-
Posts
9545 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by யாயினி
-
தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.இனி பெயர்கள் அகர வரிசையில்:1. அசனம்,2. அடிசில்,3. அமலை,4. அயினி,5. அன்னம்,6. உண்டி,7. உணா,8. ஊண்,9. ஓதனம்,10. கூழ்,11, சரு,12. சொன்றி,13. சோறு14. துற்று,15. பதம்,16. பாத்து,17. பாளிதம்,18. புகா,19. புழுக்கல்,20. புன்கம்,21. பொம்மல்,22. போனகம்,23. மடை,24. மிசை,25. மிதவை,26. மூரல்,27. வல்சி
-
-
காலச்சுவடு இதழில் முனைவர் தேமொழி எழுதிய தமிழர் புலப்பெயர்வு என்ற எனது நூலுக்கான திறனாய்வு வெளிவந்துள்ளது. வாசித்து மகிழ்க..தமிழர் புலப்பெயர்வு;உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறுக. சுபாஷிணிபதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளைபக்.370 ; ரூ.450தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்ந்து பல தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.புலம் பெயர்தல் பொருளியல், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இருப்பினும், “எத்தனையோ சிரமங்களும் துன்பங்களும் இருந்தாலும் மனிதர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறார்” க. சுபாஷிணி.தமிழ் மக்களின் தொடக்கக் கால வெளிநாடுகளுக்கான பயணங்கள் பெரும்பாலும் தன் விருப்பத்துடன் பொருள் திரட்டும் நோக்கில் அமைந்தவை. வணிகப் பயணங்கள்தான் என்றாலும் சமயம் பரப்புதல், தூது, போர் போன்ற காரணங்களுக்காகவும் தமிழர்களின் பயணங்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாகத் தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரங்கள் சிலவற்றிலும் அவற்றைச் சுற்றியும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகச் சூழலை விவரிக்கும் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளதை நூல் சுட்டிக்காட்டுகிறது.பண்டைய தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் குழுக்களாக ஐயப்பொழில் ஐநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார் இருந்துள்ளதை அறிகிறோம். தமிழர்களின் பல தடயங்கள் அயல்நாடுகளிலும் கிடைத்துள்ளமை தமிழர்களின் வணிகப் பரவலை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. இவை வரலாறு நெடுகிலும் பல காலகட்டங்களைச் சார்ந்தவை. இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த “ணந்தை கீரன்” என்று ‘தமிழி’ எழுத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று.பொ.ஆ.3 அல்லது 4ஆக இருக்கக்கூடிய, ‘பெரும் பத்தன் கல்’ (பெரிய பொற்கொல்லனின் கல் எனப் பொருள் தரும்) கல்வெட்டு ஒன்று தென் தாய்லாந்தில் கிடைத்துள்ளது. அதன் தகுவாபா பகுதியில் கிடைத்த பொ.ஆ. 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்மனின் அரசு அதிகாரி மணிக்கிராமத்தார் வணிகக் குழுவினரின் பயன்பாட்டிற்காக ஒரு குளத்தை அப்பகுதியில் வெட்டியதாகக் கூறுகிறது.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் லாபூ தோவா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு திசை ஆயிரத்து ஐநூற்றுவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. நியூசிலாந்து நாட்டின் மேற்குக் கரையோரம் கிடைத்த வெண்கல மணி ஒன்றின் உடைந்த பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி’ என்ற சொற்கள் இன்னொரு சான்று. இது பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பழவேற்காட்டிலிருந்து இந்தோனேசியா வழியாக நியூகினியா சென்று பின்னர் நியூசிலாந்து அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கும் சென்ற முகைதீன் பக்ஸ் என்பவரின் கப்பலின் மணி என்று இந்த நூலின் வழி அறிகிறோம்.முற்காலத்தில், வணிகம் தவிர்த்துச் சமயம் தொடர்பான பணிகளுக்காகவும் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றனர். ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்று புத்த மதம் பரப்பியவர் பல்லவ இளவரசன் போதி தர்மர் என்ற புத்த வர்மன். அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பௌத்த சமய விரிவாக்கம் தமிழ் நிலப்பகுதியிலிருந்து வணிகர்களின் உதவியால் கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவு கண்டது. இது தமிழ் பௌத்தப் பிக்குகளின் நாடுகடந்த பயணங்களுக்கும் காரணமாகியது.இப்பயணங்கள் பெரும்பாலும் கடல்வழிப் பயணங்களாகவும் நிலவழிப் பயணங்களாகவும் அமைந்தன. போதி தர்மர்போல தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்த மற்றொரு தென்னிந்தியப் பௌத்த பிக்கு வஜ்ரபோதி. இவர் ஒரு பெர்ஷிய வணிகக் கப்பலில் பயணம்செய்து ஸ்ரீவிஜயப் பேரரசின் துறைமுக நகரம் ஒன்றிற்கு பொ.ஆ. 719இல் வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அக்கப்பல் சீனாவின் குவான்சோவ் நகருக்கு வந்தபோது அதே கப்பலில் பிக்கு வஜ்ரபோதியும் பயணம்செய்து சீனா வந்துசேர்ந்தார் என்ற அறியப்படாத தகவலையும் பெற முடிகிறது.கிறிஸ்துவப் பணிகளில் ஐரோப்பியரோடு உள்ளூர்த் தமிழ் மக்களும் உதவியாளர்களாக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் இக்காலகட்டங்களில் அடங்கும்.வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் பயணம் செல்வதும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு தங்குவதும் நிகழ்ந்தாலும்கூட பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அத்துடன் அவை தமிழர்கள் வணிகம் மூலம் செல்வம் திரட்டச் செல்லாமல் வாழ்வாதாரம் தேடி விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யும் பயணங்களாகவும் அமைந்தன.துருக்கியின் ஒட்டமான் பேரரசின் உச்சக்கட்ட விரிவாக்கம் காரணமாக 14ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்துடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என்று விரிந்து பரவிவிட்ட ஒட்டாமன் பேரரசு வணிக வரிகளை உயர்த்தியதால் மாற்று வணிக வழி தேடி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழி தேடியதும், வாஸ்கோ-ட-காமா 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் புதிய வழிமூலம் வந்து கரை இறங்கியதும் உலக வணிக வரலாற்றில் புதிய திருப்புமுனையாகும்.போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கடற்கரையோர நகரங்களில் தங்களின் வணிக மையங்களை உருவாக்கிக்கொண்டன.