Everything posted by பிழம்பு
-
முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்
இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் தொலைக் காட்சியில் செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளரும் என்ற பெருமை பெற்ற ஆயிஷா ஜுனைதீன் காலமானார். இறக்கும்போது அவருக்கு 74 வயது. முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வி ஏ .கபூரின் சிபார்சில் முதன் முதலாக "பிஞ்சு மனம்" சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு பெற்று, சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள் பிரவேசித்து, முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளரானார்.தொடர்ந்து பகுதி நேர அறிவிப்பாளரானார். இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளரும் இவரே. ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பமான காலத்திலேயே, தொலைக் காட்சியில் செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் என்றபெருமையும் இவருக்குண்டு ரூபவாஹினியில் ஒளிபரப்பான பல பிரபல நாடங்களுக்கு இவர் எழுதிய தமிழ் மொழியிலான மொழிபெயர்ப்பே காட்சி படுத்தப்படும்.தமிழ் மொழியோடு, ஆங்கிலம், சிங்கள மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர். ஜனாஸா அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது Tamilmirror Online || முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு.. Freelancer / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 07:54 - 0 - 7 இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R Tamilmirror Online || அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு..
-
அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி முன்னேற்றகரமான மாற்றமாகும்; அரசியல் தீர்வு குறித்து இனிவருங்காலங்களில் பேசுவோம் - தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
23 Sep, 2024 | 05:11 AM (நா.தனுஜா) புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அவரது வெற்றி குறித்து பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன் 'அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி சிறந்த முன்னேற்றகரமான நகர்வாகும். நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென ஆராய்ந்தபோது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாத பல விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் இருந்தன. அதேபோன்று அவர் அரசியலமைப்பில் உள்ளவாறு மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதாகவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்துக் கலந்துரையாடலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து முடிவுறுத்துவதாகவும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்திருந்தார். எனவே அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கக்கூடிய இவ்வனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்' என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தர்மலிங்கம் சித்தார்த்தன் 'ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி மிகச்சிறந்த மாறுதலாகும். இவ்வேளையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நாட்டை ஊழல் மோசடிகளற்ற தூய நாடாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருப்பினும் தமிழ்த்தேசிய பிரச்சினையைப் பொறுத்தமட்டில், இனிவருங்காலங்களிலேயே இதுபற்றி அவருடன் பேசுவோம். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவர் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது' என புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி முன்னேற்றகரமான மாற்றமாகும்; அரசியல் தீர்வு குறித்து இனிவருங்காலங்களில் பேசுவோம் - தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் | Virakesari.lk
-
யாழில் உணவகமொன்றுக்கு சீல் ; 15 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தண்டம்
23 Sep, 2024 | 01:45 PM யாழ்ப்பாணத்தில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, உரிய முறையில் குளிர்சான பெட்டியை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை, சுகாதார முறைப்படி உணவு கையாளும் இடப்பரப்பினை பேண தவறியமை, உபகரணங்களை உரிய முறையில் பேண தவறியமை போன்ற செயற்படுகளுக்கு எதிராக உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு வியாழக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 15 உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளர்களுக்கு 01 இலட்சம் நாற்பதாயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. அதேவேளை, ஒரு உரிமையாளரின் உணவகத்திலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. யாழில் உணவகமொன்றுக்கு சீல் ; 15 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தண்டம் | Virakesari.lk
