Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம். பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில் க்ரிஷுக்கு பியானோ வாசிக்கும் வேலை கிடைக்க, அந்த ஊதியத்தை வைத்து லண்டன் செல்ல திட்டமிடுகிறார். இப்படியாக வாழ்க்கை சீராக சென்றுகொண்டிருக்கும்போது, க்ரிஷுக்கு முன்னால் கொலை ஒன்று நிகழ்ந்து அவரது திட்டம் மொத்தமும் தலைகீழாக மாறிவிடுகிறது. அந்தக் கொலையும் அதன் பின் நடக்கும் சம்பவங்களும் க்ரிஷின் இசைக் ‘கனவை’ கலைத்ததா, உயிர்பெறச் செய்ததா, என்னதான் நடந்தது என்பதே திரைக்கதை. கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கான இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் காட்சிகளை அச்சு அசலாக தமிழுக்கு மாற்றியிருப்பதால், ஒரிஜினல் வெர்ஷனை பார்த்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் கிட்டுவது கொஞ்சம் கடினம். ஆனால், அசல் படத்தைப் பார்த்து மறந்துபோனவர்களுக்கும், புதிய பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத வகையில் தமிழுக்கு ஏற்ற வகையிலான நேர்த்தியாக இயக்கம் கவனிக்க வைக்கிறது. இதற்கு மற்றொரு காரணம், நீர்த்துப்போகாத கதையின் திருப்பங்களும், அதன் எங்கேஜிங் தன்மையும். குறிப்பாக பியானோ வாசிக்கும் பிரசாந்த் பல இடங்களில் இளையராஜாவின் இசையில் ரெட்ரோ பாடல்களின் இசையை மீட்டெடுப்பது, ஒரிஜினல் நடிகராக கார்த்தி, தனது ‘மவுன ராகம்’ படத்தைப் பார்ப்பது, ‘ஜீன்ஸ்’ பட ரெஃபரன்ஸ் ஆகியவை நினைவுகளை மீட்பதுடன் ரசிக்கவும் வைக்கிறது. ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் வரும் இடம் அட்டகாசம். ஒப்பீட்டளவில் ‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா - ராதிகா ஆப்தே இடையே ஒருவித இயல்புத்தன்மையுடன் கூடிய நட்பும், காதலும் இருக்கும். பிரசாந்த் - ப்ரியா ஆனந்திடம் அது கொஞ்சம் மிஸ்ஸிங். அதேசமயம் சில கதாபாத்திரங்கள் ஒரிஜினலை விட மிஞ்சி நிற்கின்றன. உதாரணம் ஊர்வசி கதாபாத்திரம். ஒருபுறம் அப்பாவியான இசைக் கலைஞனாகவும், மறுபுறம் பதற்றம், பயத்துடன் போராட்டம் நடத்துபவராகவும் தன்னால் முடிந்த அளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் பிரசாந்த். அழுத்தமான எதிர்மறை கதாபாத்திரத்தில் சிம்ரன் ரசிக்க வைக்கிறார். எல்லோரையும் ‘ஓவர்டேக்’ செய்து நடிப்பால் திரையில் ஆளுமை செலுத்துகிறார். பிரியா ஆனந்த் குறைந்த திரைநேரம் எடுத்துக் கொண்டாலும் நிறைந்த நடிப்பை வழங்கத் தவறவில்லை. ஊர்வசி - யோகிபாபு காம்போ புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. கார்த்திக் வழக்கமான உடல்மொழியில் தடம் பதிக்கிறார். சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பு செலுத்துகின்றனர். இசையின் வழியே நகரும் கதையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திருப்பம் நிறைந்த காட்சிகளில் அதிர்ச்சியை கூட்டுகிறது. பியானோ இசை ஈர்க்கிறது. பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை. இறுதியில் வரும் ‘என் காதல்’ பாடல் ஓகே. திரைக்கதையின் அடர்த்தியைக் கூட்டும் ரவி யாதவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம். திருப்பம் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் பெரிதாக போராடிக்காமல் நகர்கிறது படம். அதற்கு முதிர்ச்சியான நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. அதேசமயம் ‘அந்தாதூன்’ படம் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் மறவாதவர்களுக்கு நிறைவு தருவது சந்தேகமே. அந்தகன் Review: பிரசாந்தின் ‘கம்பேக்’ எப்படி? | Prasanth starrer Andhagan movie review - hindutamil.in
  2. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! புனித காசி தீர்த்தமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம், சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமாரது தலைமையில், இந்து, பௌத்த மதகுருக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோரின் பங்களிப்புடன் உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. இதன்போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இராணுவத்தினரால் குளத்தை சூழவுள்ள பகுதி சிரமதானமும் செய்யப்பட்டது. (ப) புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு! (newuthayan.com)
  3. 26 JUL, 2024 | 06:13 PM கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று (25) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்துவைத்தார். இதில் பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா | Virakesari.lk
