Everything posted by உடையார்
-
இனித்திடும் இனிய தமிழே....!
யார் இந்த மடையர்கள்? | பழந்தமிழர் நீர் மேலாண்மை-1 தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2 |
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குன்றக்குடி ஊர் அழகா! குன்றாடும் வேல் அழகா! முருகன் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பதி சூழும் திருமலை வாழும் அருள் நிறை ஆண்டவனே திருவடித் தாமரை திரு நிழல் தந்தருள் அடைக்கலம் கோவிந்தனே உலகொடு கோள்கள் உயிர் புலம் யாவும் அடைத்தனை மாயவனே அடைத்த பின் காத்து வளர்த்திடும் பாதம் அடைக்கலம் மாலவனே உடல் பொருள் ஆவி கொடுத்ததும் நீயே ஒளி மலை வேங்கடவா உயர் குணம் ஓங்கவும் இருவினை நீங்கவும் அடைக்கலம் நீ தர வா அருந்தவ நட்பு பொருந்திடும் சுற்றம் அமைப்பது நீ அல்லவா அறம் பொருள் இன்பமும் தருவது உன் கடன் அடைக்கலம் வேங்கடவா இருப்பதை விட்டு பறப்பதை நாடி துடிப்பது எங்கள் மதி அறிவொளி வந்த பின் தெளிவையும் கண்டிட அடைக்கலம் உந்தன் படி வெறும் பொருள் செல்வம் பெரும் பொருள் என்றே விரும்பிடும் என் மனமே பிறவியில் அன்புடன் திருவருள் சேர்ந்திட அடைக்கலம் வேங்கடனே எது எது இங்கே இதில் எதில் சேரும் அறிந்தவர் யாருமில்லை நினைப்பதும் இன்பங்கள் குவிப்பதும் உன் திறம் அடைக்கலம் தெய்வ மலை வருவதை முன்னாள் உரைத்திட வல்ல அறிஞர்கள் யாருமில்லை இனி வரும் யாவையும் விதித்தவன் நீயே அடைக்கலம் அன்பு மலை அழுவது துன்பம் சிரிப்பது இன்பம் இயற்கையில் காணும் நிலை அதனையும் மாற்றிடும் அருள் நிலை உன் நிலை அடைக்கலம் உந்தன் மலை திருவிழிப் பார்வை ஒருநொடி போதும் பெரும் பயன் உண்டல்லவா விரைவினில் என் முகம் ஒருமுறை பார்த்தருள் அடைக்கலம் வேங்கடவா அறவழி செல்வம் பெருகிட வேண்டும் அருளெனும் தேன் பொழிக உடல் நலம் கல்வியும் குறைவற சேர்ந்திட அடைக்கலம் நீ தருக உனதருள் இன்றி உலகியல் மேன்மைகள் பெறுவது பொய் அய்யனே வினை பெரிதாயினும் விதி வலிதாயினும் அடைக்கலம் வைகுந்தனே திருவருள் வேண்டும் திருவடி வேண்டும் நிதம் உனைப் போற்றுகிறேன் அதைவிட வேறு நல் கதி கிடையாதென அடைக்கலம் வேண்டுகிறேன் திருமகள் வாழும் அழகிய நெஞ்சில் எனக்கொரு பங்கு உண்டு படைத்தவன் உன்னிடம் கொடுத்துவிட்டேன் எனை அடைக்கலம் நானும் இன்று உணர்வெனும் ஐந்தும் அறிவெனும் ஆறும் மலர்வது உன்னருளே உருகிடும் நெஞ்சினில் அமைதியும் வந்திட அடைக்கலம் தந்தருளே அணு முதல் தோன்றும் விரிவெளி யாவும் இயக்கிடும் வேங்கடவா சிறு மனம் வேண்டிடும் உறவென நீ தரும் அடைக்கலம் மேலல்லவா குல நல மேன்மை தலைமுறை சீர்மை வளர்ந்திட கண் மலர்க நிலை உயர்ந்தோங்கிட திருமலைக் கோவிலில் அடைக்கலம் நீ தருக அழகிய ஏழு மலையெனும் வீட்டில் திகழ்கிற ஆண்டவனே அடைக்கலம் திருப்பதி அடைக்கலம் திருமலை அடைக்கலம் கோவிந்தனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குழலாக பிறப்பேனோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆண்டவரே என் ஆண்டவரே உம் குரல் கேட்க ஆசை கொண்டேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கடவுள் உன்னை மறப்பதில்லை கலக்கம் கொள்ளாதே கடல் கடந்து செல்லும் பொழுதில் உன்னை அன்பில் நினைத்தாரே அள்ளி அணைத்தாரே – 2 ஆழ கடலை தாண்டும் போதும் அருகில் இருந்திடுவார் அலையில் நடந்து செல்லும்போதும் கரங்கள் பிடித்திடுவார் – 2 தவறிப்போன ஆட்டை தேடி காண தவித்திடுவார் – 2 காணாமல் போன காசு உன்னை (கருத்தாய் தேடிடுவார்) – 2 பகைவர் உன்னை தாக்கும்போது கோட்டை அரணாவார் பள்ளத்தாக்குகள் கடக்கும்போதும் தோளில் சுமந்திடுவார் – 2 பசுமை நிறைந்த புல்லின் வெளியில் நிதமும் அலைதிடுவார் – 2 பாலும் தேனும் பொழியும் காணான் (தேசம் நடத்திடுவார்) – 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் வாழும் கோமானே
-
மேஜர் கலாநிதி
மேஜர் கலாநிதி ஆழியவளையிலிருந்து எழுந்த அலைமகள் கடற்புலி மேஜர் கலாநிதி; ஒரு போராளியின் புனிதப் பயணம். இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன். இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன அடையாளத்தை தொலைத்து வாழும் நிலையில் சொந்த நாட்டில் எழுந்த உரிமை உணர்வும், விடுதலை தாகமும், எந்த இனத்திலும், எந்த நாட்டிலும், ஒரு விடுதலை இயக்கம் வைத்திராத படைகளை அமைத்து, வாழுகின்ற தமிழரின் வீரம், மானம் ஒருங்கே சேர எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கிய கடல் புலிகள் படைத்த போர்க்காவியம் தமிழரின் பரம்பரையையும், தாய்மண்ணின், பற்றையும் எமக்கு மீண்டும் நினைவூட்டியது. நாம் தமிழர் என்ற உணர்வும், எம்மை நாம் முற்றாக அறிந்து கொள்ளும் நிலையும், எமது இனத்தின் தனித்துவம், அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் உறுதியும் தமிழராகிய எமக்கு இருக்க வேண்டும். தலைமை தாங்கி வழிநடத்துபவர் தப்பிச் செல்வதைவிட தானே முன்னின்று படை நடத்திய பெருமையும், தம்மை அர்ப்பணித்து தமிழ் மானம் காத்த வல்லமையும் எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியுள்ளது. கடல் புலிகளின் காவியத் தலைவி லெப்.