Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. உங்கடை, உங்கடை வீடுகளில, மறந்தும் காட்டிப் போடாதீங்க.... ஒண்டு .... அடி செருப்பால... எண்டு பதில் வரும்... அல்லது.... இரண்டொரு மணித்தியாலம் இருத்தி வைச்சு..... நெருப்பை காட்டி பயமுறுத்தப் படிவியள்...... அப்புறம், தனிய...யாத்திரை கிளம்பிரன் எண்டு போறது கஸ்டமாயிடும்...
  2. அதுகேனப்பா அடி விலோனும்? 🤔 புத்தரை கும்பிட வந்த பொம்பிளையை மடக்கி.... அதை.... புரிசன் காரன் கையும், களவுமா பிடிச்சு விட்டானோ? 😯
  3. அய்யா, ராசா..... கட கட எண்டு எரியுது..... கண்ணால பாத்து, ரபீக்கில சிக்கி.... கார் ஏசிக்கு மசியா வெக்கையால் பாதிக்கப்பட்டதால்..... நீங்கள் சொல்வத சரிதான். பஸ் ஒண்டு வேற எரியுது.... சூரியன் பயங்கரவாதம்!
  4. பிழை.... எண்டே நிணைக்கிறேன்.... 😉 ஊரிலை பிளேன் ரீக்கே காசிராது. ஏறினா சைக்கிள் இல்லாட்டி நடை. இங்கை, கார் ஏசி..... இல்லாட்டி வீட்டிலை காத்தாடி.... கையில கூலிங் பியர்.... செறிவை எப்படி உணருவியள்....? 😁
  5. நான் பப்பிலை இருந்து... கூலீங் பியர் அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.... வெயிலாவது..... கைக் கோட்டாவது.... ஊரிலை பாக்காத வெயிலே.... 🍻🍺 காரில காட்டின வெக்க 41 செல்சியஸ்...
  6. எந்த (பௌத்த மத) வழியால் போய், இலங்கை இந்த இடத்தை வந்தடைந்ததோ, அதே வழியில் (இந்து மத) இந்தியா போவதாகவே எனக்கு படுகிறது. தூரம் அதிகமில்லை. 😯
  7. கெற் ஓபிஸ் இங்க, பக்டரி அங்க..... சிங்களவனை நம்பி முதலிட ஏலாது. அதுவே..... சிறீலங்கன் இன்றைய பிரச்சணைக்கு காரணம். ஆப்பிள், சீனாவில் சம்பளம் அதிகரிப்பால், அங்கிருந்து கிளம்ப முடிவு செய்ய, இந்தியா தனது நாட்டுக்கு வருமாறு சன்னதமாட..... ஆப்பிள் தேர்ந்தெடுத்த நாடு வியற்னாம். இலங்கை..... கோத்தா.... குருந்தாரில விகாரை கட்டிறதில மும்முரம்.
  8. ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது. இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும். **** http://www.arunceylonspices.com/index.php?route=information/contact Arun Ceylon Spices Malaysia Telephone +604-507 7737 Fax +604-507 7737 Opening Times 24/7
  9. இங்கே, பிரிட்டனில், இந்த தொல்லை வேண்டாம் என்று, ஓய்வில் போவதை, பாடசாலை விடுமுறை காலத்தில் அமைவதாக வைத்துக்கொள்வார்கள். ஆக மாணவர்களுக்கு, அடுத்த மாசம் தான் ஓய்வு பெறுகிறார் என்று தோன்றும். ஆனால் இன்று பாடசாலை கடைசி நாளாக இருக்கும். பரிசில்கள் கொடுத்து, உணர்வு பூர்வம் இல்லாமல் விடை பெறுவார்கள்.
  10. அங்கே தானே சிக்கலே.... நம்ம கிட்ட வசதி இருந்தால், விசா எடுத்து வந்து, அகதியாக பதிந்தால், வெளியே இருக்கலாம். பிரச்சனை கிடையாது. அப்படி அகதியாக இருந்து, வெளியே exit விசா எடுத்து வந்தாலும், மீண்டும் எந்த காலத்திலும் உள்ளே வர முடியாது, வேறு நாட்டு கடவு சீட்டு எடுத்தால் கூட. அப்படி ஒரு கெடு பிடி. வசதி இல்லாவிடில், இப்படி படகில் கிளம்பி வந்தால், முகாமில் வருட கணக்கில் தங்க வேண்டியது தான். சரி நாட்டு நிலைமை பரவாயில்லை, திரும்புவோம் என்றால், சிக்கல், இலங்கை சிங்கள அரசின் தூதரகமும் கண்டு கொள்ளாது. வந்த வழியில் வெளியேற முனைந்து கைதாகி சிறப்பு முகாமில் வழக்கே இல்லாமல் வருடக்கணக்கில் வாடி இருந்து பெரும் போராட்டத்தின் பின்னர் இப்போது தான் 16 பேர் வெளியே வந்துள்ளனர். ஆக, உள்ளே வந்தால், ஒரு சிறைக்குள் புகும் நிலைதான். இலங்கை அரசும் கடவு சீட்டும் தராது. வந்த வழியே வெளியே போகவும் முடியாது. இந்திய கடவுசீட்டு... குடியுரிமை....? உஸ்.... மூச். 🤫 1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில்... குடியுரிமை சும்மா தர முடியாது என்றாலும், வடக்கே, வேறு நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதும் நடக்கிறது. ஆகவே, உயிரை கையில் பிடித்து, வேறு நாடு போனால், பிழைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு நப்பாசை தான். பனைமரக் காடே, பறவைகள் கூடே.... பிழைத்தால் வருகிறோம் என்று கிளம்புகிறார்கள். 🙏 இன்னோரு விடயம் என்னெவென்றால், இந்த பயணிகள், கிளம்பிப் போவது, நியூஸிலண்ட் நோக்கி. அந்த நாடு, அகதிகளை எடுக்கும். நடுவே நந்தி போல இருந்து, தங்கள் நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்று பிடித்து, திருப்பி அனுப்பி விடுகிறார்கள் Australians. அதுவே சிக்கல் தான்.
