Everything posted by பிழம்பு
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
வாரணாசியில் மோடிக்குப் பின்னடைவு... காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை வகிக்கிறார்... அவரை எதிர்த்து போட்டியிட்ட மோடி பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row
-
நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
எஸ்.ஆர்.லெம்பேட் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
-
பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு
பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது கடந் சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பொதுத் தேர்வுக்கான தேர்வு வினாத்தாள்களைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வழங்கி வருகிறது. இல்-து-பிரான்சில் 53 தமிழ்ச்சோலைகள் மற்றும் வெளிமாகாண முதன்மை நகர்களிலுள்ள 12 தமிழ்ச்சோலைகள் மற்றும் 5 தனியார் பள்ளிகள் என 5563 மாணவர்கள் இத்தேர்வுகளில் தோற்றியிருந்தனர். இல்-து-பிரான்சு தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வு அரச பொதுத் தேர்வு நடுவகமான MAISON DES EXAMANS இல் ARCUEIL நகரசபை மற்றும் பிரான்சு அரசின் அரச அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்தத் தேர்வு நடுவகத்தில் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு 17 ஆவது தடவையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 5279 தேர்வர்கள் தோற்றிய இம்மண்டபத்திற்கான பாதுகாப்பு, ஒருங்கமைப்பு, உணவுப் பரிமாற்றம், ஒழுங்கமைப்பு என்பவற்றை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உப-கட்டமைப்புகளும் சிறப்பாகத் திட்டமிட்டு நடாத்தியிருந்தன. பிரான்சில் உயர்கல்வித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக மீண்டும் கொண்டுவரக்கோரி, தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் தேர்வு மண்டப சுற்றுச் சூழலில் நின்றிருந்த பெற்றோர்களிடம் கையழுத்து வாங்கிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2024 சிறப்புற நிறைவுறப் பங்காற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.(க) பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு (newuthayan.com)
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான் Published By: DIGITAL DESK 7 03 JUN, 2024 | 05:22 PM திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. அந்த மாணவிகளின் வாழ்வோடு விளையாட முனையும் யாரையும் நாம் அனுமதிக்க முடியாது. மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேற்றை உடனடியாக வெளியிட பரீட்சை ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட விடயம் இலங்கையில் இன்னும் மனிதாபிமானம் உயிர்வாழ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. பரீட்சை மண்டபத்தில் இஸ்லாமிய மாணவிகள் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து கவலைப்பட மட்டுமே முடிந்தது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை தொடர்பில் பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் மண்டபத்திலேயே அதனை முடித்திருக்க முடியும். முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். பரீட்சை மண்டபத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளர் ஆளுமையற்ற கல்வி பரப்புக்கு பொருத்தமற்ற ஆசிரிய தொழிலை கேவலப்படுத்தும் மனநிலை கொண்ட ஒருவராகவே நாம் பார்க்கிறோம். ஒரேமொழியை பேசும் சகோதர இன மாணவிகளின் உரிமைகளில் கை வைப்பது சகோதரத்துவத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய மோசமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பரீட்சை ஆணையாளர் உடனடியாக மாணவர்களின் பெறுபேற்றை வெளியிட முன்வரவேண்டும். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல உரிமை சார்ந்த பிரச்சினையும் கூட. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலீலுர் ரஹ்மான் | Virakesari.lk
-
வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கான சாத்தியங்களை ஆராய்ந்த முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழு
14 முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழுவினர், இலங்கை ஊழியர் சம்மேளனத்துடன் சேர்ந்து, வட மாகாணத்தில் பிரதான துறைகளில் உபாய மார்க்கமிக்க முதலீடுகள், வர்த்தகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பவற்றை ஆராய்வதற்காக உயர் மட்ட விஜயத்தில் ஈடுபட்டனர். இலங்கை ஊழியர் சம்மேளனத்தின் பங்காண்மையுடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விஜயம் வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எடுத்துக்காட்டி, பிரதான பங்கீடுபாட்டாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடலையும் ஒத்துழைப்பினையும் போஷித்து, வியாபாரங்களுக்கும் சமுதாயங்களுக்கும் நன்மை பயக்கும் பங்காண்மையினை வசதிப்படுத்துவதை விஜயத்தின் பிரதான குறிக்கோள்களின் மத்தியில் கொண்டுள்ளது. வட மாகாண பிரதம செயலாளரான லட்சுமணன் இளங்கோவன் அவர்களுடனான சந்திப்புக்கு மேலதிகமாக, வட மாகாணத்தில் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புக்கள், கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகைத் தோற்றப்பாடு பற்றிய பகுப்பாய்வினை வழங்குவதற்கான பங்கீடுபாட்டாளர் கலந்தாலோசிப்பினை விஜயம் உள்ளடக்கியிருந்தது. இதற்குப் பிரதம செயலாளர் அலுவலகம் தலைமை வகித்தது. அச்சுவேலிக் கைத்தொழிற் பேட்டைக்கான விஜயத்தினையும் தொழில்முனைவோர் மற்றும் வியாபாரச் சங்கங்களுடன் வலையமைப்புருவாக்க நிகழ்வினையும் அரசாங்க அமைப்புக்கள் மற்றும் பிராந்தியச் சம்மேளனங்கள் உள்ளிட்ட பிரதான துறைசார் செயற்படுனர்களுடன் கலந்தாலோசிப்பினையும் விஜயம் உள்ளடக்கியிருந்தது. பிராந்தியத்தில் முதலீட்டினால் உந்தப்பட்ட வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பாராட்டி, வட