Everything posted by குமாரசாமி
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்றைய ஐரோப்பிய அரசுகளின் கொள்கைதான் இவர்கள் முன்ணணி வகிக்க காரணம் என பத்திரிகைகளில் குற்றம் சாட்டுகின்றார்கள். நடுவில் இருப்பவர் சிறிலங்காவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. (🤣)
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நாம் இருவரும் ஒரே ராசியில் பிறந்தவர்கள் என நினைக்கின்றேன். ஏனென்றால் நானும் அதையே நினைத்தேன். என்னதொரு ஆச்சரியம்.அபூர்வம் 😂
-
நன்றி கெட்ட உலகமிது 😡
ஐரோப்பியர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆசிய ,ஆபிரிக்க வளங்கள் தேவைப்பட்டது. மத்திய கிழக்கு எண்ணை வளம் தேவைப்பட்டது. வட அமெரிக்கர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆபிரிக்க அடிமைகள் கப்பல் கப்பல்களாக தேவைப்பட்டார்கள்.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
நாம் தமிழர் அரசியலையும் ஐரோப்பிய இனவாத அரசியலையும் எப்படி ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஒப்பிடுகின்றார்கள் என விளங்கவில்லை. நாம் தமிழர் கொள்கையில் இந்தியாவின் ஏனைய மொழி வாரியான மாநிலங்களை போல் அந்தந்த மொழியாளர்களே அவர் தம் மாநிலத்தை ஆள வேண்டும் என்கின்றனர். உதாரணத்திற்கு கேரளா,கன்னடா,தெலுங்கா போல்..... மற்றும் படி நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டில் வசிக்கும் ஏனைய மாநிலத்தவர்களையோ அல்லது வேலை நிமித்தம் குடியிருப்பவர்களையோ வெளியேற சொல்லவில்லையே? அல்லது வெளி மாநிலத்தவர்களை வெளியேற்றுவோம் என்றும் சொல்லவில்லை. ஆனால் இன்றைய ஐரோப்பிய தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுக்கட்சியினரின் கொள்கை அதுவல்லவே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனதூரம் போகாது...🤣 அப்பிடியே 21....22....23 ல முட்டி மோதி நிக்கும். 😂
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
அமெரிக்கா இல்லை என்றால் பலஸ்தீன் பிரச்சனை எப்பவோ முடிந்திருக்கும் என்பது பல முஸ்லீம்களின் கருத்து.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
🤣 ச்...சா....ச்..சா இந்தா பார் சிங்கன் சிங்கிளாய் தேர் இழுத்து எங்கை கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கான் பார்....? 😜 உன்னால் முடியுமா தம்பி?
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இந்தா புட்டின் விசுவாசியான இவர் ஆட்சிக்கு வந்தால் பெரிய எடுப்புகள் எடுப்பார்,அதை செய்வார் இதை செய்வார் என்றார்கள்.நான் உட்பட.... ஆட்சிக்கு வந்தார்.ஆட்சி கதிரையில் அமர்ந்தார். வெளிநாட்டவருக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை.அவர்களுக்கு விசா வழங்குவதையும் நிறுத்த முடியவில்லை. அவர்களுக்கு சிற்றிசன் வழங்குவதையும் நிறுத்தவில்லை. அதிக பட்சம் இவர் நாட்டுக்கு தினசரி ஆயிரக்கணக்காக வரும் ஆபிரிக்க அகதிகளையும் நிறுத்த முடியவில்லை. இருந்தும் ஐரோப்பிய தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார். 🤣
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இவர்கள் வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தேர்தல் மூலம் முக்கிய பதவிகளுக்கு இவர்கள் வந்தாலும் அரசியல் சாசனங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா என தெரியாது. ஆனால் இனவாத கட்சிகளின் வெற்றி பழைய/முக்கிய கட்சிகள் தமது இன்றைய நடவடிக்கைகளை மாற்றியமைக்க சாத்தியங்கள் உண்டு. முக்கியமாக அகதிகள் வருகை, உக்ரேன் போர் நடவடிக்கைகள் , வெளிநாட்டவர்களின் சோசல் உதவி வாழ்க்கை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். அதுடன் இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இனவாத கட்சிகளின் வெற்றியை போல் வெளிநாட்டவர்களுக்கு சார்பான கட்சிகளும் வென்றுள்ளன.
-
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி கே. பழனிச்சாமி!
வளர தேவையில்லை விசுகர். அதை கடைப்பிடித்தாலே போதுமானது. ஏன் அதிக தூரம் போவான் எமது அடிப்படலை எமது ஊர்களுக்குள் என்ன நடக்கின்றது? புலம்பெயர் தேசத்திலும் சாதி பார்க்கப்படுகின்றது என்றால் அது துளிர் விட்டு வளர்கின்றது என்றுதானே அர்த்தம்....😂
-
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி கே. பழனிச்சாமி!
