Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகின்றேன். கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள்.தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை.காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது. தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பது தான் எமது முதல் நோக்கமாகும். இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது ஒரு உசிதமான விடயமல்ல.எமது மாவட்டத்திற்கு கடந்த கால தேர்தல்களில் பல கட்சியினர் வருகின்றார்கள்.போகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள்.அத்துடன் அவர்களின் விடயங்கள் முடிந்து போகும்.ஆனால் இங்கு நாங்கள் மாத்திரமே மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகிறோம். இம்முறை தேசியத்தை விட்டு ஈபிடிபி கட்சியினை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் கடந்த 30 ஆண்டு காலமாக தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எம்.பியாக வெற்றி பெற்று பல்வேறு அமைச்சுகளை பெற்று மக்கள் சேவை செய்து வருகின்றார். அவருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எம்மக்கள் நன்மை பெறுவார்கள்.சிலர் அவரை நோக்கி இங்கு என்ன அபிவிருத்திகளை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர். அது பொருத்தமான கேள்வி அல்ல என்றே கூறுவேன்.வடகிழக்கில் அவர் தனது சேவை காலத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். ஆனால் அவரிடம் இங்குள்ளவர்கள் அணுகி எதுவும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை.மக்களோ அல்லது சங்கங்களோ அவருடன் சந்தித்து கதைத்து அவரிடம் பெறுவோம் என்றும் நினைத்ததில்லை.ஆனால் மக்களின் அபிலாஷைகளை எம்போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும். இதற்கு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும்.அந்த நம்பிக்கையில் தான் இன்று தேர்தலில் இறங்கியுள்ளோம்.மக்கள் இவ்விடயங்களை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். எனவே 74 வருடங்களாக விடுதலை உரிமைகளை பேசிக்கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிடுவதை விட்டுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பாதையை நோக்கி செல்ல வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூட்டங்களை நடாத்திக்கொண்டு தற்போது மக்களை குழப்ப முற்படுகின்ற சம்பவமும் இடம்பெற்று வருகின்றது. இந்த பொதுக்கட்டமைப்பு தேர்தல் காலத்தில் முளைத்த ஒரு அமைப்பு தான்.மக்களுக்கு கிடைக்க வேண்டியதையும் இல்லாமல் செய்ய முற்படுகின்றார்கள். அவர்கள் உள்நோக்கம் கொண்ட அமைப்பு.தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இத்தேர்தல் காலங்களில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.மக்கள் விழிப்படைய வேண்டும். உங்கள் வாக்ககள் பெறுமதி மிக்கது.பெறுமதி மிக்க தலைவர்களுக்கு வாக்களிக்க முற்பட மக்கள் முன்வர வேண்டும் என்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ; செல்லையா இராசையா! | Virakesari.lk
  2. முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் பல இலட்சமான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு , மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன் போது பொலிஸார் தெரிவித்திருந்தனர். முல்லைத்தீவு - சிலாவத்தையில் கடை ஒன்று எரிந்த சம்பவம் தொடர்பில் விசாரணை | Virakesari.lk
  3. (எம். மனோசித்ரா) சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு கடற்படையினர் வரவேற்பளித்தனர். கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது 86 மீற்றர் நீளமானது. சீன இராணுவ கடற்படையின் 35 அதிகாரிகள் உட்பட 130 சிப்பாய்கள் குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ளனர். இதே வேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். அதே போன்று இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. அத்துடன் இலங்கையின் சிறப்பு மிக்க கடற் பகுதிகளுக்கும் குறித்த சீன கப்பல் விஜயம் மேற்கொள்ள உள்ளதுடன், வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு பயிற்சி ; கடற்படை தலைமையகம் அறிவிப்பு! | Virakesari.lk
  4. மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! ஸ்டாக்ஹோம்: மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி செயலாளர் இன்று அறிவித்தார். மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமெரிக்க உயிரியியலாளர்கள் இவர்கள் இருவரும் மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் படியெடுத்தலுக்கு ( transcription) பின்பு மரபணு வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தற்காக கூட்டாக உயரிய இந்த விருதினை பெறுகின்றனர். நோபல் கமிட்டி, இவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான அடிப்படை முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன" என்று தெரிவித்துள்ளது. நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரே மரபணு மூலக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், தசைகள் மற்றும் நரம்புகள் போன்ற பல்வேறு வகையான செல்கள் பல்வேறு வகையான செயல்களைச் செய்கின்றன. மரபணு ஒழுங்குமுறை செயல்படுகள் மூலம் இது சாத்தியமாகிறது. அப்போது இந்த செல்கள் அவற்றுக்குத் தேவையான மரபணுவை மட்டும் செல்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அம்ரோஸ் மற்றும் ருக்குன் ஆகியோரது மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பு, இந்த செயல்பாட்டின் போது புதிய வழியை வெளிப்படுத்தியது. அவர்களது கண்டுபிடிப்புகள் உயிர்கள், குறிப்பாக மனித உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முக்கிய பங்காற்றுகின்றன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும் (செவ்வாய்க்கிழமை) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14-ம் தேதி திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA - hindutamil.in
