Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 13 Sep, 2024 | 05:47 PM தமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எமக்கு என்ன தேவை என கூறியுள்ளோம். ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த சுபீட்சமும் இல்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் தமிழர் தாயகத்தில் என்ன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது? அரசாங்கத்துடன் சேர்த்து இயங்கியவர்களுக்கு கூட அபிவிருத்தி சார்பான அமைச்சை கூட கொடுக்கவில்லை. பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்துக்கு கூட தடைகளை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச விமான நிலையத்தை கூட அவர்கள் அபிவிருத்தி செய்யவில்லை. காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை கூட அபிவிருத்தி செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களில் வடக்கு, கிழக்கில் செய்த அபிவிருத்தி என்ன? ஒரு சர்வதேச மைதானங்களை கூட அமைக்கவில்லை. சர்வதேச மைதானங்களை அமைத்தால், அந்த இடம் தானாக அபிவிருத்தி அடையும். நட்சத்திர ஹோட்டல்கள் வரும் தமிழர் தாயக பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்துவிடும் என்ற நோக்கிலேயே சர்வதேச மைதானங்களை அமைக்கவில்லை. தமிழர் தாயகத்தில் பொருளாதார மையங்கள் கூட இல்லை. நாம் எம்மை பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்களுடைய கைகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். அதன் ஊடாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் கொண்டுவர முடியும். தமிழர்கள் விரும்பிய எதனையும் செய்யாத தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்காது, தமிழர்களுக்கு என்ன தேவை என தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். 2009ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு பிளவுபட்டுள்ள எங்களுடைய தமிழ் இனத்தை ஒன்றிணைக்க வேண்டும். அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளில் 7 தமிழ் அரசியல் கட்சிகள், கடற்தொழிலாளர்கள், அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள் உள்ளடங்கிய 80 சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். தமிழரசு கட்சியில் கூட பெரும்பாலானவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றார்கள். எனவே, தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை காட்ட தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன் | Virakesari.lk
  2. மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.
  3. Annapoorna: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் கோவையில் நேற்று முன்தினம், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் பேசிய பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்குப் பின்னர், வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. இதனால், கேள்விகேட்டதற்காக அதிகாரத்திலிருந்து கொண்டு மன்னிப்புக் கேட்க வைப்பதா எனப் பல தரப்பிலிருந்தும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கண்டனங்கள் வந்தன. இருப்பினும், தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக சீனிவாசன் விளக்கமளித்தார். மறுபக்கம், அந்த வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அன்னப்பூர்ணா சீனிவாசனின் கேள்வியில் உண்மை இருப்பதாகவும், அதிகாரம் அதைப் பணியவைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். சீமான் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த சீமான், "அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் கேள்வியிலிருந்த உண்மை அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி வரியால் வர்த்தகர்களும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்திலும் வரி. ஒருவன் வீடு கட்ட போனாலும், அவரால் வரிதான் கட்ட முடியும். வாழவே முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரின் கேள்வி நியாயமானது என்று இப்போது நாடெங்கிலும் பரவிடுச்சு. அதை அதிகாரம் பணியவைக்கிறது. அவர் எவ்வளவு வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது" என்று கூறினார். Seeman: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் | NTK Chief Seeman slams BJP in kovai Annapoorna hotel CEO issue - Vikatan
  4. Simrith / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 07:21 - 0 - 38 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கிறது, குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக SLPP நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்று ராஜபக்ஷ வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே கூறினார். Tamilmirror Online || வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
  5. மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார். மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! (newuthayan.com)
  6. Published By: Rajeeban 11 Sep, 2024 | 12:31 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளது . இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கிஸ்தான் பிரஜைகளிற்கான விசா வழங்கும் நடைமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் N;மஜர் ஜெனரல் உல் அஜீஸ் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதனை மாற்றாந்தாய் மனப்பான்மை என வர்ணித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரஜைகள் இலங்கைக்கு சுமூகமான விதத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக தற்போதைய நடைமுiறைய உடனடியாக மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்ர். 38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி | Virakesari.lk
  7. 11 Sep, 2024 | 01:46 PM நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை விட்டு மோதி படகை கவிழ்த்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9-ம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகின் மீது கடற்படை கப்பலைக் கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஃபைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கடலில் காயங்களுடன் வலைகளில் சிக்கி மீனவர்கள் தத்தளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீனவர்களை தங்களது கப்பலில் ஏற்றிய இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் செய்யாமல் சுமார் 6 மணி நேரமாக அவர்களை மிரட்டி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தங்கள் எல்லைக்குள் தான் மீன்பிடித்தோம் என தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு வந்த சக தமிழக மீனவர்களிடம் செருதூர் மீனவர்களை ஒப்படைத்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்களின் உதவியோடு நடுக்கடலில் கவிழ்ந்த தங்களது படகை மீட்ட நாகை மீனவர்கள் காயங்களுடன் இன்று (புதன்கிழமை) காலை கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படை அதிகாரிகள் கப்பலை கொண்டு மோதியதில், படகில் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன் பிடி தளவாட பொருட்கள் என ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் விழுந்து மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே, செருதூர் மீன் இறங்குதளம் வந்து சேர்ந்த காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும் இலங்கை கடற்படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திவருவது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் படகை மோதி கவிழ்த்ததாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு | Virakesari.lk