கேணல் நளாயினி தொடுத்த கடல் போர், தகர்ந்த சிங்களக் கடற்கலங்கள், காட்டிய வழி எண்ணற்ற கடற்புலிப் பெண் போராளிகளை விடுதலை இயக்கத்திற்குப் பெற்றுக்கொடுத்தது. காலத்தால் அழியாத போர்க்காவியம் ஒன்று ஈழத்தில் எழுதப்பட்டுள்ளது. எமது இளையோர்கள் ஏந்திய போர்க்கருவி, இடைவிடாது தொடுத்த போர்கள், காட்டிய வீரம், மூட்டிய விடுதலைத் தீயில் அவர்களின் தற்கொடை எரிந்து எதிரியைத் திணறடித்த தீரம், எமது தலைவனின் உருவாக்கத்தில் எழுந்த முப்படைகள் தமிழனின் புறநானூற்றைப் புரட்டிப் போட்டதையும், புதிய வரலாறு தமிழனின் வரலாற்றில் பதிவு செய்ததையும் பார்த்திருக்கின்றோம். காலத்தின் தேவையறிந்து எமது தலைவன் உருவாக்கிய முப்படைகளில் ஒன்றான கடல் புலிகள் அதிலும் தமிழ்ப் பெண்களின் வீரம் என்பது எண்ணிப் பார்க்க முடியாத தற்கொடையையும், தம்மைஇழந்து தமிழ் மானம் காத்த பெருமையையும் எழுதி முடிப்பதற்கு எவ்வளவு காலம் எமக்குச் செல்லும் என்பதைக் கூறமுடியாத நிலையில் தமிழ்ப் பெண்களின் வீரம் ஈழத்தில் எழுந்த விடுதலைப்போரில் ஒவ்வொரு படையணியிலும் அவர்கள் காட்டிய துணிச்சல், சாதனைகள் விவரிக்க முடியாதளவு விரிந்து கிடக்கின்றன. தரையில் சாதித்த எமது தமிழ்ப் பெண்கள் கடலில் சாதிக்கப் புறப்பட்ட போது பெண் போராளிகளிளிருந்து தேர்ந்தெடுக்கபட்ட சில போராளிகளில் ஒருவராக களமிறங்கியவர் மேஜர். கலாநிதி ஆகும். லெப். கேணல் நளாயினி தலைமையில் கடல் புலிகளின் பெண்கள் அணி உருவான போது முதல் பாசறையில் பயிற்சி பெற்று வெளியேறியவர், பயிற்சியில் காட்டிய தீரம், முன்னணிப் போராளிகளில் ஒருவராக கனரகப் ஆயுதப் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு 50 கலிவர் சுடுகலனின் சுடுனராக வெளியேறினார். வடமராட்சி கிழக்கு மண்ணில் ஆழியவளை ஊர் மிகவும் பிரபல்யம் பெற்றதாகும். இவ்வூரில் உணர்வுமிக்க விடுதலைப் பற்றுக்கொண்ட குடும்பத்திலிருந்து தமிழினத்தின் விடுதலைக்காகப் புறப்பட்ட நந்தினி என்னும் இயற் பெயர் கொண்ட மேஜர் கலாநிதி, இராசேந்திரம் தம்பதிகளின் மூன்றாவது பெண் பிள்ளையாகும். ஐந்து சகோதரிகளும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்பத்தில் விடுதலைக்காக தமது பங்கைச் செலுத்த விடுதலைப் போராளியாக எழுந்த இவருடைய குடும்பம் விடுதலைக்காக போராளிகள் புறப்பட்ட காலத்திலிருந்து ஆழியவளை ஊரில் ஆதரவு வழங்கிய குடும்பங்களில் ஒன்றாகும். பொங்குகின்ற தமிழுணர்வு மங்காது, மறையாது காத்துநின்ற மாவீரர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற வடமராட்சி கிழக்கு மண்ணில் என்றும், எப்போதும் விடுதலை உணர்வு வீழ்த்து விடவில்லை. இந்து மாகடலின் மடியில் படுத்துக் கிடக்கின்ற வங்காள விரிகுடாவில் ஆர்ப்பரித்து எழுகின்ற அலைகளின் தாலாட்டில் உறங்கியும், உறங்காமலும் விழித்து சொந்த மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணும் மக்களின் மத்தியில் பற்றோடு எழுந்த நூற்றுக் கணக்கான விடுதலை வீரர்களின் ஆன்மா உறங்காமல் விடுதலையை நோக்கி விழித்துக்கொண்டிருக்கின்றது. எங்களுக்கின்றோர் நாடு இங்குதான் அமைந்திருக்கின்றது. காலத்தால் ஆழியதா வரலாற்றுப் பெருமையைக் கொண்ட எமது தமிழினம், வரலாறு கூறுகின்ற வாழ்விடமாக எமது மண் எமக்காக இருக்கின்றதை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும். விடுதலை பெற்றவர்களாக தலை நிமிர்ந்து எமது மக்கள் சொந்த நாட்டில் வாழும் உரிமையை வழங்க வேண்டும். ஏதிலிகளாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் சொந்த நாடு திரும்பி இன இருப்புக்கான அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டும். எமது இனம் பலமாக வாழ்வதற்கு இதுவும் தேவையாகும். அதற்கான அனைத்து உதவிகளையும் ஐக்கிய நாடுகள் மன்றம் செய்தாக வேண்டும். என்பது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் ஒன்று பட்ட குரலின் வெளிப்பாடாகும். ஒரு போராளியின் புனிதப்பயணம் என்பது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பயணித்து சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சொந்த இன மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்கும் உயரிய