Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவருக்கு விளக்கமறியல்!வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை (27) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சனிக்கிழமை (26) இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை (27) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவருக்கு விளக்கமறியல்! | Virakesari.lk
  2. 22 Apr, 2025 | 01:09 PM மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் - ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சந்திப்பு | Virakesari.lk
  3. 22 Apr, 2025 | 04:39 PM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி. பருத்திதுறை பிரதேச சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எனினும் அது நிராகரிக்கப்பட்டது. சில நாட்களிற்கு முன்னர் வேட்பாளருக்கான கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் மருதங்கேணி பொலிஸார் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர். எனினும் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. இன்று அவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் ஏன் அவர் அந்த கூட்டத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர் தான் தற்போது வேட்பாளர் இல்லை என பதிலளித்தவேளை பொலிஸார் அவரை நிந்தித்துள்ளனர் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டு;ம் என தெரிவித்த அவர்கள் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் இளைய மகனை எந்த வித காரணமும் இன்றி கைதுசெய்துள்ளனர். சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார். அவரது கணவர் மகன் மற்றும் எங்கள் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக பொலிஸார் பலமுறை பொய்வழக்குகளை தாக்கல் செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு எதிரான பொலிஸாரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன காரணமின்றி மகன் கைது - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  4. 22 Apr, 2025 | 05:15 PM உலகளாவிய ரீதியில் நிலவும் வர்த்தக குழப்பங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இன்றையதினம் ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 255,000 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 277,000 ரூபாவாகும். நேற்று திங்கட்கிழமை (21) ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகும். வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு | Virakesari.lk
  5. ருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்றைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலமுறை தாக்கப்பட்டமையாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குணதேவி ஒரே வீட்டில் வசிந்து வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றுக் காலை 7 மணியளவில் சகோதரி அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக குணதேவி தேவாலயத்துக்குச் செல்லவில்லை. தேவாலயத்தில் இருந்து சகோதரி காலை 9 மணியளவில் வீடு திரும்பியபோது குணதேவி வீட்டின் சமையலறையில் இரத்தவெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து அயலவர்கள் கூடியநிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் குணதேவியை சமையலறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். அம்புலன்ஸுக்கு அறிவித்திருந்தநிலையில், அம்புலன்ஸில் வந்த உத்தியோகத்தர் குணதேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வீட்டில் முன்னர் ஆள்கள் இல்லாதபோது கைத்தொலைபேசி ஒன்று திருடப்பட்டிருந்தது என்பதும், இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை இனங்கண்டனர். அந்த நபர் தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முதலில் மறுத்தாலும் பின்னர் மூதாட்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் திருடுவதற்காக சந்தேகநபர் சுவர் ஏறிக்குதித்துச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சமையலறையில் மூதாட்டியைக் கண்டதும், அங்கிருந்த ரீப்பை கட்டை ஒன்றால் மூதாட்டியைத் தாக்கி விட்டுச் தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அதனால் புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர் என்றும், இவர் மீது ஏற்பகவே பல்வேறு திருட்டுக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை
  6. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிப்புறங்களில் வேலையின்போது அதிகளவு தண்ணீர் குடிப்பதும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுப்பதும் அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பத்தில் தகிக்கும் வடக்கு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  7. 21 Apr, 2025 | 06:27 PM வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கௌ்ளப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது கட்டளைக்கு 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி வழக்காடியிருந்தார். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அவரது சமர்ப்பணத்தின்போது குறித்த வழக்கானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருகைதந்தபோது அதற்கு எதிராகப் போராட்டம் நடாத்தியதாக வழக்கு பொலிஸாரினால் ஏறாவூர் நீதிமன்றில் 36பேருக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் முறையான ஆதாரங்கள் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மீண்டும் அதே தகவலுடன் பொலிஸாரினால் புதிய வழக்கு 30பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்,போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இணைக்கப்பட்டுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் நீதிபதி அவர்கள் இடமாற்றத்தினால் சென்ற நிலையில் அவரின் கட்டளையொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் குற்றப்பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடாத்தப்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் மக்கள் போக்குவரத்தைத் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. முன்பின் முரணான இரண்டு நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளை இருப்பதை மறந்து சட்டத்தின் முதலாவது கட்டளை கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த இரண்டாவது கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இதேநீதிமன்றம் இதனை மாற்றமுடியும். வழக்கினை தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை போராட்டக்காரர்கள் மறித்தார்கள் என்பது ஒரு சிறுவிடயம் இந்த நாட்டில் நடக்கின்ற விடயம். சட்டம் சிறுசிறு விடயங்களை கவனத்தில்கொள்ளாது. சிறிய விடயத்திற்கு வழக்கினை தாக்கல் செய்து அனைவரது நேரத்தினையும் வீணடித்து எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் நேரத்தினையும் வீணடித்து இந்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இந்த வழக்கு தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை மறித்து போராட்டம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு விநோதமான குற்றச்சாட்டு. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க இங்கு வரும்போதுதான் அப்படி செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தது தலைநகரில் பல இடங்களில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியதானால்தான். எனவே புதிய புதிய சிந்தனையில் விநோதமான வழக்குகளை தாக்கல்செய்து நீதிமன்ற நேரத்தினை வீணாக்கக்கூடாது என்ற சமர்ப்பணத்தினை முன்வைத்தார். சமர்ப்பணங்களைச் செவிமடுத்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி கட்டளைக்காக வழக்கினை ஒத்திவைத்தார். வீதிகளை மறித்துபோராட்டதின் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க; அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
  8. 21 Apr, 2025 | 05:00 PM அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன் கருதியும், அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தித் தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) தனது பேத்தியாரான அருனோதயநாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நான்கு சகோதரர்களான நாங்கள் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார், குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார். அதனால் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சிறையில் இருக்கும் எனது தாயாரை விடுவியுங்கள்! - உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
  9. 21 Apr, 2025 | 03:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், பொதுமக்களிற்கு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வழக்குகளை கண்காணிப்பதற்கு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் காண வேண்டும், உண்மையை மக்களிற்கு தெரிவிக்க வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதியிடப்பட்ட விசாரணைகைள மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உட்பட சனல் 4 இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதித்திட்டத்திற்கு காரணமான துணை இராணுவ குழு கட்டமைப்புகளை செயல் இழக்கச்செய்வதற்காக புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஆள்வதை விட மக்களிற்கு சேவையாற்றுவதை உறுதி செய்யும் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்- மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் | Virakesari.lk
  10. 21 Apr, 2025 | 12:27 PM முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ''அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் | Virakesari.lk
  11. 17 Apr, 2025 | 12:23 PM ( எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார். தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம் வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர். ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர். புதிய ஆட்சியில் பொலிசார் அராஐகம் : ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார் | Virakesari.lk
  12. 17 Apr, 2025 | 04:24 PM பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
