Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 21 Sep, 2024 | 06:33 AM துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (20) சென்ற டொன் பிரியசாத் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத் தடை காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டொன் பிரியசாத் என அழைக்கப்படும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு 8.35 மணிக்கு துபாய்க்கு செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் விதித்த வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6 ஆவது பிரதிவாதியாக டொன் பிரியசாத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. துபாய் செல்ல விமானநிலையம் சென்ற டொன் பிரியசாத் திருப்பி அனுப்பப்பட்டார் ! | Virakesari.lk
  2. வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் 21 Sep, 2024 | 04:31 PM தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மட்டு. அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவு செய்தார். இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (21) நடைபெற்று வருகிறது. நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக காலை 7 மணி முதல் தமது வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் | Virakesari.lk
  3. 21 Sep, 2024 | 06:08 PM நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே, நுவரெலியா 80% மொனராகலை 77% பொலன்னறுவை 78% இரத்தினபுரி 75% கம்பஹா 80% கொழும்பு 75% - 80% அம்பாறை 70% கிளிநொச்சி 68% புத்தளம் 78% களுத்துறை 75% காலி 74% வவுனியா 72% மன்னார் 72% பதுளை 73% அம்பாந்தோட்டை 78% கேகாலை 75% அநுராதபுரம் 75% மட்டக்களப்பு 69% குருணாகல் 75% திருகோணமலை 76% கண்டி 78% - 80% முல்லைத்தீவு 71 % கிளிநொச்சி 68 % மாத்தளை 74 % யாழ்ப்பாணம் 65.9 % ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் ! | Virakesari.lk
  4. வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய தேவையில்லை - நாமல் வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் நான் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் வெற்றிபெறும் மனோநிலையில் உள்ள நான் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லை என தேர்தலில் வாக்களித்தபின்னர் தெரிவித்துள்ளார். சாதிக்க முடியாத எதனையும் உள்ளடக்காத தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மக்களிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்,என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்,என தெரிவித்துள்ளார். நாங்கள் அச்சத்தினால் பின்வாங்கும் அரசியல் சக்தியில்லை,நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை காணப்பட்டிருந்தால் நாங்கள் எப்போதோ நாட்டிலிருந்து வெளியேறியிருப்போம்,நாடு பேரழிவுகளை சந்தித்தபோதிலும்,நாங்கள் நாட்டிலிருந்து வெளியேறவில்லை ஆனால் பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள் என நாமல் ராஜபக்ச தெரிவி;த்துள்ளார். வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய தேவையில்லை - நாமல் | Virakesari.lk
  5. மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; நன்றிக்காக வாக்களிப்போம் - மீனவ அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்! இந்திய எல்லை தாண்டிய மீனவர்களினால் அழிக்கப்பட்டு வந்த எமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம் ஏற்ற வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாக அழைப்புவிடுத்தன. புதன்கிழமை யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்ஃ எமது மீனவர்கள் இந்திய எல்லை தாண்டிய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவ்விடையம் இன்று நேற்று ஆரம்பித்த விடையம் அல்ல நாங்கள் இலங்கையை ஆட்சி செய்த ஐந்து ஜனாதிபதிகளிடம் இந்திய மீனவர்கள் அத்துமீறல் தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் வடபகுதிக் கடலில் அத்துமீறி வருகை தந்த இந்திய ரோலர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதுடன் ஏமது மீனவர்கள் சுதந்திரமாக அமையும் படியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா தரப்புகளுடனும் எமது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் எல்லை தாண்டும் இந்திய ரோலர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆகவே எமது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியன் ரோலர்களை முற்றும் முழுதாக தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். மீனவ மக்களை மூச்சுவிட வைத்தவர் ரணில்; (newuthayan.com)
