Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு 25 Mar, 2025 | 03:49 PM சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்டவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டங்களில் 58 வது படையணியின் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் மீதான தடைகளிற்கான காரணங்களை தெளிவுபடுத்தும் ஆவணமே இவ்வாறு தெரிவித்துள்ளது. பெயர் சவேந்திர சில்வா சவேந்திர சில்வா தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட நபராகும். சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவின் தளபதியாக செயற்பட்டார், இக்காலப்பகுதியி;ல் 58வது படைப்பிரிவினர் சட்டவிரோத படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யவேண்டும் என உத்தரவிட்ட சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளை தனது படையினர் சுட்டுக்கொன்றவேளை போர் முன்னரங்கிலேயே காணப்பட்டார். பெயர் ஜகத் ஜெயசூரிய ( தடைக்கான காரணங்கள்) ஜெயசூரிய தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் ஜெயசூரிய சம்பந்தப்பட்ட நபராகும். விசேடமாக ஜகத் ஜெயசூரிய 2007 முதல் 2009 வரை வன்னியில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரின் தளபதியாக விளங்கினார். இக்காலப்பகுதியில் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இலங்கை இராணுவத்தினர்,சட்டவிரோத படுகொலைகள்,சித்திரவதை ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். 2 வசந்த கரணாகொட தனிநபரின் வாழ்வதற்கான உரிமை , சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமலிருப்பதற்கான உரிமை, ஈவிரக்கமற்ற,அல்லது மனிதாபிமானற்ற விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,இழிவான விதத்தில் நடத்தப்படாமலிருப்பதற்கான,அல்லது தண்டிக்கப்படாமலிருப்பதற்கான உரிமையை பாரதூரமாக மீறும் நடவடிக்கைகளிற்கு காரணமாக இருந்துள்ளார் , இருக்கின்றார் என்ற அடிப்படையில். உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் 2020 இன் அர்த்தங்களுடன் கரணாகொட சம்பந்தப்பட்ட நபராகும். 2005 முதல் 2009 வரை இலங்கை கடற்படையின் தளபதியாக வசந்த கரணாகொட பதவி வகித்தார். இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் வசந்த கரணாகொடவின் கட்டளைப்பொறுப்பின் கீழ் சட்டவிரோத படுகொலைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதுடன்,சித்திரவதை,ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் தண்டனைகளை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு | Virakesari.lk
  2. முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (25) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் | Virakesari.lk
  3. 25 Mar, 2025 | 12:36 PM போலி கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேரும் அவர்களுக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (24) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவேளை கைதான 11 பேரும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்களில் அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பியவர்களும் காணப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் - 225 விமானத்தில் துபாய்க்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விசாக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. கைதான 11 சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களுடன் விமான நிலையத்துக்குச் சென்றிருந்த தரகர் ஒருவரும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தரகரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மற்றுமொரு தரகரின் உதவியுடன் தலா 45 இலட்சம் ரூபா அடிப்படையில் இந்த போலி கனேடிய விசாக்கள் தயாரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தரகர் உட்பட கைது செய்யப்பட்ட 12 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது | Virakesari.lk
  4. 25 Mar, 2025 | 01:46 PM யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் இளங்குமரன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கடும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தின் தலைவர் அமைச்சர் சந்திரசேகரனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமற்போனதனால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  5. 25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மக்களிற்கு சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள். அதில் நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் முக்கியமானது ஒன்று. இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ,தொடர்ச்சியாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசியல் கைதிகள் பல்வேறு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்,இன்று 30 ஆண்டுகளிற்கு மேல் இந்த சிறைச்சாலைக்குள் பல அரசியல் கைதிகள் உள்ளனர், நான் அவர்களில் ஒரு சிலரை பார்ப்பதற்காக இங்கு வந்தேன். கிட்டத்தட்ட 19 வயதில் கைதுசெய்யப்பட்ட, பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக விஜித ஹேரத் அவர்களிடம் ஒக்டோபர் மாதம் நான்,வலியுறுத்தியிருந்தேன் அதற்கு பதிலளித்த அவர் விடுதலை இடம்பெறுகின்றது அதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார். அதற்கு பின்னர் பிரதியமைச்சர் ஒருவரின் ஊடாக ஹர்சநாணயக்கார அவர்களிற்கு எடுத்துக்கூறியிருந்தேன்.