Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தவறுகளே அதிகம் பகிரப்படுவதால் சரியானவற்றை அடையாளம் காண முடிவதில்லை..... குற்றவாளிகளை மட்டும் எங்கும் எதிலும் தேடாதீர்கள்.
-
'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?
ஒரு திரைப்படம் பார்க்க போகும் போது அறிவாளியாக போகக் கூடாது.தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு போகக்கூடாது.விஞ்ஞானியாக போகக்கூடாது. டாக்டராக போகக்கூடாது. பொழுது போக்கிற்காக பார்த்தமாம் ரசிச்சமாம் என்றதுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொழுது போக்கு அம்சங்களை பொழுது போக்கிய பின் நிறுத்தி விட வேண்டும். அந்த பொழுது போக்கு சினிமாவை ஆராய்ந்தால்.... நீங்களும் சினிமாவில் எதையோ தொலைத்து விட்டீர்கள் என்ற அர்த்தமே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகத்துடன் இணைந்திருக்கிறேன்.. உடனிருப்பவரை விட்டு தனித்திருக்கிறேன்... கணணி எனும் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டு...
-
13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
அதற்கு நூறு வீதம் உத்தரவாதம் இருந்ததா? அல்லது எனக்கு எதுவுமே தெரியவில்லையா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு இப்பவெல்லாம் செவ்வந்தி பாட்டுக்கள்தான் கேட்க புடிக்குது..😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தலைக்கனம் வெந்நீர் போன்றது. அதை மற்றவர்கள் மீது தெளிக்காதீர்கள். அது உங்கள் மீதே பட்டு விடும்.
-
'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?
வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.
-
13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
- "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்
உக்ரேன் போர் நிறுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை.உக்ரேன் போர் நிறுத்தப்பட்டால் ரஷ்ய எரிசக்திகள் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் பாய்ந்து வர சந்தர்ப்பங்கள் உண்டு. ஏனென்றால் எரிசக்தி பொருளாதாரம் மட்டுமே தொழிற்சாலை நாடுகளை வாட்டி எடுக்கின்றது.இணக்க அரசியல் என்றுமே சிறந்தது.- 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்? ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான். சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு... நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.- சமாதானத்துக்கான நோபல் பரிசு
இப்படியே தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கெல்லாம் சாத்துப்படி வைக்க வெளிக்கிட்டால் வெகு விரைவில் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவார்கள். உக்ரேனுக்கு மிண்டு குடுக்க வெளிக்கிட்டு சேடம் இழுக்கிற சத்தம் இன்னும் நல்லவடிவாய் கேக்கேல்லை.🤣- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மண்டைதீவானக இருந்தாலும் சரி. சாவகச்சேரியானாக இருந்தாலும் சரி. 😎- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃 தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு..... இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂- Imagine Dragons - Thunder
- நடனங்கள்.
மொழி, இனம்,மதம் அனைத்தையும் கடந்து வெற்றியடைவது இசை.🎵- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடந்து போக கற்றுக்கொள் மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.... என சொல்கிறார்கள்.- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அதை என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்....ஒன்றா இரண்டா எழுதி வைத்து சொல்வதற்கு....😂- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂- சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
ரஷ்யா உக்ரேனின் முக்கிய பகுதிகளை தாக்கும் போது ஏன் பிரிட்டனும் அமெரிக்காவும் ரஷ்யாவின் தலைநகரை தாக்க கூடாது?- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
சொந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பூமியை சுடுகாடாக்கி விட்டு.... தாம் சமாதான புறாக்கள் என கோஷமிடும் உலகில் வாழ்கின்றோம். இது சரியென தலையாட்ட அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்திலும் ஒரு கூட்டம்.- நானும் கவிதாயினியும்.....💕
பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன். கண்களை கவனி காமம் என்றனர். வைரமுத்து-- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நூறு வீதம் உண்மை. என்னதான் சகல வழிகளிலும் முன்னேறி இருந்தாலும் பக்காவாக சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செவ்வனே திறம்பட செய்பவர்கள். மேற்குலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பெரிய முதலாளிகள் உட்பட எவ்வளவு சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு சிக்கி தவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம். உதாரண அரசியல்வாதிகளையும்,பிரமுகர்களையும் இங்கு குறிப்பட நான் விரும்பவில்லை.- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
இதுதான் என் கருத்தும். இருந்தாலும் இப்படியான வரலாற்று நன்றி நவிலல்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மனம் கொதித்துக்கொண்டே இருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை தொடாத அரசியல்வாதிகளும் இல்லை.அரசியல் கட்சிகளும் இல்லை. இதில் சீமானும் விதி விலக்கு அல்ல.ஏன்.........சினிமாக்களில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையின் ஆதிக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது.... எனக்கு பிடிக்கவில்லை என்றால் உனக்கும் பிடிக்கக்கூடாது என்ற தத்துவம் குண்டுச்சட்டிகளுடன் நிற்கக்கடவது.- "காஸாவில் உள்நாட்டுப் போருக்கான சிறந்த சூழல்" - 7,000 வீரர்களுக்கு ஹமாஸ் அவசர அழைப்பு
நீங்கள் சொல்ல வந்த இரு செய்திகளும் நூறு வீதம் உண்மை என நான் நினைக்கின்றேன்.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂 புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய.... திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு. நிற்க... கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள். - "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.