  13. உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தை அடுத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உதய கம்மன்பில நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடியதை அனேகமாக பொதுமக்கள் கண்டிருக்க முடியாது. இந்நிலையில் அவர் பிள்ளையானுக்காக ஆஜராகும் ஒரு சட்டத்தரணியாகக் தன்னைக் கூறிக் கொண்டு அவரை சந்தித்ததில் வேறு கதைகளும் இருக்கலாம். பிள்ளையானுக்கு, உதய கம்மன்பில சட்டத்தரணியானதன் ஊடாக முன்னைய காலங்களில் எந்தளவு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஊகிக்க முடியும். பிரபலமான வழங்குகளில் சட்டத்தரணியாகத் தொழிற்படாத ஒருவர் இப்படி இந்த வழக்கிற்கு திடீர் எனத் தோன்ற முற்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம். முன்னைய காலங்களில் கீழே ஒதுக்கப்பட்ட பல்வேறு ஊழல்களுக்கான கோவைகள் தற்போது மேல் எடுக்கப்பட்டு குற்றத்தடுப்பு மற்றும் மோசடி ஒழிப்புப் பிரிவினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். சட்டரீதியாகச் செய்ய வேண்டியவைகளை நீதித்துறை மேற்கொள்கிறது. அரசு என்ற வகையில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது. கடந்த காலத்தில் அழிவுக்கு உற்பட்ட பல நிறுவனங்களில் சுகாதரத்துறையே முன்னிலையில் உள்ளது. சுகாதாரத்துறையில் இன்று மருந்துகளுக்கு ஏதும் பிரச்சினைகள் என்றால் அது 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். அக்காலப்பகுதியில் சரியான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்று வெறுமனே உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை உருவாக்குவது எமது நோக்கமல்ல. கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான மாபெறும் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். நாம் மேற்கொள்வது அபிவிருத்தி என்பதை விட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெறும் செயற்பாடாகும் என்பது பொருத்தமாகும். கிராம மட்டத்தில் அபிவிருத்திக்கான ஒரு பொறி முறையை அமைக்க முயற்சிக்கிறோம். எனவேதான் அதற்காக நாம் ஆதரவு கேட்கிறோம் என்றார். உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ | Virakesari.lk
  14. 12 Apr, 2025 | 04:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். 1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.1987 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆயுத போராட்டம், மக்கள் போராட்டம் ஏதும் காணப்படவில்லை. நான்கு ஆண்டுகாலமாக அடக்கு முறைகளும், படுகொலைகளும், அழிவுகளும் மாத்திரமே இருந்தது. 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது யார் தீ வைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தான் நாடு தழுவிய ரீதியில் தீ வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சி கலவரத்துக்கு மத்தியில் கொள்ளையடித்தது. இதற்கு பல சாட்சிகள் உள்ளன. இந்த சாபத்தினால் தான் சுதந்திர கட்சி இன்று அழிவடைந்துள்ளது. இந்த நாட்டில் நல்லிணக்கம் என்ற விடயத்தை மறக்க முடியாது.பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதிர்க்கட்சிகள் ஏதும் பேசவில்லை. எவ்விதமான உரிய காரணிகளுமில்லாமல் தான் 1982 ஆம் ஆண்டு ஜே.ஆர். தேர்தலை பிற்போட்டார். 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தை உருவாக்கினார். இதனால் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு வரமாட்டார்கள். மனித படுகொலைக்காகவே நாட்டை நாசம் செய்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்கு இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களும், மக்கள் விடுதலை முன்னணியும், கம்யூனிச கட்சியும் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்கள். அதன் விளைவாகவே போராட்டங்களும், கலவரங்களும் தோற்றம் பெற்றன. மனித படுகொலையாளிகளுக்கு தண்டனையளிப்பதற்காக மாத்திரம் பட்டலந்த விசாரணை அறிக்கையை கொண்டு வரவில்லை. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வடக்கில் நேர்ந்த அழிவு பற்றி பேசுவதில்லையா என்று வடக்கு மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எமது கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் நந்திகடல் வரை சென்று உயிர்தப்பியவர்கள். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான விசேட திட்டங்களை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பகுதியில் செயற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம். தென்னாப்பிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை வழங்குவோம் என்றார். மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு | Virakesari.lk
  15. 12 Apr, 2025 | 10:57 AM (நா.தனுஜா) இலங்கையின் இவ்வாண்டு பொருளாதாரம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வை வரிகள் தொடர்பில் கருத்துவெளியிட்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்டபொருளியலாளர் லிலியா அலெக்சன்யன், அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகளுக்கு விலக்களிக்கப்படக்கூடும். அல்லது பேச்சுவார்த்தைகள் ஊடாக அவ்வரி அறவீட்டு வீதத்தைக் குறைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் சகலரும் குறைந்தளவிலான தாக்கங்களுக்கே முகங்கொடுக்கநேரும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று இலங்கையின் நிதியியல் மற்றும் நாணயக்கொள்கை முகாமைத்துவம் சிறப்பானதாகக் காணப்படுவதாகவும், அதனூடாக வெளியகக்கடன் பெறுமதி மற்றும் பணவீக்கம் என்பன குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபுமி கடொனோ, இந்த அடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் மீட்சி இன்னமும் நலிவான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது பெருமளவுக்குப் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமாகும். அதுமாத்திரமன்றி உலகளாவிய வர்த்தக அழுத்தங்கள் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் : ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறல் | Virakesari.lk
