Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி January 22, 20250 Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர். இதில் பலியான பகீரதன் புஸ்பராசா, தாயகத்தில் நீர்வேலியைச் சேர்ந்தவர என தெரியவருகிறது. முதலில் இவர்கள் பயணித்த Honda வாகனம் Nissan வாகனத்துடன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு Honda வாகனம் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சம்பவ இடத்தை விட்டு Honda வாகனம் 350 metre பயணத்தை தொடர்ந்தது. அங்கு ஒரு வீதி தடுப்பில் மோதிய Honda வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் வாகனத்தை விட்டு இறங்கிய தந்தை, மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது, அவர்கள் இருவரும் BMW வாகனத்தால் மோதப்பட்டாதாக தெரிவிக்கப்படுகிறது. Honda வாகன ஓட்டுநர் முதலாவது விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் தரித்து நிற்காததால், இது ஓர் hit-and-run என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது விபத்து நிகழ்ந்த சாலை மங்கலான வெளிச்சம் கொண்டது எனவும் இது இந்த விபத்துக்கான காரணியாக இருக்கலாம் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்தனர். இதில் Nissan வாகன சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். BMW வாகன சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்தில் அவசர உதவி பிரிவினரால் மதிப்பீடு செய்யப்பட்டார். இந்த விபத்துகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. https://thesiyamnation.com/40662/
  2. கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..
  3. Ramanathan Archchun 56m · திட்டமிட்ட ரீதியில் அனுராதபுரத்தில் வழி மறிக்கப்பட்டு வழக்கு போடப்பட்டிருக்கிறது! முதலில் சொன்னார்கள் சீட் பெல் போடவில்லை என்று... போட்டிருப்பதை காட்டினேன்.. அதன் பிறகு சொன்னார்கள் விஐபி லைட்டு எரிகிறது என்று.. நான் சொன்னேன் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று.. அதன் பின்பு வீடியோ எடுக்க தொடங்கினார்கள். சாதாரணமாக போலீசார் வீடியோ எடுப்பதில்லை.. திட்டமிட்டு வழிமறிக்கப்பட்டு தான்.. இந்த வழக்கும் போடப்பட்டிருக்கிறது.. அரசாங்கம் அவர்களுடையது.. போலீசாரும் அவர்களுடையவர்கள்.. காலம் காலமாக ஆட்சிக்கு வருபவர்கள் செய்யும் கூத்தே இது.. இங்கே தமிழர்களாக எமது வகிபாகம் என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. அனுரவிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்தவன் என்ற அடிப்படையிலும், அதன் பின்பு DCC மீட்டிங்களிலும் அபிவிருத்தி தொடர்பாக என் பி பி யின் நடவடிக்கைகளுடன் முரண்பட்டுக்கொண்டபோது முதலாவதாக மெல்லியதாக இந்த தீப்பொறி ஆரம்பித்தது.. யாழ் மக்கள் முட்டாள்கள் இல்லை என்ற அடிப்படையில் எதற்காக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு இனவாத அரசாங்கத்திற்கு தேர்வு செய்து கொடுத்திருக்கிறோம் என்ற கேள்விகளின் அடிப்படையிலும் கருத்துக்கள் பரப்பப்பட்டாலும் நம்பிக்கையின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று நானும் கருதியிருந்தேன். ஆனால், வல்வேட்டி துறையில் நடந்த வாழ்வெட்டுகளின் பின்பும், பருத்தித் துறையில் நடக்கும் தேசிய அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளின் பின்பும் சாவகச்சேரியில் கல்லுப்பிடித்து மூக்குடை பட்டுக்கொண்டதன் பின்பும், பனை டோலர் ஒருவரை நியமித்து பனை அபிவிருத்தி அதிகார சபையை தான்றோண்டித்தனமாக நிர்வகித்ததில் இருந்தும் இவர்களின் அரசியல் சில்லறைத்தனங்கள் என் மனதை வெகுவாக நெரடிக்கொண்டே இருந்தது.. ஆனால், உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் இவர்களின் வெற்றிக்காக போலீசாரின் துணையுடன் இவ்வாறு சில்லறைத்தனமான வழக்குகளை போட்டுக் கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர்களை இரும்புக்கரம் கொண்டு சிதைத்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு மிக நல்ல