தமிழ்நாட்டை ஆளும் இன்றைய அன்றைய கட்சிகள் யாவும் மத சார்பும் சாதிவாதங்களும் நிறைந்தவையே. இன்றுவரை சாதி வேறுபாடுகளும் ஒழிக்கப்படவில்லை. மத சம்பிரதாயங்களும்,மதவாதங்களும் ஒழிக்கப்படவில்லை. இன்றைய கட்சிகளிலும் சாதிவாரியாகத்தானே தேர்தலில் நிறுத்தப்படுகின்றார்கள்.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
ஆயுதம் தாங்கிய விடுதலை போராட்டத்தையும் அதை நசுக்கும் அரச நடவடிக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றீர்கள்.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
நீங்கள் சொல்வது சரியானது என நான் நினைக்கின்றேன். ஆனாலும் பிரான்ஸ்சில் வாழும் வெளிநாட்டவர்கள் நாட்டின் சட்டங்களை கடைப்பிடித்து ஒழுங்காக வாழ்கின்றார்கள் என நம்புகின்றீர்களா? இனவாத கட்சிகள் உருவாக வெளிநாட்டவர்கள் செய்யும் தவறுகளும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
அதற்காக இஸ்ரேலியர்கள் தினசரி செய்யும் அஜாரகங்களை தாங்கிக்கொண்டு வாய் மூடி அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?
-
நன்றி கெட்ட உலகமிது 😡
அவர் கொல்லப்படவில்லை. முகத்தில் கத்திக்குத்து காயத்துடன் தப்பி விட்டார்.அவர் Afd கட்சியை சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு எதிராக பேசியவர் என கேள்விப்பட்டேன். Afd கட்சி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக சீனாவிற்கும் ரஷ்யாவிற்குமாக ஒற்றர் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார்கள். அதனால் கொஞ்சம் இறங்கு முகத்துடன் இருந்தவர்கள் இந்த கத்திக்குத்துடன் மீண்டும் ஏறு நிலைக்கு வந்துவிட்டார்கள். 😂
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
நடக்கிற கதையை கதையுங்கோ 😀
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பயணக்கைதிகளை விடுவித்திருந்தால் பலஸ்தீனியர் மீதான எந்த அழிவுகளையும் இஸ்ரேலியர்கள் எக்காலத்திலும் செய்ய மாட்டார்கள்?
-
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
இந்த கருவி மூலம் சிறு நீரகம் பழுதடைந்தவர்கள் கிழமைக்கு ஒரு தரம் குறிப்பிட்ட நிலையங்களுக்கு சென்று புது இரத்தம் எனும் பெயரில் சுத்திகரித்து விட்டு வருவார்கள். சென்ற வருடம் ஜேர்மனியில் வாழ்ந்த எம்மவர் ஒருவர் வவுனியாவிற்கு விடுமுறைக்கு சென்று இதே சிகிச்சையின் பின் மரணமாகி விட்டார். காரணம் இங்கே நான் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு நவீன மருத்துவ கருவிகளை அன்பளிப்பு செய்தாலும் அதை கையாளுபவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
தமிழ்நாட்டு அரசிற்கும்,அது சார்ந்த மக்களுக்கும் இருக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருக்கின்றதா? மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க அவர்களால் முடியும். எம்மவர்களால் ......?
-
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
புதியதோர் முன்னேற்றம்.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
உண்மை பொய்களுக்கப்பால் பல சம்பவங்களை ஒன்றுடன் ஒன்றோடு ஒப்பிட்டு விவாதிக்க முடியாது.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
வந்து குடியேறியவர்கள் ஒழுங்காய் இருந்தால் மாற்று கட்சிகளுக்கு வேலையே வந்திருக்காது.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
விசுகர்! பலஸ்தீன விடுதலை போராட்டம் ஆரம்பித்து எவ்வளவு காலத்தின் பின் கமாஸ் இந்த வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்? கமாஸ் இயக்கம் தொடங்கி கன காலமும் இல்லை. இஸ்ரேலியர்கள் அரசியலுக்கு மாறிய யசீர் அரபாத்தையே அழித்தவர்கள். இவர்களுடன் எப்படி நியாயமாக நடக்க முடியும்?
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பஞ்சம் பிழைக்க/ வாய்ப்பு தேடிவரும் வெளிநாட்டவர்கள் சாதுக்களாக இருக்கின்றார்களா? அவர்கள் ஐரோப்பிய சட்டங்களை மதித்து நடக்கின்றார்களா? பிரான்ஸ் லாசப்பலுக்கு போனால் ஒரே வெத்திலை துப்பலும்,கஞ்சலும் குப்பையும்.....வெறிக்கூட்டங்களும்...🤣 இது ஐரோப்பிய கலாச்சாரமா? 😂
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பலஸ்தீன பிரச்சனை நீண்ட கால பிரச்சனை. இதனால் தான் உலகளாவிய ரீதியிலும் பிரச்சனை உள்ளன. இதனை தீர்க்க வேண்டியவர்கள் தீர்க்காமல் இழுத்தடித்ததின் விளைவே இன்றைய நிகழ்வுகள். யசீர் அரபாத்துடன் செய்த ஒப்பந்த நிகழ்வுகளிலேயே பல குளறுபடிகளை செய்தவர்கள் இஸ்ரேலியர்கள். இந்த நீண்ட கால ஏமாற்றங்களுக்கு பின்னரே எடுத்தால் மொட்டை வைத்தால் குடுமி எனும் கமாஸ் உதயம். இஸ்ரேலில் கமாஸ் இயக்கத்தின் பெயரால் நடந்த அழிவுகளின் படங்களை இங்கே இணைத்து விடுங்கள்.