Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இவர்களைப்போன்ற மனிதர்களால் தான் தமிழினம் அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. என்னை விடு நான் செய்கிறேன் என அப்பாவி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு சிங்களத்தின் சலுகைகளை அனுபவிக்கும் அருவருடிகள். சம்பந்தன் இல்லாத அரசியல் தமிழர்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என ஒரு ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது சுமந்திரன் போன்றோர்களால் இன்னும் மோசமாக போவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களால் நிகாரிக்கப்பட்ட பின்னரும் மூக்கை நுழைக்கும் நபர் சுமந்திரன். அது சரி சம்பந்தனின் கண்டுபிடிப்பிடம் பெரிதாக எதை எதிர்பார்க்க முடியும். அது எட்டடி பாய்ந்தால் இது பதினாறடி பாயுது.🤣
  2. என்ரை மச்சான் பெரிய சுழியன்.அவனை ஆராலையும் அசைக்கேலாது.🤣 லண்டன் காற்று வைரம் நிறைஞ்ச காற்றாம்.😂
  3. உண்மையான தகவல்தான். ஆனால் விழுந்தும் மீசையில் மண் முட்டாத நிலையில் தான் இன்று ஜேர்மனி ஓடிக்கொண்டிருக்கின்றது.என்றாலும் இவர்கள் செய்த பொருளாதார தவறுகளின் சூடு நிலை ஆற இன்னும் பல வருடங்களிற்கு நீடிக்கும். அதுவும் சொல்வதற்கில்லை. காரணம் இன்று அரசியல் மாற்றங்கள் வேறு விதமாகி விட்டது.
  4. உண்மையில் அரசியல்கைதிகளாக இருக்க வேண்டியவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அப்பாவிகள் சிறையில் இருக்கின்றார்கள். இன்றைய உலகில் உண்மை/ நியாயம் என்பது எங்குமில்லை.அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும் குற்றம் செய்ய தூண்டுபவர்கள்/உள் நோக்கத்துடன் சீண்டல்கள் செய்பவர்கள் நீதிமான்களாகவும் நியாயவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் உலகம் இது. இவற்றுக்கெல்லாம் இயற்கை/காலம் நிச்சயமாக பதில் சொல்லும்,தண்டனை கொடுக்கும். ஆமேன் 🙏
  5. இந்த பிந்திய ஞானோதய பதிவை அடிக்கடி பல பொது ஊடகங்களில் படித்துள்ளேன்.உலகிற்கு முன்னுதாரண செய்தியாக/தகவலாக இருந்தாலும் யாருமே மனம் மாறப்போவதுமில்லை.திருந்த போவதுமில்லை. தம்மிடம் இருப்பதை ஏழை எளிய மக்களுக்கு பகிரப்போவதுமில்லை. ஏன் ஞானோதயகாரரின் குடும்பமும் சாதாரண வாழ்க்கை வாழப்போவதுமில்லை.😀 இணைப்பிற்கு நன்றி சுவியர்.🙏
  6. அரபு நாடுகள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உதாசீனம் செய்தால் ஒரு துளி எண்ணை கூட நிலத்திலிருந்து எடுக்க முடியாது.அந்த அளவிற்கு அவர்கள் நிலமை என கேள்விப்பட்டுள்ளேன். எனினும் சீனாவின் வளர்ச்சியும் அதனுடனான ரஷ்யா,இந்தியாவின் கூட்டுறவும் இனிவரும் காலங்களை மாற்றிப்போடலாம்.அப்படி மாறும் நிலை வந்தால் இஸ்ரேலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார்கள்😂
  7. ஒரு வேளை தமிழர்கள் தலைவர் பிரபாகரனை மறந்தாலும் ஹிந்தியும் சிங்களமும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.