தற்கொடையில் முடிவடைகின்றது. இந்தப் பயணத்தில் இணைந்து கொண்ட மேஜர். கலாநிதி தன்னை வழிநடத்திய கடல் புலிகளின் பெண்கள் அணியின் தளபதி நளாயினின் பாசத்திற்குரிய போராளிகளில் ஒருவராகி கடல் சண்டைகளில் தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினாள். தேசியத் தலைவர் மீது கொண்டபற்றும், விடுதலையில் கொண்ட விருப்பமும் தளபதி நளாயினி அவர்களை உயரிய தற்கொடைக்கு தன்னை அர்பணித்து கடல் கரும்புலியாகி சிங்களப் படைக்கடல்கலத்தை மன்னார் கடற்பரப்பில் தகர்த்தெறிந்து சாதிக்க வைத்தது. தளபதியாக, வழிகாட்டியாக லெப். கேணல் நளாயினி அவர்களின் பாதம் பதிந்த பாதையில் மேஜர். கலாநிதியின் பாதமும் பதிந்து சாதிக்கத் தொடங்கியது. யாழ் நோக்கிய சிங்களப்படையினரின் ஆனையிறவில் இருந்து “யாழ் தேவி” நகர்வுத் தாக்குதலின் எதிர்ச்சமரில் கனரக ஆயுதப் பிரிவில் 50 கலிபர் உடன் களமாடி விழுப்புண் அடைந்திருந்தார். அதற்குப் பின்பு “தவளைப்பாய்ச்சல்” சிங்களப் படைத்தளத் தாக்குதலிலும் 50 கலிபர் உடன் களமிறங்கி வரலாற்றுப் பதிவையும் பெற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகள், சிங்களப் படைத்தள மீதான தாக்குதல்களிலும், எதிர்ச்சமர்களிலும் மேஜர் கலாநிதியின் வீரம் வெளிப்படுத்தப்பட்டது. கடல் புலிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டபோதும் கனரக ஆயுதங்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததனால் தரைச்சமர்களுக்கும், முகாம், தளத்தாக்குதல்களுக்கும் மேஜர் கலாநிதியின் அணியினர் அழைக்கப்பட்டிருந்தார்கள். 1976 ம் ஆண்டு முதலாவது மாதம் ஏழாம் நாள் தாய் மண்ணில் பிறந்த நந்தினி ஆரம்ப கல்வியை தனது ஊரிலும் க.பொ.த.சாதரணக் கல்வியை நாகர்கோவில் மாவித்தியாலயத்திலும் பயின்றார். இக்காலப் பகுதியில் விடுதலைப் போராட்ட எழுச்சியும், வளர்ச்சியும் எண்ணற்ற இளையோர்களை தாய் மண்ணின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைவதற்குத் தூண்டியது. இதற்கு விதிவிலக்கற்றவளாக 1992 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னை ஓர் போராளியாக வரலாற்றில் பதிவு செய்தாள். இக்காலப்பகுதியில் இவருடைய குடும்பம் நாகர்கோவில் ஊருக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கொக்குளாய் தொடக்கம் பருத்தித்துறைமுனை வரை கிழக்குக் கடற்கரையில் பரவிக்கிடக்கின்ற பழந்தமிழர் மண் என்றும் எமது சொந்த மண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அனைத்து ஊர் மக்களிடமும் நிறைந்து காணப்பட்டன. முல்லைத்தீவு மண்ணைத் தொட்டு நிற்கின்ற யாழ் மண்ணின் கிழக்கு ஊர்களில் வாழ்கின்ற மக்கள் விடுதலைக்காக கொடுத்த விலை அதிகமாகும். இந்த வரிசையில் ஆயிரக்கணக்கான மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக ஈந்த ஊர்கள் என்றும் வரலாற்றில் அழியாத பதிவைக் கொண்டிருக்கின்றது. கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அலம்பில், முல்லைத்தீவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், சாலை, சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், அம்பன், குடத்தனை, மணற்காடு ஆகிய ஊர்கள் சொல்லும் கதைகள் விடுதலைப்போரில் மக்களின் பணியும், அர்ப்பணிப்புக்களும் அளவிட முடியாத நிலையில் போராளிகளின் புனிதப் பயணமும் விடுதலையை நோக்கி துன்பங்களையும், துயரங்களையும், இடம்பெயர்வுகளையும் சுமந்த மக்களை அணைத்துக் கொண்டு தொடர்ந்தன. எப்போதும் விடுதலையை தோள்மீது சுமந்த மக்கள் விடுதலைப் போராளிகளுக்கு தோள்கொடுத்து கடலில் படை நடத்துவதற்கும் சிங்களப் படையை எமது கடலிலிருந்து விரட்டியடிப்பதற்கும் கடலில் காவியம் படைப்பதற்கும் துணை போயினர். மண்பற்றும், விடுதலைப் பற்றும், மொழிப்பற்றும் கொண்ட மக்கள் இடம் பெயர்ந்த போதும் கடற்கரையெங்கும் கால் பதித்து மீண்டும் விடுதலை பெற்றவர்களாக சொந்த மண் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். 1991 ம் ஆண்டு ஆகாய, கடல் வெளிச் சமரும், வெற்றிலைக்கேணி சிங்களப் படைத் தரையிறக்கமும் தேசியத் தலைவரின் சிந்தனையில் கடலில் எமது பலம், எதிரியைத்தாக்கும் திறன், எமது தாய் நாட்டின் விடுதலையில் தரைப் படையணிகளின் வளர்ச்சியின் மறுபுறத்தில் கடலின் ஆளுகையில் கடல்புலிகளின் வளர்ச்சியும், பலமும் கடலில் சிங்களக் கடற்படையின் பிரசன்னம், பலம் என்பவற்றை தகர்த்தெறியமுடியும் என்ற நம்பிக்கையில் தளபதி சூசை அவர்களின் தலைமையில் ஒழுங்கு படுத்தப்பட்டது. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருபடி முன்னேற்றத்தில் காணப்பட்ட கடல்புலிகள் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதது. சிங்களக் கடல் படையின் தரையிறக்க முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அது மட்டுமல்லாது கடலிலிருந்து எமக்குத் தேவையான போர்க்கருவி தளபாடங்கள் இறக்கப்படுவதற்கும், ஏனைய வசதிகளை எமது விடுதலைப் போராளிகள் பெற்றுக்கொள்வதற்கும் கடல் புலிகளின் போரிடும் திறனும், கடற் கரும்புலிகளின் தற்கொடையும் காரணமாக அமைந்தன. இளநிலைத் தளபதியாக களத்தில் மிளிர்ந்த மேஜர் கலாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நடத்தப்படுகின்ற பெரும் தாக்குதல்களில் தனது அணியுடன் பங்குபற்றுவதும், கடல் புலிகளின் பெண்கள் அணியை பலமுள்ளதாக மாற்றுவதற்கான போராளிகளில் முன்னிலைப் படுத்தப்பட்டவளாகவும் விளங்கினாள். சிறப்புப் பயிற்சினைப் பெற்றுக்கொண்ட மேஜர் .கலாநிதி கடல் புலிகளின் மகளிர் அணியின் 4ம், 5ம், 9ம் பயிற்சிப் பாசறையின் பயிற்றுனர்களில் ஒருவராக திகழ்ந்து நூற்றுக்கணக்கான போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாக விருந்தாள். அதே வேளையில் கடற்சண்டைப்பயிற்சியையும் பெற்றுக்கொண்டு கடற் சண்டைகளிலும் தன்னை ஈடுபடுத்தினாள். வடமராட்சி கிழக்கு மண்ணின் வீரம் செறிந்த பெண்போரளிகளில் ஒருவரான மேஜர் கலாநிதி அவர்களின் சிந்தனை, செயல்பாடு, அனைத்தும் விடுதலையோடு சார்ந்ததாகவே அமைந்திருந்தன. 1995ம் ஆண்டு இறுதியிலும், 1996ம் ஆண்டு ஆரம்பத்திலும் யாழ் மண்ணிலிருந்து மக்கள் பாரியளவில் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் கடல் புலிகளின் சுகன்யா படையணியின் தளபதியாக பணியிலிருந்த மேஜர் கலாநிதி முல்லைதீவு சிங்கள படைத்தள அழிப்பில் தனது அணியுடன் சமரில் ஈடுபட்டாள். முல்லைமண் எமது மூதாதையர் மண். எமது சொந்த மண்ணான இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டு, வரலாற்றில் பாரிய வெற்றியை விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றிருந்தது மட்டுமல்லாத சிங்கள அரசின் படைச்சமநிலையில் மேலோங்கியும் இருந்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளின் பார்வை விடுதலைப் புலிகள் இயக்கமீது விழுந்ததனால் தங்கள் பிரதிநிதிகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சந்திப்பை ஏற்படுத்த அனுப்பி வைத்தனர். எமது பலம் அதிகரிக்கப்படும் போது, எம்மை அணுகுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வெளிநாடுகள் முன்வரும் ” என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கேற்ப எல்லாம் நடந்தேறி வந்தன. இச் சிங்களக் படை தள அழிப்பில் ஈடுபட்டு தங்களை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் இந்நிகழ்வுகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. ஏனெனில் இழப்புக்களின் மூலம் எமது இழந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப் போரின் வெற்றியின் அடையாளங்களாக இம் மாவீரர்கள் என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்கள். தனது இனிமையான குரலால் விடுதலைக்கானம்பாடி போராளிகளையும் மக்களையும் விடுதலை உணர்வுக்குள் கட்டி வைத்திருந்த மேஜர் சிட்டு பிறந்ததும் வடமராட்சி கிழக்கு மண்தான் என்பதில் வரலாற்றுப் பெருமையை அந்த மண் பெற்றுக்கொள்கின்றது. ஏனெனில் மேஜர் சிட்டுவின் குரல் இன்னும் என்றும் எமது காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு உணர்வாளர்கள் தங்களின் நிலையில் உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வுப் பெருக்கை எழுத்தாலும் இசையாலும் வெளிப்படுத்தி எங்கும் தமிழ் உணர்வு என வாழ்ந்த காலம் மறக்க முடியாததாகும். வற்றாத ஊற்றாக தமிழுணர்வும் விடுதலை உணர்வும் பொங்கியெழுந்த காலத்தில் புலியாக எழுந்து விதையாக விழ்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் புகழ்பூத்தமண்ணில் புதிய புறநானூற்றை களத்தில் கண்டோம். போரில் புற முதுகு காட்டாமல் எதிரியை நேருக்கு நேர் சந்தித்த வீரத்தை எமது மண்ணில் நீண்ட காலத்திற்குப் பின்பு எமது மக்கள் நேரில் கண்டு போர்ப்பரணி பாடியதையும் பார்த்திருக்கின்றோம். உலகில் தமிழன் வாழும்வரை இந்த வரலாறும் எமது தலைவர் பிரபாகரன் பெயரும் என்றும் அழியாது. மேஜர் கலாநிதி அவர்களின் போராட்டப் பயணம் போராளிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போருக்கு இலக்கணமாக அமைந்திருந்தன. கடலிலும் தரையிலும் சாதிக்கும் திறனை விடுதலைப்புலிகள் இயக்கம் அவளுக்கும், அவள் போன்ற பல போராளிகளுக்கும் பெற்றுக்கொடுத்திருந்தன. அடுக்கடுக்காகப் பெண்களின் வீரம் பெரும் சாதனைகளை விடுதலை இயக்கத்திற்கு பெற்றுக்கொடுத்த