Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. இலங்கையில் தமிழர் மேல் சொறியலை நேரடியாக, ஒளிவு மறைவு இல்லாமல் நடாத்த தொடங்கியவர் சிறிமா. அவரது காலத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்த சொறியல் பத்தி, இந்த கட்டுரையில் வாசியுங்கள். https://www.colombotelegraph.com/index.php/antics-of-rajapaksas-viceroy-in-the-volatile-north/ சரியாக பார்த்தால், கிறிஸ்தவ சிங்களவர்கள், அல்லது பௌத்தர்களாக நடித்த கிறிஸ்தவ சிங்களவர்கள் தான் மிக அதிகமான துவேசம் காட்டி உள்ளனர். சொலமன் வில்சன் டயஸ் பண்டாரநாயக்க, அவரின் மனைவி, மகள், ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, அவர் மகன் ரவி ஜெயவர்த்தனே, டான் ஆல்வின் ராஜபக்சேயின் மகன் மகிந்தா பெர்சி ராஜபக்சே சகோதரர்கள். அதுக்கு முன்னர் கல்லோயா திட்டத்தினை அறிமுகப்படுத்தி மறைமுகமாக துவேசம் காட்டிய, மலையக தமிழர்களை, திருப்பி அனுப்பிய, டொன் ஸ்டீபன் சேனாநாயக்க, அவர் மகன் டட்லி சேனநாயக்க... சிறில் மத்தியூ, நெவில் பெர்னாண்டோ, இந்த கட்டுரையில் சொல்லப்படும் டயஸ்.....
  2. பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதால், விட்டிருக்கினம் போல கிடக்குது..... நாளை, அரச ஊழியர்கள் ஜந்து வருட லீவில் வெளிநாட்டு வேலை போகலாம் என்ற பிரேரணை, அமைச்சரவைக்கு போகிறது. அதாவது, உலகவங்கி கடன் கொடுக்க ஒரு நிபந்தனையாக, அரச, பாதுகாப்பு துறையில் ஆள்குறைப்பு செய்ய சொல்லி உள்ளது. அதுக்கு முதல்படியே இந்த பிரேரணை. அத்துடன், ராஜபக்சேக்கள் பலவீனமாக இருப்பதால்.... பழைய தினாவெட்டு இல்லை என்பதால் பேசாமல் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.
  3. ஓய்வில்லாமல் வேலை செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது... மிக்க நன்றி...
  4. இங்கை தெரிஞ்ச ஒரு ஆண்ட்டி, டிமென்ஷியா வருத்தம், அதாவது தமிழிலை அறளை பெயர்ந்துவிட்டது. ஆரம்பத்தில், நல்லா பேசுவா.... பொழுது போகவில்லை என்று, yupp டிவி எடுத்துக் கொடுத்தார் மகன். நாடகம் பார்த்து, அழுது, இரவிரவா யோசித்து, அறளை பெயர்ந்து விட்டது என்று மருமகள் சொல்லுறா. இந்தியாவில் தனிமை இல்லை. வேறு பொழுது போக்கு இருக்கும். இப்படி இங்கு இல்லை என்பதால், இந்த நாடக கோதாரி யாருக்குமே வேண்டாம். இது, ஒருவர், இருவர் இல்லை. பலரிடம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
  5. வேறு ஒண்டும் இல்லை.... நம்ம பங்கோட, டீல் போட்டு.... இயற்கை வெவசாயம் செய்யலாம் எண்டு ஊர் பக்கம் போனால்..... பங்கு ஓடியாந்துட்டார்... நான் வெட்டியாடிக் கொண்டு வந்துட்டேன்.... இயற்கை வெவசாயம் செய்யிறது, பிழையே.... 😰 கோத்தா தானே செய்யச் சொன்னவர் எண்டு போனம்..... கனடாவுக்கு, எக்போற் பண்ணுறது தான் ஒரிஜினல் ஜடியா... 🤔 பங்கு எப்படி சுகங்கள்.... இப்ப, படுத்துக் கிடந்த கத்திக்காரர்கள்.... எழும்பி கத்திய தீட்டப் போகினம் எண்டு நிணைக்கப் படாது... வந்தமா, டபக்கெண்டு போனமா எண்டு இருக்கோணும்... ஓகே.. 😁
  6. ஆனாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்..... வெளிநாட்டு ராணுவம், அது ஜநாவிலிருந்தாவது வந்தேதீரும். தனது வீட்டின் முன் நிகழ்ந்த ஆர்பாட்டத்தை, அமைச்சர் வீரசேகர மறுத்த போதும், அதை, இனவாத ரீதியில் முடிச்சுப்போட முணைந்த, கோத்தாவின் சிந்தனை இதை உறுதி செய்கிறது. ராசபக்சேகள், பிரச்சணையை இனவாதமாக்குவார்கள்..... இஸ்லாமியர்களோ, தமிழர்களோ போராடவில்லை. சிங்களவர் மட்டுமே.... ஆகவே, அவர்கள், நாட்டு மக்கள் பணத்தை, பொருளை பதுக்கி வைத்துள்ளர்கள் என்றால் போதும்.... அவர்கள் தொடர்ந்து ஆளலாம்.
