குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Everything posted by குமாரசாமி
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
தமிழ்நாடு முன்னேறவில்லை என்று நான் சொன்னால்..... எனக்கு அடிக்க வருகின்றார்கள் 😂
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
உந்த விசயத்தில குளிர் காய்ஞ்சு ஜாலியா இருக்கிறது நம்ம ரஷ்ய அண்ணன் தான்.....சொல்லி வேலையில்லை.🤣
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
எல்லாவற்றையும் எடுத்தமாம் கவுட்டமாம் செய்ய முடியாது தானே. அனுர இப்போது முள்ளின் மேல் நடக்கிறாராம். கொஞ்சம் சறுக்கினாலும் ஆளை தூக்கி விடுவார்களாம். ஒரு பக்கம் இந்தியாவ சமாளிக்கோணும்.அடுத்த பக்கம் சீனாவ சமாளிக்கோணும்.இன்னொரு பக்கம் பெரியண்ணை அமெரிக்கா.எல்லாத்தையும் விட மகிந்த பலம் இன்னும் இன்னும் இருக்கிறதாம்.😉
-
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
எனது விருப்பமும் அதுவே. இந்த உலகம் முழுவதும் தன்னினம் தன்னலம் என சிந்திக்கும் போது தமிழினத்திற்கும் தமிழ் என சொல்லி ஒரு தலைவன் வரட்டும்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் முஸ்லீம்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் என சொல்லப்படுகின்றது. 😂
-
நானும் ஊர்க் காணியும்
கதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது. கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது. ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
திருப்பி திருப்பி சந்திச்சு என்னத்தைத்தான் கதைக்கிறார்களோ தெரியேல்லை? 70,80 வருட பிரச்சனையை தீர்க்க வக்கில்லாதவர்கள்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆஃ......தொடர்ச்சியாய் தோற்கிறதிலையும் ஒரு தில்....கெத்து இருக்கத்தான் செய்யுது...🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழிக்கும் இது தான் இன்றைய உலக நிகழ்வுகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிம்ரன்! என்ன இதெல்லாம்? ஏன்? எப்படி?
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
https://youtu.be/bny9EzAW_FQ?si=0910UGbLEKxB0vX4 ஈழத்தமிழருக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க.... கிருஷ்ணா என்பவரின் பிரச்சனை பெரிய தலையிடியாக இருக்கின்றது.
-
நானும் ஊர்க் காணியும்
இஞ்சை வெளிநாடுகளில இருந்து கொண்டு ஊரிலை வீடு கட்டி,வீடு வைச்சிருக்கிற ஆக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். இதுக்குள்ள வீட்டுக்குள்ள நடக்கிறத சூம் பண்ணி பாக்கினமாம்.🤣 நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
தமிழ் நாடு என்றால் திராவிட நாடு என சொல்லப்படுகின்றது.திராவிடம் உருவாகிய காலம் தொடக்கம் திராவிட கட்சிகளே தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன.திராவிட கொள்கைகளாக சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவு,சமத்துவம்,சமூக முன்னேற்றம்,பெண்ணுரிமை,நாத்திகம்,இட ஒதுக்கீடு,அதிகாரப் பகிர்வு என இன்னும் பல கொள்கைகள் அடக்கப்பட்டு உள்ளது. எனது கேள்வி என்னவென்றால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் ஏன் இதுவரைக்கும் சாதியை ஒழிக்கவில்லை.சாதி வாரியான கட்சிகளை ஏன் வளர்க்கின்றனர்? திராவிட ஆட்சி நிலவினாலும் இன்னும் 13 வீதமான பார்ப்பனியர்களே தமிழ்நாட்டில் உயர் பதவி வகிக்கின்றனர்.திராவிட கட்சிகளும் அவர்கள் சார்பாகவே இருக்கின்றன. இப்படியான தோற்றுப்போன நிலையில் திராவிட கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் வியாக்கியானம் தேவையில்லை. திராவிடம் சாராத கட்சிகளும் தமிழ் நாட்டை ஆட்சி செய்யலாம். புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களில் வருணாச்சிரம ஆட்சி நடக்கின்றது உண்மைதான். ஆனால் அதுவும் மெல்ல மெல்ல தவிர்க்கபட்டுக்கொண்டு வருகின்றது.இதை எப்படி இந்த வருணாச்சிரம முறையை முறியடிக்கலாம் என உங்கள் ஆலோசனையை சொல்லுங்கள்? ஆனால் ஊர்களில் பல இடங்களில் பூசகர்களாக எம்மவர்களே ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.அது மட்டுமல்லாமல் தமிழில் தான் ஆராதனைகளும் நடைபெறுகின்றது.
