Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. என்னைப்பொறுத்த வரைக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களும் ஒரு வித இனவாதிதான். அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. அதிலும் அந்த இனவாதிகளுக்கும் அமோக ஆதரவு உண்டு. ஏன் எதற்கு என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய விடயம்.
  2. சீனாவை தவிர இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன என நான் யோசிக்கின்றேன்.
  3. எந்த சிங்கள இனவாத தலைவர்களை ஈழத்தமிழர்கள் கொண்டாடவில்லை? ஏதோ ஒரு நம்பிக்கை நப்பாசையில் எல்லோரையும் தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இன்றும் இலவுகாத்த கிளி போல் காத்திருக்கின்றார்கள்.
  4. இல்லை. நெதென்யாகுவிற்கு கதிரை சேவகனாக இருக்கவேண்டிய அவசியம் நம்ம தலைக்கு இருக்கு.உலக அதிகார யூதர்களுக்கு பணிய வேண்டிய அவசியம் அமெரிக்கவிற்கு உண்டு. அது மட்டுமல்ல கட்டாய நிபந்தனையும் கூட.... சொந்த மண்ணில் பொருளாதார வல்லமை இல்லாத நாடு இஸ்ரேல் என்பது பலருக்கும் தெரியும்.அதன் பொருளதார பலம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே உண்டு.ஆகவே அந்த பலம் எங்கு எப்படி என்பது நாம் இங்கு ஆராய தேவையில்லை. ஆனால் ரஷ்யாவின் பூகோள அரசியலும் வேறு. பொருளாதார அரசியலும் வேறு.ரஷ்ய அரசியலை விட அதன் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உக்ரேன் போருக்கு பின்னர் இந்த உலகு நன்கு புரிந்திருக்கின்றது.அது டொனால்ட் ரம்பிற்கும் புரிந்திருக்கின்றது. இப்போது நிழலிக்கும் புரிந்திருக்கும்.
  5. இன்றைய அல்லது அன்றைய இன்றைய அரசியல் என்பது யாரும் வீரம் பேச முடியாத விடயம்.உண்மையான அரசியல்வாதிகளும் இன்றில்லை. உண்மையாக இருந்தாலும் கொன்று விடுவார்கள். இதுதான் உலக அரசியல் வரலாறு. பட்டம் விட்டுக்கொண்டிருக்கலாமே தவிர பட்டத்தில் ஏறி அமர முடியாது.பொய்யும் பிரட்டும் உள்ள உலகில் நான் மட்டும் ஏன் நீதி தேவனாகவும் நியாயமானவனாகவும் ஒழுக்கமானவனாகவும் இருக்க வேண்டும்? டொனால்ட் ரம்ப் அவர்கள் நினைத்ததும் நடைபெறவில்லை.புட்டின் நினைத்ததும் நடைபெறவில்லை. ஐரோப்பா நினைத்ததும் நடைபெறவில்லை. எதிர்வு கூறல் சுலபம். அது நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகம். ஆசிய அரசியலில் இந்தா தாறம் வெட்டுறம் புடுங்கிறம் தீர்த்து வைக்கிறம் என்பார்கள் ஏதாவது நடந்ததா? அது போல் தான் மேற்கத்தைய அரசியலும்.
  6. செமிபாடு அடையும் உணவுகளை உட் கொண்டாலே மலப்பிரச்சனை வராது என்பது என் அனுபவம். அத்தோடு மேலைத்தேய கழிவறை முறைகளை தவிர்த்து ஆசிய நாட்டு முறையில் குந்தியிருந்து மலம் கழிப்பதும் வயிற்று உள் உறுப்புகளுக்கு நல்ல அழுத்தம் தரும்.அதனால் பல பிரச்சனைகள் தீரலாம். இதெல்லாம் என் அனுபவங்கள் மட்டுமே.
  7. ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமுக்கு அடிச்சால் நாங்களும் அந்த இலக்கை நோக்கி அடிக்கும் வல்லமை இருக்கு என இஸ்ரேல் செய்து காட்டியிருக்கு போல... என்னமோ... ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்றி இந்த உலகம் இயங்காது என்றொரு நிலை இருந்தது.அது இன்றில்லை என என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றது. உலக அரசியல் பொருளாதார மாற்றங்கள் இன்னொரு சக்தியை நம்பி இருக்கப்போவதில்லை என தெரிகிறது. இருந்தாலும் நான் பெரிது நீ பெரிது...எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற குண்டுச்சட்டி சுழியோட்டங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்.
