படம்: சபாஷ் மீனா(1958)
வரிகள்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோடி, பி.சுசீலா
காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் பிரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ..