Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. Published By: Digital Desk 2 23 Jan, 2025 | 10:45 AM யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியரை கைது செய்துள்ள பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். விசாரணைகளை தொடர்ந்து ஆசிரியரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் மாணவி துஸ்பிரயோகம் ; ஆசிரியர் கைது | Virakesari.lk
  2. 23 Jan, 2025 | 12:17 PM இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. சபாநாயகர் தலைமையில் அமைச்சர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற தமிழ் இந்து அலுவலர்கள் சார்பில் திரு விஸ்வலிங்கம் முரளிதாஸ் இணைந்து புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு / இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரனையுடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அனுருத்தனன் ஆகியோரின் அனுசரனையில் தைப்பொங்கல் நிகழ்வு மிகவு‌ம் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் மூலம் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்படும். இதேவேளை, தைப்பொங்கல் மூலம் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்து மரபுகளை கௌரவிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்வின் வாயிலாக விவசாய துறையின் வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் புதிய திசை கோடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராக இருந்த இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்களினால் நவராத்திரி விழா பாராளுமன்றத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி விழாவானது பாராளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது. பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா! | Virakesari.lk
  3. மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் நாட்டின் தலைநகரிலுள்ள 24 மணி நேரமும் தீவிரமான செயற்பாட்டில் இருக்கக்கூடியதெனக் கருதப்படுகின்ற சர்வதேச சமூகத்தினரும் வெளிநாட்டுச் சுற்றுலாபயணிகளும் அதிகம் நடமாடுகின்ற பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் 70 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலீசாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை இச்சம்பவத்தின் பின்னணிகள் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் பொலிஸாரின் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில்மாற்றம் ஏற்படவில்லை என்பதைமருதானை சம்பவம் வெளிப்படுத்துகின்றது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
  4. ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார். எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும். ஆனால், சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுவாச நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு தெரிவிக்கையில், உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணியாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) உள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை. இந்த நோய் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுகிறது. மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பொதுவாக 45 வயதுக்குப் பின்னர் ஏற்படும். நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 சதவீதம் பேர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு குறைந்தளவிலான விழிப்புணர்வே காரணமாகும். காற்று மாசுபாடு மற்றும் முகக்கவசங்களை அணிவதை தவிர்த்தல் ஆகியனவும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றன. நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் சளி போன்ற சிறிய நோய்களுக்கு அதிக உணர்திறன் ஆகியவை அறிகுறிகளாகும். ஆஸ்துமாவைப் போலல்லாமல், சிஓபிடி என்பது ஒரு நாட்பட்ட நோயாகும். நீண்ட காலம் இன்ஹேலர்களை பயன்படுத்துதல் முதன்மை சிகிச்சையாக உள்ளது என தெரிவித்துள்ளார். புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே அதிகரிப்பு - வைத்திய நிபுணர்கள் | Virakesari.lk
  5. மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக பொது மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக பொது மைதானமாக பயன்படுத்திவரும் மைதானத்தில் ஒருபகுதியை சம்பவதினமான இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார். இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பொரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர். இதன் போது ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தான் சட்டரீதியாக 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் என்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரசகாணி எனவும் இவர்; ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர். இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு ஆவனங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான். அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது பொலிஸ் அதிகாரி இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் எனது 15 பேச் காணியை தரவும் நான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார். இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும்? எனவே நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்தும் மக்கள், குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய பொலிஸ் அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது காணி என உரிமை கோரிய ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரை தடுத்து நிறுத்திய மக்கள் | Virakesari.lk
