Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. கரூர் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கரூர் சோகம் - விஜய் அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்தச் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த நீதிபதி, சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இன்றைய விசாரணையில், சம்பவம் நடந்த பிறகு எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட ட்வீட்டை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியதைக் கவனித்த நீதிபதி செந்தில்குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident - Vikatan
  2. 02 Oct, 2025 | 04:44 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார். அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது. இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் | Virakesari.lk
  3. மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறைத் தண்டனை பிறப்பிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவுக்கு 30 வருட கடூழிய சிறை! | Virakesari.lk
  4. திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன. இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர - தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார். இதேவேளை அந்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார். திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை! | Virakesari.lk
  5. (எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் (polymer-based) அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து, உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் திரவங்களை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1616 மற்றும் பொலிமர் பொருட்களால் செய்யப்பட்ட பாலூட்டும் போத்தல்களுக்கான இலங்கை தர நிர்ணய விவரக்குறிப்பு SLS 1306 என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்த பணிப்பு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் முன்கூட்டிய ஆய்வையும் அங்கீகாரத்தையும் கோருகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் இல. 9/2003 மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கவும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தவும் இலக்காகக் கொண்டுள்ளது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக், குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk
  6. ( எம்.நியூட்டன்) புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டனர். மருத்துவ அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றமைக்கு உரிய சான்றுகள் காணப்பட்டதால் கடற்படை வீரரையும் கடற்படை யுவதியையும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் காங்கேசன்துறை பொலிஸார் ஒப்படைத்தனர். ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடற்படை வீரரை முற்படுத்திய வேளை, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகம் ; கடற்படை வீரருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  7. 03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது கொள்கை பிரகடனத்தில் கூறி இருந்தோம். அதை நீக்கப்பட வேண்டிய ஒரு சட்டம். இந்த சட்டத்தினால் அனைவரையும் விட எமது கட்சி கடமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சட்டமூலத்தை மாற்ற வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று நாட்டில் தலை விரித்து ஆடுகின்ற இந்த போதை பிசாசு குறித்தும், போதைப்பொருள் வியாபாரிகள் குறித்தும் மக்களுக்கு நன்றாக தெரியும். அந்தப் போதைப் பொருளுக்கு பின்னால் இன்னொரு போதைப்பொருள் உலகம், பாதாள உலகம், பாதாள அரசியல் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசியலை ஒடுக்குவதற்கு இவ்வாறான சட்டங்கள் தேவை. அதனால் புதிய சட்டம் ஒன்று வரும் வரைக்கும் ஒரு விடயத்தை நாங்கள் மீண்டும் சொல்லுகின்றோம், இந்தப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு அப்பாவி குடிமகன் மீதும் நாங்கள் கை வைக்கப் போவதில்லை. நாட்டு மக்களது சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு எதிராகவே இந்த சட்டம் பாய்கின்றதே தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது. சுமந்திரனே, கடந்த காலத்தில் ரணிலுக்கு பின்னால் ஓடுனீர்கள், அவர்களுக்காக வழக்காடினீர்கள் ஆனால் அந்த காலத்தில் இந்த சட்டத்தை நீக்குவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் வந்து ஒரு வருடத்தில் நாட்டினை கட்டி எழுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்றார். புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk
  8. (இராஜதுரை ஹஷான்) உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர ஆகியோர் வரவேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,கொழும்பு துறைமுக நகரத்தை அண்மித்த வகையில் உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதில் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் காணப்பட்டன. சுமார் 12 ஆண்டுகால முயற்சியின் பயனாக பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்புடன் இந்த உள்ளக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர,கொழும்பு பேர வாவியை அண்மித்து உள்ளக விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும். இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.சினமன் எயார் விமானம் பிரதானமாக கொழும்புக்கு வெளியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கிறது. இருப்பினும் தற்போது கொழும்பு பேரா வாவியை அண்மித்து விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும். கொழும்பு நகரில் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் அமையப்பெற்றுள்ளது.இந்த புதிய திட்டத்தின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படும். உள்ளக விமான சேவைக்கும் புதிய அனுபவமாக அமையும்.ஆகவே இந்த புதிய சேவையானால் நாட்டின் சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தியடையும் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த, இந்த திட்டத்துக்குரிய பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்துள்ளோம். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாதுகாப்பு சட்டங்களுக்கமைய அனுமதி வழங்குவோம் என்றார். கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் | Virakesari.lk
  9. சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை. மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது. “விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான் | seeman slams tvk leader vijay - hindutamil.in
  10. சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது. விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை கூறிய பிறகு ஒரு வீடியோவை வெளியிடுகிறார். விஜய்க்கு தனது தொண்டர்கள், ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது. இப்படி நடந்ததற்கு திமுக தான் காரணம், முதல்வர் தான் காரணம் எனக் கூறி பழிபோட பார்க்கிறார்கள். உங்களது, தொண்டர்கள் அளவு கடந்து ஒரு இடத்தில் கூடுகிறார்கள், ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி மிதித்து தானே இறந்தார்கள். யாராவது மயக்க மருந்து தெளித்தார்களா, கல் எறிந்தார்களா? இது குறித்த ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இந்த விஷயத்தில் ஆதாயம் தேடத்தான் விஜய் ஆவலாக இருக்கிறாரே தவிர, மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் ஆர்வமாக இல்லை. இவை எல்லாம் அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள். இதை நாம் காலப்போக்கில் தெரிந்து கொண்டோம். அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக அவர், கட்சி தொடங்குவதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் இல்லை. ஆனால் விஜய்க்கு அதிகாரத்தின் மீதுதான் மோகம். அடுத்த முதல்வராக ஆட்சியில் உட்கார வேண்டும் என குறிவைத்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். விஜய் கருத்தியல் சார்ந்து எதுவுமே பேசவில்லை. தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் கூறவில்லை. திமுவை தான் மாறி மாறி விமர்சிக்கிறார். இதுபோன்ற பல நபர்களை ஆர்எஸ்எஸ் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன் | Thirumavalavan slams dmk and vijay over karur incident - hindutamil.in
  11. யாழ்ப்பாணம் 53 நிமிடம் நேரம் முன் சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு! வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் படகுச் சவாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால், மூன்று மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதனை ஏற்பாடு செய்த பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்த பருத்தித்துறை முனையில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு!
  12. 02 Oct, 2025 | 04:51 PM மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது. காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி மன்னார் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்! | Virakesari.lk
  13. 02 Oct, 2025 | 06:51 PM வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.15க்கு காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும். அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகி முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும். கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077 ரயில்) வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு, வவுனியா ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிப்பதால், தாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை இரத்து செய்ய வேண்டுமானால் பயணச்சீட்டை இரத்து செய்து முழு தொகையையும் மீளப்பெறும் வசதி, முன்பதிவு செய்யும் வசதியுள்ள ரயில் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் | Virakesari.lk