  5. இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் இலங்கை அணிகள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தன. இவ்வாறான பின்னணியில் போட்டியில் கலந்துகொண்ட பின்னர் இலங்கை அணிகள் நாட்டிற்கு திரும்பின. இலங்கை அணிகளை வரவேற்பதற்காக இலங்கை விமானப்படையின் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் விமானப்படை கொமாண்டர் அமல் பெரேரா உட்பட இலங்கை விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. (ப) இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! (newuthayan.com)
  6. சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடம் விடுக்கும் கோரிக்கை எனும் தலைப்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என சகல தரப்புகளும், மக்களின் நலன் கருதி நீண்ட காலமாகவே எமது மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் அபிலாசைகளை உண்மையாகவும் உறுதிப்பாட்டுடனும் அடைவதற்கான இன்றியமையாத பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை தமிழ்மக்களின் நலன் கருதி எம் அமைப்பானது முன்வைக்கின்றது. இதற்கமைய குறிப்பிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளர்களுக்கும் எமது அமைப்பானது ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கும் என்பதனை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி நிற்கின்றோம். முழுநாட்டிலும் மாற்றத்தை எதிர் பார்க்கின்ற மக்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் தலையாய கடமையாகும். இதற்கான அழுத்தங்களினை பொது அமைப்புக்கள் இந்தக் குறுகிய நாட்களில் மிக வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான எந்த முன்னெடுப்பும் திம்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயம் உள்ளடங்கலான இறுதித்தீர்வை எட்டும் நோக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டும். நடைபெற்று முடிந்த இன அழிப்பிற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பிற்குமான பரிகார நீதியைப்பெறும் நோக்குடன் சர்வதேச நீதிக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினைப் பெறும் நோக்குடன் சிங்கள அரசாங்கத்தோடு தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்படும். எந்தவொரு பேச்சு வார்த்தையிலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பு நாடு ஒன்றின் நடுநிலையுடன் முன்னெடுக்கப்படவேண்டும். நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பழைய அரசியல் பிரமுகர்கள் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட்டு சமூகப் பொறுப்புள்ள அறிவார்ந்த இளைஞர், யுவதிகள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவது எம் இனத்தின் எதிர்காலத்திற்குத் தவிர்க்கப்படமுடியாத தேவையாக உள்ளது. அத்தோடு இதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆண்களுக்கு நிகராக 50 வீதம் வழங்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமாக கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ப). சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! (newuthayan.com)
  7. 07 Oct, 2024 | 12:57 PM ஞாயிற்றுக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் இன்று (07) காலை 07.00 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 162.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட (112.5 மி.மீ) மற்றும் ஹொரணை (111.5 மி.மீ) ஆகிய பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் நெலுவ (109.5 மி.மீ) மற்றும் மாத்தறை மாவட்டத்தில் களுபோவிட்டியான (84.0 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொழும்பில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு | Virakesari.lk
  8. 07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம். தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.அந்த அழை தற்போது எங்களிடம் பரவியுள்ளது. ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம்,கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என்றார். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை ; ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்! | Virakesari.lk
  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 8 வேட்பாளர்களும் 3 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சுரேஷ், சுப்பிரமணியம் சத்தியநாதன், கணபதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்ளில் இருவரை தவிர ஏனைய 6 பேரும் புதுமுகங்களாக உள்ளனர். வேட்பாளர்கள் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதேவேளை சுயேச்சை குழு சார்பில் வஜ.லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழுவொன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. இம்மாவட்டத்தில் 3 சுயேச்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 8 வேட்பாளர்களும் 3 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
  10. Published By: Digital Desk 7 07 Oct, 2024 | 07:04 PM வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை என்பவரே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2007ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததுடன் ருஹுனு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை விஞ்ஞான பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரியின் பெயர் பரிந்துரை | Virakesari.lk