  6. Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில் பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சால் சீமானின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பெரியாரிய ஆதரவாளர்கள் போராட்டம் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார் சீமான். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார். இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று (ஜன22) முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. சீமான் இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டும் என காட்டமாகப் பேசி வருகின்றனர் பெரியாரிய ஆதரவாளர்கள். இந்த முற்றுகைப் போராட்டம் குறித்துப் பேசியிருக்கும் சீமான், "ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன். பெரியார் மீது நான் வைத்த விமர்சனத்தை இதற்கு முன்பு பலர் வைத்திருக்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் வழக்கு போடவில்லை. என் மீது மட்டும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன். நீதிமன்றத்தில் உரிய ஆதாரத்தைக் காட்டுவேன். சீமான் பெரியாரை என்னைவிடவும் அதிகமாக விமர்சித்தது 'தி.மு.க'வினர்தான். 'இந்தி பள்ளிக்கூடத்தைத் திறந்தது இந்தப் பெரியார்தான். அந்த விழாவிற்கு நானும் போனேன் கருமம்" என்கிறார் திருவிக. இப்படி பலர் பெரியாரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். நாங்கள் எதையும் ஆதரமில்லாமல் பேசவில்லை. நான் பேசும் எல்லாவற்றிருக்கும் ஆதராம் கேட்பவர்கள், நான் பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெட்டி ஒட்டியதாகச் சொல்கிறார்கள். அந்தப் புகைப்படம் போலியானது என்று நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" என்று பேசியிருக்கிறார். Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள். ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" -சீமான் பதில்| NTK seeman gives press meet about thanthai periyar issue - Vikatan
  7. யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்! பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நண்பகல் செவ்வாய்க்கிழமை(21) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர். சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்தனர். உள்ளூர் விமான சேவைகள விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. கொழும்பு – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு, பயணிகளின் தேவைப்பாடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர். தற்போது சேவையை முன்னெடுக்கும் இண்டிகோ விமான சேவை நிறுவனம் சென்னை – யாழ்ப்பாணம் சேவைக்கு மேலதிகமாக பெங்களூர் - யாழ்ப்பாணம் சேவையை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கா அவர்கள் இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதாகவும் இதன்போது அபிவிருத்திக்கான நிதி மூலம் தொடர்பில் இறுதி செய்யலாம் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலர், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
  8. வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றமை, மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 34 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும், 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் பதிவு ; 28 பொலிஸார் பணி இடைநீக்கம் | Virakesari.lk
  9. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 451.3 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளதுடன், 2023 - 2024 காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமானது 2014 - 2015 ஆண்டுகாலப்பகுதியில் 16.4 பில்லியன் ரூபா 2015 - 2016 ஆண்டுகாலப்பகுதியில் 12.6 பில்லியன் ரூபா 2016 - 2017 ஆண்டுகாலப்பகுதியில் 28.9 பில்லியன் ரூபா 2017 - 2018 ஆண்டுகாலப்பகுதியில் 17.2 பில்லியன் ரூபா 2018 - 2019 ஆண்டுகாலப்பகுதியில் 44 பில்லியன் ரூபா 2019 - 2020 ஆண்டுகாலப்பகுதியில் 47.1 பில்லியன் ரூபா 2020 - 2021 ஆண்டுகாலப்பகுதியில் 45.2 பில்லியன் ரூபா 2021 - 2022 ஆண்டுகாலப்பகுதியில் 166.3 பில்லியன் ரூபா 2022 - 2023 ஆண்டுகாலப்பகுதியில் 73.6 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளது. அத்துடன் 2023 - 2024 காலப்பகுதியில் 3.8 பில்லியன் ரூபா இலாபம் அடைந்துள்ளது. நிறுவனத்தின் முறைகேடான நிருவாகம், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும், விமானங்களின் நிறுத்துகை நஷ்ட ஈடுகளை செலுத்தியமை, மேலதிக வட்டியை செலுத்தியமை ஆகிய காரணங்களாலும் 2019, 2020 காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் பரவல் காரணமாகவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்த காரணங்களினாலும், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களாலும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. 2023 - 2024 காலப்பகுதியில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக இலாபமடைந்துள்ளது. நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கி முன்னேற்றமடைவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார். 2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ்! : 2023 - 2024 வரை 3.8 பில்லியன் ரூபா இலாபம்! | Virakesari.lk
  10. யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டிவைத்து தாக்கிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையவர்களை தேடும் நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது, தாயின் கண்ணெதிரிலேயே இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரை சிலர், அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து, கட்டிவைத்து மிக மோசமான தாக்கியுள்ளனர். இளைஞரை சித்திரவதை செய்து தாக்கிய காட்சிகளை, அந்த கும்பல் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இளைஞர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் 20 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். யாழில் இளைஞரின் ஆடைகளை களைந்து, சித்திரவதை செய்த கும்பல்; ஒருவர் கைது; சுமார் 20 பேரை தேடும் பொலிஸார்! | Virakesari.lk