  6. தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநிலைய முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024) இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்ப் பொதுவேட்பாளர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த அரசியல் அந்தகர்கள் விமர்சிக்கின்றார்கள். எதற்கெடுத்தாலும் இந்தியாவைக் குற்றம் சாட்டும் மனோநிலையில் உள்ள அரசியல் அந்தகர்களின் விமர்சனமே இது. இதுவரையில் இந்தியா தமிழ்ப் பொதுவேட்பாளருக்குச் சாதகமான கருத்துகள் எதனையும் எங்கும் தெரிவித்திருக்கவில்லை. மாறாக, கொழும்பு அரசியலில் தலையீடு செய்ய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திக்கும் பொதுவேட்பாளர் என்பவர் இடையூறாகவே அமைவார். தமிழ்ப் பொதுவேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைப்பதற்காகவே நிறுத்தப்பட்டுள்ளார் என சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குக் கேட்டுத் திரியும் தமிழ் அரசியல் வாதிகள் விமர்சிக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாயின் இந்த அரசியல்வாதிகளைப் போன்றே ரணிலிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பொதுவேட்பாளரை நிறுத்தாமல் நேரடியாகவே அவருக்குப் பிரச்சாரத்தை செய்திருக்கமுடியும். தமிழ்ப் பொதுவேட்பாளர் யாரோ ஒருவரின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பார். அதற்காக யாரோ ஒருவரின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பார் என்று கூறுவது அபத்தமானது. தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இக்காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத முடிவு. எவரது தூண்டுதலில் பேரிலும் எடுத்த முடிவு அல்ல இது. தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் நீண்டகாலமாக ஆராய்ந்து தமிழ்த் தேசிய அரசியலை வீறுடன் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக எடுத்த ஓர் உறுதியான முடிவு இது. ஆகவே தமிழ் மக்கள் இந்த விமர்சனங்களை எல்லாம் கருத்திற் கொள்ளாது சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். (ப) #Elam #uthayan #News #digital #uthayan news #ja அரசியல் அந்தகர்களே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார்கள் (newuthayan.com)
  7. 45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர். அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இந்த 10 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கமைய , 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் (newuthayan.com)
  8. வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்! துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத்தில் கடலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞரை தேடும் முயற்சி தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் அவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கடலில் நீராடிய அம்பனைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது-54) என்ற குடும்பத் தலைவர் உயிரிழந்தார். அன்றைய தினம் தம்பு வீதி, நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த தயாசீலன் வைஷ்ணவன் (வயது -28) என்பவர் தாயாருடன் ஆலயத்துக்கு வருகை தந்த நிலையில் தனது உடமைகளை தயாரிடம் ஒப்படைத்துவிட்டு கடலில் நீராட சென்ற நிலையில் அவர் கரை திரும்பி வரவில்லை என அவரின் தாயாரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்படையினர் டோறா படகைப் பயன்படுத்தி தேடுதல் நடத்திவருகின்ற போதிலும் இதுவரை எவ்விதமான தகவலும் கிடைக்கப் பெறவில்லை. வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்! (newuthayan.com)
  9. 20 Sep, 2024 | 12:02 PM லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என லெபனானிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆயிரக்கணக்கில் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் லெபனானில் உள்ள இலங்கையர்களிற்கு இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளை பொதுநிகழ்வுகளை நீண்டதூர பயணங்களை தற்காலிகமாக தவிர்க்கவேண்டும் என இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இக்காலப்பகுதியில் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - தூதரகம் வேண்டுகோள் | Virakesari.lk
  10. நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம் 20 Sep, 2024 | 01:34 PM ( விமான நிலைய செய்தியாளர் ) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் மாமியார், இரு பிள்ளைகள் , இரு பணிப்பெண்கள் மற்றும் உறவினரான பெண் ஆகியோர் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு பயணமாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அறுவரும் இன்று (20) காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-651 விமானத்தின் ஊடாக துபாய்க்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள Silk Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்ட இவர்கள் இந்த விமான சேவைக்காக ஒருவருக்கு தலா 52 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அறுவரும் துபாய்க்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருக்கலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம் | Virakesari.lk