அதற்குரிய பதில் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தேன்,செய்திகளை அனுப்பியிருந்தேன், எத்தனையோ ஊடக சந்திப்புகள் ஊடாக அரசியல் கைதிகள் தொடர்பாக,அவர்களின் கஷ்டங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி,மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது அவர்களின் விடுதலை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை தொடர்ச்சியாக எடுத்துக்கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்றுவரை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர். இவர்களிற்கு முதுகெலும்பு இருந்தால் அரசியல்கைதிகளின் விடுதலையின் பின்னர் இவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டும். தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிராமல் இந்த சித்திரவதையை இத்துடன் நிறுத்தி அவர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கவேண்டும். இதற்கு முன்னர் விடுதலையான எந்தவொரு அரசியல் கைதியும் இந்த சமூகத்திலே எந்தவொரு பிழையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கிலே இந்த அரசாங்கம் நகரக்கூடாது. அவர்களின் விடுதலைக்கு எந்த காரணமும் தடையாகயிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாற்பத்தெட்டு பேர் இருந்தனர்,38 பேரின் விடுதலை இடம்பெற்றுள்ளது அதேபோல மிகுதி பத்துபேரின், விடுதலை நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒன்றுதான், ஏனென்றால் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியினால் அவர்களிற்கான பொதுமன்னிப்பை வழங்க முடியும்,சட்டமா அதிபர்அவர்களிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடிசெய்து அவர்களை விடுதலை செய்யலாம்.ஏனென்றால் போதுமான வாக்குமூலங்கள் கிடையாது , சிங்களத்தில் பதியப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டுதண்டனை வழங்கப்பட்டுள்ளது, தண்டனையாகயிருந்தால் கூட அவர்கள் இரண்டு ஆயுள்தண்டனையை அவர்கள் எதிர்நோக்கி முடித்திருக்கின்றார்கள். 19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந் | Virakesari.lk
  6. 25 Mar, 2025 | 05:09 PM மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை | Virakesari.lk
  7. நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் 25 Mar, 2025 | 05:40 PM இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள சிறீதரன் எம்.பி, இந்த விடயம் குறித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது. இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத் தமிழர்கள் பார்க்கிறார்கள். எண்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றுள்ளது. நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் | Virakesari.lk
  8. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk
  9. இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2,252 பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் வீட்டில் (1,420 வழக்குகள்) நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொது போக்குவரத்து (261 வழக்குகள்), ஒன்லைன் தளங்கள் (192 வழக்குகள்), சாலைகள் (117 வழக்குகள்), பணியிடங்கள் (41 வழக்குகள்), பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் (20 வழக்குகள்), மத இடங்கள் (9 வழக்குகள்) மற்றும் பல்வேறு இடங்கள் (192 வழக்குகள்) ஆகியவை பிற இடங்களில் அடங்கும். பரவலான குறைவான அறிக்கையிடல் காரணமாக அந்த புள்ளிவிபரங்கள் பிரச்சினையின் உண்மையான அளவைக் குறைவாகக் குறிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு அப்பால், வீட்டு வன்முறை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இது தொடர்பில் ஆண்டுதோறும் சுமார் 130,000 புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உறுதி பூண்டுள்ளனர் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். Tamilmirror Online || “பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ”
  10. ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார். இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர். தாம் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச பெற்றுக்கொண்டார். மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார். உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார். சதுரங்கப் போட்டியில் (செஸ்) பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார். அத்துடன், கரம் விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார். பூல் (pool) விளையாட்டில் பாராளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார். இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும், உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர். கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். Tamilmirror Online || ‘செஸ்’ஸில் அர்ச்சுனா வெற்றி
  11. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர். தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும்- வடக்கு ஆளுநர் எதிர்பார்ப்பு!