  11. அவர், மனிசனுக்கு சமைச்சு போடுவதை பெருமையா நிணைப்பவர். 👌 மண்ணுக்குள்ள புதைந்திருந்து, மண்ணையும், பெண்ணையும்.... என்னத்தை..... போங்கோ...😁
  12. 2019 ல் யாழ்பாணம் போனபோது, மகாராஜாவின் நரி விடுதியில் ஒரு சலுகை விலை கிடைத்ததால் தங்கினேன். அங்கே, அவர்களாக தயாரித்த, குடாநாடு குறித்து ஒரு அழகிய படங்களுடன் புத்தகம் ஒன்றை அறையில் வைத்து இருந்தார்கள். அட, நாம் வாழ்ந்த, வளர்ந்த குடாநாட்டில், பார்க்காத பல விடயங்கள் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தது
  13. ஊரிலை, தேவாங்கு என்று ஒரு மிருகம் உண்டு. இதன் விருப்ப உணவு மயில். மயில் பொதுவாக, பட்ட மரங்களிலேயே இரவில் தங்கும். அதில் இலைகள் இருக்காது, கிளைகள் மட்டுமே இருக்கும். இவ்வகை மரங்களை நாட, பாதுகாப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மரங்களில், மயிலை பிடிக்க, மெதுவாக, கவனமாக தேவாங்கு ஏறும். பட்ட மரமாகையால், காய்ந்த பட்டைகள் கையோடு வந்து விடும். அது கீழே விழுந்தால், சத்தத்தில் மயில் தூக்கம் விழித்து அலெர்ட் ஆகி விடும் என்பதால், கையில் வந்த பட்டையினை அப்படியே கீழே, கொண்டு போய் மெதுவாக வைத்துவிட்டு மேலே ஏறி வருமாம். மீண்டும் பட்டை கையில் வந்தால்... அதுவே தொடரும். விசித்திர விலங்குலகம். நாம் வீட்டினை கட்டி, கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்து விடுகிறோம். ஆனால் விலங்குகளில், அடுத்த கணம் மரணம் என்ற நிலையில் போராட்டம். பிறந்த அடுத்த நிமிடமே, வேறு மிருகங்களால் கவரப்பட்டு இரையாகும் மிருகங்கள் அநேகம். நேற்று பார்த்த வீடியோ, பிரசவ வலியில் துடித்த வரிக்குதிரை..... வைத்தியம் பார்க்க வந்த சிங்கம், சாகவாசமாக தனது, பிள்ளைகளை அழைத்து... விருந்துக்கு தயார். அதுவே இயற்கை நியதி.
  14. நானும் ஊரிலை காணவில்லை தான். காரணம் இரவில் திரியும் ஒரு விலங்கு என்று நினைக்கிறேன். அடுத்து, விளக்கு வைத்த பிறகு, வெளியாலை போறதில்லை எண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..... (நாங்கள் எல்லாம், அப்பவே பேப்படிப்புகாரர் என்று ஊரை, பேக்காட்டிக்கொண்டு திரிஞ்ச ஆக்கள் எல்லோ) 😜
  15. அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍
  16. உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது. எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது. அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. 🤭 ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது. மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது.
  17. என்ன கேள்வி எண்டால்.... அந்த நூலுக்கு என்ன நடந்தது.? 🤭 கழட்டி எறிஞ்சவவோ அல்லது அப்படியே சாப்பிட சொல்லுறாவே. 🤔
  18. தமிழகத்தில் இருந்து வந்த பிச்சையை வாங்கி திண்டு போட்டு, கொழுப்பு பிடிச்சு திரியிறாங்கள்.... இப்பவாவது, நமது ஆட்களுக்கு துணிவு வந்திருக்கு...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.