Everything posted by kandiah Thillaivinayagalingam
-
பிறந்தநாள் நினைவு கூறல் / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11 / 06 / 1907 - 18 / 02 / 2000] / எங்கள் அன்பான அப்பா.
பிறந்தநாள் நினைவு கூறல் / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11 / 06 / 1907 - 18 / 02 / 2000] / எங்கள் அன்பான அப்பா. "நீங்கள் மறைந்தாலும் எங்கள் எண்ணங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கும், உங்களை மனதார நேசித்தவர்கள் இன்று, 11 / 06 / 2024 உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைவுகூருகிறார்கள்." "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய்! சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய்!" "சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய்! சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்!!" கந்தையா குடும்பம் அத்தியடி, யாழ்ப்பாணம்
-
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02 நாம் முதலில் கருத்தில் கொண்ட இரு வெவ்வேறு சூழ்நிலைகளில், முதலாவது மாதிரியை கவனத்தில் எடுத்தால், அதில் பொதுவாக எல்லோரும் ஒரே மொழி பேசும் இனத்தவர்கள், ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம், வாழ்க்கை முறை அல்லது பாணி பலதரப்பட்டவை. எனவே இந்த வேறுபாடுகளை எமது ஆய்விற்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போர் சூழலில் இளம் பிராயத்தனர் பலர் தமது கல்வியை இடைநடுவில் நிறுத்தி, தமது பாதுகாப்பிற்காக வெளிநாடு ஒன்றிற்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதுமட்டும் அல்ல வெளிநாடு வந்த பின்பும் தமது வாழ்வை நிலைநிறுத்தவும், தம்மை அனுப்ப பெற்றோர்கள் செலவழித்த பணத்தை ஈடு செய்யவும் மற்றும் பல காரணங்களால், அவர்கள் உடனடியாக வேலைக்கு போகவேண்டிய நிர்ப்பந்தமும் வந்தது. அதனால் இங்கும் படிப்பை அவர்கள் தொடர முடியவில்லை. இன்று அவர்கள் வசதிகள், பணங்கள், செல்வாக்குகள் போன்றவைகளை பொறுத்தவரையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தாலும் அவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையின் தாக்கத்தாலும், பெற்றோர்கள் அல்லது பாது காவலர்கள் இல்லாமல் வாழ்ந்த காரணங்களாலும், மற்றும் பிற காரணிகளாலும், செயற்கையாக பிறரினும் விஞ்சி இருக்கும் நிலை ஒன்றில் [an artificial bubble of superiority] தமது வாழ்வை அமைத்து விட்டார்கள். அது மட்டும் அல்ல நிறைய விடயங்களை தமக்கு எட்டியவாறு கோட்பாடு செய்து, அதை நீங்கள் நம்ப வேண்டும் என உங்களுக்கு தமது உரையாடலில் அல்லது விவாதத்தில் புகுத்துகிறார்கள். என்றாலும் இவைகளை அவர்கள் பொதுவாக புத்தக வாயிலாகவோ [consult a good book] அல்லது மற்றவர்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமாகவோ [constructive feedback] சரிபார்ப்பதில்லை. மற்றது எப்படி ஒரு ஆக்கபூர்வமான உரையாடலில் அல்லது சிந்தனையை தூண்டக்கூடிய விவாதத்தில் [intellectual conversation, nor a thoughtful debate ] ஈடுபடுவது என்பது அவர்களுக்கு தெரியாததும் ஒரு குறையாகும். இவர்களின் நிலையை பார்க்கும் பொழுது கிரேக்கத் தத்துவஞானியான பிளேட்டோ [Plato] "சொல்லுவதற்கு தங்களிடம் சில இருப்பதால் அறிஞர்கள் சொல்லுகிறார்கள், ஆனால் முட்டாள்கள் தாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதால் சொல்கிறார்கள்" [Wise men speak because they have something to say; Fools because they have to say something] என கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல நிறை குடம் தளும்பாது. குறை குடம் கூத்தாடும் [filled vessels doesn't make sound, empty vessel does] என்ற தமிழ்ப் பழமொழியையும் இங்கு சேர்க்கலாம். இவை [மேலே கூறியவை] முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தாலும், படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் பொது அறிவாளிகள் என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிலர் ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy] உள்ளத்தில் கொண்டுள்ளார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை படித்துள்ளார்கள், அனால் அதில் அறிவியல் மன நிலை [scientific temper] இல்லாமல். உதாரணமாக, வானியலைப் பற்றி படிப்பிக்கும் ஆசிரியர் அதை வகுப்பு அறையோட முழுக்கு போட்டு விட்டு, சூரிய சந்திர கிரகணத்தின் போது குளத்தில் புனித நீராடுகிறார். எனினும் பொதுவாக அவர்கள் தங்கள் தங்கள் துறையில் அறிவாளிகள், அனுபவசாலிகள். அதை நாம் மறுக்கவில்லை. அத்துடன் சிலவேளை அறிவு அல்லது செல்வம் அல்லது உடல் வலு [தசை சக்தி] ஆகியவற்றுடன் அகம்பாவமும், நியாயமற்ற தன்மையும் சிலரிடம் வருகிறது [Sometimes, arrogance and unreasonableness comes with knowledge, wealth and muscle power]. உதாரணமாக ஒருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணும் பொழுது ,அவர் மற்றவர்களின் கருத்துக்களை, அவை நியாயபூர்வமாக இருந்தாலும், அதை ஏற்க மறுக்கிறார். "தெரிந்தது கையளவு தெரியாதது உலகளவு" [known handful, Unknown global] என்பதை இவர்கள் உணர்வதில்லை. மற்றது ஒரு கருத்து என்றும் உலகளாவிய ரீதியில் பிரபலமாக இருப்பதில்லை [never universally popular]. ஒருவருக்கு முக்கியமாக அல்லது தொடர்புடையதாக இருப்பது மற்றவருக்கு அப்படி இருக்காமல் விடலாம். உதாரணமாக மகாத்மா காந்தியைப் பற்றிய பெரும்பாலான மக்களின் நம்பிக்கையையும், ஆதாரபூர்வமான அருந்ததி ராயின் [Arundhati Roy] அண்மைய கருத்தையும் ஒப்பிடுக. [Arundhati Roy, the Booker prize winning author, has accused Mahatma Gandhi of discrimination and called for institutions bearing his name to be renamed. Speaking at Kerala University in the southern Indian city of Thiruvananthapuram, Roy, 52, described the generally accepted image of Gandhi as a lie. "It is time to unveil a few truths about a person whose doctrine of nonviolence was based on the acceptance of a most brutal social hierarchy ever known, the caste system … Do we really need to name our universities after him?" Roy said. / Mahatma Gandhi, whose views on caste have been a long-running argument among historians.] மேலும், சிலர் தம் குரல் கேட்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள், அதற்கு கிடைக்கும் பொது வரவேற்பு அவர்களின் தனி மதிப்பை உயர்த்தும் என்று நம்புகிறார்கள். எனவே தம் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக மட்டும் சிலர் கதைக்கிறார்கள். ஆனால் பரந்த விடயங்களில் எல்லாம் கதைக்க முயலும் பொழுது அவையின் தரமும் குறைகிறது [the larger the quantity, the more diluted the quality]. பண்டைய மநு நீதி நூல் அல்லது தர்ம சாஸ்திரம், இரண்டாம் அத்தியாயத்தில், 110 ஆவது வசனத்தில் "ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்க மாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விடயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன்) போல இரு" [Unless one be asked, one must not explain (anything) to anybody, nor (must one answer) a person who asks improperly; let a wise man, though he knows (the answer), behave among men as (if he were) an idiot.] என்கிறது. அதே போல பைபிளும் நீதிமொ ழிகள் 4:24 இல் "வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து" [ Put Away Perversity From Your Mouth; Keep Corrupt Talk Far From Your Lips] என்கிறது. வீண் வாதம் வீண் விளைவைத் தரும். எனவே மேலே கூறியவாறு புத்திசாலித்தனமாக விலத்துவதே ஒரே வழி என்று எண்ணுகிறேன். எவ்வளவு விளக்கினாலும் விடாமல் விதண்டா வாதம் செய்பவர்கள். அவர்கள் கேள்விக்கு ஒரு முறை பதிலளிப்பதையே நாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட்டதை போல கொக்கரிப்பவர்கள். இவர்களுக்கு தேவை உண்மையோ விளக்கமோ அல்ல. அவர்களின் கருத்துக்கு வெளிச்சம் மட்டுமே ஆகும். இனி நாம் இரண்டாவது மாதிரியை பார்ப்போம், இங்கு பலதரப் பட்ட இனத்தவர்கள் இருந்தாலும், அவர் பங்குபற்றிய உரையாடல் கூட்டம் அதிகமாக சக ஊழியர்களாகத்தான் இருந்திருப்பார்கள். எனவே அவர்களின் அறிவு அனுபவத்தில் ஓரளாவது ஒற்றுமை கட்டாயம் இருந்து இருக்கும், எனவே அங்கு உரையாடல் அல்லது விவாதம் அறிவு பூர்வமாக அமைய வாய்ப்புகள் அதிகம் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். நாம் இதுவரை அலசியத்தில் இருந்து, நாம் கற்றுக் கொண்டது பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். பேச்சினை வைத்தே ஒருவர் எப்படிப் பட்டவர் என்று கணித்துவிட இயலும். பேச்சே ஒருவரின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகிறது பணம் அல்ல என்பது ஆகும். சுருக்கமாக வாயிலிருந்து வெளிப்படாத வார்த்தைகள் விலைமதிப்பு மிக்கவை. அதனால் பேசும்போது கவனமுடன் பேசுவோம். பேச்சினை எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்த கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். உதாரணமாக எதிலும், எதற்கும் பொருந்தாததாகவே, எதிலும் புரிந்து கொள்ளாமலேயே, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்து கொண்டே இருப்பவர்களை ‘‘வச்சாக் குடுமி, செரச்சா மொட்டை’’ என்பதைப் போலப் பேசுகிறான் என்பர். முடிவெட்டினால் சிலர் குடுமிவைப்பதைப் போல் வெட்டி வைத்துக் கொள்வர். இல்லை எனில் முடி முழுவதையும் எடுத்து மொட்டையடித்துக் கொள்வர். இதுபோன்றே சிலர் பேசும்போது சரி என்றால், தவறைக் கூடச் சரி என்று ஒப்புக் கொள்வர். தவறு என்று கூற நினைத்தால் தவறு என்றே கூறிச் சாதிப்பர். இவர்களின் பண்பாடற்ற பேச்சினையே மேற்குறிப்பிட்ட பழ மொழி எடுத்துரைக்கின்றது. இதை சரியாக புரிந்து அதற்கு ஏற்றவாறு அவர்களை விலத்தியோ அல்லது நாம் விலகியோ இருக்க பழகவேண்டும் என்பதே என் அறிவிற்கு எட்டிய முடிவாகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
