Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பிரபலங்களும்,உலக முன்னணிகளும் அகப்படும் வரைக்கும் ஜோக்கியர்கள் தான். இதுதான் இன்றைய உலகம்.😎
  2. படிக்க எண்டு வந்திட்டு அப்பிடியே இஞ்சை வேரூண்டி நிக்கிற டாக்குத்தர்மார் சொந்த நாட்டுக்கு போங்கோப்பா....போங்கோ.போய் நல்லதை செய்யுங்கோ 🤣
  3. மருத்துவ மனைகளை தாக்குவதே கொடூரமான செயல். அதிலும் மகப்பேறு மருத்துவ மனையை தாக்குவதென்பது கொடூரத்திலும் கொடூரம்.
  4. அந்தக்காலம் காலம் போல் சொந்தமாக பைகள் கொண்டு போய் கடைகளில் சாமான் சக்கட்டைகள் வாங்குவதை கட்டாயப்படுத்தணும். நானெல்லாம் சொந்த பைகள் கொண்டு போய்த்தான் சாமான்கள் வாங்கியிருக்கிறன். இப்ப இருக்கிற ஆக்களுக்கு பை கொண்டு போறது பெரிய வெட்கம் போல....
  5. படித்தவர்கள்,தகமையுள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர அனுமதியுள்ள போது..... ஏன் இப்படியான சட்டவிரோத செய்ய முற்படுகின்றார்கள் என தெரியவில்லை. அப்படி சட்ட விரோதமாக வந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்றைய ஐரோப்பா அன்று போல் இன்றில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  6. ஈழத்தமிழ் அரசியலில் உங்கள் உதாரண அரசியல்வாதி என்றால் யார்?
  7. ஆசை,தோசை,அப்பளம் வடை......😄 இப்ப ஸ்ரீலங்கா சுற்றுலா பயணிகளாலை தான் ஓடிக்கொண்டிருக்கு. அதிலையும் பலாலி சர்வதேச விமான நிலையம் எண்டால் சிங்களத்தின் கதை கந்தல். இலங்கையின் தமிழர்பகுதிகளை சுற்றுலா பிரதேசமாக்கினால் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஈடிணையாக வரும்.
  8. அது தானே! எல்லா நாடுகளிலையும் அவனவன் 10,15 வருசமெண்டு ஆட்சி செய்யுறான். நிலமை இப்படியிருக்க சிங்கம் மீண்டும் ஆட்சி செய்ய நினைப்பதில் என தவறு?😁
  9. போன கிழமை அமைதி பூங்காவான பலஸ்தீனத்தில இப்ப அனல்,கனல்,சணல் பறக்குதாம்.😂 குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு எண்ட மாதிரி அமெரிக்காவும் அதின்ர சமாதான ஒப்பந்தங்களும்.....இத நான் சொல்லேல்ல....வரலாறு சொல்லுது. 😎
  10. ஜேர்மனியில் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் 45 வயதுக்கு பின்னர் வருடம் தோறும் செய்ய மருத்துவ காப்புறுதிகள் பரிந்துரைக்கின்றன. அதே போல் பெண்களுக்கான மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளுக்கும் 30வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கடிதம் அனுப்பி அழைப்பார்கள். மேலதிக பணம் கட்ட தேவையில்லை.
  11. நீங்கள் சொல்வது சரியே. இருந்தாலும்.... சிங்கள இனவாத அரசுடன் பேசி பயன் ஏதும் ஏற்பட போவதில்லை என நிதர்சனம் கூறிய தலைவரை என்றும் நினைவில் கொள்வோமாக..
  12. இனியும் எங்கடை சனம் 100 பவுணிலை தாலிக்கொடி கட்டி பந்தா காட்டுவினம் எண்டுறியள்? 🤣
  13. சினிமா மோகம் உச்சத்தில் உள்ள ஒரு நாட்டில் விஜய் போன்றவர்கள் நேரடி முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். சர்வ சாதாரணமாக பொது மக்களை சந்திக்க முடியாதவர் முதல்வராக வந்தால் நாட்டின் பிரச்சனைகள் எப்படியிருக்கும்? படித்த,முன்னேறிய நாடுகளில் இப்படியான சினிமா கவர்ச்சிகள் அரசியலில் இருக்கவே இருக்காது. சிவாஜி,ராஜேந்தர்,பாக்கியராஜ்,ராமராஜன்,விஜயகாந்த்,கமலகாசன்,ரஜனிகாந்த் என நீண்ட வரிசையை பார்த்து புரிந்து கொள்ளலாம். எம்ஜிஆர் கூட ஆட்சி கதிரைக்கு வந்தது கூட அன்றைய கால சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் மட்டுமே என்பது என் கருத்து.