உதாரணம் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு வரை நடந்த சுதந்திரத்திற்கான போராட்டம்! நிற்க, பழையவற்றை மறந்தவர்களாக ஒரு சமூக ஒற்றுமையுடன் ஒன்றாக வாழலாம் என்று நினைக்கும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் ஒரு வரலாற்றை சொல்லிக் கொண்டே செல்கிறது.. மைத்திரியில் இருந்து அனுரா வரைக்கும் வரலாறுகள் கறை படிந்த கருப்பு காகிதங்களாகவே இருக்கிறது.. வேலை கேட்டுப் போராடிய பட்டதாரிகளை போலீசாரின் அடாவடித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் மூலம் அனுர அரசாங்கம் அவர்களின் உண்மையான முகங்களை காட்டிக்கொண்டே இருக்கிறது.. மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட ரீதியில் மீண்டும் ஒரு குழப்பகரமான நிலைமை இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்கான அனுராவின் ஒரு நடவடிக்கையே ஆகும்.. மன்னார் போலீசாரின் ஒரு சிலர் அது தவிர விமானப்படை கடற்படை தரைப்படை உறுப்பினர்கள் மற்றும் சிஐடி உறுப்பினர்கள் ஒரு சிலர் கூலிப்படைகளாக இயங்கி வருவது தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தும் தெற்கில் ஒவ்வொரு கூலிப்படைகளையும் இரும்பு கரம் கொண்டு சுட்டு நொறுக்கும் அரசாங்கம் வடக்கில் மட்டும் என் பாராமுகமாக இருக்கிறது என்பதற்கான தெளிவான பதில் தமிழ் மக்களை ஒரு பீதியில் வைத்திருக்க வேண்டிய தேவை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்பதே ஆகும்.. இதன் ஒரு தெளிவான பதில் தான் தமிழ் மக்களின் அரசியல் குரல்களை வழக்குகளைக் கொண்டு நெரிப்பது.. மன்னாறில் இருந்து நான் பயணப்பட்டு கொண்டபோது தெளிவாக ரம்பா வில் மறித்து ஒரு லைற் இட் காக திட்டமிட்ட ரீதியில் வழக்கினை போட்டிருக்கிறார்கள்.. இங்கே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் லைட் பூட்டியபடி வாகனம் செலுத்தியது தான் குற்றம் என்றால் அதை அவர்கள் தெளிவாக சொல்லி குற்றமாக எழுதி இருக்கலாம்.. ஆனால் மணித்தியால கணக்கில் எனது வாகனத்தை மறித்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவமதித்து அதனை வீடியோ எடுத்து வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.. 25ஆவது வழக்காக இதனை நான் கருதவில்லை.. 2500 வழக்குகளை போட்டுக் கொண்டாலும்.. என் கல்லறைகளில் இருந்தும் என் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.. ஆனாலும், அரசியல் பழிவாங்கல் என்பது சாதாரண விடயம் அல்ல.. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசாங்கத்தில் கூட என்னை பல தடவை சிறையில் அடைத்து குடல் வளையை முடியும் வரை நெரித்துப் பார்த்தது அரசாங்கம்.. அங்கேதான் நான் ஒரு விடயத்தை சொல்கிறேன்.. நான் வென்று கனக காலம்.. இவற்றையும் கடந்து ஒரு சாதாரண நாளாக காலை வணக்கம் இந்த முகப்புத்தகத்திலிருந்து உங்களுக்கு வரும்.. இவற்றிற்கெல்லாம் பயந்து ஓடுவதற்கு நான் உயிருக்கு பயந்தவனோ அல்லது கோழையோ அல்ல.. அவனைத் திட்டமிட்ட ரீதியில் கொன்று இருக்கிறார்கள் என்று செய்திகளை சில வேளைகளில் நீங்கள் கேட்கலாம்.. ஆனால் அவன் தோற்று விட்டான்.. அடுத்த காலை பின் வைத்து விட்டு விட்டான் என்ற வரலாறு.. இராமநாதன் அர்ச்சுனாவின் அகராதியில் இருக்காது! ஏனெனில் இந்த அகராதி மனதின் வலிமை கரங்களால் எப்பொழுது எழுதப்பட்டு விட்டது! ஒன்றல்ல 25 அல்ல ஆயிரம் வழக்குகளை போட்டுக் கொண்டாலும் என்னோடு என் உறவுகள் நிற்கும் என்ற நம்பிக்கையில் என் பாதையில் நான் இருப்பேன்.. தோற்ற இனம் அல்ல என் இனம்.. வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட இனமே தமிழீழத் தமிழரின் இனம்! என் தலைவன் தோற்கவில்லை.. உலக நாடுகளே அவனை வஞ்சித்து வஞ்சகத்தால் தோற்றுக் கொண்டது.. என் தலைவனை காற்று உட்கொண்டிருக்கலாம்.. ஆனால் தோற்ற உங்களின் எக்காளச் சிரிப்பு.. இடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு கருணாவின் பெயரோடு எழுதப்பட்டு கொண்டே இருக்கும்.. நீ எதிரியாக இருந்தாலும்.. என் தலைவனின் பெயரை சொல்லிப்பார்.. அப்போது தெரியும் தமிழன் யார் என்று.. நான் மீண்டும் வருவேன்.. அதுவரை காத்திருங்கள்!
