குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
Everything posted by குமாரசாமி
-
டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்
அதெப்படி? 😂 மூலைக்கு மூலை சற்றலைட்,அது இது என தொழில் நுட்பத்தில் முன்னேறிய நீங்கள் இதிலை மட்டும் எப்பிடி சறுக்கிறியள்? 😎
-
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
ஆட்சிக்கு வந்தவுடன் இனப்பிரச்சனையை தீர்க்க முற்பட்டால் (அதாவது ஒரு கதைக்கு தமிழர் கேட்கும் உரிமைகளை கொடுப்பது) மகிந்த,கோத்தபாய ரணில் போன்ற இனவாத கும்பல் சும்மா இருப்பார்களா? இதுதான் சந்தர்ப்பம் என ஆட்சியையே கவிழ்த்து விடுவார்கள் அல்லவா? இந்த கருத்தை நான் எழுதியதால் நீங்கள் என்னை அனுர ஆதரவாளன் என நினைப்பீர்கள் என எண்ணுகின்றேன்.😂
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
விவசாயம் செய்தவர்களுக்கு தெரியும் குரங்குகளின் அழிப்புகளும் ஆக்கினைகளும்.....இதுகளை வெருட்டுறதுக்கெண்டே அனுமான் வெடி கொழுத்திய அனுபவங்கள் எக்கச்சக்கம். நாள் செல்ல செல்ல மூலைவெடிக்கும் குரங்குகள் அசையவில்லை. எல்லாம் அதுகளுக்கு பழகி விட்டது.😂 கடைசியாக எடுத்த ஆயுதம் வெற்றியளித்தது.😎
-
டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்
போலி கதைகள் சொல்லி தம் மக்களின் வாய்களை அடைத்து வைப்பதில் மேற்கத்தையவர்கள் வலு கெட்டிக்காரர்கள். ஆனால் இன்றைய சமூகம் கொஞ்சம் சுதாரிப்பதாக தெரிகின்றது. அதனால் தான் மாற்றுக்கருத்து கட்சிகள் இன்று முன்னிலையில் நிற்கின்றன.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் தள்ளுவதன் பலத்தால் அந்த யானை ஏறவில்லை. தன் பின் தனது எஜமான் நிற்கிறார் என்ற நம்பிக்கையை நம்பி தானாகவே மேலேறுகின்றது. இதே போல் தான் இன விடுதலை தலைவர்களும் அவர் தம் மக்களும்.
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
காத்தான்குடி முஸ்லீம்களை வைத்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. 🤣
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
சீமான் விஜயலச்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் யார் யாருக்கு என்ன லாபம்? யாருக்கெல்லாம் நட்டம்? 😎
-
நோர்வேயில் குண்டு வெடிப்பு
இந்த உலகின் முக்கிய பிரச்சனையான/பழைய பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனையை சர்வதேச முக்கிய நாடுகள் முடித்து வைக்க வேண்டும்.இல்லையேல் அமைதி பூங்கா போன்ற நாடுகளிலும் குண்டுகளை வைத்து சீரழிப்பார்கள். ஆகாயத்திலிருந்து குண்டுகளை போட்டு அடக்க அவர்கள் ஜேர்மனியர்களும் அல்ல ஜப்பானியர்களும் அல்ல.எதுவுமே இல்லாதவர்கள்.எதையும் செய்வார்கள்.
-
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
பொது ஊடகங்களில் நடுநிலமை இல்லாமல் போகும் போதுதான் அவரவர்கள் தனித்தனியே தனிக்குரலாக உரக்க கூற ஆரம்பித்துள்ளார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆட்டை வளர்த்தவர்களே பணத்திற்காக விற்று விட்டு போகும் போது..... அறிமுகம் இல்லாதவர்கள் அந்த ஆட்டை வெட்டுவதில் என்ன தவறு? அது கடவுள் பலிக்காக இருந்தாலும் சரி. இறைச்சி கடையில் வெட்டுவதாக இருந்தாலும் சரி. அது இறுதியாக மனிதர்களின் உணவாகத்தான் போகின்றது.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல. பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம். மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம். எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம்"
-
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
இன்றைய சில ஊடகங்களின் செய்திகள் இப்படித்தான் போகின்றது. 😂
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
கோசானின் அந்த புதுக்கதையை நேற்றிரவு வாசித்து எனக்கு நானே கொடுப்புக்குள் ஜாடைமாடையாக சிரித்து விட்டு நிம்மதி பெரு மூச்சுடன் நித்திரைக்கு சென்று விட்டேன்.😃 நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா கூட இதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாத்தி அம்மாள்- கருணாநிதி விடயத்தை காந்தர்வ திருமணம் என இன்றும் சொல்வார்கள்.😎
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஈழத்து மருமோன் வீட்டிலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனையாம். ஒழுங்காய் வரி கட்டேல்லையாம் 😁
-
குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?
