-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎
-
வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார். வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus... இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது. அட நாம சோத்து கோஸ்டிகளை அல்லவா கூப்பிடுறோம் என்ற யோசனை கிச்சித்தும் இருக்காது. ஆனால் நேற்றும் நண்பர், அழகாக, மேலே உள்ளவைகளுடன், வான்கோழிக்கு பதிலாக கோழியையும், மேலதிகமாக, கோழிப்புக்கை, toast, வட்டிலாப்பம் என்று செய்து வைத்து அசத்தினார். மேலும், யார் அசைவம் சாப்பிடாதோர் என்று நினைவில் வைத்து, அவர்களுக்கும் சரியான உணவினை வழங்கினார். என்ன பார்ட்டி ஆயினும், வருபவர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து அதை கொடுப்பதே விருந்தோம்பல். (வரும் விருந்தறிந்து, விருந்தோம்பல்) சிறுவயதில் படித்த, கொக்கு, நரி ஒன்றை ஒன்று விருந்துக்கு அழைத்து, ஒன்றுக்கொன்று ஒவ்வாத பாத்திரத்தில் உணவை பரிமாறும் கதை போல இருக்கக் கூடாது விருந்தோம்பல். சிறு பிள்ளைகள் பிறந்த நாள் விழாவுக்கு அழைப்பார்கள். சிறு பிள்ளைகள் விரும்பும் எந்த உணவுமே இருக்காது. வழக்கம் போல, கொத்து ரொட்டி, இடியப்பம், கறிவகைகள் தான் இருக்கும். சிறுவர்கள் விரும்பக்கூடிய, பிஸ்சா ஆர்டர் பண்ணி கொடுப்பவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். மேலே, கடந்த வருடமும், இந்த வருடமும் பார்ட்டி வைத்தவர்கள் கிறிஸ்தவர்களும் அல்ல. போனவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆகவே, சொல்லவருவது என்னவென்றால், இன்னொரு நாட்டில், அந்நாட்டுக்குரிய வழக்கங்களை அப்படியே கொப்பி அடிக்க வேண்டியதில்லை. விருந்தினர்களுக்கு அமைய, சிறு மாறுதல்களை செய்ய வேண்டும்.
-
என்ன கொடுமையப்பா. சட்டம் தெரிந்த நீதிபதிக்கு, சூழலியல் தெரியவில்லை. வடிகால் அமைப்பு வடபகுதியில் இல்லை. அதனை நிர்மாணிக்க கோரிக்கை வைக்காமல், சுத்து மதில் கட்டுவதால், வடிகாலமைப்பு இல்லாமல் போகுது எண்டால் என்னத்தை சொல்வது?
-
தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார். ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார். வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம் இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவது சொன்னார்களா என்று தெரியவில்லை. தலைவருக்கு தெரியாது, இவர் மகிந்தா ஆள். பள்ளிக்கூடமே போயிருக்க மாட்டார் என்று. வா, உனக்கு இருக்கு... ஏர்போர்ட் பக்கம் வருவாய் தானே என்று மகிந்த கட்சி அமைச்சர் நினைத்திருக்க கூடும்.
