Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 13 JUN, 2024 | 07:53 PM கொழும்பு-13 கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவானி வைபவம் வியாழக்கிழமை (13) மாலை அருட்தந்தை பற்றிக் பெரேய்ரா தலைமையில் நடைபெற்றது. பூஜையை அடுத்து ஊர்வலம் புறப்பட்டு செல்வதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் காணலாம். (படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்) கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவானி வைபவம் | Virakesari.lk
  2. 13 JUN, 2024 | 05:36 PM அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்கு கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சி மற்றும் வர்த்தக பொருட்காட்சிகள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. மீன் உணவு விநியோகிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக பாடசாலைகளில் அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அபாயகர மீன்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட ரீதியாக அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த 4 வருடங்களில் 2632 மில்லியன் ரூபா வருமானம் - அமைச்சர் டக்ளஸ் | Virakesari.lk
  3. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 12:50 PM அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறன. மேலும், தற்போது வேளாண்மை செய்கை, அறுவடை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றன. இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையென மக்கள் கூறுகின்றனர். முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர். அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் ! | Virakesari.lk
  4. (இராஜதுரை ஹஷான்) நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு வீதம் 79.4 சதவீதமாக காணப்படுகிறது. அத்துடன், 5 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 63.5 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. ஆண்களின் டிஜிட்டல் அறிவு 65.9 சதவீதமாகவும், பெண்களின் டிஜிட்டல் அறிவு 61.3 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளன. இதற்கமைய 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 93.8 சதவீதமாக காணப்படுகிறது. எழுமாற்றாக 100 நபர்களில் 51 பேர் இணைய பாவனைகளில் ஈடுபட்டுள்ளதுடன்,19 பேர் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர். தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் மத்தியில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு 82.7 சதவீதமாகவும், 25 முதல் 29 வயதுக்குட்டவர்களின் கணினி அறிவு 83.7 சதவீதமாகவும் காணப்படுகிறது. மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் மேல் மாகாணம் 33.55 சதவீதமளவில் கணினி அறிவில் உயர்வான நிலையிலும், கிழக்கு மாகாணம் 8.6 சதவீதமளவில் குறைவான நிலையிலும் காணப்படுகிறது என்றார். நாட்டில் கணினி அறிவு 39 சதவீதமாக உயர்வு | Virakesari.lk
  5. 12 JUN, 2024 | 05:06 PM இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. 22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. 1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது. இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்குத் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளைப் பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளைப் பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகக் கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார். நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு | Virakesari.lk
  6. 12 JUN, 2024 | 05:24 PM எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின்போது சித்தார்த்தன் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தங்களது கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில் எம் மக்கள் மத்தியில் இன்று வரை அதிருப்தி இருப்பதால் இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுதியான நிலைப்பாட்டினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், உங்கள் கட்சி சம்பந்தமான தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் என தெளிவுபடுத்தினார். அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் முழுமையாக அவருடனேயே செயற்படுவோம் என்பதையும் சித்தார்த்தன் தெரிவித்தார். தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் பிந்திய நிலைமைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ய இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு | Virakesari.lk
  7. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
  8. 10 JUN, 2024 | 12:49 PM தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் நிகழ்வு. இதற்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக நாங்கள் செல்ல கூடாது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். சிவில் சமூகம் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம். அவர்களின் ஆலோசனைகளை வரவேற்போம். தேர்தல் என்பது அரசியல் நிகழ்ச்சி. அந்த அரசியலில் மக்களை வழி நடத்த சிவில் சமூகத்தை மக்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை. மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது. இதையெல்லாம் தாண்டி நாங்கள் நிறுத்தி தான் ஆவோம் என யாராவது ஒற்றைக்காலில் நின்றால் அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டால் எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள். அதற்காக