  4. 26 JUL, 2024 | 07:04 PM (நா.தனுஜா) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் முன்வைக்கப்பட்ட 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இக்கலவரங்களின் மிக மோசமான தாக்கத்தையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அவ்வறிக்கையில் 'இற்றைக்கு 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களையும், அவர்களின் வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து வன்முறைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியானதுடன், பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் காயமடைந்தனர். அத்தோடு பலர் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானதுடன், நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினர். 'கறுப்பு ஜுலை' என அறியப்படும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நாட்டின் அமைதியின்மையை தோற்றுவித்ததுடன், பல தசாப்தகால போருக்கும் வழிவகுத்தது. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்' என கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். அதுமாத்திரமன்றி இவ்வாறான மிக மோசமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூருவதில் கனேடியத் தமிழர்கள் மற்றும் உலகவாழ் தமிழர்களுடன் தாம் உடன்நிற்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியை 'தமிழினப் படுகொலை நினைவு நாளாக' பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்படும் அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் 'இனப்படுகொலை' என்ற சொற்பதத்தை நிராகரித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுவரும் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் கூறிவருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறையும் அத்தகையதொரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை முற்றாக நிராகரிப்பதாக அதில் தெரிவித்திருக்கிறது. அத்தோடு இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து இதற்கு முன்னரும் கனேடிய பிரதமருக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் 'கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்காது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனேடிய பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை | Virakesari.lk
  5. Published By: VISHNU 26 JUL, 2024 | 07:54 PM ஜனாதிபதி தேர்தலில், ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தி வேட்பாளர் நிறுத்தப்படக் கூடாது என்ற அடிப்படையில், தமிழ் பொது வேட்பாளர் கருத்தியலை ஆதரிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk
  6. ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3 Published By: RAJEEBAN 26 JUL, 2024 | 05:39 PM Sri Lanka, Island of Terror - An Indictment by Thornton, E.M. & Niththyananthan, R. தமிழில் - ரஜீபன் மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள். திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள். அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள். பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன அவர்கள் தனது ஆடைகளை பலவந்தமாக அகற்றியவேளையிலும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனக்கு ஏற்படுத்தப்பட்ட வலிகள் தன்னை பாதிக்காத நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். தன்மீது சுமத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத அவமானம் குறித்து அவள்வெட்கப்படவில்லை. ஏறைக்குறைய 20 ஆண்கள் அவளை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய பின்னரே ஒருவன் ஏனையவர்களை எச்சரித்தான் . அவளை மூர்க்கத்தனமாக உலுப்பினான். அவள் கத்தவும் போராடவும் தொடங்கினாள்,சுற்றிலும் பார்த்த அவள் தனது உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருப்பதை முதல்தடவையாக உணர்ந்தாள். நான் உதவியில்லாத பார்வையாளனாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் திடீரேன தனது முஷ்டிகளை இறுக்கிக்கொண்டாள்,பின்னர் அவளது முகத்த்தில் உதவியற்ற சரணடைதல் தென்பற்றது.அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். ஆண்டவரே அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களிற்கு தெரியாததால் அவர்களை மன்னியுங்கள் அவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மயக்கத்திலாழ்ந்தாள்.அவர்கள் பின்னர் அவள்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர். உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவதை இரண்டாவது தடவையாக நான் அன்றைய தினம் பார்த்தேன். நாங்கள் மத்திய காலத்திற்குள் நுழைந்துவி;ட்டோமோ என நான் சிந்தித்தேன். இன்றைய காலத்து சிங்கள பௌத்தர்களை விட வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் - காட்டுமிராண்டிகள் மிகவும் நாகரீகமானவர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். 