Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 02:01 PM tamil guardian ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இன் போதும் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகவே நம்பமுடியாத விடயமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்,ஆயிரக்கணக்கில் எங்கள் மக்கள் மணலில் குறுகியி நிலப்பரப்பில் தஞ்சமடைந்திருந்ததையும்,மருத்துவமனைகள் மீதும் செஞ்சிலுவை சங்கத்தின்மீதும் வேண்டுமென்றே எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றதையும்,உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப்படுபவையையும்,தமிழ் ஆண்களும் பெண்களும் எதிர்கொண்ட சித்திரவதைகள் பாலியல் வன்முறைகளையும் நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஒரு முழுதலைமுறை குடும்பங்கள் இல்லாமல் வளர்கின்றது ,ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் யுத்தத்தினால் ஏற்பட்ட உள உடல் காயங்களுடன்வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் இதனை இவ்வளவு விரிவாக நினைவுபடுத்தவிரும்பவில்லை ஆனால் எங்கள் வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இலங்கை ரோம்சாசனத்தில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தில்கையெழுத்திடாதது ஏமாற்றமளிக்கின்றது ,ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார். 2009 இல் படுகொலைகள் இடம்பெறும்வேளை தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய டேவிட்மில்லிபாண்ட் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் தனது கரங்களை உயர்த்த முயன்றார் எனக்கு இது ஞாபகம் இருக்கின்றது,அப்போதைய பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுனுடன் இது பற்றி பேசசென்றிருந்த தமிழர்களில் நானும் இடம்பெற்றிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சர் அக்காலப்பகுதியில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் காணப்பட்டார்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை குறித்து ஐநாவின் அனைத்து சபைகளும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என தான் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார் என உமாகுமரன் குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவங்கள் இடம்பெற்றுமுடிந்து 15 துயரமான வருடங்களாகிவிட்டன,ஆனால் தொழில்கட்சி நீதிக்காக பரப்புரை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை, எங்களின் கட்சியின் பல உறுப்பினர்கள் தங்கள் தொகுதிமக்களிற்காக குரல்கொடுத்துள்ளனர், தமிழ் மக்களின் நீதிக்காக போராடியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் தமிழர்களிற்கு ஆதரவாக செயற்படவேண்டும்,அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை செவிமடுக்கவேண்டும் என தொழில்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட்லம்மி வேண்டுகோள் விடுத்துவருகின்றார் எனவும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் தொழில்கட்சியின் தற்போதைய தலைவரும் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என நாங்கள் எதிர்பார்ப்பவருமான கெய்ர் ஸ்டார்மெர் அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காக நாங்கள் பாடுபடவேண்டும் என தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தரசமாதானம் நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்து பிரிட்டனின் தொழில்கட்சி தெளிவானஉறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழர்களிற்கு கிடைக்கவேண்டிய பொறுப்புக்கூறல் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்கட்சி ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளது,தொழில்கட்சி ஆட்சியமைத்தால் அதன் வெளிவிவகார கொள்கைகளில் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை நான்காம் திகதி நான் தெரிவுசெய்யப்பட்டால் நான் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரஈடுபாட்டை பேணுவேன்,குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அரசசார்பற்ற அமைப்புகளுடன் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்,பாலஸ்தீனத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் குறித்து எனது கருத்து இதுவே -துயரத்தில் சிக்குண்டவர்கள் உயிரிழந்தவர்களிற்கான நீதியை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கான ஆதரவை ஏனைய நாடுகளிடமிருந்து பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளிற்காக நான் பரப்புரை செய்வேன் என தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் | Virakesari.lk
  2. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 12:38 PM யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, போத்தல் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவு வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அது கழிவகற்றும் வாகனம் ஊடாக சாவகச்சேரியில் உள்ள குப்பை மேட்டினை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், தமது நகைகள் தவறுதலாக குப்பையோடு போடப்பட்டதனை உணர்ந்த உரிமையாளர்கள் இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து விசாரணை நடத்திய போதிலும் இதுவரை காணாமல் போன நகைகள் தொடர்பாக எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னராகவும் சாவகச்சேரியில் இது போன்றதொரு சம்பவம் நடந்த நிலையில் சாவகச்சேரி நகரசபையின் ஊழியர்கள் தேடுதல் நடத்தி தவறுதலாக குப்பை மேட்டை வந்தடைந்த 18 பவுண் நகை களை மீட்டு உரிமையாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். சாவகச்சேரியில் குப்பையோடு குப்பையாக போடப்பட்ட 42 பவுண் நகைகள் | Virakesari.lk