எல்லோருக்கும் நன்றிகள்
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING] "நல்லது [Fine] என்று 'என்னவள்' நயமாக உரைத்தால் நாகரிகமாக அவள் தானே சரி என்று சொல்வதை விளங்கி 'நானும்' விவாதத்தை நிறுத்தி நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து !" "ஐந்தே நிமிடத்தில் [5 mins] கட்டாயம் வருவேன் என்று கதவை மூடி 'என்னவள்' அலங்காரம் செய்தால் சந்தடி இல்லாமல் 'நானும்' ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்!" "ஒன்றும் இல்லை [Nothing] என்று 'என்னவள்' மழுப்பினால், புயலுக்கு முன் அமைதி போல நின்றால் என்னை 'நானும்' அதற்கு உசார் படுத்தி ஏதோ மர்மத்தை எதிர் பார்த்து நின்றேன்!" "செய்யுங்க [Go ahead] நான் தடை இல்லை என்று கொஞ்சம் கடினமாக 'என்னவள்' உறைத்து சொன்னால் சொல்லும் நோக்கை 'நானும்' குரலில் அறிந்து செய்யாமல் பின் வாங்கி அமைதி நிலைநாட்டினேன்!" "உரத்த பெருமூச்சுடன் [loud sigh] இடையில் 'ஆம்' என்றால் முட்டாளுடன் நேரம் வீணா போகுதே என்று எனக்கு சொல்லாமல் 'என்னவள்' சொன்னால் பணிந்து 'நானும்' மெல்ல ஒதுங்கினேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 15 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது"" / "Food Habits Of Ancient Sumer continuing" மெசொப்பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து, பியர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது. மெசொப்பொத்தேமியா, நகர்ப்புற உயர் வகுப்பினர் காலையிலும், அந்தியிலும் இரண்டு முக்கிய உணவையும், அத்துடன் இரண்டு சிறிய சிற்றுண்டிகளையும் சேர்த்து மொத்தமாக நாலு வேளை உணவு அருந்தினாலும், பொது மக்கள், வேலையாட்கள், குறிப்பாக விவசாயிகள் அப்படியில்லை. அவர்கள் பொதுவாக இரண்டு வேலை உணவு மட்டுமே அருந்தினார்கள். மேலும் அவர்கள் சாப்பிடும் போது, இன்றைய முள்ளுக் கரண்டிகளைப் போல - ரொட்டித் துண்டுகளை, பல உணவுகளை கூட்டி எடுக்க அதிகமாக பாவித்தாலும், பெரும்பாலும் அவர்கள் கைகளாலேயே உணவை எடுத்து உட்கொண்டார்கள். அது மட்டும் அல்ல, இறைச்சிகள், எடுத்து உண்பதற்கு ஏற்றவாறு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்பே பரிமாறப்பட்டது. மெசொப்பொத்தேமியா நகரங்கள் முழுவதும் தவறணைகள் இருந்தன, அங்கு வைன், பியருடன் உணவு பண்டங்களும் கூட இருந்தன. சுமேரியாவில், பெண்களே பொதுவாக, வீட்டு சமையலுக்கு பொறுப்பாக இருந்தனர். "என் மனைவி திறந்த வெளி ஆண்டவன் சன்னதியில், என் தாய் ஆற்றங்கரையில், நான் பசியில் சாகிறேன்! ["Since my wife is at the outdoor shrine and my mother is at the river, I shall die at hunger"] என்ற சுமேரியன் பழமொழி இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. அத்துடன், அரண்மனை, ஆலய உயர் வகுப்பினர் பெரிய விலங்குகளின் மாமிசத்தை உட்கொள்ளுவதை அதிக வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், வேலையாட்களும் விவசாயிகளும் அப்படி இல்லை. மன்னர்கள் இரவில், விளக்கொளியில் அல்லது பந்த ஒளியில் விருந்துகள் [இது உலகின் முதலாவது மெல்லொளி இரவு விருந்தாக -Twilight Dinner- இருக்கலாம்?] வைத்தார்கள். இவை கை கழுவுதலுடன் ஆரம்பித்து, கை கழுவுதலுடன் முடிந்தன. மேலும் இந்த விருந்தில், விருந்தினர் தமது வகுப்புப் படிநிலைப்படி, தமது தொழில், இனம், மற்றும் அவர்களின் சமுக பொருளாதார நிலையின் படி, அந்த அந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர். சுமேரிய இலக்கியத்தில் ஆண்டவனின் உணவு, ஒரு பிரபலமான உட் பொருளாகவும் உள்ளது. மனிதனின் தேவைகளை ஒத்த தேவைகள் ஆண்டவனுக்கும் உண்டு என்ற நம்பிக்கை மெசொப்பொத்தேமியரிடம் காணப்பட்டன. ஆண்டவனுக்கு பொதுவாக நாலு வேளை உணவு படைக்கப்பட்டன. பெரிதும் சிறிதுமாக காலையில் இரு உணவும், மீண்டும் பெரிதும் சிறிதுமாக பிற்பகலிலும்,பின்னேரத்திலும் இரு உணவும் படைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் பின் மத குரு படையலை திருப்பி எடுத்து - அப்படி எடுத்த மிச்சத்தை? - அரச குடும்பத்தினருக்கு வழங்கினர். இதனால் இந்த உயர் வர்க்கத்தினர்கள் நாலு வேளை உணவு முறைக்கு அதிகமாக பழக்கப்பட்டு இருக்கலாம்?. பொதுவாக ஆண்டவன் உணவில் - பானங்கள், கஞ்சி, ரொட்டி, பியர், வைன், தண்ணீர், போன்றவை எல்லா நாலு வேளை படையல் உணவுடனும் சேர்க்கப்பட்டன. பால் அதிகமாக காலையில் மட்டுமே படைக்கப்பட்டன. இவ்வாறே பண்டைய சுமேரியர்களின் உணவு பழக்கங்கள் பொதுவாக காணப்பட்டன என எம்மால் அறிய முடிகிறது. தனிப்பட்ட அளவில், நாம் எல்லோரும் எம் பண்பாட்டு உணவுகளை முதன்மையாக உண்ணுகிறோம். அது எம்மை அடையாளப் படுத்துகிறது. பொதுவாக பெரும்பாலான நாம், எமது உணவுகளுடன் பழக்கப் பட்டதுடன், அது எம்மை குடும்பத்துடன் இணைப்பதுடன், எங்களுக்காக ஒரு சிறப்பு மற்றும் தனிப்பட்ட மதிப்பையும் அது வைத்திருக்கிறது. ஆகவே, உணவு என்பது ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரம் என்பதற்கு மேல், எம் பண்பாடு, வரலாறு மற்றும் இலக்கியத்துடனும் தொடர்புடையது. இது மக்களை ஒன்று கூட்டி சமூகங்களாக ஒன்றிணைக்கிறது. அது மட்டும் அல்ல, இது இன்று ஒரு பொழுதுபோக்காகவும், ஒருவரிடம் வேட்கை அல்லது ஒரு பேரார்வத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் மற்றும் ஒரு தொழிலாகவும் கூட செயல்படுகிறது [It serves as a hobby, a passion, and a profession too]. எமக்கு எல்லோருக்கும் வரலாற்று ரீதியாக தெரியும் ரொட்டி அல்லது பாண் மனிதன் தயாரித்த உலகின் முதல் உணவில் ஒன்று என்று. இது ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து இருக்கலாம். இது சுமேரியரின் சமையல் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. சுமேரியர்கள் இதை 'கறி' ஒன்றுடன் உட்க்கொண்டார்கள் என்று கி மு 1700 ஆண்டு சுமேரியன் வில்லை ஒன்று கூறுகிறது. இது நாம் இன்று உண்ணும் கறியை போன்றது. கறி (Curry) என்பது பொதுவாக குழம்பு, பிரட்டல் போன்ற வாசனைத் திரவியங்களுடன் சமைத்த ஒரு சமையலை குறிக்கிறது. இந்த கறி [kari - Curry]என்ற சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்லாகும். இதன் சரித்திரம் 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. சிந்து சம வெளி மக்கள், தமது உச்ச நாகரிக கட்டத்தில், மூன்று முக்கிய சேர்மானங்களான - இஞ்சி, உள்ளி, மஞ்சள் போன்றவற்றை பாவித்து பண்டைய - கறி [the predecessor to curry] சமைத்துள்ளார்கள் என அகழ்வாராச்சி உறுதிப் படுத்துகிறது. இலங்கையில் கூட, இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1270), தனது மதிய உணவாக பலவித கறிகளுடன் சோறு [rice and a number of curries] உட்க்கொண்டான் என முகாம் பழக்கவழக்கங்கள் [කඳවුරු සිරිත / Camping customs] என்ற குறிப்பில் பதியப் பட்டுள்ளது. அப்படியே, கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்ட ரொபெர்ட் நொக்ஸ் (Robert Knox / 1659-1679) தனது புத்தகத்தில், மலை நாட்டு கிராம வாசிகளின் பாரம்பரிய உணவாக சோறும் கறியும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இனி "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள்" பற்றிப் பார்ப்போம். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 16 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 15 "Food Habits Of Ancient Sumer continuing" A clay tablet discovered in Mesopotamia dating back to 1800 BC clearly depicts a woman drinking beer from a jug while she was enjoying sex with her husband. Further we understand that In Mesopotamia, Urban elites usually, ate four times daily ,two main meals, one in the morning and one at twilight, with two smaller snacks - labourers, especially farmers out in the field, tended to have only two meals. People used bread to scoop up many foods and probably ate directly with their fingers. Meats probably were carved into serving pieces before presentation. Taverns where wine, beer and food could be enjoyed, existed throughout Mesopotamia's cities. Woman were generally responsible for cooking at home. According to one of the Sumerian proverb: "Since my wife is at the outdoor shrine and my mother is at the river, I shall die at hunger", confirm above. Palace and temple elites had access to meat from large animals more regularly than did urban workers and farmers. Kings hosted banquets at night, under the torches and oil lamps [May be the first Twilight Dinner?]