  8. 11 Sep, 2024 | 05:36 PM மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் வீதி திறப்பு நிகழ்வு ஆரம்பமானது. அடுத்து, விருந்தினர்களது உரைகளை தொடர்ந்து வீதி திறக்கப்பட்டது. யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகனின் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி திறப்பு நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் மதகுருமார், வலி.மேற்கு பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை, கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
  9. (எம்.மனோசித்ரா) கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் எடுத்த தீர்மானம் எனது சுய உரிமையாகும். எனது 14 வருட அரசியல் வாழ்வில் கட்சி தாவும் அரசியல் மற்றும் அடிமைத்தனமான அரசியலை நான் வெறுக்கின்றேன். எவ்வித சிறப்புரிமைகளையும் பெற்றுக் கொண்டதில்லை. எனவே நான் அரசாங்கத்துக்கு பயமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறான தீர்மானத்தை எடுத்தால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ளும். எனவே மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்த வேண்டியது எனது கடமையாகும். எனக்கு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இது நான் சிந்தித்து எடுத்த தீர்மானமாகும். ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நான் வாக்களித்திருக்கின்றேன். ஆனால் அவர் என்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றார். பதவிக்காக ரணிலுக்கு தேவையான தீர்மானத்தை தீர்மானத்தை என்னால் எடுக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. சஜித் வெற்றி பெறுவார் என்பதால் தானே நீங்கள் அங்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். அதுவே உண்மையாகும். கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை. அரசியலுக்காகவே நான் சுவிட்ஸர்லாந்து குடியுரிமையையும் இழந்தேன். அதனால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனினும் அதனை விட நான் மக்களுக்கு சேவையாற்றுவதற்கே முன்னுரிமையளித்தேன் என்றார். கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை : இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதிலும் கவலையில்லை - கீதா குமாரசிங்க! | Virakesari.lk
  10. Published By: Vishnu 11 Sep, 2024 | 06:21 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார். அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீலாவணையில் அரியநேத்திரனுக்குப் வரவேற்பளிக்கப்பட்டது. தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் . ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கே முருகன் கோயிலில் சிறப்பு பூஜை இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தவிர தனது பிரச்சாரத்தை முன்னெடுத்த சந்தரப்பத்தில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது. தனது பிரச்சாரத்தை பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்த வேளை பூஜையில் ஈடுபட்டார். பின்னர் மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. பின்னர் கல்முனை ஆர்.கே.எம் சந்தி கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிப்பிற்கு உள்ளானார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு | Virakesari.lk
  11. யாழ்ப்பாணம் 3 மணி நேரம் முன் ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்! யாழ்ப்பாணம் 3 ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது தென்மராட்சி விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன. (ப) ஐக்கிய மக்கள் சக்தியின்: தேர்தல் பிரசாரக் கூட்டம்! (newuthayan.com)
  12. சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது! ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒருவர் கூட சமூகம் அளிக்காத நிலையில் கூட்டம் கைவிடப்பட்டது. இப் பிரச்சாரக் கூட்டம் வடமராட்சி குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் 10. 00 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. பிரச்சார கூட்டத்திற்கு சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி, மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு பிரச்சார கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு இசை நிகழ்வு கதிரைகள் மட்டும் பார்வையாளராக இருக்க இடம்பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் 11.00 மணிக்கு கூட்டம் எடும்பெறும் 12 .00 மணிக்கு இடம்பெறும் என மாற்றி மாற்றி கூறிய நிலையில் பிற்பகல் 2.00 மணி ஆகியும் கூட்டத்துக்கு ஒருவர் கூட சமூகமளிக்காக நிலையில் பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது. ஏற்பாட்டாளர்கள் ஐவர், பாதுகாப்புக்கு வருகை தந்த இருபது வரையான பொலிஸார் ஊடகவியலாளர்கள் சிலர் மட்டுமே அங்கு காணப்பட்டனர். கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தமது கடமைகளை கைவிட்டு சென்றனர். (ப) சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் றத்து! (newuthayan.com)
  13. Published By: Vishnu 10 Sep, 2024 | 08:57 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்திருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடிய ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான கட்சியின் விசேட குழு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக கடந்த மாத இறுதியில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாதம் முதலாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார். அதேவேளை மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று லண்டனில் இருந்த சிறிதரன், சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கிய உத்தரவாதம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதற்குத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடியது. தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். அத்தோடு எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிதரன், அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவே முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் அது அவருடைய விருப்பம் எனும்போதிலும், கட்சி அதற்கு அனுமதி அளிக்காது எனத் தாம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் கூறினார். தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட உத்தேசம் : 14 ஆம் திகதி மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருக்கவும் தீர்மானம்! | Virakesari.lk
  14. தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜே வி பி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றம் சாட்டினார் . இன்றையதினம் திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜே வி பி என்ற பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்த்தால் இருவர் சார்ந்தவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இனவாதிகள். அவர்கள் தங்களுக்குள் யார் நல்லவர் என்பது தொடர்பில் அடிபட்டு கொள்ளட்டும் தமிழ் மக்களுக்கு அது பிரச்சனை அல்ல. ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்காக ஒருவரால் அநுரகுமார ஜே வி பி பானியில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை மிரட்டுகிறார் என கூறுகிறார். அநுர கூறுகிறார் தான் மிரட்டவில்லை ரணில் தான் இனவாதத்தை கக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என கூறுகிறார். இது இவ்வாறு இருக்க தமிழரசு கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை செய்தவர் அவர் அநுர அவ்வாறு மிரட்டவில்லை என வக்காளத்து வாங்குகிறார். சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும் தற்போது தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்காளத்து வாங்குகிறார். ஆகவே தமிழ் மக்கள் இனவாதிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு இனவாதிகளையும் துரோகிகளையும் தேர்தல் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் வக்காலத்து - தம்பிராஜா ஆவேசம்! (newuthayan.com)
  15. 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவானது கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. இதன்போது 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 60ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாளில், தெரிவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி, சர்வதேச மற்றும் உள்ளூர் திரைப்பட கலைஞர்கள், திரைஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் (newuthayan.com)
  16. 10 Sep, 2024 | 02:22 AM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரiவின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Nவுhல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, கலந்துரையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். இலங்கை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருப்பதாகத் தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமையும், அவை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான மறுசீரமைப்புக்கள் பூர்த்திசெய்யப்படாமையும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டார். விசேடமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், அதன்விளைவாக உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் இன்னமும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் வறுமை மட்டம் இரு மடங்காக அதிகரித்திருப்பதுடன், பல குடும்பங்கள் கல்வி, சக்திவலு உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் புறந்தள்ளி நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன எனவும் கரிசனை வெளியிட்டார். அதேபோன்று அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட அடக்கமுறைச் சட்டமூலங்கள், சட்டங்களை நினைவுகூர்ந்த வோல்கர் டர்க், அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புத்தரப்பினருக்கு மிகையான அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிவில் சமூக இடைவெளி மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன முடக்கப்படக்கூடும் என எதிர்வுகூறிய அவர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் மீதான தொடர் கண்காணிப்புக்கள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு முத்தூர் படுகொலை, திருகோணமலை ஐவர் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் பதிவான மிகமுக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வோல்கர் டர்க், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் விவகாரத்திலும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை என்றார். மேலும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது அன்புக்குரியவர்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை அடுத்து ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் - வோல்கர் டர்க் | Virakesari.lk
  17. 10 Sep, 2024 | 10:10 AM நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு நன்னீர் நாய் வழி தவறி சென்ற நிலையில் சனிக்கிழமை (7) பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நன்னீர் நாய் (Smooth-coated Otter) நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது. இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பாறையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு | Virakesari.lk
  18. தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது. மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள்,பிரதேசக் கிளைகள் ,மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர். தமிழரசு கட்சியின் மத்திய குழு அண்மையில் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என தீர்மானம் அறிவித்த நிலையில் பல்வேறு வகையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்துது இந்த நிலையில் கிளி நொச்சி மாவட்டகிளை கூடி பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரனுக்கே ஆதரவு அளிப்பது என்பதனை ஏகமனதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு : கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி தீர்க்கமான முடிவு | Virakesari.lk
  19. சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் 10 Sep, 2024 | 05:01 PM சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk
  20. 06 Sep, 2024 | 05:24 PM போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும் இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த செவ்வியை மேற்கோள் காட்டி, 'இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?' என்று யாழில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் வினவினார்கள். இதற்குப் பதிலளிக்கும்போதே, 'இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்' என்று அநுர தெரிவித்துள்ளார்.