ஐரோப்பியரின் விரிவாக்கத்தை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோள் “God, Gold, and Glory” என்று இருந்ததாக விளக்குவார்கள். வெடிமருந்து கொண்ட புதிய தொழில்நுட்பப் போர்க்கருவிகளும், பலமற்றுப் பிரிந்துகிடந்த உள்நாடுகளின் அரசுகளும் மற்ற நாடுகளில் ஐரோப்பியர் வணிகத் தொழிலையும் சமய வளர்ச்சியையும் விரிவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கின. உலக நாடுகளில் தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் உழைப்பாளர் தேவைகளுக்கு இந்தியாவின் உள்ளூர் மக்களை முதலில் அடிமைகளாகவும்,அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த உழைப்பாளர்களாகவும் அழைத்துச் சென்றனர் ஐரோப்பியர். அவ்வாறு புலம் பெயர்ந்த இடங்கள் எந்த ஐரோப்பிய நாட்டின் வணிகக் கட்டுப்பாட்டில் இருந்ததோ (இங்கிலாந்தின் பிரித்தானிய காமன்வெல்த் நாடுகள்போல) அந்தந்த நாடுகளாக அமைந்தன. அவை உழைப்பாளர் தாங்களே தேர்வுசெய்து சென்ற நாடுகள் அல்ல. இவ்வாறாக, தமிழர்கள் புலம் பெயர நேரிட்ட காரணம் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய வறட்சியும் பஞ்சங்களுமாகும். தமிழ் மக்கள் பெருமளவில் அயல் நாடுகளில் பரவுவதற்கு அவர்களின் வறுமையான சூழ்நிலை காரணமாகியது.பஞ்சம் காரணமாக அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டவர்கள் 17ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவுக்கு அனுப்பப்பட்டுப் போர்த்துக்கீசியர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறே மணிலாவில் ஸ்பானியர் வசம் சென்ற அடிமைகளைப் பற்றி அவர்களின் ஆவணங்களும் காட்டுகின்றன. இந்தோனேசியா, மலாக்கா, மெக்சிகோ, இலங்கை, ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன், டென்மார்க் என மேலும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகச் சென்றனர். ஸ்பெயின், போர்த்துகல், டேனிஷ், டச்சு, பிரஞ்சு, பிரிட்டிஷ் என அனைத்து ஐரோப்பிய வணிக நிறுவனங்களும் தமிழ் அடிமைகளை விற்பதில் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் வழி அறியும்போது தலைக்குனிவும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன.குறிப்பாக 1834ஆம் ஆண்டு முற்றிலும் தடைசெய்யப்படும்வரை அடிமை வணிகம் தமிழ் மக்களின் வலுக்கட்டாயமான புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகியது. ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கு முன்னர் பெருமளவில் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அடிமை வணிகத்தின் வழிதான் நடந்தேறியது.‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்மீட்டும் உரையாயோ’ என்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்கள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட அல்லல் நிறைந்த வாழ்வின் அவலத்தை “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற கவிதையாக வடித்து மனம் குமுறினார் பாரதி.அந்தத் ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே தன் சிறுகதைக்கும் தலைப்பாகத் தேர்வு செய்து, பஞ்சம் பிழைக்க இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியேற்று, கோழிக் கூடுகள் போன்று இருந்த காரைக் குடிசைகளில் வாழ்ந்து, உழைத்து ஓடாகிப்போன தமிழர்களின் துன்பநிலைமையைச் சிறுகதையாக வடித்தார் புதுமைப்பித்தன். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற புதினம் மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் சித்திரித்தது.பஞ்சம் பிழைக்க அடிமைகளாக நெரிசலான அறையில் கப்பலில் அடைக்கப்பட்டவர்களும், பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று, சரியான உணவும் ஊதியமும் இல்லாமல் துன்பத்தில் உழன்றவர்களும் உண்டு. ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களும், ஆப்ரிக்காவிற்குச் சுரங்கத் தொழிலாளர்களாகச் சென்றவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவர்களே.க. சுபாஷிணி ஒரு மலேசியத் தமிழர். மலேசியாவில் பிறந்து, அங்கும் ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்று ஜெர்மனியில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டையும் புலம்பெயர் வரலாற்றையும் அறியவும் வாய்ப்புக் கொண்டிருந்தவர். கடந்த 15 ஆண்டு காலப் புலம்பெயர் தமிழர்கள் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேகரித்த குறிப்புகளையும் நூல் வடிவில் வெளிக்கொணர்வதின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இந்த நூலை விரிவாக எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களும் அரசும் செய்ய வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்திச் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.தேமொழி: புலம்பெயர் தமிழர், சான்ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா
-
மதுரயும் கோபாலன் குடும்பமும்(சிறுகதை)70 வதுகள்ல மதுர ஒரு தூங்கா நகரம் 24 மணிநேரமும் ஒரு ஊரு முழிச்சிகிட்டு இருக்கும்னா அது தூங்கா நகரம் தான. அப்பயெல்லாம் மதுரையில மில்கள் தொழிற்ச்சாலைகள் மும்முரமா இயங்கிட்டுஇருந்தகாலம் மதுரைகோட்ஸ் ராஜாமில் விசாலாட்சி மில் மீனாட்சிமில்ன்னு 24 மணிநேரம் ஓடிக்கிட்டு இருக்கும் காலையில 7 மணி மதியம் 3மணிராத்திரி 11 மணின்னு மில்லு சங்குகள் ஊதி வேலைக்கு வாங்கன்னு கூவும் அதுமட்டுமில்லாம பென்னர்கம்பெனி டி வி எஸ் கம்பெனின்னு தொழிற்சாலைகள் வேற இதுபோக செளராஸ்ட்ரா மக்கள் தறிபோட்டு நெசவு செய்வாங்க, அப்புறம் ரயில்வே அரசுபேருந்து பாண்டியன் பி ஆர் சி போன்ற நிறுவனங்களும் நல்ல வேலை வாய்ப்பை வழங்கினதீபாவளி சமயத்திலஎல்லாம் மில்லுகள்ல எல்லாரும் போனஸ் எதிர்பார்த்து காத்திருப்பாங்க தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அதுல ஏதாவது முடிவாகி போனஸ் வழங்கப்படும் அப்புறம் தீபாவளி களைகட்டி வியாபாரம் தூள் கெளப்பும்அப்ப இந்த மில்லுகள்ல கம்பெனிகள்ல வேலைபாக்குறவங்க எல்லாம் மாசச்சம்பளக்காரவுக.அவுகளை நம்பிக் கடன் குடுப்பாங்க ஒருபைசா வில இருந்து 3பைசா வட்டி வரை வாங்கிட்டுக் கடன் குடுப்பாங்கஇதுல பென்னர் கம்பெனில நல்ல சம்பளம் குடுப்பாங்க. அதுல வேலை பாக்குறவங்கன்னா பணக்காரவுகன்னு எல்லாரும் பேசிக்கிருவாங்க நம்ம ஆள் கோபாலனோட அப்பா சித்தப்பாக்கள்னு அவங்க குடும்பத்திலயே 4 பேர் மதுரை கோட்சிலும்ஒருத்தர் பென்னரிலும் வேல பாத்தாங்க.அதுனால அந்த குடும்பம் செல்வாக்கான குடும்பமா இருந்துச்சு. ஊரில பெரிய மனுசங்கன்னா அவங்கதான். அவங்க எங்க சொந்தக்காரவுங்கன்னு சொல்றதுல பெருமைப் படுவாங்க. தீவாளின்னா அவங்க வீட்டுலதான் விடிய விடிய வெடிப்போடுவாங்க கோபாலன் குடும்பத்தில வருமானம் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு பிள்ளைகளும் அதிகம் நம்ம கோபாலன் கூடப்பிறந்தவங்க 4 ஆம்பளைங்க ரெண்டு பொண்ணுக.