  8. வணக்கம் சிறித்தம்பி! கண்டு கனகாலம்.😎 வெளிநாடுகளில் ஒரு அரசியல்வாதி தனக்கு மக்கள் செல்வாக்கு குறைகின்றது அல்லது இல்லை என தேர்தல் களங்கள் உணர்த்தும் போது தாமாகவே அரசியலிருந்து ஒதுங்கி விடுவார்கள். இது நாலும் படித்தவர்கள் செய்யும் செயல்.அடிக்கடி வெளிநாடு வந்து தங்கி உல்லாசமாக இருந்து விட்டு போகும் சுமந்திரனுக்கு இந்த வெளியுலகு அரசியல் நாகரீகம் புரியவில்லையா? 😂 இரண்டு தடவைகள் வாக்காள பெருமக்கள் செருப்படி கொடுத்தும் இன்னும் திருந்தவில்லை என்றால் இனவாத சிங்களத்தின் எடுபிடியாகவே இவரை சந்தேகிக்கின்றேன்.🧐
  9. நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் திரைக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் என நான் நினைக்கிறேன். திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் எழுதும் வசனங்களை பேசி நடித்து விட்டு....அதே பாணியை முதல்வர் ஆசையில் கண்டபடி உளறுகின்றார்.விஜய் அவர்களது காரியதரிகள் பேசும் தமிழை கேட்டு தமிழ் உலகமே சிரிக்கின்றது என்பது இந்த அண்டமே அறிந்த விடயம். புதிதாக எந்தவொரு அரசியல் திட்டங்களோ கொள்கைகளோ அறவே இல்லை.மற்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் வசனங்களை பொறுக்கி எடுத்து வைத்து சாம்பார் அரசியல் செய்ய வந்திருக்கிறார்.😎 என்ரை செல்லம் திரிஷா உப்புடி ஒரு கூட்டம் வைச்சிருந்தால் விஜய்க்கு வந்ததை விட டபுள் மடங்கு சனம் வந்திருக்கும்.😋
  10. ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்பீர்களாயின் இப்படித்தான் உங்களை அசிங்கப்படுத்துவார்கள். சொந்த அனுபவமாக்கும் 😎
  11. பயனுள்ள இணைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன். ஜேர்மனியின் வீழ்ச்சி பற்றி நிறைய எழுதலாம். நான் உக்ரேன் பற்றிய திரிகளில் ஜேர்மனியின் வீழ்ச்சி ஒரிரு வரிகள் பற்றி எழுதியிருக்கின்றேன். ஏனென்றால் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்த காட்டாறு போன்ற எரிசக்திதான் ஜேர்மனியின் பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்தியது. அதை விட வியாபார ரீதியில் ரஷ்யாவின் பங்கு மிக மிக முக்கியமாக இருந்தது.
  12. எதுக்கும் எங்கடை தமிழ் யூரியூப்பர்மாருக்கு ஒரு சலஞ் விட்டுப்பாப்பம். ஏலுமெண்டால் வடகொரியாவுக்குள்ள் போய் என்ன நடக்குதெண்டு பார்த்து ஒரு வீடியோ போடுங்கோ பாப்பம் எண்டு...🤣 பத்து லச்சம் லைக் வாங்கித்தாறது என்ரை பொறுப்பு 😁
  13. ஒவ்வொருக்காலும் புதுமை வேணுமெண்டால் அவங்களும் எங்கை போறது?😂 நானும் தொடர்ந்து சம்சுங்தான் வைச்சிருந்தனான்.கள்ளர் கூட்டத்துக்கு நல்ல ரெலிபோன்.என்னவும் செய்து கொள்ளலாம்.😍
  14. எங்கடை ரமில் றோயல்ஸ்காரர் இனி கொஞ்சம் கவனமாய் திரியுங்கோ. என்னாலை சொல்லக்கூடியது அவ்வளவு தான்.😂 நோர்வேயில கூட பெரிய ஆட்சி மாற்றம் நடந்திருக்காம்.அடுத்த ஆட்சிமாற்றம் ஜேர்மனியிலை எண்டு நினைக்கிறன்.
