தோல்வியே. திமுக வெல்லும், ஆனால் ஓரளவு தான் வாக்கு வித்தியாசம் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வளவு அகலமான வித்தியாசம் ஒரு அதிர்ச்சி. இது இரண்டாயிரம் ரூபாய்க்கும் (திமுகவின் கொடுப்பனவு), ஐந்நூறு ரூபாய்க்கும் (பாமகவின் கொடுப்பனவு) இருக்கும் இடைவெளி அல்ல. நாதகவிற்கு கிடைத்த பத்தாயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளும் குறைவே, ஆனாலும் இவர்களுக்கு அந்த தொகுதியில் வாக்கு போடுவதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. 40 வீத வன்னிய மக்களும், 30 வீத பட்டியலின மக்களும் வாழும் தொகுதியில், இந்த 70 வீத மக்களில் எத்தனை பேர் நாதகவிற்கு வாக்களிப்பார்கள்? மிகுதி இருக்கும் 30 வீதத்தில் ஒரு பகுதி மட்டுமே நாதகவிற்கு வாக்களித்திருப்பார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்று தொடர்ந்து வந்து கொண்டிருந்த அதிருப்தி அலைகளை பணத்தால் மட்டுமே திமுக ஈடு கட்டினார்கள் என்றில்லை. வலுவான ஒரு எதிர்த்தரப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதே நிலவரம்.
  4. ❤️.... அன்ன ஊஞ்சல் என்னும் பெயர் மிக அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றது..... இப்பொழுது தான் முதன்முதலாக கேள்விப்படுகின்றேன்.
  5. 👍..... நியூயோர்க்கும் தூங்குவதில்லை என்று தான் சொல்வார்கள்....
  6. ஒரு ராத்திரி ------------------- பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும். வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும். 'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகளை இப்படியான ஒரு சாமத்தில் வெளியே வந்து பார்த்து விட்டுத் தான் அவர் எழுதினாரோ. தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள். இரவு இரண்டாம் காட்சி படம் பார்த்து விட்டு, நடுச்சாமத்தில், அங்கே ரோட்டுக் கடையில் ஆவி பறக்கும் மல்லிகைப் பூ இட்லியும், மட்டன் குழம்பும் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்பவும் அந்த நேரத்திலும் கூட்டம் தெருக்கடைகளில் அள்ளும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரும் அப்படியான ஒன்று தான். 24 மணி நேரங்களும் திறந்திருக்கும் கடைகள், எப்போதும் நடமாடித் திரியும் மனிதர்கள், ஓயாத தெருக்கள் அத்துடன் அங்கங்கே சில சூட்டுச் சம்பவங்கள் என்று இதுவும் ஒரு தூங்கா நகரம் தான். சமீபத்தில் ஊர் போயிருந்த போது, ஒரு நாள் வவுனியாவில் இருந்து யாழ் போகும் புகையிரதம் அன்று கொஞ்சம் பிந்திப் போய்ச் சேர்ந்தது. இரவு ஏழு மணி ஆகிவிட்டது. யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து பஸ் தரிப்பிடம் போனால், கடைசி 751 பஸ் ஆறே முக்காலுக்கே போய் விட்டது என்றார்கள். இனி அன்றைக்கு பஸ் இல்லை. அங்கே நின்ற கடைசி 750 பஸ்ஸில் ஏறி புறாப்பொறுக்கியில் இறங்கினால், அங்கே ஒரே ஒரு ஆட்டோ நின்றது. அதில் ஏறி வீடு போனோம். எட்டு மணிக்கெல்லாம் அடங்கி விடுகின்ற ஒரு பிரதேசம் ஆகி விட்டது பிறந்து வளர்ந்த இடம். முன்னர் இப்படி இல்லை. ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. அங்கும் இரண்டு இரவுக் காட்சிகள் இருந்தன. யாழ் - பருத்தித்துறை பஸ் இரவிலும் ஓடிக் கொண்டிருந்தது. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. ஊரில் முறிவு நோவு பார்ப்பதற்கென்றே இரண்டு பரியாரிகள் அந்த நாட்களில் இருந்தார்கள். 'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.......' என்ற பாடல் வழமையான ஊஞ்சல் பாடல்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு முன்னுக்கு வந்தது ஒரு வருடம். இந்தப் பயிற்சி, அடுக்குத் தடுக்கு எல்லாம் சிவராத்திரி அன்று முழு இரவும் முழித்திருப்பதற்காகவே. ஆனாலும் ஆறு காலப் பூசைகளுக்கும் சிவன் கோவில் போகும் சிலர் தவிர பெரும்பாலானோர் முழு இரவும் முழித்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் சிலர் காத்துக் கொண்டு இருப்போம். அதிகாலையில் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் அல்லது கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கும் சிலர், அங்கங்கே நிற்கும் எங்களைப் பார்த்து 'என்னடா, நீங்கள் இரவிராக முழித்து இருந்தனீங்களோ.......... உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்குமடா.........' என்று சொல்லிக் கொண்டே போவார்கள். பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள். வருடா வருடம் ஒரு ராத்திரியில் மட்டும் இப்படி நடந்து கொண்டேயிருந்தது.