நங்கள் ஒழிந்து ஓட போவதில்லை. துரோகி பட்டத்திற்கு இன்று பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. ஆனால் என்ன தான் செய்தாலும் எங்கள் மக்களின் அடிப்படை உரித்தை விட்டுக்கொடுக்கவோ , விலை பேசவோ நாம் அனுமதிக்க போவதில்லை. தமிழ் வேட்பாளர் என ஒருவரை அடையாளப்படுத்தி முற்படுத்தினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் நாங்கள் . ஏனென்றால் அவர் தேர்தலில் படு தோல்வி அடையும் போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல. இது யாரோ செய்த கோமாளி கூத்து என நாங்கள் சொல்ல கூடியதாக இருக்க வேண்டும். எனவே எமது கட்சியை சார்ந்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். என்னையும் துரோகி என்று சொல்லி விடுவார்களோ என ஒழிந்து ஓட வேண்டாம். பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நங்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் ! | Virakesari.lk
  9. 10 JUN, 2024 | 04:22 PM தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி எனும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த என். புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான அந்தத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார்(1), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ,உத்தரகாண்ட்( 2), பஞ்சாப் (1), இமாச்சல் பிரதேசம்(3) ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் பதிமூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஜூலை 10 ஆம் திகதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் ஜூலை 13-ஆம் திகதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14-ஆம் திகதியன்று தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவரான செல்வ பெருந்தகை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்ளிட்ட ஆறு இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு | Virakesari.lk
  10. 10 JUN, 2024 | 04:58 PM மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். கச்சத்தீவு மீட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் முடிவு சரியானதாக உள்ளது. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்துஇருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இலங்கை தமிழர்கள் விவகாரம்மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பாஜக குறைந்த தொகுதிகளில்வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன்தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் தோல்வி வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர் . பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன், பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது. அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. இந்த தேர்தலில் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்-மதுரை ஆதீனம்! | Virakesari.lk
  11. 10 JUN, 2024 | 07:00 PM (எம்.நியூட்டன்) மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் குருநகரில் உயிரிழந்த மீனவர்களின் நினைவுத்தூபி அமைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு, அஞ்சலி செலுத்தினர். 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் | Virakesari.lk
  12. யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச 10 JUN, 2024 | 06:40 PM யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் மகா வித்தியாலய்த்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று, ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், 05 கணினிகள், ப்ரின்டர் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (smart board) ஆகியவற்றையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். அத்துடன் பாடசாலைக்கு அரங்குடன் கூடிய இரட்டை மாடி கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர், நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினையும் வழங்கினார். யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச | Virakesari.lk
  13. ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் பகுதிக்கு விஜயம் செய்து காணிகளை பார்வையிட்ட பின் திங்கட்கிழமை (10) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் வாழ்வாதார பயிற் செய்கைக்கு நீண்ட காலமாக காணியின்றி அவதிப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற வகையில் வனவளத் திணைக்களத்துடன் பல தடவை பேசி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது அம் மக்களுக்கான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் குளத்திற்கான காணி உட்பட மக்களின் வாழ்வாதாரப் பயிற் செய்கைக்காக 235 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு அதனை விடுவித்துள்ளனர். இதன் மூலம் இப் பகுதியில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு ஏக்கர் காணி வாழ்வாதார நடவடிக்கைக்காக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஓமந்தை - பனிக்கர்புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு | Virakesari.lk
  14. Published By: VISHNU 10 JUN, 2024 | 07:33 PM கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பிரேக் பழுதானதால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து | Virakesari.lk
  15. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு. மேடை அலங்காரத்திலும், நிகழ்ச்சி அமைப்பிலும் சற்று முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.