மாகாணப் பிரதம செயலாளர் லெட்சுமணன் இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “முன்னோக்கிப் பார்க்கையில், அபிலாஷைகளைச் செயற்பாடுகளாக நிலைமாற்றுவதற்கு நாம் ஒன்றுபடுவோம். முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் தூதுக்குழுவினை நாம் வரவேற்று அதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அதனுடன் பணியாற்றக் காத்திருக்கின்றோம்” பல் துறைகளின் ஊடே வாய்ப்புக்களில் அதிகரிப்பினைப் பிராந்தியம் அனுபவித்து வரும் நிலையில், உட்கட்டமைப்பு முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள அதேவேளை, உள்நாட்டுச் சந்தையினையும் ஏற்றுமதிச் சந்தையினையும் இலக்குவைக்கும் விவசாயம் மற்றும் கடற்றொழில், அதேபோன்று நீரியல் வளம் ஆகிய துறைகள் வளர்ச்சிக்கும் விருத்திக்குமான பெரும் சாத்தியத்தினைக் கொண்டுள்ளன. மேலும், PAVE கருத்திட்டத்தின் கீழான இடையீடுகள், வளர்ச்சியின் நன்மைகள் சமுதாயத்தின் சகல உறுப்பினர்களின் மத்தியிலும் ஒப்புரவுடன் பகிரப்பட்டு அதன் மூலம் மிகவும் நிலைபேறான மற்றும் நியாயமான பொருளாதார அபிவிருத்தி போஷிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி, உள்ளடக்கும் தன்மையினையும் பால்நிலைச் சமத்துவத்தினையும் மேலும் வலியுறுத்துகின்றது. இலங்கையின் பொருளாதார மீளல் எனும் தற்போதைய சூழமைவில், தனியார் துறை அமைப்புக்கள் உள்ளிட்ட அரசாங்க மற்றும் ஏனைய சூழியல் முறைமைச் செயற்படுனர்கள், மாகாண மற்றும் பிராந்திய வளர்ச்சியினை ஊக்குவிப்பதில் இன்றியமையாத வகிபாத்திரத்தினைக் கொண்டுள்ளனர். விஜயத்தின் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த EFCஇன் பணிப்பாளர் நாயகம் / பிரதம நிறைவேற்று அதிகாரி வஜிர எல்லபொல பின்வருமாறு குறிப்பிட்டார் : “தேசிய தொழில்வழங்குனர் அமைப்பு என்ற ரீதியில் EFC, தனியார் துறையினுள் ஆர்வத்தினை உருவாக்குவதில் மூலகர்த்தாவாக இருந்து வருவதுடன் இது வடக்கில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக வியாபாரத் தூதுக்குழுவின் விஜயத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. தொழில்முனைவு விருத்தி, தொழில் உருவாக்கம், பல்வகைமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை EFC மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு கொண்டுள்ள சில பிரதான விழுமியங்களாகும். இந்த விழுமியங்களுடன் நெருக்கமாக இயைபுறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இடையீடுகளின் குறிக்கோள்களும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் குவிக்கும் தேசியக் கொள்கை ஆகியவற்றுடனான இதன் ஒட்டுமொத்தப் பொருத்தப்பாடும் இந்தக் கருத்திட்டத்தில் எமது ஒத்துழைப்பிற்கான உந்துசக்தியாக இருந்தன” இந்த விஜயமானது நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பாதிப்புறு நிலையிலுள்ள நபர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மைகளின் முன்னேற்றத்தினை மேம்படுத்தும் (PAVE) சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கருத்திட்டத்தின் பகுதியாக அமுல்படுத்தப்பட்டது. உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதவுவதற்காக கௌரவமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்கிய ஐஎல்ஓவின் பதிற்செயற்பாடுகளின் மத்தியில் PAVE கருத்திட்டம் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் வாழும் மிகவும் பாதிப்புறு நிலையில் உள்ள மிகவும் ஓரங்கட்டப்பட்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும், உள்ளடக்கும் தன்மை மிக்க வளர்ச்சியினையும் தனியார் துறை முதலீட்டினையும் தொழில் முயற்சியாண்மையினையும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் உள்ளடக்கும் தன்மையினையும டிஜிட்டல்மயமாக்கத்தினையும் மேம்படுத்துவதன் மூலம் கௌரவமான வேலையினை உருவாக்குவதை கருத்திட்டம் முன்னுரிமைப்படுத்துகின்றது. ஐ.எல்.ஓ.,வின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் பின்வருமாறு குறிப்பிட்டார்: “வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளை அதிகரிப்பது வியாபாரங்களை அர்த்தமிக்கதாக மாத்திரம் ஆக்காது, மனித மூலதனத்தினை வலுப்படுத்தி, அனுகூலம் கிட்டாத சமுதாயங்களுக்கு உறுதியான வருமான மூலங்கள் மூலம் நன்மை பயக்கின்றது – அங்கவீனமான பாதிப்புறு நிலையில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்காக தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் சகலருக்கும் நன்மை பயத்தல் எனும் இதன் முன்மொழிவுகள், நெருக்கடி மீளளுக்கும் நல்லிணக்கத்துக்கும் உதவுகின்றன.” வட மாகாணத்தில் முதலீட்டுச் சூழல் மற்றும் தோற்றப்பாடு பற்றிய மேம்பட்ட புரிதலை அதிதிகளுக்கு வழங்கி, தனியார் துறைக்கும் உள்ளூரதிகார சபைகளுக்கும் இடையில் எதிர்கால ஒத்துழைப்பிற்கான அத்திவாரத்தினை இந்த விஜயம் இட்டுள்ளது. ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான முதலீட்டுத் திட்டத்தினை உருவாக்குவதை அடுத்த படிகள் சம்பந்தப்படுத்தும். ஒரே ஒரு முத்தரப்பு ஐ.நா. முகவரான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழில் நியமங்களை நிர்ணயித்து, உலகம் முழுவதும் வேலை செய்யும் சகல ஆண்கள் மற்றும் பெண்களுக்காக கௌரவமான வேலையினை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்கி, நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்காக அரசாங்கங்களையும் தொழில் வழங்குனர்களையும் தொழிலாளர் பிரதிநிதிகளையும் ஒன்றுசேர்க்கிறது. வட மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கான சாத்தியங்களை ஆராய்ந்த முன்னணித் தனியார் துறைக் கம்பனிகள் அடங்கிய தூதுக்குழு | Virakesari.lk