  3. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 04:16 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். 50 வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐவர் ஆளுனரின் செயலாளரை சந்தித்து ஆளுநரின் ஊடாக ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர். யாழ். சாவகச்சேரியில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  4. 26 JUN, 2024 | 05:15 PM புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது . வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் . புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது குறித்த இளைஞனுக்கும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி ! | Virakesari.lk
  5. 26 JUN, 2024 | 04:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஜூலை முதலாம் திகதியில் இருந்து காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ஈ பாஸ்போட்) இலத்திரனியல் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார். ஏதாவது வெளிநாட்டு பயணச்சீட்டு ஒன்று செல்லுபடியாகும் 10 வருட கால எல்லையை தாண்டிய பின்னர் அதற்கு மேலும் ஒரு வருட காலம் வழங்குவது இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகிக்கும் வரை மாத்திரமாகும் எனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படுவதுடன் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது. இதேவேளை, தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு மேலும் சந்தர்ப்பம் இருப்பதாக ஆட்பதிவு பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. பிறப்பத்தாட்சிப்பத்திரம் ஒன்று இல்லாமை காரணமாக வேறு அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இநத மாதம் 30ஆம் திகதிவரை இந்த சந்தர்ப்பம் இருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதன்திரி தெரிவித்துள்ளார். இதற்காக விண்ணப்பிப்பதற்கு கடந்த மார்ச் 31ஆம் திகதிவரை காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்றாரலும் விண்ணப்பிக்கும் காலத்தை நீடித்து வழங்குமாறு பிரதேச செயலாளர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுக்களின் காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க தீர்மானம் ! | Virakesari.lk
  6. அரசு பணியில் உள்ள பெண்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும், 6 மாதம் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Published:Today at 6 AMUpdated:Today at 6 AM மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடையாது. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் திருத்தம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது. ``திருமணத்திற்குப் பிறகு உடல் எடை குறையவே இல்லை..." - விவாகரத்து கேட்கும் மனைவி! இதன்படி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும், அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு 180 நாள்கள் (6 மாதங்கள்) விடுமுறை வழங்கப்படும். வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண் அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 6 மாதகால விடுமுறை கொடுக்கப்படும். மேலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தந்தைக்கும் 15 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த சலுகைகள், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டம், 1972-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து இருக்கிறது. அரசின் இச்சட்டதிருத்தத்தை பெண்கள் வரவேற்றுள்ளனர். அதேசமயம், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒழுங்குபடுத்த, அதிலும் அரசு பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. வாடகை தாய் மூலம் குழந்தை, அரசு பணியில் உள்ள பெண்களுக்கு 6 மாதம் பிரசவ விடுமுறை! | Child through surrogate mother, 6 months maternity leave - Vikatan
  7. 21 JUN, 2024 | 08:33 AM இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர். இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது | Virakesari.lk
  8. கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு 21 JUN, 2024 | 03:59 PM இன்று (21) வெள்ளிக்கிழமை 10 ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், 10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் 10 நாட்கள் யோகா “மஹோத்சவ்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இலங்கையின் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த யோகா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யோகா நிகழ்வானது இலங்கையின் சுற்றுலாத் தலங்களான கண்டி ஏரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோவில் நுழைவாயில், குருணாகல், யாழ்ப்பாணத்திலுள்ள மந்திரி மனை, பத்தேகமவிலுள்ள கிறிஸ்ட் சர்ச் பெண்கள் பாடசாலை, பொரள்ளை தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, வெல்லவாய தேசிய இளைஞர் படையணி நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு | Virakesari.lk