  16. 11 Apr, 2025 | 03:40 AM 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் முறையே 80% மற்றும் 40% ஆல் அதிகரித்தமையே காரணமாகும். ஏனைய பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது மாற்றமடையவில்லை. 2019 உடன் ஒப்பிடும்போது மூலப்பொருட்களின் விலையானது, 2024 ஆம் ஆண்டில் 2.2 மடங்கு அதிகரித்துள்ளதோடு 2025ஆம் ஆண்டில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை பெரும்பாலும் இடம்பிடிக்கும். இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான மூலப்பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), 2024 (மார்ச் வாரம் 3) மற்றும் 2025 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. 'புத்தாண்டுப் பலகாரங்களுக்கான’ விலையானது, 2024 ஐ விட 2025 இல் 7% அதிகரித்துள்ளது | Virakesari.lk
  17. 11 Apr, 2025 | 12:37 PM இலங்கையில் முதல் முறையாக திருகோணமலைக்கு கடற்படை தளத்தில் ஆழ்கடலில் சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவினரின் ஒத்துழைப்புடன் கடற்படையின் மலிமா ஹொஸ்பிடாலிட்டி சர்வீசஸ் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இலங்கையின் அழகிய நீரின் ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சுழியோடும் வீரர்கள் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை நடத்தி, விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம் | Virakesari.lk
  18. 11 Apr, 2025 | 11:27 AM யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை (09) இரவு தொடக்கம் வியாழக்கிழமை காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளும் அங்குள்ள கடற்பரப்பு பகுதிகளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன. கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டு, காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு, இக்கடற்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது | Virakesari.lk
  19. 11 Apr, 2025 | 06:32 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்றுபிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடிஅமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர். அந்தவகையில் கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர். இத்தகைய சூழலில் மீளவும், கடந்த 02.04.2025அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர். அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுமிருந்தது. அதேவேளை அப்பகுதியில் OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த 04.04.2025அன்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்ருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க. மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுதொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக்காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். அத்தோடு அனுமதிபெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகுதொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.04.2025 இன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கேட்டதுடன், உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று மேலதிக பிரதேசசெயலாளர், கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் ஜெயபாலகுணசேகரன் சுஜீனோ ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன. இவ்வாறு குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் குறித்தபகுதியில் சட்டவிரோத மாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, " கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டில் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த W.L.நிசாந்த என்பவர் தாமே அப்பகுதியில் வாடி அமைத்ததாகத் தெரிவித்தார். இந் நிலையில் அரச காணியில் அனுமதியின்றி எவ்வாறு வாடி அமைத்தீர்கள் என குறித்த நபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பிரதேசசெயலாளர் ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நபரிடம் பெயர் விபரங்களைப் பெற்றதுடன் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்தோடு குறித்த பகுதியில் அனுமதியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுக்குரிய சட்டநடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அதற்குரிய சட்டநடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு | Virakesari.lk
  20. 11 Apr, 2025 | 04:16 PM யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல் வேளையில் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஆலய வழிபாட்டிலும் கலந்துகொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அனைவரும் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் விசனம் தெரிவித்ததையடுத்து ஆலய தர்மகர்த்தா முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி | Virakesari.lk