  11. தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர். இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது. இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன. இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது. இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார். தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in
  12. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார். டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை. பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார். நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்! Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல் | Sector 36 Hindi Movie Review in tamil - hindutamil.in
  13. தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்ட வாக்குச் சீட்டை காண்பித்த மையை படத்தில் பார்த்திருக்கிறோம் அவ்வாறு சம்பவமாக மாவை மற்றும் மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. சஜித்துக்கு ஆதரவு தமிழரசு கட்சி தீர்மானம் என கூறும் தலைவர் மாவை ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார். அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு தமிழரசு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார். மகன் கலை அமுதன் யாழ் வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார். இவற்றையெல்லாம் நோக்கும்போது பணம் வாங்கியவர்களிடம் எமது இனத்தை காட்டி கொடுத்து சந்தர்ப்பவாத அரசியலை தகப்பனும் மகனும் செய்கிறார்கள். பணம் வழங்கியவர்கள் யாருக்கு வாக்கு போட்டீர்கள் என கேட்டால் வடிவேல் பானியில் இருவரும் வாக்கு சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என சொல்லு நிலை ஏற்படும். தந்தை செல்வாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று பணத்துக்காக பல கோணங்களில் பிரிந்து நிற்கிறது. தந்தை செல்வாவின் மனைவி இந்த அரசியல் செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாம் என மண்ணை அள்ளி அவர் மீது தூவியபோதும் அதனை தட்டிவிட்டு இனத்துக்காக என்னால் முடிந்தவரை போராடுவேன் என கூறிய பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி. ஆகவே தமிழரசு கட்சியை சீரழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களால் விரைவில் துரத்தி அடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு! (newuthayan.com)
  14. Published By: Digital Desk 7 17 Sep, 2024 | 09:02 PM (இராஜதுரை ஹஷான்) மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று இருக்குமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தொடம்பஹால ராஹூல தேரர் தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தலதா மாளிகை இருந்தால் மாத்திரமே பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடியும். தலதா மாளிகையின் இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு எம்மால் கைகளை கட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனம் பௌத்த சாசனத்துக்கு எதிராக உள்ளது. தேசிய கொடியையும், பௌத்த கொடியையும் மாற்றியமைப்பதாக குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான நிலை ஏற்பட்டால் பௌத்த சாசனம் இல்லாதொழியும். இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையில் சேவையாற்றியிருந்தால் அவர் தனது மகனான நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது. எதிர்காலத்தில் அவர் போட்டியிடுவதாக இருந்தால் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தியதாக உள்ளது ஆகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவு வழங்கினோம்.ஆகவே அந்த தீர்மானத்தை தொடர்ந்து செயற்படுத்தூறு கேட்கிறோம் என்றார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று இருக்குமாயின் நாமல் ராஜபக்ஷவுக்கு அறிவுரை வழங்க வேண்டும் - தொடம்பஹால ராஹூல தேரர் | Virakesari.lk
  15. Published By: Digital Desk 3 17 Sep, 2024 | 04:52 PM தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் இருக்கலாம்.அந்த கொள்கைகள் வேலைத்திட்டங்களில் சுயலாபங்கள் தான் கலந்து இருக்கின்றது. இது தவிர தேர்தல் புறக்கணிப்பு பொது வேட்பாளர்கள் விடயத்திலும் எம்மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனை எதிர்வரும் 22 ஆம் திகதி அறிந்து கொள்வோம். இருந்தாலும் எனது ஜனாதிபதி வேட்பாளர் அம்மான் ரணில் விக்ரமசிங்க தான் எனது தெரிவும் விருப்பமும் கூட. அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு.எனவே அதனால் தான் மக்கள் தற்போது நிதானமாக செயற்பட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார். தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
