Everything posted by alvayan
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
ர இதேசனம் தமன்னா வந்திருந்தாலும் தமன்னா கொடி பிடித்திருக்கும் ...பிரியாணிக்குண்டன் இர்பான் வந்திருந்தாலும் ..கொடிபிடிக்கும்....இதுக்கென்றே அங்கு ஒரு கூட்டமிருக்கு.. .. அவர் வேறை... அனுர வேறையில்லையே..
-
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை
இரண்டு நாள்தானே..நல்ல கோட்டல் அறையில் தங்கவைப்பினம்...
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை; அமைச்சரவைப் பேச்சாளர் மீண்டும் அறிவிப்பு
வாகனம் ,சம்பளத்துக்கு ..எம்.பி ,அமைச்சர்மார் ..மகிந்தவிடம் தாவினாலும் அதிசயமில்லை
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
நகர கிராம சபைகளைப்..பிடியுங்கோ...அனுர ஆக வல்வெட்டித்துறை மாநகரசபையும்,சாவகச்சேரி நகர சபையையும்தான் பிடிப்பார்...அப்புறம் நாட்டைப் பிடிக்க நாம் உதவி செய்யிறம் என்றிருப்பார்..😅
-
சுதந்திரம்
சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அருமைதம்பி…இங்கு தலை குனிந்தது..தமிழினம்தான்.. உன்னுடைய யூடுயூபின்பெயரோ ஈழம் ஸ் ரீட் வு லக் நிச்சயம் உனக்கு சுதந்திரம் விளையாடு… வார்த்தைக்கு வார்த்தை அனுர புகழ்பாடும் தம்பி.. மகிந்தவின் வீடு கிழப்பலுக்கு வார்த்தையாலம்தான் செய்வார் மகிந்தவுக்கு வடிவாக கடிதம் எழுத மாட்டார் ஏன் தெரியுமா தம்பி…. தென்பகுதி அரசியல்வேறு.. வடபகுதி அரசியல் வேறு… வார்த்தை ஜாலத்தால் வெட்டிவிழுத்தலாம் வடபகுதியை. ஏனெனில் எழுத்து மூலத்தில் எதையும் நீங்கள் கேட்கமாட்டியள் தலைவர்கள் முதல் தம்பிவரை பூம் பூம் மாடுகள்…இதுதான் அவருடைய சுதந்திரம் படம் கிளியர் இல்லை உடனடியாக போனுக்கு காசனுப்பு அண்ணன் உயிருக்கு பயந்தோ உழைப்புக்காகவோ வெளிநாட்டில் அசைலம் அடிக்க உதவினதும் ஈழப்போராட்டம்தான் தம்பி அந்த நன்றிக் கடனாவது உனக்கிருந்தால் உப்பிடியெல்லாம் தலைப்புப்போட்டு உசுப்பேத்த மாட்டாய் தம்பி உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது தம்பி.. அனுபவி ராசா அனுபவி.. பிரியாணிக்கடை பரோட்டக்கடை போயே மில்லியனில் உழைப்பவன் காசு வாங்கிவிட்டு கடை திறக்க வந்தவரை… கோயில் கட்டி கும்பிடாத குறையாக முன்னாலும் பின்னாலும் வழிந்து திரிந்தியளே அப்பவே அவன் நினைத்திருப்பான் இவங்களா ஈழத்துக்கு போராடின சனம்.. இந்த ஜன்மங்களா அவ்வளவுக்கு வழிகின்றீர்களே உங்கடை சுதந்திரதாகம் ஓசிப் பிரியாணிக்கும் ஓடி ஒடி படப்பிடிப்புக்கும்தான் சரி அவன் முன்னொரு தடவை சொன்னது சரியென நினைத்திருப்பான்... போதும்..போதும் போன் கிடைத்தால் போறடமெல்லாம் போகஸ் பண்ணி படமெடுத்து போடுவது உங்கள் சுதந்திரம் தம்பி இப்பவும் போரில் தொலைத்தவர்களை தேடும் உறவுகளை யோசியுங்கள் நிலமிழந்து அலைபவரை பாருங்கள் உறவினரை இழந்த அனாதைகளை யோசியுங்கள் அப்ப தெரியும் உங்கள் சுதந்திரத்தின் வலி அனுபவியுங்கள்...உங்கள் சுதந்திர தினத்தை
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
அதுவம் நடந்திருக்கும் ..போட்டோ போடமாட்டினம்தானே....பிறகு புலத்துக்குப் போய் மனிசிமாரிட்டை உதையெல்லோ வாங்கவேணும்
-
கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் ; கடற்தொழில் அமைச்சர்
இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு என்பதை இந்த கடற்தொழில் அமைச்சரிடம் சொல்லுங்கப்பா....
