Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. சம்பந்தன். இரா. சம்பந்தன். இவர் அரசியல் காலங்களோடு பயணித்தவன் நான். தமிழீழ தலைநகர தலைவன் என்ற பட்டம்,மாநகர காவலன் என்ற பட்டங்களோடு பாராளுமன்றத்திற்குள் நுழைந்து இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கென எதுவுமே செய்யாத பூச்சிய தலைவன். ஒரு அரசியல் தலைவராக, ஒரு இன தலைவராக இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்த தவறிய அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர். இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை போல் உலகில் வேறு எந்த தலைவர்களுக்கும் வந்தது இல்லை. இனி வேறு வழியில்லை...ஈழ தமிழருக்கு தனி நாடுதான் வேண்டும் என்ற காலத்து அறிவும்... அதன் மூலம் வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்று அங்கு பெற்ற அனுபவங்களும்.....அதன் பின் ஆயுத போராட்ட கிளர்ச்சிகள் ஏற்பட்டு நன்மை தீமைகள் பெற்ற அனுபவங்களும் உரித்தான ஒருவர் தன் இனத்திற்கென எதுவுமே செய்யாமல் மரணித்தது ஈழ தமிழரின் இன்னொரு துர்ப்பாக்கியம்.
  2. கீழ நிண்ட நான் எப்பிடி கிடு கிடுவெண்டு உங்களுக்கு கிட்ட வந்தனான் பாத்தியள் தானே. ஏனெண்டால் கணிப்பு அந்தமாதிரி.....😎 அடுத்த போட்டியில அடி தூள் இடி மின்னல்.....அப்ப சந்திப்பம்.
  3. சோவியத் சாம்ராஜ்யம் இருந்த போது யாருக்கு என்ன தீங்கு செய்தனர்? இந்த உலகை கட்டியாண்டார்களா அல்லது இந்த உலகை, மூன்றாம் உலக நாடுகளை அடிமை நாடுகளாக வைத்திருந்தார்களா? ரஷ்யா இன்று தங்கள் கொலனி நாடுகள் என்று ஏதாவது ஒரு நாட்டை சொல்லி தற்புகழ்சியுடன் பெருமை அடிக்கின்றதா?
  4. எல்லா பூகழும் என் அவனுக்கே.... 😂 அப்பன்! நீங்கள் இல்லையென்றால் இந்த திரி இவ்வளவிற்கு களைகட்டியிருக்குமா என்றால் அது இல்லை. உங்கள் உடனடி தகவல்களும் எதிர்வு கூறல்களும் பிரமிக்க வைத்தவை. சும்மா விளையாட்டை பார்த்து விசிலடித்து விட்டு போகும் உலகில் அதற்குரிய கருத்துக்களை ஒரு இணையதளத்தில் வந்து தமிழ் இல்லாத உலகில் இருந்து கொண்டு தமிழில் எழுதும் உங்களுக்கு பலகோடி பராட்டுக்கள். வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயா முருகா மாயோன் மருகா உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!
  5. இறுதி கட்ட நேரங்களில் நல்ல செய்திகளை சொன்ன கிருபனாருக்கு நன்றிகள்.
  6. பிளான் B பற்றி இங்கே சுடச்சுட விவாதிக்கப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
  7. உள் அரசியல் எனக்கு தெரியாது.அதை உங்களை போன்றவர்கள் தான் சொல்லி தெரிய வேண்டும். நான் ஊடக தகவல் மற்றும் கேள்வி ஞானங்களை வைத்தே அமெரிக்க அரசியல் பற்றி எழுதுகின்றேன். அது நூறு வீதம் பிழையாகவும் இருக்கும். ஆனால் ட்ரம்பின் வெளிநாட்டு அரசியல் பற்றி எனக்கு நன்றாகவே தெரிகின்றது. எப்படியென்றால் ட்ரம்பின் கடந்த நான்கு வருட ஆட்சி தெளிவாகவே தெரிகின்றது. சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.