  4. அது தானே.கொழும்பில் இருந்து யாழ்ப் பாணம்-யாழ்ப்பாணம் இருந்து மன்னார்--மன்னாரில் இருந்து பிறகு திரும்ப கொழும்பு , அங்காலை பார்னிமென்ட் -அப்புறம் யூருப், முகப் புத்தகம் ,வேலை பத்தாதோ அர்ச்சனாவுக்கு.அடுத்தவருக்கு யாரும் ரிக்கற் போட்டு குடுத்தால் உலக நாடுகளை சுற்றுவது...மீடியாக்களின் மைக்கை பிடிச்சு கொண்டு தூங்குவது.இது எனது கண்ணோட்டம்.🖐️
  5. இன்று ஒரு பெரிய பரல் மாதிரி யாழ்ப்பாணம் கட்டைகாடு கடற் பிரதேசத்தில் கரை ஒதுங்கியுள்ளதாக லிங் ஒன்றில் பார்த்தேன்.இப்படியானவற்றை உடனயே அவ்விடத்தை விட்டு பொலிசார் அகற்றி விடுகிறார்களாம் காரணம்..வைரஸ் பரப்படுதலாகவும் இருக்கலாம் என்ற பயம்.
  6. உங்களுக்கு பால் அபிசேகம் செய்து பழக்க பட்ட மக்கள் எப்போது தங்களுக்காக வாழப் போகிறார்கள்..சொல்லப் போனால் பெரிய திரை, சின்னத் திரை போன்றவற்றுக்கு அடிமையானவர்கள் நிறைய பேர்.
  7. இல்ல நுணா அப்படி இருக்க முடியாது என்று கடந்த காலங்களில் செய்திகளில் படித்திருக்கிறேன்.அர்ச்சனாவைப் போலவே இன்னும் ஒரு பெண்ணும் இதே பிழையை விட்டு இருக்கிறார்..
  8. மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும் உரைவடிவில் எழுதியும், உரைச்சித்திரமாக வெளியிட்டும், சிலப்பதிகாரம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், பட்டி மன்றங்களை, வழக்காடு மன்றங்களையும் நடத்தியும் உள்ளவன் என்பதால், அந்த ஒப்பற்ற காப்பியத்தில் எனக்குள்ள ஒரளவு பரிச்சியத்தின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடனும், அங்கலாய்ப்புடனும் இரண்டாம் நாள் அரங்கேற்றத்தின்போது, மண்டபத்தின் மத்தியில் வசதியான பார்வைக் கோணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். குறிப்பிட்டபடி, சரியாக பி.ப. 5.30 மணிக்கு, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவித்தல் கம்பீரக் குரலில் ஒலித்தது. மங்கல விளக்கேற்றும் சம்பிரதாயமான நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறைவு பெற்றதும், “திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ் அம்கண் உலகு அளித்த லான்” என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப்பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்! மேடையில் அடுத்ததாக என்ன நடைபெறவிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் காட்சிகளுக்கு இடையே கதைசொல்லியாக பேச்சுக் கலையில் திறமைமிக்க இரண்டு இளம்பெண்கள், ஒருவர்மாறி ஒருவர் தோன்றி, தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம்கொடுத்துக்கொண்டிருந்தனர்.இடையிடையே, கூத்தில் கட்டியங்காரன் வருவது போல, நடனமணிகளின் நடனம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே, பின்னணிப் பாடல்களுடன் அழகிய காட்சிப்படுத்தலாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. சிலப்பதிகாரம் உண்மையில் ஒரு நாடகக் காப்பியமே. அதன் முதலாவது அங்கம் கோவலன் கண்ணகி திருமணமே!அவ்வாறே, இந்த நாடகமும், இனிய பாடல்களின் பின்னணியோடு அழகாக நடனம் ஆடியவாறு நடனமணிகள் அந்தத் திருமண அறிவித்தலைப் பூம்புகார் நகர மக்களுக்கு அறிவிப்பதில் இருந்து தொடங்குகிறது. திருமண அறிவிப்பு சிறப்பாக நடந்தது. “கோவலன் வந்தான் அவைக்குக் கோவலன் வந்தான் என்றும், கண்ணகி வந்தாளே அவைமுன்னே கண்ணகி வந்தாளே”என்றும் கோவலனும் கண்ணகியும் முதன்முதலில் மேடையில் தோன்றும்போது, கூத்து மரபின் அடிப்படையில், பாடிக்கொண்டே தம்மை அறிமுகம் செய்து ஆடிவருகின்ற காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. திருமணத்தின் பின்னர் கோவலனும் கண்ணகியும் மங்கல மன்றலில் மகிழ்ந்திருக்கும் வேளையில், கோவலன் கண்ணகியைப் புகழ் மொழிகளால் பாராட்டுவது சிலப்பதிகாரத்தில் மிகவும் சிறப்பான பகுதி. அப்போது கோவலன் சொல்வதாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாடல், “மாசறு பொன்னே வலம்புரி முத்தே…”என்று தொடங்குகின்றது. இந்தப்பாடல் காதல் உணர்வோடு பாடப்படவேண்டியது. காதல்பாடல்களுக்குரிய மெல்லிசையில் பாடல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணமாக “தர்பாரி கானடா” இராகத்தில் பாடியிருக்கலாம். அதற்கேற்றவாறு, மிகவும் இயல்பான முகபாவமும், மிகைப்படாத