-
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்
யூடியூப் காரரை வெருட்டினதுபோல...காணிக்காரரும் மாட்டிவிட்டார்போலா...ஆளுனரின் தலைமையில் ...விரைவில் அபே லங்கா...☺️
-
அமெரிக்கா வரி கட்டுப்பாடுகளை விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும்? - ரணில் கேள்வி
இன்னமும்....அந்த கதிரை ஆசை போகவில்லை..
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
கதிராமர்....பிள்ளையானோ...
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
இந்த வரிசையில்...தவகர முனசிங்கே...சங்கவி பொடி மெனிக்கே...தனுச அப்புகாமி... இப்படி பல் நீண்டு வரும்.....
-
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
அவர்கள் நம் இனத்தை விழுங்கப் போகின்றார்கள்....இப்போ ..அமைதியாக சில விடையங்களை ..செய் கின்றனர்...அதி நீதியின் காவலன் என சகல இனத்தாலும் மதிக்கப்பட்ட நீங்களே பலியாகிவிட்டீர்கள்...உங்கள் பாதுகாவலன் குடும்பத்தையே பொறுப்பெடுத்து ஆளாக்கினீர்கள் ..அந்தப் புண்ணியம் கூட ..கை கொடுக்கவில்லை அய்யா ...எம் இன தலைவிதி அது
-
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு Saturday, February 01, 2025 செய்திகள் புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளேன். திருகோணமலையில் 200- 2010 இல் மேல் நீதமன்ற ஆணையாளராகவும், மீண்டும் 2012 - 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளேன். கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளேன். நான் பிறந்த மண் யாழ்ப்பாணத்தில் 2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளேன். மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளேன். எனது முதல் நியமனம் வவுனியா நீதவான் நீதிமன்றம். வவுனியாவில் மேல் நீதிமன்றம் அமைப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட நீதிச்சேவை ஆணைக்குழுவால் 40 நாட்கள் நியமிக்கபட்டு, அதன் பின் மன்னார் மாவட்ட நிரந்த நீதவானாக சென்று 1997-2000 ஆண்டு வரை 3 ஆண்டுகள் கடமையாற்றி மீண்டும் வவுனியாவிற்கு நீதவானாக வந்தேன். தீர்ப்புக்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது என்னுடைய கடமை. இருப்பினும் வருகின்ற 05.02.2025 இல் எனது 28 ஆண்டுகள் நீதிச்சேவை சேவைகள் முடிவுறுத்தப்படவுள்ளது. முதல் நிலை நீதிமன்ற நீதிபதியாக எனது நீதிச் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், மேல் நீதிமன்ற நீதிபதிகள் 90 பேர் இருக்கிறார்கள். அதில் முதலாவது இலக்கத்தில் நான் இருக்கின்றேன். 12.12.2024 இல் உயர் நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து தடைகளும் விலக்கப்பட்டன. 12.01.2025 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து 4 நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திற்காக பதிவி உயர்தப்பட்டார்கள். மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன. 12.01.2025 இல் இருந்து அதற்கு தகமையானவன் நான். நான் தகமையாலும், இலக்கம் 1 இன்றில் இருப்பதாலும் நான் தகுதியானவன். எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது. வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை. அனைத்தும் நல்லதிற்கே என மனதை திருப்திப்படுத்தக் கூட முடியவில்லை. ஆனால் இன்று பெருவிழாவை வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கமைத்து வடக்கு - கிழக்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் இங்கு வருகை தந்ததையிட்டு உங்கள் நன்றி உணர்வை மதிக்கிறேன். நீங்கள் அருகில் நிற்கும் போது எனக்கு புத்துணர்வு வருகிறது. இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு உள்ளுணர்வாக கிளம்புகின்றது. இருப்பினும், சந்தோசமாக போவதற்கு நான் தயார். ஆனால் 2024 மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வழக்குகள், தடையுத்தரவுகள் காரணமாக பின்னுக்கு சென்று வீடு செல்வதற்கு 8 நாட்கள் இருக்கின்ற நிலையில், நமது தலைவர் சீனா புறப்பட்டார். ஞாயிறுக்கிழமை உயர் நீதிமன்ற சத்திய பிரமாணம் இடம்பெறுகிறது. 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை. 13 ஆம் திகதி திங்கள் போயா. 