  16. 17 Sep, 2024 | 08:19 PM பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160ஆவது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தர் சிலையொன்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் கையளித்திருந்ததுடன், இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார். நான்கு அடிகள் உயரமும் 330 கிலோ நிறையினையும் கொண்ட இந்தச் சிலையானது இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களது கோரிக்கைக்கு அமைவாக கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் விசேடமாக வழங்கப்பட்டதாகும். தர்மஜயதனய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் அவர்களிடம் இச்சிலையானது கையளிக்கப்பட்டதுடன், புத்த பெருமான் தர்மச் சக்கர முத்திரையை காண்பித்தவாறாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்த பெருமான் ஞானம் பெற்ற பின்னர் சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தனது முதல் பிரசங்கத்தினை நிகழ்த்திய முக்கிய தருணத்தினை குறித்த முத்திரை பிரதிபலிக்கின்றது. அத்துடன் தம்மத்தின் சுழற்சிக்கான இயக்கத்தினையும் இது குறித்து நிற்கின்றது. இச்சுப நாளில் தர்மஜயந்தனய விகாரையின் வளாகத்தில் மர நடுகை நிகழ்வொன்றும் நடைபெற்றிருந்த்து. #Plant4Mother திட்டத்தில் இணையும் வகையில் இலங்கை பிரதமர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் “இத்தா” மரக் கன்றுகளையும் இங்கு நாட்டிவைத்தனர். புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அரச மரங்களை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார், முன்னதாக இத்திட்டத்தின் கீழ் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், 2024 ஆகஸ்டில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சந்தனப் பூங்காவில் முருதா மரக்கன்றுகளை நாட்டி இலங்கை இந்திய நட்புறவு வளைவு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைத்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வானது இந்தியா இலங்கை இடையிலான பகிரப்பட்ட பௌத்த மரபினை வலியுறுத்துகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீகப் பிணைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் 2020 செப்டெம்பரில் இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் பௌத்த உறவுகளின் மேம்பாட்டுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியினை அறிவித்திருந்தார். அத்துடன் விசேட நன்கொடை உதவியின் கீழ் முதல் திட்டமாக, இலங்கை முழுவதும் உள்ள 9000 பௌத்த விகாரைகள் மற்றும் பிரிவேனாக்களை உள்ளடக்கும் வகையில் சூரியக்கல மின்மயமாக்கல் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள 4000க்கும் மேற்பட்ட புத்த விகாரைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு 17 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் சூரியக்கல மின்மயமாக்கல் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து புனித கபிலவஸ்து மற்றும் சாரநாத் புனித சின்னங்கள் இலங்கையில் தரிசனத்துக்காக வைக்கப்படும் நிகழ்வுகளும் அண்மைய காலங்களில் நடைபெற்றன. மேலும், இந்தியாவில் உள்ள பௌத்த வளாகங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கிவருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்பை மேலும் வலுவாக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உதவி உயர் ஸ்தானிகராலயம், கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம் ஆகியன பல பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு போயா தினத்தன்றும் வெவ்வேறு விகாரைகளிலுமுள்ள பௌத்த வளாகங்களில் நடத்தப்படும் நடமாடும் புகைப்படக் கண்காட்சிகள், இலங்கை முழுவதும் உள்ள பிரிவேனாக்களுக்கு வளங்களை வழங்குவதன் மூலமான கல்வி உதவி போன்ற இன்னும் பல செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தபெருமானின் சிலை கையளிப்பு | Virakesari.lk
  17. 17 Sep, 2024 | 08:06 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். ஜனாதிபதிக்கும் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு ! | Virakesari.lk
  18. 16 Sep, 2024 | 01:58 PM கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும் தெரிவித்ததாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற 29 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும் வாழுகின்ற பொதுமக்கள் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒழுங்கமைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற உரிமைக்கான மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் எமது இலக்கு நோக்கி எமது மக்களுடைய அபிலாசைகளோடு அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிடல்களோடு தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம். அது மாத்திரமில்லாமல் போராடுகின்ற மக்கள் சார்பாக அன்று நடைபெறுகின்ற போராட்டம் தொடர்பிலான ஆதாரங்களோடும் எமது மக்களுடைய கோரிக்கைகளோடும் அனைத்து சிவில் சமூகக் கட்டமைப்பினுடைய இறப்பர் முத்திரையோடு தொடர்ச்சியாகவும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர்.