அபிநயமும் இருந்திருந்தால் காட்சிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். கூத்துப்பாடல் போலத் துள்ளல் இசையில் பாடலும், அதற்குரிய அபிநயமும் இடம்பெற்றிருப்பது முதலிரவன்று கோவலனும் – கண்ணகியும் கதைபேசி மகிழ்ந்து குலாவியிருக்கும் காட்சியோடு ஒன்றிணையவில்லை என்பதுடன், பாடலின் பொருளுக்கும் பொருந்துவதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இற்றைக்கு 1800 வருடங்களுக்கு முன்னர், காவிரிப்பூம் பட்டினம் என்று சொல்லப்படும் பூம்புகார் என்ற துறைமுக நகரத்தில், இந்திரவிழா எப்படி நடைபெற்றது என்பதை, சிலப்பதிகாரத்தை நன்கு படித்தறிந்தவர்களும்கூடக் கற்பனை செய்திருக்க முடியாத அளவுக்கு, மேடையிலே அழகாக, கச்சிதமாக, என்றுமே மனதை விட்டு அகலாத வகையில் நம்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்திர விழாக்காட்சியைப் பார்க்கிறோமா அல்லது அதில் கலந்துகொண்டிருக்கிறோமா என்ற மயக்க உணர்வில் சிலநிமிடங்கள் நம்மை நாமே மறந்திருந்தோம். இந்திரவிழா, மாதவி தாளம்பூவின் மடலில் கோவலனுக்குக் கடிதம் எழுதி வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்பும் காட்சி, கோவலன் – கண்ணகி மதுரைப் பயணம், காளி கோவில் காட்சி, கோவலனை அடையாளம் காண்பதற்காகக் கௌசிகன் மாதவிக் கொடியிடம் பேசுவதும், அடையாளம் காணலும், குரவைக்கூத்து, கண்ணகி அரண்மனை செல்லல், பாண்டிய மன்னனின் அரண்மனைக் காட்சிகள், எல்லாம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தன. கோவலனுக்குச் சோறு படைக்கும்போது, “பனை ஓலையிலே செய்யப்பட்ட பாயிலே கோவலனை அமரவைத்து, நிலத்தின் வெப்பத்தைப் போக்க நீர் தெளித்து, அதில் வாழை இலைபோட்டு, அந்த வாழை இலையிலே சோறு படைத்தாள்”என்று சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதை அப்படியே காட்சியாகக் காட்டியிருப்பது அற்புதம். ஆம்! பாயிலே கோவலன் அமர்ந்திருக்கிறான், அந்தப் பாயிலே இலை போடப்படவில்லை. இலை தரையிலே போடப்பட்டிருந்தது! இவ்வளவு நுணுக்கமாக சிலப்பதிகாரத்தின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்தியிருப்பதை எண்ணும்போது எப்படிப் பாராட்டுவது என்று வார்த்தைகளைத் தேடவேண்டியிருக்கிறது. கொலைக்களக் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்தது. கோவலன் கொல்லப்பட்டபோது பார்வையாளர்களைப் பரிதவிக்க வைத்துவிட்டது. கோவலனும், பொற்கொல்லனும், காவலர்கள் அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருந்தார்கள். யாராவது ஒருவரின் செயற்பாடு கண் இமைக்கும் பொழுதாயினும் முந்திப் பிந்தி ஆகிவிட்டிருந்தால் முழுக் காட்சியுமே நகைப்புக்கு இடமாகிவிடக்கூடிய, சவாலான விடயங்களை, மிகவும் வெற்றிகரமாக நிறவேற்றியிருந்தார்கள். கோவலனை வெட்டிய காவலனை மறக்க முடியவில்லை. (கண்டால் யாரும் வரச்சொல்லுங்கள்!) கோவலன், கண்ணகி பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். அதிலும், இந்த நாடகத்தின் கோவலனைப் பார்த்த பின்னர், இது வரையில் கற்பனையாக நம் உள்ளத்தில் நீண்டகாலமாக இருந்த கோவலனின் உருவமும், பூம்புகார் திரைப்படத்தில் கோவலனாக நாம் பார்த்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களது தோற்றமும் நம் மனதை விட்டு மறைந்து விட்டதுடன் இந்தக் கோவலனின் உருவமே அழுத்தமாகப் பதிந்துவிட்டது. சற்றுக் குனிந்தவாறான நடையும், பக்கவாட்டில் தலைசாய்ந்து நோக்கும் சுபாவமும் கொண்ட இந்த நடிகரின் தோற்றமும், அவரது இயல்பான அழுத்தமான நடிப்பும், அந்தக் கோவலனும்இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற உணர்வை நாடகத்தைப் பார்க்கும்போது தந்தது மட்டுமன்றி இப்போது நிலையாகவும் நம் நெஞ்சத்தில் பதிந்து விட்டது. கண்ணகி பாத்திரத்தை ஏற்றிருந்தவரை, கண்ணகியைத் தவிர்த்துத் தனியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. மாதவியிடம் இருந்து மீண்டு திரும்பிவரும் கோவலனை விரும்பி உபசரிக்கும் போதும், ஏதும் அறியாதவளாகக் கோவலன் பின்னால் மதுரைக்குச் செல்லும்போதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து, வெம்பி வெடித்து, வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த போதும், சின்னச் சின்ன உடல் மொழிகளைக்கூட அற்புதமாக அவர் வெளிப்படுத்தியிருந்தமை, இந்தச் சிறிய வயதில் இப்படியோர் அசாத்தியத் திறமையா