Everything posted by வாதவூரான்
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா
-
தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
என்ன வாடகைக்கு எடுக்கப்போறியள் போலை கிடக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒருமாதிரி அகஸ்தியனின் புண்ணியத்தில் கடைசிக்கு முதல் இடம்.நிறையக் கேள்வி மற்றதுநிறைய புது வீரர்கள் என்பதால் பையனைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன் ஈயடிச்சான் கொப்பியென்று வரக்கூடாதென்று. ஆனால் என்னே ஆச்சரியம் மாற்றியதில் 90 வீதமானவை தப்பாத்தான் வந்திருக்கு. அண்மைக்காலமாக ஐபிஎல் சுவாரசியம் குறைந்ததால் எந்தப்போட்டியும் பார்ப்பதில்லை. வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியை திறம்படநடாத்திய கிருபன் அண்ணாவுக்கும்நன்றிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சட்டுப்புட்டென்று ஆர் கடைசி எண்டு சொல்லுங்கோநிறைய வேலை இருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த முகத்துக்காகவே பஞ்சாப் வெல்லவேணும். எனக்கும் அகஷ்தியனுக்கும் தான் கடைசி இடத்துக்கான போட்டி
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
கொசான், Casration என்பதை ஆண்மைநீக்கம் என்பது சரியா ஏனென்றால் இது பெண்களுக்கும் பாவிக்கப்படுமாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் அரையிறுதிக்கு தெரிவுசெய்த எல்லா அணியும் வெளியாலை. உங்களைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன். செய்த மாற்றம் எல்லாமே பிழைச்சுப்போச்சு.நான் கடைசி இடத்துக்கு வரநிறையச் சந்தர்ப்பம் இருக்கு
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த... போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள்
-
தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
இரண்டாம் வருட மாணவனுக்கு பகிடிவதைநடக்க சந்தர்ப்பம் இல்லை. ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் போட்ட அணிகளில் இரண்டு ஏற்கனவே வெளியாலை. சன்ரைசேர்ஸ் எப்பிடியும் இண்டைக்கு வெளியாலை போகும் அடுத்தது கேகேஆர் அதுவும்நாளைக்கோ தெரியாது. எப்பிடியிருக்கு என் தெரிவு!
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை
இது இந்தநூற்றாண்டின் சிறந்த பகிடி. அணில் வடிவேலுவை விட சிறந்தநகைச்சுவையாளன்
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
அதெல்லாம் மூளாது. வேணுமெண்டால் கல்லாலை எறிந்து விளையாடுவினம்
-
அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )
இங்கே இங்கிலாந்திலும் இப்பிடித்தான். மருத்துவத்துக்கானநிதி ஒதுக்கீடு காணாது. அதைவிட மனிதாபிமானம் குறைந்த உலகில் வாழ்கிறோம்
-
தலைக்கவசத்துடன் நடமாடினால் இனி சிக்கல்
உந்த வெக்கைக்கை எப்படா கழட்டுவம் எண்டு தான் இருக்கும். அப்பிடிக் கழட்டாமல் இருக்கினம் எண்டால் ஏதோ குற்றச்செயல் செய்யப்போகினம் என்று தான் அர்த்தம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போற போக்கைப்பார்த்தால்நான் தான் கடைசி போலை ஏனென்றால் என்னுடைய தெரிவுகள் அப்பிடி
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இதே பதில் தான் வருமென்று தெரியும் சும்மா கேட்டுப்பாத்தன்😂. சுமந்திரன் சர்வதேச விசாரணை கோரினார் என்று கூறியதுநீங்கள் தான் அப்ப ஆதாரம்நீங்கள் தான் தர வேண்டும்
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
நான்நன்றாக வாசித்து விட்டுத்தான் கலந்து கொள்கிறேன். எனக்கு சிலவேளை ஞாபக்குறைபாடோ தெரியவில்லை. சுமந்திரன் இதற்கு முதல் சர்வதேச விசாரணை கோரிய ஆதாரத்தைத் தந்தால்நல்லாயிருக்கும்
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இது எப்பநடந்தது? எனக்கே தெரியாமல் எப்பவும் சொன்னனோ? 🤣
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
எத்தினை வயதிலிருந்து அங்கிள் வயது ஆரம்பமாகும்? ஏனென்றால் என்னை பத்து வயதிலிருந்தே சிலர் மாமா என்று கூப்பிடத் தொடங்கீட்டினம்
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
அப்பிடியெண்டுநீங்களா கற்பனை பண்ணுங்கோ. சுமந்திரன் எப்பவாவது சர்வதேச விசாரணை தேவை என்பதுபற்றிக் கதைச்சவரா?இப்ப தேர்தலில்நிறைய அடி விழப்போகுது என்பதால் கதைக்கிறார் அதைத்தான் சொன்னேன்
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தேர்தல் வருதல்லோ
-
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி
நீங்கள் ரணிலுடன் தேனிலவு கொண்டாடேக்கை விடுவித்திருந்தால் இப்பிடி புலம்பவேண்டி வந்திருக்காது. வலிவடக்கு பிரதேச சபை என் பிபிக்கு தான் போலை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது இலங்கை அணியைக் கொப்பி பண்ணின மாதிரி இருக்கே
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
நானும் இந்த பகிடிவதைக்குள் அகப்பட்டு பல பழிவாங்கல்கள் ஓரங்கட்டல்கள் (இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் ஒரு மூன்றாம் ஆண்டு மாணவன்) எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் (இது வரப்பிரகாஸுக்கு பிந்திய காலம்). எனக்கு பகிடி வதை செய்தவர்கள் எந்த வகையிலும் எனக்கு பிற்காலத்தில் உதவவில்லை (அதுக்குப்பிறகு என்னோடு கதைப்பது கூட இல்லை). பகிடிவதை செய்யும் போது தாங்கள் எங்களுடன்நெருங்கிப் பழகுவதற்காகவே இதைச்செய்வதாக சொன்னார்கள். ஒரேஒரு ஆறுதல் எங்கள் சக மாணவர்களும் மிகுதி மூன்றாம் வருட மாணவர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (இதில் தமிழ் சிங்கள வேறுபாடு என்று இல்லை). மட்டக்களப்பு மாணவர்கள் தான் கூட அனுபவித்தது தமிழ் மாணவர்களைப்பொறுத்தவரையில். வரப்பிரகாசுக்கு பின்னர் சிறிது குறைந்தகாலத்தில் அகப்பட்டதால் பல்கலைக்கழகத்திலும் சிறிது இறுக்கம் கூட (இது பொறியியல் பீடத்தில் மற்றப்பீடங்களில் சிறிது வித்தியாசமாக இருக்க்டலாம்)