  14. உலகில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பக்க சார்பானதே என்பதே என் கருத்து. உதாரணத்திற்கு நேர்மையான நடுநிலை ஊடகங்கள் இல்லை என்பதற்கு உக்ரேன் ,காஸா பிரச்சனைகளில் காணலாம்.
  15. தமிழ் மட்டும் என.... ஒரு தடியெடுக்க.... சாதிகள் எனும்.... பனிமலைகள் தானாகவே... உருகிப்போகும். சாதிகள் இல்லையடி பாப்பா. -பழைய ஏற்பாடு-
  16. நான் சினிமா துறையில் இருப்பவர்களிடம் சுத்தம் சுகாதாரங்களை எதிர்பார்ப்பதில்லை. அந்த தொழில் அப்படித்தான்.சினிமா துறையில் இருப்பவர்கள் அதை தவறாகவும் பார்ப்பதில்லை. எல்லாம் ஒருமித்த அன்னியோயத்துடனேயே நடக்கின்றது. ஏதாவது முரண்பாடு வரும் போதுதான் சந்தையில் நின்று கூவுவது போல் கூவுவார்கள். இதனால் ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். அவ்வளவுதான்😃
  17. ஆடைகள் இல்லாமல் பிறந்தது உயிரினங்கள். அதில் ஆறறிவுள்ள இனமும் அடக்கம். இருந்தும் ஆடைகளிலிருந்து தப்பிக்கவே இந்த ஆறறிவுள்ள மனிதமும் போராடுகின்றது. அரைகுறை ஆடைகளுடன் ஒரு தவனம்.
  18. நக்கலும்... நளினமும்... நையாண்டியும்... தமிழனோடு கூட... பிறந்தவைகள். அதை தனதாக்கி ... கொள்வது அவமானத்திலும் ... அவமானம். ↘புதிய வழி போராட்டம்↙
  19. கணவன் யாரென்று மனைவி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது தெரியும்... மனைவி யாரென்று கணவன் பணமில்லாமல் இருக்கும் போது தெரியும்... பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் முதுமை அடைந்த பின் தெரியும்... அண்ணன், தம்பி, அக்கா, தங்கை யாரென்று பெற்றெடுத்து வளர்த்தவர்கள் இல்லாத போது தெரியும்... நண்பர்கள் யாரென்று இடர்,கடினம் வரும் போது தெரியும்... உற்றார்,உறவினர்கள் யாரென்று நீ கடன் கேட்கும் போது தெரியும்... எல்லா உறவுகளினதும் உண்மை எப்போது தெரிய வருமென்றால்.....அவர்களுக்கு உன்னால் எந்த லாபமும் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் வரும்.
  20. அட...அது உங்களுக்கும் தெரிஞ்சிட்டுதே. கில்லாடி 🤣
  21. சௌக்கியம் சௌக்கியம்.. எல்லோரும் சௌக்கியம்.. மீசாலையும் சௌக்கியம்.. சங்கத்தானையும் சௌக்கியம்.. நுணாவிலும் சௌக்கியம்.. கைதடி சௌக்கியம்.. நாவற்குழியும் சௌக்கியம்.. கச்சாய் சௌக்கியம்.. தனங்கிளப்பும் சௌக்கியம்.. அது மட்டுமல்ல குடத்தனையும் சௌக்கியம்.
  22. சிறுவர்களுக்கு மட்டுமென தொலைபேசிகளை உரிய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அது பெற்றோர்களுடன்,காவல் துறையுடன் மட்டுமே தொடர்பு கொள்ளக்கூடியதாக உள்ள தொழில்நுட்பங்களுடன் இருக்க வேண்டும்.ஏனைய இணைய வசதிகள் ஏற்படுத்தக்கூட தடைகளை வைத்து தயாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் இணைய தளங்களை பார்ப்பதை,கைத்தொலைபேசியை பாவிப்பதை கட்டுப்படுத்தலாம் நான் நினைக்கின்றேன். இன்றைய காலத்தில் கைத்தொலைபேசியும் ஒரு தனிமனித பாதுகாப்பு சாதனமாக அமைந்து விட்டது.அதனால் சிறுவர்களுக்கும் கைத்தொலை பேசி போன்ற தொடர்பு சாதனங்கள் அவசியம்.
  23. மலேசியாவிற்கு சென்ற அமெரிக்க சனாதிபதி ஆட்டம் பாட்டங்குளுடன் தரையிறங்கி அகமகிழ்ந்தார்.😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.