கோபாலன் கையில நல்லா காசுபொழங்கும் அதுனால டீக்கடைக்குக் காசு குடுக்குறது படத்துக்கு டிக்கெட் எடுக்குறது எல்லாம் அவன் தான். அவங்க வீட்டுக்கு ஆரு போனாலும் காப்பி சாப்பிடுறீங்களான்னு கேட்டு காப்பி குடிக்காம விடமாட்டாங்க அந்த ஊரில அப்ப வரவேற்பரைனு இருந்தது அவங்க வீட்டுல தான் அதுல சோபா போட்டிருக்கும் அப்புறம் ஒரு பெரிய ரேடியோ தானாக இசைத்தட்டுகள் போட்டு பாட்டுப்பாடும் வசதி இருக்கும் அதுனால அவனோட நண்பர்கள் எல்லாம் அவன் வீட்டுலதான் கெடப்பானுகதேர்தல் நேரத்துல முடிவுகளைக் கேக்க அவங்க வீட்டுல கூடிருவாங்க. அப்ப அப்ப கேண்டினில் வாங்கி வந்த ஸ்வீட் காரம் வேற கெடைக்கும். அவங்க வீடேஎப்போதும் ஜே ஜேன்னு இருக்கும் அவங்க வீட்டுல கலியாணம் கோபாலன் அண்ணனுக்கு நடந்தப்ப ( அவரும் மதுரை கோட்சில்தான் வேலை பாத்தாரு) தெருவே அடைச்சி பந்தல் கிட்டத்தட்ட ஊரில இருக்குற எல்லாருக்கும் அழைப்பு நு தடபுடலாநடந்துச்சுபொண்ணு கொடுக்க பொண்ணு எடுக்க போட்டா போட்டி.கோபாலனுக்கு அவனோட சொந்த அத்தைபொண்ணத்தான் கலியாணம் பண்ணி வைச்சாங்க அப்ப அவன் வேலைக்கிப்போகல. எப்புடியும் மில்லில் வேலை வாங்கிடலாம் நு நம்பிக்கிட்டு இருந்தாங்க. ஏன்னா அப்ப 50 வய்சுக்கு மேல வேலை செய்யிறவங்க வேலைய எழுதிக்கொடுத்தா ரொக்கமா சில ஆயிரங்களும் வாரிசு வேலைவாய்ப்பும் நு பென்னர் உடபட பல மில்லுகள்லயும் அறிவிச்சிருந்தாங்க அது சீனியர்னா சம்பளம் அதிகம் கொடுக்கனும் புதுசா வாரவங்கன்னா கொஞ்சமா குடுத்தாப்போதும்ன்ற பாலிசி நெறையாபேர் இத ஏத்துக்கிட்டு எழுதிக்கொடுத்து பிள்ளைகளை வேலைக்கி சேத்துட்டு வந்த பணத்த பிள்ளகளுக்கு கலியாணம் இல்ல நெலம் வீடுன்னு வாங்கிபோட்டாங்க ஆனா நம்ம கோபாலன் அப்பா ஏற்கனவே 20 வேலை செஞ்சதுக்கு மூத்தமகன வேலைக்கி சேத்திருந்தாரு. இந்தத் திட்டம் வந்தவன்ன அவருக்கு சம்பளம் அதிகம் புதுசா மகன வேலைக்கிச்சேத்தா அம்புட்டுச்சம்பளம் வராது கொஞ்சம் பொறுப்போன்னு யோசனை பண்ணுனாரு.கோபாலனையும் வேலைக்கிச்சேக்க காத்திருக்கச் சொன்னாருஇவனும் நம்பிக்கையோட காத்திருந்தான். அதுக்குள்ள கலியாணம் பண்ணி பிள்ளையும் பெத்திருந்தான் அப்பத்தான்மதுரையில தொழிற்சாலையின் போக்குகள்ல மாறுதல் வந்துச்சு. முன்னாடி படிச்சிருந்தாலும் படிக்காட்டினாலும் வேலை கொடுத்தகன்பெனிகள் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி டிப்ளோமா ஆளுகளை வேலைக்கி எடுக்க ஆரம்பிச்சாங்க.வாலெண்டரி ரிட்டயர் மெண்ட் ஸ்கீமிலயும் மாத்தம் வந்துச்சு படிச்சிருந்தா மாத்திரம் வேலை அதுவும் ஐ.டி.ஐ டிப்ளோமா படிச்சவங்களுக்கு மட்டுமேவேலை அப்புடி ஆள் இல்லைன்னா கூடுதலா பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்ப ஆரம்பிச்சாங்கஇந்தக்காலாட்டத்துல மில்லுக எல்லாம் மூட ஆரம்பிச்சாங்க. மதுரைகோட்ஸ் தவிர பல மில்லுகளை மூட ஆரம்பிச்சி அதை எல்லாம் இடிச்சிட்டு ரியல் எஸ்ட்டேடா மாத்தி வீடுகட்டி விக்க ஆரம்பிச்சாங்க .மதுரயோட பொருளாதாரம் சாதாரண ஜனங்க கையில இருந்து நழுவ ஆரம்பிச்சது சங்கு ஊதுறது நின்னதுனால பலருடைய வாழ்க்கை யில சங்கூதுறபடியா ஆயிருச்சி நம்ம கோபாலன் படிச்சது எஸ் எஸ் எல் சி தான் அதுனால அவங்க அப்பாவால மில்லில் வேலை வாங்கித்தர முடியல அதே நேரத்துல அவங்க அப்பா ரிட்டயர்டு ஆயிட்டாரு.அண்ணன் தனிக்குடித்தனம் போனதால குடும்ப வருமானம் கேள்விக்குறியாச்சு. இருந்த காசெல்லாம் கரைய ஆரம்பிச்சது. குடும்பம் எவ்வளவு செல்வாக்கா இருந்ததோ அவ்வளவு வறுமைய நோக்கி நகர ஆரம்பிச்சதுஇவனுக்கும் உருபடியான வேலை கிடைக்கல தம்பிகளும் சரியாப்படிக்கல. ஒருநாள் அவனோட அப்பா திடீருன்னு மாரடைப்புல இறந்துபோயிட்டாரு.அப்ப அவங்ககிட்ட இருந்தது குடியிருந்த வீடும் கொஞ்சப் பணமும் தான் அதுனால வீட்டை விக்க வேண்டிய சூழ்நிலை ஆயிருச்சு இதே கால கட்டத்துல மதுரயில மில்லுகள் மூடினதால 10 மணிக்கு மேல ஆள் நடமாட்டம் கொறைய ஆரம்பிச்சது மதுர தன்னோட தூங்காநகரம் பெயரை கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிச்சது.யானைக்கல்லுல மாத்திரம் காலையில 3 மணியாவாரம் தொடர்ந்துச்சு. பெரும் வேலைவாய்ப்புகள் கொறைஞ்சதுனால வேலை தேடி திருப்பூர் போன்ற ஊர்களுக்கு மக்கள் குடிபெயர ஆரம்பிச்சாங்க அப்ப நிறைய இஞ்சினியரிங் டிப்ளோமா கல்லுரிகள் திறந்து படிச்சி சென்னை போன்ற நகரங்களுக்கு இடம் பெயற ஆரம்பிச்சாங்க.மதுர தொழில் நகரமாயிருந்தது வியாபார நகரமா மாற ஆரம்பிச்சது வியாபார நிறுவனங்கள் தொறந்தாங்க நகைக்கடை துணிக்கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்னு வேலை வாய்ப்புகள் ஆனா எல்லாம் சம்பளம் கொறவு குடும்பத்துல எல்லாரும் வேலைக்கிப்போனாத்தான் குடுமபம் ஓடும்ற சூழ்நிலை வர ஆரம்பிச்சதுநம்ம கோபாலன் குடும்பமும் அந்த நெலைக்கித் தள்ளப்பட்டுச்சு ஏதாவது கடையில ஸ்கூல்ல வேலை நு ஆயிப்போச்சு. கோபாலன் மனைவி பிரைவேட் ஸ்கூல்ல வேலைக்கிப்போனாங்க.இவன் ஒரு கடையில வேலைக்கிச்சேந்தான் பூர்வீக வீட்ட வித்துட்டு வேற பக்கமா குடிபெயந்தாங்க நல்லா வாழ்ந்த குடும்பம் இந்த மாதிரி அதள பாதாளத்துக்குபோயிருச்சு.இப்ப யெல்லாம் அவன் தான் இருந்த தெருவுக்கு வாரதையே தவிர்த்தான் அவங்க வீட்ட வாங்குனவர் வீட்ட இடிச்சிட்டு காலி எடமா விக்க முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தார் ஒருநாள் அந்தப்பக்கமா போக நேர்ந்தது அவங்க வீடு இடிக்கப்பட்டு மண்ணாக் கெடந்ததப்பாத்து அழுகைய அடக்க முடியல நாம் வாழந்த வாழ்க்கையென்ன இந்த வீட்டுல எவ்வளவு பேர் வந்து சாப்புட்டுப் போயிருப்பாங்க இப்ப எல்லாம் மண்ணாகி நிக்கிறதத் தாங்க முடியல அழுகைய அடக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்து குமுறிக் குமுறி அழுதான். அழுதா மட்டும் போனது திரும்பப்போகுதா.அதேபோலத்தான் மில்லுக இருந்த எடத்துல அப்பார்ட் மெண்டுகள் கட்டி மாறிக்கிட்டு இருந்துச்சு. எல்லாம் புதுசு ஆனா அங்க இருந்த தொழிலாளர்கள் மக்கள் எல்லாம் காணாம்போயிட்டாங்க கோபாலன் குடும்பத்தைப்போலவே இன்னிக்கி மதுரையில வியாபாரம் மெயின் ஆயிப்போச்சு.சித்திரைத்திருவிழாவுக்கு மாத்திரம் கூட்டம் கொறையல மத்தபடி மதுரை உணவுக்கு பெயர் போனதாவும் போத்தீஸ்சென்னை சில்க் சரவணா போன்ற வியாபாரிகள் வந்து கடைவிரிச்சாங்ககுறுநில மன்னர்களா கோபாலன் போல இருந்த மக்கள் எல்லாம் கடைகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கிப்போக வேண்டியதாப்போச்சு.ஆனாலும் மதுரை செயற்கையா ஜொலிக்குது வியாபார நிறுவனங்களால் ஆனால் மக்கள் வருமானம் வெவசாயத்தைப்போல கொறைய ஆரம்பிச்சிருச்சு. கோபாலன் குடும்பம் போல எத்தனையோ குடும்பங்கள்அன்னிக்கி ஒருநாள் அவனை நான் பார்த்தேன் சேர் ஆட்டோவில. பாக்கவே பரிதாபமா இருந்துச்சு எலும்பு தோலுமா ஏழ்மையின் உச்சத்தில் இருந்தான் .அவனைப்பார்த்து அறிமுகம் செஞ்சிக்கிட்டேன் . அவரா நீங்கள் நு கேட்டான். வா டீ சாப்பிடலாம் நு கூப்பிட்டேன் உடனே பையைத் தடவிப்பாத்துட்டு வாப்பா போகலாம்னு போய் டீ சாப்பிட்டோம் அப்பவும் தன் பையில் இருந்து டீ கடைக்காரருக்குக் காசு குடுத்தான். என்னைக்குடுக்க விடவில்லை . நீதான் வெளியூராச்சே உன்னைக்காசு குடுக்கவிட்டாஎன் கெளரவம் என்னாகிறது நீ என் விருந்தாளின்னான்அந்த நிலையில் அவனைப்பார்த்து என் கண்கள் கலங்குச்சு. என்ன நிலையிலும் விருந்தோம்பலை மதுர மறக்காதுன்னு தோணிச்சி அண்ணார்ந்து பாக்கையில் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் விளக்கோடு பளபளத்துச்சு ஆனா கோபுரத்திம் கீழ் கடைகளில் எரிந்த விளக்குகளில் வேற்று முகங்கள் கல்லாவில்உட்கார்ந்திருந்தார்கள் வெளுப்பாக.அ.முத்துவிஜயன்