  14. 02 Oct, 2025 | 07:56 PM மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (1) இரவு கைது செய்ததுடன் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் 3 பசுமாடுகளை கட்டி வளர்த்து வருகின்றார் இதில் இறைச்சிக்காக வெட்டிய கன்று குட்டி ஒன்றின் தாயான பசுமாட்டிலிருந்து தினமும் காலையில் 15 லீற்றர் மாலையில் 15 லீற்றர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையில் நித்திரை செய்துவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது கட்டியிருந்த 3 மாடுகளும் திருட்டுப் போய் உள்ளதை கண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து காத்தான்குடியில் உள்ள மாடு வெட்டும் மடுவத்தில் திருடிச் சென்ற பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய வருவதாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (1) இரவு மாட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருடன் மாடு வெட்டும் மட்டத்தை சுற்றிவளைத்த போது அங்கு திருடு; போன பசு மாடு இறைச்சிக்காக பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் வெட்டி இறைச்சியாக்கப்பட்டை கண்டுபிடித்ததுடன் வெட்டிய பசு மாட்டின் தலையை மீட்டதுடன் இரு மாடுகளையும் உயிருடன் மீட்டனர். இதனை தொடர்ந்து இறைச்சி கடை முதலாளியை கைது செய்து விசாரணையில் அவர் அந்த பகுதி இளைஞர் ஒருவர் தனது மாடுகள் என தனக்கு பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் அவரிடம் இருந்து அதற்கான கடிதத்தை எழுத்து மூலம் பெற்று அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து திருடிய மாடுகளை விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் திருடய மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட சான்று பொருட்களுடன் அவர்களை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் மட்டும் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு | Virakesari.lk
  15. 02 Oct, 2025 | 05:41 PM (செ.சுபதர்ஷனி) 2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான கமகே இந்துவர அமேஷ மாதேவ தெரிவித்தார். மொஹம்மட் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் மித்தெனியவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவுக்கு தொடர்பிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறித்த ரக்பி வீரர் உயிரிழந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு எனது தந்தை ஹொரணை- கொழும்பு 120 பஸ் வீதியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எனக்கு மூன்று வயது மாத்திரமே எனினும் எனது உறவினர்கள் எனது தந்தையின் சகோதரர்கள் நண்பர்கள் ஆகியோர் அவர் பேருந்து உதவியாளராக பணியாற்றி இருந்தது எனக்கு தெரிவித்திருந்தனர். அது எனக்கும் நன்றாக தெரிந்த விடயமே. அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிசிடிவி காணொளி ஒன்றை காண்பித்து அதில் இருக்கும் நபர் உங்களது தந்தையா? என கேட்டனர். அதற்கு காணொளியில் இருக்கும் நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார். தந்தைக்கு முதுகு வலி இருப்பதாக எனது அம்மா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். எனது தந்தைக்கு முதுகு வலி இருந்தது உண்மைதான் எனினும் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தினால் பின்னர் முதுகு வலி ஏற்பட்டது. சூது, கப்பம் கொருதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தந்தை ஈடுபட்டுள்ளார். அவ்வாறு பெரும் பணத்தையும் ஏழை குடும்பங்களுக்கு செலவழித்துள்ளார். எவ்வாறாயினும் எனது தந்தை செய்தது தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தந்தை உயிரிழந்த போது அம்மா டுபாயில் இருந்தார். அம்மாவுக்கும், தந்தை பணியாற்றி வந்த பேருந்து சாரதிக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. அது எனக்கும் தெரியும் பின் தந்தைக்கும் தெரியவர பிரச்சனையாக மாறியது. ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட்ட இருவரையும் தந்தை தாக்கினார். சம்பத் ராமநாயக்க எனும் குறித்த பேருந்து சாரதியை இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம். இருந்தால் கொலை செய்வதாக எச்சரித்தார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எனது தந்தை கைது செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நானே அவரை பிணையில் வெளியே எடுத்தேன். எனினும் பொலிஸார் கூறியது போல எனது தந்தையிடமிருந்து துப்பாக்கி அல்ல 4 “வாக்கிடாக்கிகள்” மாத்திரமே கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் தந்தையின் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு அம்மா வெளிநாட்டுக்குச் சென்றார். விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த தந்தை பின்னர் அம்மாவை தேடினார். அதன் பின்னரே அவர் தனது இரண்டாவது கணவருடன் டுபாயில் இருப்பது தெரியவந்தது. தந்தையின் முன்விரோதியான ஜே.சி.பி . சமன் (பெக்கோ சமான்) என்பவரும் அதன் பின்னர் தந்தையுடன் பேச ஆரம்பித்தார். ஏதேனும் உள்நோக்கத்திற்காக பேச ஆரம்பித்தாரா என்பது எனக்கு தெரியாது. சம்பத் ராமநாயக்க சாரதியாக இந்த பஸ்ஸின் உரிமையாளரே ஜே.சி.பி சமன் . தந்தை உயிரிழந்தமை தொடர்பில் அம்மாவுக்கு தெரியப்படுத்தினோம் எனினும் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உயிரிழந்த விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை. அன்றைய தினமே அம்மா வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தார். தந்தை இறந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் ஜே.சி.பி . சமன் எனும் குறித்த நபர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை அம்மாவின் வங்கி கணக்கில் வைப்பிட்டார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயத்தை தெரிவித்திருந்தார். அம்மாவிடம் இதை கேட்ட போது அவரை இல்லை என அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னரே அதை ஏற்றுக்கொண்டார். எவராயினும் எனது தந்தையின் மரணத்துடன் எனது தாய்க்கும் ஜே.சி.