-
விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவு இல்லை - பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு
23 Sep, 2024 | 04:20 PM இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவையென பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்பட்டதாகவும் இதுகுறித்து எதிர்வரும் தேர்தல்களில் விழிப்புணர்வூட்டப்படவேண்டும் என்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. விருப்பு வாக்கு தொடர்பில் வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவு இல்லை - பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு | Virakesari.lk
-
அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் - அலி சப்ரி
23 Sep, 2024 | 04:32 PM இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். உங்கள் நம்பிக்கையும்,ஊக்கமும் தான் இந்த பயணம் முழுவதும் என்னை தாங்கிய தூண்கள். 2019ம் ஆண்டு நான் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது எனது நாட்டிற்கு சேவைசெய்ய குறிப்பாக நீதியமைச்சை சீர்செய்வதில், எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் அர்ப்பணித்த துறையில்,ஒரு தெளிவான பார்வையால் உந்தப்பட்டேன். நாங்கள் பயணி;கப்போகும் பாதை எதிர்பாராதவிதமாக கரமுரடானதாக மாறுகின்றது. உலகமும் நாடும் விரைவில் அசாதாரண சவால்களின் பிடியி;ல் சிக்கின. கொவிட் 19 பெருந்தொற்றும்,அதன் பின்னர் உக்ரைனில் வெடித்த போரும்,அதன் தீவிரமான நீண்டவிளைவுகளும்,சர்வதேச ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தின.இது எங்கள் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடிக்கு வழிவகுத்தது.நாம் நினைத்து பார்க்க முடியாத வகையில் எங்களின் மீள் எழும் திறனை சோதனை செய்தது. இந்த கடினமான காலங்களில் எனக்கு பல பதவிகளில் சேவையாற்றுவதற்கான கௌரவம் கிடைத்தது,நீதியமைச்சராக, நிதியமைச்சராக இறுதியாக வெளிவிவகார அமைச்சராக.ஒவ்வொரு பதவியும் அவற்றிற்கே உரிய சவால்களுடன் வந்தன. என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு நான் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயற்பட்டேன். வெளிவிவகார அமைச்சராக உலகளாவிய ரீதியில் தலைவர்கள் இராஜதந்திரிகள் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இலங்கையை பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீட்சியை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளின் போது அவர்களின் தளர்ச்சியற்ற ஆதரவும்,இணைந்த செயற்பாடுகளும் எங்களிற்கு அளவிடமுடியாத பெறுமதிஉடையவையாக காணப்பட்டன. எங்களின் இருள்மயமான தருணங்களி;ல் வெளிப்படுத்தப்பட்ட நன்றிக்காக நான் ஆழமான நன்றியுடையவனாகயிருக்கின்றேன். பொதுச்சேவை என்பது எப்போதும் இலகுவான பாதையில்லை.அதற்கு நேரமும் சக்தியும்மாத்திரமல்ல ஆழமான தியாகமும் அர்ப்பணிப்பும் அவசியம். ஒருவன் நேர்மையுடன் சேவையாற்ற முயலும்போது ,அந்த தியாகங்கள் இன்னமும் பெரிய விடயங்களாக உணரப்படும். ஆனால் நான் எனது பயணத்தை பற்றி சிந்திக்கும்போது, எங்கள் தேசத்தின்சவாலான தருணங்களில் என்னால் வழங்கப்பட்ட பங்களிப்பு குறித்து ( அது எவ்வளவு சிறியதாக காணப்பட்டாலும்)நான் பெருமிதம் கொள்கின்றேன். அரசியலில் ஈடுபடுவதுஎன்பது எனக்கு இயல்பாக கிடைத்த ஒருபாதையில்லை. எதிர்பார்த்த எதிர்பாராத பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது,. ஆனால் இவற்றின் போது பல வருடங்களிற்கு முன்னர் எனது தந்தை வழங்கிய ஆலோசனையை நான் இறுக்கமாக பின்பற்றினேன்.'உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவற்றை கட்டுப்படுத்துங்கள், கட்டுப்படுத்த முடியாதவை குறித்து நேரத்தை வீணடிக்கவேண்டாம்" இந்த வார்த்தைகள் எப்போதும் எனக்கு வழிகாட்டியுள்ளன,பாதை எதுவென்பது தெரியாத தருணங்களிலும் முன்னோக்கி இந்த வார்த்தைகள் எனக்கு உதவியுள்ளன. தற்போது அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகும் இந்த தருணத்தில் எனது முதல் ஆர்வமான சட்ட துறையில் மீண்டும் ஈடுபடுவது குறித்து எதிர்பார்த்துள்ளேன். அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் - அலி சப்ரி | Virakesari.lk
-
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா!