  9. `அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! Published:Today at 7 AMUpdated:Today at 8 AM கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததால், ஆண், பெண் என இதுவரை 52 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர் கருணாபுரம் மக்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னுடைய கோரப் பற்களால் இத்தனை உயிர்களை கொன்று குவித்த கள்ளச்சாராயம், அவர்களின் குடும்பங்களை சிதைத்துப் போட்டிருக்கிறது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளை, அம்மாக்களை, அப்பாக்களை ஆதரவற்று நிற்க வைத்திருக்கிறது. உயிரிழந்த தம்பதி ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரும், அவரின் மனைவியும் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 14, 13 வயதில் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு சென்றபோது, `இனிமேல் எங்களுக்கு யார் இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை கண்களில் ஏந்தியபடி, அசைவற்று படுத்திருந்த அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தார், அவர்களின் மகள். அவரிடம் பேசினோம். `அப்பாவுக்கு வலது கை இல்லை. அவர் பெயிண்ட் அடிக்கற வேலை செஞ்சாரு. அம்மா விவசாய கூலி வேலைக்குப் போவாங்க. ஒரு கையாலதான் அப்பா வேலை செய்வார். பில்டிங் அவுட்டர்ல அவர்தான் கயிறு கட்டி இறங்கி பெயிண்ட் அடிப்பாரு. அதனால எப்பவுமே அவர் கைல வலி இருக்கும். அந்த வலிக்காக அப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. போகப் போக அதிகமா குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. எங்க அம்மாவும் சாராயம் குடிப்பாங்கனு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் எங்க அம்மாவுக்கு அந்தப் பழக்கமே இல்லை. ஆனால் எல்லாருமே கூட இருந்த பார்த்த மாதிரி, அவங்க சாராயம் குடிச்சி செத்துட்டாங்கனு சொல்றாங்க. அவங்க வீட்ல யார் மேலயாவது இப்படி பழி போட்டா ஏத்துப்பாங்களா? 18-ம் தேதி ராத்திரி அப்பா சாராயம் வாங்கிட்டு வந்து குடிச்சாரு. கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம் ஒவ்வொரு நாள் வேலைக்குப் போறப்பவும், அவ்ளோ உயரத்துல கயிறு கட்டி வேலை செய்யும்போது கீழே விழுந்துடுவோமோனு அவருக்கு பயம் இருக்கும். அந்த பயத்தை போக்கறதுக்காக தினமும் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி சாராயம் குடிப்பாரு. அப்பாவுக்கு ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதனால் வீட்டுக்குப் பக்கத்துலயே பாக்கெட் சாராயம் 60 ரூபாய்க்கு கிடைக்கறப்போ, ஏன் 250 ரூபாய் செலவு பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் மறுநாள் 19-ம் தேதி காலைல, டம்ளர்ல சாராயம் குடிச்சிட்டு பாத்ரூம் போனாரு. பெற்றோரை இழந்த சிறுமி அம்மாவுக்கு ரொம்ப வருஷமா பைல்ஸ், வயித்து வலி பிரச்னை இருந்துச்சி. அதுக்காக அடிக்கடி ஓம வாட்டர் குடிப்பாங்க. அன்னைக்கும் அப்படித்தான் வயித்து வலியால எழுந்திருச்ச அவங்க, அப்பா குடிச்சிட்டு கொஞ்சமா வச்சிட்டுப் போயிருந்த சாராயத்தை எடுத்து ஓம வாட்டர்னு குடிச்சிட்டாங்க. அன்னைக்கு அதுதான் நடந்துச்சி. அதனாலதான் அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம் நாங்க. அப்பாவும், அம்மாவும் தினமும் வேலைக்குப் போய்தான் எங்களை பாத்துக்கிட்டாங்க. இனிமேல் எங்களுக்கு யார் இருக்கா ? இப்படி ஒரு பாவத்தை, கள்ளச்சாராயம் வித்து இத்தனை பேர் சாவுக்கு காரணமானவங்கள சும்மா விடக்கூடாது. கள்ளச்சாராயம்தான் எங்களை அநாதையாக்கிடுச்சு. அதனாலதான் நானும், என் ரெண்டு தம்பிகளும் தனியா நிக்கறோம். கருணாபுரத்தில் இன்னைக்கு எங்களைப் போல நிறைய பேர் அப்பாவையும், அம்மாவையும் இழந்துட்டு நிக்கறதுக்கு இந்த கள்ளச்சாராயம்தான் காரணம்” என்று உடைந்து அழுகிறார். `அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! | Many people lost their relatives in Karunapuram of kallakurichi because of illicit liquor - Vikatan
  10. மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம். ‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது. காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை. மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது. அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார். அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள். மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே! மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay Sethupathi starrer maharaja movie review - hindutamil.in
  11. `கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?' - பிரேமலதா கேள்வி ``கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார்." - பிரேமலதா விஜயகாந்த் Published:Today at 8 AMUpdated:Today at 8 AM பிரேமலதா விஜயகாந்த் Join Our Channel 24Comments Share கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மறுபக்கம், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய முதல்வரே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என கேள்வியெழுப்பியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள். முதல்வர் ஆட்சிக்கு வந்த புதிதில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் லட்சியம் என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். பிரேமலதா விஜயகாந்த் ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் பலிகடா ஆவது அதிகாரிகள் மட்டும்தான். கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா... இது தவறான முன்னுதாரணம். `கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம்; ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா?' - பிரேமலதா கேள்வி | why Rs 10 lakh to people who died by illicit liquor, DMDK chief Premalatha asks CM Stalin - Vikatan