  7. பாகிஸ்தானில் ஒரு அரச தலைவராவது குற்றம் சாட்டப்படாமல், கைது செய்யப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்களா? பூட்டோவை தூக்கிலிட்ட ஷியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார். அந்த விமான விபத்திற்கு மாஸ்கோவை குற்றம் சாட்டியவர்களும் இருந்தனர். அப்பொழுது சோவியத் - ஆப்கான் சண்டை நடந்து கொண்டிருந்த நாட்கள். பின்னர் வந்த பெனாசிர் பூட்டோ கைது செய்யப்பட்டார், நாட்டை விட்டு வெளியேறினார். நவாஸ் ஷெரீப், இம்ரான் என்று இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தேசத் துரோகம் என்ற குற்றச்சாட்டு எல்லா தலைவர்கள் மீதும் அங்கு இருக்கும், அத்துடன் ஊழல் என்றும் சொல்வார்கள். PAK என்பதன் பொருள் P - Punjab, A- Afghanistan, K - Kashmir என்று சொல்வார்கள். இந்தப் பகுதியில் ஒரு அகண்ட இஸ்லாமிய அரசுக் கனவு. கனவில் வாழ்ந்து, நிஜத்தில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு நாடு.
  8. தமிழ்நாட்டில் உள்ள பொன்னாக்குடி என்னும் ஊரில் தகவல் கொடுப்பவர்களால் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டிருக்குதாம்.........🫣. அந்த இளைஞர்கள் தகவல் கொடுப்பவர்களுக்கு எதிராக அந்த ஊரில் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் மேலேயுள்ளது. ஆயிரம் பொய்கள் சொல்லி என்றாலும் ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொல்வார்கள்....... இவர்கள் புறம் சொல்லி திருமணத்தை நிற்பாட்டுகின்றார்கள். https://minnambalam.com/archives-trending-news-in-tamil/local-informers-to-prevent-marriages-90s-kids-are-shocked/
  9. எங்களைப் போன்றவர்களுக்கு தான் இது தெரியும், இது தெரியாது என்ற வேறுபாடுகள் இருக்கின்றன. ஜீ தான் மனிதப் பிறவியே இல்லையே............ நடந்து முடிந்த தேர்தல் இந்தியாவைக் கொஞ்சம் காப்பாற்றிவிட்டது.......😀.
  10. என்ன மிஸ்டர் ஜீ ராமரிலிருந்து புத்தரிற்கு மாறிவிட்டார்? முடிந்த தேர்தலில் அயோத்தி இருக்கும் தொகுதியில் விழுந்த அடிக்குப் பின் ஜீக்கு ராமரில் கடும் கோபம் போல........ நான் ஒரு அனுமன் என்றாரே......... ஜீ ஆஸ்ரியாவில் பேசும் போது, ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா என்று திருப்பி திருப்பிச் சொன்னார். சனம் ஆஸ்ரியா, ஆஸ்ரியா என்று சத்தம் போட்டது......... ஜோ பைடனுக்கு நினைவு தப்புது, ஜீக்கு நினைவே இல்லை......🫣.