-
சந்தியா எக்னெலிகொட 2022 ஆம் ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் தொடரில் டிசம்பர் 6 ஆம் திகதி இலங்கையிலிருந்து செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்க இன்று ஊடகங்களுக்கு உரையாற்றினார். கறுத்த உடையும், வழித்த தலையுமாக ஊடகவியலாளர் முன் தோன்றினார் அவர். 12 வருடகால துன்பங்கள் மற்றும் வேதனைகளுக்குப் பின்னரும் தனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சக்கள் தனது சாபத்தில் இருந்து விடுபட மாட்டார்கள் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். “எனது அன்புக் கணவர் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த ஜனவரி 25, 2022 அன்று, அவரை காணாமல் ஆக்கிய ராஜபக்சேக்களுக்கு ‘சுவாமிபக்தி ஆதுர மஹா சபயா’ என்ற சக்தி வாய்ந்த சாபத்தை உண்டாக்குவதற்காக நான் தலையை மொட்டையடித்து கறுப்பு அங்கி அணிந்தேன். பிபிசி 100 பெண்கள் சீசன் 2022 இல் இலங்கையில் இருந்து ஆக்டிவிசம் மற்றும் அட்வகேசி என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார், இதில் 25 குறிப்பிடத்தக்க பெண்கள் உலகளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டபோது அல்லது காணாமல் போனபோது நான் முதன்முதலில் கேமராவின் முன் வந்தேன், அதன் பின்னர் எனது கணவருக்கு நீதி தேடி பலவிதமான விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வந்தேன். எங்களிடம் இருந்து பிரகீத்தை பறித்து 4,712 நாட்கள் ஆகியும் என் தேடல் இன்னும் முடியவில்லை. இந்த பயணத்தின் போது பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் எனக்கு உதவினர், சிலர் நீதிமன்ற அறையிலிருந்து காவல் நிலையம் வரை தாமதம் செய்து ஆட்சேபித்தனர்,” என்று அவர் கூறினார். “ஜனவரி 25, 2010 அன்று நான் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து, பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுவேன், கவலைப்பட வேண்டாம் என்றார். இன்று அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார், நான் அவரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், சாட்சிகளிடம் இருந்து அரசியல் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு பிரகீத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோருக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்” என்று அவர் கூறினார். *** இந்த பெண்ணின் பெரும் சாபம் இவ்வாண்டு ஜனவரி மாதம் உருக்கொண்டுள்ளது. அது, ராஜபக்சேக்களையும் அவர்கள் ஆண்ட நாட்டினையும் ஒரு பெரும் உலுக்கு உலுக்கித்தான் விட்டுள்ளது என்றால் மிகையாகாது. இந்நிலையில், ஐநா, யுத்த குற்ற விசாரணைக்காக $3.2M பாதீட்டினை ஒதுக்கிய செய்தியும் வெளிவந்து, அவர்களை திகைக்க வைத்துள்ளது. Source: Daily Mirror, Colombo https://www.ohchr.org/en/stories/2022/10/search-journalist-continues-12-years-after-his-disappearance
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை
இப்படித்தான், பாலகுமாரன் என்ற எழுத்தாளர். அவருக்கு பல ரசிகைகள். அதில ஒன்று முரட்டு ரசிகை. ஓவ்வொரு புது கதை வெளியிடும் போதும், வாசித்து விட்டு, வீட்டுக்கு முன்னால் நேர வந்து நின்று தனது பாராட்டுதல்களை தெரிவிப்பார். ஒருநாள், அப்படி வந்த அம்மணியை, நீ எங்கூட இருந்திரேன் என்றார் அவர். அவரும் மறுப்பு சொல்லாமல். உள்ளே வர, மூத்த மனைவியிடம், இங்க பாரு, இதைத்தான் நான் இரண்டாவதாக கட்டிக்க போறன்.... உனக்கு ஒத்தாசையா இருப்பா.... கூட்டிகிட்டு போயி, அந்த ரூமை காமி என்றார். இதனை பின்னர் அவரது தாயார் ஒரு பத்திரிகைக்கு சொல்லி, கவலைப்பட்டார். அதுபோல இந்த ரசிகையும் நினைத்திருக்கலாம்... 😁 -
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Nathamuni replied to தமிழ் சிறி's topic in வண்ணத் திரை
இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல. **** -
இதெல்லாம் வேலைக்காகாது. இதுக்கு முதலும் இப்படி சொல்லி, விவசாயம் செய்ய வைத்தார்கள். அப்போதே, கனடா முதல், ஐரோப்பா, அவுஸ்திரேலியா வரையுள்ள பெரிசுகளை மடக்கி, பலர் காணிகளை பிடித்து விட்டார்கள். விவசாயம் செய்யாத காணிகளை பறிக்க இலங்கையில் சட்டம் இல்லை. ஆனால், பிரதேசபை உள்ளூர் ஆட்களை பயிர் இடப்படாத காணிகளில் விவசாயம் செய்து, பலன் பெற அனுமதி கொடுக்கும். உரிமையாளர் திடீரெனெ வந்தால், பிரதேச சபை, அவர்களுடன் பேசி, குத்தகை போன்று காசு பெற்றுக் கொள்ள உதவும். பிரதேச சபை (அதாவது உள்ளூர் அரசு) அனுமதியுடன் செய்வதால், நீதிமன்று போகவோ, பயிர்களை அழிக்கவோ முடியாது. பயிர் அறுவடை முடிந்ததும் காணிகளை மீண்டும் பெறலாம்.