  12. இந்திய முறையிலான வேட்பாளருக்கு ஆதரவளிக்குக!! (யோகி) இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றாக வேண்டும் எனவும், அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குக்கு வந்து 13ம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13ம் திருத்தம், கூட்டாட்சி எனக் கூறுவதால் தெற்கில் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் சிலர் தூக்கில் தொங்க வேண்டியவர்களும், சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமாக உள்ளனர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று நினைவேந்தல் செய்கின்றனர். கடந்த 4 தடவைகளில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் சட்டவிரோதமானவர்கள். நான் எல்லோரையும் கூறவில்லை. அரசியலில் அனுபவம் இல்லாதவர்களால் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகளில் நான் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. இன்று பேசப்படும் அரசியல் தீர்வுகள் தீர்வாகாது. இந்திய முறையிலான அரசியல் தீர்வே பொருத்தமானது. அந்த தீர்வுத்திட்டம் என்னால் எடுத்து செல்லப்பட்ட போது அரசதலைவர், அமைச்சர்கள், பெளத்த மதத் தலைவர்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள மக்களும் மற்றும் பன்னாடும் ஏற்றுக் கொண்டது. என்னைப் பொறுத்த வரையில், அந்த தீர்வுத் திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பொருத்தமான தீர்வும் அதுவாக இருக்கும். இன்று முக்கிய காலப்பகுதியில் அரசதலைவர் தேர்தல், இடம்பெறவுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து போட்டியிடும் வேட்பாளரை ஒன்றாக சேர்ந்து ஆதரிப்போம். அதற்காக எந்த தரப்பாக இருந்தாலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறேன். மற்றபடி அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு எனது ஒத்துழைப்பு இருக்காது. விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த போது பேச வேண்டிய சந்தர்ப்பங்களை விட்டுவிட்டார். நானே அழிவுகளிலிருந்து காப்பாற்ற வாருங்கள் என அழைத்தும் எதுவும் செய்யவில்லை. அப்போது அமைதியாக இருந்தவர், இன்று ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு ஏதோவெல்லாம் பேசுகிறார். அவர் பேசுவது அரசியலுக்கு இன்று பயனுள்ளதாக இல்லை. அவர் என்னுடைய நண்பராக இருந்தாலும், இதனை சொல்ல வேண்டியதாக உள்ளது. இன்று பொது வேட்பாளர் என பேசப்படுவது வாக்குச் சிதைவுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ப) இந்திய முறையிலான வேட்பாளருக்கு ஆதரவளிக்குக!! (newuthayan.com)
  13. வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று சுயாதீன எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை(19) பௌத்த சாசன அமைச்சு மற்றும் வன பாதுகாப்பு, வனஜீவராசிகள் அமைச்சிடமே இவ்வாறு கேள்வியெழுப்பிய ரதன தேரர் மேலும் கூறுகையில், தற்போது வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் வர்த்தகர்களுக்கு இனவாத அடிப்படையில் எதிர்கால அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவுள்ளதாக அங்குள்ள தேரர்கள் மற்றும் மக்கள் எங்களுக்கு அறிவித்துள்ளனர். இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள இடங்களை நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளதா? இல்லையென்றால் அங்கு தீர்மானங்களை எடுக்காது தான்தோன்றித்தனமாக எவராவது செயற்படுகின்றனரா? தொல்பொருள் இடங்கள் தொடர்பில் அமைச்சரயைில் மாத்திரம் தீர்மானிக்க முடியுமா? அத்துடன் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் இடங்களும் பல்வேறு வழிகளில் சிலருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொல்பொருள் இடங்கள் என்பது பொது சொத்துக்களாகும். ஓர் இனம் மற்றும் மதத்திற்குரியது அல்ல. தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் ஏதாவது தரப்பினரின் வாக்குகளை எதிர்பார்த்து தொல்பொருள் இடங்களை பலவந்தமாக கைப்பற்றுவதாக அறியக்கிடைக்கின்றது. இந்நிலையில் இலங்கை காணிகள் தொடர்பில் ஆணைக்குழுக்களோ, தேசிய கொள்கையோ கிடையாது. இந்த விடயங்கள் தொடர்பில் இந்த பாராளுமன்றம் அவதானம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கில் தொல்பொருள் இடங்கள் எத்தனை உள்ளன. அவற்றை ஏதாவது நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? வனபாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் இடங்களை வடக்கு, கிழக்கில் ஏதாவது நிறுவனத்திற்கு வழங்க திட்டமிடப்படுகின்றனவா? என்று கேட்கின்றேன் என்றார். Tamilmirror Online || வடக்கு, கிழக்கில் பௌத்த இடங்கள் வர்த்தகத்துக்கு
