பெண்: விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, கண்ணோடு கொஞ்சும் கலையழகே, இசையமுதே, இசையமுதே, விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..
ஆண்: அலைபாயும், கடலோரம், இளமான்கள் போலே, அலைபாயும், கடலோரம், இளமான்கள் போலே, விளையாடி..
பெண்: இசை பாடி..
இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம்..
ஆண்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே,
பெண்: கண்ணோடு கொஞ்சும், கலையழகே, இசையமுதே, இசையமுதே..
இருவரும்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..
ஆண்: தேடாத செல்வசுகம், தானாக, வந்ததுபோல், ஓடோடி வந்த சொர்க்க போகமே, ஓடோடி வந்த சொர்க்க போகமே..
பெண்: காணாத இன்பநிலை, கண்டாடும் நெஞ்சினிலே, ஆனந்த போதையூட்டும், போகமே, வாழ்விலே, விளையாடி..
ஆண்: இசை பாடி..
இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம், விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..
ஆண்: சங்கீத தென்றலிலே, சதிராடும் பூங்கொடியே, சந்தோஷம் காண, உள்ளம் நாடுதே, சந்தோஷம் காண, உள்ளம் நாடுதே..
பெண்: மங்காத தங்கமிது, மாறாத வைரமிது, ஒன்றாகி, இன்ப கீதம், பாடுவேன் வாழ்விலே, விளையாடி..
ஆண்: இசை பாடி..
இருவரும்: விழியாலே, உறவாடி, இன்பம் காணலாம்..
பெண்: ஆஆஆ.., ஆ.., ஆஆஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆ..,
இருவரும்: விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே, கண்ணோடு கொஞ்சும், கலையழகே, இசையமுதே, இசையமுதே, விண்ணோடும், முகிலோடும், விளையாடும், வெண்ணிலவே..