வண்ணம் தொடர்ந்தபோது, முதல் கடற் கரும்புலி அங்கயற்கண்ணியின் சாதனை தமிழ் வீரப் பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த விடுதலை வரலாறு ஒன்றை உருவாக்கியது. என்றும் எங்கும் கண்டிராத போர்க்கவியமொன்றை எமது தாய் மண்ணில் எமது தமிழ்ப்பெண்கள் எழுதிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு தாக்குதல்களிலும் எம்மால் அவதானிக்க முடிந்தது. வரலாற்றை எம்மால் படிக்கின்றபோது, வரலாற்றோடு வாழ்ந்த காவிய நாயகர்களைப்பற்றியும், அவர்களின் தற்கொடை பற்றியும் நாம் அறிந்திருப்பதும் அவற்றை எமது பரம்பரைக்கு சொல்லிக்கொடுப்பதும், காலத்தின் கடமையாகும். இவ்வாறு தனது இளமைக்காலத்தை இனத்தின் விடுதலைக்கு அர்பணித்த மேஜர் கலாநிதி போன்ற வீராங்கனைகளை எமது தாய்மண் என்றும் மறக்காது. ஓயாத அலைகள் 2 தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் 1998ம் ஆண்டு மேற்கொண்டனர். “ஜயசிக்குறு” இராணுவ ஆக்கிரமிப்பை சிங்கள அரசு மேற் கொண்டிருந்த காலப்பகுதியில் ஓயாத அலைகள் 2 யும் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி நகரில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைத்தள மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படையணிகள் பங்கெடுத்தன. இதற்காக கடல் புலிகள் அணியிலிருந்தும் ஓர் சிறப்பு அணி ஒழுங்கு செயப்பாட்டு மேஜர் கலாநிதி அவர்களின் தலைமையிலான தாக்குதல் அணி தங்களது பணியைச் சிறப்பாகச் செய்தபோது, ஏனைய படையணிகளின் தாக்குதலாலும் நிலைகுலைந்த சிங்களப் படை ஆனையிறவு நோக்கி தப்பியோடியது. ஆனையிறவு, பரந்தன் படைமுகாம்களிலிருந்து வெளியேறி உதவிக்கு வந்த இராணுவத்தினரை லெப் கேணல் ஜீவன், லெப் கேணல் நாகேஷ் ஆகியோர் தலைமையிலான ஜெயந்தன் படையணியினர் தடுத்து நிறுத்தி போரிட்டனர். இதற்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களப்படை உதவிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது, கிளிநொச்சியிலிருந்து தப்பியோடும் முடிவை சிங்களப்படை எடுத்திருந்தது. கிளிநொச்சி படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு தாக்குதல்களிலும் ஆண்போராளிகளுக்கு நிகராக சமராடிய பெண்புலிகளின் சாதனை தமிழ்ப் பெண்குலத்தை பெருமைகொள்ளவைத்தன. மம்தா வலம்புரி கப்பல் தாக்குதல், காங்கேசன்துறை துறைமுகத்தாக்குதல், முல்லைத்தீவு கடற் பரப்பில் டோரா தாக்குதல், திருகோணமலை துறைமுகக் தாக்குதல்,என்பனவற்றிலும் மேஜர் கலாநிதியின் வீரம் தாக்குதல் மூலம் உணர்த்தப்பட்டன. விடுதலைப்புலிகளின் கப்பல்களில் பணிபுரிந்த போராளிகளில் முதல் கப்பல் கப்டன் தரம் வழங்கப்பட்ட கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் சொந்த ஊரும், ஆழியவளைதான் என்பதில் அந்த ஊரில் தன்மானமிக்க தமிழ்மறவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஊராக எம்மால் பார்ப்பதற்கு சிலம்பரசன், கலாநிதி போன்ற மாவீரர்களின் வரலாறுகள் சான்று பகர்கின்றன. தேசியத் தலைவர் அவர்களினால் இனங்காணப்பட்ட போராளிகளில் சிலம்பரசன் அவர்களும் ஒருவராவர். இவர் கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வில் வீரச்சாவடைந்தார். கிளிநொச்சிப் படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து, சிங்களப்படையின் “ஜெயசிக்குறு” நடவடிக்கை மாங்குளம் நோக்கி முன்னேற ஆரம்பித்தன. போராளிகளின் அதிரடி தாக்குதல்களால் திக்குத்திணறிய சிங்களப்படைத் தளபதிகள் தங்கள் படை வீரர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். கிளிநொச்சி படைத்தளத் தாக்கியழிப்பில் ஈடுபட்ட போராளிகளின் படையணிகள் மாங்குளம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டபோது, மேஜர் கலாநிதியின் அணியும் இணைக்கப்பட்டன. சிங்கள இராணுவத்தினரை கனகராயன் குளத்தில் தடுத்து நிறுத்தும் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டபோது மேஜர் கலாநிதியின் அணியும் பெரும்சமரில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரையில் களத்தில் தலைமை தாங்கும் தளபதிகள் முன்னேறித் தாக்கும்பணியில் என்றும் பின்னிற்பதில்லை. இது விடுதலைப் புலிகளில் போரியல் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்றாகும். களத்தில் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும் தளபதிகள் வரிசையில் மேஜர் கலாநிதியும் தனது அணிக்கு கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் உக்கிர சமராடினாள். இந்த நிகழ்வில் எதிரியின் எறிகணைத் தாக்குதலில் 1998ம் ஆண்டு 10ம் மாதம் 6ம் நாள் தமிழீழத் தாய் மண்ணில் தனது பணியை நிறைவு செய்து கனகராயன்குள மண்ணில் தனது