-
TIME FM(CANADA)வானொலி காற்றலையின் பெட்டகம் நிகழ்ச்சியில்!!மூத்த விஞ்ஞானி,வாழ் நாள் சாதனையாளர் DR.NADES PALANIYARஅவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு நேர்காணல்.TASME 2024- 06 JULY 24 & 07 jULY 24TASME கருத்தரங்கு பற்றிய கருத்துப்பகிர்வு(கடந்தகால,நிகழ்கால,எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கருத்துப் பகிர்வுகள்)Professor Nades Palaniyar, PhD, is a Senior Scientist at the hospital for Sick Children. At the university of Toronto, he lectures and trains undergraduate, graduate and postdoctoral students. His research work is focusing on discovering novel immune mechanism and drugs for treating infectious and inflammatory lung diseases.He earned doctoral degree for his research work on DNA, and virus at the University of Guelph, Canada. He conducted postdoctoral research work at Guelph (lung immunity, electron microscopy), Cincinnati, USA (Transgenics), Oxford, UK (lung immunity, DNA), and Harvard, USA (Lung immunity), and discovered several molecular mechanisms. He has also been organizing scientific conferences such as TASME to provide a forum for researchers and i-CLIIP for recognizing research leaders. He is also a meditator and coaches people reach their maximum human potential. He is currently involved in several outreach activities.
-
-
எத்தியோப்பியா நாட்டிலுள்ள பண்ணா பழங்குடிகளின் அன்றாட வாழ்வியலில் ஒன்று இப்படியான கம்புகளைக்கொண்டு நடப்பது. தங்களது கால்நடைகளைக் கண்காணிப்பதற்கும் காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் சிறு வயதிலிருந்தே பண்ணா பழங்குடி சிறுவர்களுக்கு உயரமான கம்புகளைக்கொண்டு நடக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது
-
-
உலகில் உள்ள மொத்த வைரத்தில் 95 சதவீதம் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவை. அதேபோல உலகிலுள்ள 50 சதவீத தங்கமும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்தவை. புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது தென்னப்பிரிக்கா நாட்டிலுள்ள கிம்பர்லே வைரச் சுரங்கம். மனித கைகளால் தோண்டப்பட்ட உலகின் மிக ஆழமான பள்ளம் இதுதான்
-
-
-
தனித்துவம் என்பது யாதெனில்நாம் நாமாக இருப்பது மற்றவர்கள் வாழ்க்கை வேறு நம் வாழ்க்கை வேறுஆனால் இறைவன் எல்லோரையும் மனிதனாகத்தானே படைத்துள்ளார் அதுவும் ஒரேமாதிரியான ஆறறிவுஅப்படி இருக்கும்போது ஏன் இந்தபோட்டி பொறாமை சக மனிதரிடத்தில்உங்களின் தனித்துவம் என்னவென்று கண்டறிந்து அதை வைத்து முன்னேற்றம் காணுங்கள் புகழ்ச்சி இகழ்ச்சி இதுவெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டதுஅதையெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேற்றத்திற்கான சிந்தனையை பெருக்குங்கள் அதுவே உங்களை ஒரு சிறந்த மனிதனாக வலம் வரச் செய்யும்*ராம்...