  11. 07 Oct, 2024 | 06:21 PM நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது. ஆறுகட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாது - வெளியானது வர்த்தமானி அறிவித்தல் | Virakesari.lk
  12. 07 Oct, 2024 | 06:52 PM தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையிலிருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். அதன் பின்னர், மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்த தனியார் பேருந்து உரிமையாளர் | Virakesari.lk
  13. இஞ்ச பாருங்கோ ஏராளன், உதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க கூடாது. எம் பணி, செய்திகளை இணைப்பது, அதுவும் நம்பகமான தளங்கள் என நாம் நம்பும் தளங்களில் இருந்து. ஒவ்வொரு செய்தியையும் உண்மைச் செய்தியா என்று தேடிப்பிடித்து, ஆராய்ந்து எல்லாம் போட முடியுமா எங்களால்? இல்லைதானே. அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு செய்திகள் பிழையாக வரத் தான் செய்யும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. வாசிப்பவர்களில் பலர் புத்திக் கூர்மையுடன் செய்திகளை அணுகி, பிழையான செய்தியா இல்லையா என கண்டு பிடித்து விடுவர். இப்படி மன்னிப்பு கேட்பதென்றால் இந்த பிழம்பு எத்தனை செய்திகளுக்கு கேட்டு இருக்க வேண்டும் 🤣 (அதுவும் முன்னர் பதிவின் செய்திகளையும் புதினத்தின் செய்திகளையும் இணைத்த காலத்தில்)
  14. // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.// இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்
  15. Editorial / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - 103 செ.தி.பெருமாள் எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்கென ஒரு மனது வேண்டும் என்பார்கள். அதை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா செய்துகாட்டி ஏனைய சகல மாணவர் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியான மாணவியாக எடுத்துக்காட்டியுள்ளார். நெடுஞ்சாலையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி , 3,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா மஸ்கெலியா- சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (24) காலை கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை அந்த மாணவி கண்டெடுத்துள்ளார். அவற்றை அப்பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஜீ.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஸ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடத்திய விசாரணையின் போது, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவனலோஜினி ( வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார். அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது. மஸ்கெலியா ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு முச்சக்கர வண்டியில் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது. அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் நன்றி தெரிவித்துள்ளார். Tamilmirror Online || மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்
  16. நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் அவர்கள் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள். வைத்திய நிபுணர் திருமதி. கவிதா அவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கூட பாராமல் தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார். ஆனால் வைத்திய நிபுணர் அஜந்தா அவர்கள் சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னர் இன்று வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். குறித்த வைத்திய நிபுணர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார். ஆகையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. (ப) நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! (newuthayan.com)
  17. இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையின் இரண்டு நெருங்கிய அயல்நாடுகளான சீனா இந்தியாவுடன் சமநிலையான உறவுகளை பேண முயலும் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ள முயலாது என தெரிவித்துள்ளார். புவிசார் அரசியல் மோதலில் நாங்கள் ஒரு பகுதியாக மாறமாட்டோம்,எந்த தரப்புடனும் இணைந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் துண்டாடப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லைஎன குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளும் பெறுமதி மிக்க நணபர்கள்,எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம்,என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மத்திய கிழக்கு ஆபிரிக்காவுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் பிராந்திய பதற்றங்களிற்கு இடையில் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்த நடுநிலை வெளிவிவகார கொள்கை அவசியம் என தெரிவிததுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி பரஸ்பரம் சாதகமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்வார் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார | Virakesari.lk
  18. தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும், பிரதேசங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கைகோர்த்து திட்டமிட்டு இதனை நிறைவேற்றி வந்துள்ளனர். "இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய உணர்வுத் தளத்தை மீளக்கட்டமைப்பதில் காத்திரமான பங்காற்றியுள்ளார்." என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்யுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இனத்தைத் தேசமாகக் கட்டியமைப்பதில் அந்த இனம் பேசுகின்ற மொழி, தாயகமாகக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு, பண்பாடு ஆகியன வகிக்கும் பங்களிப்புகளுக்கு நிகராக தேசம் என்ற உணர்வு நிலையும் இன்றியமையாதது. யுத்தத்தின் பின்னரான தமிழர் அரசியலில் தேசம் என்கின்ற உணர்வு நிலை தமிழ்ச் சூழலில் ஊடுருவியுள்ள பெரும்பான்மைக் கடசிகளாலும் அவர்களின் எடுபிடிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் மக்களைத் தேசமாக மீளவும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் தான் பெற்ற கணிசமான வாக்குகளின் மூலம் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர். இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர். ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன் | Virakesari.lk