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம் 03 JUN, 2024 | 04:45 PM "தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். அதனை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து, சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது "உன்னையே திருமணம் செய்வேன்" என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்று , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை எடுத்து பெண் மீது ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார். பெண்ணை படுகொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம் | Virakesari.lk
-
Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!
Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு! புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏபிபி - சிவோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 353-383 இண்டியா கூட்டணி: 152-182 மற்றவை: 4-12 ரிபப்ளிக் டிவி - Matrize கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 353 - 368 இண்டியா கூட்டணி: 118 - 133 மற்றவை: 43 - 48 ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 362 - 392 இண்டியா கூட்டணி: 141 - 161 மற்றவை: 10 - 20 இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி - 371 இண்டியா கூட்டணி - 125 மற்றவை - 47 நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி - 342-378 இண்டியா கூட்டணி - 153-169 மற்றவை - 21-23 டைனிக் பாஸ்கர் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 281 - 350 இண்டியா கூட்டணி: 145 - 201 மற்றவை: 33 - 49 இண்டியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 371-401 இண்டியா கூட்டணி: 109-139 மற்றவை: 28-38 என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு: பாஜக கூட்டணி: 365 இண்டியா கூட்டணி: 142 மற்றவை: 36 தமிழகத்தில் திமுக கூட்டணி 35+ இடங்களிலும், பாஜக கூட்டணி குறைந்தது 1 இடத்திலும், அதிமுக வாஷ் அவுட் கூட ஆகலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம்: சிஎன்என் - நியூஸ் 18: திமுக கூட்டணி: 36 - 39 அதிமுக கூட்டணி: 0-2 பாஜக கூட்டணி 1-3 இண்டியா டுடே: திமுக கூட்டணி 26 -30 அதிமுக கூட்டணி 0 -2 பாஜக கூட்டணி 1 - 3 ஜன் கி பாத்: திமுக கூட்டணி 34 - 38 அதிமுக கூட்டணி - 1 பாஜக 5+ ஏபிபி சி வோட்டர்: திமுக கூட்டணி 37 - 39 அதிமுக கூட்டணி - 0 பாஜக கூட்டணி - 2 இந்தியா டுடே - ஆக்சிஸ்: திமுக கூட்டணி - 33+ பாஜக கூட்டணி 2 முதல் 4 7 கட்டங்களாக நடந்த தேர்தல்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது அன்றைய மாலைக்குள் தெரிந்துவிடும். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. https://www.hindutamil.in/news/india/1258069-exit-poll-2024-results-predictions-in-favour-on-nda-alliance.html
-
தேர்தல்ஆணைக்குழுவிற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் - கரிசனைக்குரிய விடயமல்ல - தேர்தல் ஆணையாளர்
31 MAY, 2024 | 03:52 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆணையாளர்களை சந்தித்துள்ளமை குறித்து பொதுமக்கள் கவலையடைய தேவையில்லை என தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுயாதீன ஆணைக்குழுவின் உயர் அதிகாரியை அமெரிக்க தூதுவர் சந்திப்பது குறித்து பொதுமக்கள் கவலையடையதேவையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது இரகசிய விஜயமாகயிருந்தால் அமெரிக்க தூதுவர் தான் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்துகொண்டிருக்கமாட்டார் என சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் செப்டம்பர் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தூதுவர் கேட்டறிந்தார்என தெரிவித்துள்ள சமன்ஸ்ரீரத்நாயக்க தேர்தல்கள் ஆணையகத்திற்கு மேலும் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான எங்களின் ஏற்பாடுகள் குறித்தும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கேட்டறிந்துள்ளனர் எனவும் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவரின் விஜயத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் எங்களை சந்திக்க வந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் உள்நோக்கம் கொண்ட பல தரப்பினர் வெளியிடும் பொய்களிற்கு பொதுமக்கள் பலியாககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல்ஆணைக்குழுவிற்கு அமெரிக்க தூதுவர் விஜயம் - கரிசனைக்குரிய விடயமல்ல - தேர்தல் ஆணையாளர் | Virakesari.lk
-
புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் - அலி சப்ரி
31 MAY, 2024 | 05:55 PM புலம்பெயர் தமிழர்கள் அரசியல்நிகழ்ச்சிநிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காசா நெருக்கடி குறித்து மேற்குலக நாடுகள் அலட்சியமாக உள்ளன என தெரிவித்துள்ள அவர் சர்வதேச ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஐக்கியநாடுகள் சபை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சட்டங்களில் தீவிர மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் மோதல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டு;ம் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அலிசப்ரி 1965 ம்ஆண்டின் அறிவிப்பில் எல்லைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதமைக்கு ஏற்ப இருநாடுகளும் காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் 143 நாடுகள் வாக்களித்துள்ளன என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும்இடையில் சகாவாழ்வை வலியுறுத்தியுள்ளதுடன் அடுத்த ஐந்து வருடங்களிற்குள் பாலஸ்தீன அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளார். இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குதனத்துடன் தொடரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகள் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பிரஜைகளின் மனித உரிமையை மேம்படுத்துவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ள 6700 பேரின் வேதனையை ஏற்றுக்கொண்டுள்ள அவர் இலங்கையில் நல்லிணக்கத்தி;ற்கு ஏற்ற பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்;ச்சி நிரலை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அலிசப்ரி நாட்டின் வடகிழக்கிற்கான அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்தியின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் - அலி சப்ரி | Virakesari.lk
