திரைப்படம்: மஞ்சள் மகிமை(1959)
இசை: மாஸ்டர் வேணு;
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி;
பாடியவர்: பி. சுசீலா, கண்டசாலா;
சுசீலா: humming
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
கண்டசாலா : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
சுசீலா: இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே
மறைந்தேன் இந்நாளே
கண்டசாலா:உறவோடு ஓடியாடி உயர் காதலாலே
உவந்தே மென்மேலே
சுசீலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
கண்டசாலா: ஆ...
சுசீலா: ஓ...
கண்டசாலா: ஆ...
சுசீலா: ஓ...
கண்டசாலா: இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
சுசீலா: கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே
களிப்போடு சென்றே
கண்டசாலா: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
இருவரும்: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே
கண்டசாலா:ஆ.....
சுசீலா: ஓ....