  8. 😂 ஒரு காலத்தில் வயல்,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடித்து அஞ்சு பத்து சம்பாதிச்சவர்களும் உண்டு. இதே சிஷ்டத்தை பாவிச்சு தான் ஜேர்மனியில வெறும் பிளாஸ்ரிக் போத்திலை சேகரிச்சு குடுத்தால் நல்ல காசு வரும் எண்ட சட்டத்தை கொண்டு வந்தவங்கள்😜. ஒரு பிளாஸ்ரிக் போத்திலுக்கு 25 சென்ற்.நூறு போத்தில் சேகரிச்சால் எவ்வளவு வருமெண்டு கணக்கு பண்ணி பாருங்கோ.ஜேர்மனியிலை இப்ப எங்கையாலும் ரோட்டிலை தெரிவிலை பிளாஸ்ரிக் போத்தில்களை கண்டனீங்களே? குப்பை தொட்டியிலை கூட ஒரு போத்திலை காணேலாது. இதே மாதிரி உலகம் முழுக்க சட்டம் ஒழுங்கு முறைகளை கொண்டு வந்தால் குப்பைகளும் இருக்காது.கட்டாக்காலி நாய்களும் இருக்காது. கட்டாக்காலி மாடுகளும் இருக்காது. என்ன நான் சொல்லுறது சரிதானே?😎 🤣
  9. நீங்கள் சொல்வது உண்மைதான் அதில் மாற்றுக்கருத்து என்னிடம் இல்லை. சாதி மறுப்பு,சாதி ஒழிப்பு என்பது தனியே வெள்ளாளர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. பிராமணர் தொடக்கம் ஏனைய சாதிகள் எனப்படுபவர்களிடமிருந்தும் தொடங்கப்பட வேண்டும். ஜேர்மனியில் சென்ற வாரம் ஒரு பெரிய நகரத்தில் சாதி கலப்பு திருமணம் ஒன்று இனிதே சந்தோசமாக நடைபெற்று முடிந்தது.எனக்கும் அதில் எனக்கும் சந்தோசம்🙏.அங்கே எனக்கு மனதை வருடிய சம்பவம் என்னவெனில்.....நாங்கள் வெள்ளாளருக்குள் சம்பந்தம் முடித்து விட்டோம் என ஒரு சிலர் பெருமைப்பட்டனர். இப்போது நீங்கள் சொல்லுங்கள் சாதி எங்கிருந்து ஒழிக்கப்பட வேண்டும்?
  10. நான் ஊரில் இருக்கும் போது வாய்க்கால்,குளங்கள் என தூர்வாரும் பணிகளில் சிரமதானமாக முறையில் ஈடுபட்டுள்ளேன். ஒரு குளத்திற்கு நான்கு பக்கமும் சீமேந்து அணைகள் இருக்குமேயானால் தூர்வார வேண்டிய அவசியம் வராது. தனியே அதனை சுத்தம் செய்வதாகவும் கழிவுகளை அகற்றுவதாகவே அமையும். ஆனால் தூர் வாருவது என்பது வெளி மண் குளத்திலோ குட்டையிலோ மழை வெள்ளங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் வந்து நிரம்புவதை வெளியேறுவதை தான் சொல்வது... அதை விட.... சில வருடங்களிற்கு முன்னர் யாழ்களத்தில் தூர்வார்வது பற்றிய திரியில்....எப்படித்தான் குளங்களை தூர்வாரினாலும் நன்னீருக்குள் கடல் உப்பு நீர் உட்புக நூறுவீதம் சாத்தியம் உள்ளது ஒரு இணைப்பும் இணைக்கப்பட்டது.
  11. பிரான்ஸ் நாட்டு அரசியலில் இதொன்றும் புதிதல்ல.அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான்.😎
  12. இஸ்ரேலுக்கு இந்த தாக்குதலில் வெற்றியோ தோல்வியோ அல்லது வெறியோ ஒரு புறம் இருக்க...... இந்த யுகம் இருக்கும் வரைக்கும் இஸ்ரேல் நிம்மதியாக நித்திரை கொள்ள சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது.ஏனென்றால் இஸ்ரேலுக்கு எதிரிகள் அதிகரிக்கின்றார்களே ஒழிய குறைய சந்தர்ப்பங்கள் இல்லை. இந்த உலகில் அமெரிக்க ஆதிக்கம் குறையுமானால் இஸ்ரேலுக்கு என் முன்கூட்டிய அனுதாபங்கள். இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எல்லாவற்றையும் செய்ய பழகி விட்டார்கள்.அண்மைய சீனாவின் இராணுவ அணிவகுப்பு பல செய்திகளை சொல்லிவிட்டு சென்றுள்ளது.
  13. கைத்தொலைபேசி வைத்திருப்பவர்கள் எல்லாம் நிருபர்களாகவும் செய்தியாளர்களாகவும் உருவெடுத்தன் விளைவு.
  14. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பார்த்து மிரளும் சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவுடன் கை கோர்த்து நிற்கின்றன. இதை விட ரஷ்யாவிற்கு என்ன வேண்டும்? சீனாவினதும் இந்தியாவினது சொல் கேட்க பல நாடுகள் உள்ளன. மேற்கு நாடுகள் உட்பட..... சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் நாங்கள் இந்தியாவை சீனாவிடம் இழந்து விட்டோம் என கருத்து தெரிவித்தது ஒரு வித அச்சங்களின் வெளிப்பாடு. அதிஷ்டமும் ஆளுமையும் என்றும் ஒரு பக்கம் நின்று சுழலுவதில்லை.
  15. சீனாக்காரன் சுகர் வருத்தத்துக்கும் நிரந்தர தீர்வு கண்டு பிடிச்சிருக்கிறான் எண்டு ஒரு நியூஸ்சும் காத்துவாக்கிலை பரவிக்கொண்டிருக்கு....இதையும் கேள்விப்பட்டால் அவ்வளவுதான்.....😂
  16. நம்ம தலைக்கு கோள்வம் வாறதெல்லாம் நடிப்பு. புட்டினுக்கு தல செங்கம்பளம் விரிச்சு வரவேற்கும் போதே ரஷ்யா பக்கம் நூறுவீதம் நியாயம் இருக்கு எண்டதை விளங்கியிருக்க வேணும்.😂 இவையள் ரஷ்யா மேல பொருளாதார தடை போட்டாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஐரோப்பாதான். ரஷ்யன் சந்தோசமாகத்தான் இருக்கிறான். நடு றோட்டிலை நிண்டு பிச்சை எடுக்கேல்லை. இன்றும் ஆபிரிக்காவுக்கு கோதுமை இலவசமாக கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறான்.😎 மேற்குலகின் பொருளாதார தடை எனும் ஜில்மா விளையாட்டுக்களுக்கு இந்த உலகம் அஞ்சாது கண்டியளோ! 15 வருசமாய் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை போடீனமாம் போட்டுக்கொண்டே இருக்கினமாம். பொருளாதார தடைகளால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே தவிர வேறு எந்த நாடுகளும் இல்லை. மேற்குலகு இப்படியான பொருளாதார தடைகளால் இன்னொரு வலிமை மிக்க எதிரணியை உருவாக்கியதை தவிர வேறு எந்த பலன்களும் அறவே இல்லை. இந்த எதிரணியால் பலனடையப்போவது மூன்றாம் உலக நாடுகள் என்பது முக்கிய விடயம்.
  17. மீண்டும் கண்டதில் சந்தோசம் நெடுக்கர்!
  18. ஜேர்மனி தமது வெற்றி அரசியலுக்காக எதை எதையெல்லாமோ செய்ய ஆரம்பித்து இன்று பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள். உக்ரேன் ஜேர்மனிக்கு தேவையில்லாத சாக்கடை.👈 ஜேர்மனிக்கு உக்ரேன் போருக்கு பின்பும் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வேறு வழியில் பலமடங்கு விலையில் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை இங்கு யாழ்களத்தில் எழுதிய போது என்னை சொல்லால் அடித்தார்கள். என்ன செய்ய?அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்!
  19. ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்த நாடுகள் தான் இன்று பொருளாதாரத்தில் பின்னோக்கி போகின்றனர்.இதன் மூலம் நான் சொல்ல வருவது ரஷ்யா இன்றி இந்த உலகு இல்லை என சொல்ல வரவில்லை. இந்த உலகு ஒன்றின் மேல் இன்னொன்று தங்கி வாழும் உலகு. அதாவது வியாபார/பண்டமாற்று உலகு. பெரிய பொருளாதார நாடுகளுக்குள் பிளவு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இன்றைய உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகள்.
  20. ரஷ்ய மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புற்றுநோய்க்கான மருந்து பல ஆண்டுகள் பரிசோதிக்கப்பட்டதாகவே பல ஊடக செய்திகளில் வாசிக்க முடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் கொரோனா காலத்தில் எப்படிப்பட்ட ஊசிகளை எல்லாம் கேட்டுக்கேள்வி இல்லாமல் ஏற்றியவர்கள் தான் இன்று பல கால ஆராய்ச்சிகள் செய்து வந்த மருத்துவத்தை பற்றி கேள்வி கேட்பார்கள். மேலைத்தேயம் கண்டு பிடித்த வியாபார மருந்துகளில் பக்க விளைவிகள் இல்லையென்று யாராவது உத்தரவாதம் தருவார்களா?
  21. வணக்கம் வாங்கோ...நானும் ஜேர்மன்காரன் தான் 😃
  22. வணக்கம் வாருங்கள்.
  23. எல்லாரும் கச்சதீவு கச்சதீவு எண்டு கத்துறாங்கள். அங்கை என்னதான் இருக்கு எண்டொருக்கால் போய் பாப்பம் எண்டுட்டு தான் கச்சதீவுக்கு போனவராம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.