Everything posted by பிழம்பு
-
ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது
Published By: VISHNU 23 JUL, 2024 | 06:41 PM கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழுவினரின் இரு தசாப்த கால பயணம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து படைப்பு, ஓரங்கட்டப்பட்டு மருவிவரும் கலைஞர்களின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் என்னும் தலைப்புக்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நாட்டார் பாடல்கள், பாறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரிய கலை படைப்புக்களும் நடைபெற்றது. விழுது அமைப்பானது இனங்களுக்கிடையில் இன நல்லூரவை கட்டியெழுப்புவதிலும், பரஸ்பர உறவுகளை பேனுவதிலும் பிரதேச ரீதியாக சென்று கலை கலாசார நிகழ்வுகளை நாடாத்தி விளிப்புணர்வுஙளை ஏற்படுத்தி செயற்பட்டுக் கொண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது | Virakesari.lk
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்! Published By: VISHNU 23 JUL, 2024 | 07:08 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்சுணா ``சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துளநிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர். சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார். அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது. ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்! | Virakesari.lk
-
கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு
கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல் Published By: VISHNU 23 JUL, 2024 | 07:30 PM (நா.தனுஜா) தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை எனவும், தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழமுடியாத அச்சுறுத்தல் நிலை தற்போதும் தொடர்கிறது எனவும் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி நேற்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு - தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் 'மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு - தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் 'தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்', 'இனப்படுகொலைக்கு நீதி வழங்கு' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதனைத்தொடர்ந்து நினைவுகூரலில் கலந்துகொண்டவர்கள் அச்சுற்றுவட்டத்தில் உள்ள நினைவுக்கல்லில் மெழுகுதிரிகள் மற்றும் விளக்குகளை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், பின்னர் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர். கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல் | Virakesari.lk
-
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”
அதாவது, ஊரில் எந்த நல்ல விடயமும் நடந்திரக் கூடாது. தீர்வு வரும் வரைக்கும் தாயக மக்கள் முன்னேறக் கூடிய எந்தவிதமான நிகழ்வுகளும் நிகழ்ந்திரக் கூடாது. பொருளாதாரத்தில் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்ல வேண்டும். நல்ல மனசு உங்களுக்கு
-
விஜய் ஆண்டனியுடனான செல்ஃபிக்கு ரூ.30,000
Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 05:08 - 0 - 71 கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது. குறித்த இசை நிகழ்ச்சியின் promo வெளியிடப்பட்டதுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 30,000 ரூபாய் பெறுமதியுடைய நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வோர்களுக்கு விஜய் ஆண்டனியுடன் (செல்ஃபி) புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். Tamilmirror Online || விஜய் ஆண்டனியுடனான செல்ஃபிக்கு ரூ.30,000
-
மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!
மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப) #Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! (newuthayan.com)
-
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும். வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)
-
மன்னாரில் சஜித் - செல்வம் விசேட கலந்துரையாடல்
15 JUL, 2024 | 12:06 PM தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று கலந்துரையாடியுள்ளார். மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்துக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். மன்னாரில் சஜித் - செல்வம் விசேட கலந்துரையாடல் | Virakesari.lk
-
இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் - புத்திஜீவிகள் குழு வேண்டுகோள்