இரத்தத்தைச் சிந்தி கடமையை முடித்து கண் மூடினாள். இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாததொன்றாகும். ஆனால் மேஜர் கலாநிதி, தனது இழப்புக்கேற்ற விதத்தில் எண்ணற்ற வீராங்கனைகளை தாய் மண்ணின் விடுதலைக்காக வளர்த்தெடுத்திருந்தாள். ஒரு அன்பான அன்னையைப் போன்று தம்மை வழிநடத்திய தளபதியை இழந்த சோகத்தில் திளைத்திருந்த போராளிகள் அவளின் வளர்ப்பு, போராட்டப்பணி, தலைவர் மீது கொண்டபற்று, மண்ணின் விடுதலை என்பன ஒருங்கே சேர, உணர்வுடன், உறுதியுடன் நெஞ்சினில் மேஜர் கலாநிதியின் நினைவுகளை ஏந்தி போராட்டப் பயணத்தில் தொடர்ந்தனர். என்றும் மேஜர் கலாநிதி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் நெஞ்சினில் உறைந்திருப்பாள். குடும்பம், ஊர், வட்டம் என்ற வகைக்குள்ளும் இவளின் நினைவுகள், போராட்ட இலட்சியம் புனிதப் பயணம் என்பன உறங்கிக் கிடந்தாலும், அழியாமல், மங்காமல் மறையாமல் தொடரும். நினைவுப்பகிர்வு: எழுகதிர்.3 https://thesakkatru.com/sea-tigers-mejor-kalaanithi/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
என் தங்கை சாம்பவிக்கும் எனைய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பக்கீர் பாபா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் உறவுகளே நானும் பச்சைகளை அள்ளி வழங்க முடியாத நிலையில் இருக்கின்றேன், மன்னிக்கவும், இதற்கு முழு பெறுப்பும் யாழ்கள நிர்வாகமே😪 எனவே, தங்கு தடையின்றி பச்சைகளை வழங்குவதற்கு நிர்வாகம் உடனடியாக நடவிடிக்கை எடுக்காவிட்டால் போராட்டித்தில் குதிப்பதற்கும் தயங்கமாட்டோம், திண்ணையில் உண்ணாவிரதம் இருப்போம், திகதி ஆறுதலாக அறிவிக்கப்படும் 🙏
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1: நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய் நாயகன் தாள்பெறவே நெஞ்சு மலையாதே அகப்பேய் நீயொன்றும் சொல்லாதே. 2: பராபர மானதடி அகப்பேய் பரவையாய் வந்ததடி தராதல மேழ்புவியும் அகப்பேய் தானே படைத்ததடி. 3: நாத வேதமடி அகப்பேய் நன்னடங் கண்டாயோ பாதஞ் சத்தியடி அகப்பேய் பரவிந்து நாதமடி 4: விந்து நாதமடி அகப்பேய் மெய்யாக வந்ததடி ஐந்து பெரும்பூதம் அகப்பேய் அதனிட மானதடி 5: நாலு பாதமடி அகப்பேய் நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் அகப்பேய் முத்தி யல்லவடி. 6: வாக்காதி யைந்தடியோ அகப்பேய் வந்த வகைகேளாய் ஒக்கம தானதடி அகப்பேய் உண்மைய தல்லவடி. 7: சத்தாதி யைந்தடியோ அகப்பேய் சாத்திர மானதடி மித்தையு மாகுமிடி அகப்பேய் மெய்யது சொன்னேனே. 8: வசனாதி யைந்தடியோ அகப்பேய் வண்மையாய் வந்ததடி தெசநாடி பத்தேடி அகப்பேய் திடனிது கண்டாயே. 9: காரண மானதெல்லாம் அகப்பேய் கண்டது சொன்னேனே மாரணங் கண்டாயே அகப்பேய் வந்தவி தங்களெல்லாம் 10: ஆறு தத்துவமும் அகப்பேய் ஆகமஞ் சொன்னதடி மாறாத மண்டலமும் அகப்பேய் வந்தது மூன்றடியே. 11: பிருதிவி பொன்னிறமே அகப்பேய் பேதைமை யல்லவடி உருவது நீரடியோ அகப்பேய் உள்ளது வெள்ளையடி. 12: தேயு செம்மையடி அகப்பேய் திடனது கண்டாயே வாயு நீலமடி அகப்பேய் வான்பொருள் சொல்வேனே. 13: வான மஞ்சடியோ அகப்பேய் வந்தது நீகேளாய் ஊனம தாகாதே அகப்பேய் உள்ளது சொன்னேனே. 14: அகார மித்தனையும் அகப்பேய் அங்கென் றெழுந்ததடி உகாரங் கூடியடி அகப்பேய் உருவாகி வந்ததடி. 15: மாகார மாயையடி அகப்பேய் மலமது சொன்னேனே சிகார மூலமடி அகப்பேய் சிந்தித்துக் கொள்வாயே. 16: வன்னம் புவனமடி அகப்பேய் மந்திர தந்திரமும் இன்னமுஞ் சொல்வேனே அகப்பேய் இம்மென்று கேட்பாயே. 17: அத்தி வரைவாடி அகப்பேய் ஐம்பத்தோ ரட்சரமும் மித்தையாங் கண்டாயே அகப்பேய் மெய்யென்று நம்பாதே. 18: தத்துவ மானதடி அகப்பேய் சகலமாய் வந்ததடி புத்தியுஞ் சொன்னேனே அகப்பேய் பூத வடிவலவோ. 19: இந்த விதங்களெல்லாம் அகப்பேய் எம்மிறை யல்லவடி அந்த விதம்வேறே அகப்பேய் ஆராய்ந்து காணாயோ. 20: பாவந் தீரவென்றால் அகப்பேய் பாவிக்க லாகாதே சாவது மில்லையடி அகப்பேய் சற்குரு பாதமடி. 21: எத்தனை சொன்னாலும் அகப்பேய் என்மனந் தேறாதே சித்து மசித்தும்விட்டே அகப்பேய் சேர்த்துநீ காண்பாயே. 22: சமய மாறுபடி அகப்பேய் தம்மாலே வந்தவடி அமைய நின்றவிடம் அகப்பேய் ஆராய்ந்து சொல்வாயே. 23: ஆறாறு மாகுமடி அகப்பேய் ஆகாது சொன்னேனே வேறே யுண்டானால் அகப்பேய் மெய்யது சொல்வாயே. 24: உன்னை யறிந்தக்கால் அகப்பேய் ஒன்றையுங் சேராயே உன்னை யறியும்வகை அகப்பேய் உள்ளது சொல்வேனே. 25: சரியை யாகாதே அகப்பேய் சாலோகங் கண்டாயே கிரியை செய்தாலும் அகப்பேய் கிட்டுவ தொன்றுமில்லை. 26: யோக மாகாதே அகப்பேய் உள்ளது கண்டக்கால் தேக ஞானமடி அகப்பேய் தேடாது சொன்னேனே. 