Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 11 Oct, 2024 | 04:26 PM ரொபட் அன்டனி இலங்கையில் பொதுவாக நோக்குமிடத்து சாதகமான வளர்ச்சி நிலை தெரிகிறது. வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட சவாலான நிலையும் நீடிக்கிறது என்று உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள உலக வங்கியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் பல துறைகள் பங்களிப்பு செலுத்துகின்றன. கட்டட நிர்மாணத்துறையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சி தேவைப்படுகிறது. சேவைகள் துறை பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலவாணி வருகை என்பன அதிகரித்திருக்கின்றன. இந்த செயற்பாடுகள் காரணமாக நடைமுறை கணக்கு மீதி சாதகமாக பதிவாகி இருக்கின்றது. அத்துடன் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும்போது ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது சாதகமான பக்கமாக இருக்கிறது. ஆனால் மறுபுறம் வறுமை தொடர்ந்து அதிகரித்த மட்டத்தில் இருக்கிறது. பேரண்ட பொருளாதார வளர்ச்சி வறுமை குறைப்பில் தாக்கம் செலுத்தவில்லை. தொழிற்படை பங்களிப்பும் குறைவடைந்து இருக்கிறது. குடும்ப அலகு பட்ஜெட் அதிகரித்து இருக்கின்றது. சுகாதார மற்றும் கல்வித்துறைக்கான செலவுகள் குறைவடைந்து இருக்கின்றன. பொருளாதார வளர்சசி 4.4 வீதமாக இவ்வருடத்தில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், வாகன இறக்குமதி அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மேலும் டொலர் வெளிச்செல்கை அதிகரிக்கலாம். சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால் சவால்களும் தொடர்கின்றன - உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா | Virakesari.lk
  2. 11 Oct, 2024 | 05:48 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன. சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை, சரியான முறையில் விண்ணப்பத்தை கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த 4ஆம் திகதி தொடக்கம் இன்று (11) வரை மதியம் 12 மணி வரை இந்த வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சை குழுக்கள் களத்தில்! | Virakesari.lk
  3. ’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). போதைப் பொருள் பிரச்சினை குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்கிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து, அவரை என்கவுன்டர் செய்ய முடிவு செய்யும் ரஜினி, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் ‘வேட்டையன்’ சொல்லும் கதை. ’ஜெய்பீம்’ மூலம் கஸ்டடி மரணத்தை பற்றிய உண்மைக் கதையை தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற ஞானவேல் தற்போது போலி என்கவுன்டர் பிரச்சினையை அதுவும் தமிழகத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்திருக்கும் ஒரு சூழலில் சரியான நேரத்தில் கையில் எடுத்திருக்கிறார். ரஜினி என்ற ஒரு பிரம்மாண்ட பிராண்டின் மூலம் முடிந்தவரையில் தான் சொல்லவந்த கருத்தை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். படம் தொடங்கிய முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கான மாஸ் திருவிழா. ரஜினியின் இன்ட்ரோ தொடங்கி, அடுத்து ‘மனசிலாயோ’ பாடல் வரை ரஜினி ரசிகர்களுக்கு விருந்து. குறிப்பாக வில்லனின் சுருட்டு பறந்து கீழே விழும்போது அதன் துளை வழியே ரஜினியை காட்டும் ஷாட்டில் தியேட்டர் தெறிக்கிறது. தேவையற்ற ‘வளவள’ காட்சிகள் எதுவுமில்லாத கதாபாத்திர அறிமுகம் முடிந்து படம் ஞானவேல் பாணிக்கு மாறிவிடுகிறது. துஷாராவின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் பிறகான விசாரணை என படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துகொண்டே செல்கிறது. என்கவுன்டருக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை போகிற போக்கில் பேசாமல் ஆழமாக பேசிய விதம் அருமை. முதல் பாதி முழுவதுமே ஒரு சில யூகிக்க கூடிய காட்சிகளை தவிர பெரிதாக குறைசொல்ல எதுவும் இல்லை. படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. ஒன்று, முழுமையான ரஜினி படமாக இருந்திருக்க வேண்டும் அல்லது ’ஜெய்பீம்’ பாணியிலான படமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி இந்த இரண்டுக்கும் பல இடங்களில் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கிறது. சீரியசான இன்வெஸ்டிகேட் த்ரில்லர் முயற்சியில் இடையிடையே சொருக்கப்பட்ட ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. ரஜினி ரசிகர்களுக்காகவே வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் அவர்களே அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தனர். உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நகரவேண்டிய கதையில் இப்படியான பரிசோதனை முயற்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அவை இரண்டாம் பாதியை தொய்வடையச் செய்கின்றன. ரஜினி வழக்கமாக ஸ்டைலாக நடந்து வருவது, கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது ஆகியவற்றை தாண்டி இந்தப் படத்தில் தனது நடிப்பு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஃபஹத் ஃபாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு முன்னால் வெளியான ‘ஆவேஷம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும் இதுபோன்ற ஒரு கேரக்டர்களிலும் தயங்காமல் நடிக்கும் ஃபஹத் போற்றுதலுக்குரியவர். ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் தனது தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங் இருவருக்குமே வலுவாக கதாபாத்திரம். இருவருமே அதை நிறைவாக செய்துள்ளனர். படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியர்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை. க்ளைமாக்ஸுக்கு முன்பாக அவருக்கு வைக்கப்பட்ட ஒரு ‘மாஸ்’ காட்சி மட்டுமே ஓகே ரகம். அதேபோல ராணாவுக்கான காட்சிகளும் வலுவாக எழுதப்படவில்லை. படம் தொய்வடையும் பல இடங்களில் காப்பாற்றுவது வழக்கம் போல அனிருத். ஏற்கெனவே வைரல் ஹிட்டான ‘மனசிலாயோ’, ‘ஹன்டர்’ பாடல்கள் படத்தில் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. படத்தின் பெரிய பலவீனங்களில் ஒன்று, யூகிக்க கூடிய வகையில் பல காட்சிகள் இருப்பது. படத்தின் இன்னொரு பிரச்சினை, எந்த இடத்திலும் எமோஷனலாக தொடர்புப்படுத்திக் கொள்ளமுடியாதது. அப்படியாக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. யூடியூப் வீடியோ, டிவியை பார்த்து பொதுமக்கள் பேசிக் கொள்வதாக வரும் காட்சிகளும் அதீத சினிமாத்தனத்துடன் இருக்கின்றன. க்ளைமாக்ஸில் காட்டப்படும் ஹீரோயிச காட்சியெல்லாம் படம் பேசும் கருத்தியலுக்கு அழகானதாக படவில்லை. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது போலீஸ் என்கவுன்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் படத்தில் தெளிவான பதிலை கொடுத்தது சிறப்பு. படத்தின் குறைகளை தாண்டி படம் பேசியுள்ள கருத்து மிக முக்கியமானது. அதை ரஜினி என்ற ஆளுமையைக் கொண்டு பேசியிருப்பது வரவேற்கப்படவேண்டிய முயற்சி. நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர அவசரமான நீதி அல்ல என்ற கருத்தை உரக்க பேசிய ஞானவேலை மனதார பாராட்டலாம். மாஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டதை தவிர்த்து இரண்டாம் பாதியில் வரும் சில தொய்வுகளில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிதாக கொண்டாடப்பட்டிருப்பான் இந்த ‘வேட்டையன்’. வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி? | Vettaiyan Movie review - hindutamil.in
  4. இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய முன்னறிவிப்புகளை விஞ்சும் என்று உலக வங்கி (WB) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 'எதிர்காலத்திற்கான திறப்பு' என்ற தலைப்பிலான இலங்கையின் இரு ஆண்டுகால மேம்படுத்தல், எவ்வாறாயினும், மீட்சி பலவீனமாக உள்ளது என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்தல் மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது. கொழும்பில், வியாழக்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துரைத்த போதே உலக வங்கியின் பிரநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
  5. இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. R Tamilmirror Online || மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
  6. அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)
  7. 10 Oct, 2024 | 03:04 PM ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன். அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:- 01. வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல். 02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல். 03. இந்திய முதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல். 04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல். 05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல். 06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல். 07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல். 08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல். 09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடிய பாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல். 10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல். 11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல். 12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல். 13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல். 14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல். 15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல். 16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல். 18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல். 19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல். 20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல். 21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல். 22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல். 23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல். 24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல். 25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல். 26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல். 27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல் 28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல். 29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல். 30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல் 31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல் 32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல். 33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல். ஆகிய விடயங்கள் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்! | Virakesari.lk