-
கடதாசி கரண்டியால் தடுமாறும் தமிழர்
ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்க வேண்டும். அதற்காக மாற்று ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. கடதாசியில் செய்யப்பட்ட ‘ஸ்டோ‘,‘ ‘கடதாசி மட்டை கரண்டி’, ‘கடதாசி கப்’, ‘கடதாசி பிளேட்’ இவ்வாறு பல வடிவங்களில் பொருட்கள் சந்தைகளில் புழக்கத்தில் உள்ளன. யோகட் வாங்கும் போது, பெரும்பாலான கடைகளில் மட்டை கடதாசி கரண்டியே வழங்கப்படுகின்றது. சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தூங்கிவீசிவிட்டு, விரைவாக உக்கும் மண்ணுக்கு உரம்கொடுக்கும் இந்த கடதாசி மட்டை கரண்டியின் பயன்பாடு வரவேற்கத்தக்கது. எனினும், அக்கடதாசி மட்டை கரண்டியில் குழி இருக்காது, வாங்குவோர்தான் இரண்டுபுறங்களும் மடித்து, குழியைப்போல செய்துக்கொள்ளவேண்டும். இந்த விடயம் தெரியாத பலரும், கடதாசி கரண்டியை மடிக்காமல், யோகட்டை அள்ளி, ஆடைகளிலும் கீழேயும் கொட்டிக்கொள்கின்றனர். கடைக்காரர்களும் அதனை விளங்கப்படுத்துவது இல்லை. எனினும், தமிழ் தெரியாதவர்களுக்கு அதுவும் ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இவ்விடத்தில் மடிக்கவும் என, சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டுமொழிகளில் மட்டுமே எழுதப்பட்டு உள்ளன. வழுவழுப்பாக இருக்கும் யோகட்டை, வழுவழுப்பான கடதாசி மட்டை கரண்டியில் அள்ளும்போது, வழுக்கி கீழே கொட்டி விடுகின்றது. இந்த செய்தியை வாசிக்கும் போது, என்னடா, பொதுவான அறிவுக்கூட வேண்டாமா? மடித்து தின்றால் என்ன? என பலரும் கேட்கலாம். அப்படியாயின், கடதாசி மட்டை கரண்டியில் எந்தவொரு மொழியிலும் எழுதாமல், குறியீட்டை மட்டும் அச்சடித்து இருக்கலாம். ஏன்? இரண்டு மொழிகளில் மட்டும் எழுதிவிட்டு, தமிழில் எழுதாமல் விட்டனர். சிறுசிறு விடயங்களிலும் உரிமை இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துவதுடன், இலங்கையின் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படை மனித உரிமை 'மொழி உரிமை' ஆகும். எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது' என்று உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. சிங்களம் மற்றும் தமிழ்மொழி இலங்கையின் அரசகரும மொழிகளாகும். ஆங்கில மொழி இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Online || கடதாசி கரண்டியால் தடுமாறும் தமிழர்
-
பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
30 MAY, 2024 | 11:01 AM பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது. 1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல். 2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல். 3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல். 4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல். 5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல். 6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல். 7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல். ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும். கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம். இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம். சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள், 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல். 2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல். சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும். பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல. 2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும். 3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல. 4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம். 5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது. 6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப்; பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம். பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் | Virakesari.lk
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் - சரத் வீரசேகர
30 MAY, 2024 | 12:39 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எதிரான ஜெனீவா வெளிக்கள விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் பதிலளிப்புக்கள் திருப்திகரமாக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர, இது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜெனீவாவில் 46/1 பிரேரணைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிக்கள பொறிமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளே குறித்த வெளிக்கள பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் உலக நாடுகளிடம் கலந்தாலோசித்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றால் அவர்களை வெளிநாடுகளில் கைது செய்யக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. அது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்துள்ளார். தூதுவருக்குரிய நடவடிக்கைகக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அவர் தலையிடுகின்றமை தொடர்பில் நான் பகிரங்கமாக விமர்கின்றமையால் பொய்யான காரணிகளை முன்வைத்து எனக்கு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக, அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பினை வெளியிடுகின்றன. அமெரிக்காவின் காங்ரஸ் கட்சி இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் குழு மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவையே இதற்கான அழுத்தத்தினை பிரயோகித்துள்ளன. இவை எல்.டி.டி.யின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்ரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரரணையை தயாரித்து வருகிறது. இது மிகவும் பாரதூரமானதாகும். இந்த 3 அமைப்புக்களுக்கும் இலங்கைக்குள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் - சரத் வீரசேகர | Virakesari.lk
