நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை?
*நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?*
*தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை*
*தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை*
*ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை*
*அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை*
*அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை*
*அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை*
*துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை*
*ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை*
*நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை*
*எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை*
*இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை*
*அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !*
=======================================
உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி ஐம்பது
இந்த ஐம்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த ஐம்பது
😊
நிறைய வேலை செய்வதால்
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
ஆண்டவனை நினையுங்கள்.
இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.
😊
ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் ...
=================================================
வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!! 👌👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! 👌👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............! 👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........! 👌👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*