3.15- இரண்டுமணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் அந்த பகுதி களியாட்ட நிகழ்வு இடம்பெறும் பகுதி போல காணப்பட்டது. சூறையாடப்பட்ட பொருட்களை மக்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஆடைகள் முதல் தளபாடங்கள் வரை சூறையாடப்பட்டன. இராணுவ டிரக் அங்கு வந்தவேளை சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயலவில்லை. அவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள் என்ற செய்தி அவர்களிற்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும். 4.30 - வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் ஆறுதலாக அவசரமின்றி தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் இன்னமும் எனது வீட்டை தாக்கவில்லை.மஹரகம வாக்காளர் பட்டியலில் நான் என்னை பதிவு செய்யாததே இதற்கு காரணம்;. நான் ஒரு தமிழன் என யாரோ காடையர்களிற்கு தகவல் வழங்கப்போகின்றார்கள். எனது குடும்பத்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததால் நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன். 6.15 - அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது எனினும் அவர்கள் தொடர்ந்தும் சூறையாடலில் ஈடுபட்டிருந்தனர். பெடெஸ்டல் மின்விசிறியொன்றை யுவதியொருவர் கொண்டு செல்வதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இன்னுமொரு குழுவினர் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட யுவதிகள் பல பொதிகளை கொண்டுசென்றுகொண்டிருந்தனர்.உடைகளாகயிருக்கவேண்டும். 7மணி இன்னமும் இருள் விலகவில்லை எனது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3 | Virakesari.lk
  7. காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2 Published By: RAJEEBAN 25 JUL, 2024 | 05:08 PM Sri Lanka, Island of Terror - An Indictment by Thornton, E.M. & Niththyananthan, R. தமிழில் - ரஜீபன் வீதியின் மறுபக்கத்திலிருந்து பௌத்த மதகுருமார் பேரணியாக அந்த சந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் கைககளை அசைத்து சத்தமிட்டனர்,அவர்களில் ஒருவர் அனைத்து தமிழர்களையும் கொலை செய்யவேண்டும் ஒருவரை கூட தப்பவிடக்கூடாது என காடையர்களை நோக்கி கூச்சலிட்டார். நான் கடும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன்-சில நிமிடம் சிந்தித்த பின்னர் விரைவில் வீட்டுக்கு செல்வதே சிறந்த விடயம் என தீர்மானித்தேன். பேருந்து மூலம் பயணி;ப்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் நான் நடந்தே வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன். 9.30 -நுகேகொட சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவிலிருந்த எனது வீட்டை நோக்கி நான் நடக்கதொடங்கினேன்- வீதியின் இரு மருங்கிலும் இருந்த கடைகளை மக்கள் சூறையாடிக்கொண்டிருந்தார்கள்.கடைகளை முழுமையாக கொள்ளையடித்த பிறகு அவற்றை தீயிட்டு கொழுத்தினார்கள். தொலைவில் இராணுவத்தினரின் ஜீப்பினை பார்த்தேன்.ஒருவித நிம்மதியுடன் நான் அதனை நோக்கி நடந்தேன், ஆனால் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது,ஜீப்பின் மேற்பகுதியில் ஆறு ஏழு இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் காடையர் கும்பல் சூறையாடுவதற்கான கொள்ளையடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்,நான் திகைத்துப்போனேன். 10.45- நான் மஹரகமவில் உள்ள எனது வீட்டை சென்றடைந்தேன்.அங்கு இன்னமும் எதுவும் நடக்கவில்லை.நான் வீட்டிற்குள் சென்றதும் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.அதன் பின்னர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று நிலத்தை ஆழமாக தோன்றி அதற்குள் பெறுமதியான பொருட்களை துணி பொலித்தீனால் மூடி புதைத்தேன். 11.30- எனது வீட்டிற்கு வெளியே பெரும் சத்தங்கள் கேட்டன,கூச்சல் குழப்பமான நிலை காணப்பட்டது.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன். அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஜீப்கள்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திடீரென அந்த பகுதிக்கு வந்தன. அந்த பேருந்துகள் ஜீப்புகளில் இருந்து பலர் கத்திகள் வாள்களுடன் இறங்கினார்கள்.சுமார் 200 பேர் இருப்பார்கள் அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி ஒடினார்கள். அவர்களின் தலைவர்கள் போன்று தோற்றமளித்த ஒரு பத்துபேரின் கரங்களில் பேப்பர் போன்ற ஆவணங்கள் காணப்பட்டன,( அவை தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் என பின்னர்தான் தெரியவந்தது)அவர்கள் தமிழர்களின் வீடுகளை நோக்கி காடையர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது,ஆளும் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் நான் அவர்களை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்( ஐக்கிய தேசிய கட்சி) எனது வீட்டிற்கு நேரே தமிழர்களின் வீடுகள் இருந்தன,காடையர்கள் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அந்த வீடுகள் தீப்பிடித்தன,தீ வானளவிற்கு உயர்ந்தது.