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, ‘பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை - சமத்துவம் - சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலை உருவாக்குவதாகும். ‘ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வளர்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்... சம தர்மம் சம ஈவு சம உடைமை சம ஆட்சித் தன்மை சம நோக்கு சம நுகர்ச்சி சம அனுபவம் இருக்க வேண்டும். ஏற்பட வேண்டும்.. ஏற்பட்டாக வேண்டும்...” - தந்தை பெரியார் இது ஒரு சுருக்கப் பிழிவாகும். திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை 1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே. 2. பாலின சமத்துவம் 3. சமுகநீதி 4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்ததாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்கள் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது. 5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம். 6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது. 7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர கேடாக அமையக்கூடாது. 8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது. 9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிைம மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத்துறை, அரசுத் துறை அனைத்திலும். 10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகக் கல்வி, உத்தியோகம, அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம். 11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே. 12. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே. 13. கிராம - நகர பேதம் கூடாது. 14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல். 15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம் பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே. 16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்: இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்: பணக்காரன், ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி” எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்: சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல். 17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கு இடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல். 18. அரசுக்கும், மதத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு. 19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம். 20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்: தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை. 21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர் கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல். 22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல். 23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல். 24. சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு. 25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்கு மேல் எந்த வயதில் திருமணம் செய்து கொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல். திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை. வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே. குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை. 26. மரண தண்டனையை ரத்து செய்தல். 27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை. 28. கலை, கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும். 29. ‘அனைவருக்கும் அனைத்தும்” அமைந்து, சமூக நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம். 30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்க - தொண்டறப் பண்பு. 31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு. 32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு-சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும். 33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு. கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும், மலரட்டும்.. ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்! ‘உலகமே ஒரு குடும்பம்” என்னும் பரிணாம நிலை வளரட்டும். பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும். - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். தஞ்சாவூர், 23.2.2019 தமிழ்நாட்டில் இன்னும் வர்ணாச்சிர ஆட்சி உதிக்கவில்லை. அன்றும் இன்றும் திராவிடம். அந்த திராவிடம் இதுவரைக்கும் எதையும் சாதிக்கவில்லை. கலர் அடிச்சது என்ர கருத்து.
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
இப்படியான செயல்களை வைத்துத்தான் நான் திராவிடத்தை எதிர்க்கின்றேன். தமிழ்நாடு முன்னேறி விட்டது என்பவர்களுடன் தர்க்கபடுகின்றேன். சங்கர் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து தமிழ்நாட்டை மதிப்பிட முடியாது. இன்றும் பல ஊர்களில் உயர்சாதிகள் வாழும் வீடுகளின் முன்பு பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்புகளை கழட்டி வெறும் காலுடன் நடக்க வேண்டும். இதே போல் இன்னும் பல தாழ்த்தப்பட்டவர்களுக்கான கொடுமைகள் இருக்கின்றன.
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவரைப் போன்ற மோசடிவாதிகளும்,நம்பிக்கை துரோகம் செய்தவர்களும்,ஏழைகளின் மடியில் கை வைத்தவர்களும் உள்ளே இருப்பதுதான் சமூகத்திற்கு செய்யும் நல்ல செயல். அது யாராக இருந்தாலும் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். இப்படியான தண்டனைகளை பார்த்துத்தான் ஏனையவர்கள் திருந்த வாய்ப்புகள் உண்டு. அல்லது தவறுகள் செய்யாமல் இருக்க ஒரு முன்னுதாரணம். யதார்த்தமும் கூட.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொங்குமான் குறூப்பில இணைந்து கொண்ட கிருபனாருக்கு உற்சாக வரவேற்புகளும் வாழ்த்துகளும்....🤣
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
சொன்னால் நம்பவா போகின்றீர்கள். நான் இரண்டு தானங்களும் செய்திருக்கின்றேன்.இரத்த தானம். விந்தணு தானம். இரண்டும் இள வயதில்.விந்தணு தானத்திற்கு பல சத்தியக் கடதாசிகளில் கையெழுத்து வைக்க வேண்டும். இன்னுமொன்று கண் தானம்.
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
திக்....திக் நிமிடங்கள் 😇
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
இதெல்லாம் திட்டமிடப்பட்டு.....எடிட் பண்ணப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகள். வியாபர நோக்கங்களுக்காக.... பார்த்து ரசிப்பதுடன் நிறுத்தி விட வேண்டும். விவாதித்தால் மன உழைச்சல் தான் வரும். ☹️
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
குத்தியனுக்கு கனவிலையும் சாராய போத்தில் பியர் ரின் கேக்குது....கலிகாலம்
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
நான் ஊரில பெரிய காணிக்காரன் ஆக்கும்....®️ தண்ணி காசு இல்லை கரண்ட் காசு இல்லை காஸ் காசு இல்லை கீற்டர் காசு இல்லை சாப்பாட்டுக்கு பெரிய செலவு இல்லை கண்ணுக்கு நிறைந்த சூரிய வெளிச்சம் சுவாசத்துக்கு சுத்தமான காற்று குளிரால் வரும் நோய்கள் இல்லை சுத்தமான உணவுகள் கண்னுக்கு குளிர்ச்சியான பச்சை பசேல் நிலங்கள் இதை விட ஒரு மனிசனுக்கு என்ன வேணும்? 🙂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல காலம் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.🤣
-
நானும் ஊர்க் காணியும்
ச்...சா சொல்லி வேலை இல்லை.துரவுப்புட்டியள்ள தடக்குப்பட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருதே... சொப்பன வாழ்க்கை 😍 சொர்க்க வாழ்க்கை 🥰 இந்த வாழ்க்கை அருமை தெரியாதோர் 😁 ஆயுளில் 20 வருடம் இழந்தோர் ஆவர் 🙃