  8. 10 Oct, 2024 | 04:58 PM (எம்.நியூட்டன்) இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் காலம் மக்கள் கைகளில் உள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்கள். அவர்கள் யார் வேண்டும், வேண்டாம் என்பதை முடிவெடுக்கும் காலம் இது. அவர்களே அதனை தீர்மானிப்பார்கள். நாங்கள் தனித்தனியாக, அணி அணியாக பிரிந்து வாழ்தல் என்பது எமது இனத்துக்கான பண்பு அல்ல. இவ்வாறு பிரிந்து எமது இலக்கை அடையமுடியாது. எங்களுக்கு பிடிக்காதவர்களை ஓரங்கட்டக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கிறது. அதன் மூலம் இனத்தின் விடுதலையை அடையக்கூடியவர்களை அல்லது பிடித்தவர்களை அருகில் வைத்திருக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. மக்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் ஒற்றுமையான பலமான தமிழ் தேசிய சக்தியை கட்டியெழுப்புவதற்கு பலத்தை உருவாக்க வேண்டும். இதனை விடுத்து சின்ன சின்ன அணியாக குழுக்களாக பிரிந்து செல்வதன் மூலம் எங்கள் இனத்தின் அடுத்த நகர்வுகள் பாழடைந்து செல்லும் நிலை அல்லது அது இல்லாமல் போகும் நிலை உருவாகிவருகிறது. ஆகவே, நீதிபதிகளான நீங்கள் என்ன தெரிவு செய்யப்படவேண்டும், எதை தெரிவு செய்யவேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் எடுத்து முடிவெடுத்தால் பொருத்தமானதாக இருக்கும். மூத்தவர் ஒருவர் கூறிய முதுமொழி... அயோக்கியர்களை தெரிவுசெய்கிறோமா? நல்லவர்களை தெரிவு செய்கிறோமோ என்பது தெரிவுசெய்பவனுடைய மன நிலையில் இருக்கிறது. தெரிவு செய்பவர்கள்தான் அதற்குரிய நீதிபதிகள். ஆகவே, உங்களுடைய கடமையை சரியாக செய்தால் உங்களுக்கான சரியான பக்கத்தையும் இனத்துக்கான வரலாற்று தொடக்கத்தையும் தரும் என்றார். அத்தோடு, முன்னாள் கட்சித் தலைவருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள், பாராளுமன்றத்துக்குப் பின்னரான செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தயாரித்தல், மக்களிடம் செல்லுதல் போன்ற பல விடயங்களை பேசியுள்ளதுடன் அவரது நல்லாசியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் - சிறீதரன் | Virakesari.lk
  9. 10 Oct, 2024 | 06:53 PM தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) கையளித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் க. இளங்குமரன், எம்.மோகன், பூ. சிறிதரன், கா. பிரகாஷ், இ. வெண்ணிலா, ஜெ.ரஜீவன், எஸ்.சிறிபவானந்தராசா, தே.தஜீவன், உ. கீர்த்தி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
  10. 10 Oct, 2024 | 07:07 PM எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்டோம். தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலையடைய வேண்டாம். இனத்தின் விடுதலையினை நோக்கிச் செல்லும் சின்னமாக சங்கு சின்னம் இருக்கிறது. இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. எனவே, தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்றபோது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10 ஆசனங்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் என்பதுடன் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். இதேவேளை அரசுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை என்றார். பொதுத்தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் - செல்வம் அடைக்கலநாதன் | Virakesari.lk
  11. 10 Oct, 2024 | 08:25 PM வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு,முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய தோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார். புதன்கிழமை(9) குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார். தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்ற மையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை (10) இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