. Formal dinners opened and closed with hand washing. Guests were usually anointed with perfumed oil and incense burned there. Also guests at formal banquets observed strict hierarchy and sat at specified places according to profession, ethnicity, and status at the court. The gods' meals were a popular literary theme and Mesopotamians believed that gods' needs paralleled humans wants. The gods enjoyed four daily meals, large & small ones in the morning and large & small ones again in the afternoon and evening. After an appropriate interval, the priests removed the gods' meal and served the "leftovers?" to members of the royal household. Usually, the god's meal opened with beverages, porridges and bread. Beer, wine, and water were offered at all meals, milk was offered only in the morning. On an individual level, we grow up eating the food of our cultures. It becomes a part of who each of us are. Many of us associate food from our childhood with warm feelings and good memories and it ties us to our families, holding a special and personal value for us. So, Food is so much more than just a source of nourishment and subsistence. Its richness colours culture, history, and even literature. Its unite and brings people together into communities by creating a sense of familiarity and brotherhood. Some might go so far as to say that food is one of the major forces forging a national identity. It serves as a hobby, a passion, and a profession. Most of us know that bread was one of the first foods prepared by man, some 30,000 years ago. and have mentioned in Sumerian recipe too. These breads were served with some kind of spicy gravy as early as 1700 BC as per Sumerian tablets, which is similar to Indian curry. This aromatic food is a medley of colours, spices, and herbs. They can be vegetarian or fish, poultry or meat - based. But one used in Sumeria was generally meat based. In fact, from the excavations at Harappa and Mohenjo-Daro, belonging to the period between 2800 – 2000 BC, we found that “curry” one of the oldest food items in the world, was prepared in Indus Valley civilization, (or at least the predecessor to curry) more than 4,000 years ago. The name curry, originally came from kari, a word in Tamil that means sauce or gravy. Indus valley people, often used stone mortar and pestle to finely grind spices such as fennel, mustard, cumin and others. But As pointed out by historians, the curry was often eaten in Indus Valley civilization with rice, which was already being cultivated in the area nor with bread as in Sumeria. Even in Sri Lanka, we find from a book called 'Kandavuru da sirita' [කඳවුරු සිරිත / Camping customs], which gives the diary of Parakrama bahu II (1236-1270), in which he lists his midday meal. It consisted of rice and a number of curries. Also, Knox (1659-1679) said rice and curry was the traditional food in an Udarata village. Now let's look at the "Food habits of Ancient Indus valley people or Harappans" Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 16 WILL FOLLOW
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 07 பண்டைய தமிழரின் வாழ்வையும் செழிப்பையும் ஓரளவு அறிய, சங்க காலத்து தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய பட்டினப் பாலையில் எப்படி தமிழர் அன்று, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர் என்பதை, காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வச் செழிப்பை விபரிக்கும் அடிகள் 20-27 மூலம் நாம் இலகுவாக ஊகிக்கலாம். "அகல் நகர் வியன் முற்றத்துச் சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக்காற் சிறு தேர் முன் வழி விலக்கும் விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)" ஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணி கலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின், பரந்த முற்றத்தில், உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட, வளைந்த அடிப் பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர். அக்குழை, பொன்னாலான அணிகலன்களைக் கால்களிலே அணிந்துள்ள சிறுவர், குதிரையின்றி கையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறுதேரினை முன் செல்ல விடாமல் தடுக்கும். இவ்வாறு தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்க முறுவதற்குக் காரணமான பகையை அறியாத காவிரிப்பூம் பட்டினம். இக் காவிரிப்பூம் பட்டினம் செல்வம் நிறைந்த, பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற, செழிப்பான கடற் கரையை ஒட்டிய ஊர் (பாக்கம்) என்கிறது. தற் கால சரித்திரத்தை பொறுத்த வரையில் அப்படி செழிப்புற்ற ஒரு நாகரிகம், கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில், தென் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை. என்றாலும், மனிதரால் செய்யப்பட்ட [குதிரைலாட வடிவத்திலான] U வடிவ கட்டுமான கண்டுபிடிப்பு, இன்னும் கண்டு பிடிக்கப்படாத, கடலில் மிக ஆழத்தில் புதையுண்ட ஒரு நாகரிகத்தின் அடையாளம் என ஓரளவு கருத அல்லது ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ், மாசி மாதம் 2002 இல், இது எதோ ஒரு தனித்த கட்டிடம் என நம்பவில்லை என்றும், கூடுதலான ஆராச்சிகள், அதை சுற்றி உள்ள உண்மைகளை புலப்படுத்தும் என்றும் கூறுகிறார். சார்லஸ் டார்வின் பரிணாம கொள்கையில் கவரப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேடெர் [Philip Sclator] என்னும் ஆராய்ச்சியாளர், மடகாஸ்கர் தீவில் [Madagascar Islands] ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்படி ஆராச்சியில் இருக்கும் போது, அங்கு வாழ்கிற இனங்களுக்கும் இந்தியாவில் வாழ்கிற இனங்களுக்கும் ஒரு ஒத்த தன்மை உடையதை கண்டார். அவரின் ஆராச்சி விலங்குகளின் புதைவடிவம் [fossils / தொல் எச்சம்] ஆகும். அவைகள் பக்கத்தில் இருக்கும் ஆஃப்பிரிக்காவுடன் ஒத்து போகாமல், தூர இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போவதை கண்டார். ஆகவே ஒரு மிக பெரிய நிலப்பரப்பு ஆஃப்பிரிக்கா - ஆசிய கண்டங்களின் பாலமாக, இருந்திருக்க வேண்டும் என முடிவு எடுத்தார். இதன் அடிப்படையில் இலெமூரியா [Lemuria] என்ற ஒரு கண்டத்தை முன் மொழிந்தார். உதாரணமாக ஒரு வகை முதுகில் கொண்டையுள்ள எருதை [Zebutype cattle] குறிக்கலாம். அப்படியே இன்று வாழும் இலெமூர் [Lemur / லெமூர் என்பது ஒரு விலங்கினம். பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும்] எனப்படும் புதுவின விலங்கினமும் ஆகும். இவ் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டி என் எ ஆராச்சி [DNA research] இந்த முதுகில் கொண்டையுள்ள எருது 5000 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்தது என்கிறது. டி.என்.ஏ என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற் பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை 'இனக்கீற்று அமிலம்' எனத் தமிழில் கூறலாம். பண்டைய காலத்தில், ஒரு நிலப்பரப்பு அழிவிற்கு உட்பட்டதாக, கிட்டத் தட்ட 2000-2700 வருடங்கள் பழமை வாய்ந்த, சங்க இலக்கியமும், மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் கூறிய, குமரி கண்டமே இதுவாகும் என பலர் நம்பினர். இவ்வாறு தான் குமரி கண்டக் கோட்பாடு உருவாகி, பின் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் வளர்ச்சி அடைந்தது எனலாம், குமரி கண்டம் தான் 'மனித நாகரிகத்தின் தொட்டில்' [மனித நாகரிகத்தின் தொடக்கம்] என பாவாணர் உரிமை கோரினார். மேலும் மிகவும் நிலை நாட்டப் பட்ட சுமேரியனைப் பற்றிய சரித்திர உண்மை என்ன வென்றால் அவர்கள் அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் [சுதேசி] அல்ல, அவர்கள் கிழக்கில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதே ஆகும் ["Ancient Sumeria "Primary Author: Robert A. Guisepi / Portions of this work Contributed By: F. Roy Willis of the University of California 1980 and 2003]. இது சுமேரிய நூலிலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த கிழக்கு, ஒரு வேளை ஹரப்பா அல்லது வெள்ளத்தால் மூழ்கிய குமரி நாடாக இருக்கலாம்? கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh] ஒரு பெரும் வெள்ளத்தைப் பற்றிய குறிப்பு உண்டு. அது கூறுவது "கடவுள் வெள்ளத்தை கொண்டு வந்த்தார். அது பூமியை [மண்ணை] விழுங்கியது" [Epic of Gilgamesh - Sumerian Flood Story 2750 - 2500 BC] என்பதாகும். மேலும் சுமேரிய மொழி என்பது தொன்மையான தமிழ், அது துருக்கிய மொழியின் வழித்தோன்றல் அல்ல என டாக்டர் கே.லோகநாதன், 2004 பல உதாரணங்களுடன் விளக்குகிறார். இவர் [முனைவர் கி. லோகநாதன் (11 ஆகத்து 1940 - 17 ஏப்ரல் 2015)] மலேசியத் தமிழறிஞர். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். நான் மேலும் "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" பற்றி அலசமுன்பு, எப்படி வரலாற்றை - தமது குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை அல்லது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாற்றுகிறார்கள் என்பதை ஒரு உதாரணம் மூலம் உங்கள் கவனத்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால், எப்பவும் வரலாற்றை வாசிக்க முன் எழுதியவர் யார்? எழுதிய சூழல் என்ன? என்பதை அறிந்து நம்பகத்தன்மை சரிபார்த்து வாசிப்பதே நல்லது என்பதால்! இலங்கையினது வரலாற்றை குறிக்கும் மூன்று நூல்களை இதற்கு உதாரணமாக எடுக்கிறேன். முதல் இரண்டும் பாளி மொழியிலும் [அன்று சிங்கள மொழி என்று ஒன்றும் தோன்றாத நிலையில், ஆனால் புத்தமதம் இலங்கையில் பரவிய நிலையில், இரு வேறு சமூகங்களாக சைவ மதம் பின்பற்றுபவரும் மற்றும் புத்த சமயத்துக்கு மாறியபவரும் இருந்தனர். அங்கு சைவ சமயம் பின்பற்றுபவர்கள் முழுக்க முழுக்க தமிழ் பேசுபவர்களாக இருந்தனர். மற்றவர்கள் தமிழ், பாளி, சமஸ்கிருதம் ... என கலப்பு மொழி பேசுபவர்களாக இருந்தனர்.] - தீபவம்சம் [கி.பி. மூன்றாம் நான்காம் நூற்றாண்டு], மகாவம்சம் [கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு] - மற்றது இராசாவலிய [முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதினேழாம் அல்லது பதினெட்டாம் நூற்றாண்டு நூல்]. இவை மூன்றும் ஒரே வரலாற்றை வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. "உண்மையை அறிதல், உண்மையை நேசித்தல், உண்மையுடன் வாழ்தல், மனிதனின் முழு கடமையாகும்" சோழ நாடு, சோழ அரசன் அல்லது சோழ இளவரசன் பற்றி ஒன்றுமே 'தீபவம்சம்' கூறவில்லை. உதாரணமாக சேனன் மற்றும் குத்திகனை வெளியில் இருந்து அல்லது சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று கூறவில்லை. இதற்கு மாறாக ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு பின் எழுதிய 'மகாவம்சம்' அவ்விருவரையும் குதிரை விற்கும் வியாபாரிகள் என்றும், அதே நேரம் தீபவம்சம் போல் அவ்விருவரும் நீதி தவறாமல் ஆட்சி செய்தனர் என்றும் கூறுகிறது. தீபவம்சத்தில் இருந்த இரு இளவரசர்கள் இப்ப குதிரை வியாபாரிகளின் மகன்கள் ஆகிவிட்டார்கள் ?. அத்துடன் நிற்கவில்லை, இரு குதிரை வியாபாரிகள் பெரும் படையுடன் வந்து, ஒரு நிலையான பெரும் அரசை கைப்பற்றினார்கள் என்கிறது. இது வெளிப்படையான பரிகாசம் போல் தெரியவில்லையா ? அதேமாதிரி, தீபவம்சம் ஒப்பிடமுடியாத மன்னர் எல்லாளன் 44 ஆண்டுகள் நேர்மையாக நீதியாக பாகுபாடு இன்றி ஆட்சி செய்தான் என்கிறது. அதேவேளை எல்லாளன் தமிழன் என்றோ, சோழ நாட்டவன் என்றோ தீபவம்சம் கூறவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாம தேரரின் கருத்தின் படி எல்லாளன் ஒரு சோழ இளவரசன் அல்ல. ஆக ஒரு சோழ உன்னத வம்சாவளி மட்டுமே [noble descent came from Cola-country]! அதேவேளை தீபவம்சம் எல்லாளனை துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி கொன்றதாக கூறவில்லை, ஆனால் துட்டைகைமுனு முப்பத்திரண்டு அரசர்களை கொன்று அரசை மீட்டு இருபத்திநாலு ஆண்டுகள் ஆண்டான் என்று மட்டும் கூறுகிறது. ஆகவே அதிகமாக எல்லாளன், மூப்பின் காரணமாக இயற்கையாக இறந்தபின், அவனின் அரசை முப்பத்தி இரண்டு சிற்றரசர்கள் பங்கு போட்டு இருக்கலாம். அதனால் ஏற்பட்ட பலவீனத்தால் அவர்களை கொன்று துட்டைகைமுனு ஒருவேளை அரசை முழுமையாக கைப்பற்றி இருக்கலாம்?. கட்டாயம் துட்டைகைமுனு கொன்று இருந்தால்?, தீபவம்சம் சொல்லி இருக்கும். ஏன் என்றால் எல்லாளன் மற்றும் துட்டைகைமுனு இரு முக்கிய கதா பாத்திரமாகும். இதனால் தான் மகாவம்சம் இந்த எல்லாளன் - துட்டைகைமுனு சிறுகதையை அளவுக்கு மீறிய அளவில் பல வளைவு நெளிவுகளுடன் பல திருப்பங்களுடன், உண்மைக்கு புறம்பாக வடிவமைத்து இருக்கிறது எனலாம். என்றாலும் இந்த இரு காவியங்களும் எல்லாளன் நீதியாக ஆண்டான் என்கிறது. ஆனால், இராசாவலிய எல்லாளன் கொடுங்கோலாக ஆண்டான் என்று மேலும் ஒரு படி பொய்யிலும் துவேசத்திலும் ஏறி சொல்கிறது. அதாவது , காலப்போக்கில் நல்லவனை கெட்டவனாக்குவதும், தாய் நாட்டவனை வேற்று நாட்டவனாக்குவதையும் இங்கு காண்கிறோம். வட்டகாமணி [வட்டகாமிணி / Vattagamani] காலத்தில், ஐந்து தமிழ் அரசர்கள் பதிநான்கு ஆண்டுகள் ஏழு மாதம் ஆண்டதாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றோ அல்லது சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றோ அல்லது நீதி அல்லது நீதியற்ற ஆட்சி என்றோ கூறவில்லை. இந்த ஐந்து ஆட்சியும் தமிழ் பழங்குடியை [Damila tribe] சேர்ந்தது என்கிறது. அவ்வளவுதான்! ஆகவே தமிழ் பழங்குடி என்பது இலங்கையில் வாழ்ந்த தமிழ் குடியையே குறித்து இருக்கும் [The Damila tribe could mean the Tamils who were resident of Ceylon.] மகாவம்சம் அதே நிகழ்வை ஏழு தமிழர்கள் தம் படைகளுடன் தலைமன்னாருக்கு அருகில் அன்று இருந்த மாதோட்டம் [மாதொட்ட அல்லது மகாதித்த / Mahatittha] என்ற துறை முகத்தில் இறங்கியதாக கூறுகிறது. இந்த வட்டகாமணி, இராசாவலியவில் வலகம்பாகுவாக [Valagambahu] மாறியதுடன், ஏழு தமிழர்களும் சோழநாட்டில் இருந்து ஏழாயிரம் வீரர்களுடன் வந்ததாக மேலும் விரிவு படுத்துகிறது. இவை எப்படி வரலாறு திரிக்கப்படுகிறது என்பதற்கு நான் உங்களுக்கு எடுத்துக் காட்டிய மிக சிறு உதாரணங்களே ஆகும். சோழ ஆட்சியை பற்றி பார்ப்போமாயின், மூன்றாவது நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை பாண்டிய, பல்லவ மற்றும் களப்பிரர் முதன்மை வகுத்து, சோழர் ஆட்சி செயல் இழந்து, அதிகமாக பொதுக் காலம் தொடக்கத்தில் இருந்து தொள்ளாயிரம் [ஒன்பது நூறு] ஆண்டுகள் இருந்தது என்பது வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல, அசோகா கல்வெட்டு பாண்டிய சோழரை பற்றி கூறினாலும், சோழரை பற்றிய வரலாற்று குறிப்புக்கள் பொதுக் காலம் தொடக்கத்திற்கு முன்பு இல்லை. ஆகவே விஜயன் இலங்கைக்கு வந்ததில் இருந்து நான்காம் கசபன் (Kassapa IV of Anuradhapura / 896 to 913 A. D.) வரை உள்ள கால பகுதியில் எந்தவொரு சோழ நாட்டு படையெடுப்பும் முழு புரளியே ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி :08 தொடரும்
-
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்
எல்லோருக்கும் நன்றிகள்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"வறுமையிலும் நேர்மை...!"
நன்றி எல்லோருக்கும்
-
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை]
நன்றி எல்லோருக்கும்
-
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை! அதே நேரம் எனது கட்டுரை, கதை , கவிதைகளுக்கு, -- அதைச் சரியாக படித்து விளங்காமல், அல்லது அதற்கான தனது கருத்தை அறிவுபூர்வமாக பதியாமல், எதோ தானோ என்று ஏதேதோ அலட்டுவதை நானும் எதிர்கொண்டுள்ளேன். கேட்கப்பட்ட கேள்விக்கு அல்லது கொடுக்கப்பட்ட பதிலுக்கு விடையை அல்லது தங்கள் கருத்துக்களை பதியாமல், தேவையற்ற, பொருத்தமற்ற வாதங்களை பதிவதை அண்மையில் கூட அனுபவித்தேன். அதனால் தான் என் மனதில் தோன்றுவதை இங்கு பதிவிடுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன். முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதைச் சொல்லலாம். திருக்குறளில், அதிகாரம்: கல்வி குறள் எண்:m391 இல் "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்று தான், வள்ளுவர் கூறியிருக்கிறார். எனவே எவருக்கும் எதைக் கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மை தான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளு வரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப் பாலை 169-171, "பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவ சமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம். பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth, he that reapeth]. எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish]. ஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே . அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும். "வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
-
"வறுமையிலும் நேர்மை...!"
"வறுமையிலும் நேர்மை...!" இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில், வறுமை வீதம் 2021 ஆண்டில் இருந்த 13.1% இல் இருந்து 2022 ஆண்டு, 25.6% அடையும் என்று உலக வங்கி கூறியது. இப்படியான ஒரு சூழலில் தான் நானும் மனைவியும், விடுதலையின் பின் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்கு சொகுசு பேரூந்தில் போய்க் கொண்டு இருந்தோம். எமது பேரூந்து வவுனியாவில் சிறு ஓய்விற்காக தரித்து நிற்கும் பொழுது, ஒரு சின்ன பெண், ஒரு கூடையில் மாம்பழத்துடன் ஏறி, அதை விற்கத் தொடங்கினார். அவள் எம் அருகில் வரும் பொழுது இன்னும் அறைக்கூடைக்கு மேல் மாம்பழம் இருந்தது, அதை எடுத்து மணந்து பார்த்த என் மனைவி, அது நல்ல பழம் என்றும், விலையும் மலிவாக இருக்குது என்று என் காதில் மெல்ல சொன்னார். என்னிடம் சில்லரைத் தாள்கள் அப்பொழுது இருக்கவில்லை. என்றாலும் மனைவியின் ஆசையை நிராகரிக்கவும் விருப்பம் இல்லை. அங்கு பேரூந்தில் இருப்பவர்கள் சிலரிடம் நான் சில்லறை பெறலாமா என்று விசாரிக்கும் தருவாயில், மனைவி அந்த சின்ன பெண்ணுடன் அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். அவள் தான் தினம் தன் தங்கையுடன் சேர்ந்து இருவரும் இரு கூடையில் பழங்கள் பேரூந்து நிற்கும் தருவாயில் விற்பதாகவும், தம் பெறோர்கள், கடந்த கால போர் சூழலில் காயப்பட்டு இறந்து விட்டார்கள் என்றும், இப்பொழுது, தாயின் தங்கையுடன் வாழ்வதாகவும், இந்த பழங்கள் விற்பனையால் வரும் கூலியில் தான் தாங்கள் மூவர் வாழ்வதாகவும், தன் சித்தியும் ஒரு கால் இழந்ததால், தம் குடிசை வீட்டில் இருந்து பராமரிப்பதாகவும் கூறினாள். அவளின் கதை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் இன்று பொதுவாக இருந்தாலும், அவள் வளைந்து நெளிந்து சொல்லும் அந்த விதம் உண்மையில் எவரையும் உருகவைக்கும். இது மாரி காலம். மழைத்தூறல் வெளியே கேட்டுக் கொண்டு இருந்தது. என்னால் பேருந்துக்குள் தேவையான சில்லறை பெறமுடியவில்லை. அந்த சின்ன பெண்ணின் முகத்தை பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. எனவே கூடையில் உள்ள முழு பழமும் எவ்வளவு என்று கேட்டேன். அது ஆயிரம் ரூபாய் என்றாள். என்னிடம் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. நீங்க இந்த கூடையுடன் பழங்களை வைத்திருங்கள் , நான் கீழே இருக்கும் கடைகளில் ஒன்றில் மாற்றிக் கொண்டு சீக்கிரம் வருவேன் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினாலும், மனைவி காசை கொடுங்க ' அவள் ஏழைதான், ஆனால் அவளிடமே நேர்மை இருக்கும்' என்று தான் ஆரம்ப பாடசாலையில் படித்த 'தேவதை ஏழைச் சிறுவனுக்கு அவனின் நேர்மையை மெச்சி வெகுமதி அளித்ததை ஆதாரமாக என்னிடம் சொல்லி, கொடுக்க தூண்டினாள். எனக்கு அவளின் ஆதாரம் சிரிப்புத்தான் வந்தது, என்றாலும் அவளின் அப்பாவித்தனத்தை சீண்ட விருப்பம் இல்லை. எனவே ஐயாயிரம் ரூபாய் தாள் ஒன்றை மனவியினூடாகவே அந்த சின்ன பெண்ணிடம் கொடுத்தேன். என்றாலும் என் மனம் அலைமோதிக் கொண்டு இருந்தது, நாம் அடிக்கடி ஒருநாளும் 'அவர் பணக்காரர், ஆனால் அவர் நேர்மையானவர்' என்று சொல்லுவதில்லை. ஆதரவற்ற மக்கள், பணத்தின் தேவையால் ஒழுக்கமற்ற முறையில் நடக்கலாம் என்று உளவியல் நம்பிக்கை எமக்கு சொன்னாலும், உண்மையில் ஏழை மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு மிக குறைவு, ஆனால் பணக்கார மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சுதந்திரத்தாலும் சமூகத்தில் இருந்து அதிக தனிமையிலும் இருப்பதாலும் ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடுபட வாய்ப்புக்கள் அதிகம் என்ற என் எண்ணம் என்னை ஆறுதல் படுத்தியது. ஒரு ஐந்து ஆறு நிமிடத்தில் பேரூந்து வெளிக்கிட ஆயுத்தமானது. இன்னும் அந்த சின்ன பெண் மிச்ச காசுடன் திரும்பி வரவில்லை, அவளின் கூடை இன்னும் என் மடியிலேயே, பேரூந்தில் இருந்த சிலர் , ஓட்டினரிடம் பகிடியாக , அங்கே ஒரு அன்பான மனிதர், மடியில் கூடையுடன் காத்திருக்கிறார் என நினைவூட்டினர். ஓட்டினரும் சிரித்த படி மேலும் இரண்டு மூன்று நிமிடம் இருந்துவிட்டு புறப்பட ஆயத்தமானார், மழை பெய்வதால் கீழே போய் பார்க்கவும் முடியவில்லை. நான் மனைவியின் முகத்தை பார்த்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை . என் தோளில் சாய்ந்துவிட்டார். எல்லோரும் இனி இந்த காசு கிடையாது என்று தாக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், தாம் எதோ ஏமாறாதவர்கள் என்றும் பேசிக் கொண்டும் இருந்தார்கள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது காசு போனது அல்ல, அவர்களின் பேச்சுத்தான்!. நானும் கொஞ்ச நேரத்தால் அயர்ந்து தூங்கிவிட்டேன். மனைவி, அன்பே, கொழும்பு வந்துவிட்டது என்று தட்டி எழுப்பத் தான், கண் முழித்துப் பார்த்தேன். அடுத்தநாள் மாலை , நான் பயணம் செய்த பேரூந்து நிறுவனத்தில் இருந்து ஒரு தொலைப்பேசி எனக்கு வந்தது. நாம் பற்றுச்சீட்டு பதியும் பொழுது, பெயர் , தொடர்பு இலக்கம் கொடுப்பது வழமை. நான் என்ன எதோ என்று கொஞ்சம் பதறி, பதில் அளிக்க சென்ற பொழுது, அவர்கள் உங்கள் மிச்ச காசு, அந்த பெண் காவல் நிலையத்தில், பேரூந்து தரித்த நேரம், போகும் இடம் கூறி, தன் கதையையும் கூறி கொடுத்து உள்ளார். உங்கள் வங்கி இலக்கத்தை, காவல் நிலையத்துக்கு அறிவித்து அதை பெறலாம் என்றனர். அதற்கிடையில், இதைக்கேட்டுக்கொண்டு இருந்த என் மனைவி ஓடி வந்து, என் அபிப்பிராயம் என்றும் பிழைத்ததில்லை என்று நெஞ்சு நிமிர்ந்து பெருமையுடன் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அவளின் சந்தோசம் எனக்கு மகிழ்வு கொடுத்தாலும், அந்த சின்ன பெண்ணுக்கு என்ன நடந்தது என்று அறியவே ஆவல் கூட இருந்தது. எனவே அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பு ஏற்படுத்தினேன். அப்ப தான் அவளின் மிகுதி கதை தெரியவந்தது. அவள் முதலில் அங்கே இருந்த ஒரு பெரிய கடைக்கு போனார், ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்ததால், பின் பக்கத்தில் இருந்து விடுதி ஒன்றுக்கு போக முயன்றார், ஆனால் அங்கு காவலுக்கு நின்ற உத்தியோகத்தர் அவளின் உடையையும் கோலத்தையும் பார்த்து உள்ளே விடவில்லை, மழையும் ஒரு பக்கம். அதன் பின் , ஒரு வயோதிப மனிதன் கொஞ்சம் தள்ளி பாண் மற்றும் தின்பண்டங்கள் விற்பது அவளுக்கு ஞாபகம் வர, அங்கு, மழையில் நனைந்துகொண்டு போய், காசை மாற்றி , திரும்பி ஓடி வந்துள்ளார், ஆனால் அதற்குள் பேரூந்து போய்விட்டது. அங்கு மற்ற பேருந்துகளில் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்த தங்கையிடம் இதை சொல்லி உள்ளார். தங்கை சின்ன பிள்ளைதானே, ஏன் அக்கா, அவர் தான் போய்விட்டாரே, நாம் இதை எடுத்து, ஒரு சில நாளாவது, கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடலாமே என்று தன் விருப்பத்தை கூறி உள்ளார். ஆனால், இந்த சின்ன பெண் அவளை வீட்டுக்கு போகும் படி கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில், தன் கதையையும் மற்றும் விபரங்களைக் கூறி மிச்ச காசை கொடுத்து, இதை அந்த ஐயாவிடம் கொடுக்கும் படி அழுது கொண்டு கொடுத்துள்ளார் என்று அறிந்தேன் . "பணம் தான் ஏழையின் பிரச்சனையென்றால், அவனது நேர்மையின் மீதும் கலங்கம் கற்பித்து ஏழையின் நிம்மதியைக் கெடுக்கும் கூட்டம் என்று தான் அழியுமோ பராபரமே!." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை]
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] "தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே! மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் பேசும் மொழியைக் கலக்காமல் கதைப்போம்! கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!" "நிலைத்த புகழை அது பரப்பட்டும் பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே! சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் முழுமையான முறைப் படி வளரட்டும்! வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை.??? நன்றி உங்க வேலையை , நோக்கத்தை, அழகாக சுருக்கமாக வெளிப்படையாக தெரியப்படுத்தியத்துக்கு. நான், எனக்கு உண்மையில் யார் யார் என்ன வேலை, நோக்கம் கொண்டு உள்ளார்கள் என்பதில் அக்கறை என்றும் இல்லை நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். சரி பிழை , அதை வாசிப்பவர்கள் சரியாக சுட்டிக்காட்டும் இடத்து ஏற்றுக்கொள்கிறேன் , அல்லாவிட்டால் அவர்களின் பதிலுக்கு மட்டும் விளக்கமாக வரலாற்றில் இருந்தும் மற்றும் தொல்பொருள் / இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன் அவ்வளவுதான் , நான் என்றும் ஒரு அறிவில் சிறியவனே, ஆனால் அறிந்து கொள்ளும் / கற்றுக் கொள்ளும் ஆவல் உள்ளவன் இரண்டாவது நான் எழுதிய கேள்விகள் / பதில்கள் "பெருமாள்" என்ற ஒருவர் என் கட்டுரைக்கு எழுதிய ------ ..... அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? .................................................................................... முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . .............................................. கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம் ............................................................. என்பதற்கானதே , மற்றும் படி வேறு எவருக்கும் அல்ல. என்றாலும் யாராகினும் அதற்கு நான் எழுதிய 'கேள்விகளுக்கு / பதிலுக்கு' மட்டும், தேவையற்ற, பொருத்தமற்ற அலட்டலை தவிர்த்து, பதில் தந்தால் கட்டாயம் வாசிப்பேன் மீண்டும் நன்றி, அன்பு island க்கு
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா]
நன்றி எல்லோருக்கும்
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
நன்றி எல்லோருக்கும்