என்று வியந்து பாராட்டவைத்தது. மதுரையை எரித்த காட்சியின்போது, கண்ணகியோடு கையிலே எரிதழல் கொண்டு நாமும் உடன் செல்வதுபோன்ற உணர்வில் காட்சியிலும் கானத்திலும் கலந்துவிட்டிருந்தோம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் தரவேண்டியது சொல்லவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன். அதாவது, கோவலன் பிரிந்து சென்ற பின்னர், “மங்கல நாண் மட்டுமே” இருக்க மற்றெல்லா நகைகளையும் கண்ணகி துறந்தாள்” என்று நாடகத்தில் பாடலில் சொல்லப்படுவதை “மங்கல அணி மட்டுமே” என்று மாற்றுவது நல்லது. “மங்கல அணியின், பிறிது அணி மகிழாள்……….” என்றுதான் சிலப்பதிகாரம் சொல்கிறது. மங்கல நாண் என்றால் அது தாலி என்று பொருள் படுகிறது. திருமணத்தில் கண்ணகிக்குத் தாலி கட்டப்பட்டதாகவோ, வேறெந்த ஒரு சமயத்திலாவது அவள் தாலி அணிந்திருந்ததாகவோ செய்திகள் இல்லை. மாதவி சிலப்பதிகாரத்தில் பெரிதும் பேசப்படவேண்டிய தனித்துவம் மிக்கதொரு பாத்திரப் படைப்பு. இந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்த மாதவிக்கான பகுதிகளை, அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் சிறப்பாகப் பூரணப்படுத்தியிருந்தார். அதிலும், கோவலனின் பாடலைக் கேட்டு, மாதவி சந்தேகப்படும் போது அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நாடகத்தில், மாதவியின் நாட்டியப் பகுதி போதுமானதா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது. இந்திர விழாவில் மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற ஆடற்கலைச் சிறப்பின் உச்சம். எனவே, பார்வையாளர்கள், மண்டபத்தை விட்டு வெளியேறும்போது கண்ணகியின் சீற்றத்தை மட்டுமல்லாமல், மாதவியின் ஆட்டத்தையும் நெஞ்சில் சுமந்து செல்லக்கூடியதாக விறுவிறுப்பான ஒரு நடனத்தைக் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது அதில் இடம் பெறவைத்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு நமக்கு வருகிறது. பாண்டிய மன்னனும், பாண்டிமாதேவியும் அரண்மனையில் நடன நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியிலும், கண்ணகி வழக்குரைக்கும் போதும், பாண்டியன் உயிர் துறக்கும் போதும், பாண்டிய மன்னனின் நடிப்பு அருமையாக இருந்தது. பாண்டிமாதேவியின் கண் அசைவும், முகபாவமும், நடையழகும் மிகச் சிறப்பாக இருந்தன. இரண்டு பாத்திரங்களையும் ஏற்றிருந்தவர்கள் அந்தப் பாத்திரங்களின் கனதியை நன்கு உணர்ந்து, உள்வாங்கி, வெளிப்படுத்தியிருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் வில்லன் பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அரண்மனைப் பொற்கொல்லனே அந்த ஒரேயொரு வில்லன். அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பொருத்தமானவராகவே இருந்தார். தனக்குள்ள சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, ஒரு விடயத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சற்று நகைச்சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஊட்டக் கூடியவிதமாக அவரின் உடல் மொழிகள் சில இடங்களில் வெளிப்பட்டமை பொருத்தமாக இருக்கவில்லை. “கோவலன் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவனை மரண தண்டனைக்கு ஆளாக்கிவிடவேண்டும், அதன்மூலம், தான் களவு செய்த சிலம்பைத் தனக்கே சொந்தமாக்குவதுடன், தனக்கு வரக்கூடிய உயிராபத்திலிருந்து தப்பிக்கொள்ளவும் வேண்டும்” என்று நன்கு திட்டமிட்டுத் தன் பேச்சாலும், செயலாலும் இயங்கிக்கொண்டிருக்கும் பொற்கொல்லனது மகா வில்லத்தனத்தைப் பார்த்து, பார்வையாளர்களின் உள்ளங்களில் அவன்மீது கடுமையான கோப உணர்ச்சி மட்டுமே எழவேண்டும். அவரைப் பார்க்கும்போது யாருக்கும் ஒரு சிறு புன்னகை வருவதற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதுதான் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம். நாடகத்தின் காட்சிகள் நகரும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தன. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைக் களங்கள் நமது மனக்கண்களில் தோன்றுவதைப்போலவே அப்படியே மேடையில் காட்சியமைப்புகள் அமைந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பாக என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மேடையில் பின்னணிக் காட்சிகள் அழகான வண்ணங்களில் மிகவும் நேர்த்தியாக இருந்தன. இசையமைப்பு இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னுமளவுக்கு அருமையாக இருந்தது. காட்சியமைப்பும், இசையமைப்பும் பெரும்பாலும் எல்லாக் காட்சிகளிலுமே, உயிரோட்டத்துடன், மிகவும் அருமையாக இருந்தமை பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. இன்றைய சமூகத்திற்கு, சிலப்பதிகாரத்தை, அதன் உண்மைத் தன்மைகளை அப்படியே உணர்த்தும் வகையில், உயிரோட்டமுள்ள காட்சிகளாக வெளிக்கொணர்ந்தமை ஒரு சாதனையே! சிலப்பதிகாரம் என்ற அந்தச் சிறப்பான காப்பியத்தில் உள்ள முக்கியமான எந்த காட்சியும் நழுவி விடக்கூடாது என்றும், மூலக் காப்பியத்தின் செய்திகளுக்கு எந்த வழுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் மிகவும் கவனமாகவும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், இயன்றவரையில், அக்கறையெடுத்து இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் அடங்கியதாக இந்தப் படைப்பை ஆக்கியளித்திருக்கிறார்கள். அத்துடன், எண்பதுக்கு மேற்பட்ட கூத்து மெட்டுப் பாடல்களின் ஊடாக, இந் நாடகம் நகர்த்திச் செல்லப்பட்டிருகிறது என்பதும் ஒரு வியத்தகு செயற்பாடாகும். நாற்பதிற்கும் மேற்பட்ட நடிகர்களும், இருபதிற்கும் அதிகமான இசை, வாத்திய மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களும் இந்த நாடகத்தில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பின் உச்சத்தில் முக்கில் விரல் வைத்து நிற்கின்றோம். இத்தனை பேரையும், அதுவும் இந்தநாட்டில்…..எப்படி? இதுவும் ஒரு சாதனையே…..உண்மையில் இதுதான் பெரிய சாதனை! இந்த நாடகத்தில், பங்குபற்றி, தமது பாத்திரங்களை உணர்ந்து, அதற்கான பயிற்சிகளிலும், ஒத்திகைகளிலும், ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இறுதியில் எல்லோரும் பெருமைப்படும்படியாக நடித்த நடிகர்கள், பண்பட்ட பின்னணிப் பாடகர்கள், திறமையான இசைக் கலைஞர்கள், மிகச் சிறந்த காட்சியமைப்பு விற்பன்னர்கள், கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர்கள், அனுபவம் மிக்க ஓலி, ஓளிக் கலைஞர்கள் என்போருடன், அக்கறை யோடு செயற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய எல்லோரும் விருப்புடன் உவந்தளித்த பங்களிப்பின் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பியத்தை, மேடையிலே வெற்றிகரமாக உலவவிட்டுச் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை இதன் வெற்றி நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. இதனை எழுதித் தயாரித்தவரான பாரதி பள்ளி நிறுவனரும், பிரபல நாடகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன் அவர்களையும், இதனை நெறியாள்கை செய்திருந்த பகீரதி பார்த்திபன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இத்தகைய சிறப்பான படைப்புக்காக அவுஸ்திரேலியத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லோரதும் நன்றி கலந்த பாராட்டுக்கு இவர்கள் எல்லோரும் உரித்துடையவர்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” ஆகிய மூன்று பெரும் அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது. இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம். இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு கலைப் படைப்பைப் பார்க்கக் கிடைத்த பாக்கியசாலிகள். பார்க்காதவர்கள், பார்க்கக்கூடிய இடத்தில் மீண்டும் இந்த நாடகம் மேடையேற்றப்படுமானால், தவறாமல் சென்று பார்த்து மகிழுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க தமிழ், வாழ்க சிலம்பின் புகழ்! https://arangamnews.com/?p=11614
  9. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.🙏
  10. இன்று காலையில் வேற்று இனத்தவர் ஒருவரது ரிக்ரொக் தளம் பார்க்க நேர்ந்தது..காட்டுத்தீயின் கொடுரத்திலிருந்து தப்பி விட்டாரா என்பது தெரியவில்லை.அவரது வீட்டின் முன் பக்கம், பின்பக்கம் எல்லாமே தீ பரவிக் கொண்டு இருந்தது.வீட்டின் பயர் அலாரம் அடிக்கும் போது தான் ஆங்கில வார்த்தைகளால் பேசிக் கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் ஓடிக் கொண்டு இருந்தார்..மிகுந்த கவலையான காட்சியாக மனதுக்கு பட்டது..