பி சமன் என குறிப்பிடப்படும் நபருக்கும் தொடர்புள்ளது. பல வருடங்களாக தந்தையுடன் முரண்பட்டு கொண்டிருந்த நபர் திடீரென அவருடன் பழக ஆரம்பித்தது எப்படி? என தாயிடம் கேட்டபோது அவர் தனக்கு அதைப் பற்றி தெரியாது . எனது முதல் கனவனையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார். தந்தை இறந்து தற்போது 7 மாதங்கள் கடந்து விட்டன. தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினரே எனக்கான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். தாய் என்னை பராமரிப்பதோ என்னுடன் பேசுவதோ இல்லை. குற்றப்புலனாய்வு பிரிவில் காணொளியை காண்பித்து விசாரணை நடத்திய போது நானும் அங்கிருந்தேன். இருவரிடமும் வெவ்வேறாக விசாரணை செய்தனர். ஆரம்பத்தில் அது தந்தை அல்ல என மறுத்த அவர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதன் பின்னர் அது தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உள்ள என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. தந்தையின் மரணத்தின் போது வீட்டிற்கு வந்திருந்த அம்மா எனக்கு தேவையானவரை அல்ல விட்டு வைத்துள்ளீர்கள் இவனை எப்படி நான் பார்த்துக்கொள்வது என தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அங்கிருந்த எனது உறவினர்களும் நன்கு அறிவார்கள். எனது தாய்க்கு என்னையும் எனது தந்தையையும் கொலை செய்ய வேண்டும் என்றே திட்டமிருந்தது. அவரின் உறவுக்கு நாங்கள் இருவருமே தடையாக இருந்தோம் ஆகையால் எம்மை இல்லாமல் ஆக்கவே எண்ணினார். தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம். தந்தையின் மரணத்துக்கு காரணமான எனது அம்மாவையும் சமன் ரத்நாயக்க எனும் நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மனித படுகொலை போன்ற பாரிய குற்றச்செயலில் எனது தந்தை ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார். காணொளியில் இருந்த நபர் எனது தந்தை அல்ல ; அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவின் மகன் | Virakesari.lk
  16. கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கத்தினால் நடத்தப்படும் இக் கண்காட்சியில் சிங்கள மொழி நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ் மொழி படைப்பாளர்கள், தமிழ் பதிப்பாளர்கள், தமிழ் நுகர்வோர் பல்லாண்டுகளாக பெரும் பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை வருத்தத்துடன் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இவ்வாறான புத்தக கண்காட்சிகளில் தமிழ் பேசும், சிங்களம் பேசும் கலைஞர்களுக்கிடையிலான பிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் படைப்பாளர்கள் போதியளவு புத்தகக் கடைகள் இல்லாததால் கலந்துகொள்வதில்லை. கடந்த 26 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிக்கல் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். இத்தனைகால இந்த நிகழ்வு இலங்கையின் பண்பாட்டு ஒன்றுகூடலாகவும், பண்பாட்டுப் பரிவர்த்தனைக்குமான களமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கள மொழியில் வருடாந்தம் சுமார் 8000 நூல்கள் வெளியாகின்றன. தமிழில் 500க்கும் குறைவான நூல்களே வெளியாகி வருகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் நூல்களுக்கான சந்தை மிகச் சிறியது. அதுமட்டுமன்றி இங்கு வெளியாகும் நூல்கள் பல 300 பிரதிகள் மாத்திரமே பதிக்கப்படும் நிலையே தொடர்கிறது. இலங்கை புத்தக வெளியீட்டாளர் சங்கம் (SLBPA)ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை தமிழ் பதிப்பாளர்களை இணைத்துக்கொள்ள போதிய அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. இன்று 160 பதிப்பாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் இச்சங்கத்தில் ஓரிரு தமிழ் பதிப்பாளர்களே உள்ளனர். அதன் தலைமை இயக்குனர் சபையில் இருக்கும் எழுவரிலோ மேலதிக இயக்குனர்களாக இருக்கிற பதினோரு பேரிலோ அல்லது ஆறு பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவிலோ ஒருவர் கூட தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. இச்சங்கத்தின் இணையத்தளமும் அதன் பதிப்புகளும் கூட ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மட்டுமே உள்ளன. ஏற்பாட்டாளர்களில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் அவர்களின் குரல்கள் அங்கே ஒலித்திருக்கும். குறைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கக் கூடும். எனவே தமிழ் பதிப்புப் பரப்பில் ஏற்படுகிற பிரச்சினைகளை வெளியில் கொணர ஒரு அமைப்பாக இந்த சங்கத்தின் மூலம் ஒன்றும் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. குறைந்தபட்சம் SLBPA தாம் நடத்தும் சர்வதேச புத்தகக் கண்காட்சியையாவது பாரபட்சமின்றி நடத்தினால் நலிவடைந்திருக்கிற தமிழ் பதிப்பாளர்களுக்கு சிறிய ஆறுதலாவது கிடைக்கும். இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். •தமிழ் பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்வாங்கப் படவேண்டும்! * புத்தக் கண்காட்சியில் உரிய கடைகளை பெறுவதிலிருந்து, உரிய இடங்களை ஒதுக்குவது, வெளியீட்டு, பேச்சு போன்றவற்றுக்கான மேடைகளைப் பெறுவது, தமிழ் அறிவிப்புகள், விளம்பரங்கள், வசதிகள் என எல்லாவற்றிலும் இருக்கும் பாரபட்சம் அகற்றப்படவேண்டும். இப்போது ஒரு வீத தமிழ் கடைகள் கூட கண்காட்சியில் கிடையாது. * தமிழ் வாசகர்களும் பயனடையக் கூடிய வகையில் தமிழிலும் வழிகாட்டல், விளம்பர பதாகைகள் அமையவேண்டும். * மிகப் பெரிய பதிப்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கிற அனுமதி மாற்றப்படவேண்டும். பதிலாக சிறு கடைக்காரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கான