-
உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
Fish??? -
உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?
Nathamuni replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
விஜய் அடுத்த ரஜனி. அரசியல் வரப்போவதில்லை. படம் ஓடவைக்க அரசியல் மட்டும் பேசுவார்கள். பாஜக காத்திருந்த தருணம் கனிந்துள்ளது. ஸ்ராலின் முதல்வராகி இரண்டு வருடமாக, இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்பை மட்டுமல்ல, மருமகன் சபேசன், மகன் உதயநிதி, மணைவி துக்க்கா என்று குடு்ம்பம் மட்டுமே கொள்ளையடித்து சுருட்டுவதால் திமுக எம்எல்ஏக்கள் வெறுப்பையும் சம்பாதித்து வி்ட்டது. ஆக, பாஜக, சில எம்எல்ஏக்களை வாங்கி, அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்கும் அல்லது ஆமாம் சாமி பன்னீர் தலைமையில் ஆட்சி அமைக்கும். இது பாஜகவுக்கு புதிதல்ல. வேறு வடமாநிலங்களில் செய்துள்ளது. இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும். -
கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
Nathamuni replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். ஹாசா மன்னரை தூக்கி வீசிய ஈரானிய மக்கள் ஆயத்தோலா கொமேய்னியையும் தூக்கி வீசுவார்கள். -
எல்லாம் சுயநலம் தான். கிழக்கு முதல்வராக இருந்து அனுபவித்தவர். ஒன்றாக இணைந்தால், அது கிடைக்காது. தமிழ் பேசும் மக்களாக அரசியல் செய்து, வரலாம் என்ற நோக்கம் இல்லை. மத ரீதியாக, சிந்தித்து, போகாத ஊருக்கு வழி கேட்க்கிறார். இன்றய உலக நியதியில், ஐஸ் குண்டும் இலங்கையில் வெடித்த பின்னர், இவர்களுக்கு தனி அலகு கிடைக்காது என்று தெரிந்து, தமிழர்களிடம், கதை விடுகிறார்.
-
யாழில் நாய்களை விழுங்கிய முதலை மடக்கிப் பிடிப்பு!
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
தாய்லாந்துப் பக்கமா அனுப்பி விடுங்கோ. கைக்கு காசும் ஆகுது. முதலைப் பயமும் இல்லாமல் போயிடும். 🤑 -
குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு!
Nathamuni replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இப்படி கதைகள் அப்பவே நிறைய வரும். ஸ்டுடன் விசா மகிழ்ச்சியுடன் தருவினம். தங்குமிடம், சாப்பாடு, படிப்பு செலவோட சமாளிக்க ஏலாது. உங்க பிரான்சுக்கிலால, நாப்பதாயிரம் பேர் வந்திட்டாங்கள் எண்டு அனுப்ப அல்லோலகல்லோலம். வர இலகுவான, பாதுகாப்பான வழி, ஜரிகாரர்களுக்கு கொடுக்கும் வேர்க் விசா. Work sponsored visa not needed, if you have skill! -
குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு!
Nathamuni replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சோமாலியருக்கு விசயம் தெரியுமே? -
தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்தாளும், விமலும், சரத் வீரசேகரவும் சேரந்து, களவும், இனவாதக் காவடியும் தான் எடுக்கேலும். கடனில் இருந்து நாட்டை மீட்க முடியாது. -
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை.