Everything posted by குமாரசாமி
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
உலக நாடுகளில் தவறான கொள்கை உள்ள அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகின்றது. என் நாடு,என் தேசம், என் மக்கள், என் இனமே என்ற கோஷசங்களும் இனி வரும் காலங்களில் எடுபடாது போலவும் தெரிகின்றது. தம் இனத்தை விட்டு ஏனைய இனத்தவர்களுக்குள் தம் தலைவனை தேட ஆரம்பித்து விட்டார்கள் போல் உள்ளது.மாற்றான் மல்லிகை மணக்கும் என்பது போல்.....🤣 உங்களிடம் ஒரு கேள்வி? தம் பூர்வீக மண்ணில் செய்ய வேண்டியதை ஏன் புலம்பெயர்ந்த மண்ணில் சாதிக்க நினைக்கிறார்கள்? மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன? பிழைக்க வந்த இடத்தில் அவரவர் கருத்துக்களை சொல்லலாமே தவிர .....பதவி வந்ததும் நாட்டு தலைவனையே அவமதிப்பது ஒரு வித கருடா சௌக்கியமா கதைதான்.😎
-
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்
கேள்வி கேட்ட அந்த இடத்திலேயே....நேருக்கு நேர் திருப்பி கேள்வி கேட்ட அந்த பெண்மணியை பாராட்ட வேண்டும். இந்த சம்பவம் இன்னும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாகும் என்பதில் ஐயமில்லை. 10,20 வருடங்கள் சென்ற பின் பணத்திற்காக / அரசியலுக்காக குற்றம் சாட்டும் பெண்மணிகள் கவனிக்க...
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
அவர் தான் போற வாற இடமெல்லாம் தன்னை பிரபல்யப்படுத்த..... எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வெளிக்கிட்டுட்டார் போல கிடக்கு...😂 யூ ரியூப்பர்மார் இவரிட்ட ரியூசன் எடுக்க வேணும்😎
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
நீங்கள் இந்த கொலையை நியாயப்படுத்துகின்றீர்கள்? ஒவ்வொருவருவருக்கும் என தனிமனித சுதந்திரங்கள் உண்டு என்பதை இங்கே பல திரிகளில் பலர் எழுத வாசித்துள்ளேன். அதெல்லாம் பொய்யா?
-
அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
ஆள் வேணுமெண்டும் நித்திரை மாதிரி நடிக்கக்கூடியவர் கண்டியளோ..😂இல்லாட்டி சுவீஸ் நேர நினைப்பிலை நித்திரையோ எண்டும் யோசிக்க வேண்டிக்கிடக்கு 😎
-
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு!
இப்படியான சுத்துமாத்துக்காரர்களால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நம்பிக்கையீனம் வரப்போகின்றது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதம் மாறக்கூடியது. மொழியும் இனமும் மாற முடியாதவை.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இந்த செய்தி தனியே டொனால்ட் ரம்பிற்கு மட்டுமல்ல.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
நூறு வீதம் உண்மை. 😎
-
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?
இந்த கருத்து எனக்கு விளங்கவில்லை.
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
இலங்கையில் நடந்த இனக்கலவரங்களுக்கு முக்கிய காரணங்களை அலசி ஆராய்ந்தாலே பல விடைகள் கிடைத்து விடும். இது தமிழர்களுக்கு மட்டுமே எதிரான இனக்கலவரம். இதில் முஸ்லீம்கள் அடங்கவில்லை. இனக்கலவரத்தினால் அவர்கள் இடம்பெயரவுமில்லை. அப்படி இருக்கும் போது இவர்களை எந்த வரிசையில் சேர்ப்பது? இனத்திலும் ஒன்று சேர மாட்டார்கள். மொழியிலும் ஒன்று சேர மாட்டார்கள். மதத்தை மட்டும் வைத்து தனி அலகு கேட்பவர்களை இந்த உலகம் நிகாரிக்க வேண்டும்.
-
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு!
இந்த பாலியல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தன் அரசியல் பலத்துடன் காப்பாற்ற முனைந்த முன்னாள் கல்வி,சிறுவர்,பெண்கள் இராஜாங்க அமைச்சரான வியஜகலா மகேஸ்வரன் அவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். விஜகலாவை மறந்தவர்களுக்கு இந்த படம்.