உள்ளேயிருந்தவர்கள் அலறினார்கள். 11.45- நான் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றேன் - மெழுகுதிரியை கொழுத்தி அந்தோனியரை வணங்கினேன் தமிழர்களை பாதுகாக்குமாறு மன்றாடினேன். 12.25 நான் வானொலியி;ல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தியை செவிமடுக்க ஆரம்பித்தேன்.பாதுகாப்பு அமைச்சின் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியானது. 1.30 மணி நான் தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவேளை வெளியே பெரும் அலறல்கள் சத்தங்கள் கேட்டன. பலர் இரண்டு யுவதிகளை கூந்தலில் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்தனர். எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்தவர்கள் என நான் அடையாளம் கண்டுகொண்டேன்.' மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள். திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள். அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள். பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2 | Virakesari.lk
  8. கனடா ஒன்ராரியோவில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கழிப்புறும் கடற்கரையான வசாகா கடற்கரையிற்கு சுற்றுலா வரும் இந்தியர்கள், கடற்கரையில் குழி தோண்டி மலம் கழித்து அசுத்தம் செய்வதாக அக் கடற்கரை அமைந்துள்ள ஊரில் உள்ளவர்கள் விசனப்படுகின்றனர். இது தொடர்பாக அவ் ஊரில் உள்ள ஒரு பெண் ரிக்ரொக் கில் சில காணொளிகளை பகிர்ந்து விமர்சித்துள்ளதுடன் தன் குழந்தைகளை கூட அக் கடற்கரை க்கு அனுப்ப முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அறிய: Videos from a Wasaga Beach resident in Ontario are being shared widely on social media after she accused immigrants, mainly from India, of defecating in holes on the beach and burying it. Tiktoker “ItsNattylxnn2.0,” is a local in the Ontario resort town that boasts the world’s longest freshwater beach. “Natty” went viral online after ranting about being unable to take her kids to the beach because visitors have been using it as a toilet. She claimed to have discovered feces in spots where she witnessed Indian families digging and even setting up a tent over the hole for the day. “It’s pre-planned, premeditated. They dig the hole. There are tents,…They pitch the tent; you think they’re going to change, but they’re not. They are using them as washrooms,” she said in one video. Another video in which she complained about the central part of the beach, known as Beach One, attracted over 410,000 views on TikTok. “I’m tired of people saying that the people pooping on the beach (is) ‘what they do back home.’ We are not back home. We are in Canada, and as a local, I refuse to let my kids dig in the sand on Beach One,” she said in the video. She has received mixed comments on her videos, from people pushing back, saying that she is lying—to many others both local and elsewhere in Canada vouching for her, saying they have experienced the same thing. “I worked on beach one for a summer, and I used to have to tell them to stop, and they just wouldn’t,” one user said in the comments. One TikToker from India made a video calling the minority of Indian immigrants who are acting in ways that make negative headlines like this “problematic” and not a representation of the Indian-Canadian community. They did it off my backyard. There were three different families of maybe 25, 30 people that came for barbecues who would set up right on the fence of my backyard. I saw them digging the hole. I saw them placing a tent (over it). When they left, there was poop,” Natty said in another video. Natty said the issue became noticeable after the COVID-19 lockdowns were lifted. “People were coming to the beach, and the washrooms were closed. So they were making their washrooms,” she said in another video where she called those who did so selfish. She has faced accusations of racism for her comments. She responded to one TikTok user who called her a racist colonizer by saying she has a First Nations background. “People are too scared to speak up because they think that it’s being racist. It’s not because if another white person was doing that, would you feel any type of way to tell them to ‘pull your pants up.’ ‘Don’t be doing that on a beach?’” she said. “This has nothing to do with targeting someone based on their skin colour and everything to do with protecting our beaches, our parks. These are places that everyone is supposed to be able to go to and enjoy.” https://tnc.news/2024/07/22/ontario-resident-viral-immigrants-pooping-beach/
  9. கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த பிரிவினைவாத செயலுக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்” என விஸ்வ ஹிந்து பரிஷத் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எட்மன்டன் சுவாமிநாராயண் கோயிலை சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை தனிநாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர். கனடா அரசு இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் அங்கு காலிஸ்தான் ஆதரவு தரப்பினர் இப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ] கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம். (newuthayan.com)
  10. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதை வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக தனியார் இணையத்தள செய்தித் சேவை கடந்த 20 ஆம் திகதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அச்செய்தி பாரதூரமானது.இந்த விடயம் தொடர்பில் நான் சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துகின்றேன் என்றார். என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்! | Virakesari.lk
  11. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் 41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் தமிழ் மக்களிடம் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிறைவேற்றுத்துறையின் ஒருசில அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளேன்.இச்சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுடனும்,சுயாதீன தரப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அரசியலமைப்பினால் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டுள்ளது.ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எதிராகச் செயற்படும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆகவே ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படலாம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டன.இவ்விடயம் குறித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சு அறிவியல் ரீதியில் முன்னெடுத்த ஆய்வு அறிக்கைக்கு அமைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி,நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நான் ஒன்றிணைந்து கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆகவே முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்.அத்துடன் கவலையடைகிறோம். 1983 ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு கரும் புள்ளியாக காணப்படுகிறது.41 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.அக்காலப்பகுதியில் நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை.இருப்பினும் நாட்டு பிரஜை என்ற ரீதியில் தமிழர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார். ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர் | Virakesari.lk
  12. Published By: VISHNU 23 JUL, 2024 | 06:41 PM கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழுவினரின் இரு தசாப்த கால பயணம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து படைப்பு, ஓரங்கட்டப்பட்டு மருவிவரும் கலைஞர்களின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் என்னும் தலைப்புக்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நாட்டார் பாடல்கள், பாறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரிய கலை படைப்புக்களும் நடைபெற்றது. விழுது அமைப்பானது இனங்களுக்கிடையில் இன நல்லூரவை கட்டியெழுப்புவதிலும், பரஸ்பர உறவுகளை பேனுவதிலும் பிரதேச ரீதியாக சென்று கலை கலாசார நிகழ்வுகளை நாடாத்தி விளிப்புணர்வுஙளை ஏற்படுத்தி செயற்பட்டுக் கொண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது | Virakesari.lk