  11. சில மேடைகளில் ஒரு சில வார்த்தைகள் தமிழ் தவிர வேற்று மொழி கலந்து பேசினாலே மேடையை விட்டு இறங்கிப் போய் விடுவார்..அனைவரும் அறிந்தது தான்.அந்த வகையில் ரகுமான் மேல் மரியாதையுண்டு. பகிர்வுக்கு நன்றி தம்பி.🖐️
  12. கடந்த சில நாட்களாக நுணாவைக் காணம் என்று தேடும் போது வரவில்லை....அதனால் நுணா இண்டைக்கும் யாழ் பக்கம் வராட்டி செய்தி ஏதாவது கொண்டு வந்து எடுத்த இடம் இல்லாமல் போட்டால் வருவார் என்று நினைச்சனான்.எல்லாம் இந்த கலிபோர்ணியா தீயால் தான் தேடினோம்.🖐️
  13. படங்கள் யுத்த காலத்தை நினைவு படுத்துகிறது.😏காட்டுத் தீயை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த முறை தீ ஏட்பட்டுள்ளதாகவும் ,அதனை அணைப்பதற்கு தண்ணீருக்கு கூட தட்டுபாடு நிலவியுள்ளதாகவும் பத்திரிகை செய்திகளில் வந்திருக்கிறது..
  14. அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️
  15. வெளிவாரி பட்டதாரியாக இருக்கலாம் ..அந்த அடிப்படையில் பார்த்தால் குறைந்த வயதில் படித்து முடித்தாரோ ..?
  16. அங்குள்ள மக்கள் எப்போதும் கஸ்ரம் என்று சொல்லிக் கொண்டே தானே இருக்கிறார்கள்..அண்மையில் ஒரு பெண்மணியோடு பேசும் போது பல தரப்பட்ட உதவி கோரல்களை முன் வைத்தார்...உங்களுக்கு யாரும் வெளி நாட்டில் இல்லயா.... உதவி செய்வதில்லையா என்று கேட்டேன்...இருக்கிறார்கள் ஆனால் உதவி செய்ய முன் வாறார்கள் இல்லை என்றார்..எதனால்........ஒரே உதவி கேட்பதால்...அப்படி என்றால் தற்போதைய முக்கிய உதவியாக என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று கேட்கும் போது..........தனது தேவைக்கு ஒரு ஒன்றரை லட்சம் ...மகனது படிப்புக்கு உதவி தேதை மற்றும் அவருக்கு கணணியோ அல்லது கைப் போணோ வேணும்.அதை விட யூருப் செய்ய விருப்பம் அதற்கும் முடிந்தால் அல்லது யாராவது ஸ்பொன்ஸர் செய்தால் நன்று...இப்போ சொல்லுங்கள் அய்யா..மக்கள் எதை நோக்கி போகிறார்கள்..
  17. Ragulan Subramanijam 1h · 04.01.2025 #சட்ட ரீதியாகவே நாங்கள் #சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறோம்!! #இளங்குமரனுக்கு சட்டத்தை கையில் எடுக்க முடியாது - #தொழிலதிபர் பரபரப்பு #குற்றச்சாட்டு!! சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் - சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர்(jaffna #city #hardware)தெரிவிப்பு! சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றும் செயற்பாடாக இருப்பது போன்று உணர்வதாக வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சட்டரீதியான தரவுகளை அறியாது, உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுதும் வகையில் செயற்பட்டுள்ளார். இதனால் நேரடியாக பயன்பெறும் 180 தொழிலாளர்களுடன் 68 ஆண்டுகள் பாரம்பரியத்தை கெண்டுள்ள எமது வியாபார நிறுவனத்தின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் சேறுபூசப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் நாளுடன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த வியாழனன்று சாவகச்சேரி பொலிஸ் எல்லைக்குள் சுண்ணக்கல் சல்லியை திருமலைக்கு கொண்டுசென்ற தமது பார ஊர்தியை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குறுக்கான நிறுத்தி இடைமறித்திருந்தார். அத்துடன் எமது நிறுவனத்தின் வாகன சாரதியிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியதுடன் கொண்டு சென்ற பொருளை மூடியிருந்த போர்வையையையும் கிழித்து அடாவடித்தனம் செய்துள்ளார். ஆனால் சாரதி தம்மிடமிருந்த அனைத்து ஆவணங்களையும் காண்பித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கறித்த சுண்ணக்கல் சட்டடரீதியாகவெ கொண்டு செல்லப்படுகின்றது என எடுத்துக் கூறியும் நாடாளுமன்ற உறுப்பினர் அது சட்டவிரோதம் என கூறி எமது பார ஊர்தி கொண்டுசென்ற சுண்ணக் கல்லுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதேநேரம் குறித்த வியாபாரத்தை நாம் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் இந்த சுண்ணக்கல் சல்லிகளை கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக கறித்த சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்தும் வருகின்றோம். கடந்த காலங்களிலும் எமது நிறுவனத்தின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவாரால் சுமத்தப்பட்டது. ஆனாலும் அன்றிருந்த ஒருங்கிணைப்பு குழு நிர்வாகம் எமது வியாபார நடவடிக்கைகள் சரியானதென்று ஏற்றுக்கொண்டு அதை சட்டரீதியாக முன்னெடுக்க அனுமதி வழங்கியிருந்தது. இதேநேரம் நாம் அகழப்படும் சுண்ணக்கல்லை நேரடியாக வியாபாரம் மேற்கொள்ளவில்லை. வலிவடக்கு மற்றும் வலி கிழக்கு பகுதியில் இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களை தற்போது மக்கள் மீளவும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிலங்களில் இந்த சுண்ணக்கல் பாறைகள் அகழப்பட வேண்டியதும் கட்டாயமாக இருக்கின்றது. இதனால் குறித்த நிலங்களின் உரிமையாளர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் அனுமதியை பெற்று கனரக வாகனங்கள் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட வரையறைக்கு ஏற்ப சுண்ணக் கற்களை பெரும் செலவு கொடுத்து அகழ்ந்து வருகின்றனர். இதேநேரம் இந்த சுண்ணக்கல் அகழ்வை அப்பகுதிகளை சேர்ந்த பல நூறு குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாகவே காலாகாலமாக மேற்கொண்டு வருகின்றார்கள். அவ்வாறு அகழப்படும் சுண்ணக் கற்களை காணி உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றார்கள். அதை அப்பகுதியில் இருக்கும் 65 இற்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் (“கிறெசர்”) தமது தொழில் நடவடிக்கைக்கான அனைத்து அனுமதிகளையும் துறைசார் தரப்பினரிடம் பெற்று தமது ஆலைகளுக்கு கொண்டு சென்று உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றார்கள். இவ்வாறு விற்பனை செய்யும் சுண்ணக்கல் சல்லிகளையே