  11. புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்துள்ளனர். இதேவேளை பயங்கரவாத தடைச்சட்;டத்தை நீக்குவது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி நீக்கவேண்டும் என மக்கள் மன்றம் வேண்டுகோள்விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் மன்றம் மேலும் தெரிவித்துள்ளதாவது. புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி சுப்பிரமணியம் சுவேந்திர ராஜனை கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள்இன்று சந்தித்தனர். . 15 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அறுகம்குடா சம்பவத்தைத் தொடர்ந்து 2024 ஒக்டோபரில் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் ஆனால் மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடுமாறு கூறப்பட்டுள்ளது. அண்ணளவாக ஐந்து தசாப்தங்களாக இலங்கை அரசால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டு வரும் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் சுவேந்திர ராஜன் ஒருவர். 1979 ஆம் ஆண்டு "தற்காலிகச் சட்டமாக" அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை அரசால் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அதிருப்தியாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தேசிய மக்கள் கட்சி அ புதிய அரசாங்கத்தின்கீழ் 90 நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் இன்று விடுதலை | Virakesari.lk
  12. கிளிநொச்சியில் இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதத்துடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, நீதிமன்ற கட்டளைக்கு அமைய இன்று வரை அந்த 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் (22)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச் சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதம்; ஒத்திவைக்கப்பட்ட 8 மாத சிறைத் தண்டனை - கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு | Virakesari.lk
  13. மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில், இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது. இதை ஏற்க முடியாது. நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது. இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் அனைத்து தகுதிகள் இருந்தும் திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அந்த வகையில் அரசானது பழிவாங்கலை கைவிட்டு அவருக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். பதவி உயர்வுக்கான சூழலை அரசு உருவாக்காவிட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் JVP செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். அதேநேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை. அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறது. மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகிறது. ஆனால் ஆட்சியை கைப்பற்ற அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவிநிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம் | Virakesari.lk
  14. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அரசாங்கம், அந்த ஒத்துழைப்பு எதிர்வருங்காலங்களிலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு 'ஒரே சீனக்கொள்கையின்' பிரகாரம் சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ஜனாதிபதியின் சீன விஜயமானது எதிர்வருங்காலத்தில் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னேற்றகரமான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய மிகமுக்கிய விஜயமாக அமைந்ததாகவும், இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குரிய பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும், 15 இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு உலகளாவிய ரீதியில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு சீனா போன்ற மிகப்பெரும் பலம்பொருந்திய நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிடம் இருந்து அதற்கான உத்தரவாதம் கிட்டியமை தாம் பெற்ற வெற்றியாகும் எனத் தெரிவித்தார். அதேபோன்று, 'சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது 'ஒரே சீனக்கொள்கையை' நாம் ஆதரிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தோம்' எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். அதேவேளை சீனாவில் ஏதேனும் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறின், அதற்கு எதிராக இலங்கை உடன்நிற்கும் எனவும், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் சீனாவுக்கு எதிரான எந்தவொரு பிரிவினைவாத செயற்பாடுகளும் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தாம் சீன ஜனாதிபதியிடம் உத்தரவாதமளித்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த ஒத்துழைப்பு எதிர்வருங்காலங்களிலும் தொடரும் என்றார். அத்தோடு சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை, ஒரே சீனாவுக்கான ஆதரவினையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இதன்போது 'எதிர்வருங்காலத்தில் சீனா தாய்வானுக்கு எதிராக ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பட்சத்தில், அதனையும் இலங்கை ஆதரிக்குமா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஜித்த ஹேரத், 'தாய்வான் என்பது சீனாவின் ஒரு பகுதி என்பதால், தாய்வானை ஆக்கிரமிக்கவேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. சீனாவின் ஓரங்கமே தாய்வான் என்பதை எமது அரசாங்கம் மாத்திரமன்றி, முன்னைய அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே நாம் அக்கொள்கையை மாற்றமின்றித் தொடர்வோம்' என்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் எமக்கான சீனாவின் ஆதரவு தொடரும் ; அரசாங்கம் | Virakesari.lk
  15. (எம்.மனோசித்ரா) வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய சதொச விற்பனை நிலையங்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிலக்கடலை கிலோ ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 995 ரூபாவாகும். சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 300 ரூபாவாகும். உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 765 ரூபாவாகும். நெத்தலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 940 ரூபாவாகும். பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 645 ரூபாவாகும். பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 230 ரூபாவாகும். பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 288 ரூபாவாகும். வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 240 ரூபாவாகும். உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு | Virakesari.lk
  16. தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட ‘தாரா கிரண்’ என்ற கப்பலை தயார்படுத்தியுள்ளது. கடலில் பயணிக்கும் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் செயல்முறைகள் பெப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முதல் பயணம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ&என் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகிறது. 2024 முதல் இலங்கை அடைந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கவனித்த ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர்கள் குழு தென்னிந்தியாவுக்கும் இலங்கையின் வடக்குக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளை நேரடியாக மீண்டும் நிறுவும் வகையில் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிறுவனமானது மார்ச்சில் இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான ஒரு பயணிகள் படகுச் சேவையையும் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏ & என் லாஜிஸ்டிக்ஸின் உள்ளூர் நிறுவனம் கே. கே. எஸ். டெர்மினல் ஆப்ரேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். மேலும் தகவல்கள் பெற உள்ளூர் நிறுவனத்தை 071 798 8928 அல்லது 077 379 3368 என்ற எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை | Virakesari.lk
  17. ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவையானதொரு செயற்திட்டமாகும். இதனூடாக பல விடயங்கள் இந்த நாட்டில் கிளீன் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஊடாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் நல்ல விடயங்களுக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக நீண்டகாலமாக நிலைத்திருக்க சமூக கலாச்சார மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். . இது ஒரு இனத்திற்காக அன்றி அனைத்து இன மக்களுக்குமான வேலைத்திட்டமாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். நல்ல நடத்தை மாற்றத்தை செய்யாது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதனை நாங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை பார்க்க முடியுமாக இருந்தது. அது இரண்டு மொழியில் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ் மொழியில் அது இருக்கவில்லை. இதனால் நடத்தை மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பித்து தமிழையும் அதில் சேருங்கள் என்று கோருகின்றோம். இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. வேலைத்திட்டத்தின் தலைப்பு புரியாது அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே. அஸ்வெசும என்றால் அதன் தமிழாக்கம் என்ன? 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களையும் கொண்டு வாருங்கள். உறுமய போன்ற திட்டங்களின் தமிழ் பொருளையும் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் மத நல்லிணக்க அமைச்சின் பௌத்த சாசன அமைச்சு மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மூன்று மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. இந்நிலையில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்றார். அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ? புதிய சொற்களை அறிமுகப்படுத்துகையில் தமிழ் சொற்பதங்களையும் அறிமுகப்படுத்துங்கள் - வலியுறுத்தல் | Virakesari.lk
  18. (எம்.வை.எம்.சியாம்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனக்கூறப்பட்டதல்லவா? பதில்- ஆம். தற்போது நாம் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். இந்தத்தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான தீர்மானத்தின் போது கொள்கை ரீதியான பிரச்சினைகள் ஏற்படாது என நாம் நம்புகிறோம். எனவே நிறைவேற்று அதிகார முறைமை நிறைவுக்கொண்டு வருவதாக இருந்தால் கட்டாயமாக தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும். தேர்தல் முறைமை மாற்றத்துக்கு அமையவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முடிவு கொண்டு வர முடியும்.இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் போது பிரச்சினைகள் ஏற்படாது.தேர்தல் முறைமையிலேயே சிக்கல் உள்ளது. கேள்வி - பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு நீண்டகாலமாக தீர்வுக்காணப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இந்த விடயத்தில் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா? பதில் - இந்த்துறையில் வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனங்கள் உள்ளன.இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன.இதுவே இன்றைய நிலைமை.எனவே நாம் ஒவ்வொரு நிறுவனங்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம். அவர்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன்பின்னர் பொதுவான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்போம்.அமைச்சர் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் - ஜனாதிபதி | Virakesari.lk
  19. அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானில் பணிபுரிந்த பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்புpனர்களுடன் இணைவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையில் உள்ளனர் என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய உத்தரவை தொடர்ந்து 27 ம் திகதி முதல் அமெரிக்காவிற்கு பயணிக்கும் விமானங்களில் ஏறுவதற்கு ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு அனுமதி மறுக்கப்படும். தலிபான் 2021 இல் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலரின் பாதுகாப்பு தொடர்பில் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும் தடை - டிரம்ப் உத்தரவில் கைச்சாத்திட்டார் | Virakesari.lk
  20. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் கடந்த 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பொருட்டு கடந்த 10 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நான் இந்தியாவுக்கு பயணமாகி இருந்தேன். அன்றைய தினம் மாலை 6.35 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில் யு.எல் 123 விமானம் புறப்படத் தயாராயிருந்த நிலையில் எனது கடவுச் சீட்டில் குறைபாடு உள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்போது என்னுடன் இணைந்து பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விமானம் புறப்படத் தயாரான இறுதி நேரத்தில் என்னை இந்திய பயணத்திற்கு அனுமதித்தனர். 13 ஆம் திகதி நான் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது குறித்த பயணத்தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறான பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை எனத்தெரிவித்திருந்தனர். நீதிமன்றக் கட்டளைகள் எதுவுமின்றி சபாநாயகரின் ஆலோசனை எதுவுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளதென குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு இருக்கும் அடிப்படை சிறப்புரிமையை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணி குறித்து இந்த சபையில் நான் கேள்வி எழுப்புகின்றேன். அத்தோடு இன்னொரு முக்கிய விடயத்தையும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இரு நாட்களுக்கு முன்னர் (19 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் தனியார் ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் “ சிறிதரன் கனடாவிலிருந்து வருகின்ற தடை செய்யப்பட்ட அமைப்போடு பேச முனைந்தாகவும் அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும் அந்த காரணத்தின் அடிப்படையில்தான் அவரை தடுக்க விமான நிலையத்தில் முயற்சி செய்திருக்கலாம் ஊக்கத்தின் அடிப்படையில் சிறீதரனை அவர்கள் மறித்திருக்கலாம். ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்துதான் நான் இதனைக் கூறுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இது தொடர்பில் சுமந்திரனிடம் விசாரித்தால் எந்த எந்த ஊடகங்களில் இந்த செய்தி வந்துள்ளது என்பதனை அறிந்து அந்த ஊடகங்களின் பிரதானிகளை விசாரிப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியும். இது எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரும் சதியாகவே நான் கருதுகின்றேன். விமான நிலையத்தில் தடுக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதில் கூறியுள்ளார். நான் அவரை சென்னையில் சந்தித்தபோது சுமந்திரனும் இது தொடர்பில் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இதனை விட வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்த அய்யூப் அஸ்மின் என்னை விமான நிலையத்தில் தடுத்த அன்றையய தினமான 10 ஆம் திகதி தன்னுடைய முக நூலில் ''கடந்த நாட்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விமான நிலையத்தில் எவ்வித இடையூறுகளும் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை விமான நிலைய உயரதிகாரி'' என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். நான் இந்தியாவிலுள்ள பிரபல அரசியல் தலைவர் செந்தமிழன் சீமானுடன் இருக்கும் படத்தையும் தன்னுடைய முகநூலில் பதிவேற்றி எனக்கு எதிராக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். அஸ்மினும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்கள் .சுமந்திரன் சொன்ன செய்திக்கும் அஸ்மினின் பதிவுக்கும் . ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் எனக்குத் தெரிகின்றது. என்னை அந்த நிகழ்வுக்கு போக விடாது தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இதற்குப் பின்னால் சாதி உள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகக்கூடிய கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும். இதேவேளை என்னுடைய பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரி ஜி.ஜி.பி. ரத்ன குமார .இவர் என்னுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெய்ப்பாதுகாவலாராக இருந்தார். திடீரென சென்ற வாரம் அவர் மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக நான் கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக கடிதம் வழங்கியிருந்தேன். அதன் பிரதியை சபா பீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இதுவரை அந்த அதிகாரியை மீண்டும் எனக்கு நியமிக்கவில்லை. அஸ்மினின் முக நூல் பதிவையும் நான் சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். சுமந்திரன் வழங்கிய பேட்டியை கொண்ட பென் டிரைவையும் சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். இது என் மீது புனையப்பட்டுள்ள மிகப்பெரிய மோசடி.நான் எந்தவொரு காலத்திலும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள கனடாவிலுள்ள அமைப்புடன் பேசுவதற்கு தயாராகவில்லை. அப்படி யாரும் என்னைக் கேட்டதுமில்லை. அவ்வாறான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அரசின் பேச்சாளர் போல் அல்லது புலனாய்வுத்துறையின் பேச்சாளர் போல் ஊகத்தின் அடிப்படையில் ஊடகங்களில் வந்தது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளது மிகப் பாரதூரமானது. எனக்கு நீதி வேண்டும். சர்வதேச பாராளுமன்றத்திடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் சர்வதேச மன்னிப்புச்சபையிடமும் இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன். பாராளுமன்றத்திடமிருந்து எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.எனவே நீதியான நேர்மையான விசாரணைக்கு எனது விடயத்தை உட்படுத்த வேண்டும் .எனக்கு இதற்கான வழியை சொல்ல வேண்டும் என்றார். சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன் | Virakesari.lk
  21. ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசிய சர்ச்சைகளுக்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பசுமைத் தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தமிழிசை செளந்தரராஜன் அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்திருக்கும் தமிழிசை, "மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மியான்மார் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாகத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா...? 'என் உணவு என் உரிமை' என்று கூறும் நீங்கள் விஞ்ஞான பூர்வமாகக் கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இவர்களுக்குக் கோமியம் குடிப்பதில் பிரச்னையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ எனப் பயம். ஆயுர்வேதத்தில் கோமியம் 'அமிர்த நீர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், "மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்." என்று பேசியிருக்கிறார். ."மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன? | bjp leader Tamilisai Soundararajan Speech about komiyam and beef - Vikatan
  22. ‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை ராமேசுவரம்: இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் P 475, P 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அந்நாட்டு அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பும் விடுத்துள்ளனர். இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம், என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை | Don't cross the Border: Fisheries Department Advises TN Fishermen - hindutamil.in
  23. விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமக எடுத்து வர மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். தொடர்ந்து பனையேறி ஒருவர் பனைமரத்தில் ஏறி கள் இறக்க, பனைமரத்துக்கு கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள் நன்மையை விளக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “கள் மது வகையில் வராது. அது நம் உணவு. கள்ளை மதுவென்று நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்து வாதிட்டார்கள். கள் விடுதலை போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி துணை நின்று போராடி வருகிறது. மதுவை போதுமென்று சொல்லாமல் அருந்தி மயங்குவார்கள். ஆனால் உணவை மட்டுமே மனிதன் போதுமென்று சொல்வான். அது போலத்தான் கள்ளை போதுமென்று மனிதன் சொல்வான். ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். கள் என்று சொல்லாமல் அதை பனஞ்சாறு என்றும் மூலிகைச்சாறு என்று சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன? என கேள்வி எழுகிறது. எந்த மாநில முதல்வருக்கும் சாராய தொழிற்சாலை கிடையாது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டசபையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை என பேசுகிறார்கள். பொங்கல் பண்டிகையின்போது இரண்டு நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனை கோடியில் குடிப்பவனுக்கு ஏன் இலவசம்? டாஸ்மாக் வைத்துக் கொண்டு, இளைஞர் நலன், மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத் துறை வைத்திருப்பது வேடிக்கையானது. பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாடு உள்ளது. எத்தனை புயல் வந்தாலும் பனை மரம் சாயாது. மண் அரிப்பை தடுக்க மரம் நடவேண்டும். சிமெண்ட் பூசுவதில்லை. ஒரே நாளில் நூறு வழக்கு வாங்கியவன் இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டுமே. எந்த அதிகாரமும் நிரந்தமில்லை. கள் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி எல்லா வகையிலும் துனை நிற்கும்,” என்றார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும், “ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் கூட்டணி கட்சிகள் இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெண்களுக்கு தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எரியவேண்டும். கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம், பெண்கள் கருப்பையை அறுத்து எரிய வேண்டும், மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு ஒப்பானது என்று பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன். பெரியாரை எதிர்ப்பது மதவாதத்துக்கு ஆதரவாக உள்ளது என கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்? மாட்டு பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக் கறி உண்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான்,” என்று அவர் பேசினார். ‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு | Toddy Movement conference near Villupuram: Seeman supports by drinking toddy in the stage - hindutamil.in
  24. ’’நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை’’ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் புலம்புவதாகவும் அனைவரும் கூறுகின்றனர். ஆனால் நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை என இத்தகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கெபித்திகொல்லேவயில் ஓடும் பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கண்ணீர் விட்டதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்தத் துயரத் தருணமே இறுதியில் நந்திக்கடலுக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பரப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முடிவிற்கு இட்டுச் சென்றது. "மஹிந்த ராஜபக்ச தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதாகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட நபர் சொத்துகள் முகாமைத்துவக் கிளையின் வெறும் எழுத்தராக மட்டுமே இருந்திருக்க வேண்டும். மஹிந்த, கொழும்பில் உள்ள விஜேராமவில் 4.6 மில்லியன் செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவை ஏற்படின் அவர் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்க முடியும்," என்று தேரர் கூறினார். "எனவே, தற்போதைய தலைவரின் படுக்கைக்கு அருகில் ஈரமான சாக்கு மூட்டையை வைத்து அவரை எழுப்பவும், அவர் இப்போது நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவும் யாராவது அவருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தேரர் மேலும் கூறினார். Tamilmirror Online || ’’நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை’’
  25. வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.