-
-
-
அந்த ஊர் ஜமீனின் மூன்றாம் தலைமுறை குடும்பத்தில் வாக்க பட்டு போனதிலிருந்து அத்தை இப்படி தான்.காலையில் குளித்துவிட்டு அடுப்படியில் நின்றால், இரவு வரை வேலை. கடைசியில் பாத்திரம் கழுவி கவிழ்த்துவைத்து விட்டு உறங்க செல்ல வேண்டும்.மாமனார், மாமியார், கணவன் பிள்ளை, நாத்தனார் குடும்பங்கள் என அனைவர்க்கும் சமைக்க வேண்டும்.மூன்று வேளையும் சமைக்கவேண்டும். அப்பொழுது எல்லாம் விறகு அடுப்பு தான்..இதற்கிடையில் பாட்டியின் தொந்திரவு வேறு, கைவலி, கால் வலி என்று.. இதற்கு தனியாக கஷாயம் காய்ச்சி தரவேண்டும்... போதும் போதும் என்றாகிவிடும் அத்தைக்கு..உதவிக்கு யாரும் வரமாட்டார்கள் வேறு....மாமாவிற்கு அவர் தொழிலிற்கே நேரம் சரியாக இருந்தது. உடல்நிலை சரி இல்லாத நேரம் கூட அத்தை அடுப்படியில் வேகாத குறையாக வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்...ஜமீன் பரம்பரை என்பதால், நல்லது கேட்டது என சொந்தம் வந்தவாறே இருக்கும் எந்நேரமும். ஓய்வும் இல்லை விடுமுறையும் இல்லை. மாமாவும் பெரிதாக எதையும் கண்டுகொள்வதில்லை...திடீரென ஒரு நாள் அத்தையை காணவில்லை... சொல்லாமல் கொள்ளாமல் அம்மா வீடு சென்றுவிட்டாள் உடல் நிலை சரியில்லாமல். மாமாவிற்கு அத்தை என்ற ஒரு மனுஷி இருப்பதே அப்போதுதான் லேசாக உரைத்தது.பாட்டியே இப்போது எல்லா சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தார், ஆயிரம் வசவுகளோடு. வசவு சொல் தாங்காமல் கிளம்பினார் மாமா, அத்தையை அழைத்துவர,..வீட்டு வேலை செய்ய ஆள் இல்லையாம்...
-
-
-
இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது.இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.மேலும், போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் "ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம் சராசரியாக ஆண்டிற்கு 1600 டொலர்களை ஒருவர் சேமிக்க முடிவதோடு, பயணச் சீட்டின் விலை காரணமாக மக்கள் இனி தமது வாழ்க்கையின் பெரும் தருணங்களையோ வேலை வாய்புகளையோ இழக்க நேரிடாது" என தெரிவித்துள்ளார்.ஒன்ராறியோ அரசின் முழுமையான நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த 'ஒற்றைக்கட்டண' முறை ஆண்டொன்றுக்கு போக்குவரத்துத்துறையில் எட்டு மில்லியன் புதிய பயணங்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று முதல் ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம், 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட பின்வரும் அனைத்து போக்குவரத்துச் சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள்:Barrie TransitBrampton TransitBurlington TransitBradford West Gwillimbury TransitDurham Region TransitGrand River TransitGuelph TransitHamilton Street RailwayMilton TransitMiWayOakville TransitTTCYork Region Transit
-
-
ரொறன்டோவில் சில இடங்களில் அதாவது மார்க்கம் தனி வீட்டுப் பகுதிகளில் வைக்கும் தேவையற்ற மின்சாரப்பாவனை பொருட்களை குப்பை அகற்கும் பணியாளர்கள் எடுத்து செல்ல மாட்டார்கள் என்று அறிய முடிகிறது..நான் அறிந்தவரையில் மார்க்கம் பகுதி மக்கள் கொஞ்சம் சிரமங்களை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.