  14. இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். சவூதியில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். மக்காவில் அல் ஹராம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 922 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் எகிப்தை சேர்ந்தவர் 600 என்றும் இந்தியர்கள் 80 என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வீதியெங்கும் சடலங்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது. இறந்தவர்கள் சடலங்கள் மக்காவுக்கு அருகில் உள்ள அல் – மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 250 பேர் சுயநினைவு இன்றி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை செய்வதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாக கூறப்படுகிறது. Tamilmirror Online || மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
  15. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் Published By: VISHNU 20 JUN, 2024 | 06:36 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர் சரத் வீரசேகர திருத்தங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டமூலம் பெண்களை மாத்திரம் வரையறுத்ததாக அமைய வேண்டும் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.இந்த திருத்தம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 05 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளினால் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் குறித்து எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்ட கருத்துக்கு எதிரணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெண்களின் நலனுக்காக முன்வைக்கப்படும் இந்த சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என பாராளுமன்ற பெண் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே சபையில் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபை முதல் சுசில் பிரேமஜயந்த சபைக்கு அறிவித்தார். இதனை தொடர்ந்து சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் வாத பிரதி வாதங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இந்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் சபை முதல்வர் புதிதாக பல திருத்தங்களை முன்வைத்தார்.அத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் | Virakesari.lk
  16. Published By: VISHNU 20 JUN, 2024 | 07:06 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமித்து சந்தித்து கலந்துரையாடினார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். இச் சந்திப்பில் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் ஈடுபட்ட தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களை ஒருமித்து சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்! | Virakesari.lk
  17. 20 JUN, 2024 | 11:51 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை, 200 லீட்டர் கோடா மற்றும் 06 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் , குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட அளவெட்டி பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது! | Virakesari.lk
  18. 20 JUN, 2024 | 01:25 PM இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 56 அமர்வில் கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மிக நீண்டகாலமாக காணப்படுவதை வெளிப்படுத்திய இலங்கையின் பலவந்தமாக காணாமல்போதல் குறித்த உங்கள் அறிக்கைக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டதால் ஏற்பட்ட துயரங்களிற்கும் அதனால் அனைத்து சமூகங்களிற்கும் ஏற்பட்ட பாதிப்புகளிற்கும் தீர்வை காண்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உருவாக்கும்நடைமுறைப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் உட்பட புதிய சட்டமூலம் எதுவும் அதன் மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக காணப்படவேண்டும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தையும் நாட்டில் சட்ட அமைப்புகளின் சுதந்திரம் வெளிப்படை தன்மையையும் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளால் பதற்ற நிலை காணப்படுவதாக வெளியான தகவல்களால் நாங்கள் கரிசனையடைந்துள்ளோம், என தெரிவித்துள்ள ஜெனீவா தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகள் கண்மூடித்தனமான கைதுகள் ,தேடுதல் நடவடிக்கைகள் ,பொலிஸாரின் நடவடிக்கைகளின் போது தடுத்துவைக்கப்படல் குறித்தும் கரிசனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதிபொறிமுறைகள் சுயாதீனமானவையாக அனைவரையும் உள்வாங்குபவையாக பக்கச்சார்பற்றவையாக வெளிப்படைதன்மை மிக்கவையாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவையாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என இணை அணுசரணை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளால் பதற்ற நிலை- ஜெனீவாவில் இணை அனுசரணை நாடுகள் கவலை | Virakesari.lk
  19. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளார். மணித்தியால அளவில் இந்த விஜயம் ஏன் அமைய வேண்டும். ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அறிய முடிகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன ? ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் மற்றும் இந்திய பிரதமரின் உத்தேச விஜயம் தொடர்பில் என்னால் தற்போது ஏதும் குறிப்பிட முடியாது. சரியான தகவல்கள் ஏதும் இல்லாமல் பதிலளிப்பது பொருத்தமானதாக அமையாது. ஆகவே இவ்விடயத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார். மீண்டும் எழுந்து உரையாற்றி விமல் வீரவன்ச, இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுகிறது. ஆகவே உண்மையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார். ஆட்பதிவு திணைக்கள தரவுக் கட்டமைப்பை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி - விமல் | Virakesari.lk