Published By: RAJEEBAN 15 JUL, 2024 | 04:39 PM இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் என இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும் எனவும் அந்த குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பிட்ட குழுவினர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய மக்கள் சக்தி என்பது 2022 ம் ஆண்டு மக்கள் போராட்டம் மூலம் வெளிப்பட்ட மக்கள் அபிலாசைகளுடன் தொடர்புபட்ட பிரதான இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்றமடைந்துவருகின்றது. இந்த நிலைமை 1947ம் ஆண்டு சிலோனின் முதலாவது தேசிய தேர்தலின் போது காணப்பட்ட நிலைமைக்கு ஒப்பானது - நாங்கள் பொன்னான வாய்ப்பை தவறவிட்டோம். ஆகவே எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் அதன் பின்னர் இலங்கை சமூகத்தில் கடும் கருத்துவேறுபாட்டை தொடர்ந்தும் உருவாக்கிவரும் இனப்பிரச்சினை உட்பட தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கும் பின்வரும் விடயங்களிற்கு முன்னுரிமைவழங்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கவேண்டும். 2022 போராட்டத்தின் போது இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும்,தேசிய மக்கள் சக்தி அவற்றை முழுமையாக பிரதிநிதித்துவம் செய்வதற்கு தவறிவிட்டது என்பது எங்களின் அவதானிப்பு. 1947ம் ஆண்டின் முதலாவது பொதுத்தேர்தலின் போது நவகாலனித்துவவாதத்திற்கு எதிரான மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்திய மையநீரோட்ட கட்சி லங்கா சமசமாஜ கட்சியாகும். இதன் காரணமாக நவதாராளவாதத்திற்கு எதிரான அனைத்து முற்போக்கு இடதுசாரி சக்திகளையும்ஐக்கியப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய விசேட கடப்பாடு லங்காசமசமாஜகட்சிக்கு காணப்பட்டது. அதனை நிறைவேற்றியிருந்தால் பாரதூரமான தவறுகள் இடம்பெற்றிருக்காது மேலும் 1947ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்புஇடதுசாரிகள் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்திருக்கும். அது நடந்திருந்தால் பொது எதிரிக்கு மலையகதமிழர்களின் பிரஜாவுரிமை அரசியல் உரிமைகளை பறிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திராது. ஆகவே 1947 ம் ஆண்டு தேர்தலில் லங்கா சமசமாஜகட்சி இழைத்த தவறுகள் 2024 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இழைக்கப்பாடமலிருப்பதை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பு தேசியமக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும். இந்த மூலோபாய தொலைநோக்குடன் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைப்பதே தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படவேண்டும். அந்த தீர்வு வழமைபோல பொதுஎதிரி இனவெறியை தூண்டுவதற்கு வழிவகுக்ககூடியதாக காணப்படக்கூடாது. மேலும் வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் - புத்திஜீவிகள் குழு வேண்டுகோள் | Virakesari.lk
-
யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்
15 JUL, 2024 | 05:48 PM (எம்.நியூட்டன்) தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில் தி.பாலசுப்பிரமணியம் நினைவாக அவரது குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லம் புனரமைக்கப்பட்டு சிவபூமி தேவார மடமாக திறந்துவைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக வருகைதந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம், சிவபூமி தேவார மடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்கவைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது. சைவத்துக்கும் தமிழுக்கும் சேவை செய்ய கலாநிதி ஆறுதிருமுருகன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவேண்டும். சாதாரண தொண்டு செய்பவர்கள் விளம்பரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விளப்பரத்துக்காகவே தொண்டு செய்கிறார்கள். ஆனால் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகளை மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார். இது இறைவனின் அருள் இல்லாமல் செய்யமுடியாது. இறைவனின் அருள் இவருக்கு உள்ளது. சைவமும் தமிழும் எல்லோரையும் வாழவைக்கும். அத்தகைய பணி செய்பவரை யாழ்ப்பாணம் பெற்றுள்ளது. இத்தகைய பணி தமிழகத்தில் இல்லையே. காலமாற்றத்தால் சுருங்கிப்போயுள்ளது. ஆறுதிருமுருகனின் பணி உலகில் பல இடங்களுக்கும் தேவையாக உள்ளது. இன்றைய தேவார மடம் திறப்பு விழா அவசியமான ஒன்றாகும். எனது பதவி நிலை காரணமாக பல இடங்களுக்கு அழைப்பார்கள். அங்கு சென்றால் பல மொழிகளை பேசுவார்கள். தேவாரங்கள் பாடுவார்கள். அவை சிலவே. ஆனால் இங்கு திருமுறை ஆடல் ஆற்றுகை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மடத்தில் தேவாரத்துடன் ஆடல் ஆற்றுகையும் நடைபெறவேண்டும். இந்த தேவார மடத்தை இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் | Virakesari.lk
-
டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர். டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார் | Jon Landau: Titanic and Avatar producer dies aged 63 - hindutamil.in
-
அண்ணாமலையுடன் கிழக்குமாகாண ஆளுநர் சந்திப்பு
Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - 73 ஏ எம் கீத் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
-
ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
வ.சக்தி ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார். தற்போது தமிழர்களின் எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா! 08 JUL, 2024 | 05:46 PM யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா! | Virakesari.lk
-
கருடன் Review: சூரியின் ஆக்ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்!
நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன். தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி - கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை. வெற்றிமாறன் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என தெளிந்த நீரோடை போல எங்கும் நிற்காமல் ஓடுகிறது படம். விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம். சிங்கிள் ஷாட்டில் சூரி கேப் விடாமல் கொட்டித் தீர்க்கும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம் ‘ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம். சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டத்தை ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் - உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்ஷன் பரிணாமம் என மொத்த திரையையும் ஆக்கிரமித்து நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் சூரி. சசிகுமாருக்கு கிட்டதட்ட ‘சுந்தரபாண்டியன்’ ரக கதாபாத்திரம். அதை நேர்த்தியாக கையாள்கிறார். கட்டுமஸ்தான் உடம்புடன் க்ளைமாக்ஸில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் உன்னி முகுந்தன். நன்றாகவே எழுதப்பட்ட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா. அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் வடிவுக்கரசி. ரோஷினி ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரகிடா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் தேர்ந்த நடிப்பு. இடைவேளைக்காட்சியில் சிலிர்ப்பனுபவத்தை கொடுத்து சூரியுடன் சேர்ந்து தாண்டவமாடுகிறது யுவனின் பின்னணி இசை. உமா தேவி வரிகளில் ‘கண்ணில் கோடி’ பாடல் கவனிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம், ஆர்தர் ஏ.வில்சனின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு சான்று. கலர் டோன் தனித்து தெரிகிறது. பிரதீப் ராகவின் நெருடலில்லாத ‘கட்ஸ்’ சிறப்பு. கணிக்க கூடிய கதைதான் என்றாலும், அதை அயற்சியில்லாத திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறது ‘கருடன்’. குறிப்பாக சூரியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கருடன் Review: சூரியின் ஆக்ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்! | Soori, sasikumar starrer Garudan movie review - hindutamil.in
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா (newuthayan.com)
-
யாழில் மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவருக்கு விளக்கமறியல் !
02 JUL, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் நேற்று திங்கட்கிழமை (01) சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக சோதனையிட சென்றனர். சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அரச அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், மருந்தகத்தினுள் வைத்து பூட்டப்பட்டிருந்த அரச உத்தியோகஸ்தர்களை மீட்டதுடன்இ அனுமதியின்றி மருந்து விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரை கைது செய்தனர். சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை மருந்தக உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது . யாழில் மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவருக்கு விளக்கமறியல் ! | Virakesari.lk
-
பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி - சஜித் !
02 JUL, 2024 | 06:00 PM பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம் குறித்து பேசும் ஜனாதிபதி இந்த சபையில் பூநகரி திட்டம் குறித்து பேசினார். 700 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு, இறுதியில் வேறு நாட்டில் உள்ள சோலார் பேனல் விநியோகஸ்தரிடம் வழங்கி அந்த உரிமப்பத்திரத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 500 மெகாவாட் ஆற்றல் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திலும் பெரும் நிதி மோசடி நடந்துள்ளது. இது தான் ஜனாதிபதியின் நிதி ஒழுக்கமா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். தற்போது அரசாங்கத்தின் மத்திய நரம்பு மண்டலம் தொழிற்படாதிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி - சஜித் ! | Virakesari.lk
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 107 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. சிக்கந்தராராவின் முகல்கடி எனும் கிராமம், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனும் துறவியின் மடம் அமைந்துள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஹாத்தரஸை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளு முள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 107 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஹாத்தரஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் ஏட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சம்பவ இடம் போர்க்களம் போல் எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயப்பட்டவர்களும் மயங்கி கிடந்தனர். இவர்கள் உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள ஏட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹாத்தரஸ், அலிகர் மற்றும் ஏட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர். இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 107 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.25 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஹாத்தரஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள ஏட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் ஏட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சம்பவ இடம் போர்க்களம் போல் எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயப்பட்டவர்களும் மயங்கி கிடந்தனர். இவர்கள் உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பரிதாபமான இந்த நெரிசல் பலி சம்பவத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் சோகமானது; இதயத்தைத் துன்புறுத்துகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் லக்ஷமி நாராயண் சவுத்ரி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும், அதேபோல், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் அங்கு விரைய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு | At least 100 killed in stampede at religious event in Uttar Pradesh’s Hathras - hindutamil.in
-
LGBTQ+: கோலாகலமாக நடந்த வானவில் பேரணி - அறிவியலும் சட்டமும் சொல்வது என்ன?