  19. நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அநுரகுமாரவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்தகாலங்களில் முழுமையாக துணைநின்றது. ஒன்றரை இலட்சம் அப்பாவி தமிழ்மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். நாங்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கமுடியாது உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு அந்த விருப்பங்களை அங்கிகரிக்கும் மூலமாக தமிழர்களை இந்தநாட்டின் ஆட்சியிலே பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும். அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம். வடகிழக்கு தமிழர்தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டுவருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும். அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும்என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம் என்றார். கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை | Virakesari.lk
  20. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்பிரதமர் வேட்பாளராக சஜித்பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" | Virakesari.lk
  21. நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர் நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர் | Virakesari.lk
  22. இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் திங்கட்கிழமை (23) இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தி (NPP)யில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுர குமார திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று இடம்பெற்றது . இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றியதுடன் இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை! | Virakesari.lk
  23. பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு! (எம்.ஆர்.எம்.வசீம்) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் தெரிவித்து வந்தார். அந்த அழைப்பு தற்போதும் அவ்வாறே இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுக்கிறேன். நாடு வங்குராேத்து அடைந்திருந்தபோது, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தபோது, அதற்கு இனங்காத பிரிவினரை எப்படியாவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தற்போது அது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கலந்துரையாடல்களின் இறுதியில் இது தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்க இருக்கிறோம். இணைந்து செயற்பட வேண்டும் என்றே அதிகமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதனால் எவ்வாறாவது இணைத்துக்கொள்ளவே நாங்களும் முயற்சிக்கிறோம். அடுத்து இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து அரசியலில் இருப்பதாகவும் இலங்கைக்கு இயலாத சந்தர்ப்பம் ஏற்படும்போது தேவையான தலையீடுகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அன்றாட அரசியல் மாற்றங்களுக்கு அமைய எமக்கு தேவையான ஆலாேசனைகளை வழங்கி, கட்சியை வழிநடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவார் என்றார். பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு! | Virakesari.lk
  24. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு, பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி அமைச்சரவை செயலாளர் - எம்.டி.ஜே. பெர்னான்டோ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் - டி.எஸ்.ருவன் சந்திர, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் - கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் - அருணி விஜேவர்தன, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சின் செயலாளர் - டி.ஜயசுந்தர, மகளிர் , சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம்,மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் - கே. மகேஷன், வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு – எம்.எம். தய்முதீன் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் - எம்.பி அதபத்து, சுகாதார அமைச்சின் செயலாளர் -பாலித குணரத்ன மஹிபால, நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் - பி.பி. யசரத்ன, சுற்றாடல், வனஜீவராசிகள், வள வனங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் - பிரபாத் சந்திரகீர்த்தி, கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில்,மற்றும் உயிர் பல்வகைமை வளங்கள் அமைச்சின் செயலாளர் - எம். விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - சம்பத் துய்யகொன்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - ஆர்.பி செனவிரத்ன, புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் - ரஞ்சித் ஆரியரத்ன, சக்தி வலு அமைச்சின் செயலாளர் - உதயங்க ஹேமபால 15 அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் | Virakesari.lk
  25. பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Thinakkural.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.