  8. டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா.. டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...
  9. அண்மையில் ரஷ்யாவில் சர்வதேச மேற்பார்வையின் ஊடாகத்தானே தேர்தல் நடந்து புட்டின் வெற்றியீட்டினார்??????
  10. ரொனால்ட் றேகன் தன் தேர்தல் பிரச்சாரத்தில் எதை முன் வைத்தாரோ அதை தன் ஆட்சியில் செய்து முடித்தார் என நினைக்கின்றேன். இங்கே பென்டகன் தவறி விட்டதா? அதே போல் டொனாட் ரம்ப் அவர்களும் அமெரிக்க உளவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அடிபணியவில்லை. தான் நினைத்ததை சாதித்து முடிக்கா விட்டாலும் அதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் நிறைவேற்றுவேன் என்பது போல் நடக்கின்றார்.
  11. அடி செருப்பால அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣 அமெரிக்க நாட்டில் எவர் சனாதிபதியாக வந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் செயற்பட முடியும் என்றால்......? KGB சட்ட திட்டங்களுக்கமைய புட்டினும் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றார் என எடுத்துக்கொள்ளலாமா? அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் பென்டகனின் ஆலோசனை முக்கியம் என்றால்... புட்டினும் அவர் தம் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளின் முன்னெடுப்பிலேயே பல நடவடிக்கைகளை எடுக்கின்றார் என முடிக்கலாமா?
  12. பில்லி சூனியம் செய்வினை செய்தவர்கள்/செய்திருக்கு எண்டு எப்பிடி கண்டு பிடிச்சிருப்பினம்? 😂
  13. 6 குமாரசாமி 109 இன்னும் முன்னேற இடமுண்டு என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்
  14. வெள்ளையர்கள் உலக நாடுகளை அடிமைப்படுத்திய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் நாடுகளை கூறுபோட்டு இனங்களை அழித்து கொள்ளையடித்து தங்கள் இராணுவங்களை நிறுவி அஜாரகங்கள் செய்தது/செய்வது வலதுசார கொள்கையுள்ள நாடுகளா அல்லது இடதுசார கொள்கையுள்ள நாடுகளா? 😎
  15. காய் வெட்டிக்கொண்டு திரிய இதென்ன கிந்தியாவே? 😂 பல ஊடகங்களில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என முடிவு கட்டிவிட்டார்கள் போலிருக்கின்றது. நான் நினைக்கிறன் புரோ செலென்ஸ்கிக்கு இப்பவே வயித்தை கலக்க தொடங்கியிருக்குமெண்டு 🤣
  16. „Good Night, Joe! https://www.bild.de/politik/ausland-und-internationales/us-medien-urteilen-vernichtend-gute-nacht-joe-biden-667e38a523778e6a23b2dd96 அமெரிக்க சம்பந்தன் 🤣
  17. மீசை தாடி இருந்தால் ஆண் என்ற விவாதத்திற்குள் நான் இல்லை. இன்றைய கால பெண்களுக்கு தாடி மீசைகள் வருகின்றதென்றால் உணவு முறைகள் முக்கிய காரணம் என கூறுகின்றார்கள் உண்மையா என தெரியவில்லை. குறிப்பாக இன்றைய காலத்து கோழி இறைச்சிகள் காரணம் என கேள்விப்பட்டுள்ளேன். எனவே இதுவும் இந்த திரியின் தலையங்கத்திற்கு உரியது அல்ல ஒரு மனிதனுக்கு என்ன குணாதிசயங்கள் வருகின்றதோ அதாவது ஆண் குணாதிசயம் அல்லது பெண் குணாதிசயம் வந்தால்/ இருந்தால் மருத்துவ வசதிகள் மூலம் ஆண் அல்லது பெண்ணாக மாறி வாழ சட்டமும் உண்டு. வசதிகளும் உண்டு. எனவே மூன்றாம் பாலின பேச்சுக்கள் தேவையில்லை. அதைத்தான் மேலே சொல்லியுள்ளேன். உணர்ச்சிகளும் உணர்வுகளும் என்று வரும் போது அடுத்த சமுதாயம் மிருகங்களுடன் புணர்வதை சட்டமாக்கும் படி வலியுறுத்தி போராட்டம் செய்வார்கள். அதையும் எற்கத்தான் வேண்டும் அல்லவா? ஏனென்றால் 50 வருடங்களுக்கு முன் அரிதாக இருந்த ஓரின சேர்க்கை எப்படி அதிகமாகியதோ அதேபோல் இன்று அரிதாக இருக்கும் மிருக மனித பாலியல் உறவுகளும் விரிவடைந்து விருட்சமாக மாறி விடும். அதற்காக வாதாட தயார் செய்து கொள்ளுங்கள்.
  18. என்னப்பா இந்தா பார் டொனால்ட் ரம்ப ஜெயிலுக்கு அனுப்புறம்....ஆளை தூக்கிறம் எண்டுச்சினம்.....இப்ப என்னடாவெண்டால் நேருக்கு நேர் விவாதம் எண்டுறாங்கள். ஒண்டுமாய் விளங்குதில்லை.... 😂
  19. இருப்பதை வைத்து திருப்திப்படுவது தான் மனிதனுக்கு அழகு. மிருகங்களும் பறவைகளும் தமக்கு மிஞ்சி எதையும் சேகரிப்பதுமில்லை. உண்ணுவதுமில்லை. இயற்கையை மீறி எதையும் செய்வதுமில்லை. ஆனால் ஆறறிவு உள்ள இனம் மட்டும்....? ஏனோ தெரியவில்லை இந்த பாடல்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்.. வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்.. நிலைமாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அது வேதன் விதியென்றோதுவான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்?
  20. எனக்கு தெரிய உந்த சுத்துமாத்து அப்ப தொடக்கமே இருக்கு. 🤣
  21. நான் ஊரில் இருக்கும் போது நாய் பூனை எல்லாம் வளர்த்து செல்லம் கொஞ்சியிருக்கிறேன். அதுகளின் பாசம் சொல்லிலடங்காது. ஆனால் இங்கிருக்கும் காலநிலைகளுக்கும் வீட்டு வசதிகளுக்கும் செல்லப்பிராணிகள் சரிப்பட்டு வராது. நினைத்தநேரம் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாது. தூர இடம் எங்கு போனாலும் அதையும் கூட்டிச்செல்ல வேண்டும்.கடைகளுக்குள் நாயுடன் செல்ல முடியாது. மருத்துவ செலவு அதிகம்.நாங்கள் சோறு கறியுடன் இருந்தாலும் அதற்கு விதம் விதமான சாப்பாடுகள் வேண்டும். ஒண்டுக்கு இரண்டுக்கு வெளியில்கூட்டிக்கொண்டு போக வேண்டும். இரண்டுக்கு போனால் அதை அப்படியே விட்டு விட்டு வரமுடியாது.அதற்கென ஒரு பிளாஸ்ரிக் பையால் அள்ளி எடுத்து குப்பை வாளியில் போட வேண்டும். அதுவும் குளிர்காலத்தில் சொல்லமுடியாத ஒரு வெடுக்கு அடிக்கும். நானும் பிராணிகள் அன்புக்கு அடிமை தான். ஆனால் இங்கு இல்லை. 😄
  22. பலஸ்தீன் விடயத்தில் ஈரான் அடக்கி வாசிக்கின்றதா இல்லையேல் நாளை தேர்தல் முடிவு தீர்மானிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
  23. ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ☘ கேக்கிறனெண்டு குறை நினைக்கப்படாது....பேர்த்டேக்கு என்ன பலகாரம் செய்தனியள்? 😎
  24. ஜேர்மன் தொலைக்காட்சிகளில் பைடன் தடக்குப்பட்டு விழ்ந்த காட்சிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.