ஷாஜன் கவிதா நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே! இது இயற்கைக்கு எதிரானது அல்ல!", "எங்களோட உணர்வுகளை வானவில்ன்னு சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துறாங்க!" என்று தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்கள், மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கள் உணர்வுகளைப் பேரணியில் பகிர்ந்து கொண்டனர். சென்னை மற்றும் கோவையில் நேற்று நடந்த வானவில் பேரணியில் நடைபெற்ற காட்சிகள்தான் இவை. பொதுச் சமூகத்தில் சமீபமாக LGBTQ+ பற்றிய அடிப்படை புரிதல்கள் தெளிவாகிவரும் சூழலில், சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராகக் கேலி கிண்டல்களும் அதிகரித்தே வருகின்றன. உண்மையில் இவர்கள் இயற்கைக்கு எதிரானவர்களா? இந்த வானவில் பேரணியின் தொடக்கம் எங்கிருந்து தொடங்குகிறது? வாருங்கள் பார்க்கலாம். வானவில் பேரணி எங்கிருந்து தொடங்கியது? 1969-ல் ஜூன் மாதம் அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் நடைபெற்ற ஸ்டோன்வால் போராட்டம்தான் இந்த PRIDE மாதக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளி. அன்று அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்களை மாஃபியாக்களை போலக் கும்பல் கும்பலாகக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வீதியில் இறங்கிப் போராடினர். அவர்களின் தொடர் செயல்பாடுகளால் 1979-ம் ஆண்டு, “மற்றவர்கள் போல இவர்களும் சமமானவர்களே, அவர்களை ஒதுக்கக்கூடாது” என்ற சட்டத்தை 39 மாகாணங்களில் செயல்படுத்தியது அமெரிக்க அரசு. ஸ்டோன்வாலுக்குப் பிறகு ஐரோப்பா முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. அதுவே இப்போது சென்னை, கோவை என நாம் வாழும் நகரங்கள் வரை வந்து சேர்ந்திருக்கின்றன. LGBTQ+ என்றால் என்ன? LGBTQ+ என்பது லெஸ்பியன் (Lesbian), கே (Gay), பை செக்ஸுவல் (Bisexual), ட்ரான்ஸ்-ஜெண்டர் (Transgender), குயர் (Queer) என்ற மாற்றுப் பாலின மற்றும் பால்புதுமையினர் மக்களை அடையாளப்படுத்தும் சொற்களின் சுருக்கம். ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது என்ற செய்தியினைப் பார்த்திருப்போம். இப்போது ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதே தம்பதியில் ஒருவர் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் செய்திகளில் காண்கிறோம். சொல்லப்போனால் 'ஓரினச் சேர்க்கை' எனும் வார்த்தையே மரியாதைக் குறைவான வார்த்தையாகப் பார்க்கப்பட்டு அதற்குப் பதிலாக தன்பால் ஈர்ப்பாளர், ஓர்ப்பால் ஈர்ப்பாளர் (Gay, Lesbian) என்னும் வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதே போல திருநர், திருநம்பி, திருநங்கை, பால் புதுமையினர், மாற்றுப்பாலினம் எனக் கண்ணியமான வார்த்தையால் அழைக்கப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் இங்கே நடந்திருக்கின்றன. எப்போதிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது? "மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது. மனிதனிடம் மட்டுமின்றி விலங்கிடமும் இதே நிலை இருக்கிறது" என்று தனது சிம்போசியம் எனும் நூலில் எழுதி இருக்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே ரோமாபுரியை ஆண்ட நீரோ கலிகுலா ஓர்பாலின ஈர்ப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் கொடுத்து தனது காதலன் ஸ்போரஸைத் திருமணம் செய்தது வரலாறு. அதன் பிறகு தன்பாலின ஈர்ப்பு, நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்கைக்கு எதிரானது எனக் கிறிஸ்தவ மதம் வழியாக மிகவும் எதிர்மறையாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அகஸ்டின், தாமஸ் என்ற இரு மதபோதகர்கள், "எந்த வகையான உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கிறதோ அதுவே இயற்கையானது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் இயற்கைக்கு எதிரானது" என்று அதற்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பினர். மருத்துவ உலகம் என்ன சொல்கிறது? 