குறைந்த கட்டண அறவிடும் முறை கொணரப்படவேண்டும். சிங்கள பதிப்பகங்களுக்கு நிகரான வளர்ச்சியடைந்த பதிப்பாளர்களும்,விநியோகஸ்தர்களும் தமிழ்ச் சூழலில் இல்லை என்பதை கருத்திற் கொள்ளவேண்டும். * தமிழ் பேசும் மக்கள் தமது தேவையை அங்கு பெறக்கூடிய வகையில் அங்கே உதவக்கூடிய தமிழ் ஊழியர்களும் அங்கே போதிய அளவு பணிக்கமர்த்தப்படல் வேண்டும். * இலங்கைப் பதிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரை உடைய ஒரு சங்கம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிச் சமூகங்களுக்கும் சமத்துவமான முறையில் இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதை ஒரு சிங்கள சங்கமாக வெளியில் உணரப்படும் நிலையை இச்சங்கத்தால் மாற்ற முடியும் என்று நம்புகிறோம். * இன்றும் தமிழ் பதிப்பாளர்கள் இலங்கையில் எதிர்நோக்கி வருகிற விசேடமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கான ஒரு அமைப்பும் இலங்கையில் கிடையாது. இனியாவது இவை மாற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை - இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு | Virakesari.lk
  17. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் 02 Oct, 2025 | 05:26 PM சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மேலும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன. கோரப்பட்ட நிதி இன்னும் நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (01) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "அகழ்வாய்வு பணிக்கான பாதீடு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கோரப்பட்டது. எனினும், பாதீடு இன்னும் அங்கீகரிக்கப்படாமையால் வழக்கு ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது." எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட நிதி மதிப்பீடு, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மதிப்பீட்டில் கோரப்பட்ட நிதியின் அளவு இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. தற்போதைய அகழ்வாய்வுப் பகுதிக்கு வெளியே மனித எலும்புகள் இன்னும் இருக்கலாம் என்பதற்கான புவியியல் ஆய்வின் மூலம் சான்றுகள் தெரியவந்துள்ளதால், அகழ்வாய்வுப் பணியைத் தொடர எட்டு வார கால நீட்டிப்பு கோரப்பட்டுள்ளதாக, ஒகஸ்ட் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவானிடம் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதி உதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது. "நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்" என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும். பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைதந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படவில்லை! - பணிகள் முடக்கம் | Virakesari.lk
  18. தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இருக்கு. அந்த கேள்விகள்தான் இந்த காணொளி. எந்த முன்முடிவும் இல்லாம நாங்க இந்த கேள்விகள முன்வைக்கிறோம்.
  19. “விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான குற்றங்களை செய்தார் என சொல்கிறார். ‘ஆட்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தடியடி நடத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ இதெல்லாம் அரசியல் நேர்மையற்ற குற்றச்சாட்டு. இது கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்தான். ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல். அவருக்கே இது நல்லதல்ல. விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும். பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். “விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” - திருமாவளவன் கருத்து | he does not think on his own Thirumavalavan opinion vijay karur tragedy video - hindutamil.in
  20. Simrith / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:23 - 0 - 22 வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார். விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். தாஜுதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "இந்த குற்றங்களை கிராமத்தில் ஊரில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை. இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர். வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பத்திர மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களா இல்லையா என்பது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”
  21. கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்தில் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். கடன்கள் காரணமாக உயிர்மாய்க்கும் பெண்களின் எண்ணிக்கை வன்னியில் அதிகளவில் உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் இயலுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கடந்த வருடம் 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் அதிகாரசபை கூறியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கச் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், பலர் பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகளை வழங்காமல் விட்டிருக்கலாம் - என்றார். அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு; அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு!