  12. 24 Mar, 2025 | 09:50 AM யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது. மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி ! | Virakesari.lk
  13. 24 Mar, 2025 | 12:32 PM கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன. இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த சேவைக்காக விந்தணுக்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். விந்தணுக்களை வழங்க விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் சுகாதார துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டும் வரும் நோக்கத்தில் இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரும் தங்களது விந்தணுக்களை வழங்கி இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி | Virakesari.lk
  14. 24 Mar, 2025 | 02:52 PM போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை ! | Virakesari.lk
  15. மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ். மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேட்சைக் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24)வேட்புமனு நிரகரிப்பு தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்த இந்த சுயேச்சைக் குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் மேலும் கூறுகையில், எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி, யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றனர். யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு | Virakesari.lk
  16. இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது. “ஸ்டார்லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை | Virakesari.lk
  17. 22 Mar, 2025 | 05:04 AM யாழ். சேந்தாங்குளம் கடலில் வெள்ளிக்கிழமை (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை - சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! | Virakesari.lk
  18. 22 Mar, 2025 | 12:10 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று சனிக்கிழமை (22) கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (22) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். யாழில் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றல் | Virakesari.lk
  19. 22 Mar, 2025 | 02:04 PM மன்னார் - பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த லொறி வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில் 4 நபர்கள் பயணித்துள்ளனர். இதன் போது, ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் பள்ளமடு - பெரிய மடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி ; மூவர் படுகாயம் | Virakesari.lk
  20. 22 Mar, 2025 | 04:31 PM ஆர்.ராம் காசாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து அவ்வமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், காசாவில் நிலவும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. விரைவில் இப்பகுதியில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றுள்ள முன்னதாக, மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் காசா விடயம் சம்பந்தமாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடன் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காசாவில் நிலைமை மோசம் - இலங்கை ஆழ்ந்த கவலை ; வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு | Virakesari.lk
  21. செய்தியின் மூலம் ஏற்கனவே திரியில் கொடுக்கப்பட்டு இருக்கு ஆனால் வீரகேசரி நடத்துனரா சாரதியா என்பதில் தானும் குழம்பி எம்மையும் குழப்புது
  22. Published By: Vishnu 21 Mar, 2025 | 10:20 PM பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆசேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் பண்டாரவளை நீதிமன்ற பிரபல சட்டத்தரணி சிரில் ராஜ் அவர்களின் மனைவியும் பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஷ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார். இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும், பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் உயர்தர கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சட்டக் கல்லூரியிலே தனது தொழில்நிலை படிப்பை முடித்தது பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றி, மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை | Virakesari.lk
  23. மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அரியோசோமா தமிழிகம் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள் படக்குறிப்பு,புதிதாதக் கண்டுபிடிக்கப்பட்ட விலாங்கு மீனுக்கு தமிழ்நாட்டின் பெயரைச் சூட்டுமாறு மீனவர்கள் கோரியதாகத் தெரிவித்தார் முனைவர் டி.டி. அஜித் குமார். இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன். "தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன். "தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார். தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன். புதிய கடல்வாழ் உயிரினங்களுக்கான தேடல் படக்குறிப்பு,தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனுக்கும் இந்த தமிழிகம் விலாங்கு மீனுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கோடீஸ்வரன் அரியோசோமா தமிழிகத்தின் தோற்றதிலேயே தனித்துவம் தெரிந்தாலும், அது ஒரு தனி இனமா என்பதை உறுதி செய்யப் பல்வேறு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உருவவியல் பகுப்பாய்வு, மரபணு மூலக்கூறு பகுப்பாய்வு, அதன் உடலமைப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை ரேடியோகிராஃபி மூலம் ஆய்வு செய்வது எனப் பல்வேறு செயல்முறைகளின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த விலாங்கு மீன் இதுவரை கண்டிராத ஒரு தனி இனம் என்பதை உறுதி செய்ததாகவும் விவரித்தார் கடல் உயிரின ஆய்வாளர் கோடீஸ்வரன். இதன் ஆய்வு முடிவு, சர்வதேச ஆய்விதழான ஸூடாக்ஸாவில் (Zootaxa) ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த விலாங்கு மீன் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முன்புற கண் விளிம்பில் ஒரு வெண்மை நிறப் பட்டை மற்றும் கீழ் தாடைக்கு அருகே வயிற்றுப் பகுதியில் கருமை நிறத் திட்டுகள் உள்ளன. கூடுதலாக அதன் மேல் தாடையின் பாதி வரை இருக்கக்கூடிய நீண்ட பற்களைக் கொண்டுள்ளன. தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனும் தமிழிகம் விலாங்கு மீனும் ஒரே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதாக கோடீஸ்வரன் குறிப்பிட்டார். குறிப்பாக, "தமிழிகம் விலாங்கு மீனுக்கு 118 முதல் 123 முதுகெலும்புகள் வரை இருக்கும். ஆனால் தூத்துக்குடியன்ஸுக்கு 160 முதல் 164 முதுகெலும்புகள் வரை இருக்கும்," என்கிறார் அவர். முனைவர் அஜித் குமாரின் கூற்றுப்படி, தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இதுவரை இந்திய கடல் பகுதிகளில் 14 வகையான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகம் அறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி வரும் இந்த ஆய்வுக் குழு, இந்திய கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்படாத விலாங்கு மீன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விலாங்கு மீன்கள் எண்ணிக்கையில் மிகுதிய இருந்தபோதிலும், "இந்திய மக்கள் அதை ஓர் விருப்ப உணவாகக் கருதாத காரணத்தால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால், ஆய்வுகளும் அவை குறித்துப் பெரியளவில் நடைபெறவில்லை. நீளமான, பாம்பு போன்ற உடலமைப்பு, வழுவழுப்பான தோல், அவற்றின் நடத்தைகள், உயிரியல், சூழலியல் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தேவை அதிகமுள்ளது," என்று கூறுகிறார் முனைவர். அஜித் குமார். பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும் விலாங்கு மீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்) மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராத, மெல்லிய, நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை விலாங்கு மீன்கள். இந்த உடலமைப்பு, மிகவும் குறுகலான இடங்களுக்குள் நுழையவும், வழுக்கிக் கொண்டு எளிதில் நழுவிச் செல்லவும் ஏதுவாக இருக்கிறது. விலாங்கு மீன்கள் கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் கடலின் ஆழத்தில், பாறை இடுக்குகளில், குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவை. மீன்களில் பெரும்பாலானவை குழுக்களாகக் கூடி வாழ்பவையாக இருக்கின்றன. ஆனால், விலாங்கு மீன்கள் ஒரே இடத்தில் பல இருந்தாலும், தனித்தனியாக வாழக் கூடியவை என்றும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இவை ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டார் கோடீஸ்வரன். வேட்டையாடி உயிரினமான விலாங்கு மீன், சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள் எனப் பல வகையான இரைகளைச் சாப்பிடுகின்றன. அவை பதுங்கியிருந்து தாக்கும் வேட்டை பாணியைக் கொண்டவை. பெரும்பாலும், பாறை இடுக்கு போன்ற தனது மறைவிடத்தில் காத்திருந்து, தனக்கு அருகில் வரும் இரைகளைத் தாக்கி உண்கின்றன. இருப்பினும், இவற்றின் இனப்பெருக்க நடத்தைகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் மர்மமாக இருப்பதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார் முனைவர். கோடீஸ்வரன். விலாங்கு மீன்கள் கடலின் ஆழத்தில் வாழ்வதால், அவற்றை ஆய்வு செய்வதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலேயே அவை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Dr. Kodeeswaran P படக்குறிப்பு,அரியோசோனா தமிழிகம் என்று பெயரிடப்பட்ட புதிய வகை விலாங்கு மீன் குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க செயல்முறை இன்னமும் பல ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருந்து வருகிறது. கடல் பரப்பின் மேற்புறத்தில் முட்டையிடும் மற்ற மீன்களைப் போலன்றி, இவை ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. "விலாங்கு மீன்கள் ஆழமான கடல் நீரில் இனப்பெருக்கம் செய்வதாகவும் அவற்றின் லார்வாக்கள் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று, அங்கு வளர்வதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை," என்று கூறினார் கோடீஸ்வரன். இந்த நிலையில், அரியோசோமா தமிழிகத்தின் கண்டுபிடிப்பு, இந்திய கடல் பரப்பிலுள்ள பரந்த, பன்முகத் தன்மை கொண்ட விலாங்கு மீன்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினமாக இருந்தாலும், கடலின் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடியாகச் செயல்படும் விலாங்குகள் கடல் சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு அதிகம் அறியப்படாத மீன் இனங்கள் வழங்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது விலாங்குகள் மீன்பிடித் தொழிலில் ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சுற்றி நிலையான வணிக மீன்பிடி நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகள் இரண்டுக்கும் பயனளிக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்? - BBC News தமிழ்
  24. யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார். இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர். இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவேளை நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
  25. யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.