நாம் கொள்வனவு செய்து திருகோணமலையிலுள்ள சிமெந்து ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றோம். அத்துடன் குறித்த சுண்ணக்கல் சல்லியை வீதியால் கொண்டு செல்லவோ அல்லது வியாபாரம் செய்யவோ எதுவித அனுமதியும் பெற தேவையில்லை என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக எமது வாகனங்கள் இரு தடவை நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு அது சட்டரீதியானதென உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விடயம் தொடர்பில் ஆராயாமால் அல்லது ஏதொவொரு காரணத்தை முன்னிறுத்தி இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார் என உணர முடிகின்றது. இவரது இந்த செயற்பாடானது யாழ் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களையும் முதலீட்டாளர்களையும் அச்சுறுத்துவது போன்றும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் தரப்பினர் கைவிட்டு முதலீடுகளையும் முதலீட்டாளர்களையும் ஊக்குகவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது All reactio
  18. அத்தனை பிள்ளைகளுக்கும் நினைவு நாள் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு அவர்களது குடும்பத்தினருக்கும ஆழ்ந்த இரங்கல்கள்.🙏
  19. பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு Published By: Vishnu 01 Jan, 2025 | 01:47 AM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி சார்பில் முறைப்பாட்டை பதிவு செய்த சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவராலேயே இவ்வாறான பொய்யான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியுடன் பல்வேறு விடுதிகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பொய்யான தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இதில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது. அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்கள் இவ்வாறான மிக மோசமான போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அரசியல் பழிவாங்கலுக்காக தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மிக மோசமான செயற்பாடாகும்.எனவே குறித்த நபரின் முழுமையான தகவல்களை நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம்.இது குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும்.அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/202674
  20. மஹிந்த பிரபுக்கள் புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள்; பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது - சரத் பொன்சேகா Published By: Vishnu 01 Jan, 2025 | 01:38 AM (இராஜதுரை ஹஷான்) மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை.பயங்கரவாதிகள் எவரும் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவும், குண்டுத்தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை.இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா, யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவ தளபதியான எனது பாதுகாப்பு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா, என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினர் இருந்தனர். பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா, சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி என் அருகில் அமர்ந்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஷ 'பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்'என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது. விடுதலை புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை.2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே மஹிந்தவுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. ட்ரோனர் கருவி ஊடாக மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது.ஏனெனில் மிக் விமானத்தை காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஆகவே அவருக்கு 30 பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது போதுமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/202673
  21. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்; புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை - பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர Published By: Vishnu 01 Jan, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் இடம்பெறும் போதே அந்த பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பரீட்சை பெறுபேறுகளை துரிதமாக வெளியிட எதிர்பார்க்கின்றோம். முதலாம் கட்ட விடைத்தாள் திருத்த பணிகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. மீண்டும் 10ஆம் திகதி, 18ஆம் திகதி, பெப்ரவரி முதலாம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். ஏப்ரலில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். எனினும் தினத்தை எம்மால் தற்போது ஸ்திரமாகக் கூற முடியாது. புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முயற்சிக்கின்றோம். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆழமாக மதிப்பாய்வு செய்து வருகின்றோம். விரைவில் இது குறித்த தீர்மானமொன்றை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு பரிந்துரையையும் எம்மால் முன்வைக்க முடியும். எதிர்வரும் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் 3000க்கும் மேற்பட்ட ஆரம்ப பாடசாலைகள் உள்ளன. அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் 6ஆம் தரத்துக்காக வேறு பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும். எனவே இவ்வாறான காரணங்களை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/202672

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.