  12. 'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்.. கொதித்த சாம்சங் நிறுவனம்!' காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். இந்த போராட்டமானது தொழிற்சாலையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொடங்கியது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணியாளர்களை வைத்து சுமார் 60% அளவுக்கு மட்டுமே சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் இதையடுத்து 'போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்தது. மறுபக்கம், "தொழிற்சங்கம் தொடங்கியது சட்டப்படியான நடவடிக்கைதான். தினம்தோறும் 12 மணி நேரம் வேலை கொடுத்து சக்கையாகப் பிழிகிறார்கள். எனவேதான், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும்" எனத் தொழிலாளர்கள் கொதித்தார்கள். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம், 'தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., செய்திருப்பது துரோகம்.. கருங்காலித்தனம்..! இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கோரிக்கைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகத் தொழிலாளர்கள் சென்றனர். அவர்களை காவல்துறை கைது செய்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில், கடந்த 7-ம் தேதி அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதற்குத் தொழிற்சங்கத்தினர் தரப்பிலிருந்து, "தொழிலாளர் வர்க்க வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் முத்துக்குமார், "பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். அப்போது 'உங்களது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்' என அமைச்சர் த.மோ.அன்பரசன் தெளிவுபடச் சொன்னார். பிறகு வெளியே வந்து பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களில் தெரிவித்தோம். இதற்கிடையில் ஏற்கனவே அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை சாம்சங் தொழிற்சாலையிலிருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை வைத்துச் செய்திருந்தார்கள். இரவோடு இரவாகக் கைது! இதன் மூலமாகவே தொழிற்சங்கத்துக்கும் சாம்சங் நிறுவனத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டார்கள். மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி வைரல் செய்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இது தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம், கருங்காலித்தனம். பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். முதலில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். பிறகு அமைச்சர்கள் புறவழியான சதித் திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடன்பாடு ஏற்பட்டதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். இது குழப்பம் ஏற்படுத்தும் செயல். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சி.ஐ.டி.யூ., வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். டி.ஆர்.பி.ராஜா இதற்குத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாகப் பேசியிருக்கிறோம். எதற்காகப் போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்" என்றார். ஆனாலும், பின்வாங்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடுப்பான ஆளும் தரப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எச்சூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலை காவல்துறையினர பிய்த்து எறிந்திருக்கிறார்கள். இரவோடு இரவாகத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பலரது வீடுகளுக்குச் சென்று அவர்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக தொழிலாளர்கள் சென்ற லோட் வண்டி விபத்தில் சிக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது கொடுமையிலும் கொடுமை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்குச் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என வெடித்திருந்தார். அடக்குமுறை.. கொதித்த தலைவர்கள்! இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடித் தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலைக் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சீமான் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது" எனக் கொதித்துள்ளார். இச்சூழலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே களத்துக்குச் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை எனக் காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் முன்னதாக தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது மீட்புப் பணிக்கு வந்த காவல்துறையுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சூர்யா பிரகாஷ், எலன் ஆகியோர் காவல்துறையைத் தள்ளிவிட்டதாக சுங்கவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை அவர்களைச் சிறையில் அடைத்தனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. தற்போது சாம்சங் விவகாரம் அவர்களை மேலும் சூடாகியிருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள் | dmk alliance communist parties condemns dmk in Samsung Employees Strike issue - Vikatan
  13. எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும்,இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது. இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில், தமிழரசுக் கட்சியின் முடிவு, வியாழக்கிழமை(10) இறுதிபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. Tamilmirror Online || மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