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 16 முன்னைய, பண்டைய நாட்களில், வீட்டின், சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக இருந்தன. ஆகவே எறும்புகள் இலகுவாக சாப்பாட்டு இலைக்கு ஊர்ந்து வரக்கூடியதாக இருந்தன. எனவே அவையை தடுக்கும் பொருட்டு அன்றைய நாட்களில் இலையை சுற்றி, சாப்பிட தொடங்கும் முன்பு நீர் தூவப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, கண்ணகி கணவனுக்கு, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை, "தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக் கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின், கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல், தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு, ‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;" என்று குறிக்கிறது. அதாவது, தாழை மரத்தின் வெண்ணிற மடல்களைக் கிழித்துக் கைத்திறன் மிக்க பெண் செய்து தந்த தடுக்கு இருக்கையில் கோவலன் அமர்ந்தான். கண்ணகி சுட்ட மண்ணால் செய்த மண்கலம் ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்து மணக்கும் மலர் போன்ற தன் கைகளால் காதலன் அடிகளைக் கழுவினாள். பின் நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால், நிலத்தை தடவினாள் . வாழைக் கன்றில் அறுத்து வந்த வாழை இலைக் குருத்தை விரித்து உணவு பரிமாறி "அடிகள்! அமுதம் உண்க" என்றாள் என்கிறது. இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled ...", அதாவது உயிர் உள்ள வாலில்லா மீன் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாழை இலையில் படைத்து, மாணிக்கம் போல் பிரகாசிக்கும் நீரை தெளித்து, என்று பாடுகிறது. ஆனால் இந்த பழக்கம் பொதுவாக சாப்பாட்டை மேசையில் வைத்து நாம் கதிரையில் இருந்து சாப்பிட தொடங்கியதும் பொருத்தம் அற்ற ஒன்றாக இருந்தாலும், சிலர், இன்னும் அதன் உண்மைப் பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல், அந்த பாரம்பரியத்தை கண் மூடித்த தனமாக இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது. தமிழரின் மிகவும் பெருமைக்கு உரிய மதம் சாரா பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுடன் மிகவும் நெருக்கிய தொடர்புடைய ஒரு பாரம்பரிய வீரம் செறிந்த, இன்றும் தொடரும் விளையாட்டு ஏறு தழுவலாகும். அவர்கள் வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், மல்லர் விளையாட்டு போன்ற வேறு பல வீர விளையாட்டுகளையும் பாரம்பரியமாக அன்று கொண்டிருந்தனர். இந்த தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மிகவும் தொன்மையானது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கல்முத்திரையில் ஜல்லிக்கட்டிற்க்கான ஆதாரம் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். சிந்துவெளி நாகரிகம், பண்டைய தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல,கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் திருவிழா சங்க தமிழகத்திலும் தனித்தன்மையுடன் விளங்கியது. இதை தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கலித்தொகை-103:63-64 என்ற அடிகள், "கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என, காளையின் கொம்பு கண்டு பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் அடுத்த பிறவியிலும் கூட தழுவ மாட்டாள் என்று கூறுகிறது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. உதாரணமாக, காளையின் கொண்டை(இமில்) முறியும்படி தழுவி, அதன் மேல் ஏறி, முடிவில் தனது இருகைகளாலும் இரு கொம்புகளையும் இறுக பிடித்தவாறு, அவன் தன் முகம் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் முன்னோக்கி பார்த்தவாறு அதன் மேனி தம் மார்பில் பொருந்தும்படி தழுவினான் என்றும், இது அவன் அவளின் இரு மார்பகங்களையும் மென்மையாக தழுவது போல் இருந்தது என்றும் பல சங்க கால பாடல்களில் மீண்டும் மீண்டும் வர்ணிக்கப் படுவது இதை உறுதி படுத்துகிறது. இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு இதுவாகும். இந்த மற்போர் அல்லது எதிரெதிராக மனிதர் விலங்கு போராட்டம் உண்மையில், ஒரு காளை மாட்டை வேட்டையாடுவது அல்ல, இது ஒரு ஏறு தழுவுதல் ஆகும். இங்கு காளை மாட்டுக்கு எந்த தீங்கும் வரவிடுவதும் இல்லை, அந்த மாடுகளைத் துன்புறுத்துவது இல்லை. இன்றைய பெயரான ஜல்லிக்கட்டு, உண்மையில் பழமையானதும் அல்ல, மூலப் பெயரும் அல்ல, பண்டைய தமிழ் ஆயர் சமுதாயத்தில் திறமையுள்ள, தகுதியுள்ள ஒரு மணமகனை தேர்ந்து எடுக்கும் பலப் பரிட்சையாகவும் இது அன்று இருந்தது. ஆயர் குலப்பெண்கள் தம்மை பின் தொடரும் ஆடவருக்கு தம்மை மணக்க வேண்டின் தமது காளையை பிடித்து அடக்கும்மாறு சவால் விடுவர். அப்படி அதை பிடித்து ஏறு தழுவிய ஆடவனை அவள் இன்முகத்துடன் விரும்பி மணப்பாள். இந்த ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம். இந்த வீர விளையாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம். எனினும் அதன் வடிவமும் நோக்கமும் இன்று மாறியுள்ளன. இது இப்ப மணம் சம்பந்தப்பட்டது அல்ல, பணம் சம்பந்தப்பட்டது ஆகும். அது பிந்திய பெயரான சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே தெரிகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 17 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 29 தமிழ் காப்பியம் குண்டலகேசி, மணிமேகலை [Kundalakesi and Manimekalai] புத்த சமயம் சார்ந்த இலக்கியமாகும். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் 1ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் செல்வாக்கு பெற்றிருந்த புத்த மதம், அதன் பின் சைவ நாயனார்களின் வருகையால், முழுமையாக செல்வாக்கு இழந்து விட்டது. எனவே பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல. இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம் ஆகும். மேலும் அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று என்பதையும் தமிழ் காப்பியங்கள் ஊடாகவும் பார்த்தோம். அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள். இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடர்ச்சியாக கட்டாயம் எடுத்து கொள்ள முடியாது. லயனல் சரத்தின் "புராதான இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்" [Ancient Ceylon Sinhala Tamil Coordination - Sri Lanka Paperback – 1 Jan. 2006 by [Translated by S.P.D. Buddhadasa] Lionel Sarath (Author)] என்ற புத்தகம், தமிழ் மக்கள் சக நாட்டினர் என்ற உணர்வுடன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தக்க ஆதாரங்களுடனும் மற்றும் பாரம்பரியமாக தமிழ் விரோதத்திற்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங்களையே இந்த உண்மையினை வெளிப்படுத்துவதற்கு தடயங்களாக அவர் பாவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இது 1996 எழுதப் பட்டது. இவர் மேற்கொண்ட முயற்சியைப் போல வேறு சில சிங்கள அறிஞர்களும், உதாரணமாக பேராசிரியர்கள் சிறிவீர, லியன கமகே, லெஸ்லி குணவர்த்தன, சுதர்சன் செனவிரத்ன, குமாரி ஜயவர்த்தன போன்றோர்களும் ஆற்றியுள்ளனர். கிருஸ்துக்கு முன்னரே இரு தமிழ் மன்னர்கள் சேனன் - குத்திகன் இருபத்து இரண்டு ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளார்கள். எவ்வாறு அதற்கு முன்பு நெடுங்காலமாக, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக, இருந்த அரச குடும்பத்தை இவர்கள் இலகுவாக துரத்தி விட்டது உண்மையில் வியப்பிற்குரியதே. அதற்கு அவர் [லயனல் சரத்] கொடுக்கும் காரணம், அக்காலத்தில் அநுராதபுரத்தில் தமிழ் மக்கள் வசித்து இருக்கலாம், ஏன் என்றால் வடஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆரியர் வருவதை விடவும் தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள் வருவது எளிதாய் இருந்து இருக்கும் என்பதால் என்கிறர். மற்றும் அக்காலத்தில் வசித்த தமிழ் மக்களும் பௌத்த மதத்தை தழுவி இருந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன என்கிறார். கி பி 9 - 21 இல் ஆட்சி புரிந்த மகாநாகனின், பட்டத்து ராணி தமிழ் இளவரசி என்றும், அவ்வாறே, சிலகாலங்களின் பின், மன்னராய் இருந்த இலநாகனின் மைந்தனாகிய சந்திரமுக சிவனின் ராணியும் தமிழ் இளவரசியே என்கிறார் [மகாநாகன் - பெரிய நாகன், இலநாகன் - இளநாகன் - இளமை பொருந்திய நாகன், / இதே பெயர் ஒத்த மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், சந்தமுகசிவ - சந்திரமுக சிவ - எல்லாமே தமிழுடன் தொடர்புடைய பெயர்களே]. மேலும் தமிழ் வியாபார தலைவர்களால் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட குகைகளில் மூன்று குறிப்புகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன என்றும், அதில் இரண்டாம் நூற்றாண்டிற்குரிய சிலாசனமொன்று அநுராதபுரத்தில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் இரண்டு சிலாசனங்களும் பெரிய புளியன்குளத்தில் கண்டு எடுக்கப்பட்டன என்றும் கூறுகிறார். பிரசித்தி பெற்ற வல்லிபுரம் சாசனத்திற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இதுவாகும். அதுமட்டும் அல்ல, மேல் கூறப்பட்ட தமிழ் தலைவர்கள் பௌத்தர்கள் என்கிறார். இக்காலத்தில் தென் இந்தியா தமிழ் இராச்சியங்களிலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது என்கிறார். இவ்வாறு பல உதாரணங்களை தமிழ் சிங்கள உறவுகளுக்கு எடுத்து காட்டுகிறார். ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். [“Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honour, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” - The Buddha ] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 30 தொடரும்
-
"மனதைத் திருடியவளே"
"மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
இந்த குற்ற சாட்டு யாருக்கு ? எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ? விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே மற்றது "கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம்" ............................................................................... அது என்ன புதுக்கதை ?? யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ??? பெருமாள் இன்னும் விடை தரவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன் திருப்பவும் எங்கோ போய்விட்டார் போலும்???