  22. யாழ்ப்பாணம் 4 மணி நேரம் முன் பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்! பருத்தித்துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களால் அனுமதிபெறாது சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட சோதிட நிலையம் ஒன்று பொலிஸாரால் நேற்றுமுன்தினம் முற்றுகையிடப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து, பருத்தித்துறை தும்பளை வீதியில் உள்ள தங்ககம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு மேலாக தங்கியிருந்துள்ளனர். பின்னர் இரண்டு வாரத்துக்கு முன்னதாக அதே பகுதியில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு சோதிட நிலையத்தை நடத்தியுள்ளனர். தகவலறிந்த நகரசபைத் தலைவர் அனுமதி பெற்று நிலையத்தை அமைக்குமாறும், அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தினார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறாததனால் பொலிஸாரின் உதவியுடன் அங்கு சென்று அவர்களது ஆவணங்களைப் பரிசோதித்தபோது அவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக நிலையத்தை நடத்தியமை உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்களை எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றினர் . பருத்தித்துறையில் சட்டவிரோதமாக இயங்கிய சோதிட நிலையம் அகற்றம்!
  23. கொழும்பு நீச்சல் கழகத்திற்கு (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை. ஏனென்றால், கொழும்பு நீச்சல் கழகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை எங்களிடம் வழங்கவில்லை. அவர்களிடம் சிசிடிவி கமராக்களும் இல்லை. எனது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு நீச்சல் கழகத்தின் கவனக்குறைவே காரணம். எனவே நான் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தேன். எனது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு! | Virakesari.lk
  24. விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!" கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்ச நட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வாரங்களாகப் பல ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். விஜய் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? உண்மைகள் விரைவில் வெளியே தெரிய வரும்' என அரசின் மீதும் காவல்துறையின் மீதும் விஷயத்தைத் திருப்பிவிடுகிறார். 'தைரியத்தோடு மீண்டும் வருவோம்' என்கிறார். எல்லாம் சரிதான். ஆனால், அத்தனை உயிர்கள் பறிபோனதற்கு எதோ ஒரு விதத்தில் தானும் காரணம் என்கிற தார்மீக பொறுப்பை விஜய் எங்கேயும் ஏற்கவில்லை. தன்னையும் பாதிக்கப்பட்டவனாகவே காட்டிக் கொள்கிறார். உயிர்களைப் பறிகொடுத்து நிற்கும் குடும்பங்களோடு சேர்ந்து பரிதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். ஆனால், அந்தப் பரிதாபத்தைப் பெற்றுக்கொள்ள விஜய் தகுதியானவர்தானா? கரூர் சம்பவத்துக்கு தவெக-தான் காரணம், காவல்துறைதான் காரணம் என இரண்டு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியோ இந்தப் பெருந்துயருக்கு தவெக கட்சியும் விஜய்யுமே தார்மீக பொறுப்பைக் கட்டாயம் ஏற்றிருக்க வேண்டும். சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த பிறகும் தன்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள முயலும் அவரின் பொறுப்பற்றத் தன்மையை இங்கே கேள்வி கேட்டே ஆக வேண்டும். அரசியல் ஒரு அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை இது நாள் வரைக்கும் விஜய் உணரவில்லை. பனையூரில் அவ்வபோது நிர்வாகிகள் கூட்டமென ஒன்றை விஜயை நடத்துவார். பெரிதாக தகவல் வெளியே தெரியாது. நிருபர்கள் மட்டும் பனையூர் அலுவலகத்துக்கு வெளியே நிற்போம். எப்படியோ விஷயத்தைத் தெரிந்துகொண்டு விஜய்யைப் பார்க்க நூறு, இருநூறு தொண்டர்கள் கூடியிருப்பார்கள். பவுன்சர்கள் சூழ விஜய் வருவார். தளபதி... தளபதி... கடவுளே... கடவுளே... எனத் தொண்டர்கள் தொண்டைக் கிழிய