27: ஐந்துதலை நாகமடி அகப்பேய் ஆதாயங் கொஞ்சமடி இந்தவிஷந் தீர்க்கும் அகப்பேய் எம்மிறை கண்டாயே. 28: இறைவ னென்றதெல்லாம் அகப்பேய் எந்த விதமாகும் அறை நீகேளாய் அகப்பேய் ஆனந்த மானதடி. 29: கண்டு கொண்டேனே அகப்பேய் காதல் விண்டேனே உண்டு கொண்டேனே அகப்பேய் உள்ளது சொன்னாயே. 30: உள்ளது சொன்னாலும் அகப்பேய் உன்னாலே காண்பாயே கள்ளமுந் தீராதே அகப்பேய் கண்டாக்குக் காமமடி. 31: அறிந்து நின்றாலும் அகப்பேய் அஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் அகப்பேய் போகாதே யுன்னைவிட்டு. 32: ஈசன் பாசமடி அகப்பேய் இவ்வண்ணங் கண்டதெல்லாம் பாசம் பயின்றதடி அகப்பேய் பாரமது கண்டாயே. 33: சாத்திர சூத்திரமும் அகப்பேய் சங்கற்ப மானதெல்லாம் பார்த்திட லாகாதே அகப்பேய் பாழ்பலங் கண்டாயே. 34: ஆறு கண்டாயோ அகப்பேய் அந்த வினைதீர தேறித் தெளிவதற்கே அகப்பேய் தீர்த்தமு மாடாயே. 35: எத்தனை காலமுந்தான் அகப்பேய் யோக மிருந்தாலென் மூத்தனு மாவாயோ அகப்பேய் மோட்சமு முண்டாமோ. 36: நாச மாவதற்கே அகப்பேய் நாடாதே சொன்னேனே பாசம் போனாலும் அகப்பேய் பசுக்களும் போகாவே. 37: நாண மேதுக்கடி அகப்பேய் நல்வினை தீர்ந்தக்கால் காண வேணுமென்றால் அகப்பேய் காணக் கிடையாதே. 38: சும்மா இருந்துவிடாய் அகப்பேய் சூத்திரஞ் சொன்னேனே சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது கண்டாயே. 39: உன்றனைக் காணாதே அகப்பேய் ஊனுள் நுழைந்தாயே என்றனைக் காணாதே அகப்பேய் இடத்தில் வந்தாயே. 40: வான மோடிவரில் அகப்பேய் வந்தும் பிறப்பாயே தேனை யுண்ணாமல் அகப்பேய் தெருவோ டலைந்தாயே. 41: சைவ மானதடி அகப்பேய் தானாய் நின்றதடி சைவ மில்லையாகில் அகப்பேய் சலம்வருங் கண்டாயே. 42: ஆசை யற்றவிடம் அகப்பேய் அசாரங் கண்டாயே ஈசன் பாசமடி அகப்பேய் எங்ஙனஞ் சென்றாலும். 43: ஆணவ மூலமடி அகப்பேய் அகாரமாய் வந்ததடி கோணு முகாரமடி அகப்பேய் கூடப் பிறந்ததுவே. 44: ஒன்று மில்லையடி அகப்பேய் உள்ள படியாச்சே நன்றில்லை தீதிலையே அகப்பேய் நாணமு மில்லையடி. 45: சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது சொன்னேனே எம்மாய மீதறியேன் அகப்பேய் என்னையுங் காணேனே. 46: கலைக ளேதுக்கடி அகப்பேய் கண்டார் நகையாரோ நிலைக ளேதுக்கடி அகப்பேய் நீயார் சொல்வாயே. 47: இந்த அமிர்தமடி அகப்பேய் இரவி விஷமோடி இந்து வெள்ளையடி அகப்பேய் இரவி சிவப்பாமே. 48: ஆணல பெண்ணலவே அகப்பேய் அக்கினி கண்டாயே தாணுவு மிப்படியே அகப்பேய் சற்குரு கண்டாயே. 49: என்ன படித்தாலும் அகப்பேய் எம்முரை யாகாதே சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு. 50: காடு மலையுமடி அகப்பேய் கடுந்தவ மானாலென் வீடும் வெளியாமோ அகப்பேய் மெய்யாக வேண்டாமோ. 51: பரத்தில் சென்றாலும் அகப்பேய் பாரிலே மீளுமடி பரத்துக் கடுத்தவிடம் அகப்பேய் பாழது கண்டாயே. 52: பஞ்ச முகமேது அகப்பேய் பஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி அகப்பேய் குருபாதங் கண்டாயே. 53: பங்க மில்லையடி அகப்பேய் பாத மிருந்தவிடம் கங்கையில் வந்ததெல்லாம் அகப்பேய் கண்டு தெளிவாயே. 54: தானது நின்றவிடம் அகப்பேய் சைவங் கண்டாயே ஊனற நின்றவர்க்கே அகப்பேய் ஊனமொன் றில்லையடி. 55: சைவம் ஆருக்கடி அகப்பேய் தன்னை யறிந்தவர்க்கே சைவ மானவிடம் அகப்பேய் சற்குரு பாதமடி. 56: பிறவி தீரவென்றால் அகப்பேய் பேதகம் பண்ணாதே துறவி யானவர்கள் அகப்பேய் சும்மா இருப்பார்கள். 57: ஆர லைந்தாலும் அகப்பேய் நீயலை யாதேயடி ஊர லைந்தாலும் அகப்பேய் ஒன்றையும் நாடாதே. 58: தேனாறு பாயுமடி அகப்பேய் திருவடி கண்டவர்க்கே ஊனாறு மில்லையடி அகப்பேய் ஒன்றையும் நாடாதே. 59: வெள்ளை கறுப்பாமோ அகப்பேய் வெள்ளியும் செம்பாமோ உள்ள துண்டோடி அகப்பேய் உன்னாணை கண்டாயே. 60: அறிவுள் மன்னுமடி அகப்பேய் ஆதார மில்லையடி அறிவு பாசமடி அகப்பேய் அருளது கண்டாயே. 61: வாசியி லேறியபடி அகப்பேய் வான்பொருள் தேடாயோ வாசியி லேறினாலும் அகப்பேய் வாராது சொன்னேனே. 62: தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி பாராமற் பாரடியோ அகப்பேய் பாழ்வினை தீரவென்றால். 63: உண்டாக்கிக் கொண்டதல்ல அகப்பேய் உள்ளது சொன்னேனே கண்டார்கள் சொல்வாரோ அகப்பேய் கற்பனை யற்றதடி. 64: நாலு மறைகாணா அகப்பேய் நாதனை யார்காண்பார் நாலு மறைமுடிவில் அகப்பேய் நற்குரு பாதமடி. 65: மூல மில்லையடி அகப்பேய் முப்பொரு ளில்லையடி மூல முண்டானால் அகப்பேய் முத்தியு முண்டாமே. 66: இந்திர சாலமடி அகப்பேய் எண்பத் தொருபதமும் மந்திர மப்படியே அகப்பேய் வாயைத் திறவாதே. 67: பாழாக வேணுமென்றால் அகப்பேய் பார்த்ததை நம்பாதே கேளாமற் சொன்னேனே அகப்பேய் கேள்வியு மில்லையடி 68: சாதி பேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே ஓதி யுணர்ந்தாலும் அகப்பேய் ஒன்றுந்தா னில்லையடி. 