  14. கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறி வாகனத்தில் கடத்தப்பட்ட 20 மாடுகளை கடந்த திங்கட்கிழமை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், வாகனச் சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் (newuthayan.com)
  15. தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும். இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர். எனவே 60 வயதுக்கு உட்பட்டவர்களும் இளையோர் தான். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம். எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் செயற்படுகிறோம். புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் 300 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்தார். தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி - சி. வி விக்னேஸ்வரன் | Virakesari.lk
  16. 09 Oct, 2024 | 05:33 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக சங்கு சின்னம் அமைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் சங்கு சின்னம் அமைந்துள்ளது. இப்போது அந்த சங்கு சின்னம் என்பது ஒரு கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனநாயகம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது குத்து விளக்கு சின்னத்தை விட்டு விட்டு சங்கு சின்னத்தை எடுத்திருக்கின்றனர். இந்த பொதுமக்கள் சபை சார்பாக நிறுத்தப்பட்ட அந்த தமிழ் வேட்பாளருக்கு ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தனர். இன்னுமொரு பகுதியில் இந்த தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியை வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துவிட்டது. இப்போது நாங்கள் சங்கு சின்னத்தையோ அல்லது தொலைபேசி சின்னத்தையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இப்போது நாங்கள் தமிழரசு கட்சியின் சார்பாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். என்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அந்த தமிழர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருக்கின்றது. பொதுமக்கள் கட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரின் சின்னமாக இருந்த சங்கு சின்னம் இப்போது ஒரு கட்சியின் சின்னமாக அதாவது குத்துவிளக்கில் சின்னமாக இருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது சங்கு சின்னத்தை எடுத்துள்ளது. எனவே தமிழ் மக்கள் குழப்பம் அடையாமல் நீங்கள் இந்த முறை தமிழரசு கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்பதை மிகவும் அர்த்தம் சக்தியுடன் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழரசு கட்சி தமிழரசு கட்சியாகத்தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த நிலையில் தமிழரசு கட்சிக்காக பல விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அனுப்பப்பட்டிருந்தன அதில் 8 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. நியமன குழுவினர் 8 விண்ணப்பங்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையிலும் அதில் தெரிவுகள் இடம்பெறாத நிலையில் வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்கு வேறு சின்னங்களில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும் தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் சகல கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கின்றது. இந்த தேர்தல் அவசர அவசரமாக ஏற்பட்டு ஒரு தேர்தல் என்று சொல்லலாம். ஜனாதிபதி தேர்தலை அடுத்து இந்த தேர்தல் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றதனால், பல கட்சிகளையும் இணைத்து செயல்படுகின்ற செயற்பாட்டில் அவர்களுடன் இணைக்கின்ற அந்த முயற்சியில் சில இழுப்பறிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவர்கள் தனித்துப் போட்டியிடுகின்ற போது அவர்களோடும் சில வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றார்கள். எனவே இனி வருகின்ற காலத்தில் சகல கட்சிகளும் இணைந்து பயணிக்க கூடிய விதத்தில் சகல கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்கின்ற பொது மக்களின் விருப்பம் இருக்கின்ற காரணத்தினால் அடுத்த தேர்தலுக்காக இந்த அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும். தற்போது தமிழரசு கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமாக தாய் கட்சியானது ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செல்வதற்குரிய சந்தர்ப்பத்திலே நாங்கள் ஏற்படுத்த வேண்டும். என்னுடைய விருப்பமும் சகல கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் அதில் தனிப்பட்ட சில தன்முனைப்பு சிந்தனைகள் குறித்து நாங்கள் எல்லோரும் அடுத்த கட்டமாவது அடுத்த தேர்தலுக்காக வேண்டி ஒற்றுமையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. எனவே தமிழரசிக் கட்சியின் பலத்தின் ஊடாக ஏனைய கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கான நடவடிக்கையில் எடுக்கப்படும் என்பதை கூறிக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார். சுயேட்சை சின்னமாக இருந்த சங்கு சின்னம் தற்போது கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது – சிறிநேசன் ஆதங்கம் | Virakesari.lk