கத்துவார்கள். எந்தக் குரலும் விஜய்க்குக் கேட்காது. கார் கண்ணாடியைக் கூட இறக்கமாட்டார். கண்ணாடியில் கருப்பு கவர் வேறு போட்டிருப்பார். உள்ளே இருப்பது விஜய்தானா என்பது கூட தெரியாது. அந்த காரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு முடிந்தால் அந்த கார் மீது பாய்ந்து தொட்டுப் பார்த்து விட்டு அந்தத் திருப்தியோடு பனையூர் கடல் காற்றைச் சுவாசித்துவிட்டு தொண்டர்கள் ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். நிர்வாகிகள் கூட்டத்துக்குள் செல்லும் விஜய் அங்கே, 'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என அண்ணா கூறியதைப் பின்பற்ற போகிறேன் என வசனம் பேசுவார். மீண்டும் கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு பனையூர் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். கட்சி அலுவலகத்தின் வெளியே நிற்கும் தொண்டனைப் பார்த்து கையசைத்தால் கூட தன்னுடைய நட்சத்திரத்தன்மை மங்கிவிடும் என நினைப்பவர் எப்படி மக்கள் தலைவனாக மாற முடியும்? வினோதமாக சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரசாரத்தை வகுத்ததும் அந்த நட்சத்திரத்தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான். TVK Vijay விஜய் எப்போது வருவார் எப்போது வருவார் என அவரின் பட ரிலீஸைப் போல அவரின் அரசியல் உரைக்கும் மக்கள் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்தக் காத்திருப்பு மீதான எதிர்பார்ப்பை ஏற்றி, ஏற்றி ஒரு நாள் வெளியே வரும் போது கூட்டம் திமிறிக் கொண்டு வரும். தொண்டர்கள் விஜய்யை கடவுளைப் போல பார்ப்பார்கள். அதுதான் விஜய்க்குத் தேவை. கால்ஷீட் ஒதுக்கி மக்களைச் சந்திக்காமல், அரசியலை மதித்து அன்றாடம் மக்களைச் சந்தித்து மக்களோடு நின்றிருந்தால் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்திடம் இத்தனை வெறித்தனம் இருக்காது. நட்சத்திரத்தன்மையை நம்பாமல் கொள்கையை நம்பி மக்களை நம்பி களத்தில் இறங்கும் நம்பிக்கை விஜய்க்கு இல்லை. அதற்காக ஒரு நட்சத்திரத்துக்காக சாமானியன் இரையாவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் போல விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் பெருந்துயர் நிகழ்ந்ததற்கு அவரின் காலதாமதமும் மிக முக்கிய காரணம். விஜய் நாகப்பட்டினத்தில் காலை 8:45 மணிக்கும், கரூரில் மதியம் 12 மணிக்கும் பேசுவார் என தவெக தரப்பில் பத்திரிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக செய்தி அனுப்பப்பட்டது. அதையே தங்களின் ட்விட்டர் பக்கங்களிலும் வெளியிட்டனர். ஆனால், விஜய் சென்னையிலிருந்தே 8:45 மணிக்கு மேல்தான் தனி விமானத்தில் திருச்சி கிளம்பினார். நாமக்கலில் விஜய் மைக் பிடிக்கையில் மணி 2:30-யைத் தாண்டிவிட்டது. 12 மணி எனக் கூறிய கரூருக்கு விஜய் 7 மணிக்குதான் வந்து சேர்ந்தார். தவெக 12 மணிக்கு விஜய் வருவார் எனக் கூறியதைக் கேட்டு காலை 9 மணியிலிருந்தே அந்த வேலுசாமிபுரத்தில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு விஜய்யைப் பார்க்க வந்த கூட்டங்கள் தண்ணீரின்றி விக்கி மூச்சுத்திணறி இறந்த பரிதவிப்பு கதைகளை களத்தில் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்தக் கால தாமதத்துக்கும் மாநில அரசும் காவல்துறையும் மட்டும்தான் பொறுப்பேற்க வேண்டுமா விஜய்? மக்களோடு நெருங்கி வந்து அன்றாடம் மக்கள் பிரச்னையைப் பேசுவதில்லை. பத்திரிகையாளர்களைக் கண்டாலே அலர்ஜி. சரி, உங்கள் கட்சி நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கம் காட்டினால் கூட களத்திலுள்ள பல தகவல்கள் தெரியவரும். சுற்றுப்பயணங்களையும் முறையாக ஒருங்கிணைக்க முடியுமே. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என விஜய் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் எந்த மாவட்டத்திலும் மா.செக்களை அழைத்து அவர் தனியாகப் பேசியதில்லை. மா.