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம். ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமது விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களின் மனவிருப்பங்களிற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை சமத்துவமான தேசத்தை உருவாக்கும் கனவோடு ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் அனைத்து மக்களினதும் கனவுகளை ஈடேற்றுவார் என்பதையும் எதிர்பார்க்கிறோம். எமது வேண்டுகோளை ஏற்று எமது அரசியல் வழி நின்று வாக்களித்த மக்களுக்கும் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றும் வகையில் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து மக்களிற்கும் நாம் நன்றி கூறுகின்றோம். இதுவரை கால எமது நாடாளுமன்ற அரசியலில், தேசிய நல்லிணக்க வழிமுறை வரலாற்றில் அரசுகளுக்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் மக்கள் நலன் சார்ந்து நாம் உறுதியுடன் செயலாற்றி வருகின்றோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே என்றும் மாறாத எமது அரசியல் இலக்கு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா! | Virakesari.lk
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Polling Division - Kilinochchi SAJITH PREMADASA SJB 30,571 Votes 47.33% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 20,348 Votes 31.51% RANIL WICKREMESINGHE IND16 7,182 Votes 11.12% ANURA KUMARA DISSANAYAKE NPP 2,805 Votes 4.34% Division Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Polling Division - Kankasanturai SAJITH PREMADASA SJB 8,708 Votes 31.56% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 8,365 Votes 30.32% RANIL WICKREMESINGHE IND16 6,587 Votes 23.87% ANURA KUMARA DISSANAYAKE NPP 1,935 Votes 7.01%
-
இன மதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி - அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் https://www.virakesari.lk/article/194390
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Polling Division - Mullaitivu SAJITH PREMADASA SJB 28,301 Votes 51.19% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 12,810 Votes 23.17% RANIL WICKREMESINGHE IND16 7,117 Votes 12.87% ANURA KUMARA DISSANAYAKE NPP 3,453 Votes 6.25% K.K. PIYADASA IND4 1,220 Votes 2.21% WIJEYADASA RAJAPAKSHE JPF 273 Votes 0.49% NAMAL RAJAPAKSA SLPP 215 Votes Division Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
District Results - Vanni SAJITH PREMADASA SJB 33,200 Votes 48.79% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 13,970 Votes 20.53% RANIL WICKREMESINGHE IND16 11,374 Votes 16.71% ANURA KUMARA DISSANAYAKE NPP 5,545 Votes 8.15% K.K. PIYADASA IND4 1,333 Votes 1.96% NAMAL RAJAPAKSA SLPP 283 Votes District Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
All Island Results - Cumulative ANURA KUMARA DISSANAYAKE NPP 531,343 Votes 52.67% SAJITH PREMADASA SJB 219,835 Votes 21.79% RANIL WICKREMESINGHE IND16 191,618 Votes 18.99% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 24,768 Votes 2.46% Others 41,301 Votes 4% Election Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Jaffna (யாழ் தொகுதி ) Valid Votes: 80,373 25,161 Ranil Wickremesinghe 31.31% 31.31% Complete 22,162 Sajith Premadasa 27.57% 27.57% Complete 21,798 Ariyanethiran Pakkiyaselvam 27.12% 27.12% Complete 8,271 Anura Kumara Dissanayake 10.29% NAMAL RAJAPAKSA SLPP 198 Votes 0.25% District Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Polling Division ANURA KUMARA DISSANAYAKE NPP 33,026 Votes 53.00% SAJITH PREMADASA SJB 17,453 Votes 28.01% RANIL WICKREMESINGHE IND16 7,428 Votes 11.92% NAMAL RAJAPAKSA SLPP 2,245 Votes Division Results 2024 (virakesari.lk) - Ambalangoda