  7. ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்.... இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார். தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்.... சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது. கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார். வாழ்த்துக்கள்.... 👌
  8. பெரிய பஞ்சாயத்து சும்மா எல்லாம் கத்தி சுழட்டுற ஆளில்லை.... ஆகவே... நீங்கள், மருந்து மயக்கத்திலே கொஞ்சம் கூடுதலா அதகளம் பண்ணி இருக்கிறியள் என்று அவருக்கு தெரியும். 😬 அதாலை தான் ஒரு செல்ல குட்டு... 🤗 அவர் சொன்ன மாதிரி, தனிமடலை போட்டு, அலுவலை முடிக்கட்டும்... நம்ம சாமியார்... 😁
  9. கதைச்சு மினக்கடாம, டபக்கெண்டு கடிதத்தை போட்டு, அலுவலை முடியுங்கோ.... உங்கை, ஒருத்தர், ஆஸ்பத்திரில இருந்து கொண்டு, வேண்டுகோள் வைத்து கத்தி வெட்டு வாங்கி இருக்கிறார்... 😁 அதால..... ஆறப் போடாமல் அலுவல் பாருங்கோ....
  10. மோகன் அண்ணன் இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டதாகபட்சி சொலலுது. நல்ல செய்தி வரும், கவலைப்படாதீங்க..... 👍
  11. பெரிய பஞ்சாயத்து நிக்கிறார். கையோட கம்மாரிசு...... புது வருசம்...... ஆயுள் கைதிகளுக்கு விடுதலை போல..... உங்களுக்கு சில நிபந்தனைகளுடன் தருவார் என்று பட்சி சொல்லுது.... இப்ப, டபக்கெண்டு திண்ணை தெரியுது, மோகன் அண்ணை....
  12. திண்னையக் காணம்..... கொஞ்சம் முந்தி இருந்தது.... பதிந்தேன்..... இப்ப காணம்.
  13. அட..... கருமமே..... சேட்டைப் போட்டாலும் பரவாயில்லை..... காலில சப்பாத்தை போட்டுக் கொண்டு.....🤦‍♂️ அடம்பிடிச்சு தூக்கிக் கொண்டு போகினம் போல...😁
  14. மீம்ஸ் என்று சொல்கிறோம்.... சிம்பிளா சிரித்து விட்டு போகிறோம். அதன் பின்னால் உள்ள சிந்தனை, வேலைகள்.... சும்மா சொல்ல முடியாது. இந்த மீம்ஸ் எவ்வளவு சிம்பிளா ஒரு விடயத்தை சொல்லுது
  15. சிங்களவர் கொமென்ட் போட்டிருக்கிறார்.... திருப்பி இந்த நாட்டிலயே குதிச்சிராமல், அப்படியே பறந்து போய்..... ஜரோப்பாவில.... லாண்ட் ஆகி... தப்பி பிழைத்திருக்கலாமே... அவங்களே ஓட நிற்கிறார்கள் ...
  16. இந்த விசயத்தோடே, daily mirror பேப்பர் காரருக்கு வந்த காட்டூன் ஐடியா... 😁
  17. நான் ஏதோ பெடியன் எண்டு நினைச்சன்... 😁 பிள்ளையும் இருக்குது... வாங்கிக் கட்டியிருப்பார் மனிசீட்ட... இனி பட்டம் விடுறன் எண்டு வெளிக்கிட்டால்.... வீட்டில இருந்து நேரா ஆசுபத்திரி போவார்... 😎
  18. உங்க ஹரோவிலே ஒருவர், நண்பரின் அண்ணர்... அவருக்கு நாம் வைத்துள்ள செல்லப் பெயரே, பட்டம். சவுத் ஹரோ பார்க்கிளை சமருக்கு ஆளை காணலாம்... வீகென்ட் எண்டால் பட்டம் விட்டுக் கொண்டு நிற்பார். விதம், விதமா அவரே செய்து, ஏத்துவார்... அவரது பட்டத்தினை பார்க்க, ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கு.. கொரோனரோ காலத்திலை... டெய்லி, பட்டம் விடுறது தான் வேலையே.... உங்களுக்கு விசர் முத்திப் போட்டுது எண்டு மனிசியிடம் பேச்சும் வாங்கிக் கொண்டு பட்டம் ஏத்த போடுவார். அவரது மகள் ஒரு வெள்ளையை கட்டி... இப்ப, மாமனும், மருமகனுமாய், பட்டம் ஏத்தும் கதை நடக்குது... அவர்.. ஊரிலை இதுதான் வேலையா திரிஞ்சவராம்... 😁 பட்டம் ஏத்த அளவுக்கு காத்திருக்கோ எண்டு என்னை கேட்கப்படாது. ஒருநாள் மொக்குத்தனமா, பார்ட்டில ஒருத்தர் கேட்க... அந்தாள்... பின்ன என்னத்துக்கு மின்சாரம் தயாரிக்க எண்டு காத்தாடி செய்யுது அரசாங்கம் எண்டு முறைச்சார்... பிறகு சொன்னார்... ஹரோ பக்கம், கொஞ்சம் உயரமான இடம்... ஒரு உயரத்துக்கு கொண்டு போய் விட்டால், அதுக்கு மேல... காத்து இழுக்குமாம்... 🤗
  19. கைலாயம் போன பிறகு.. தடவிச் சொல்லுவம் எண்டு இருந்திருப்பினம்.😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.