-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்
தாலி கட்டிய மனைவியையே நிர்வாண நிலையில் பார்க்க இருட்டை தேடிய மண்ணில்....மாணவிகள் நிர்வாணமாக நிற்கும் படங்கள் எடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் பெருகிவிட்டது. ☹️
-
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!😱
தனியே ஈழத்தமிழர் மட்டும் கலாச்சாரத்தாலும் போதை பாவனைகளாலும் தடம் மாறவில்லை. போதை பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.இதை தடுக்க அரசுகளும் காவல்துறைகளும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்கள் தாமாக திருந்தினாலேயே ஒழிய..... போதை பாவனையை முற்றாக ஒழிக்க முடியாது என்பது என் கருத்து.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
நான் வழமைக்கு மாறாக பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு படங்களை பார்த்தேன்.வழமை போல் செய்தியை வாசிக்கவில்லை. 😎
-
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வளர்ச்சியும்,தீர்வுகளும் இல்லை என நான் நினைக்கின்றேன்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
மம்தானி வெற்றி பெற்றது பெரிய விடமல்ல.ஏனெனில் அமெரிக்கா குடியேறிகளால் வளர்ந்த/வளர்க்கப்பட்ட நாடு. எனவே அங்கு சகல கலாச்சாரங்களும் மதங்களும் இருக்கும். இங்கே மம்தானிக்கு வாக்களித்தவர்கள் யார் என்பதை கணக்கெடுத்தாலே பல உண்மைகள் வெளி வரலாம். நியூயோர்க் நகரில் எவ்வளவு வீதமான வெளிநாட்டு வம்சாவளிகள் வாழ்கின்றனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எனது பார்வையில் மம்தானி சாதாரண மனிதனாக தெரிந்தாலும்..... உலக முஸ்லீம்கள் இந்த வெற்றியை தங்கள் வெற்றியாக கொண்டாடும் போதுதான் நான் பதட்டப்படுகின்றேன்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
இந்த எரிசக்தி அரசியல் கிட்டத்தட்ட ஒரு இடியப்ப சிக்கல் அரசியல். ஒட்டுமொத்த ஜேர்மனியே விரும்பி செய்யப்பட்டதுதான் ரஷ்ய -ஜேர்மனி எரிவாயு குழாய்கள் இணைப்பு திட்டம். முதலாவது குழாய் இணைப்பு வெற்றிகரமாக அமையவே இரண்டாவது குழாய் திட்டம் ஆரம்பித்து முடிவறும் தருவாயில் சுற்ற சூழல் பாதுகாப்பு அழிவு எனும் தலைப்பில் திடீரென நிறுத்தப்பட்டது.இவ்வளவு காலமும் வராத சுற்ற சூழல் பாதுகாப்பு எண்ணம் ஏன் வந்தது என எழுத ஆரம்பித்தால் தலையே சுற்றும். நான் உக்ரேன் யுத்தம் ஆரம்பிக்க முதலே (10வருடங்கள் முன் என நினைக்கின்றேன்) யாழ்களத்தில் அந்த மண்ணின் முக்கியத்துவம் பற்றி கருத்தாக எழுதியிருக்கின்றேன். உக்ரேன் நிலம் விவசாயத்திற்கு சிறந்த நிலம். இதை நம்பி ஜேர்மனிய முதலாளிகள் ஏராளமான முதலீடுகளை உக்ரேன் மண்ணில் இறக்கி விட்டார்கள்.இதே போல் யுத்தத்திற்கு பல காரணங்கள் உண்டு. எல்லாம் அமெரிக்காவிற்கே வெளிச்சம்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற இருக்கைகளில் பெரும்பான்மை வகிப்பது ஜேர்மனி, ஓரிரு ஒன்றிய நாடுகளை தவிர ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தலையாட்டும் நாடுகளாகவே மீதி நாடுகள் இருக்கின்றன.இந்த இடத்தில் ஜேர்மனி இன்றைய தினம் இன்னும் மேலதிக கோடிகளை உக்ரேனுக்காக ஒதுக்கியுள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய தலைவியாக ஜேர்மனிய பெண்மணியே இருக்கின்றார். இது மாநில ஆட்சியிலும் நீங்கள் மத்திய ஆட்சியிலும் நீங்கள் என்பதற்கு ஒத்ததாகவே இருக்கின்றது.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
ஜேர்மனிதான் ஐரோப்பியம். ஐரோப்பிய ஒன்றியம் தான் ஜேர்மனி. இதை புரிந்து கொண்ட அறிவாளிகள் டொனால்ட் ரம்ப்,புட்டின் மட்டுமே. இங்கே இதற்கான விளக்கங்கள் எழுதி எதுவுமே ஆகப்போவதில்லை. ***
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை
இன்றைய காலங்களில் மதம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மத குருமார் எங்கும் எதிலும் இருக்கக்கூடாது. சிவனையும் தொட்டு கும்பிடு......ஜேசுவையும் தொட்டு கும்பிடு.....புத்தனையும் தொட்டு கும்பிடு.... ஆனால்..... இடைத்தரகர் எனும் குரு, குருக்கள் வேண்டவே வேண்டாம். இப்படிக்கு ஒரு சைவன்.
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
தரமான ஒற்றை வரி கருத்து விசுகர்!👈 👍
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்
நாட்டின் இன உரிமை பிரச்சனை அமுக்கப்பட்டு....... இன்று போதைப்பொருள் பாவனை தேசிய பிரச்சனையாக்கப்பட்டு விட்டது. இப்படியான போதை பொருள் பிரச்சனைய இவர்களே உருவாக்கி இனப்பிரச்சனையை மழுங்கடிக்கின்றார்களோ தெரியவில்லை. இஸ்ரேலின் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
நான் அறிய.. விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறு பயிற்சிகளுடன் காவலரண் காப்பாளர்களாக இருந்தவர்களும்,சிறு சிறு அமைப்புகளுக்குள் இருந்தவர்களும் தனிப்பட்ட காரணுங்களுக்காக பல துஷ்பிரயோகங்களை செய்துள்ளார்கள் என நான் அறிந்துள்ளேன். இவையெல்லாம் தலைமை பீடத்திற்கோ அல்லது அது சார்ந்தவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லையாம். நம்பி விடப்பட்டவர்கள் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த இயக்க நடவடிக்கைகளுக்குள் கொண்டு வருவது நியாயமல்ல.
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்
ஒபாமா சிங்கம் எண்டால்???? 😂 சாதித்தது, செய்து காட்டினது என்னவாய் இருக்கும்? 🤣 சும்மாய் இருந்தவன் நோபல் பரிசு வாங்கினதாய் இருக்குமோ? 😎