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை. நல்லூர் தேர்தல் தொகுதி வாக்குகள். District Results - Batticaloa Postal Vote RANIL WICKREMESINGHE IND16 5,967 Votes 46.97% SAJITH PREMADASA SJB 3,205 Votes 25.23% ANURA KUMARA DISSANAYAKE NPP 2,479 Votes 19.51% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 901 Votes Division Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
District Results - Jaffna நல்லூர் ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 10,097 Votes 32.03% RANIL WICKREMESINGHE IND16 8,804 Votes 27.93% SAJITH PREMADASA SJB 7,464 Votes 23.68% ANURA KUMARA DISSANAYAKE NPP 3,835 Votes 12.16% NAMAL RAJAPAKSA SLPP 76 Votes 0.24% District Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
District Results - Nuwara Eliya ANURA KUMARA DISSANAYAKE NPP 8,946 Votes 47.15% RANIL WICKREMESINGHE IND16 5,087 Votes 26.81% SAJITH PREMADASA SJB 4,334 Votes 22.84% NAMAL RAJAPAKSA SLPP 308 Votes ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 13 Votes District Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Postal Votes - Matara - Postal ANURA KUMARA DISSANAYAKE NPP 19,712 Votes 65.92% RANIL WICKREMESINGHE IND16 5,088 Votes 17.01% SAJITH PREMADASA SJB 4,041 Votes 13.51% NAMAL RAJAPAKSA SLPP
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
District Results - Colombo ANURA KUMARA DISSANAYAKE NPP 20,864 Votes 61.02% RANIL WICKREMESINGHE IND16 7,645 Votes 22.36% SAJITH PREMADASA SJB 4,080 Votes 11.93% NAMAL RAJAPAKSA SLPP 561 Votes
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
District Results - Vanni (Postal Votes - Vanni) SAJITH PREMADASA SJB 4,899 Votes 38.38% RANIL WICKREMESINGHE IND16 4,257 Votes 33.35% ANURA KUMARA DISSANAYAKE NPP 2,092 Votes 16.39% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 1,160 Votes 9.09%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : All Island Results - Cumulative ANURA KUMARA DISSANAYAKE NPP 90,857 Votes 60.21% SAJITH PREMADASA SJB 27,800 Votes 18.42% RANIL WICKREMESINGHE IND16 26,162 Votes 17.34% NAMAL RAJAPAKSA SLPP 2,969 Votes 1.97%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Postal Votes - Trincomalee Anura Kumara Dissanayake 5480 3.63% 4537 Sajith Premadasa3.01% 3.01% Order 3630 Ranil Wickremesinghe 2.41% 2.41% Order 431 Ariyanethiran Pakkiyaselvam 0.29% Presidential Election 2024 (dailymirror.lk) Postal Votes - Galle 25892 Anura Kumara Dissanayake 17.16% 17.16% Order 7226 Ranil Wickremesinghe 4.79% 4.79% Order 5338 Sajith Premadasa 3.54% 3.54% Order 863 Namal Rajapaksa 0.57%
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அம்பாந்தோட்டை ANURA KUMARA DISSANAYAKE NPP 14,482 Votes 67.20% SAJITH PREMADASA SJB 3,397 Votes 15.76% RANIL WICKREMESINGHE IND16 2,502 Votes 11.61% NAMAL RAJAPAKSA SLPP District Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இரத்தினபுரி -தபால் வாக்குகள் ANURA KUMARA DISSANAYAKE NPP 19,185 Votes 60.83% RANIL WICKREMESINGHE IND16 6,641 Votes 21.06% SAJITH PREMADASA SJB 4,675 Votes 14.82% NAMAL RAJAPAKSA SLPP 500 Votes 1.59% ARIYANETHIRAN PAKKIYASELVAM - 3 Votes Division Results 2024 (virakesari.lk)