  13. மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்! Published By: VISHNU 23 JUL, 2024 | 07:08 PM யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்சுணா ``சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துளநிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர். சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார். அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது. ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்! | Virakesari.lk
  14. கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல் Published By: VISHNU 23 JUL, 2024 | 07:30 PM (நா.தனுஜா) தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை எனவும், தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழமுடியாத அச்சுறுத்தல் நிலை தற்போதும் தொடர்கிறது எனவும் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 'கறுப்பு ஜுலை' கலவரங்கள் அரங்கேறி நேற்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு - தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் 'மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு - தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் 'தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்', 'இனப்படுகொலைக்கு நீதி வழங்கு' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதனைத்தொடர்ந்து நினைவுகூரலில் கலந்துகொண்டவர்கள் அச்சுற்றுவட்டத்தில் உள்ள நினைவுக்கல்லில் மெழுகுதிரிகள் மற்றும் விளக்குகளை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், பின்னர் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர். கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் நினைவுகூரல் ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல் | Virakesari.lk
  15. அதாவது, ஊரில் எந்த நல்ல விடயமும் நடந்திரக் கூடாது. தீர்வு வரும் வரைக்கும் தாயக மக்கள் முன்னேறக் கூடிய எந்தவிதமான நிகழ்வுகளும் நிகழ்ந்திரக் கூடாது. பொருளாதாரத்தில் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்ல வேண்டும். நல்ல மனசு உங்களுக்கு
  16. Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 05:08 - 0 - 71 கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது. குறித்த இசை நிகழ்ச்சியின் promo வெளியிடப்பட்டதுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 30,000 ரூபாய் பெறுமதியுடைய நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வோர்களுக்கு விஜய் ஆண்டனியுடன் (செல்ஃபி) புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். Tamilmirror Online || விஜய் ஆண்டனியுடனான செல்ஃபிக்கு ரூ.30,000
  17. மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப) #Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! (newuthayan.com)
  18. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும். வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)
  19. 15 JUL, 2024 | 12:06 PM தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று கலந்துரையாடியுள்ளார். மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்துக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார். மன்னாரில் சஜித் - செல்வம் விசேட கலந்துரையாடல் | Virakesari.lk
  20. Published By: RAJEEBAN 15 JUL, 2024 | 04:39 PM இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் என இலங்கையின் புத்திஜீவிகள் கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும் எனவும் அந்த குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பிட்ட குழுவினர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய மக்கள் சக்தி என்பது 2022 ம் ஆண்டு மக்கள் போராட்டம் மூலம் வெளிப்பட்ட மக்கள் அபிலாசைகளுடன் தொடர்புபட்ட பிரதான இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்றமடைந்துவருகின்றது. இந்த நிலைமை 1947ம் ஆண்டு சிலோனின் முதலாவது தேசிய தேர்தலின் போது காணப்பட்ட நிலைமைக்கு ஒப்பானது - நாங்கள் பொன்னான வாய்ப்பை தவறவிட்டோம். ஆகவே எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் அதன் பின்னர் இலங்கை சமூகத்தில் கடும் கருத்துவேறுபாட்டை தொடர்ந்தும் உருவாக்கிவரும் இனப்பிரச்சினை உட்பட தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கும் பின்வரும் விடயங்களிற்கு முன்னுரிமைவழங்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதன் மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்கவேண்டும். 2022 போராட்டத்தின் போது இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும்,தேசிய மக்கள் சக்தி அவற்றை முழுமையாக பிரதிநிதித்துவம் செய்வதற்கு தவறிவிட்டது என்பது எங்களின் அவதானிப்பு. 1947ம் ஆண்டின் முதலாவது பொதுத்தேர்தலின் போது நவகாலனித்துவவாதத்திற்கு எதிரான மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்திய மையநீரோட்ட கட்சி லங்கா சமசமாஜ கட்சியாகும். இதன் காரணமாக நவதாராளவாதத்திற்கு எதிரான அனைத்து முற்போக்கு இடதுசாரி சக்திகளையும்ஐக்கியப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய விசேட கடப்பாடு லங்காசமசமாஜகட்சிக்கு காணப்பட்டது. அதனை நிறைவேற்றியிருந்தால் பாரதூரமான தவறுகள் இடம்பெற்றிருக்காது மேலும் 1947ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்புஇடதுசாரிகள் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்திருக்கும். அது நடந்திருந்தால் பொது எதிரிக்கு மலையகதமிழர்களின் பிரஜாவுரிமை அரசியல் உரிமைகளை பறிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திராது. ஆகவே 1947 ம் ஆண்டு தேர்தலில் லங்கா சமசமாஜகட்சி இழைத்த தவறுகள் 2024 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இழைக்கப்பாடமலிருப்பதை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பு தேசியமக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி இனவெறி ஏதேச்சதிகாரம் நவதாரளவாதம் ஆகியவற்றிற்கு எதிரான முற்போக்கு மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு மூலம் மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும். இந்த மூலோபாய தொலைநோக்குடன் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக அனைத்து இனக்குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன்வைப்பதே தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படவேண்டும். அந்த தீர்வு வழமைபோல பொதுஎதிரி இனவெறியை தூண்டுவதற்கு வழிவகுக்ககூடியதாக காணப்படக்கூடாது. மேலும் வடக்கின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய நடைமுறைசாத்தியமான தீர்வாக அது காணப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவேண்டும் - புத்திஜீவிகள் குழு வேண்டுகோள் | Virakesari.lk
  21. 15 JUL, 2024 | 05:48 PM (எம்.நியூட்டன்) தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில் தி.பாலசுப்பிரமணியம் நினைவாக அவரது குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லம் புனரமைக்கப்பட்டு சிவபூமி தேவார மடமாக திறந்துவைக்கப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக வருகைதந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம், சிவபூமி தேவார மடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்கவைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது. சைவத்துக்கும் தமிழுக்கும் சேவை செய்ய கலாநிதி ஆறுதிருமுருகன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவேண்டும். சாதாரண தொண்டு செய்பவர்கள் விளம்பரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விளப்பரத்துக்காகவே தொண்டு செய்கிறார்கள். ஆனால் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகளை மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார். இது இறைவனின் அருள் இல்லாமல் செய்யமுடியாது. இறைவனின் அருள் இவருக்கு உள்ளது. சைவமும் தமிழும் எல்லோரையும் வாழவைக்கும். அத்தகைய பணி செய்பவரை யாழ்ப்பாணம் பெற்றுள்ளது. இத்தகைய பணி தமிழகத்தில் இல்லையே. காலமாற்றத்தால் சுருங்கிப்போயுள்ளது. ஆறுதிருமுருகனின் பணி உலகில் பல இடங்களுக்கும் தேவையாக உள்ளது. இன்றைய தேவார மடம் திறப்பு விழா அவசியமான ஒன்றாகும். எனது பதவி நிலை காரணமாக பல இடங்களுக்கு அழைப்பார்கள். அங்கு சென்றால் பல மொழிகளை பேசுவார்கள். தேவாரங்கள் பாடுவார்கள். அவை சிலவே. ஆனால் இங்கு திருமுறை ஆடல் ஆற்றுகை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மடத்தில் தேவாரத்துடன் ஆடல் ஆற்றுகையும் நடைபெறவேண்டும். இந்த தேவார மடத்தை இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் | Virakesari.lk
  22. பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர். டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார் | Jon Landau: Titanic and Avatar producer dies aged 63 - hindutamil.in
  23. Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - 73 ஏ எம் கீத் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
  24. வ.சக்தி ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார். தற்போது தமிழர்களின் எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
  25. யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா! 08 JUL, 2024 | 05:46 PM யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.