1886-ம் ஆண்டு, மனநல மருத்துவர் ரிச்சர்ட் வான் க்ராஃப்ட்-எபிங் தனது 'சைக்கோபதியா செக்சுவாலிஸ்' என்ற புத்தகத்தில், இது ஒரு ஜீன் குறைபாடு. இதன் மூலம் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று எழுதியிருந்தார். இதைச் சிறிது நாள்களிலேயே மருத்துவ உலகம் நிராகரித்தது. அதேபோல கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாற்றினால் ஏற்படுகிறது என்றும் சொல்லப்பட்டது. அதுவும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சைக்கோ அனலடிகல் தியரியின் படி குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படும் மனப்பாதிப்பின் காரணமாக இவ்வாறு ஆக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் வீட்டுச் சூழல் சிறப்பாக இருந்தாலும் அந்த உணர்வு தொடர்வதால் அந்த தியரியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்து ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் (ஓர்பாலீர்ப்பு) விருப்பம் ஏற்படும் எனும் இன்ஃப்ளூயன்ஸ் தியரியும் (Influence Theory) முன்வைக்கப்பட்டன. இதுவும் மருத்துவ உலகில் நிராகரிக்கப்பட்டது. இதனால் மருத்துவ உலகம் ஓர்பாலீர்ப்பு இயற்கையானது என்ற முடிவுக்கு வந்தது. சட்டம் என்ன சொல்கிறது? சட்டரீதியாக ஓர்பாலின ஈர்ப்பு சரியா, தவறா என்னும் கருத்தும் அதற்கான சட்டங்களும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 1804ஆம் ஆண்டு உலகை ஆண்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் ஒரே பாலினத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் கொண்டு வந்தார். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்பட்டது. புராணக் காலங்களில் கூட ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்படவில்லை. ஆண், பெண் உறவுகளில் அதுவும் ஒருநிலையாக இருந்துள்ளது. காம சாஸ்திரத்தின் படி ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூட இணை சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம் - பதினெட்டாம் நூற்றாண்டில் கூட இது ஒரு பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள கோயில்களில், பெண்கள் மற்ற பெண்களைச் சிற்றின்பத்துடன் அரவணைப்பது மற்றும் ஆண்கள் தங்கள் பிறப்புறுப்புகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வது போன்ற படங்கள் உள்ளன . 1837-ம் ஆண்டு மெக்காலேவின் ஐபிசி தயாரிக்கப்பட்டது. இதன்படி IPC 377 section-படி ஹோமோ-செக்ஸ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்தச் சட்டம் பின்பற்றப்பட, நெதர்லாந்தில் 1989 சிவில் பார்ட்னர்ஷிப் சட்டப்படி, "ஒரு ஆணும் ஆணும், ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்" எனும் சட்டம் வந்தது. அதன்பிறகு 2001-ம் ஆண்டு திருமணமும் செய்து வாழலாம் என்று சட்டம் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி, கனடா, பெல்ஜியம், அமெரிக்கா என ஓர்பாலின திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கூட 150 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஐபிசி சட்டம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நீக்கப்பட்டது. ‘பாலினம் என்பது ஆண், பெண் என்ற இரண்டு மட்டுமே கிடையாது. காதல் என்பது எதிர் பாலினத்தின் மீதே வர வேண்டும் என்பதும் கிடையாது. பாலினத் தேர்வு என்பது தனி மனித சுதந்திரம்’ என்பதை முன்வைக்கிறது அந்த சட்டம். பாலின ஈர்ப்பை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்து முற்றலும் தவறானது. உலக அளவில் மருத்துவத் துறைகளில் இதற்கான சிகிச்சைகள் சோதிக்கப்பட்டன. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. அறிவியல் பூர்வமாக மருத்துவத் துறையில் நோயாகக் கருதாத ஒன்றிற்கு எதற்காகச் சிகிச்சை பெற வேண்டும்? ஆகவே இது நோய் அல்ல. ஆணும் பெண்ணும் இணை சேர்வது போல, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் தனக்கான பாலினத் துணையைத் தேடிக் கொள்ளும் இணை தேடலே என்கிறது அறிவியல். நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே
-
Paradise Review: இது சீதையின் பார்வையில் ராமாயணமா? இலங்கை அரசியலை எடுத்துரைக்கும் டிராமாவா?
கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை. பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார். அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை. காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள். தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது. படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம். “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள். பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது. மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது. https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
-