69: சூழ வானமடி அகப்பேய் சுற்றி மரக்காவில் வேழம் உண்டகனி அகப்பேய் மெய்யது கண்டாயே. 70: நானு மில்லையடி அகப்பேய் நாதனு மில்லையடி தானு மில்லையடி அகப்பேய் சற்குரு வில்லையடி. 71: மந்திர மில்லையடி அகப்பேய் வாதனை யில்லையடி தந்திர மில்லையடி அகப்பேய் சமய மழிந்ததடி. 72: பூசை பாசமடி அகப்பேய் போதமே கொட்டமடி ஈசன் மாயையடி அகப்பேய் எல்லாமு மிப்படியே. 73: சொல்ல லாகாதோ அகப்பேய் சொன்னாலும் தோஷமடி இல்லை இல்லையடி அகப்பேய் ஏகாந்தங் கண்டாயே. 74: தத்துவத் தெய்வமடி அகப்பேய் சதாசிவ மானதடி மற்றுள்ள தெய்வமெல்லாம் அகப்பேய் மாயை வடிவாமே. 75: வார்தை யல்லவடி அகப்பேய் வாச மகோசரத்தே ஏற்ற தல்லவடி அகப்பேய் என்னுடன் வந்ததல்ல. 76: சாத்திர மில்லையடி அகப்பேய் சலனங் கடந்ததடி பார்த்திட லாகாதே அகப்பேய் பாவனைக் கெட்டாதே. 77: என்ன படித்தாலென் அகப்பேய் ஏதுதான் செய்தாலென் சொன்ன விதங்களெல்லாம் அகப்பேய் சுட்டது கண்டாயே. 78: தன்னை யறியவேணும் அகப்பேய் சாராமற் சாரவேணும் பின்னை யறிவதெல்லாம் அகப்பேய் பேயறி வாகுமடி 79: பிச்சை யெடுத்தாலும் அகப்பேய் பிறவி தொலையாதே இச்சை யற்றவிடம் அகப்பேய் எம்மிறை கண்டாயே. 80: கோல மாகாதே அகப்பேய் குதர்க்கம் ஆகாதே சால மாகாதே அகப்பேய் சஞ்சல மாகாதே. 81: ஒப்பனை யல்லவடி அகப்பேய் உன்னாணை சொன்னேனே அப்புட னுப்பெனவே அகப்பேய் ஆராய்ந் திருப்பாயே. 82: மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள். 83: பாலன் பிசாசமடி அகப்பேய் பார்த்தால் பித்தனடி கால மூன்றுமல்ல அகப்பேய் காரிய மல்லவடி. 84: கண்டது மில்லையடி அகப்பேய் கண்டவ ருண்டானால் உண்டது வேண்டடியோ அகப்பேய் உன்னாணை சொன்னேனே. 85: அஞ்சையு முண்ணாதே அகப்பேய் ஆசையும் வேண்டாதே நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய் நிஷ்டையிற் சாராதே. 86: நாதாந்த வுண்மையிலே அகப்பேய் நாடாதே சொன்னேனே மீதான சூதானம் அகப்பேய் மெய்யென்று நம்பாதே. 87: ஒன்றோ டொன்றுகூடில் அகப்பேய் ஒன்றுங் கெடுங்காணே நின்ற பரசிவமும் அகப்பேய் நில்லாது கண்டாயே. 88: தோன்றும் வினைகளெல்லாம் அகப்பேய் சூனியங் கண்டாயே தோன்றாமற் றோன்றிடும் அகப்பேய் சுத்த வெளிதனிலே. 89: பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்கு வரத்துதானே மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய் வீடு பெறலாமே. 90: வேத மோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே பாதம் நம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒற்றை கெம்பனை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகான பழநி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில்மீது முருகையனே முருகா....முருகா.... வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே என்னை ஆழும் ஆண்டவனே எழில் வேலவா இனியென்னும் உன்னை பாட அருள்வாய் அய்யா முருகா....முருகா.... நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருவருள் புரிவாய் உன்னையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாலும் ஆண்டவனே நீதான் அய்யா முருகா....முருகா....
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவன் என்னை காக்கின்றார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா - 2 ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய் என்றென்றும் வாழும் தேவா 1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா திக்கனைத்துமே உன்னை எதிரொலிக்க வா எதிரொலிக்க வா உன்னை எதிரொலிக்கவா யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா 2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே அன்பாலே வாழும் தேவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மக்க மாநகர் பிறந்தீரே... மதினாவில் சிறந்தீரே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS. மெய்நிலை கண்ட ஞானி... முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சைவ 65 / பன்னீர் 65 |
-
நடனங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நெத்திலி கருவாட்டு தொக்கு ஒருமுறை செய்து சாப்பிடுங்க- இறைவனிடம் கையேந்துங்கள்
தித்திக்கும் திருப்புகழ் 3- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம்கார கணபதியே- இறைவனிடம் கையேந்துங்கள்
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.- இறைவனிடம் கையேந்துங்கள்
நீ நின்ற திருக்கோலம் நான் கண்டேன் ஸ்ரீராம - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.