14 ஆம் திகதி செவ்வாய் பொங்கல். திங்கள் இரவு ஜனாதிபதி சீனா பயணம். வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து திரும்பி வந்தார். 18,19 விடுமுறை நாள். 19.01.2025 அன்று எனது இறுதி நாள். காலதாமதத்திற்கு நான் காரணமல்ல. காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது. காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் பல இடங்களில் பேசினேன். அந்த நீதி என் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. எதையும் ஏற்றும் கொள்ளும் மனபாவம் வர வேண்டும். எனக்கு என்னை பற்றி பெரிதாக கவலையில்லை. எனது இரு குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள், அவர்கள் வேதனைப்படுவது தான் கவலை. வீடு வேதனைப்படுகிறது. கண்முன்னே அனைத்தும் நடைபெறுவதை அனைவரும் பார்க்கிறார்கள். நீதி கேட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை. நீதிவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி தலைவணங்காத ஒரு தொழில். அதற்கு மேல் செல்ல வேண்டுமானால் தலைகளும் ஒரு கணம் வணங்கும். அவைகளால் தான் இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுவரை என்னுடன் ஒரு பாராளுன்ற உறுர்பினர்களோ, அமைச்சரோ கதைத்ததில்லை. இப்பொழுதும் அனைவரும் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கிறார்கள் இது தான் நிலமை. எனவே, இந்த நிகழ்வுக்கு வருகை தந்த நீதிபதிகள், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் எனது நன்றிகனை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார். - தீபன் - https://www.jaffnamuslim.com/2025/02/blog-post_43.html?m=1
-
மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்
மகிந்தவுக்கு வீடு வழங்க அன்று, அநுரகுமார ஏகமனதாக இணக்கம் வெளியிட்டார் - ரணில் Saturday, February 01, 2025 செய்திகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை மதிப்பீடு இலட்சங்களில் இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் அதனை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஜனாதிபதி அண்மைக்காலமாக தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். அதுமாத்திரமன்றி மகிந்த ராஜபக்ச தானாக வெளியேறாது போனால் தான் பலவந்தமாக வெளியேற்றப் போவதாகவும் அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனினும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் குறித்த இல்லத்தை மகிந்தவுக்கு வழங்குவதற்கான கலந்துரையாடலின் போது அநுரவும் பங்குபற்றியதாகவும், அவரது சம்மதத்துடனேயே குறித்த வீடு மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னர் அவருக்கு உத்தியோக பூர்வ இல்லமொன்றை வழங்குது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் நான், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தோம். அதன்போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரமே மகிந்தவுக்கு குறித்த உத்தியோகபூர்வ இல்லம் ஒதுக்கப்பட்டது என்றும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். TW
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
இந்த குத்தல்..கொட்டுதல் ..எல்லாவற்றையும் ஊரில் பனைவடலி மறைவில் நின்று பார்த்தவர்கள்...எனினும் பயமற்ற...வேகம் அப்போதிருந்தது... வேதனையான கருத்துத்தான் இது...எனினும் தாங்கமுடியாமல் எழுதுகின்றேன்..அந்த வீரம் எல்லாம் .எங்கே பறந்தது ..மறைந்தது....முடியவில்லை.... ஊரில் நின்ற காலத்தில்...சிறிய கால நேரம் கிடைத்தாலும் ..தம்பியுடன் போவது உங்கள் ஊருக்குத்தான்...அதில் ஒரு மனநிறைவை அடைந்து மகிழ்ந்தேன்....அம்மக்கள் அடக்கு முறைக்குள் ..வாழ்வதையும் உணர்ந்தேன்...மன்னிக்கவும்
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
அமெரிக்காவுக்கு குண்டு போடுகில் ...உங்கடை வீட்டை தவிர்த்தே போடுவார்கள்...☺️
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
இதனைவிட ..விகாரை கட்டப்பட்டால் .அந்த மத காட்டுபாடுகள் வரும் ..சுற்றிவர 300 அந்த இன குடும்பம் இருக்கவேண்டும்...இப்படி பல....கூத்தடிக்கிற அர்ச்சனவுக்கு இதுவெல்லாம் தெரியுமா..