செக்களும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விஜய்யை நோக்கி துண்டை வீசிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் கட்சியா? இதுதான் கட்டமைப்பா? 'இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்துவிட்டோம். திமுக, அதிமுகவுக்கு இணையான கட்டமைப்பு எங்களிடம் இருக்கிறது' என மார்தட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுகிறது. '10-15 வருசத்துக்கு முன்னாடி நாங்க நினைச்சா விஜய்யைச் சந்திக்க முடியும். இப்போலாம் அப்படி இல்ல...' என எத்தனையோ மா.செக்கள் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் தொண்டர்களின் எண்ணத்தைக் கூட அறியமுடியாமல் எப்போதுமே ஒரு தனி வட்டத்துக்குள் அரியணையில் ஏறி அமர்ந்துகொள்ளும் ஆள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? அவரிடம் எப்படி நாம் தார்மீக பொறுப்பை எதிர்பார்க்க முடியும்? நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என எல்லா தரப்பும் எப்போதும் உங்களின் அருளுக்காகக் காத்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட தோதுவான நேரத்தில் மட்டும் வெளியில் வந்து மேம்போக்கான ஒரு அரசியலைப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். இந்த வியூகங்களை வகுத்து கொடுக்க, கூடவே வியூக வகுப்பாளர்களும் வேறு!கரூர் பெருந்துயருக்கு இரங்கல் தெரிவிக்கும் அந்த வீடியோவில் கூட, 'சிஎம் சார் உங்களுக்குப் பழி வாங்கணும்னா என்னை என்ன வேணா பண்ணுங்க. நான் ஆபிஸ்லயோ வீட்லயோதான் இருப்பேன்' எனச் சினிமா வசனம் பேசுகிறார். அதிலும் ஒரு பிராண்டிங். திமுக vs தவெக, ஸ்டாலின் vs விஜய் எனக் களத்தைத் திருப்ப இந்த இரங்கல் வீடியோவையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி இரங்கல் வீடியோவிலும் வியூக வகுப்பாளர்களின் சொல்படி தன்னுடைய அரசியலை பொசிஷன் செய்துகொள்வீர்களா விஜய்? தன்னை அத்தனைப் பேரும் வழிபாட்டு மனநிலையோடு பார்க்க வேண்டும். தன்னை தெய்வமாகப் பார்க்கும் மக்களை மூலதனமாகக் கொண்டு தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிப்பட்டவர் தனக்குப் பின்னால் கூடும் கூட்டத்தை எப்படி அரசியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவார்? கரூர் பெருந்துயரின் பழி மொத்தத்தையும் விஜய் மீது சுமத்த முடியாது. அரசும் காவல்துறையும் இதில் பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால், அதற்காக விஜய் தன்னையும் பாதிக்கப்பட்டவனைப் போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிறேன் என வசனம் பேசுகிறார். கரியரின் உச்சத்தை விட்டாரே ஒழிய உச்சநட்சத்திரம் என்கிற கிரீடத்தை விஜய் இன்னும் இறக்கி வைக்கவில்லை. பகுத்தறியும் சிந்தனையை மலுங்கடித்து ரசிக வெறி ஊட்டப்பட்ட ஒரு பெரும் கும்பலோடு அரசியலிலும் நட்சத்திரமாகவே உச்சத்தில் இருக்க விரும்புகிறார். அரசியல்வாதிகள் தெருவில் நிற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தன்னுடைய பிரச்னைகளாக தோளில் சுமக்க வேண்டும். கரூர் பெருந்துயர் மூலம் விஜய் அந்தப் படிப்பினையைப் பெற வேண்டும். சினிமா வசனம் மட்டும் பேசாமல் இனியாவது கள அரசியலைப் படிக்க முயலுங்கள் விஜய்! TVK Vijay speech: 'மக்களோடு மக்களா நில்லுங்க விஜய்!' - கரூர் மரணங்களும் சில கேள்விகளும்! | TVK: 'Stand With the People, Vijay!' – Karur Deaths Raise Tough Questions - Vikatan
  25. சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும். அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை. இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும். எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள். சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும். வீடியோ: ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய் | Vijay releases video regarding Karur Stampede: Challenges CM Stalin - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.