  21. 05 Sep, 2024 | 04:38 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் இலங்கை தமிழரசுக் கட்சி பிளவடைந்துள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு பொன்னான வாய்ப்பு காணப்பட்டபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினரும் தங்களின் சொந்த அரசியல் காரணங்களுக்காகத் அதனைத் தவறவிட்டுள்ளனர். இலங்கைத் தமிழரசுக்கட்சி பல்வேறு தருணங்களில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றியும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்து பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது, ஆனால் செயற்பாட்டில் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை அக்கட்சியினர் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த உண்மையை நான் சொன்னால், எனக்கு தமிழ் சினிமாத் திரைப்படங்களில் வரும் 'வில்லன்' போன்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், தமிழ் மக்களின் உண்மையான வில்லன்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள். ரணிலுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். நான் தமிழ் மக்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை நம்பவைப்பதற்காக பொய்சொல்கிறார். மாகாண சபை முறைமைகள் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீண்டும் தனது மக்களை தோல்வியடைய செய்துள்ளது. ரணில் மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளார். இதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் நீண்டகாலமான தலைமைக்கட்சி என்ற பாத்திரத்தினை இனி வகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. அந்தக் கட்சியினர் சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதான் காரணமாக உட்கட்சிப் பிளவு வலுவாகியுள்ளது. தமிழ் மக்களுக்கான ஏகோபித்த தலைமையை அந்தக் கட்சியினால் வழங்க முடியாத பரிதாமான நிலைமையை அடைந்துள்ளது என்று மேலும் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல் | Virakesari.lk
  22. (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன்வழி பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார். இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டன் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று நாட்டில் இல்லாததன் காரணமாக அதில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கட்சியின் தீர்மானத்துக்குப் புறம்பாக தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவாரா? என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் 7 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டதாகவும், அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி உரியவாறு கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கட்சியின் கடந்த மத்திய குழுக்கூட்டங்களில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது எனக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறிருக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். எனவே இவை பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தல்களும் இல்லாத நிலையில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி | Virakesari.lk
  23. வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக ஒரு டிவி வாங்குவதை பற்றியோ அல்லது வாடகை வீடு குறித்தோ நீங்கள் பேசியிருந்தால் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொருட்கள் தொடர்பான விளம்பரங்களே தொடர்ந்து உங்கள் டைம்லைனில் வந்து கொண்டிருக்கும். பல ஆண்டுகளாக வெறும் ஊகமாக இருந்த இந்த விவகாரம் தற்போது உண்மையாகியுள்ளது. டிவி மற்றும் ரேடியோ செய்திகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் காக்ஸ் மீடியா குரூப் (Cox Media Group) தனது முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ஆக்டிவ் லிஸனிங் டெக்னாலஜி (Active Listening technology) என்ற மென்பொருளின் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மைக் வழியாக நம்முடைய உரையாடல்களை நமது ஸ்மார்ட்போன் கவனித்து அதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பேஸ்புக், அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நம்முடைய வாய்ஸ் டேட்டாவை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை அனுப்பவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. 470க்கும் அதிகமான மூலாதாரங்களில் இருந்து ஏஐ மூலம் இயங்கும் இந்த மென்பொருள் குரல் தரவுகளை சேகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இது நாம் போனில் பேசுவது மட்டுமின்றி நேரில் பேசுவதையும் கவனிக்கிறது. இந்த தகவல்களை 404 மீடியா என்ற ஊடகம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், காக்ஸ் மீடியா குரூப் நிறுவனம் குறித்து தனது பாட்காஸ்டில் அம்பலப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதன் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பம் குறித்து வெளிக்கொண்டு வந்துள்ளது. அமேசான் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொருபுறம் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் காக்ஸ் மீடியா நிறுவனத்துடன் பணியாற்றும் திட்டமில்லை என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. “உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல் | Company that works with Amazon, Facebook confirms your phone is listening to you - hindutamil.in
  24. சுமந்திரனின் அறிவிப்பு தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த செய்தி - அமைச்சர் சுசில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார். அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார். எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார். எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றாr https://www.virakesari.lk/article/192641

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.