மாவட்ட செயலாளர் என பல தரப்பினருக்கும் எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்பியிருந்தோம் . இருந்தாலும் கூட ஒரு சில பதில்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் அமைச்சின் செயலாளர் போன்றவர்களிடமிருந்தும் மாவட்ட செயலாளரிடமிருந்தும் கிடைத்திருந்தாலும் அவைகளிலே எது விதமான திருப்தியும் எங்களுக்கு இல்லை அல்லது எங்களுடைய கோரிக்கைகளுக்குரிய பதிலாக அவைகள் அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு அதையும் கடந்து தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் உரிமைக்காக வீதியில் இறங்கிக் குரல் கொடுத்து அமைதி வழியில் போராடுகின்றனர். ஆனாலும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை என்பதையும் மாறாகத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளதோடு இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் எமக்கான தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் தொடர்ந்தும் நேரடியாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு எமது விடயத்தைக் கொண்டு செல்லக்கூடியவர்கள் ஊடாகவும் பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். விசேடமாக எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண ஆளுநர் ,ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட 24 மணி நேர செயற்குழு தலைவர் உள்ளிட்டவர்கள் மற்றும் பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் ஊடாகவும் பல முயற்சிகள் எடுத்திருந்தும் எமது வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலை காணப்படுவதோடு நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம். மேலும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் போன்றவர்களுடன் கூட நாங்கள் பேசியிருந்தோம் எமக்காக ஜனாதிபதியோடு பேசி எமது உரிமைக்கான குரலாக நீங்களும் இருந்து குறைந்தது ஒரு கணக்காளரை பெற்றுத் தாருங்கள் அல்லது நடைமுறையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற வங்கிக் கணக்கையாவது மீள திறந்து தாருங்கள் என்றும் கேட்டிருந்தோம். யாரும் இதுவரை அதை செய்து கொடுக்கவில்லை எமக்காக எதையும் செய்யவும் இல்லை என்பதையும் அவர்களும் தொடர்ந்தும் இன்றுவரை எமது மக்களை ஏமாற்றியுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துவதோடு மீண்டும் இறுதியாக நாங்கள் கடந்த 11.09.2024 அன்றும் கூட திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியினுடைய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது எங்களுக்காக ஒரு தீர்வை தர இருக்கிறார் என்று அறிந்தோம் குறைந்தபட்சமாக ஒரு கணக்காளர் அல்லது அதனிலும் குறைவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் செயல்படுத்தக் கூடியதாக இருக்கின்ற நிறுத்தப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் ஆரம்பிப்பது பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் கூறுவதோடு நாங்கள் நூறு வீதம் நம்பி இருந்த ஜனாதிபதியினுடைய பதில் இவ்வாறுதான் இருந்தது என்பதையும் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, இதுவரையில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து எங்களை பலர் சந்தித்திருக்கிறார்கள் அதே போன்று நாங்களும் அவரை பல தடவைகள் பலதரப்புகள் ஊடாக சந்தித்திருக்கிறோம். ஆனாலும் இதில் எந்த நன்மையும் இதுவரை ஏற்படவில்லை என்பதையும் இன்றுவரை அவர் எமது மக்களை ஏமாற்றிவிட்டார் என்பதையும் ஆனால் எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களது முகவர்கள் மற்றும் உள்ளுார் அரசியல்வாதிகளாடாக பொய் செய்திகள் வாக்குறுதிகளோடு பலர் வருகிறார்கள் அவர்கள் யாரையும் நம்ப வேண்டாம் எமது செயல்க விடயத்தில் அவர்கள் கூறும் செய்திகளும் வாக்குறுதிகளும் பொய்யானவை என்பதையும் வெளிப்படுத்துகிறோம். அதே போன்று மற்றுமொரு வேட்பாளராக இருக்கக்கூடிய சஜித் பிரேமதாச தரப்பில் இதுவரை யாரும் போராட்டம் செய்து வருகின்ற மக்களை அல்லது மக்கள் சார்ந்தவர்களை சந்திக்கவில்லை என்பதையும் நாங்களும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதையும் வெளிப்படுத்துவதோடு அவர்கள் தற்போது ஆட்சியாளர்கள் கிடையாது. குறைந்தபட்சம் வாக்குறுதியையாவது தருவதற்கு முன்வராதது ஏன் என சிந்திக்க வைப்பதோடு சிலவேளை அவருடன் எமது செயலக விடயத்திற்கு எதிராக செயற்படுகின்ற தரப்பினர் இருப்பதனால் எம்மை சந்திக்கவில்லையோ என நினைப்பதோடு அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதோடு இவர்கள் தரப்பிலும் இதன்பின்னர் யாராவது அவர்களது முகவர்கள் அல்லது உள்ளுார் அரசியல்வாதிகள் பொய் செய்திகள் பொய் வாக்குறுதிகளுடன் வரலாம் என்பதால் அவர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள் என்பதையும் கூறுகின்றோம். மேலும் மாற்றுமொரு தரப்பாக இருக்கின்ற .அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய தரப்பிலிருந்து இரண்டு தடவை எம்முடன் தொலைபேசி மூலமாகப் பேசியிருந்தார்கள் இரண்டு தடவை எங்களை நேரிலும் சந்தித்திருந்தார்கள் அவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக இல்லை என்பதனால் எமக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். அதாவது தாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மாத்திரம் அல்ல இலங்கையில் காணப்படுகின்ற ஒட்டுமொத்தமான நிர்வாக ரீதியான அத்தனை பிரச்சினைகளும் அரசியல் தலையீடுகள் இன்றி தீர்த்து வைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியை எங்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்பதையும் கூறிக்கொள்வதோடு இவர்கள் தரப்பிலும் சில முகவர்கள் ஒருநாளும் எமது மக்கள் போராட்டத் தளத்திற்கும் வராதவர்கள் மக்கள் போராட்டம் பிழை என கூறியவர்கள் தம்மை போராட்டக்குழு என அறிமுகப்படுத்திச் சென்று சுயலாப அரசியல் செய்திருக்கிறார்கள் எனவே அவர்கள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருங்கள் எனவும் கூறிக் கொள்கிறோம். அத்தோடு இம்முறை தமிழர் தரப்பாக ஒரு வேட்பாளரும் களத்தில் தமிழரின் தனித்துவ அடயாளத்திற்காகவும் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளதனால் அதுபற்றியும் பொதுமக்களாகிய நீங்களே சிந்திக்க வேண்டும் சிந்தித்து முடிவெடுத்து உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் . இந்த செய்தியாளர் மாநாடு ஊடாக நாங்கள் வெளிப்படுத்துவதோடு,இவ்வாறான நிலையிலே நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது அதேபோன்று எங்களுடைய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் எங்களுடைய மக்கள் புத்திசாதுர்யமாக சிந்திக்க கூடியவர்கள் இவ்வளவு காலமும் ஒவ்வொரு தரப்புகளால் மாறி மாறி ஏமாற்றப்பட்டவர்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனால் நன்றாக சிந்தித்து தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு உரித்தானது உரிமையுடையது அது பலம் மிக்கது என்பதினால் நன்றாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், யாருக்கும் வாக்களிக்குமாறு கூற முடியாத ஒரு சூழ்நிலையில் எங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகிறோம். மேலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகின்ற வெற்றி பெற்று எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக வரப் போகின்றவரிடம் நாங்கள் கேட்பது தயவு செய்து நீங்கள் ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிர்வாக ரீதியான அத்தனை விடயங்களையும் தீர்த்துத் தனியான ஒரு பிரதேச செயலகமாக இது தனித்துவமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் பணிவாக கேட்டுக் கொள்வதோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் பல தரப்புகளையும் சேர்ந்த பல முகவர்கள் உள்ளுார் அரசியல்வாதிகள் மக்களை நாடி வரலாம் பொய் செய்திகளையும் பொய் வாக்குறுதிகளையும் கூறி ஏமாற்றலாம். ஆனால் அவை எதையும் நம்ப வேண்டாம் ஆனால் உங்கள் வாக்குகளைக் கட்டாயம் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்துச் செலுத்துங்கள் எனவும் கல்முனையில் எங்களின் வாக்கு பலத்தினை வெளிக்காட்டுவதற்கு அனைவரும் 100% உங்கள் வாக்குகளை நீங்கள் விரும்புகின்ற யாருக்காவது வழங்கி எமது வாக்குப் பலத்தை வெளிக் காட்டுவதன் மூலமாகவே எம்முடைய அடுத்தகட்ட நகர்வை நாங்கள் முன்னெடுக்க முடியும் . உங்கள் வாக்களிப்பு வீத அதிகரிப்பு எமது போராட்டத்திற்கு இன்னும் அதிகமாக வலுச்சேர்க்கும் என்பதையும் கேட்டு எங்களுடைய போராட்டம் நாளைய 175 வது நாளுடன் தேர்தல் சட்ட விடயங்கள், அசௌகரியங்கள் எமது மக்களின் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகத் தேர்தல் வரையும் நிறுத்தப்பட்டு எதிர் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஜனாதிபதி வருகை தருகிற போது அவரிடமும் எங்களுடைய கோரிக்கை மக்கள் சார்பாக கொண்டு சேர்க்கப்பட்டு அவர்களுடைய தீர்வு எங்களுக்கு கிடைத்தால் அவர்களுக்கு விசுவாசமாக எங்களுடைய மக்கள் எப்போதும் இருப்போம் என்ற ஒரு விடயத்தையும் கூறி அவ்வாறு எங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டம் தொடரும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம் என செய்தி அறிக்கையின் ஊடாக தெரிவித்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் ; அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவிப்பு! | Virakesari.lk
  19. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 16 Sep, 2024 | 03:56 PM ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருகோணமலை மண்ணை பறித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் கடற்கரை அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும். திருகோணமலை மண்ணுக்கு பல வரலாறுகள் உண்டு. இலங்கைக்கு சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடி ஏற்றிய 22 வயது இளைஞன் நடராசா சுட்டுக் கொல்லப்பட்டார். 1956இல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு தந்தை செல்வாவினால் இங்கு தான் நடாத்தப்பட்டது. அதன்போது இணைந்த வடகிழக்கின் தலைநகரமாக திருகோணமலையை அறிவித்திருந்தார். அப்போது கூட சமஷ்டியை வலியுறுத்தியே பேசியிருந்தார். 1977க்கு முன்பு பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. 