-
"வெளிச்சத்துக்கு வராதவள்"
"வெளிச்சத்துக்கு வராதவள்" பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானதும் இலங்கையின் வணிக தலைநகரமும், இலங்கையின் ஆகப்பெரிய நகரமுமான கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். அங்கே இந்தியப் பெருங்கடலின் சத்தமும், போக்குவரத்து நெரிசலும், தெருவோர வியாபாரிகளின் சலசலப்பும் கலந்த வெள்ளவத்தை என்ற இடத்தில், முல்லை என்ற இளம் தமிழ்ப் பெண் வாழ்ந்து வாழ்ந்தாள். பரபரப்பான அந்த நகரத்தைப் போலல்லாமல், முல்லை அமைதியாகவும், கிட்டத்தட்ட கூச்ச சுபாவமுள்ளவராகவும், வெளிச்சத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கொழும்பின் மையத்தில் வசித்தாலும், அவளுடைய வாழ்க்கை அமைதி, நெகிழ்ச்சி மற்றும் உறுதியுடன் இருந்தது. முல்லையின் எண்ணம் எல்லாம் அந்த 'மே' மாதம் 18 ம் திகதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமமும் தான்! குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை அங்கு இன்னும் இருந்த தமிழர்கள் போக்கிக் கொண்டனர். அவர்களில் அவளும் அவளின் குடும்பமும் இருந்தனர். அதை அவள் இன்னும் மறக்கவில்லை. போர் கூடாது என்பதே மானுடத்தின் பொது நீதி, என்றாலும் அது எல்லா நாட்டிலும் எல்லா வேளையிலும் அப்படி அமைவதில்லை. உள்நாட்டிலேயே பாரபட்சமான அரசின் அடக்குமுறைகள், சிறுபான்மையினரின் அல்லது எளியவர்களின் உயிரையும், உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காமல் காவு கொள்ளும் நிகழ்வுகள் பல அரங்கேறியுள்ளன. அதுமட்டும் அல்ல, அப்படியான அடக்குமுறைக்கு அல்லது உள்நாட்டு போருக்கு பின்பான வாழ்வும், இடம்பெயர்வும், அப்படியான ஒரு சூழலில் அத்தனை சுலபானதோ சுகமானதும் அல்ல, அதை அனுபவித்தவள் அவள்! அது தான் அவள் பெரிதாக எல்லோருடனும் பழகாமல், தன் வேலையும் தன் குடும்பமாக ஒதுங்கி இருந்துவிட்டாள். நல்ல வேளை, அவள் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட வவுனியா "மெனிக் பாம்" தடுப்பு முகாம்களில் ஒன்றில் அடைக்கப்பட்டு இருந்த நேரம், அதைக் கேள்விப்பட்டு, அங்கு வந்த தந்தை அங்கு முன்பு வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி, தனது கொழும்பு வீட்டில் ஒரு பகுதியில், அவர்கள் நால்வருக்கும் தங்க இடமும், அவரது கொழும்பு வியாபார நிலையத்தில் தாய், தந்தை இருவருக்கும் துப்பரவாக்கள் மற்றும் எடுபிடி வேலைகளும் கொடுத்ததால், அவளும் தங்கையும் கொழும்பில் தங்கள் படிப்பை தொடர்ந்தனர். அதனால், இருவரும் இப்ப அங்கு ஓரளவு நல்ல உத்தியோகமும் பெற்றனர். முல்லையின் குடும்பம், மற்ற பல தமிழ் குடும்பங்களைப் போலவே, சவால்களின் பங்கை எதிர்கொண்டது. பல தசாப்தங்களாக தனது நாட்டை அழித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அங்கிருந்து குடிபெயர்ந்த பின் பல கஷ்டங்களைக் அனுபவித்தாள். ஆனால் அவளுடைய குடும்பம் அவளுக்கு கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளைக் கற்றுக் கொடுத்தது. அவள் தன் தந்தையின் விடாமுயற்சியையும் தாயின் அரவணைப்பையும் அறிந்தவள், எனவே அவள் எங்கு சென்றாலும் இந்த பண்புகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றாள். முல்லை இலங்கை தேசிய நூலகத்தில் நூலகராக, தன் கடமையில் கண்ணும் கருத்துமாக தன் வேலையை உணர்ந்து செயல்பட்டார். ஒரு நூலகராக, பல்வேறு வகையான புதுப்பித்த, பொருத்தமான மற்றும் அவரவர்களை ஈர்க்கக்கூடிய புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அநேகவிதமான தகவல் / செய்தி சாதனங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதில் திறமைசாலியாகவும் இருந்தார். அத்துடன் இன்றைய அல்லது அண்மைய தகவல் / செய்திகளை தானும் அறிந்து வாசகர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் விரும்பி பங்குபற்றுவார். அதுமட்டும் அல்ல அங்கு வந்து படிப்பவர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் வாசகர்களை உற்சாகப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் அதில் ஆறுதலடையவும் என்றும் முன்னுக்கு நிற்பவராகவே இருந்தார். சுருக்கமாக நூலகம் அவளுடைய சரணாலயமாகவே இருந்தது. முல்லையிடம் என்றும் அமைதியான நடத்தை இருந்த போதிலும், அவளுக்கு கதை சொல்லும் எழுதும் ஆர்வமும் இருந்தது. அதனால் நூலகத்திற்கு வந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கதைகளைக் சொல்லும் பொழுது உன்னிப்பாக கேட்பாள். அதே நேரம் மற்றவர்களின் தேடுதல்களை, இலக்கியம், அறிவியல் அல்லது வரலாறு எதுவாக இருந்தாலும் கண்டறிய உதவுவதிலும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். இதனால், பல வழக்கமான வாடிக்கையாளர்கள் பலருடன் அவர் வலுவான உறவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் சொந்த பாதையில் செல்ல அவர்களுக்கு உதவுவதில் அவர் பெருமிதம் கொண்டார். ஒரு நாள், எழிலன் என்ற பதின்ம வயது இளைஞன் கண்களில் கனவோடு நூலகத்திற்கு வந்தான். அவன் ஒரு எழுத்தாளராக விரும்பினான், ஆனால் எங்கு தொடங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அதை அவனுடன் கதைக்கும் பொழுது அறிந்த முல்லை, அவனது கற்பனையைத் தூண்டும் மற்றும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தும் புத்தகங்களைச் தெரிந்தெடுத்து சுட்டிக்காட்டினாள். எழிலனுக்கு மட்டும் முல்லை இப்படி உதவி செய்யவில்லை. வழிகாட்டுதலைத் தேடும் பல இளைஞர்களுக்கு அவள் ஒரு வழிகாட்டியாக பலதடவை இருந்துள்ளாள். ஆனால், அவள் ஒருபோதும் தன் உதவிகளுக்கு, வழிகாட்டலுக்கு அங்கீகாரத்தை நாடவில்லை, மாறாக அவள் வெளிச்சத்துக்கு தன்னைக் காட்டாமல், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் என்பதை உணர்ந்து மகிழும் அமைதியான திருப்தியை மட்டுமே விரும்பினாள். அவர் வழிகாட்டிய பல இளைஞர்கள் வெற்றிகரமான மற்றும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களாக இன்று மாறியதால், முல்லையின் வழிகாட்டுதல் பலனைத் தந்தது அவளை பெருமைப்படுத்தியது. ஆனால் இந்த எழுத்தாளர்கள் பெற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டகளுக்கு ஒரு உந்தலாக முல்லை இருந்த போதிலும், அவள் வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதில் தனது விருப்பத்தில் உறுதியாக இருந்தாள். அதற்கு சில காரணங்களும் இல்லாமல் இல்லை. அவள் அனுபவித்த அந்த அவலமான, கொடூரமான பயம் நிறைந்த, கெடுபிடிகள் மலிந்த, பட்டினிகள் நிறைந்த 2007 தொடங்கி 2009 வாழ்வும் ஒரு காரணமாக இருக்கலாம்? ஏனென்றால் அதைப்பற்றி சாட்சிகளுடன் அவள் விரைவில் விரிவாக எழுத முயற்சித்துக் கொண்டு இருக்கும் "முள்ளிவாய்க்காலில் இருந்து முட்கம்பி வேலி தடுப்பு முகாம் வரை" என்ற வரலாற்று கதையுமாக இருக்கலாம்? அதேநேரம் இந்த முடிவு நூலகத்தில் தனது பங்கும் மற்றும் பிறருக்கு வெற்றிபெற உதவுவதில் அவள் கொண்டிருந்த மனநிறைவின் காரணமாகக் கூட இருக்கலாம்? ஏனென்றால் அவளின் பின்னணி ஒருவேளை அவளின் வாழ்க்கையை குழப்பி, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வலுக்கட்டாயமாக போகவேண்டிய நிர்பந்தமும் வரலாம்? அப்படி என்றால் அவளின் வரலாற்று கதை முழுமையடையாமல் போய்விடும் என்பதும் இன்னும் ஒரு காரணம். அதனால்த்தான், அவளுடைய பெருமையை விட மற்றவர்களின் பெருமைகளில் தன் மகிழ்வைக் கண்டாள். முல்லையின் பணிவும் தன்னலமற்ற தன்மையும் அவளது குணாதிசயத்திற்கு இன்றியமையாததாக இருந்தது, அவள் வழிகாட்டியவர்கள் செழித்தோங்குவதைக் கண்டு மிகுந்த திருப்தியைப் பெற்றாள். அவள் தனது வாழ்க்கையின் அமைதியை என்றும் மதிப்பவள். எனவேதான் பொது அங்கீகாரத்துடன் அடிக்கடி வரும் கவனத்தையும் இடையூறுகளையும் தவிர்க்க விரும்பினாள். முல்லையைப் பொறுத்தவரை, குறைந்த சுயவிவரத்தை பராமரிப்பது, புத்தகங்கள் மற்றும் அவள் விரும்பும் நபர்களால் சூழப்பட்ட ஒரு விரும்பிய வாழ்க்கையைத் தொடர அனுமதித்தது. மேலும், பாராட்டுகளையும் மற்றும் பாராட்டுகளை தேடாமல் கடினமாக உழைக்க வேண்டியதன் மதிப்பை அவளுடைய குடும்பம் அவளுக்குக் கற்றுக் கொடுத்தது. இந்த தத்துவம் அவளை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தியது, அவள் அதை அடித்தளமாக வைத்து, உண்மையிலேயே முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினாள். முல்லையின் சொந்தக் கனவு, அவள் இதயத்தில் இன்னும் இருந்தது. தமிழ் பாரம்பரியத்தின் அழகையும் நெகிழ்ச்சியையும், அது பட்ட அவலத்தையும் கொடூரத்தையும் ஆரம்பத்தில் இருந்தே படம்பிடித்து, ஆனால் குறிப்பாக முள்ளிவாய்க்கால், தடை முகாம் மற்றும் விசாரணைக்காக ஒப்படைத்தவர்கள் அடங்கலாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்பதே அது!. ஒரு நாள், ஒரு உள்ளூர் பதிப்பகத்தில் பணிபுரியும் அவரது தோழி சங்கீதா, முல்லையின் கதை சொல்லும் திறனையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அவளது அர்ப்பணிப்பையும் கவனித்தார். அது மட்டும் அல்ல, சங்கீதா, அவளது சொந்த வரலாற்றுக் கதையை விரைவில் முடித்து வெளியிடுவதற்கு முலையை ஊக்குவித்தார். “இவ்வளவு நேரம் மற்றவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாய் முல்லை, இனி உன் சொந்தத்தைச் கதை