Abdul Hameed: "இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்!"- பி.எச்.அப்துல் ஹமீது உருக்கம்
Published:Yesterday at 1 AMUpdated:Yesterday at 1 AM பி.எச்.அப்துல் ஹமீது Join Our Channel 4Comments Share இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இவரை அழைத்தன. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறைப் பிரபலங்களையும் பல்வேறு சேனல்களுக்காக இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். பி.எச்.அப்துல் ஹமீது சமீப காலமாக அப்துல் ஹமீது பெரிதாக நிகழ்ச்சிகளில் ஏதும் கலந்துகொள்ளாமல் கொஞ்ச நாள்கள் ஓய்விலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அப்துல் ஹமீது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவே வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தி தீயாய் பரவ அப்துல் ஹமீது ரசிகர்கள், நண்பர்கள் பலரும் வருத்தத்துடன் இது குறித்து விசாரிக்க அப்துல் ஹமீதிற்கு போன் செய்துள்ளனர். போனை எடுத்துப் பேசிய அப்துல் ஹமீது, தன்னைப் பற்றிப் பரவிய வதந்தி அறிந்து மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார். இந்த வதந்திகள் குறித்து கண்ணீர் மல்கக் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருக்கும் அப்துல் ஹமீது, "நம் எல்லோரையும் படைத்த ஏக இறைவன் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக... மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டுக் கதறி அழுததை என்னால் தாங்க முடியவில்லை. 'இத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை' என்று நினைத்துக் கொண்டேன்" என்று மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத படி பேசினார். பி.எச்.அப்துல் ஹமீது தொடர்ந்து பேசியவர், "நேற்று இலங்கை பத்திரிகைகளில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது, 'மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து, அவனைப் பற்றிய நல்ல பக்கங்களை, நல்ல நினைவுகளை மட்டும் இறைமீட்டி பேசி மகிழ்வது' என்று எழுதியிருந்தேன். இப்போது அப்படியொரு அனுபவம்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும், என்னுடைய துறை சார் பொறாமை காரணமாக அல்லது மத மாச்சரியங்கள் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர், இதுவரை காலமும் என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பியிருக்கலாம். ஆனால், என்னுடைய இறப்புச் செய்தியைக் கேட்டது என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை இறைமீட்டி இருப்பார்கள். இது நான் வாழும் காலம்வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம். முதல் அனுபவம் 1983ம் ஆண்டு. இனக்கலவரத்தின்போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்துவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், தமிழ் பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய 'வானிலையில் வழிப்போக்கன்' என்னும் நூலில் பதிவு செய்திருந்தேன். இது முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் தளத்தில் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடையப் புகைப்படத்தைப் போட்டு, 'பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம்' என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. இப்போது சமூகவலைதளங்களில் நான் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவியிருக்கிறது. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுதிருக்கிறேனா என்று நகைச்சுவையாகத் தோன்றுகிறது. நாம் இறந்த பிறகு நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்க்க நாம் இருக்கமாட்டோம். ஆனால், வாழும் காலத்திலேயே அதைக் கணிக்க, அறிந்துகொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. இந்தச் செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம். அந்த சாபங்களிலிருந்து அந்த மனிதரைக் காக்கும் படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோவொரு நன்மையைச் செய்திருக்கிறார் அவர். ஆகவே, அன்புள்ளங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும், வணக்கமும்!" என்று உருக்கத்துடன் பேசியிருக்கிறார். Abdul Hameed: "இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்!"- பி.எச்.அப்துல் ஹமீது உருக்கம் | Famous Tamil anchor B.H. Abdul Hameed heart-melting speech about his death rumours - Vikatan
-
தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..?
தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் (Foreplay) என்கிற வார்த்தையை பல வருடங்களாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த ஓரிரண்டு வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஏன் அவசியம்; உறவின் உச்சக்கட்டத்துக்கும் இது அவசியமா என்பதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். ''ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டு. ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முக்கியமாகப் பிறப்புறுப்புகளில். இது வலியில்லாத, எரிச்சலில்லாத நல்ல தாம்பத்திய அனுபவத்தைக் கொடுக்கும். முக்கியமாக, ஃபோர்பிளேவுடன் ஆரம்பிக்கப்பட்ட உறவில் கணவன், மனைவி இருவருமே உச்சக்கட்டம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதனால், ஃபோர்பிளேவும் உங்கள் தாம்பத்தியத்தின் ஓர் அங்கமாக இருக்கட்டும்'' என்றவரிடம், ஃபோர்பிளே தொடர்பான வாசகர் ஒருவரின் கேள்வியை முன்வைத்தோம். வாசகரின் கேள்வி: எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன. 3 மாதத்தில் மகள் இருக்கிறாள். என் மனைவி மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், உடலின் Anatomy பற்றியும் காமத்தை வெளிப்படையாக அணுகுவதையும் நான்தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர் இப்போது தாம்பத்திய உறவில் தனக்கு எது தேவை என்பதைக் கேட்டுப் பெறுகிறார். முன்விளையாட்டுகள் மூலம் தன்னை திருப்திப்படுத்தியும் கொள்கிறார். ஆனால், முதல் குழந்தை பிறந்ததிலிருந்து உறவுகொள்வதற்கு மிகவும் பயப்படுகிறார். ஏனென்று கேட்டால், `ரெண்டாவது குழந்தை உடனே நின்னுடுமோன்னு பயமா இருக்கு' என்கிறார். `சரி, நான் காண்டம் அணிந்துகொள்கிறேன்' என்றால், `அது எனக்கு அசெளகர்யமா இருக்கு' என்கிறார். மாதவிடாயைக் கணக்கிட்டு உறவுகொள்ளலாம் என்றாலும், அது அவருக்குப் புரியவில்லை. `சரி, நீயே ஏதாவதொரு கருத்தடை முறையை ஃபாலோ செய்யேன்' என்றாலும் சங்கடப்படுகிறார். வேறு வழி தெரியாமல், முன் விளையாட்டுகள் மூலம் என் மனைவியைத் திருப்திபடுத்தி வருகிறேன். `எனக்கு என்ன வழி' என்றால், `நீங்க மாஸ்டர்பேட் செஞ்சுக்கோங்க' என்கிறார். இதற்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை. மருத்துவரின் பதில்: செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது. `முன்விளையாட்டுகளிலேயே திருப்தியாகிவிடுகிறேன்' என்று உங்களுடைய மனைவி சொல்வது உண்மையாகவே இருக்கலாம். மார்புப்பகுதியைத் தூண்டி விடுவது, பிறப்புறுப்பைத் தூண்டி விடுவது போன்ற முன் விளையாட்டுகளிலேயே அவருக்கு உச்சக்கட்டம் நிகழ்ந்திருக்கலாம். Foreplay மற்றபடி, மருத்துவரீதியாக கர்ப்பத்தடை முறைகள் கண்டறியப்படாத காலத்தில் `கரு நின்று விடுமோ' என்று பயந்தால் அது நியாயம்தான். இன்றைக்கு இதற்குப் பல வழிகள் இருக்கின்றன. ஒருவேளை நீங்கள் அணிகிற காண்டம் சரியில்லையென்றால், இயற்கையான உணர்வைத் தருகிற காண்டம் அணியலாம். அல்லது உங்கள் மனைவி, மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு முறையொன்றை ஃபாலோ செய்யலாம். குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன என்று உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதனால், உங்கள் மனைவிக்குப் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற உணர்விருக்கிறதா, அதனால் உறவைத் தவிர்க்கிறாரா என்று கேளுங்கள். அதுதான் பிரச்னையென்றால், தேங்காய் எண்ணெயை ஆணுறுப்பின் நுனியில் தடவிக்கொள்ளுங்கள். எந்த வகையிலும் உங்கள் பிரச்னை தீரவில்லையென்றால், இருவரும் உளவியல் நிபுணரைச் சந்தியுங்கள். Dr. Asokan மேலேயுள்ள என்னுடைய பதிலைப் படிக்கும்போது, சிலருக்கு ஃபோர்பிளே மூலமே உச்சக்கட்டம் அடைய முடியுமா என்கிற கேள்வி எழலாம். `அடைய முடியும்' என்பதுதான் உண்மை. உச்சக்கட்டத்தைப் பொறுத்தவரை, வஜைனல் ஆர்கஸம், எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் என இரண்டு உண்டு . கணவன் - மனைவி பிறப்புறுப்புகள் இணைவது வஜைனல் ஆர்கஸம், பிறப்புறுப்பைத் தூண்டி விடுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம். சிக்மண்ட் ஃபிராய்டு, பிறப்புறுப்புகள் இணைகிற வஜைனல் ஆர்கஸம்தான் சிறந்தது என்று சொல்லியிருப்பார். ஆனால், அது சரியல்ல என்பதையும், வஜைனல் ஆர்கஸம் போலவே எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸமும் உச்சக்கட்ட இன்பத்தைத் தரும் என்பதையும் அடுத்தடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் உறுதியாக நிரூபித்துவிட்டன. ஆனால், ஒரு மருத்துவராகச் சொல்கிறேன். தாம்பத்திய உறவு என்பது ஃபலூடா ஐஸ்க்ரீம்போல. ஃபோர்பிளேவிலேயே திருப்தியடைந்துவிட்டேன் என்பது ஃபலூடாவின் மேலிருக்கும் ஒரு லேயரை சாப்பிட்டுவிட்டு திருப்தி அடைந்துவிட்டேன் என்று சொல்வதுபோல. ஃபலூடாவின் அத்தனை லேயர்களையும் ருசியுங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.'' தாம்பத்திய உறவா... Foreplay-ஆ... எது மிகவும் முக்கியம்..? | காமத்துக்கு மரியாதை - 178 | Marital relationship; Foreplay... which is more important..? - Vikatan
-
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி!
பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி! திருகோணமலையில் பலவந்தமாக பெண் பணியாளரை முத்தமிட்ட அதிகாரிக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எழுத்தாளர் ஒருவரை கட்டித்தழுவி முத்தமிட்ட குற்றத்துக்காக நிறுவனத்தின் மனித வள மேலாளருக்கு ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அவருக்கு மூன்று பிரிவுகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7இலட்சத்து 50ஆ யிரம் ரூபா இழப்பீடு மற்றும் அரசுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்று குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஞ) பெண் பணியாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட அதிகாரி! (newuthayan.com)
-
யாழில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; சிறுவன் விளக்கமறியலில்
Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 10:34 AM யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து , சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. யாழில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; சிறுவன் விளக்கமறியலில் | Virakesari.lk