  21. மிழக பா.ஜ.க-வின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் கடந்த சில வாரங்களாக தீயாக பரவியது. இந்தசூழலில்தான் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன? கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது, பா.ஜ.க. முடிவில் அந்த கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பிறகு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது. முடிவில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றிபெறவில்லை. இதற்கு அ.தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொண்டதுதான் காரணம் என பா.ஜ.க-வுக்குள் சர்ச்சை வெடித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை இந்தசூழலில்தான் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பா.ஜ.க-வின் டெல்லி தலைமை விரும்புகிறது. இப்படியான பரபர சூழலில்தான் அமித் ஷா, எடப்பாடி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில், 'அண்ணாமலையை தலைவராக வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது' என எடப்பாடி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், 'சீனியர் தலைவர்களை அண்ணாமலை மதிக்கவில்லை' என தமிழக பாஜகவில் இருந்தும் மூத்த நிர்வாகிகள் பலர் தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் முடிவுக்கு டெல்லிக்கு வந்தது. இதையடுத்து தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கோதாவில் குதித்தனர். இந்த போட்டியின் முடிவில் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியை தட்டி சென்றிருக்கிறார். இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள், "ஆரம்பத்தில் இருந்தே மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார்தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அமித்ஷாவின் ஆதரவு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு வந்தபோதே நயினாருக்கு மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். பிறகு அது தள்ளிப்போனது. இந்தசூழலில்தான் தற்போது புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்திருக்கிறார். எனவே அவர்களுடன் கூட்டணியை எளிதாக அமைக்க முடியும். அதற்கான நெளிவு, சுளிவு அவருக்கு தெரியும். மேலும் இதுவரை தமிழக பா.ஜ.க-வில் மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள். இதையடுத்து முக்குலத்தோர், வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரை தலைவராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வன்னியர் சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவர் இல்லை. எனவேதான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினாரை தலைவராக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் முக்குலத்தோரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துதான் நாயினரை தலைவராக்கியிருக்கிறது டெல்லி. இதில், சீனியர் தலைவர்கள் பலருக்கு வருத்தமும் இருக்கிறது. அவர்கள் நயினாருக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். எப்படியோ 2026 தேர்தலுக்கான பரமபதம் விளையாட்டை ஆட தொடங்கியிருக்கிறது, டெல்லி" என்றனர். 'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானத்தின் பின்னணி! - Vikatan
  22. ’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். 17 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் அவர், தனது மகனின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் சிறையிலிருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகிறார். ஆனால், அவர் வெளியே வரும் சமயத்தில் ஸ்பெயின் நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மகன் பொய் வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். ADVERTISEMENT குடும்பத்தோடு மீண்டும் சேரும் கனவோடு வரும் ஏகேவிடம், இந்த பிரச்சினைகளை மீண்டும் சரிசெய்யுமாறு அவரது மனைவி சொல்கிறார். தன் மகனை சிக்க வைத்தது யார் என்று கண்டுபிடித்தாரா? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் ‘குட் பேட் அக்லி’ படத்தின் திரைக்கதை. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நாஸ்டால்ஜியா என்ற பெயரில் அவர்கள் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வசனங்கள் அல்லது பாடல்களாக வைப்பதுதான் ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால், இதுவரை அப்படி வந்த படங்களுக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உள்ளது. அந்த படங்களில் காட்சிகளுக்கு நடுவே ஆங்காங்கே ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரெஃபரன்ஸ்களுக்கு நடுவே தான் படம் கொஞ்சம் வருகிறது. அந்த அளவுக்கு அஜித்தின் ஆரம்பகால படங்கள் தொடங்கி சமீபத்திய படங்கள் வரை ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸ், ரெஃபரன்ஸோ ரெஃபரன்ஸ். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு வசனத்துக்கு அஜித்தின் முந்தைய படங்களின் ஒரு குறியீடாவது வசனங்களாகவோ அல்லது பாடல்களாகவோ வந்துவிடுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அவை குதூகலத்தை தந்தாலும் போகப் போக அதுவே ஓவர்டோஸ் ஆகி போதும் என்று தோன்றவைத்து விடுகிறது. ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் பார்ப்பவர்களை ‘கூஸ்பம்ப்ஸ்’ ஆக்கும் வகையில் ரெஃபரன்ஸ் வைத்தால் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், வெறுமனே முதல் மூன்று நாட்கள் வரும் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு காட்சிக்கு ரெஃபரன்ஸ்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக். சரி, எழுதிய திரைக்கதையை குறைந்தபட்சம் கோர்வையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால், காட்சிகள் இஷ்டத்துக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஹீரோ நினைத்தால் ஜெயிலில் மகனுடன் வீடியோ கால் பேசுகிறார். நினைத்தபோது மூன்று மாதத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறார். இந்தக் காட்சிக்கு நியாயம் செய்கிறேன் பேர்வழி என போலீஸ்காரரான சாயாஜி ஷிண்டேவுக்கும் அஜித்துக்கும் 17 வருட பழக்கம் என்று ரெடின் கிங்ஸ்லியை வைத்து ஒரு வசனம் வேறு. எந்தக் காட்சியிலும் மருந்துக்கும் ‘டீடெட்டெயிலிங்’ என்ற ஒன்று இல்லவே இல்லை. இது ஒரு ஸ்பூஃப் படமா? அல்லது முந்தைய அஜித் படங்களின் ரெஃபரன்ஸ்களுக்கான கோர்வையா என்ற குழப்பம் கடைசி வரைக்குமே நீடிக்கிறது. படத்தில் நினைவில் இருக்கும் காட்சிகள் என்று சொன்னால் ‘இளமை இதோ இதோ’ பாடல் பின்னணியில் ஒலிக்க நடக்கும் பார் சண்டை. இடைவேளை காட்சி (அதிலும் ஒரு படத்தின் ரெஃபரன்ஸ்) என ஒரு சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். என்னதான் படம் போரடிக்காமல் காட்சிகள் சென்றாலும், படம் முடிந்த பிறகு யோசித்தால் அஜித்தின் பழைய படங்களின் குறியீடுகள் மட்டுமே நினைவில் தேங்கியிருக்கின்றன. படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகம் ததும்பும் அஜித்தை திரையில் காண்பதே ஒரு ரகளையான அனுபவமாக இருக்கிறது. நெகட்டிவ் தன்மை பொருந்திய ஹீரோ கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரித்து மேய்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிகரெட், குடி என்று வந்தாலும், அஜித் எந்த காட்சியிலும் மது, சிகரெட் பயன்படுத்துவது போல நடிக்காதது பாராட்டத்தக்கது. அஜித்தை தவிர படத்தின் மற்ற எந்த கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரோஃப் மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ உள்ளிட்ட அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளனர். படத்தின் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷின் பணி பாராட்டுக்குரியது. பாடல்களின் ‘காட் ப்ளஸ் யூ’ பாடல் மட்டுமே ஓகே ரகம். மற்றவை நினைவில் இல்லை. அபிநந்தன் ராமானுஜத்தின் ரெட்ரோ ஸ்டைல் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் ஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பில்லாததைப் போல இருப்பது உறுத்தல். என்னதான் படத்தின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் ரெஃபரன்ஸ், ஸ்லோமோஷன் ஷாட்ஸ் என இருந்தாலும் அடிப்படையாக ஒரு வலுவான கதை, திரைக்கதை அவசியம். ஆனால் அவை இப்படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங். இப்படத்தில் வரும் ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘வரலாறு’, ‘பில்லா’ போன்ற படங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் குறியீடுகளாக வைப்பதற்கு அவற்றில் இருந்த நல்ல திரைக்கதையே காரணம். ஆனால் வெறுமே ‘ஃபேன் சர்வீஸ்’ என்ற பெயரில் எடுக்கப்படும் இது போன்ற படங்களை எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்க முடியும் என்பது இயக்குநர்களுக்கே வெளிச்சம். குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்! | Good Bad Ugly Movie Review - hindutamil.in
  23. Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 05:08 - 0 - 50 பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து பரீட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து பாடசாலை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கடந்த 5-ம் திகதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது முழு ஆண்டு பரீட்சைகள் நடைபெறுவதால் பரீட்சைஎழுதுவதற்காக வகுப்பறைக்கு சிறுமி வந்துள்ளார். ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பாடசாலை நிர்வாகம் சிறுமியை 7-ம் திகதி அறிவியல் பரீட்சையும், 9-ம் திகதி சமூக அறிவியல் பரீட்சைகளையும் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து எழுத விடாமல் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த வெளியிட்டதால் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பாடசாலை வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்த தனியார் பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர், பள்ளி முதல்வர், பாடசாலை கண்காணிப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tamilmirror Online || பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
  24. கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், மஹிந்த ராஜபக்ஷ அல்லது ரணில் விக்கிரமசிங்க மீது இந்த அரசாங்கம் கை வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே நீங்கள் பிடிப்பீர்கள். தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே எம்.பி நான்தான்" என்று தசநாயக்க மேலும் கூறினார். பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானது, இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே குறிவைக்கிறது என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”ரணில் ராஜபக்சவின் முடியையும் அரசாங்கம் தொடாது”
  25. பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் 10 Apr, 2025 | 04:35 PM யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டதையடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன. தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால், இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து, அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு, அந்தோணிபுரம், மயிலிட்டியை சென்றடையும். மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும், இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ஆம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.