சொல்லும் நேரம் வந்துவிட்டது." என்றாள். அவள் ஆரம்பத்தில் சுய சந்தேகத்துடன் போராடினாலும், அவளுடைய தோழி சங்கீதா மற்றும் சில நூலக வாசகர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனைகளும் அவளை கெதியாக தனது வரலாற்றுக் கதையை, தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் சேர்த்து முதலில் ஒரு மேலோட்டமாக எழுத வைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு, எழுத்துப் பிழைகள் திருத்தி சரிபார்த்தபின், முல்லையின் கையெழுத்துப் பிரதியை சங்கீதாவின் பதிப்பகம் ஏற்றுக்கொண்டது. அந்தவேளையில் தான் இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு, சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் ஒருவனாக எழிலனும் தனது முதல் நாவலுக்காக விருது வழங்கி கெளரவப் படுத்தப்பட்டார். அவர் மேடையில் ஏறி விருதுபெறும் தருவாயில், ' என் மதிப்புமிக்க மேடையில் வீற்றிருக்கும் தலைவர்களே, அறிஞர்களே மற்றும் நண்பர்களே, பார்வையாளர்களே, உண்மையில் இந்த விருது, 'வெளிச்சத்துக்கு வராமல்', என்னை இந்த நிலைக்கு ஆளாக்க பின்னணியில் இருந்து ஊக்கமும், ஆலோசனையும் வேண்டிய இலக்கிய மற்றும் நாவலுக்கு தேவையான தரவுகளையும் அவ்வப்போது, தன் வேலை பளுவுக்கு இடையிலும் மனம் சற்றும் சோராமல் இன்முகத்துடன் துணைநின்ற கொழும்பு நூலகர் முல்லைக்கே சேரும். அவருக்கே அர்ப்பணிக்கிறேன்" என்று கைதட்டலுக்கு மத்தியில் ஆனந்தக் கண்ணீருடன், முல்லையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சொல்லிமுடித்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024]
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024] "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண்டு களித்து அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?" "கண்மணியே எம் குடும்ப தலைவியே கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?" "கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே கண்காணாத உலகம் சென்றது நீதியோ?" "அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல் அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல் அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல் அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?" "ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம் ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நேரிய பாதையில்"
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்"
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்" ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு மாம்பழங்கள் வைத்திருந்தாள் ..... அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு மாம்பழங்கள் வைத்திருக்கிறாய், அதில் ஒன்றை உன் அம்மாவிற்கு, எனக்கு கொடுக்கலாமே என்றாள் ....... தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, ...... பின் உடனே ஒரு மாம்பழத்தை நறுக்கென்று கடித்து விட்டாள் ..... அதைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மாம்பழத்தையும் கடிக்கத் தொடங்கினாள் ..... தாயின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு உறைந்து போனது ..... கோபமும் ஏமாற்றமும் தலை தூக்கியது ..... என்றாலும், தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள் ...... உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள் ..... அம்மா இந்த மாம்பழம் தான் இனிப்பாக, சுவையாக இருக்கு ...... ஆகவே நீங்கள் அதையே எடுத்துக்க என்றாள் ....... நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும் இருக்கலாம் ..... எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம் ....... அறிவு சிறப்பாகவும் இருக்கலாம் ..... ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்றுத் தள்ளிப் போட்டு கணிக்கவும் ...... அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும் ...... நீங்கள் அவரைப் பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம் ....... எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள் ...... மனக்கணக்கு தவறலாம் .. மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது ..... கொஞ்சம் அவசரப் படாமல் சிந்தியுங்கள்! சுருக்கமாக, "அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள் ...... உங்கள் அவசர மனக்கணக்கு தவறலாம் .. அதனால் நல்ல நண்பரை இழக்கலாம்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்) பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500 ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டு பயந்த சங்க கால மனிதர்களின் மனித மனம், மரணத்தில் இருந்து, எவருமே விடுபட இயலாது என்பதை உணர்ந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன் எனப் பழித்தது அவர்களின் பாடலில் இருந்து தெரிய வருகிறது. அவ்வகையில், யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். "களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;" [புறநானூறு 4 / மரணத்தின் தமிழ் கடவுளை - கூற்றுவன், காலன், மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்] இந்த பாட்டில் ஒரு பயத்தை, கலக்கத்தை காண்கிறோம். அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] "காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டு வைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை" என்று சொல்லவைத்ததோ? "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப் புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று. புறநானூறு 192, இல் "யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றாலு மிலமே" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதிதன்று, கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டா லும் [மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்], இமய மலையின் ஓங்கிய சிகரம் போல், நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று ஆலோசனை வழங்குகிறார். "மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே" அதேபோல, புறம்:238 இல் சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன் என "வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்; ", என்று பெருஞ்சித்திரனார் பாடுகிறான். கார் காலத்து இடியைப் போல் சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக் கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான் என புறநானூறு 361, இல் "கார்எதிர் உருமின் உரறிக் கல்லென ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம், நின்வரவு அஞ்சலன் மாதோ; " என்று கயமனார் பாடுகிறார். அதே போல "மருந்து இல கூற்றத்து அருந்தொழில்" என புறநானூறு 03 சொல்லுகிறது. மேலும் புறநானூறு 363 இல், கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் [Acacia Latronum] இலை அளவு கூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையை விட அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று கள்ளி (Cactus) பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க என அறிவுரை கூறுகிறான். உலகம் தொடங்கிய காலம் தொட்டே, மரணம் மனிதனுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் தீர்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் மறுபிறப்பு உண்டா? உண்டு என்று சமய நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு எதிராக இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!" என அடித்துச் சொல்கிறார். இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான, பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. கூற்றுவன் வந்து கொண்டேயிருக்கிறான். மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை, "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று." என்று பாடுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிரை காக்க முனையேன். ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். சங்க இலக்கியம் நம் முன்னோர்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றன என்பதற்கு இன்று நம்மிடையில் காணப்படும் பண்புகள் சான்றுபகிர்கின்றன. உதாரணமாக, இறந்தவர்களை பாடையில் கிடத்தி சுடுகாடு எடுத்து செல்லும் முறையும் மாரடித்து புலம்பும் பண்பும் இறந்தவர்களின் மீது கோடித்துணி போர்த்தும் பண்பும் இன்றும் நம்மிடம் உள்ளன. அன்று பாடையை, கால்வழி கட்டில் அல்லது வெள்ளில் என்று அழைத்தனர். உதாரணமாக, புறநானூறு, 286 , மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே என "கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே" என்று புலம்பும் தாயை எடுத்து காட்டுகிறது. மேலும், கணவன் அல்லது தலைவன் இறந்த பொழுது அவனைச் சார்ந்த மகளிர் மார்பினில் தட்டி புலம்பியதையும் புறநானூறு எடுத்துக்காட்டுகின்றது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]