  16. பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?! மத்தியில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 272 எம்.பி-க்கள் தேவை. ஆனால், கடந்த தேர்தலில் 303 இடங்களைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறை 240 இடங்களில்தான் ஜெயித்திருக்கிறது. ஆகவே, ஆந்திராவில் 16 இடங்களில் வென்றிருக்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் 12 இடங்களில் வென்றிருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவிருக்கிறது. கடந்த முறை பா.ஜ.க மட்டுமே 303 எம்.பி-க்களை வைத்திருந்தார்கள். இப்போது, இந்த இரு கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 293 எம்.பி-க்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமையவிருக்கிறது. எப்படியோ மத்தியில் மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறோம், மீண்டும் பிரதமர் ஆகிறோம் என்று மோடி ஆசுவாசப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் வைத்துவரும் நிபந்தனைகளால் பா.ஜ.க தலைவர்கள் விழிபிதுங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மத்திய அரசின் அச்சாணிகளாக இருக்கப்போகும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனை நிறைவேற்றுவதைத் தவிர, பா.ஜ.க-வுக்கு வேறு வழியே இல்லை. நிதிஷ்குமார் twitter சிறப்பு அந்தஸ்து கோரிக்கை மிக முக்கியமாக தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் இருவரும் முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு மத்திய பா.ஜ.க அரசு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது என்ற சர்ச்சையில்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினார். ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது. அந்தக் கோரிக்கையை 2019-ம் ஆண்டு பா.ஜ.க அரசு நிராகரித்தது. அப்போது விட்டதை இப்போது பிடிக்கிறார் சந்திரபாபு நாயுடு. தற்போது, அஸ்ஸாம், நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. மக்களவை சபாநாயகர் பதவி தெலுங்கு தேசத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் சந்திரபாபு நாயுடு முன்வைத்திருக்கிறார். மேலும், அமைச்சரவையில் கல்வி, சுகாதாரம், சாலைகள், பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் வேண்டுமென்று அவர் வலியுறுத்திவருகிறார். நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடுவைப் போலவே, நிதிஷ்குமாரும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி பீகாரில் நடைபெற்றுவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை பா.ஜ.க-விடம் அவர் நிபந்தனையான வலியுறுத்துகிறார். நிதிஷ்குமார் நிதிஷ்குமார் இரண்டு கேபினட் அமைச்சர்கள், ஒரு இணை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கேட்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, நிதிஷ்குமார் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர். இந்த முறை ரயில்வே அமைச்சர் பதவியை அவர் கேட்கிறார். ஆனால், நிதித்துறை, உள்துறை, ரயில்வே போன்ற சில முக்கியமான துறைகளை தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பது இந்த இரு கட்சிகளின் இன்னொரு முக்கியமான நிபந்தனை. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பா.ஜ.க நினைத்தவற்றை எல்லாம் செய்தது. பிரிவு 370 நீக்கம் போன்ற தனது முக்கிய அரசியல் அஜெண்டாக்களை எல்லாம் பா.ஜ.க நிறைவேற்றியது. குறைந்தபட்ச பொது செயல் திட்டம் கொண்டுவரப்பட்டால் பா.ஜ.க தன் விருப்பப்படி திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். குமாரசாமி - தேவகவுடா காரணம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் இந்த இரு கட்சிகளின் நிபந்தனையாக இருக்கிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளராக ஜார்ஜ் ஃபெண்டான்டஸ் இருந்தார். தற்போது, அந்தப் பதவிக்கு நிதிஷ்குமார் பொருத்தமானவர் என்று ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறுகிறார்கள். இந்த இரு கட்சிகள் தவிர தலா இரண்டு எம்.பி-க்களைப் பெற்றிருக்கும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனாவும் மத்திய அமைச்சரவைப் பதவிகளைக் கேட்பதாக சொல்கிறார்கள். பவன் கல்யாண் குமாரசாமி தனக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டுமென்றும், வேளாண் துறை வேண்டும் என்றும் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாண்டு காலம் சுதந்திரமாக இயங்கிய பா.ஜ.க-வின் கைககள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டப்பட்டிருக்குமா? பல ரிமோட் கன்ட்ரோல்கள் மூலம் இயங்கும் நிலையில்தான் பா.ஜ.க அரசு இருக்குமா? என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பாஜக-வுக்கு நிபந்தனையா? - சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?!| Nitish kumar and chandrababu naidu wants special status for Andhra pradesh and Bihar - Vikatan