-
அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஒழுங்கமைப்பாளர்களை வெளிப்படுத்துங்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
எந்த அரவணைப்பில் ஆறுதல் கிடைக்கிறது....தீர்மானியுங்கள்...- ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை சமர்ப்பித்தார் கஜேந்திரகுமார்
யாழ் வந்த அனுரவுடன் சும்மர் உங்களுடன் சேர்ந்து மாவையின் செத்தவீட்டிற்கு வாறன் என்று கேட்கிறார்..கஜே ..வேறுயாரும் (கட்சியும்) எந்தக் கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக் 20 அம்ம்ச கோரிக்கையை போட்டு அனுரவை அமுக்கி விட்டார்...அனுரவை காப்பாற்ற அர்ச்சுனா ..விகாரை உடைக்கவேண்டாம் ..காணிக்காசை கொடுத்தால் காணும் என்று ..கப்பலை கரைசேர்த்துவிட்டார்....நம்ம தலைவிதி...தமிழரால்தான் எழுதப்படுகிறது ..கடவுளால் அல்ல- பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை என்பது விஞ்ஞான பூர்வமானதல்ல - நூல்வெளியீட்டு விழாவில் ஹக்கீம் தெரிவிப்பு
அதாவது அல்லாவின் ஆணைபாடி அப்படி நடந்து விட்டால்...நான்தான் சனாதிபதி... நீங்கள் எல்லாம் பிரதி அமைச்சர்கள் ..என்பதை சொல்லாமல் சொல்கின்றார்...கேட்கிறவன் கேணையன் என்றால் ...எருமைகூட ஏரோப்பிளேண் ஓட்டுமாம்...- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
உதயன் மட்டுமில்லை...யாழ்ப்பாணத்திலை இருக்கிற ..சில்லறை மீடியா வரை....நல்ல மலையாள மாந்திரீகரை..வைத்து வசியம் செய்துபோட்டாங்கள்- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
2 மாதம் முன்னர் ..போட்டுவந்த பெடிய்யோ...பாசுப்போட்டொ எடுத்துவைக்கவில்லை....தூக்கடா பெட்டியை...புத்தர் கோபியாதையுங்கோ...எனக்குள் எழுந்த கற்பனை- சேனாதிராஜா அவர்களுக்கு ஆனந்தசங்கரி எழுதிய கடிதம்!
கடிதம் சரி..பிழை தெரியாது...இந்த நேரம் இந்தக் கடிதத்தை... சும்மா....தமாசுக்கு...விட்டெறிந்திருபினமோ.....விளக்குங்க விசுகர்- யோஷிதவிடமிருந்து 4 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன ; இனி ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே - பாதுகாப்பு செயலாளர்
6 துப்பாக்கிகள் ஒருவரிடம்...4 வாங்கியாச்சு..சரி...இந்த 6 துப்பாக்கியையும் பாவித்து .அவர் என்னசெய்தார்.. எத்தனைபேரை சுட்டார்...கொலைசெய்தார்...எத்தனைபேரை மிரட்டி காரியம் சாதித்தார்.. இதையல்லோ விசாரிக்கவேண்டும் ..அதை விட்டிட்டு..300 மில்லியன் மோசடிக்கு..2 நாள் கைது என்று..ஒருநாடகம் ...காவல்நிலையத்தில் இருந்து சிரித்தபடி வெளியேறும் விசாரணைக்கதி ..யோசித. ..அவரை வழியனுப்ப 10 அதிகாரிகள்... இது நடப்பது..புரட்சி சனாதிபதி அனுரவின் அரசில் - நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.