  11. நீங்கள் சொல்வதும் சரி தான்.......... தலைகணையின் மூலைத் தையலுக்குள்ளும் இது ஒளித்திருக்கும், எவரால் என்ன செய்ய முடியும்....... இங்கு சில வருடங்களின் முன் நுளம்புத் தொல்லை அதிகமாகி, அத்துடன் அது சைனாவில் இருந்து வந்த நுளம்பு என்றும் சொல்லப்பட்டு, ஒரு 'எதிர் நுளம்பு' வகை ஒன்றை உருவாக்கி மில்லியன் கணக்கில் வெளியில் விட்டார்கள். இந்த எதிர் நுளம்பு மனிதர்களை ஒன்றும் செய்யாது, இனப் பெருக்கம் செய்யாது, ஆனால் அந்நிய நுளம்பு, பொல்லாத நுளம்பு என்று எல்லாவறையும் பிடித்து தின்றுவிடும்.......😗.
  12. நீங்கள் சொன்னவுடன், நினைவே மணக்குது........ இந்த உணவுச் சங்கிலியில் இந்த மூட்டைப் பூச்சிகளை பிடித்து தின்னும் ஒரு சில உயிர்கள் இருக்க வேண்டுமே.......... பல்லி?
  13. 👍............ கலைத்துறையில் வெளிச்சமும், அங்கீகாரமும் கிடைப்பது அரிதும், அதிர்ஷடமும் என்ற நிலை தான் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. 'இளங்காத்து வீசுதே............' பாடலைப் பாடிய ஶ்ரீராம் அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முன் எவ்வளவோ கஷ்டப்பட்டார் என்று இங்கு ஒருவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆயிரக் கணக்கானோருக்கு கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்காமலேயே போய் விடுகின்றது......😔.
  14. கனடாவில் ஒரு குடும்ப நிகழ்விற்காக போயிருந்த ஒரு தருணம். பல நாடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர், இலங்கை உட்பட. ஒன்றிரண்டு நாட்களின் பின், ஒரு கட்டிலில் இரவில் மூட்டைப் பூச்சி ஊர்கின்றது என்று ஆரம்பித்தனர். அந்த வீடே தலைகீழாகியது. எல்லாவற்றையும் பிரித்து, வெயிலில் போட்டு, சுடு தண்ணீர் ஊற்றி........... இது மூட்டைப் பூச்சியின் முட்டை, அது அதன் எச்சம், நசுக்கினா வரும் இரத்தம்.... என்று டி ராஜேந்தர் தோற்றார் அங்கே..........🤣
  15. இதில் இன்னொரு வகையினரும் இருக்கின்றனர். கடற்கரை போன்ற இடங்களில் நின்று பாட்டுப் பாடுவார்கள். சிலர் சித்திரம் வரைவார்கள். இங்கிருக்கும் Santa Monica Beach பிரபலமானது. ரொனால்ட் ரீகனின் இடம் என்றும் சொல்வார்கள். அந்தக் கடற்கரையில் எப்போதும் உள்ளூர் மற்றும் வெளியாட்களின் கூட்டம் இருக்கும். அங்கு நின்று சிலர் பாடுவார்கள். ஒரு சிலரின் பாடல்கள் அவ்வளவு தரமாக, மிக நன்றாக இருக்கும். ஹாலிவுட் என்று இங்கே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து, சந்தர்ப்பம் அமையாமல் போனவர்கள் போல........
  16. 🤣.......... ஒரு பதினைந்து வருடங்களின் முன் இங்கு கலிஃபோர்னியாவில் ஒரு நகரில் இது பெரிய பிரச்சனையாகவே வந்தது. அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்க இந்தியாவிலிருந்து பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். வேலைக்கு அருகில் இருக்கும் இடங்களில் வாடகைக்கு குடியிருந்தனர். ஒரே அறையில் பலர் தங்கினர். வந்து போனவர்களுடன் மூட்டைப் பூச்சிகளும் வந்து, போகாமல் அங்கேயே தங்கி, பெருகி, அந்தப் பகுதியையே சில நாட்கள் மூடி மருந்து அடிக்க வேண்டியதாகியது. அத்துடன் இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பதில்லை என்ற போக்கும் வந்தது.
