Everything posted by யாயினி
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறைந்த காலத்தில் இந்த பெண் அடைந்த உச்சங்கள் நிறைய என்று இவரது பல்கலைக்கழக சக நட்புக்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்..🙏
-
"கிளீன்......"
உதவி என்று கேட்கும் போது எப்படி இல்லை என்று சொல்வது..🤔இப்போ அங்குள்ள அனைவருமே எதிர்பார்ப்போடு தானே பேசுகிறார்கள்..🤭
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இந்தப் பிள்ளை தன்ட வேலையை பார்த்துக் கொண்டு மன்னாரோடையே நின்றிருந்தால் இப்படியான பிரச்சனைகள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் மிக, மிக குறைவு.இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு என்ன,வென்ன கன்றாவி எல்லாம் செய்யப் போறார்களோ தெரியவில்லை.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இன்றைய தினம் யாழ்ப்பாண போலீசார் வழக்கினை கையாண்ட விதம்!?
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
திடீரென தையிட்டி விகாரைக்குள் புகுந்த வாகனம்; மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி! | UshanthanView
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
இதைத் தான் வைத்தியரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் தாத்தா;.நான் வைத்தியருக்காக எழுதவில்லை.எனக்கு அது தேவையும் இல்லை..ஆனால் ஒன்றை உருவாக்கும் போது அதில் விருப்பம் இல்லை என்றால் உடனயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.அப்போது இந்த மக்கள், எம்பி மார் எங்கே போயிருந்தார்கள்.விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு அதற்குரிய பெறுமதியை குடுத்து விட்டு விகாரையை அப்படியே விட்டால், மற்ற ஆலயங்களுக்கு போய் வருவது போல் விகாரைக்கும் போய் வருவோம் என்றெல்லாம் ஊரில் உள்ள சிலர் எழுதுகிறார்கள்..
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சத்தியமா இதை பார்த்துட்டு யாராவது புதிய உறுப்பினர்களா என்றால் ( புதுசா கோணான்) கோசான்..🤭
-
காற்றாடி
உங்கள் நட்பு பறவா இல்லை..போன வருசம் ஒரு மருத்துவனைக்கு தன்னார்வத் தொண்டுப் பணிக்கு போயிருந்தேன்.கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஒரு டச்சு பெண்மணியின் மேற் பார்வையில் பணியாற்ற வேணும்.மருத்துவமனையின் அத்தியாவசிய தொலைபேசிகளை இணைக்கும் இலக்கங்களை பாடாமக்கிக் கொண்டு போய் செய்ய வேணும்.பாடமாக்கிக் கொண்டு போவேன் அவாவைக் கண்டதும் எல்லாம் மறந்துடும்.சின்னப் பிழை என்றாலும் இது சரிப்பட்டு வராது..மண்டைக்குள் உனக்கு ஏதாவது இருக்குதா என்று எல்லாம் கேட்பா..காலப் போக்கில் அங்கு போகும் நாள் இரவு வந்தாலே நித்திரை வராது.இப்போ தனியாக செய்ய தொடங்கி விட்டேன் கடந்த வருடம் கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் மொழி பெயர்ப்பு வேலை ஒன்றும் வராமலிருந்த காரணத்தினால் தன்னார்வத் தொண்டுப் பணியாவது செய்வோம் என்று இணைந்து தேடிக் கொண்டது.இப்போ நான் இரண்டு வேலை செய்கிறேன்.அது வேறு விடையம்.தற்சமயம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க வேணும் என்று வைத்தியரால் பரிந்துரைகப்பட்டுள்ளேன்.அந்த பெண் ஆரம்ப காலத்தில் எங்கள் நாட்டில் தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய பரம்பரைச் சேர்ந்தவர்.எங்கள் நாட்டு நடப்புக்கள் எல்லாம் தெரியும் விளங்கும்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
அந்தப் பெண் அர்ச்ச்னாவுக்காக வாதாடுவதற்கு பெறும் சம்பளம் லட்சக்கணக்கில் என்று அர்ச்சனாவின் முகப் புத்தகத்தில் யாரோ எழுதி கிடந்தது.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
ஆ....கொஞ்சம் உசார் வந்துட்டு போலும்.🤭நல்லது தொடருங்கள் சுவி அய்யா.எங்கயோ எழுபது வயதுக்கு மேலாகிட்டு என்று எழுதி கிடந்து பார்த்த நினைவு..ஆகையால் இனிமேல் அண்ணாவிலிருந்து, அய்யாவுக்கு மாற்றம் பெறுகிறீர்கள்.சரி தானே.தொடர்ந்து நலமோடு நடமாடுங்கள்.🤭🖐️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தானே..இப்படி ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்..கொஞ்சம் காச்சல், தடுமலுக்கு வித்தியாசமாக இருக்கும்..எனக்கு தெரியும் நீங்கள் மச்சம் ஒண்ணுமே சாப்பிடுறது இல்லை என்று, ஆக்கம் ஒன்றில் படித்திருக்கிறேன்.வருத்தமான நேரத்தில் ஏதாவது சாப்பிடலாம் தானே.பிளீஸ்.
-
முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை
கடவுளே..சீனர்களுக்கு ஊர்வன , பறப்பன, நடப்பன, என்று ஒன்றும் மிச்சமில்லை தெரிந்த விசயம் தானே.. 🤭🤭
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
சற்று முன்னர் வைத்தியர் அர்ச்சனா விடுதலை செய்யப்பட்டுள்ள செய்தி முகப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
Thangamuthu Sathiyamoorthy 1h · முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்ததை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம். நன்றி, யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம்..
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர் மறைவு
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏எதிர்வரும் வார விடுமுறையில் கனடாவில் தான் இவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
இன்று உண்மையாகவே $200 டொலர்ஸ் தபாலில் வந்திருக்கிறது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
Thangamuthu Sathiyamoorthy 1h · திரு மாவை சேனாதிராஜா அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் நன்றி யாழ் போதனா வைத்தியசாலை. All re
-
யாழில் ஆலயம் ஒன்றில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!
சத்தியமா வேலைக்கு போக முதல் இப்படியான செய்திகளை பார்க்கவே கூடாது..தெரியாமல் பார்த்துட்டன்.இரவு வாறன்.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
carbon tax,” said Ford.மாத முடிவாகிற படியால் இந்த மாதம் $200 இப்படி ஒரு தொகை வர வாய்ப்பில்லை.அடுத்த மாத நடுப் பகுதிக்குள் அனுப்பி வைக்கிறார்களோ தெரியவில்லை.
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
இறந்த பின் யாரைப் பற்றியும் எதுவும் பேசுவதில் ஆர்வமில்லாதவள் நான்.பெற்றோர், பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாது வாழப் பழகி கொண்டால் நன்று.இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!
மலையக தாய் 2h ·
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி January 22, 20250 Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர். இதில் பலியான பகீரதன் புஸ்பராசா, தாயகத்தில் நீர்வேலியைச் சேர்ந்தவர என தெரியவருகிறது. முதலில் இவர்கள் பயணித்த Honda வாகனம் Nissan வாகனத்துடன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு Honda வாகனம் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சம்பவ இடத்தை விட்டு Honda வாகனம் 350 metre பயணத்தை தொடர்ந்தது. அங்கு ஒரு வீதி தடுப்பில் மோதிய Honda வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் வாகனத்தை விட்டு இறங்கிய தந்தை, மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது, அவர்கள் இருவரும் BMW வாகனத்தால் மோதப்பட்டாதாக தெரிவிக்கப்படுகிறது. Honda வாகன ஓட்டுநர் முதலாவது விபத்தின் பின்னர் சம்பவ இடத்தில் தரித்து நிற்காததால், இது ஓர் hit-and-run என்ற வகையில் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது விபத்து நிகழ்ந்த சாலை மங்கலான வெளிச்சம் கொண்டது எனவும் இது இந்த விபத்துக்கான காரணியாக இருக்கலாம் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்தனர். இதில் Nissan வாகன சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். BMW வாகன சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்தில் அவசர உதவி பிரிவினரால் மதிப்பீடு செய்யப்பட்டார். இந்த விபத்துகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. https://thesiyamnation.com/40662/
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியரது பக்கத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களோடு கதைத்து மாதம் 30.00 தொடக்கம் 40.000 சம்பளம் வாங்கித் தருவதாக எழுதி இருந்தார்.உங்கள் அரசாங்கம் எதற்காக இருக்கிறது....இப்படியே புலம் பெயர்ந்தவர்களிடம் வாங்கி கொடுக்கும் போது இரண்டு மாதத்தில் இந்த சம்பளம் பத்தாது என்பார்களே அதற்கு பின் என்ன திட்டம் என்று கேட்டு எழுதினேன்.இப்போ புலம்பெயர்ந்தவர்கள் பற்றி எழுதுவதை சற்று குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்..