-
ரஸ்யாவுக்காக போரிடும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் - மேற்குலக நாடு கவலை
30 MAY, 2024 | 02:51 PM உக்ரைனுடன் மீதான ரஸ்யாவின் போரில் இலங்கையின் முன்னாள் இராணுவவீரர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுவது குறித்து மேற்குலகின் முன்னணி நாடொன்று கவலை தெரிவித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மேற்குலகம் வெளியிட்ட கரிசனையை தொடர்ந்தே இலங்கை அரசாங்கம் கூலிப்படையினராக போர்புரியும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்தே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ரஸ்ய உக்ரைன் போர்முனையில் போரிடும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தவர்களின்குடும்பங்கள் தங்களிடம் விபரங்களை கோரியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஸ்யாவுக்காக போரிடும் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் - மேற்குலக நாடு கவலை | Virakesari.lk
-
யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் : கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்
யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் ! 30 MAY, 2024 | 05:28 PM யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஆராயப்பட்டது. இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஆகியோரிடம் அது குறித்து விளக்கம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தபின் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இதன்போது யாழ் வைத்தியசாலை அசம்பாவிதங்கள் குறித்து கருத்துக்கூறிய பணிப்பாளர் சத்தியமூர்த்தி - வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5000 அதிகமானவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு அவசர உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு. அதுமட்டுமல்லாது இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகைதருவதால் உயிர் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை. அந்த இளக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாம ஒருசிலர் பயன்படுத்துவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அதே நேரம் இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைறையை கொண்டுவரவும் முடியாது. அந்தவகையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு அதன் மகிமைகள் குறித்து இளைஞர்கள் அதிக கரிசனை எடுப்பதனூடாகவே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தலாம். இதற்கு அனைவரது குறிப்பாக இளைஞர்களது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கூறியிருந்தார். அத்துடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான பிரிவுகளில் சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பில் பொலிசாரின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அமைச்சர் பொதுமக்களும் வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் அக்கறை கொள்வது அவசியம். இதேநேரம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன்மூலம் இனிவருங் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவகையில் நடவடிக்கை அமைவதும் அவசியம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தல் ! | Virakesari.lk
-
ரஷ்யாவுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் - தாரக பாலசூரிய
30 MAY, 2024 | 06:17 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா ஊடாக செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். ரஷ்ய யுத்தக்களத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள 37 இலங்கையர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.455 இலங்கையர்களில் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். வெளிவிவகாரத்துறை அமைச்சின் காரியாலயத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விசிட் விசா முறைமையின் ஊடாக ரஷ்யாவுக்கு சென்ற 455 இலங்கையர்கள் துரதிஷ்டவசமாக தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து இவர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்கள்.இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.கொழும்பில் உள்ள ரஷ்ய தூதகரத்துடனும்,மோஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்துடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரஷ்யாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பல பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அத்துடன் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் பொய்யானவை.உதயங்க வீரதுங்க தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. விசிட் விசாவில் ரஷ்யாவுக்கு சென்றவர்கள் தாம் யுத்தக்களத்தில் பணிக்கமர்த்தப்படுவதை அறியவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.இரண்டாம் தர சேவைகளுக்காக சென்றதாகவும் குறிப்பிடுகிறார்கள்.போலியான வாக்குறுதிகளினால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.மனித கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தி;ன் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய யுத்த களத்துக்கு சென்றவர்களில் 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்.37 பேர் காயங்களுக்குள்ளாக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகிறார்கள்.உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இலங்கையர்கள் ரஷ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள விவகாரத்துக்கு உடன் தீர்வு காண்பதற்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்நிலைமை ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். அத்துடன் இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முறையான காரணிகள் இல்லாமல் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் ஈடுபடுவதற்காக தாம் ரஷ்யாவுக்கு செல்லவில்லை என்று அங்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஆகவே இவர்களை யுத்தக்களத்துக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தவுள்ளோம். இலங்கையின் விசேட குழுவினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர். காயமடைந்துள்ள 37 இலங்கையளர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலவந்தமான முறையில் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் மற்றும் இலங்கைக்கு மீண்டும் வருகை தர விரும்பும் தரப்பினரை நாட்டுக்கு அழைத்து வர ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என்றார். ரஷ்யாவுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் - தாரக பாலசூரிய | Virakesari.lk
-
2009 ஆம் ஆண்டு அழிவுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் இன்றியமையாதது - கெலம் மக்ரே
30 MAY, 2024 | 06:34 PM (நா.தனுஜா) இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என 'நோ ஃபையர் ஸோன்' ஆவணப்படத்தின் இயங்குநர் கெலம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படம் 11 வருடங்களுக்கு முன்னர் 'சனல் 4' என்ற தொலைக்காட்சி சேவையில் வெளியாகி பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு கெலம் மக்ரே வெளியிட்டுள்ள நினைவுச்செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்களின் பின்னர், அதனை நாம் மேமாதம் 18 ஆம் திகதி நினைவுகூருகின்றோம். இருப்பினும் தமிழ் மக்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்கின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் அதனால் ஏற்பட்ட தாக்கத்துடனேயே தொடர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான உரிமை இலங்கை அரசினால் மறுக்கப்படுகின்றது. அதேபோன்று இன்றளவிலேயே தமிழர் தாயகப்பகுதிகள் பாதுகாப்புத்தரப்பினரின் வலுவான கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது. எனவே முன்னெப்போதையும்விட இப்போது உண்மை மற்றும் நீதி என்பன உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும். இதேபோன்ற சம்பவங்களே இன்று காஸாவில் இடம்பெறுகின்றன. காஸாவில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சகல மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் மிகமோசமான மீறல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் அடைந்திருக்கும் தோல்வி, தற்போது காஸாவில் இடம்பெற்றுவரும் அதனையொத்த மீறல்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. மனித உரிமைககள் மற்றும் நீதிக்கு மதிப்பளிக்கும் சகலரும் 'இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது' என்பதையே வலியுறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு அழிவுகள் மீள்நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் இன்றியமையாதது - கெலம் மக்ரே | Virakesari.lk
-
பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன்
29 MAY, 2024 | 12:40 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இடம்பெற்றுவரும் முன்னெடுப்புக்களை சுமந்திரன் குழப்பியடிக்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெறவுள்ளமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால், இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும். சிவில் சமூகத்தினர், தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடனும், பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது இந்த விவகாரத்தைப் பொது வெளியில் கொண்டு சென்று கருத்துப் பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டுக்குரியதாகக் கொண்டு வந்து நிறுத்துவது திசை திருப்புவதாகவே அமையும். எங்களுடைய இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக யாராவது ஏதாவது சொல்ல வேண்டுமாக இருந்தால் எப்பவும் எதனையும் சொல்லட்டும். அதற்குரிய பதில்களை நாங்கள் கூறுவோம். அதாவது பொது வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள் அல்லது அப்படி, இப்படி என்று ஏதாவது காரணங்களைச் சொன்னால் அதற்குரிய பதில்களை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்துப் பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்குத் தருகின்றபோது அதற்குப் பதிலைக் கொடுப்பது எங்களுடைய கடமை. அதனை விடுத்து இந்த விடயத்தைப் பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதைப் பெரிதாக்கவும் வேறுவிதமாக இதைத் திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும். சுமந்திரன் தமிழ்த் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ்த் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்குப் பயமில்லை, நான் அதைச் சொல்லுவேன், இதைச் சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும். பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லை. அவரைப் பொறுத்தவரையில் ஏதோ தெற்கில் இருக்கும் ஒரு வேட்பாளருக்கு அது யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அதிலிருந்து தமக்கு சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணம் இருக்கக்கூடும். பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன் | Virakesari.lk
-
யாழில். நாலரை இலட்சம் ரூபா மின் கட்டணத்தைச் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்!