  17. இப்படியும் சிலரைப் பார்த்திருக்கின்றேன்........ ஆனால் பல கார்கள் கழுவும் இடங்களில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்....
  18. 🤣...... ஒரு உழைப்பிற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தான், அண்ணை.....
  19. இட்டார் கெடுத்தார் ------------------------------- வாகனத்தை சிவப்பு விளக்கில் நிற்பாட்டி விட்டு பக்கக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தால், 'தயவு செய்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.' என்று எழுதப்பட்ட மட்டைகளுடன் ஒருவர் அல்லது இருவர் வீதியின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். இது எல்லா சமிக்ஞை விளக்குகளிலும் நடக்கும் ஒன்றல்ல. மிக அதிக வாகனங்கள் கடந்து போகும் சமிக்ஞை விளக்குகளையும், மிகக் குறைவான வாகனங்கள் கடந்து போய் வருமிடங்களையும் இவர்கள் தவிர்த்து விடுகின்றனர். சிலர் உதிரியான வேறு சில தகவல்களையும் தங்களின் விளம்பர மட்டையில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக, 'நான் ஒரு முன்னாள் போர் வீரன்....' என்ற வசனமும் இந்த மட்டைகளில் அடிக்கடி காணப்படும் ஒன்று. காலையிலிருந்து ஒரு எட்டு அல்லது பத்து மணித்தியாலங்கள் அங்கேயே இருப்பார்கள். ஒரு முழுநேர வேலை. மழை என்றால் அங்கு இருக்கமாட்டார்கள். ஆனால் கடும் வெயில், கடும் குளிர் என்றாலும் அங்கே நிற்பார்கள். சில உடமைகளும் அவர்களை சுற்றி இருக்கும். ஒரு சைக்கிள், ஒரு பெட்டி அல்லது வாளி போன்றன. ஒரு சிலருடன் நாய் ஒன்றும் நிற்கும். அவர்களின் வளர்ப்பு நாயாகத்தான் இருக்கவேண்டும். இப்படியான ஒருவரை வாகனங்களை பதிவு செய்யும் அலுவலகம் ஒன்றில் ஒரு தடவை கண்டிருக்கின்றேன். அவரை அங்கு வரிசையில் அடையாளம் கண்டு கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். அவரின் வளர்ப்பு நாயுடனேயே அங்கு வந்திருந்தார். இவர் ஏன் இங்கு வந்திருக்கின்றார் என்று எனக்கு சம்பந்தம் ஏதும் இல்லாத கேள்வி ஒன்றுக்கு சில கணங்கள் விடை தேடிக் கொண்டிருந்தேன். இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வில் இவர்களை, இவர்களின் செயல்களை வெளிக் கொணர்ந்தார்கள். இவர்களில் பலர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்வதை அந்த நிகழ்வில் காட்டினார்கள். இதையே சில நண்பர்களும் எப்போதும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு பல காலம் முன்னிருந்தே, சொல்லிக் கொண்டிருந்தனர். இவர்கள் பகலில் பணத்தை சேகரித்து, இரவுகளில் கொண்டாட்டமாக இருப்பார்கள் என்று. இவர்களில் சிலரின் இரண்டாவது வாழ்க்கை வசதியானது என்று கூடச் சொல்லியிருக்கின்றனர். நண்பர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் வெறும் அனுமானமாகத் தான் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு நாங்களே மற்றவர்களில் தான் குறை, குற்றம் என்று சொல்லிக் கொள்வது எங்களின் குற்ற உணர்வைக் குறைக்கும் அல்லது முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு வழி. குற்ற உணர்வுடன் வாழ்வது ஒரு மருந்தற்ற கொடிய நோயுடன் வாழ்வது போலவே. ஆனாலும் நான் மாறவில்லை. ஏதோ கொடுத்துக் கொண்டேயிருந்தேன். ஒரு தடவை ஒரு பெண்ணும், ஒரு சிறு பிள்ளையும் மட்டையில் எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு சமிக்ஞையில் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். இது அவர்களின் ஒரு புது வழி, ஒரு புதிய நுட்பம் என்று ஏற்கனவே நாங்கள் எங்கள் வட்டத்தில் கதைத்திருந்தோம். ஒன்றும் கொடுக்கவே கூடாது, நீண்ட கால நோக்கில் இது எவ்வளவு தீன்மையை உண்டாக்கும் என்று ஆழமாக ஆரய்ந்தும் இருந்தோம். ஆனாலும், கண்ட அந்தக் கணத்தில், மனம் கேட்கவில்லை. மனம் புத்தியை வென்றது. பின்னர் ஒரு நாள், பொழுது கருகிக் கொண்டிருந்த ஒரு செக்கல் நேரம், என் வீட்டருகே இருக்கும் சமிக்ஞை விளக்கில் வாகனத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களின் வேலையும் முடியும் நேரம் என்பதால், அங்கு மட்டையுடன் நின்றவர் எழும்பியே நின்றிருந்தார். வாகனத்தை நோக்கி வந்தார். அன்றைய நாளில் அவருடைய கடைசி வருமானம் நானாகத்தான் இருந்திருக்க வேண்டும்...... ஆனால், இந்த மனிதருக்கு சற்றுத் தள்ளி ஒரு பெண் மிகப் பெரிய வயிறும், நிச்சயமாக அதனுள் ஒன்றைச் சுமந்த படியே, ஒவ்வொரு வாகனமாக எட்டி எட்டி அவர் கையில் இருக்கும் பூங்கொத்தைக் காட்டி வேணுமா என்று கேட்டபடியே மிக மெதுவாக வந்து கொண்டிருந்தார். பத்து டாலர்கள் என்று அவர் சொன்னதும் கேட்டது. சிறிது தள்ளி ஒரு வாளி நிறைய பல பூங்கொத்துகள் இருந்தது. அன்று அங்கு நான் வாகனத்தின் கண்ணாடியை இறக்கவே இல்லை. அதன் பிறகு மட்டையுடன் நிற்பவர் எவரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அன்று நான் ஒரு பூங்கொத்து வாங்காமல் விட்டது தப்பு என்று இன்றும் மனம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
  20. 🙃.............. 'வேலை இல்லாத ஒருவர் பூனையைப் பிடித்து...........' என்று ஊர்ப் பக்கம் ஒரு சொலவடை இருக்கின்றது. ஊரில் அச்சு அசலாக இப்படியே சொல்ல மாட்டார்கள், நான் கொஞ்சம் மரியாதை கலந்து இங்கே எழுதியிருக்கின்றேன். ரணிலும், அவரின் சகபாடிகளிற்கும் வேற உருப்படியான வேலை எதுவும் நாட்டில் இல்லை போல ........ ஐந்து வருடம், ஐந்து வருடம், ஐந்து வருடம்........... என்று ஏலத்தில் கடைசி விலை கூவுவது போல உயர்நீதிமன்றம் ஏற்கனவே மூன்று தடவைகள் தீர்ப்புச் சொல்லி விட்டது. இப்ப எதுக்கு அரசியலமைப்பில் ஐந்து வருடங்கள் தான் என்று மாற்ற வேண்டும் இவர் நிற்கின்றார். அவர்களே குண்டை வைப்பார்களாம், அவர்களே குண்டை எடுப்பார்களாம் என்று போகுது கதை.....