  17. தமிழக அரசியலை மிரட்டும் சீமானின் நாம் தமிழர்! 2019-ல் 3.90%; 2024-ல் அடேங்கப்பா 8.10% வாக்குகள்! சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக பெரிய கட்சியா? நாம் தமிழர் பெரிய கட்சியா? என்பதுதான் முதன்மையான விவாதம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு, புதுவையைப் பொறுத்தவரை திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. அதேநேரத்தில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் தமிழகத்தில் புதிய அரசியல் பாதை உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட இடங்களும் வென்ற வாக்குகளும் திமுக (21) 26.93% அதிமுக (32) 20.46% பாஜக (23) 11.24% காங்கிரஸ் (9) 10.67% நாம் தமிழர் (39) 8.10% பாமக (10) 4.2% இதர கட்சிகள் அனைத்தும் குறைவான வாக்கு சதவீதம்தான் பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? திமுக (24) 32.76% அதிமுக (20) 25.53% பாஜக (5) 3.62% காங்கிரஸ் (9) 12.72% நாம் தமிழர் (37) 3.90% பாமக (7) 5.36% தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வென்றாலும் இடங்களையே கைப்பற்றாமல் இருந்தாலும் அதன் வாக்கு சதவீதம் நிலையானதாகவே இருந்து வருகிறது என்பதை 2 தேர்தல்களின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி இம்முறை அனைத்து இடங்களிலும் வென்ற போது 2% வாக்குகளை இழந்திருப்பது அக்கட்சிக்கான எச்சரிக்கை அலாரம்தான். பாமகவைப் பொறுத்தவரையில் போன முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5.36% ஓட்டுகளைப் பெற்றது; இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.2% ஓட்டுகளைத்தான் பெற்றிருப்பது அந்த கட்சிக்கும் 'எச்சரிக்கை' மணி அடிக்கப்படுகிறது என்பதுதான். 5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக! இதற்கு அப்பால் பாஜக, நாம் தமிழர் கட்சிகளைப் பார்ப்போம். பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படியானால் வாக்கு சதவீதம் 4 மடங்கு அதிகமாகத்தானே இருக்கும். ஆம் அப்படித்தான் 11.24% வாக்குகளைப் பாஜக பெற்றுள்ளது. நாம் தமிழர் வளர்ச்சி: அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளைத்தான் பெற்றது. இந்த முறை அதைப் போல இரு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது 8.10% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் நிலைக்குமா? குறையுமா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சிதான் தமக்கான பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html
  18. அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது. தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது. இந்நிலையில், இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9, 2019 இல் ராமர் கோயிலுக்கான வழி பிறந்தது. இதையடுத்து நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தினார். கடந்த ஜனவரியில் ராமர் கோயிலின் தரைத்தளம் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது. னவே, ராமர் கோயிலால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. இதன் பலன் நாட்டின் இதர மாநிலங்களிலும் கிடைக்கும் எதிர்பார்ப்பும் பாஜகவிற்கு இருந்தது. ஆனால், இந்த பலன் தற்போது உ.பி.யிலேயே கிடைக்காமல் போய் விட்டது. அயோத்யாவின் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார். இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைஸாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது. நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைஸாபாத்தில் 2009 இல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவின் எம்பியாக உள்ள லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிட்டிருந்தார். இவர் அயோத்தி சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை பாஜக எம்எல்ஏவாகவும் இருந்தவர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லல்லுசிங்கின் வெற்றி, 2014 தேர்தலில் தோல்வியில் முடிந்துள்ளது. பைஸாபாத்தில் இண்டியா கூட்டணியின் அங்கமாக இருந்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனித்து போட்டியிட்டது. கடந்த 1989 மக்களவை தேர்தலில் சிபிஐ சார்பில் பைஸாபாத்தின் எம்பியானார் மித்ரஸென் யாதவ். இவரது மகன் அர்விந்த்ஸென் யாதவ் இந்தமுறை சிபிஐக்காகப் போட்டியிட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்ஸென், பைஸாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என அஞ்சப்பட்டது. ராமர் கோயில் கட்டப்பட்டதில் தன் மீதானப் புகாருக்கு பாஜகவும் அஞ்சியிருந்தது. இதனால், பாஜகவும் கடைசிகட்ட தேர்தல்களில் மட்டும் ராமர் கோயிலை பற்றி பேசத் துவங்கியது. குறிப்பாக, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்பட்டு விடும் என்ற பீதியை பிரதமர் மோடியே கிளப்பியிருந்தார். இதுபோன்ற கருத்துக்களும் பைஸாபாத்தில் பாஜகவின் தோல்விக்கு காராணமாகி விட்டதாகக் கருதப்படுகிறது. பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பைஸாபாத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமலாகி வருகின்றன. எனினும், சமாஜ்வாதியை வெற்றிபெறச் செய்து பைஸாபாத்வாசிகள், ராமர் கோயிலை அரசியலில் இருந்து பிரித்து வைத்து விட்டனர். https://www.hindutamil.in/news/india/1259660-bjp-defeated-in-ayodhya-1.html Adverti