நான் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் குளிப்பேன்.சொன்னால் நம்பவா போகின்றீர்கள்.
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
நீங்கள் நினைப்பது போல் தவறான சிந்தனையுடன் அந்த கருத்தை நான் எழுதவில்லை. இருந்தாலும் உங்கள் இந்த கருத்திற்கு பதில் எழுதுகின்றேன். தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அது யாரிடம் என்பதுதான் என் கேள்வி? வசதி இருந்தால் தான் என்பதும் ஒரு வழியில் சரிதான். ஆனால் அந்த வசதிக்கு முதலீடு செய்பவர் யார்? கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது உண்மையில் செலவு கூடிய செயல்பாடுதான். இதை மேற்கத்திய நாடுகளில் கண் குளிர பார்க்கின்றேன். பொது இடத்தில் மலசலம் கழிக்கவருபவர்கள் எல்லோரும் சமூக சிந்தனையாளர்கள் கிடையாது. மனித சீர்திருத்தம் என்பது அரசியலில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக யாழ் களத்தில் சொல்லி வருகின்றேன்.அதற்க்காக எனக்கு கிடைத்த பரிசுகள் எக்கச்சக்கம்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
கருணாநிதி,எம்ஜிஆர் தொடக்கம் இதர சிறு அரசியல்வாதிகள் அனைவரும் ஈழத்தமிழர் அரசியல் செய்தவர்கள் தான். சினிமாக்காரர்கள் ,தொலைக்காட்சிகள் கூட ஒரு சில லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனைகளை கையில் எடுக்கின்றார்கள். எடுக்கிறார்கள். அது பற்றி யாருமே கொதிப்பதில்லை. அது ஈழத்தமிழர் பிரச்சனை உலகிற்கு தெரியப்படுத்துகின்றோம் என வாதிட ஒரு குழு இருக்கின்றது. இருப்பினும் சீமான் அரசியலில் மட்டும் மூன்று முடிச்சு போட்டு குத்தி முறியும் ஒரு சில புலம்பெயர் ரமிலர்கள் ஏன் எப்படி எதற்கு என புரியவில்லை?
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
நீங்கள் அப்படி எழுதியதை நான் வாசிக்க தவற விட்டுவிட்டேன் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழக கட்சிகள்,இந்திய கட்சிகளை பொறுத்தவரை உங்கள் கருத்துத்தான் எனது எண்ண நிலைப்பாடுகளும்....
-
ஐ.நா., ஜப்பானுக்கு ஜனாதிபதி அனுர விஜயம்
வடை தேத்தண்ணி பிரியர் ஆகாஷி அவர்களை சந்தித்து தமிழர்களை எப்படி அழிக்கலாம் என ஆலோசனை கேட்டால் இன்னும் நல்லாய் இருக்கும்.😂.
-
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
இந்த ஐஸ் போதைப்பொருள் முதலில் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிய போர் வீரர்களுக்காக உற்பத்திசெய்யப்பட்டது என கேள்விப்பட்டுள்ளேன். இது பசி,சோர்வை கட்டுப்படுத்தி செயற்திறன் மற்றும் போர் விகாரத்தை ஊக்குவிக்கும் என சொல்கிறார்கள். இந்த இரசாயன போதைப்பொருள் தொழிற்சாலை ஏன் எப்படி இலங்கைக்குள் நுழைந்தது என்ற கேள்வி வரும்போது..... ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றவாளிகளுக்கு இது அவசியம் தேவைப்பட்டிருக்கலாம். அது இப்போது பொதுமக்கள் பாவனைக்கு வந்து விட்டது.
-
பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!
மேற்குலகு தங்களுக்குள் ஏதோ ஒரு நாடகம் அல்லது தொடர் நாடகம் நடத்துகின்றார்கள் போல் எனக்கு தென்படுகின்றது.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
திமுக கட்சியினரிடமும் இதே கேள்வியை/ வேண்டுகோளை வைக்கலாமே நிழலியாரே?
-
டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த புடின் முடிவு செய்தார் - ப்ளூம்பெர்க்
இந்த உலகம் வேறொரு ஒருங்கிணைப்பிற்குள் ஒன்று சேரவேண்டிய காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன். இன்றைய உலக நியதிகளுக்குள்..... ஐநா சாதித்ததென்ன? அவர்களது இதர அமைப்புகள் சாதித்தது என்ன? பல மனித/ மிருக நலன்புரி இயக்கங்கள் கூட இதுவரை எதையுமே சாதித்து காட்டவில்லை.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
வாக்காள பெருமக்கள் மரங்களில் ஏறி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
-
'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?
இது ரஷ்யாவின் வழமையான ரோந்து/பயிற்சி நடவடிக்கை என சொல்கிறார்கள்.நேட்டோ எனும் எனும் போர்வையில் ரஷ்ய எல்லை நாடுகளில் படைகளை குவித்து பயிற்சிகளை மேற்கொள்ளும் போது புட்டின் அவர்களை என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறார்களா?