  17. 09 Oct, 2024 | 05:20 PM கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்று புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தைச் சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாறை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த பிரதேசத்திற்கு வருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  18. இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகியோருக்குத் தொல்லை தருதல், காணி பறிப்பு, இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுத்தல் போன்ற எழுந்தமானமான பொலிஸ் நடவடிக்கைகள் போன்ற மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்துவோம் என்று அரசாங்கம் அளித்த உறுதிமொழியையும் மீறி இச்சட்டம் தொடர்ந்தும் பிரயோகப்படுத்தப்படுகிறது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த 18 மாதங்களில் மட்டும் 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; 2,845 துன்புறுத்தல் சம்பவங்களும் 21 சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் 26 தடுப்புக் காவல் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காணாமற் போனோர் அலுவலகத்தின் திறனின்மை, போதாமை போன்ற குணாதிசயங்களைத் தான் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டிருந்தும் ஒரே ஒருவரது மரணத்தையும், 4 பேர் கணாமற் போனமை பற்றியுமே இவ்வலுவலகம் இதுவரை கண்டறிந்திருக்கிறது. தமது விசாரணை அதிகாரங்களைப் பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறிவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் மேலதிக தகவல்களைக் கேட்டு கோப்புக்களை மூடுவதற்கான முயற்சிகளை எடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு இவ்வலுவலகம் ஆளாக்குகிறது. பிரேதப் புதைகுழிகளும் ஆணையரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கடந்த பல பத்தாண்டுகளாகப் பல புதைகுழிகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முடிந்திருந்தாலும் மனித எச்சங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவரவர் குடும்பங்களிடம் கையளிக்கப்படவில்லை என இவ்வறிக்கை கூறுகிறது. அகழ்வுகள் மற்றும் அடையாளம் காண்பதற்குத் தேவையான மனித, பண, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி சரவதேச நியமங்களுக்கேற்ப இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் தேவையானால் இவ்விடயத்தில் அரசாங்கம் சர்வதேச உதவிகளைக் கோரவேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையர் சிபார்சு செய்திருக்கிறார். இவ்விடயம் தொடர்பாக தாம் நேசித்தவர்களுக்காக உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டும் எனப் பல தசாப்தங்களாகப் பொறுமையோடு காத்திருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கோரிக்கைகள் பற்றி “இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்” (Accountability for Enforced Disappearances in Sri Lanka) எனப்பெயரிடப்பட்டு மனித உரிமை ஆணையரால் மே 2024 இல் வெளியிடப்பட்ட அறிக்கையை உலகத் தமிழர் பேரவை பெரிதும் மெச்சுகிறது. இக்குடும்பங்களுக்கு உண்மையைத் தெரிவிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் இக்குற்றங்கள் மீது விசாரணைகள் நடத்தப்படுவது இக்குடும்பங்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் சமூகங்களிடையேயான ஆற்றுப்படுத்தலுக்கும் ஆவசியம் என ஆணையர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டுமென்பதற்காகப் பல தசாப்தங்கள் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரக்தியே எஞ்சி நிற்கிறது. “பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு வேறு வழிகள் கண்டறியப்படவேண்டும்”, “தண்டிக்கப்படாமை என்ற சுழற்சிக்குள் இருந்து வெளியே வர சர்வதேச சமூகம் அதிகம் பிரயோகிக்கப்படாத சர்வதேச விதிகளின் எல்லை தாண்டிய பிரயோகம் போன்ற மாற்று உத்திகளைப் பிரயோகிக்கவேண்டும்” என்பன போன்ற மேற்கோள்கள் இவ்வறிக்கையில் காணப்படுவதை அவதானிக்கையில் ஆணயரின் விரக்தியும் இதில் அம்பலமாகிறது. ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (Sri Lanka Accountability Project (SLAP)) வெற்றிகரமான அமுலாக்கமே மேற்கூறப்பட்ட விடயங்களைச் சாத்தியமாக்கும். மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகிய அமைப்புகளின் கோரிக்கைகளின் பிரகாரம் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ (SLAP) வழங்கப்பட்ட ஆணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது விஸ்தரிக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகளிடம் கோருவதோடு இம்முக்கியமான செயற்பாடு நிதிக் குறைபாடுகளால் முடக்கப்படாதவாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பார்த்துக்கொள்ளவேண்டுமெனவும் உலகத்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கலைத் தொடர்ந்து இதன் பெறுபேறுகளை, வட கொரியா மற்றும் மியன்மார் நாடுகள் மீதான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் மற்றும் விசாரணைக் கமிசன் அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டதைப் போன்று, மனித உரிமைகள் ஆணையர் இவ்வறிக்கையையும் இதர ஐ.