Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. முதலே சொல்லியிருந்தால் லீவு எடுத்திருப்பன் எல்லே? 😎 அவ்வளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவன் இல்லை இந்த குமாரசாமி.
  2. உங்களைப் பற்றியும் கதைத்தோம். யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால் அது உலக அதிசயம்.
  3. இன்று 53 வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் ஐயா தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு, பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். 💐
  4. பல வருடம் கழித்து நாம் புகைப்படம் அல்லது ஓவியத்தில் மட்டும் தான் இருப்போம். அந்த படத்தை அடுத்த சந்ததி விரும்பினால் மட்டுமே வைத்திருப்பார்கள் நாம் பாவித்த பொருட்கள் எதுவுமே இருக்காது நாம் வாழ்ந்த வீட்டில் யாரோ எல்லாம் இருப்பார்கள் நாம் வாழ்ந்த வீடே வேறு மாதிரி இருக்கும் தினசரி நாம் நடந்து திரிந்த பாதைகள் சுற்றித் திரிந்த இடங்கள் எல்லாமே மாறிவிடும் இப்படி ஒருத்தன் இருந்தான் என்பதே யாருக்கும் தெரியாமல் போய் விடும் இதெல்லாம் யோசித்து பார்க்கும் போது என்ன பெரிய பிரச்சனை? என்ன பெரிய கவலை? வாழ்க்கை ஒரு குறுகிய வட்டம்.
  5. மணி 👍 எழுதிய கருத்துக்கள் அவ்வளவும் பொருள் நெடுக்கர் 👈
  6. வாக்குகளுக்கு பணம் கொடுக்காமலும் ஊடக பலமில்லாமலும் கூட்டணி இல்லாமலும் கடைசி நேர சின்ன பறிப்பால் புதிய சின்னத்தில் போட்டியிட்டு மாநில அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளமை மாபெரும் வெற்றிதான். வாழ்த்துகள். ☘️ சீமான் தனது கொள்கைகளில் ஒரு சில திருத்தங்களை சீர் செய்வார் எனின் விரைவில் பல வெற்றிகள் நிச்சயம்.💪
  7. அவசரமாய் வெளிக்கிட்டு கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ என்றார். ரெஞ்சன் உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன். சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎 பட உபயம் சிறித்தம்பி.
  8. சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டவர்கள் ஜேர்மனியில் ஆக மோசமாக இருக்கின்றார்கள். மனித சுதந்திரம் கலாச்சார சுதந்திரம் உள்ள நாடுகளுக்கு வந்தவுடன் அவுத்து விட்ட ஆடுகள் போல் தலைகால் புரியாமல் திரிகின்றார்கள். இதில் கொடுமை என்னவெனில் இவர்கள் செய்யும் அகோர அட்டூளியங்களுக்கு இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் எவ்வித கருத்துக்களோ,அறிக்கைகளோ,கண்டன அறிக்கைகளோ வெளியிடுவதில்லை. நான் நினைக்கிறேன் அந்த நாடுகளில் இருக்கும் அடக்குமுறை சட்டங்கள் சரியானதே என.....😷
  9. நீலக்கட்சி சேர்த்து வைத்ததை சிவப்பு கட்சி அழிக்கும் என்றொரு பழைய கதை உண்டு. ஆனால் அது இப்போது தலை கீழாக நடக்கின்றது.
  10. இந்தா.....இந்தா.....பாத்தியா... இவனுகளுக்கு எங்க சாப்பாடு அதோடயே நிப்பானுவள்....அங்கால இஞ்சால அரக்கானுவள். ஐ ஆம் ஏ தீர்க்கதருசி 😎
  11. பைடன் சார்ந்த கட்சி நல்ல கட்சி தான்.அதனால் பைடனுக்கு வெள்ளை அடிக்க மாட்டேன் மாற்று அரசியல் ஜோர்ஜ் புஸ் கொம்பனி பல போர்கள் செய்தாலும் உலக பொருளாதாரத்தை இன்று இருக்கும் அளவிற்கு சீரழிக்கவில்லை. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் கை வைக்கவுமில்லை.
  12. ஐயா! யாவரும் உயிருடன் இருந்தால் சந்தோசம் எல்லோருக்குமானதே. ஆனால் அதை வைத்து வியாபாரம் என வரும்போது தானே கசப்புகள் வருகின்றது.
  13. புதிய சட்டங்களை கொண்டு வர இருக்கின்றார்கள். அவை பயனளிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். பல விடயங்களில் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடியாத அவலம் இன்னும் மகா கொடுமை.
  14. சிங்கள மக்களுக்கும்.. சிங்கள இனவாதிகளுக்கும்.. சிங்கள மதவாதிகளுக்கும்... என் மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கின்றீர்கள். பிரச்சனை என வந்தால் உங்கள் இனம் சம்பந்தமாக ஒன்றிணைகின்றீர்கள். தீர்க்கமான முடிவெடுக்கின்றீர்கள் ஆனால்.. என் இனம் அப்படியில்லை...வெளியே சொல்ல வெட்கமாக இருக்கின்றது. வாயை மூடிக்கொள்கின்றேன்.
  15. வைரவனுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய ஒரே ஆள் @goshan_che தான்.😎 தயவு செய்து மேடைக்கு வரவும்....👈🏽 எல்லாரும் அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார் எண்டுறாக்கள்....ஆனால் கண்ணிலை காட்டுறாங்கள் இல்லை 😷
  16. வாருங்கள் என வாரி அணைத்தவர்கள் மீது கத்தியை நீட்டுகின்றார்கள்.
  17. அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள். இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள். ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம். பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். ஜேர்மனிய இன்றைய சமுதாயமும் எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் அகதிகளாக வருபவர்களுக்கு ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள். பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில் பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள். இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள். இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு. அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள். மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார். அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார். அஞ்சலிகள் இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம். காணொளி பார்க்க நன்றி கெட்ட உலகமிது..😡
  18. நேற்றுவரை நாம் தமிழர் கட்சியை மறைத்த தினமலர் ஊடகம் இன்று அந்தக்கட்சியின் வாக்குகளை விலாவாரியாக வெளியிட்டுள்ளது.வாக்குக்கு பணம் செலுத்தும் நாட்டில் சீமான் கட்சி அதி வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றது. நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றேன். காரணம் அவர்களின் தமிழ்நாட்டு நலன் பற்றியதே தவிர வேறொன்றுமில்லை.
  19. பாஞ்ச் ஐயா! இப்ப பூப்புனித நீராட்டு விழா என சொல்லுறதில்லையாம். saree ceremony எண்டுதான் சொல்லுவினமாம்.
  20. ஏன் சரத்குமார் அரசியல் விடயத்தில்/தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பான்? கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்கள் தங்கள் சொந்த விடயங்களில் எப்படி இருக்கின்றார்கள் என்பதே பேசப்பட வேண்டிய விடயம்.
  21. ஏன்? ஒவ்வொருவரின் இடம் வலம் பார்த்தா யாழ்களத்தில் உறவுகளை தேடி வைத்திருக்கின்றோம்? 😂
  22. @பெருமாள் காண்டாமணி செய்தியில் இலண்டன் வாழ் சைவ மக்களின் நன்கொடை என அச்சு உறுத்தி சொல்லப்பட்டு......பின்னர் லண்டன் வாழ் இந்து மக்கள் என செய்தியை முடிக்கின்றார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
  23. அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂 உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம். @தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.