1977க்கு பின்பு சேருவில எனும் தொகுதியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் லீலாரத்ன என்னும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 2009 மே 18இல் நடைபெற்ற போரின்போது நடந்த சம்பவம் பற்றி பல சர்வதேச நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசியிருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தடுத்தவர்களே வெட்கமில்லாமல் வாக்கு கேட்கின்றார்கள். அதற்கு சில தமிழ் தேசியத்தில் உள்ளவர்கள் சோரம் போகின்றார்கள். அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். சங்கு சின்னத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் பொய் வதந்திகள் வரலாம். அதனை நம்பி ஏமாற வேண்டாம். செயற்கை நுண்ணறிவு மூலமாக எனது படத்தை பயன்படுத்தி போலியான பிரச்சாரங்களை முன்வைத்து செயற்படுவார்கள். எதையும் நம்ப வேண்டாம் என்றார். ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் | Virakesari.lk
  20. கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது 16 Sep, 2024 | 06:02 PM கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அலுவலகம் கடந்த 10ஆம் திகதி அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதனுள்ளிருந்த பொருட்கள் சிலவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது | Virakesari.lk
  21. (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எனவே அவருடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறாமல் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ வெற்றியீட்டினால் என்ன நிலைமை என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகின்றது. அது நியாயமான கேள்வி. எங்களுடைய நோக்கம் இவரோ அல்லது அவரோ வெல்லவேண்டும் என்பது அல்ல. மாறாக எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெறப்படவேண்டும் என்பதே நோக்கமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பிரதான மூன்று வேட்பாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெறமுடியும். ஆனால் மற்றைய இருவரும் கூட அவர்கள் வெளிப்படையாக நாட்டுமக்களுக்குக் கூறியிருக்கும் நிலைப்பாட்டின்படி, வெற்றி பெறும் வேட்பாளர் எடுக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படமுடியாது. எனவே மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். இது 'எமது மக்களின் வாக்குகளை உங்களுக்குத் தருகிறோம். அதேபோன்று நீங்கள் எமது மக்களுக்குரிய தீர்வைத் தாருங்கள்' என்ற பேரம் பேசுதலின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும். அதேவேளை மேற்குறிப்பிட்ட பேரம் பேசுதலின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உச்சபட்ச வாக்குறுதி அளித்த சஜித் பிரேமதாஸவுக்கு எமது மக்களின் வாக்குகளை அளிப்பதாகக் கூறியிருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார். மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன் | Virakesari.lk
  22. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக ஆறுமுகநாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டது. பொதுச் செயற்பாடுகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அதன் புனிதத் தன்மையைப் பேணவேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதம் பேண வேண்டிய கட்டாயம், ஆன்மிக ஸ்தலமாக குறித்த மண்டபம் போற்றப்பட வேண்டும். கடந்த காலத்து நிர்வாகங்களோடு முரண்பாடு காரணமாக நாவலர் கலாசார மண்டப வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதிக கவனம் எடுத்து இந்த மண்டபத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தல் முதலான பொது விடயங்களில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றவர்களுக்கு இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் நிச்சயம் அசௌகரியம் ஏற்படும். இக்கலாசார மண்டபத்தின் புனிதத்தையும் சட்டதிட்ட நடைமுறைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும். எனவே, தயவுசெய்து இத்தகைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு இந்த மண்டபத்தை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தும் செயற்பாட்டைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்! (newuthayan.com)
  23. 13 Sep, 2024 | 05:24 PM (எம்.நியூட்டன்) தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார். தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பரப்புரை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் கோயில் முன்றலில் இரா.மயூதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அபிவிருத்தி என்று எம்மை ஏமாற்றிவிட்டு எமக்கு எதிரான செயற்பாடுகளே இலங்கை அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மயிலிட்டி துறைமுகம் அதற்கு சாட்சியாகும். மயிலிட்டியை சேர்ந்த மக்களின் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுகத்தை புனரமைத்து தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டபோதிலும் இதுவரை இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் தொழிலினை சீரான முறையில் மேற்கொள்வதற்கேற்ற அடிப்படை விடயங்கள் எவையும் செய்துதரப்படவில்லை. வெளிமாவ்ட்ட பலநாட் படகுகளும், பறிமுதல் செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளுக்குமாகத்தான் இத்துறைமுகம் பயன்படுவருகிறது. கடல் மீது நாம் கொண்டிருக்கும் உரிமையை எம்மிடம் இருந்து பறித்தெடுக்கும் வகையிலேயே எமது கடற்றொழிலினை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி என்ற போர்வையில் மயிலிட்டி மக்களாகிய நீங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டதை போன்றே தமிழர்களாக நாமும் ஏமாற்றப்படு வருகின்றோம். சிதறிப்போய் இருக்கும் நாம், தமிழர் தேசமாக ஒன்றிணையும் போதே இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும். செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே நாம் அனைவரும் சென்று சங்கு சின்னத்துக்கு நேராக ஒரு புள்ளடியை மட்டும் இட்டு தமிழர் ஒற்றுமையை வெளிக்காட்டுவோம். தென்னிலங்கை வேட்பாளர்களை இரண்டாம் மூன்றாம் தெரிவுகளாக கூட தமிழர்கள் சிந்திக்கவே முடியாது. ஆகவே எமது வாக்கினை சங்குக்கு மட்டுமே வாக்களிப்போம் என்றார். சங்குக்கான ஆதரவு புதிய திசை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும் ; செல்வின் ! | Virakesari.lk
  24. (எம்.நியூட்டன்) தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முடிவைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள். மக்கள் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் தெரிவு செய்வார்கள். அவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை நேர்மையாக தீர்க்க முடியும். இலங்கை தமிழ் அரசு கட்சிதான் தமிழ் மக்களின் கட்சி என கூறுவார்கள். ஆனால், இன்று இதன் நிலை என்ன? கட்சியில் நேரத்துக்கு ஒரு கதை. சிலர் கட்சியை கைப்பற்றி முடிவுகளை தாமாக அறிவிக்கிறார்கள். முடிவுகளை ஜனநாயக ரீதியாக எடுக்காமல் தாமே முடிவுகளை எடுத்து மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்களிக்குமாறு அறிவிக்கிறார்கள். இது மக்களின் முடிவல்ல. தமிழ் மக்களின் முடிவு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வது என்பது மக்களின் முடிவாக உள்ளது. எதற்காகவென்றால், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவே. கடந்த இரண்டு வருட காலமாக எங்களை மூச்செடுக்க செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். பொருளாதார ரீதியில் எங்களை மீட்டெடுப்பதற்கு தகுதியான தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும். அவர் வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். அதன் மூலம் நாங்கள் முன்னேற முடியும். இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். தமிழ் அரசுக் கட்சி தற்போது குழப்பம் நிறைந்த கட்சியாகவே உள்ளது. அதற்குள் இருக்கும் சுய நலன்கள், ஜனநாயகமற்ற முறையில் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்களை அவமானப்படுத்துகிறது மக்களுக்கு தலைமைத்துவம் தேவைப்படும் நேரத்தில் அதிகாரமாக, தன்னிச்சையாக ஒருவர் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்ற அதிகாரத் தொனியில் மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. இம்முறை ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முழுமையான வாக்குகளை அளிப்பார்கள். அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு என்பவற்றோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாடு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான உச்ச அதிகாரம் பகிர்வதற்கான பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கு இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு நேர்மையான தீர்வினை முன்வைப்பதற்கு அவரால்தான் முடியும். எனவே, அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றார். நேர்மையான தீர்வு வழங்க ரணில் விக்கிரமசிங்கவால் தான் முடியும்; அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு - அங்கஜன் | Virakesari.lk
  25. Published By: Vishnu 13 Sep, 2024 | 05:59 PM (நா.தனுஜா) நாட்டுக்கு வருகைதரவிருக்கும் 9 நாடுகளைச்சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் கடந்த சில வாரங்களில் நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் செயன்முறையைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டை வந்தடையவுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் 9 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாகவும், அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நாட்டில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு வருகைதரவிருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களில் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பில் (சார்க் அமைப்பு) உள்ளடங்கும் நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்; 18 ஆம் திகதி முதல் கண்காணிப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.