நா. அமைப்புகளுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்க வேண்டுமென உலகத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. இதன் மூலம் தசாப்த கால செயற்பாடுகள் சர்வதேச உயர்மட்ட கண்காணிப்புகளுக்குட்படுத்தப்பட்டு தொடர்ச்சியும் பேணப்படுமெனவும் தொடர்ச்சியான சர்வதேச அவதானம் மற்றும் அர்த்தமுள்ள செயற்பாடுகளும் இலங்கை உண்மையான பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எட்ட உதவிசெய்யுமெனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது. புதிதாகத் தெரிவாகிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவை உலகத் தமிழர் பேரவை வாழ்த்தியிருந்ததோடு , ஊழலை ஒழித்து தண்டனை வழங்கப்படாமையை முடிவுக்குக் கொண்டுவந்து இந்நிர்வாகம் நல்லாட்சியைப் பேணுமென நாம் நம்புகிறோம் எனவும் தெரிவித்திருந்தோம். பல தசாப்தங்களாக இலங்கையில் குற்றங்கள் – அவை பொருளாதாரக் குற்றங்களாகவிருந்தாலென்ன அல்லது மோசமான மனித உரிமை மீறல்களாகவிருந்தாலென்ன – எவரும் தண்டிக்கப்படாமல் இருப்பது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இது எந்த வடிவத்தில் வந்தாலும் அவை முறியடிக்கப்படும்போது மட்டுமே உணமையில் ‘தண்டிக்கப்படாமை’ என்பது நிரந்தரமாக ஒழிக்கப்படும். ஐ.நா., சர்வதேச சமூகம், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் மட்டுமே புதிய அரசாங்கம் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதோடு இச்சிரமமான பயணத்தின்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் எனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது. இதைச் சாத்தியமாக்குவதற்காக உலகத் தமிழர் பேரவை தனது பங்கை செவ்வனே ஆற்றும் எனவும் உறுதி செய்கிறது. ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ வழங்கப்பட்ட ஆணையை விஸ்தரிக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை | Virakesari.lk
  19. 09 Oct, 2024 | 06:21 PM தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு | Virakesari.lk
  20. (எம்.மனோசித்ரா) நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இறக்கு செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தோடு அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக 25,000 ரூபா உர மானியக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விரைவில் மீனவர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே தான் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரியை 50 ரூபாவிலிருந்து 60 ரூபா வரை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கும், வெங்காயதுக்கான இறக்குமதி வரியை 10 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தால் தேசிய உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியும். அத்தோடு விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. எனினும் தேர்தல் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியது. எவ்வாறிருப்பினும் விவசாயிகள் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய தேர்தல் ஆணைக்குழு அதற்கு அனுமதியளித்துள்ளது. அதற்கமைய தற்போது ஒரு ஹெக்டயாருக்கு 10,000 ரூபாவாகக் காணப்படும் உர மானியம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்த வாரம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக 15,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை, மகாவலி வலயத்திலுள்ள விவசாயிகளுக்கு படிப்படியாக உர மானியக் கொடுப்பனவு வழங்கப்படும். இதுவரையில் 2 பில்லியன் ரூபா அந்தந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகையும் விரைவில் வழங்கப்படும். மேலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்களால் மீனவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த வாரம் டீசல்மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன. விலை குறைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரணத்துக்கு அப்பால், எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நியாயமான முறையில் இந்த எரிபொருள் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது ; அடுத்த வாரம் முதல் 25 000 ரூபா உர மானியம் - அரசாங்கம்! | Virakesari.lk
  21. புதுடெல்லி: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் வெற்றியை நெருங்குவதால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்குவதால் உமர் அப்துல்லா தலைமையில் அங்கு கூட்டணி அரசு அமைய உள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 😎 காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, மாலை 4.30 மணி அளவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களை கைப்பற்ற உள்ள நிலையில், தேமாக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது. ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி; ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா! | BJP's hat-trick victory in Haryana - Omar Abdullah becomes Jammu Kashmir CM - hindutamil.in பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்சி 42 இடங்களை கைப்பற்றுகிறது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. முதல்வராகிறார் உமர் அப்துல்லா: இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (சட்டப்பிரிவு 370 நீக்கம்) மக்கள் ஏற்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் தெளிவாகி இருக்கிறது என குறிப்பிட்டார். 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை, இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது; முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  22. மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன், தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது. மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். Tamilmirror Online || 51/1க்கு அனுர அரசாங்கமும் எதிர்ப்பு
  23. இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சங்கானையில் புதிதாக ஒரு மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த விடயம் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி சர்வதேச நல்லொழுக்க தினத்தன்று சங்கானை பிரதேச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். இது இவ்வாறு இருக்கையில் கொழும்பு மதுவரித்திணைக்கள ஆணையாளர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களான சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை, கரவெட்டி மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார். குறித்த மதுபானசாலைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், அல்லது உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர்களுக்கு கடிதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தனி சிங்களத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கலால் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மதுவுக்கு எதிராக செயற்படுவதாக கூறியது. அவர்கள் கூறியது போலவே செய்யப்படும்போது அதற்கு கலால் திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்து, பிரதேச செயலர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக ஒற்றைக்காலில் நிற்கிறது. அதனால் பிரதேச செயலர்கள், வழக்குக்குள் சிக்கினால் தங்களுக்கு பிரச்சினை என பயப்படுகின்றார்கள். கலால் திணைக்கள ஆணையாளருக்கு இடமாற்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் அந்த பதவியை விட்டு போகின்றார் இல்லை. எனவே உடனடியாக கலால் திணைக்கள ஆணையாளரின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தி, இவ்வாறான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை கருத்துச் செய்ய வேண்டும். ஜனாதிபதியின் அறிவித்தல்ளுக்கு ஏற்ப செயற்படுவதா, கலால் திணைக்களத்தின் அறிவிப்புக்கு ஏற்ப செயற்படுவதா, மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதா என பிரதேச செயலர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அறிவிப்பானது, பிரதேச செயலர்களுக்கு எழுத்து வடிவில் கிடைக்கப்பெறுமானால் அவர்கள் அதற்கேற்ப செயற்பட்டு அனுமதிப் பத்திரங்களை வழங்காமல் இருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு மிரட்டல்! (newuthayan.com)
  24. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் .போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொரோனா தொற்று காலப்பகுதியில் யாழ்.போதனா மருத்துவமனையில் இவர் சிறந்த சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா (newuthayan.com)
  25. யாழில் பழமை மிக்க மரத்தை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது. அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மர கூட்டம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாடசாலைகளாகத்தில் நிற்கின்றது. மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை. பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற நேரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன? குறித்த மரம் நிற்கின்றதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் ஒட்சிசனை பெறுவதற்கும், வெப்பநிலையை சீர் செய்வதற்கும் குறித்த மரம் அளப்பரிய பங்காற்றுகின்றது. குறித்த மரத்தினை வெட்டுவதால், பாடசாலையில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாதிப்புகள் உள்ளன. அவர்களது உடல் ஆரோக்கியமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது. மரங்களை நாட்டவேண்டு என்ற எண்ணக்கரு மாணவர்களிடத்திலே விதைக்கப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் நன்மை பயக்கும் இந்த மரத்தினை வெட்டுவது நியாயமா இதனால் மரக் கூட்டுத்தாபனத்துக்கு என்ன இலாபம் இருக்கின்றது எனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதிக்கான கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி , நாளையதினம் (09) இந்த மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்றனர். யாழில் பழமை மிக்க மரத்தை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு! (newuthayan.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.