  15. தெய்வமும் மனித டாக்குத்தரும் ஒன்று என என் அம்மா சொல்லும். அந்த தெய்வங்களின் மீது எனக்கு என்றும் அதீத நம்பிக்கையும் மரியாதையும் உண்டு.பல உயிர்களை காப்பாற்றுபவர்கள். அந்த மனித வைத்தியர்களை எல்லா நாடுகளிலும் தெய்வங்களுக்கு இணையாகத்தான் பார்ப்பார்கள்.🛕🕌🕍 வைத்தியர்களின் வாழ்க்கை முறைகளும் அவர்களது சுகாதார வாழ்க்கையும் ,நடைமுறைகளும்,பழக்க வழக்கங்களும்,ஏனைய மனிதர்களுடனான அணுகு முறைகளும்,அவர்களது நோயற்ற வாழ்வும் முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் இன்று அவர்களுக்கே இளமையில் அகால மரணங்கள் வரும்போது சாதாரண/ என்னைப்போன்ற பாமர மக்கள் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியுள்ளது. இன்றைய காலங்களில் பல பிரபல்யங்களின் அகால மரணங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.பிரபல்யம் இல்லாதவர்களின் அகால மரணங்களும் அதிகரித்துள்ளைத என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏன் எப்படி என நான் விவாதிக்க வரவில்லை.என் சுற்றாடலில் வாழும் ஜேர்மனிய நண்பர்கள்,மக்கள் கொஞ்சம் நெருடலுடன் சுட்டு விரலை ரொய்லட் பேப்பருக்கு அடிபட்ட காலத்தை நோக்கி காட்டுகின்றார்கள். அதை நான் நம்பவில்லை. வைத்தியர் நிமல ரஞ்சனுக்கு என் அஞ்சலிகள்.🙏
  16. ஓமோம்..... உலகத்திலையே முதல் முதலாய் ஒன்லைன்ல கட்சி நடத்தி முதலமைச்சராய் வந்த ஜாம்பவான் இவராய்த்தான் இருக்கும்.😂 எங்கடை ஈழத்து மருமோன்ர தில்ல பாத்தீங்களோ சார்? பணம் என்னடா பணம். நான் பாக்காத பணமா? எங்கட மருமோன்ர சிந்தனை எல்லாம் மக்கள் சேவை...மக்கள் சேவை....மக்கள் சேவை...மக்கள் சேவை அதை தவிர வேறொன்றுமில்லை.மற்ற காசுக்காரர் எல்லாம் என் கால் தூசுக்கு சமம் பீலிங்யா 😃 வருங்கால அம்மா ஜெயலலிதாவும் ரெடியாம்🤪 ஈழத்து பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டவர் எண்டபடியாலதான் கச்சதீவை சீதனமாய் கேக்கிறாரோ? 🤣 யாவும் கற்பனை.
  17. ஐ போன் சுத்தி சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்குதெண்டு ஆய்வாளர்கள் சொல்லீனம். 😂 ஐ போன் 15டன் ஆட்டம் குளோஸ். இப்ப சம்சுங் இன்னும் இன்னும் பெட்டராய் மினுங்கிக்கொண்டு போகுது.ஐ போன் சும்மா சும்மா ஒரு பிரமையே தவிர புதிசாய் ஒண்டுமில்லை போல கிடக்கு. பட்டன்களை தான் கூட்டிக்கொண்டு போயினம்.😎 ****
  18. தொண்டு.....தொண்டு 😎 தொண்டு செய்யும் ஆவர்த்தில் தொண்டர்கள் கூரையில் ஏறி வீட்டனர். கோச்சுக்காதீங்க சார் 😁
  19. உலகில் உள்ள அரசியல் களத்தில் முன்னேற வேண்டுமாயின் இனவாதம் பேசினால் உச்சத்தை தொடலாம்.அபிவிருத்தி பணிகள் எல்லாம் இரண்டாம் பட்சம். இது மேற்குலகிற்கும் தகும்.
  20. யாருக்கும் தொண்டர்களா அல்லது ரசிகர்களா என்ற குழப்பம் வராமல் இருந்தால் சந்தோசமுங்கோ 😜
  21. வந்த புதிதில் மேலைத்தேய கழிவறைகளை ஆசிய முறையில் பயன்படுத்த வெளிக்கிட்ட பலரின் அனுபவங்களை சொல்லவா? சறுக்கி விழுந்த அனுபவங்களை எடுத்துரைக்கவா? 😅 அதிலும் ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வீடுகளில் இன்றும் கொமட் அருகில் வெறும் கொக்கோ கோலா போத்தில் கண்கொள்ளா காட்சி தருவதை விபரிக்கவா?😂
  22. ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன். அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂 எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣
  23. இளையராஜாவை அனிருத்துடன் ஒப்பிடுவதே ஒரு வித அபத்தம்.
  24. வேறொரு கோணத்தில் அரசியல் செய்து பாராளுமன்றம் சென்றவர். ஜெனீவாவையும் பார்த்து வரட்டும். என்ன செய்கின்றார் என பொறுத்திருந்து பார்க்கலாம். எத்தனையோ மொள்ளமாரி முடிச்சவிக்கிகள் ஜெனிவா போய் கொக்கரித்து விட்டார்கள். இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பது என் கருத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.