  21. இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான், போதும் இனி இலங்கை வாசம் என்று லஹிரு பிரபோதா கமகே முடிவெடுக்க காரணமாக அமைந்தது. கமகே (35) இலங்கையைச் சேர்ந்த மருத்துவர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து 2023 ஜனவரியில் பிரிட்டனில் பணிபுரியத் தொடங்கினார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 120கி.மீ தொலைவிலுள்ள ஹட்டன் நகரில் மருத்துவராக, சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இப்போது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் (என்ஹெச்எஸ்) முதுநிலை அதிகாரியாக இருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரம் நெருக்கடியால் விலைவாசிகள் உயர்ந்தன – 2022ஆம் ஆண்டு இறுதியில் பணவீக்க அளவு 73% ஆனது. இனி நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார் கமகே. “அது அவ்வளவு எளிதான முடிவாக இல்லை. ஆம், நாம் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். அது என்றுமே மாறாது. நான் அங்கு எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்பது முக்கியமல்ல, அதேசமயம் படிப்புக்காகவும் வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையும் இருந்தது” என்கிறார். இது ஒருவரோடு முடிவுபெறும் விஷயம் அல்ல. இலங்கையின் மிகப் பெரிய அரசு மருத்துவர்கள் தொழிற்சங்கமான ‘அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் சங்க’த்தின் (ஜிஎம்ஓஏ) சொற்படி, கடந்த இரண்டு ஆண்டுகளின் சுமார் 1,700 மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள், அதற்குப் பொருளாதார காரணங்களே பிரதானம் என்கிறது அச்சங்கம். வெளியேறியவர்கள் எண்ணிக்கை மொத்த மருத்துவர்களில் 10%. இலங்கையின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே வலுவிழந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கொழும்புக்கு தெற்கில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்பிலிப்பிட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 2 மயக்கவியல் மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிட்டதால் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இடைக்கால ஏற்பாடாக அருகில் உள்ள இன்னொரு அரசு மருத்துவமனையிலிருந்து மயக்கவியல் நிபுணர் இடம் மாற்றப்பட்டார். அவரோ மேல் படிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். கொழும்பிலிருந்து வடகிழக்கில் 200கி.மீ தொலைவில் உள்ள அனுராதாபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் பணிபுரிந்த மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பிரிவையே தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் புலப்பெயர்வு காரணமாக, சுமார் 100 ஊரக மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் பதிரானாவை எச்சரித்துள்ளது ஜிஎம்ஓஏ சங்கம். இவை அனைத்தையும் தவித்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். பணமும் இல்லை மரியாதையும் இல்லை இலங்கையின் பண மதிப்பில் ரூ.64,000 காமேஜின் அடிப்படை சம்பளம். ஓவர்-டைம் ஊதியத்தையும் சேர்த்தால் ரூ.2,20,000. “நான் கார் வைத்திருந்தேன், உணவு உறைவிடத்துக்கான செலவு, அதுபோக கடன் தொகை, பெற்றோருக்கானச் செலவு. இவை எல்லாவற்றுக்கும் பிறகு கையில் நிற்பது ரூ.20,000 மட்டும்தான், கேளிக்கைகளுக்காகச் சென்றால் அதுவும் மிஞ்சாது” என்கிறார் கமகே. பண நெருக்கடிகளுடன் அரசு அதிகாரிகள் மரியாதையின்றி நடத்தியதும் அவரை இந்த முடிவை எடுக்கச் செய்தது. ஒரு சிறிய கிராமத்தில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தனது பணி நேரத்துக்குப் பின் சுகாதார முகாம்களை நடத்தியிருக்கிறார் கமகே. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிற மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை அடையாளம் காணும் செயலி ஒன்றையும் உருவாக்கினார். அன்றைய அதிபர் கோதபய ராஜபக்சே, இவரது முயற்சியைப் பாராட்டி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் வரும்படி ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக் கொடுத்துவிட்டார். “நாங்கள் எங்கள் செயலி குறித்து கோவிட்-19 தலைமைக் குழுக்கு விளக்கவுரை அளித்தோம். அவர்கள் கவனமாக கேட்டும் குறிப்பெடுத்தும் கொண்டனர். பின்னொரு நாள், தனியார் நிறுவனம் ஒன்றுதான் இந்தச் செயலியை – சில குறைகளுடன் – உருவாக்கியது என்பதைக் கேள்விப்பட நேர்ந்தது” என்கிறார் கமகே. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையின் இதய நிபுணர் எராண்டா ரணசிங்கே அராச்சி (35), இலங்கையைவிட்டு வெளியேறும் முடிவை எடுக்கத் தூண்டிய மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவை, “முதலாவதாக, அடிப்படையில் பொருளாதார காரணங்கள். இரண்டாவது, நல்ல பணிச் சூழல் தேவை. மூன்றாவது, நமக்கும் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்” என்கிறார். மருத்துவ சேவைக்கு சமூகத்தில் பெரியளவில் மரியாதை கிடைக்கவில்லை, குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு இதை உணர்ந்ததாகச் சொல்கிறார். “கோவிட் பெருந்தொற்றின்போது மிகவும் கஷ்டபட்டோம், ஆனால் எங்களால் சாத்தியப்பட்ட வரையில் பல உயிர்களைக் காப்பாற்றினோம். கோவிட் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த வேளையில் அதிக பணிச்சுமை காரணமாக பல நாள்கள் வீட்டுக்கூட செல்லவில்லை, என் வயதான பெற்றோருக்கும் கிருமி தொற்றிவிடுமோ என்ற பயமும்கூட. அந்த நேரத்தில் இப்படிப் பல மருத்துவர்கள் இப்படித்தான் தவித்தனர்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. பெருந்தொற்றுக்குப் பிறகு அதற்கு முன்பு இருந்திராத வகையில் நாடே பெருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. உணவு, மருந்து, எரிபொருள் (பெட்ரோல், டீசல்) உள்பட பல அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மக்கள் நீண்ட நேர வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. அதில் மருத்துவர்களும் விதிவிலக்கு அல்ல. மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பு எரிபொருள் ஒதுக்கீடு செய்திட ஜிஎம்ஓஏ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது, அதற்குப் பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பியது. “நான் பல நாள்கள், பல மணி நேரம் வரிசையில் நின்றேன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட இத்தனை மணி நேரங்களை நான் செலவுசெய்ததில்லை – ஆனால் மக்கள் பலர் இதைக் கேட்கும் மனநிலையிலேயே இல்லை” என்றார் ரணசிங்கே அராச்சி. ஒரு நல்ல எதிர்காலம் உயரும் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிலுவை, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து, உணவு ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டத்தின் உச்சமாக 2022 ஜூலை மாதம் ராஜபக்சே வெளியேற்றப்பட்டார். நிதி நிர்வாக முறைகேடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தடுமாறியது தொடர்பாக கோதபயாவும் அவரது சகோதரர்கள் மஹிந்தா ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் 2023 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். ஆனால், ரணசிங்கே அராச்சி, ஓய்வுபெற்ற பெற்றோருடன் அவரது உடன்பிறப்புகள் மூவராலும் அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், 2022 ஆகஸ்டு மாதம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார் ரணசிங்கே. “இலங்கையில் நான் நடுத்தர நிலை மருத்துவராக பணிபுரிந்தபோது, மாதம் 400 பவுண்டுகள் சம்பாதித்தேன். இதே தரத்தில் பிரிட்டன் போன்ற நாட்டில் உள்ள டாக்டர் 3,000 பவுண்டுகள் சம்பாதிப்பார்” என்கிறார் ரணசிங்கே. மேலும், அந்த நேரத்தில் கழுத்தை நெரிக்கும் பணவீக்கம் ஏற்பட்டதால் இலங்கையில் ஆன செலவும் பிரிட்டனில் ஆகும் செலவும் ஏகதேசம் ஒன்றுதான் என்கிறார். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பே தனது கடனில் ஒரு பகுதியை அடைத்ததால், சற்றே சமாளித்தார். “ரூ.15 லட்சம் கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் அடைத்தேன். இலங்கையில் இருந்திருந்தால், அதை நினைத்துகூட பார்த்திருக்க முடியாது” என்கிறார் கமகே. இதன் பின்விளைவுகளை நோயாளிகளும் மருத்துவமனைகளும் எதிர்கொண்டனர். ஜிஎம்ஓஏ – மருத்துவர்கள் தொழிற்சங்கம் – மருத்துவர்களை அவர்கள் இன்னல்களிலிருந்து மீட்க முயற்சி எடுக்க வேண்டி அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தனர். “மருத்துவர்கள் நினைப்பது என்ன, அவர்கள் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர்கள் பணியும் நாட்டுக்கு செய்யும் சேவையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதுதான் மிக முக்கியமான பிரச்சினையாக நாங்கள் இனங்கண்டுள்ளோம்” என்கிறார் ஜிஎம்ஓஏ சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹன்சமால் வீரசூர்யா. மேலும், சரியான தொழில் வளர்ச்சி அமைப்பு இல்லாததும் நாட்டின் தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் இருக்கும் பற்றாக்குறையும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது என்கிறார். சமூகத்தில் ஆழமாக புரையோடியிருக்கும் சமூகப் பாகுபாடுகளும் சில மருத்துவர்களை பாதிக்கிறது. “இலங்கையில், சில மருத்துவர்கள் ஒன்றாக உட்காரவோ அல்லது செவிலியர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ மாட்டார்கள், அங்கு, ‘தான்’ என்ற அகங்காரத்துடன் சமூகப் படிநிலை கட்டமைப்புகளும் உள்ளன. பிரிட்டனில் யாரும் முழுதாக அறியும் முன் இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லை. அப்படிப் பார்ப்பது மனங்களைக் காயப்படுத்திவிடும் என்கிறார் கமகே. “இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முறை எனக்கு அலுத்துவிட்டது. பொருளாதார விஷயங்கள் போதுமான அளவுக்கு மேம்பட்டால் – பணவீக்கப் பிரச்சினை குறைந்தால் – சில மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்ப தயாராக உள்ளனர். இந்தக் குறைந்த கால இடைவெளியில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன், ஆனால் இலங்கையைப் போல் வேறொரு நாட்டைப் பார்க்க முடியவில்லை. நாட்டின் நிலைமைகள் சீராகுமேயானால், எங்கள் பணி முறையாக அங்கீகரிக்கப்படுமானால், எங்களுக்கான உரிய சம்பளம் கொடுக்கப்படுமேயானால், மீண்டும் இலங்கைக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. இவை அனைத்தும் விரைவாக நடக்கும் என்பதற்கான சாத்தியப்பாட்டை ரணசிங்கே அராச்சி பார்க்கவில்லை. இப்போதைக்கு வடக்கு அயர்லாந்துதான் அவரது வீடு. https://www.arunchol.com/saroj-pathirana-article-on-sri-lanka-loses-10-percent-of-its-doctors
  22. 🤣...... அது நான் இல்லை............ அதோட நான் மாநிறமாக்கும்.............😜. என் நண்பனின் ஊரின் பெயர் அந்தக் கதையிலேயே இருக்கின்றது. ******************* சுவி ஐயா எழுதியது போலவே என்னுடைய கதையை எழுதினால் இப்படித் தான் இருக்கும்: நான்: இப்ப என்ன அவசரம்.........நான் இன்னும் படித்தே முடிக்கவில்லை, இன்னும் ஒரு வருஷம் இருக்கு. வீட்டார்: இப்ப எழுதிட்டு போ..... அடுத்த வருஷம் கல்யாணம் வைக்கலாம். நான்: பெண்....? வீட்டார்: அது தான் அடுத்த ஒழுங்கையில்............... நான்: அதுவா, அதுக்கு எத்தனை வயசு? வீட்டார்: என்ன சின்ன வயசு.......... இந்த வயதில நாங்கள் கையில இரண்டு, மடியில இரண்டு என்று பெத்துப் போட்டிட்டம்.............. (என் வீட்டார்கள் அதற்குப் பிறகு இன்னும் நாலு பெற்றவர்கள்......... மொத்தம் எட்டு உருப்படிகள்....🤣)
  23. இல்லை, இல்லை, அது நான் இல்லை.......... ஒரு தமிழ்நாட்டு நண்பனின் அனுபவம் இது. கொஞ்சம் கண்ணும், மூக்கும் வைத்து எழுதினேன். அவர்களுடன் சேரும் போது அவர்களின் தமிழும் வந்து சேர்கின்றது. நான் கவனித்து தவிர்த்திருக்க வேண்டும்........... என்னுடைய ஊரின் நிலைமை உங்களுக்குத் தெரிந்திருக்கும் தானே. எல்லோரும் ஊருக்குள் தான் கட்டுவார்கள். வெளியில் எவரும் எங்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நாங்களே எங்களைப் பகிடி பண்ணிக் கொள்வோம். மிக இளைய வயதிலேயே கட்டியும் வைத்து விடுவார்கள்..........
  24. 👍.... அவர்கள் இலட்சக் கணக்கில் அமெரிக்கா வந்துவிட்டார்கள். அதனால் தெரிவுகள் அதிகமாகிவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.