யாழில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர் . சுமார் நான்கு ஆண்டுகாலமாக முகாமிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாத நிலையில் , நிலவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை முகாமை விட்டு வெளியேறியுள்ளனர் . வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் , அது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது; “ இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தங்கியிருந்தனர் . அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும்" என்றார். யாழில். நாலரை இலட்சம் ரூபா மின் கட்டணத்தைச் செலுத்தாது முகாமை விட்டு சென்ற இராணுவத்தினர்! | Virakesari.lk
-
பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு!
29 MAY, 2024 | 03:43 PM பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றினை நடத்திச் செல்லும் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். சுமார் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் இலங்கையின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், இவர் எல்ல பிரதேசத்திற்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் பஸ்ஸின் மூலம் எல்ல பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த இருவர் இவரது பயணப் பொதியைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது பயணப் பொதி திருடப்பட்டதை அறிந்துகொண்ட இவர், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இவரது பயணப் பொதியினுள் விமான பயணச்சீட்டு,கமரா , மடிக்கணினி மற்றும் 2,000 டொலர் பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000 டொலர் பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு! | Virakesari.lk
-
முல்லைத்தீவு - கேப்பாபிலவில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது
29 MAY, 2024 | 04:21 PM முல்லைத்தீவில் சாப்பாட்டுக்கடை உரிமையாளரால் பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்திவரும் நபர் ஒருவரால் 14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சிறுமியின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தினை அவதானித்த பெற்றோர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதனைக்குட்படுத்தியதில் குறித்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் குறித்த சிறுமியின் நிலைக்கு காரணமான நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு கேப்பாபிலவில் உணவுக்கடை நடாத்தி வரும் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு - கேப்பாபிலவில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது | Virakesari.lk
-
26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
29 MAY, 2024 | 05:18 PM மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து 27,274 சுற்றுலாப் பயணிகளும் மாலைத்தீவிலிருந்து 7,620 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 6,938 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,935 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை | Virakesari.lk
-
சீமான் சவாலுக்கு அண்ணாமலை பதில்..!’ - தொடரும் நா.த.க - பா.ஜ.க வார்த்தைப் போர்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் ``தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் `சீமான் எப்போது பார்த்தால் `தனித்து போட்டி, தனித்து போட்டி’ என பொங்குகிறார். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ், கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். நான்கு பொதுத் தேர்தலை சந்தித்தபோதும் இது அவருக்கு புரியவில்லை” என சாடினர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த பா.ஜ.க-வின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ``திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்திருக்கிறோம், கூட்டணிக்கு 21 இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு 19 இடங்களில் பா.ஜ.க நின்றது. கூடுதலாக 4 இடங்களில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அண்ணாமலை தாமரை சின்னத்தில் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் 23 தொகுதிகளில் நாங்கள் பெறும் வாக்குகளுக்கு பக்கத்தில் நாம் தமிழர் கட்சி வரட்டும், குறைந்தபட்சம் அந்தந்த தொகுதிகளில் எங்களின் வாக்குகளில் மைனஸ் 50 விழுக்காடு வாக்கையாவது சீமான் பெறட்டுமே, பார்ப்போம்” என்றவர். தொடர்ந்து ``சீமான் கட்சி நடத்துகிறார் நன்றாக இருக்கட்டும். அவர் கட்சியை கலையுங்கள் என நான் சொல்லவில்லை. அவர்மீது மரியாதை இருக்கிறது. தமிழகத்தில் சீமானின் குரல் முக்கியமானது. எனவே இந்த விதண்டா வாதத்துக்கு நான் வரவில்லை. தேவையில்லாமல் அவர் ஏன் இந்த போட்டிக்கு வருகிறார் எனத் தெரியவில்லை” என முடித்துவைத்தார். எனினும் இந்த மோதல் சமூக வலைதளங்களில் தொண்டர்கள் இடையே தொடர்கிறது.! https://www.vikatan.com/government-and-politics/governance/annamalai-says-i-respect-seeman-his-voice-is-important
-
மீனாட்சிபுரத்தின் கடைசி ஜீவனும் மறைவு - ஒரே ஒரு நபர் வாழ்ந்த வினோத கிராமம்!
ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து போனது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, ஊரை காலி செய்து வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர். கடைசியாக ஒரே ஒரு மனிதருக்காக மீனாட்சிபுரம் சுவாசித்துக் கொண்டிருந்தது. அவர் 75 வயதான கந்தசாமி. முதியவர் கந்தசாமி மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வந்தார். ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஆவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார். இதனால் அந்த ஊரின் கடைசி சுவாசமும் காற்றில் கரைந்து விட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக முதியவர் கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து முதியவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதி சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறப்பு, இந்த ஊரை பூர்விகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். Advertisement https://www.hindutamil.in/news/life-style/1255899-the-last-life-of-meenakshipuram-also-disappeared.html
-
பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்!
பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிமீது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த வழக்கில், அவரின் சகோதரன் மற்றும் உறவினர் கொல்லப்பட்டதையடுத்து, தற்போது அவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் 5Comments Share பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியின் பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது பாலியல் வன்கொடுமைப் புகாரளித்திருந்த 20 வயது பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முன்னதாக, கடந்த 2019-ல் பாஜக பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது சாகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சிறுமி (அப்போது 15 வயது) பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தனர். இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியலின பெண்ணின் 18 வயது சகோதரனை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பின்னர் அவரின் தாயாரும் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, ஒன்பது பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இப்படியிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியான அவரின் உறவினர் ராஜேந்திர அஹிர்வாருக்கு, கடந்த சனிக்கிழமை (மே 25) ஒருவர் போன் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அதன்படி சென்றவ ராஜேந்திர அஹிர்வாரிடம், சாட்சி சொல்லக் கூடாது என்றும், சமரசமாக செல்ல வேண்டும் என்றும் ஒரு கும்பல் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆனால், அவர் மறுக்கவே அங்கேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். பிறகு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். க்ரைம் - கொலை அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் ஆஷிக் குரேஷி, பப்லு பெனா, இஸ்ரேல் பெனா, ஃபஹீம் கான், தந்து குரேஷி ஆகிய ஐவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர். இந்த நிலையில், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வீட்டுக் கொண்டுவந்துக்கொண்டிருந்த பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், லோகேஷ் சின்ஹா, `பெண்ணின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். இப்போது, இறந்தவரை ஏற்றிவந்த ஆம்புலன்ஸிலிருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்' என்று கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மீது கேள்வியெழுப்பியிருக்கும் காங்கிரஸ், `ஒரே வருடத்தில் இரண்டு கொலைகளும், பா.ஜ.க பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண்ணின் மர்மமான மரணமும் நிகழ்ந்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே இந்த செய்தி உங்களிடம் வந்ததா... உங்களின் ஜங்கிள் ராஜ்ஜியத்தில் சட்டம் வெளிப்படையாக மீறப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் சமரசமாக செல்லவில்லையென்றால் உங்கள் கட்சியினர் அவர்களைக் கொல்கிறார்கள். இந்தியாவின் மகள்களுக்கு நாட்டை பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டீர்கள். எப்போதும் போல இந்த முறையும் நீங்கள் மிருகங்களுடன்தான் நிற்பீர்கள். இதை நாடு நன்கு அறிந்ததுதான்' என விமர்சித்து, கடந்த ஆண்டு தன் சகோதரன் கொல்லப்பட்டபோது பட்டியலின பெண் கதறி அழும் வீடியோவை X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதோடு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ``மத்தியப் பிரதேசத்தில் தலித் சகோதரிக்கு நடந்த இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. மல்யுத்த வீராங்கனைகளாக இருந்தாலும் சரி, ஹத்ராஸ்-உன்னாவ் சம்பவம் மற்றும் இந்த கொடூர சம்பவம் என பாதிக்கப்பட்ட பெண்களாக இருந்தாலும் சரி குற்றம்சாட்டப்பட்டவர்களை மோடியும், அவரது அரசும் பாதுகாத்திருக்கிறது. சித்ரவதை செய்யப்பட்ட சகோதரிகள் நீதி கேட்டால், அவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டுப் பெண்கள் இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை" என்று ட்வீட் செய்திருக்கிறார். இன்னொருபக்கம், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! | A scheduled caste woman Mysteriously died after she filed a rape case against bjp member - Vikatan
-
யாழ். மாவட்டத்தில் இஞ்சி விலை உச்சம்!
இஞ்சி விலை உச்சம்! (ஆதவன்) யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் இஞ்சியின் விலை உச்ச நிலையில் காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் தற்போது ஒரு கிலோ இஞ்சி 4 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு தொடர் விலை அதிகரிப்புக்கு, இஞ்சி வரத்துக் குறைந்தமையே காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கடும் விலை அதிகரிப்புக் காரணமாக வழமையாக இஞ்சி விற்பனையில் ஈடுபடும் பல வர்த்தக நிலையங்களில் தற்போது இஞ்சி விற்பனையைக் காண முடியவில்லை. சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ இஞ்சி 5 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (ச) இஞ்சி விலை உச்சம்! (newuthayan.com)