  20. யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் கணவனை கைது செய்து யாழ். நீதாவன் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது. தீர்ப்புக்காக நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனை மன்று குற்றவாளியாக கண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை | Virakesari.lk
  21. 20 JUN, 2024 | 06:22 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் நலன் சார்ந்தே இந்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (20) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இ ருப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் விவகாரத்துக்காக மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். காற்றாலை உற்பத்தியை இந்தியாவுக்கு வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்கான தரைவழிப் பாதை அமைப்பது சம்பந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார். அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. இங்குள்ள காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. கலந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை வலிமையாக வலியுறுத்தவும் இல்லை. அவர்களும் ஆளும் கட்சி போல் ஜனாதிபதியின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்துகொண்டு சென்றுள்ளனர். மன்னாரில் இனி புதிதாக குடியேறுவதற்கு எவ்வித காணியும் இல்லை. வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல், விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்தமானிக்கு உட்படுத்தப்பட்டு, மன்னாரில் மக்கள் குடியேறாத வகையில் ஒரு துண்டு நிலம் இல்லாத நிலையில் உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது என தெரிவித்தார். ஜனாதிபதியின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை - வி.எஸ்.சிவகரன் | Virakesari.lk
  22. ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம் (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுவதாக அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம் | Virakesari.lk
  23. பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் புதிய சட்டமூலங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கும், கலாச்சாரத்துக்கும் முரணானது. பெண் என்பது யார் என்பதற்கு போதுமான வரைவிலக்கணம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பில் பல பரிந்துகளை நாங்கள் முன்வைத்தோம் இருப்பினும் உரிய தரப்பினரால் அவை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த சட்டமூலத்தில் பெண் என்பது யார்? என்பதற்கு முறையான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை. பிறப்பால் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டவருக்கு மாத்திரமே பெண்ணுக்கான அந்தஸ்த்தை வழங்க முடியும். ஆணாகப் பிறந்து மருத்துவச் சிகிச்சை ஊடாக பெண்ணாக மாற்றமடைந்தவரை பெண்ணாகக் கருத முடியாது. ஆகவே சட்டமூலத்தில் பெண் என்பதற்கான வரைவிலக்கணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் திருமணம் என்பதற்கும் உரிய வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆணாக பிறந்த ஒருவருக்கும்,பெண்ணாகப் பிறந்த ஒருவருக்கும் இடையில் நிகழும் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படும்.ஆண்களுக்கு இடையிலான திருமணத்தையும்,பெண்களுக்கு இடையிலான திருமணத்தையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணமாக அங்கீகரிக்க முடியாது. கர்ப்பிணி என்பது யார் என்பதும் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை.பிறப்பால் பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மாத்திரமே கர்ப்பிணி என்ற உயரிய அந்தஸ்தை வழங்க முடியும்.இயற்கைக்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை.இலங்கை தான் உலகில் முதல் பெண் பிரதமரை தோற்றுவித்தது. ஆகவே நாட்டின் அரசியலமைப்பிலும்,பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கும்,ஆண்டுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது.பெண் வலுவூட்டல் சட்டமூலத்தின் ஊடாக மறைமுகமாக கலாசாரத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பால்நிலை சமத்துவம் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை வரலாற்று ரீதியில் பல ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளது.கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் புதிய சட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.69 இலட்ச மக்களாணைக்கு இது விரோதமானது நாங்கள் ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார். பெண் வலுவூட்டல் சட்டமூலம் : பெண் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை - சரத் வீரசேகர குற்றச்சாட்டு | Virakesari.lk
  24. 19 JUN, 2024 | 06:44 PM பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த நிலையில் புலம்பெயர் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியர்கள், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் பணிமனை அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையம் இந்த அகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்தார். ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.