  19. நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’ சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டியுடன் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் மற்ற தென் மாநிலங்களில் பாஜகவின் வீச்சு பெரிய அளவில் இருக்க தமிழகத்தில் மட்டும் பாஜகவை கணக்கைத் தொடங்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளது திமுக கூட்டணி. கவனம் பெறும் பாஜகவின் வாக்கு சதவீதம்: இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பல்வேறு இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. மேலூர், மதுரை வடக்கு, மதுரை மேற்கு தொகுதிகளில் பாஜகவை விட அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. சறுக்கிய பாமக: தமிழகத்தில் காலை முதலே தருமபுரியில் பாமக நம்பிக்கை நட்சத்திரத்தை ஒளிரச் செய்து கொண்டிருக்க பிற்பகலுக்கு மேல் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் அ.மணி வெற்றியைப் பதிவு செய்தார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். நீலகிரியில் ஆ.ராசா 3வது முறையாக வெற்றி: நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நீலகிரி எம்பி ஆக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் , திமுகவின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரித்து தமிழக மக்கள் இந்த வெற்றியை வழங்கி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார். அண்ணாமலை தோல்வி: கோவையில் வெற்றி நிச்சயம் என அண்ணாமலை முழங்கிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “கோவை தொகுதியில் வெற்றி என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழக முதல்வர் விடிவை ஏற்படுத்தி கொடுப்பார் என மக்கள் நம்புகின்றனர். சென்னைக்கு அடுத்து கோவை போன்ற தொழில் நகரம் தனித்தன்மை இழந்து வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.” என்றார். ’மோடி அலை எனும் மாயை’ - சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான திருமாவளவன், “சென்ற முறை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது ஒரு மாயை. அது உண்மை அல்ல. மோடி அலை என்பது ஒரு மாயை. அது உண்மை இல்லை என மக்கள் இப்போது நிரூபித்துள்ளார்கள்.” என்று கூறினார். காங்கிரஸ் பளிச்: தமிழகம், புதுச்சேரி எனப் போட்டியிட்ட 10 இடங்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் வெற்றியை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடி வருகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கம் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மைத்திற்க்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள்-மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது! தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்." என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கமல் வாழ்த்து: ‘இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை’என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார் தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். நாற்பதும் திமுக கூட்டணிக்கே! - தமிழகத்தில் அதிமுக+, பாஜக+ ‘வாஷ் அவுட்’ | Tamil Nadu Election Results 2024 LIVE updates: DMK alliance leads in all 40 Lok Sabha seats - hindutamil.in
  20. பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா! அம்ரித்பால் சிங் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா. சரப்ஜித் சிங் கால்சா இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan
  21. தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan
  22. கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றிபெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. மாலை 3 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் வெற்றி உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாயாசம் வழங்கி கொண்டாடிய சுரேஷ்கோபியின் மனைவி ராதிகா கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்துவந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி. காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். நடிகர் சுரேஷ்கோபி இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார். கேரளாவில் காலூன்றிய பாஜக: திருச்சூரில் சுரேஷ் கோபி வெற்றிக்கு கைகொடுத்த `போராட்டம்’ | Bjp candidate suresh gopi wins in kerala - Vikatan
  23. மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! தற்போதைய நிலவரம்; தி.மு.க - 4,46,326 பா.ஜ.க - 2,72,289 அ.தி.மு.க - 88,584 நாம் தமிழர் கட்சி - 38,978 மன்சூர் அலிகான் - 2,181 நோட்டா - 6,695 வேலூர்: விட்டு தராத கதிர் ஆனந்த்... ஹாட்ரிக் தோல்வி ஏ.சி.எஸ்! - மன்சூர் அலிகானை முந்திய நோட்டா! | vellore parliamentary constituency - dmk candidate kathir anand wins - Vikatan
  24. 3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.